அயலா… அயலா…-15

அத்தியாயம்-15

   வீட்டுக்கு வரும் பொழுதே சோர்வுடன் வந்தாள் ஆதினி.

  அயனோ, “கிப்ட் எல்லாம் வாங்கிட்ட போல” என்று கவரை பார்த்தான்.
 
   ஆதினி பேசாமல் நடையிட, அயனுக்கு எரிச்சல் வந்திருக்க வேண்டும். அதை மறைத்து, “என்ன டயர்டா இருக்க? பெர்த்டே என்றதும் பிரதாப் நினைவு வருதா?” என்றான்.‌

ஆதினி புருவம் சுருக்கி, அயனை கண்டாள். அயனின் பேச்சில் பொறாமை தீ வழிவதை கண்டவளுக்கு, “பிரதாப் நினைவுகளை அழிக்க அவன் போட்டோவை பூஜை ரூம்ல வச்சாலும், பிறகு ஸ்டோர் ரூம்ல போட்டுட்டாலும், எனக்கும் அவனுக்குமான காமன் பிரெண்ட்ஷிப்பை கட் பண்ணிட்டாலும், நினைவுகள் அழியாது. ஏன்னா… அக்ஷயா பிறப்பு இருக்கற வரை பிரதாப் நினைவுகள் இருக்கும்.” என்று பேசிவிட்டு கடந்தாள்.‌

அயன் சில நொடி யோசனைக்கு பின், “நான் பிரதாப் நினைவை அழிச்சேன்னு சொல்லறியா ஆதினி?” என்றான்.‌

“இல்லையாப் பின்ன…?” என்று கேட்டவள், அயனை கண்டு, “அவன் டிரஸை யாருக்காவது கொடுத்தா, யூஸாகும்னு கன்வின்ஸ் பண்ணின, பெரிய போட்டோஸ் எல்லா பூஜை ரூம்ல இருந்து ஸ்டோர் ரூம் போயிடுச்சு. இப்ப ஸ்டோர் ரூம் கூட அப்படியே விட்டுட்டு இந்த வீட்டை விட்டுட்டு, உன் பிசினஸுக்காக எங்கயோ சர்பிரைஸ்னு சொல்லிட்டு இடத்தையே மாத்தற.” என்றாள். அவள் பேசியது முழுதும் குற்றம் சுமத்தும் விதமாக அமைந்தது.

  ”என்ன பேசற. நான் ஏன் செத்துப் போனவனோட போட்டிக்கு நிற்கணும்?” என்று கத்திவிட்டு, நிதானமானான்.

   ஆதினியை பார்த்து “என்கிட்ட அவனை மறந்துட்டேன்னு சொல்லிட்டு உன் மனசுல அவன் வாழ்ந்தாலும் எனக்கு தெரியாது ஆதினி. அப்படியிருக்க….” என்றவன் அக்ஷயா ஆதினி வாங்கிய பரிசை பிரித்து காட்டி, “ஸ்பேஸ் ராக்கெட்.. இதெல்லாம் அவன் நினைப்புல வாங்கி தந்தியா?” என்று கேட்க, ஆதினி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

மனதில் ‘அக்ஷயா பிரதாப்பிடம் கடைசியா கேட்ட பரிசு. நினைவு வந்துச்சுனு வாங்கினேன். அது தப்பா… இப்ப பிரதாப் நினைவால வாங்கியதா பழி வந்திருக்கு. மறுமணம் செய்தாலும் தப்பு தானா? முதல் கணவனை வச்சி இரண்டாவதா மணந்தவன் குத்தி கிழிச்சி பேசுவாங்களா?’ என்று உடைந்து போனவளாக துவண்டாள்.

  அவள் மனதை படித்தவனாக அயனோ, “சாரி… பிரதாப்பை பற்றி பேச்சை இழுத்தது நான் தான்” என்று மன்னிப்பு வேண்டினான்.‌

அந்த நேரம் அனிதா வேறு போன் செய்யவும் அதை துண்டித்து சைலண்டில் போட்டாள்‌ ஆதினி.

