அயலா… அயலா…-17

அத்தியாயம்-17

  அயன் மகளுக்கும் மனைவிக்கும் உணவை ஆர்டர் தந்துவிட்டு, பரிமாறி உணவை ஊட்டாதக்குறையாக நின்றான்.‌

“இன்டர்வெல்ல, ஆல்ரெடி பப்ஸ் பாப்கார்ன் ஐஸ்க்ரீம்னு வயிறு புல் அயன். இதுல டின்னர் வேண்டாம்னு நினைச்சேன்.” என்றான்.‌

  “நல்லா சாப்பிடு. அடுத்து நீயே நினைச்சா கூட இந்த ஏரியாவுக்கு வந்து என்னால புட் வாங்கி தரமுடியாது. நான் இங்க அழைச்சிட்டு வரமாட்டேன்.” என்றான்.‌

ஆதினிக்கு லேசான கலக்கம், “ஏன் அயன்.. இந்த ஊரு ஏரியா எதுவும் பிடிக்கலையா?” என்றான்.‌

  “ஓரளவு எல்லாம் பிடிச்சது. ஆனாலும் நான் இங்க வரமாட்டேன். உன்னையும் இங்க கூட்டிட்டு வரமாட்டேன்.” என்று கூறினான்.

  “அப்ப பிரதாப் வாங்கிய வீடு?” என்றாள்.

“அது பிரதாப் வீடு தானே. நம்ம வீடு இல்லையே. சாரி… வீட்டை பத்தி இப்ப பேசாத. நான் அக்ஷு பிறந்த நாளுக்கும் இன்னிக்கு என் சொந்த இடத்துக்கு போற சந்தோஷத்தில இருக்கேன். என்னை ஹர்ட் பண்ணிடாதே. ப்ளீஸ் ஆதினி” என்று கோரிக்கை வைத்தான்.  இதற்கு மேல் அவள் பிரதாப் பேச்சை எடுப்பாளா?’

   அக்ஷயாவுக்கு ஊட்டிவிட்டு கை அலம்ப அழைத்து சென்றான்.

  ஆதினி ஸ்பூனில் சாப்பிட்டதால் தன் கைப்பையில் துழாவி போனை எடுத்தாள்.

   அனிதாவிடமிருந்து வீடியோ கால் வாய்ஸ் கால், நார்மல் அழைப்பு என்று வரிசையாக வந்திருக்க, இரண்டு மூன்று குறுஞ்செய்தி, ஒரு இமேஜ், ஒரு வாய்ஸ் ஆடியோ வந்திருந்தது.

  வாட்சப்பை பார்வையிட்டு பார்க்க சிக்னல் சரியாக இல்லாததால் இமேஜ் பதிவாக நேரமானது. அதே போல ஆடியோவும். ஆனால் குறுஞ்செய்தி மட்டும் வாசித்தாள்.

‘ஆதினி… அயன் தந்த மோதிரம் நார்மல் மோதிரம் இல்லை.’
‘ இணைய உலக மனிதன் யூஸ் பண்ணறது.’
‘நான் உனக்கு இமேஜ் அனுப்பியிருக்கேன் பாரு. ஆடியோவை தயவு செய்து கேளு” என்று மூன்று குறுஞ்செய்தி மட்டும் வாசித்தாள்.

  ஆதினியோ அதை வாசித்து, அசட்டையாக, ‘எந்த மனுஷங்க யூஸ் பண்ணினா என்ன? இமேஜ் வேற டவுன்லோட் ஆகலை. ஆடியோ டூ. இவளிடம் இப்ப இந்த நேரத்துல வாட்சப்ல பேசறேன்னா அயன் கோபப்படலாம். இருக்கற இந்த ஸ்வீட் டேஸை ஸ்பாயில் பண்ண வேண்டாம்’ என்று பையில்  போனை வைத்தாள்.

மண்டைக்குள் இணை உலக மனிதன்’ என்றது அடிக்கடி ஓடியது.

  அயனோ ஆதினி கண்களை கூர்ந்து பார்த்து, என்ன?” என்றான்.

“ஒன்னுமில்லை… வீட்டுக்கு போய் டிராவல் செய்யணும், இன்னிக்கு டயர்டை சமாளிப்போமானு நினைச்சேன்.” என்றாள்.

  அயன் லேசாக புன்னகை உதிர்த்திட, “பஸ்ஸா டிரையினா? இல்லை வாடகை கார்ல போறோமா?” என்று கேட்டாள்.

“ம்ம்ம் ஸ்பேஸ் ஷிப்ல” என்றான்.

