அயலா… அயலா…-16

அத்தியாயம்-16

   அக்ஷயா ஐந்து முப்பதுக்கு கண் விழித்திட, முதலில் பிறந்த நாள் வாழ்த்து கூறி முத்தமிட்டது அயன்.

  ஆதினி அயன் நேற்றிரவு செய்த சேட்டையில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்.

“அயலா… என்னோட பிறந்தநாள் கிப்ட் எங்க?” என்று கேட்க, அவளிடம் “முதல்ல எழுந்து பிரஷ் பண்ணிட்டு குளிச்சிட்டு வா, பால் ஆத்தி, தர்றேன். பெர்த்டே டிரஸ் அங்க வச்சியிருக்கேன். இன்னிக்கு முழுக்க இந்த ஏரியாவை சலிச்சி போற அளவுக்கு கொட்டமடிச்சிட்டு பிறகு தான் உன் கிப்ட்” என்று கன்னத்தை தட்ட, அவளும் வேகமாய் பிஞ்சு கால்களை அழுத்தமாய் வைத்து, துள்ளிக் குதிக்காத குறையுடன், குளியலறைக்கு ஓடினாள்.

  அயன் ஆதினி எழுவதற்குள் பாலை சூடுப்படுத்தினான். ஆதினி மகள் கணவன் இல்லாததை படுக்கையில் உணர்ந்து எழுந்து, அவளுமே மகள் குளிக்கவும், அவளுமே அடுத்து குளித்திட மாடிக்கு சென்றாள்‌. ஒரே நேரத்தில் தயாராகி வருவதற்கு திட்டமிட்டாள்.

  அயன் ஆதினி அடுத்து காய்கறிகளை கத்தரித்து அரிசி உப்புமா செய்து வைத்தான்.

   குழந்தை அதற்குள் குளித்து பிறந்த நாள் உடையை அணிந்து, “அயலா…. அயலா… என் டிரஸோட ஜிப் போட்டு விடுங்க.” என்று காட்டினாள்.
  
குழந்தைக்கு ஜிப்போட்டுவிட்டு, இடுப்பில் பௌவ்வும் கட்டிவிட்டான்.

“அம்மாவும் எழுந்து குளிக்க போயிருக்காங்க” என்ற தகவலையும் வழங்கினாள்‌. அயன் அறியாததா?!

சிறிது நேரத்திலேயோ அழகான பின்னலை அவனே மகளுக்கு போட்டுவிட்டு, ரப்பரை மாட்டினான்.

     “யூ லுக் கார்ஜிசியஸ் கிட்” என்று தாடை பிடித்து கொஞ்ச, ஆதினி குளித்து முடித்து டீயை பருகினாள்.

“அம்மா உங்க கிப்ட்?” என்றிட  ஹாலில் நடுவே அக்ஷயாவை நிறுத்தி நிற்க கூறினாள் ஆதினி.
 
  குழந்தை நின்றதும், மேலே பெரிய பலூனை உடைத்தான் அயன். குழந்தை அயனை தேடி வரவும் போகவும் இருந்தாளே தவிர அயன் மேலே மாட்டிய பலுனை கவனிக்க தவறினாள்.
  அந்த பெரிய பலூனிலிருந்து குட்டி குட்டி பலூன்கள் மற்றும் வண்ண காகிதம் அடங்கிய துகள்கள் இருக்க, அது அக்ஷயா மீது மழையாக பொழிந்தது.

குழந்தைக்கு இதை தவிர்த்து வேறென்ன வேண்டும். குதூகலமாக குதித்து கைதட்டி மகிழ்ந்தாள்.

  அதில் அவள் முன் ஒரு பெரிய பாக்ஸை ஆதினி கொண்டு வந்து வைத்தாள்.

  அதை பிரிக்க அனைத்தும் ஸ்பேஸ் சம்பந்தப்பட்டவையாக இருந்தது.

