மூன்று சப்பாத்தி
மோகன் அந்த ஹோட்டலில் சாப்பிட அமர்ந்திருந்தான். பசி வயிற்றை கிள்ள, வெயிட்டர் வந்து ஆர்டர் கேட்டு மெனுக்கார்டை நீட்டினான்.
ஒவ்வொன்றாக வாசித்தவன் சப்பாத்தி வேண்டுமென உரைத்துவிட்டு காத்திருந்தான்.
மூன்று சப்பாத்தி கொண்டு வந்து வைத்த வெயிட்டரை, ஊற்று நேக்கினான்.
"என்னப்பா மூன்று சப்பாத்தி தான் இருக்கு" என்றான்.
"ஒரு செட்ல மூன்று சப்பாத்தி சார். உங்களுக்கு வேண்டுமின்னா இன்னொரு செட் கொண்டு வரவா?'' என்று கேட்க, 'இந்தா... எத்தனை சப்பாத்தி திம்ப... இந்த வயசுல மூன்று சாப்பாத்தி முழுங்கிட்டு ஏப்பமிடற.. திண்றது போதும் எந்திரி.' என்று ஐந்து வயதில், சின்ன அன்னையின் வார்த்தை இன்றும் தழும்பாக காதில் ஒலிக்க, தன் சுயசம்பாத்தியத்தில் சுவைத்தாலும், மூன்றோடு எழுந்து விட்டான். சில நேரம் காயப்பட்ட வலி அதிகமாக உணவை கூட பசித்தாலும் சுவைத்து ஜீரணிக்காது.
-பிரவீணா தங்கராஜ்.
-
துண்டு துண்டாய்...
1 month ago
-
வெற்றி அல்ல தோல்வி
1 month ago
-
ஓடிப்போன அம்மா (ஒருபக்க கதை)
1 month ago
-
புதுசெருப்பு
1 month ago
-
இதயத்தில் வேறூன்றியவன்
1 month ago
- 25 Forums
- 331 Topics
- 1,595 Posts
- 6 Online
- 421 Members