“கொழுப்பு தானே. கடைசி வரை சொல்லக்கூடாதுனு சர்பிரைஸ் பண்ணி எங்க தான் கூட்டிட்டு போவிங்களோ. எனக்கு இப்ப தூக்கமும் வராது போல. உங்களை தான் டிஸ்டர்ப் பண்ணுவேன். என்கிட்ட பேசிட்டே வரணும்” என்று கட்டளையிட, “நீ சொன்னாலும் சொல்லாட்டினாலும், நாம பேசிட்டு தான் வரமுடியும்‌.” என்று அவளது இடையில் கையால் நண்டு ஊறுது நரி ஊறுது என்பது போல கைகளால் தழுவினான்.

“அயன்… பொண்ணு இருக்கா” என்றாள்.

“அவ ஆல்ரெடி லைட்டா… தூங்கிட்டா.” என்று வீடு வந்தடைந்தார்கள்‌

அயன் தோளில் மகளை தூக்கி வந்தவன், ஆதினி கதவை திறக்க சோபாவில் படுக்க வைத்தான்.

அயன் கிச்சன் சென்று தண்ணீரை எடுத்து ஹாலுக்கு வர, ஆதினியோ அறைக்கு வந்து சூட்கேஸை எடுத்தாள்.

எதற்கும் இமேஜ் மற்றும் ஆடியோ டவுன்லோட் ஆகியிருந்தால் அதை பார்த்து ஆடியோ கேட்டுவிடுவோம். அடுத்து அயன் அருகே இருந்தால் கேட்க முடியாதென, ஆடியோவை ஒலிக்க விட்டு, அப்படியே சூட்கேஸை தள்ளிக்கொண்டு ஹாலுக்கு வர முயன்றாள்.

  இமேஜோ பச்சை நிற கண்கள், காது சற்று கூர்மையாக, உடல் ஏதோ தகட்டை அணிந்து ப்ளூ நிறத்தில் லைட்டை பளிச்சிட்டது போல சிறு கோட்டிங்கில், உடையாக உடலே மாறியிருக்க, பார்க்க மனிதன் போலவும் இருந்தது அவ்வுருவம்.

‘மனுஷனா ஏலியனா?’ என்று நெற்றி சுருக்கி பார்த்தவளுக்கு, அனிதா குரலில் ஆடியோ வேறு செவியில் கேட்டது.

“ஆதினி… நான் சொல்ல வந்ததை கவனமா கேளு. நான் உன் கல்யாணத்தப்ப, உன் மோதிரத்தை போட்டோ எடுத்தேன்ல. அதை போல எனக்கு நகை வாங்க ஆசைப்பட்டேன். ஆனா அந்த மாதிரி கூகுள் லென்ஸில நகையே இல்லை. சரி ஏதோ புது டிசைன் என்று நினைச்சேன். ஆனா அதை நம்ம கதிரிடம் காட்டியதுக்கு அது ஒரு புக்ல பார்த்ததா சொன்னான். எந்த நகை கடையில இல்லை, அரசர்கள் காலத்து மோதிரமா வரலாற்று புக்ல பார்த்தியானு கேட்டேன். இல்லை..  Parallel Universe Human பத்தி சொல்லியிருந்த புக்ல அந்த மோதிரத்தை பார்த்தானாம். Parallel Universe Human அப்படின்னா இணை உலக மனிதன். ஐ மீன்… மனிதன் தான். ஆனா நம்மளை போல இல்லை. நான் அனுப்பியிருக்கேன்ல அந்த மாதிரி மனுஷன். கொஞ்சம் பார்க்க வித்தியாசமான கண்கள், உடல் காது அமைப்பு இருக்கு பாரு.
  ஆதினி… நான் சொல்ல வர்றது புரிதா? அயனுக்கு இதே போல கண்கள் இருக்கு. எனக்கென்னவோ அயன்… நம்மளை போல மனுஷன் இல்லைனு நினைக்கறேன். எதுக்கும் நீ ஜாக்கிரதையா இரு. Parallel Universe Human அதை பத்தி விரிவா கதிரிடம் கேட்டு உன்னிடம் சொல்லறேன். நீ கேர்புல்லா இரு. உன்னை ஏதாவது பண்ணிடப் போறான். நான் முன்ன பேசியதை வச்சி இப்ப நான் பேசியதை கேர்லஸா நினைக்காத ஆதினி. நான் உன் நல்லதுக்கு தான் வார்னிங் பண்றேன்” என்று எச்சரிக்க, ஆடியோ நின்றது.

ஆதினி பயத்தில் அயனை காண வேர்த்து கொட்டியது என்னவோ அவளுக்கு மட்டுமே. அயன் மிகவும் இயல்பாக இருந்தான். 