  குழந்தை ஆர்வத்தில் “அம்மா‌.. அம்மா.‌ இதை நான் பிரதாப் அப்பாகிட்ட கேட்டேன்‌. அவர் வாங்கித் தர்றேன்னு சொல்லிட்டு போனார். ஆனானானா… நீங்க வாங்கி தந்துட்டிங்க?” என்று கன்னத்தை எச்சிப்படுத்தினாள். ஆதினி அயனை காண தவித்தாள்.

அயனோ கையை கட்டி மனைவியை பார்த்தான். குழந்தை மனதில் எதையும் யோசித்து பூட்டி வைத்திட எதுவுமில்லையே. அதனால் அவள் ஸ்பேஸ் டாய்ஸ் வைத்து விளையாட ஆரம்பித்தாள்.

   ஆதினி தான், “ஆதினிக்கு ஸ்பேஸ் டாய்ஸ் ரொம்ப பிடிக்கும். அவ அதிகமா வாயை திறந்து கேட்டது அந்த பொம்மைகள் தான். மத்தபடி பிரதாப் நினைவுக்காக வாங்கி தரலை. அவரிடம் கடைசியா குழந்தை கேட்ட விளையாட்டு பொம்மை என்றதாலும், ரொம்ப நாளா வாங்கி நினைச்சது என்றதாலும் தான் வாங்கினேன். மத்தபடி இதுக்குன்னு தனியா சண்டை வேண்டாம் அயன். நான் ரொம்ப டவுன் ஆகிடுவேன்.” என்று விளக்கமளித்தாள். 

அயனோ ”நான் உன்னை எதுவும் சொல்லலை போதுமா? போய் கில்டி பீல் இல்லாம கிளம்பு. நாம இன்னிக்கு இந்த ஏரியாவில் சுத்திட்டு வருவோம். காலையில் மட்டும் அரிசி உப்புமா பண்ணிருக்கேன். அடுத்து தீம் பார்க் போக கேப் புக் பண்ணிருக்கேன். மதியம் புட் தீம் பார்க்லயே பார்த்துக்கலாம். ரிட்டர்ன் ஈவினிங் மஸாஜ் பார்லர் கூட்டிட்டு போறேன். அங்க நாம விளையாடியதுக்கு அசதியா இருக்கலாம்‌ கை  கால் மஸாஜ் முடிச்சி அங்கயே இரண்டு மணி நேரம் ஹெட் மஸாஜ் பிளஸ் ஸ்லீப்பிங் முடிச்சிட்டு நைட் படம் பார்த்துட்டு வந்து, டின்னர் முடிச்சிட்டு நாம கிளம்பலாம்” என்றான்.

ஆதினியோ, “ஒரே நாள்ல இதெல்லாம் டயர்ட் ஆகிடும் அயன். ஒன்னு ஊருக்கு போறது நேரத்துக்கு போகலாம். இல்லைன்னா… தீம் பார்க் மட்டும் போகலாம். அதை தவிர்த்து மஸாஜ் சென்ட்ர், மூவி எல்லாம் வேண்டாம்.” என்று கூறினாள்.

“இல்லை… நம்ம எனர்ஜி லெவல் பொறுத்து அதேல்லாம் எக்ஸிகியூட் பண்ணுவோம்.” என்று முடித்திட, ஆதினியோ வயிற்றில் கையை வைத்து, “பிரகனென்டா வேற இருக்கேன் அயன். நான் சோர்ந்துடுவேன். இல்லைன்னா..‌ குழந்தைக்கு ஏதாவது ஆகிடப்போகுது” என்று பயந்தாள்‌.

   “இல்லை… குழந்தைக்கு ஒன்னும் ஆகாது. நான் நேத்தே இந்த குட்டி வயிற்றில் காதை வச்சி பேசி சொல்லிட்டு என் குழந்தையோட விருப்பத்தையும்‌ கேட்டுட்டேன்.” என்றான்.‌

“குழந்தை நான் ரொம்ப நல்லா ஹெல்தியா இருக்கேன்‌னு வாயை திறந்து சொல்லுச்சா” என்றாள்.‌

“ஆமா… ஆதினி அம்மாவோட வயிற்றில் சௌகரியமா இருக்கேன்னு சொன்னாங்க.‌” என்றான்.‌

“ஓ… சென்னாங்களா?” என்று பன்மையில் கூறவும் கேட்டாள்.

