துண்டு துண்டாய்...
காவலதிகாரி விக்ரம் நிலா முன் அமர்ந்து, "உங்க கணவரை கொன்றதா உங்களை இங்க கைது செய்திருக்கோம். அந்த கொலை நீங்க தான் செய்ததா ஒப்புதல் அளிக்கறிங்களா?" என்று கேட்க நிலா ஆமோதிப்பதாய் தலையாட்டினாள்.
"காரணம் என்ன?" என்று கேட்க மௌனமாய் நின்றாள்.
"இங்க பாருஙக நிலா..அப்பா இல்லாத பொண்ணுனு தான் இத்தனை நேரம் அமைதியா விசாரிக்கறோம். இப்படி மௌனமா இருந்தா எப்படி?" என்று அதட்டி கேட்க, "நான் தான் என் கணவரை கொன்றதா ஓப்புக்கொண்டேனே வேறென்ன எநிர்பார்க்கறிங்க. தண்டனையை சொல்லி அனுப்புங்க" என்று கத்திவிட்டாள்.
ஜெயில் வார்டனோ "என்ன திமிரு இந்த குண்டு பொண்ணுக்கு. நம்ம உயரதிகாரியையே இப்படி பேசுது. அந்த குண்டு கையில விலங்கு போட்டு உட்கார வையுங்க. நம்ம சிறைஞ்சாலைக்கு தானே வர்றா. கவனிச்சிக்கறேன்' என்று பெண் காவலர் கூறிவிட, நிலாவோ 'அப்பா இல்லாத பொண்ணு என்ற கரிசனத்தை எண்ணி இகழ்ந்தாள்.
'உன்னை விட தங்கச்சி பாப்பா தான் ஒல்லியா அழகா இருக்கா. நீ ஏன் நிலா குண்டா இருக்க? இன்னிக்கு எங்க ஆனிவெர்சரி வந்த எல்லாரும் கேட்டுட்டாங்க. எனிவே ஸ்லிம்மாக டயட் பாலோ பண்ணு. கொஞ்சம் குறைச்சி சாப்பிடு.' என்ற தந்தை தங்கைக்கு முன்னுரிமை தர அவரை விஷம் தந்து கொன்றதையும், கல்லூலூரியில் குண்டு என்ற கூறியதால் தான் காதலித்த சதிஷை கல்லூரி மாடியிலிருந்து தள்ளி விட்டதையும், கணவராக வந்தவரும் உன்னை விட உன் தங்கை குட் லுக்கிங். என்ன இருந்தாலும் நீ குண்டா இருக்க. என்ன செய்ய பொண்ணை மாத்தி பார்த்து இப்ப கல்யாணம் பண்ணிட்டேன்.' என்று முதலிரவில் குறைப்பட்டவனை பால் சொம்பால் அடித்து கொன்ற நிலாவோ அடுத்த வேட்டையாக தன்னை 'குண்டு பொண்ணே இங்க வா' என்ற ஜெயில் வார்டர் பெண்ணை தான் கூறிவைத்தாள். குண்டு என்ற வார்த்தையே துண்டு துண்டாக மனதை வதைக்க, அதை கூறியவர்களையும் துண்டாக்க தயங்குவதில்லை நிலா....
-பிரவீணா தங்கராஜ்.
-
வெற்றி அல்ல தோல்வி
1 month ago
-
ஓடிப்போன அம்மா (ஒருபக்க கதை)
1 month ago
-
புதுசெருப்பு
1 month ago
-
மூன்று சப்பாத்தி
1 month ago
-
இதயத்தில் வேறூன்றியவன்
1 month ago
- 25 Forums
- 330 Topics
- 1,589 Posts
- 1 Online
- 420 Members