   அயன் தண்ணீர் பாட்டிலை நீட்டி, “நானா எக்ஸ்பிளைன் பண்ணி மெதுவா சொல்ல நினைச்சேன். உன் பிரெண்டுக்கு அந்த மோதிரம் மேல கண்ணா இருந்தப்பவே, நான் உஷாராயிருக்கணும். ஆனா இந்தளவு டீட்டெயில் கலெக்ட் பண்ணுவானு எதிர்பார்க்கலை. தங்கத்துல நகையா செய்து கையில போட்டு சுத்துவானு நினைச்சேன்.‌

ம்ம்ம்… என்னயிருந்தாலும் எல்லாம் ஒரே காலேஜ். பிரதாப் இஸ்ரோல வேலை கிடைச்சியிருக்க, உங்க பிரெண்ட்ஸ் கேங்க் இந்த மாதிரி புக்ல அறிவியல்ல ஆர்வம் வந்து அதையும் தெரிந்து வச்சியிருக்கிங்க. நாட் பட் ஆதினி. எங்களை பத்தி தெரிந்தது எங்க இனத்துக்கு, எங்க உலகத்துக்கு பெருமை தான்.

  ம்ம்ம்… ஓகே… அவளிடம் பேசாதனு நான் சொன்னதுக்கு மதிப்பு தருவனு நினைச்சேன்.‌ உன்னை காயப்படுத்தியதால விலகிடுவனு. இரண்டும் மதிக்கலை நீ.
   ஆனா பாரு… அவளையும் சும்மா சொல்லாக்கூடாது. பிரெண்ட் இல்லையா… என்ன பேசி காயப்படுத்தினாலும், உனக்காக உன்னை காப்பாத்த முதல் ஆளா குரல் கொடுத்துட்டா.” என்று அயன் பேச பேச அவனது மனித முகம், உடல் நிறம், அவனது காது எல்லாம் மாறியது. 

    ஆதினி அதை கண்டு நம்ப முடியாமல் திகைத்தாள்.

“உன் பிரெண்டுக்கு என்ன அவசரம் பாரு. கிளம்பறதுக்கு முன்ன நான் ரிலாக்ஸா உன்னிடம் உண்மையை சொல்லி, உன்னை கன்வின்ஸ் செய்து, எங்க பாரலல் யூனிவர்ஸ் ஹூமன் இருக்கற அயனபீட உலகத்துக்கு அழைச்சிட்டு போக சர்பிரைஸா வச்சியிருந்தா… கடைசி நொடில எல்லாத்தையும் கவுத்துட்டா.” என்று உச்சுக் கொட்டினான்.

  ஆதினி அங்கும் இங்கும் பார்த்து பயத்தில் வீட்டு வாசலுக்கு ஓடமுயன்றாள். அயனோ “நம்ம பொண்ணு அக்ஷயா இங்க இருக்கா ஆதினி. அவளை மறந்துட்டு ஓடுற” என்று கூப்பிட, ஆதினி கால்கள் அவ்விடத்திலேயே வேரூன்றியது.

கால்கள் நடுங்க, ஓடவும் வழியின்றி அழுதாள்.

  அயன் உறங்கும் அக்ஷயா அருகே வரவும் “நோ..” என்று ஆதினி ஹாலுக்கு வந்தாள்.

“நீ.. நீ யாரு.. என் அயனை என்ன செய்த? என் பொண்ணை விட்டுடு.” என்று கதறினாள்.

“ஆதினி… ப்ளீஸ்… இப்படி அழாத. ரொம்ப அசிங்கமா இருக்கு. உட்காரு.” என்றான்.

ஆதினி பயந்து உட்கார மறுக்க, “நான் ஒன்றரை வருடமா உன் கூடயிருக்கேன்‌ ஆதினி. உன்னை எப்பவாது துன்புறுத்தியிருக்கேனா? இல்லை… அக்ஷயாவை துன்புருத்தியிருக்கேனா?” என்று கேட்க, இப்பொழுதும் தன் முன் இருப்பது வேற்று மனிதன் அயன் என்று நம்பாமல் அயன் என்ற பூமி மனிதனை தேடினாள்‌.

  ஆனால் காதை தவிர்த்து அந்த பச்சை கண்கள், மூக்கு உயரம் உதடு என்று எல்லாம் அயனாக தெள்ளதெளிவாக தெரிய, “ப்ளீஸ்… என்னையும் அக்ஷயாவையும் விட்டுடு. உனக்கு என்ன வேண்டுமோ அதை எடுத்துட்டு போயிடு.” என்று கையெடுத்து கெஞ்சினாள்.

அயனோ “ஆதினி… எனக்கு தேவை நீயும் அக்ஷயாவும் தான்‌. உட்காரு” என்று ஆணையிட்டவன் சோபாவில் அமர, ஆதினி அமராமல் நின்றாள்.