  “ஆமா… ட்வின்ஸ். ஒரு பையன் ஒரு பொண்ணு” என்றான் சிரிப்புடன்.

“முடிவே கட்டிட்டிங்களா?” என்றாள்‌ ஆதினி.

“ம்ம்ம்ம” என்று தோளைக் குலுக்கினான்.‌

  அயன் விளையாட்டுத்தனமாக கூறினாலும், வயிற்றை பார்த்தாள் ஆதினி.‌

ஏனோ அக்ஷயா இருந்ததை காட்டிலும் வயிறு பெரிதாக தெரிந்தது போன்று இருந்தது.

  அவளை அதிகம் யோசிக்க வைக்காமல் சாப்பிட வைத்தான்.

     திட்டம் போட்டதை போலவே சாப்பிட்டு தட்டை வைத்துவிட்டு கையின் ஈரம் கூட காய விடாமல், அயன் தந்த மாத்திரையை விழுங்க வைத்து, கேப்பில் ஏற வைத்தான்.

  “அயன்… அநியாயத்துக்கு பாஸ்டா இருக்கிங்க?” என்றாள் ஆதினி.

“அயலப்பா எப்பவுமே பாஸ்ட் தான் அம்மா. உங்களுக்கு தெரியாதா?” என்று சிரிக்க, அயனோ ஆதினி இடையில் உரசி, அவள் செவி மடலில் கிசுகிசுப்பாய் “மேரேஜ் முடிஞ்சதும் டபுள் பேபிஸை பில்லப் பண்ணிருக்கேன். என் ஸ்பீடு உனக்கு தெரியலை” என்று புருவம் உயர்த்தினான்.

ஆதினியோ அவன் தோளில் செல்லமாய் அடித்து, “இந்த பச்சை கண்ணை வச்சி உருட்டி கிருட்டி, என்ன பேச்சு? ஏற்கனவே இந்த கண்ணை கண்டா அப்படியே மெஸ்மரிஸமாகுது‌. இதுல அட்ராக் பண்ணற மாதிரி புருவத்தை ஏத்திட்டு.” என்றவள் நெஞ்சில் இடித்தாள்.

தீம் பார்க் வந்ததும் இறங்கி பாதையில் நடந்தார்கள்.

இரண்டு நொடி முடிவடைந்ததும், “ஆமா… ஏன் டிவின்ஸ்னு சொல்லிட்டு இருக்கிங்க? நாம சின்ன செக்கப் கூட பண்ணலை. நேத்து டாக்டர் கூட அதை பற்றி சொல்லலை. அப்படியிருக்கு இரண்டு பேபிஸ்னு கனவு கோட்டை கட்டாதிங்க” என்று அறிவுறுத்தினாள்.

அயனோ “சரி சப்போஸ் இரண்டு பேபிஸ் என்றால் எனக்கு அடுத்து மறுபடியும் இரண்டு பேபிஸ் பெத்து தரணும். டீல் ஓகேவா?” என்று கேட்டான்.

  ஆதினியோ, “பார்டா… என்ன வச்சி பேபிஸா பெத்து, ஸ்கூல் வைக்கலாம்னு பிளானா?” என்று சிரித்தாள்.

“வெயிட் பண்ணு… நமக்கு நான் டிக்கெட் வாங்கிட்டு வந்துடறேன்” என்று தற்காலிகமாக பேச்சு தடையானது.

    அக்ஷயா தந்தை கூடவே சுற்றவும், ஆதினி தன் வயிற்றை கண்டு, பெரிய பெரிய ராட்டினத்தை பார்த்து மிரண்டாள்‌.

  எத்தனையோ விதமான செய்தியில் கர்ப்பிணிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பொது இடத்தில் இப்படி அபாயகரமான விதமாக வருவதை தவிர்க்க வேண்டும். ஆனால் இன்று நானே அப்படி வந்துள்ளதை எண்ணி பயந்தாள். ஆனால் அயன் ஏன் தீம் பார்க் செல்ல அழைத்து வந்தார் என்று யோசித்தாள்.