ஆதினியோ அயனை தாண்டி சென்று தண்ணீரை குடித்தாள்.
பக்கவாட்டு தோற்றத்தில் ஆதினி நீரை பருக, அயனோ அவளது வயிற்றில் தொப்புளில் பச்சை திரவம் ஜெல் போல தெரிய, “ஆதினி.” என்று பதறி ஓடிவந்தான்.‌

“ஏய்… உனக்கென்ன ஆச்சு.?” என்று உடலை தொட்டு தடவினான்.‌ சேலையை அகற்றி அந்த ஜெல்லை பார்த்து கேட்டவன், உடனடியாக அவளுக்கு தண்ணீரை கொதிக்க வைத்து சமையல் கட்டை உருட்டினான். ஏதேதோ மசாலை டப்பாவில் இருந்து சில உணவே மருந்து என்றதை, கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கொதிக்க வைத்தான்.

“எனக்கு ஒன்னும் ஆகலை. அக்ஷயாவுக்கு கிப்ட் வாங்க போனப்ப லேசா ஸ்கிட் ஆகிடுச்சு. கன்சீவா இருக்கலாம்னு பேசியது நினைவு வரவும், டாக்டரிடம் போனேன்.” என்றாள்.

அயனோ ஸ்தம்பித்தவனாக மாறி, “டாக்டர் என்ன சொன்னாங்க?” என்று பதட்டமாக கேட்டான்.‌

டாக்டர் ஏதேனும் சொல்லி அதன் விரக்தியில் இப்படி பேசுகின்றாளா என்ற காரணத்தால்.‌..

  “குழந்தை வளர்ச்சி அதிகமாவே இருக்காம்.” என்றாள். அதை கூறும் போதே முகம் அக்னி பிரவசித்தது.

“அதனால என்ன? வேற ஏதாவது சொன்னாங்களா?” என்றான். கைகள் அவன் இஷ்டத்திற்கு கொதிக்க வைத்த நீரை வடிகட்டி, கண்ணாடி டம்ளரில் ஊற்றினான்.

“நமக்கு கல்யாணம் ஆகறதுக்கு முன்னவே நான் கர்ப்பமா இருக்கற அளவுக்கு வளர்ச்சி.” என்றாள்.

“அதெல்லாம் இருக்காது. பேபி க்ரோத் எக்ஸ்ட்டாடினரியா இருக்கும்.” என்று கூறினான்.

அக்ஷயாவோ “அயலாப்பா அம்மா ஏன் அழறாங்க.” என்று புரியாமல் கேட்டாள்.

  “அக்ஷயா குட்டி… நானும் அம்மாவும் பேசறோம். நீங்க ஹால்ல கார்டூன் பாருங்க.” என்று விரட்டினான்.

ஆதினியோ மகளிடம் இந்தளவு தந்தையாக பாவிப்பவன், தன்னிடம் காதலை சொல்வதற்கு முன், ஏதாவது இரவில் தன்னிடம் அத்துமீறினானா? அல்லது மயங்கி இருந்த பொழுது ஏதாவது தவறாக நடந்தானா? ஆனால் அயன் முகத்தை பார்த்து கேட்க என்னால் இயலாது. அப்படி கேட்டால் அது எங்கள் பந்தத்திற்கு இழுக்காகுமே.’ என்று கண்ணீரில் கரைந்தாள்.