  “நான் யாரு என்னனு சின்ன டீட்டெயில் உன் பிரெண்ட் அனிதா தந்துட்டா. நான் ஏன் வந்தேன், எதுக்கு வந்தேன்னு சொல்லட்டுமா? தெரிந்துக்க ஆசைப்படறியா? நான் என்னை பத்தி சொன்னா தானே என்னை பத்தி தெரிந்துக் முடியும். என்னை பத்தி தெரியாததால படத்துல வர்ற வில்லன் ரேஞ்சுல லூக்கு விடற. என்னை பத்தி, நானே என் தரப்பு நியாயத்தை சொன்னா… நீ என்னை ஹீரோ லெவலுக்கு கொஞ்சமாவது கன்சிடர் பண்ணுவல்ல?” என்று பேசவும் அயன் காதுகள் இரண்டும் பூனை காதுகள் போல அடிக்கடி திருப்பி முறுக்கி நார்மலானது.

ஆதினிக்கு அதற்கே தொண்டையில் எச்சி விழுங்க முடியாத நிலை. அங்கும் இங்கும் பார்த்தவள் இரும்பு ஒளி விளக்கு கண்ணிற்கு தெரிய, அதை எடுத்து நொடியில் அயனை தாக்க முயன்றாள்.

  “ஆதினி… என்ன செய்ய ட்ரை பண்ணற? நான் உங்கள மாதிரி நார்மல் ஹூமன் இல்லை ஆதினி.
   கிட்டதட்ட இதே போல வேறொரு இணையான உலகத்துலயிருந்து வந்தவன். லைக் ஏலியன்கூட வச்சிக்கோ.. வேற்றுகிரக வாசி. எனக்கு இந்த பூமில வாழற மனிதர்களோட உணர்வுகள் அத்துப்படி. உன் மனசு எண்ண நினைக்குது, உன்‌ உடல்மொழி என்ன செய்ய வருதுனு கூட எனக்கு தெரியும்.

  நீ அடிக்க வந்தா, அது தெரியாம போகுமா? ஆதினி… நான் உன்னை மனைவியா நினைக்கறேன். நீயும் என்னை கணவனா பாரு. அதை விட்டு கர்ப்பமா இருக்கறப்ப என்ன ஸ்டன்ட் வேண்டிக்கிடக்கு?
  
  முதல்ல உட்காரு… கர்ப்பமா இருக்க. என் குழந்தைகள் வேற வயிற்றுல வளருது. அவங்களுக்கு டயர்டா இருக்கும்ல” என்றான்.
 
  ஆதினி கர்ப்பம் என்றதிலிருந்து அவளது கைகள் ஒவ்வொரு முறையும் ஆசையோடு வயிற்றை தடவியது. இம்முறை பயத்துடன் அவளது வயிற்றை தொட்டாள்.

உயிர் பயம், பதட்டம் என்று அவளை புரட்டியது.
 
  தன் வயிற்றில் வளர்வது தன்னை போல மனிதனின் கருவல்ல, அது ஏதோ பாரலல் யூனிவர்ஸ் ஹூமன் என்று அயன் சொன்னது நினைவில் வந்து தாக்கியது.

   ஆதினி தலை இடம் வலம் என்று மறுத்து நிற்க, “உட்காரு ஆதினி” என்றான்.

  ஆதினி வயிற்றை பிடித்து அழத்துவங்கினாள்.

“என்னை என்ன பண்ணற? ஏன் இங்க வந்த? என்னை ஏன் இப்படி கர்ப்பமாக்கின? என் பொண்ணை விட்டுடு. நீ ஏன் இங்க வந்த.? ப்ளீஸ..‌‌.” என்று மண்டியிட்டு அழுதாள்.

அயனோ ”நான் உன்னை உண்மையா விரும்பறேன் ஆதினி. அக்ஷயாவை என் சொந்த மகளா பார்க்கறேன். நான் உன்னை ஏமாத்தலை. புருஷன் கூட தானே பொண்டாட்டி இருக்கணும்னு உங்க சாஸ்திரம் சொல்லுது. அதுக்கு தான் உன்னை அழைச்சிட்டு என் உலகத்துக்கு போக வந்தேன்.  

    என்னோட வா ஆதினி. உன்னை ஒன்னும் பண்ணமாட்டேன். நான் ஏன் வந்தேன் எதுக்கு வந்தேன், உன்னை ஏன் என் துணைவியா செலக்ட் பண்ணினேன்னு சொல்லறேன். உட்காரு… ஆதினி‌” என்று மொழிந்தான்‌.
  
-தொடரும்.

பிரவீணா தங்கராஜ்.

2 thoughts on “அயலா… அயலா…-17”

  1. அடேய்..! நீ என்ன சொன்னாலும் இனி கேட்க முடியுமா என்ன?

    😔😔😔
    CRVS (or) CRVS 2797

  2. vetru kiraga vasiya irunthu ethukga inga vanthu ivanga kuda palagi kolanthaium koduthuta ipo nee solla varatha eppadi keka mudium oru life pochi adutha life athu avaluku nalla iruku ninacha ippadiya

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top