மனமோ லேசாக நேற்று போல தப்பும் தவறுமாக யோசிக்காதே என்று எச்சரித்தது.
  நேற்றே திருமணத்திற்கு முன் என்னை கற்பழித்தாயா என்று கேட்காத குறையாக, ஆனாலும் வேறு விதமாக கேட்டு, அயனுக்கு அர்த்தம் புரிந்து அவனாக நான் உன்னை மணந்த பின்னே தீண்டியது என்று கூறினான்.
  இதில் இப்படி ஆபத்தான இடத்தில் பயணிக்க வைத்து ஏன் அழைத்து செல்கின்றாய் என்று கேட்டால் தவறாக நினைப்பாரோ?

  நேற்றும் இன்றும் தப்பும் தவறுமாய் மூளை வழிநடத்த, அதை அடக்கி, மகளின் பிறந்த நாளுக்கு மகிழ்ச்சியை தொலைக்காதே. அயன் மீது எந்த தவறான அபிப்ராயமும் வைக்கும் அளவிற்கு அவனில்லை’ என்று நம்பினாள்.

  அயன் கையை பிடித்தப்பின், அவனை பற்றி ஒரு சதம் கூட தவறாக எண்ணவும் முடியாது. அந்தளவு அவனது காதல் இறுக்கம் அன்பு பறைச்சாற்றும்‌.

  அதுவும் அக்ஷயாவை அவன் வழிநடத்தும் அழகில் பிரதாப் கூட தோற்றுப் போவான். தந்தையாக பிரதாப் அக்ஷயா விஷயத்தில் பாதி தான் பூர்த்தி செய்தது‌. அயன் அப்படி அல்ல. பெற்றவன் அவனில்லை தவிர இந்த இடைப்பட்ட நாளில் ‘அபியும் நானும்’ படத்தில் உள்ள அப்பாவும் மகளும்  போல இருப்பார்கள்.

பல எண்ணத்தை மனதில் போட்டு உழப்புவதால் ராட்டினத்தில் ஏறியதையே அவன் உணரவில்லை. அக்ஷயாவே “அம்மா… சூப்பரா இருக்கு. ஜாலியா இருக்கு. ஹேஹே” என்று கத்துவதில் சுயமடைந்தாள்.

   “மேகத்தில பறக்கற மாதிரி இருக்கா அக்ஷு” என்றான்.

“அயலப்பா.. செமையா இருக்கு. நான் பயப்படலை பாருங்க” என்று கழுத்தை கட்டிக் கொண்டாள். அயனும் மகளும் முத்தமிட்டு, கட்டிக்கொள்ள, “ஆதினி கண்ணை இறுக்கமாக மூடிக்கொண்டு அயன் நெஞ்சில் சாய்ந்தாள்.

“அயன்… பயமாயிருக்கு.. நான் கன்சீவா இருக்கேன். ஏதாவது ஆகிடப்போகுது.” என்று அவன் சட்டையை இறுக்கினாள்.

  “பயப்படக்கூடாதுன்னு தானே அழைச்சிட்டு வந்ததே. இப்படி பயப்படற.” என்று கன்னத்தை தட்டினான்.‌
“கண்ணை திறந்து பாரு” என்று கூற, “நோ.. அயன்.” என்று மறுத்தாள்.

  “அச்சோ.. கண்ணை திறந்து பார்த்தா தான் ரசிக்க முடியும் ஆதினி. என் மகளே ரசிக்கற. உனக்கென்ன?” என்றதும் அரை கண்ணால் ஆதினியை காண, அவளோ சிகைகள் காற்றில் பறக்க கையை விரித்து சிறு பறவை போல நின்றாள்‌.

ஆதினியும் முழு கண்ணை திறந்து, பார்க்க வானத்தில் மிதந்திருந்தது போல ராட்டினம் மேலே இருந்தது.

காற்று சில்லென்று வீச, ஆதினி அயன் நெஞ்சை பிடித்து, “வியூ நல்லாயிருக்கா?” என்று கேட்க, “சூப்பரா இருக்கு” என்றாள்.

