புதுசெருப்பு
புதுசெருப்பு 😄
சேகர் வந்ததிலிருந்து காலை குனிந்து குனிந்து பார்த்து அசௌகரியம் அடைந்தான்.
அதை கண்ட அவன் மாமனார் சேகரின் காலை கவனித்தார். "என்ன மாப்பிள்ளை.. கால்ல இப்படி கருப்பா இருக்கு." என்று அக்கறையாக விசாரிக்கவும் ஆரம்பித்தார்.
"ஆ..ஆமா மாமா... புது செருப்பு கடிச்சி தழும்பாகிடுச்சு" என்று மழுப்பலாக கூறினான் புது மருமகன் சேகர்.
"அதுசரி... கல்யாணத்துக்கு எல்லாமே புதுசா வாங்கியிருப்பிங்க. செருப்பும் புதுசா வாங்கியிருக்கவும், புதுசெருப்பு கடிச்சி தழும்பு வந்துயிருக்கு.. தேங்கா எண்ணெய் விடுங்க." என்று அறிவுறை கூறி எண்ணெய்யை நீட்டினார்.
சேகரோ 'ம்கூம்... கோவில்ல அவசரத்துல சைஸ் சின்னதான செருப்பை திருடியது தப்பாகிடுச்சே.. இப்ப காலை கடிச்சி தழும்பை உண்டாக்கிடுச்சு. சை' என்று புலம்பியபடி மாமனார் தந்த எண்ணெய்யை தடவினான்.
சேகரின் மாமனாரோ, 'இது நம்ம கோவில்ல தொலைச்ச செருப்பு மாதிரியில்ல இருக்கு?' என்று எண்ணினாலும் குழம்பியவராக பார்வையிட்டவர், 'ம்கும்.. தான் திருடன் பிறரை நம்பான்னு மாதிரி.. நம்மள மாதிரியே மாப்பிள்ளையே சந்தேகப்படக்கூடாது' என்று சொல்லிக்கொண்டார்.
-பிரவீணா தங்கராஜ்.
-
துண்டு துண்டாய்...
1 month ago
-
வெற்றி அல்ல தோல்வி
1 month ago
-
ஓடிப்போன அம்மா (ஒருபக்க கதை)
1 month ago
-
மூன்று சப்பாத்தி
1 month ago
-
இதயத்தில் வேறூன்றியவன்
1 month ago
- 25 Forums
- 330 Topics
- 1,589 Posts
- 1 Online
- 420 Members