  இதே போல தான் மற்ற ராட்டின ரைட் எல்லாம் கண்ணை திறந்து அழகை ரசித்து, பயத்தை களைந்து மகிழ்ச்சியை மனதில் நிறைத்தாள்.

  அடிக்கடி வயிற்றில் கையை வைக்க, அயனோ “ஏன் வயிற்றுல கையை வைக்கிற. வலிக்குதா?” என்றான்.

“வலியெல்லாம் இல்லை. ஒரு பாதுகாப்பு உணர்வு தான்.” என்றாள்.

அடுத்து மதியம் அயன் கூறியது போலவே உணவை விழுங்கினார்கள்.
அடுத்து மீண்டும் தண்ணீரில் ஆட்டம்‌ அயன் குறிப்பிட்ட நேரத்தில் வரக்கூறிவிட்டான்.
  மாலை வரும் வழியில் யூனிசெக்ஸ் பார்லர் இருந்தது. அதில் குடும்ப சகிதம் சென்று ஆளுக்கொரு படுக்கையில் படுத்துக்கொள்ள, ஹெட் மசாஜ், பாதம் கைகால்கள் என்று மெதுவாக அழுத்தம் தந்து உடல் களைப்பை ஈடுக்கட்டினார்கள்‌

அயன் கூறியது போல ஆதினி உறங்கினாள்.
  அக்ஷயா தான் அந்த அக்கப்போரிலும் விழித்து அயனிடம் கேள்விகளை துளைத்தாள்.

  அவனோ மகளுக்கு சளைக்காமல் பதில் தந்தான்.‌

  ஆதினி கண் விழிக்கும் நேரம், அக்ஷயா அயனிடம் “இந்த பெர்த்டே என்னால மறக்கவே முடியாது அயலப்பா. நீங்க இன்னிக்கு என்னோட டேவையே கலர்புல்லா மாத்தி, எனக்கு ஹாப்பியை மட்டும் தந்துட்டிங்க. பிரதாப் அப்பா கூட என்னிடம் இவ்ளோ நேரம் செலவிட்டதில்லை‌. நீங்க என் அப்பாவாவே இருந்திருக்கலாம்.” என்றாள்.

அதற்கு அயனோ “ஏ அக்ஷு குட்டி.. இப்பவும் நான் உன் அப்பா தான். பிரதாப் அப்பா இல்லை. ஓகேவா. இன்னொரு முறை அப்படி பேசாத. என்னால தாங்க முடியாது‌. அதென்னவோ மனசு வலிக்கு அக்ஷு” என்றான்.

  ஆதினி கண்கள் நீரை தாரை வார்த்து எழுந்தாள். உடல் ஏதோ புத்துணர்வு பெற்றது போல இருந்தது‌ ஒரு மணி நேரம் கடந்ததோ தெரியவில்லை.
இங்கு வந்து பத்து நிமிடத்தில் உறங்கியிருப்பதாக கடிகாரம் நேரம் காட்டியது.

   அடுத்து அங்கேயே டச் அப் செய்து விட்டு பணத்தை தந்துவிட்டு படத்திற்கு கிளம்பினார்கள்.

  படம் ஆரம்பித்ததும் அனிதா காலிங் என்று வந்தது. ஆதினிக்கு தலைவலி வராத குறையாக இருக்க, அயனை பார்த்தாள். ஆனந்தம் வழிய வழிய மகளோடு இப்பவே பாப்கார்ன் வாங்கி படம் பார்ப்பவனுக்கு அனிதா அழைப்பது தெரிந்தால் வாடுவானென கத்தரித்தாள். “ஐ அம் இன் தியேட்டர். டோண்ட் டிஸ்டர்ப் மீ.” என்று மட்டும் அனுப்பினாள்.

  அனுப்பிய கையோடு போனை கைப்பையில் போட்டுவிட்டாள்.

    -தொடரும்.

பிரவீணா தங்கராஜ்.

2 thoughts on “அயலா… அயலா…-16”

  1. அனிதா அப்படி என்னத்தைச் சொல்ல ஆளா பக்குறாள்ன்னு தெரிலையே..?

    😔😔😔
    CRVS (or) CRVS 2797

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top