அயனோ ஆதினியை பார்த்து வெதுவெதுப்பான நீரை தந்து, அவளது கைப்பையில் டாக்டர் தந்த ரிப்போர்டை பார்த்து, “டாக்டர் குழந்தையோட வளர்ச்சி அதிகமா இருக்குனு தான் சொல்லி ரிப்போர்ட் தந்திருக்காங்க

 கல்யாணத்துக்கு முன்ன நான் உன்னை கர்ப்பமாக்கிட்டேன்னு எந்த நாளும் இல்லை. குழந்தை உருவானது நமக்கு கல்யாணமான பிறகு தான். கண்டதையும் யோசித்து ஒரு மெடிக்கல் ரிப்போர்ட் கூட ஒழுங்கா பார்க்க மாட்டியா ஆதினி.

  என் மேல வாயை திறந்து கேள்வி கேட்கலை. ஆனா மனசால என்னை கெட்டவனா நினைச்சிட்ட அப்படி தானே.? நான் உன்னை மனபூர்வமா விரும்பறேன் ஆதினி. கல்யாணம் செய்ததும் அப்படி தான்.” என்றான்.

  ஆதினி அவசரமாய் மெடிக்கல் ரிப்போர்டை வாங்கி படித்தாள்.

அயன் சொன்னது போல வளர்ச்சி அதிகமா இருக்கு. நாள் கூட இருக்குமோ’ என்று கணித்து கூறியிருப்பாரோ. நான் தான் தவறாக புரிந்து மனதை வதைத்து அயனையும் வதைத்துவிட்டோமோ?! என்று அவன் தந்த நீரை பருகினான்.

அயனோ பச்சை கலர் திரவத்தை வயிற்றில் துடைத்து, நிம்மதி மூச்சை வெளியிட, “அது ஸ்கேன் செய்தப்ப உபயோகித்த ஜெல்லா இருக்கலாம்” என்று கூற, அயனோ அக்னியை பொழிந்தவனாக சென்றான்.

ஆதினியோ அவசரப்பட்டு விட்டோமோ? என்று நினைத்தாள்.

   அயனை சமாதானம் செய்ய முயல அவனோ ”ப்ளீஸ்… ஆதினி.. எனக்கு கொஞ்சம் தனிமை வேண்டும்.” என்று கூறிவிட்டான்.

  இரண்டு நாள் அயன் ஆதினியிடம் பேசவில்லை. நாளை அக்ஷயாவுக்கு பிறந்த நாள். நாளையும் இதே போல முகத்தை திருப்பி வைத்துக் கொண்டால், பிறந்த நாள் கொண்டாட்டம் நன்றாக இருக்காது என்று ஆதினியாக மகளை தூங்க வைத்துவிட்டு, அயனிடம் வந்து நின்றாள்.

அயனோ வானத்தில் நட்சத்திரத்தையும் நிலவையும்  கண்டு ஏக்கமாய் பார்த்தான்.

   ஆதினி பூனை நடையுடன் மெதுவாக வந்தவள், அயனுக்கும் அவளுக்கும் பிடித்தமான விளையாட்டாக, கூடலில் திளைக்கும் நேரம் கண்ணை கட்டி பெண்ணவளோடு சிலிர்ப்பை உண்டாக்கும் விதமாக கழுத்தை கவ்வி நாவால் வருடி, முத்தம் வைத்து கொள்ளும் காதல் விளையாட்டை அரங்கேற்ற அவனிடம் அவளது துப்பட்டாவை நீட்டினாள்.

   அயனோ முதலில் முகத்தை திருப்பி தள்ளி சென்றவன், ஆதினியும் அவனை போலவே அவனது கழுத்தில் உதட்டால் ஊர்வலம் நிகழ்த்தி, செல்ல கடியை வழங்க, அயன் உடல் முறுக்கேறியது.

  அயன் அவள் வசம் இழக்கும் விதமாக மாற, பெண்ணவளை தன் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்து, “என்னடி.. என்னையே வசியப்படுத்தற. என் மேல அவ்ளோ கோபம் இருந்ததுல. இப்ப எங்க போச்சு? என் பேஸ் பார்த்து பேசாம போன‌. இப்ப என்னை மாதிரியே வந்து காதல் இம்சை தர்ற?” என்று கேட்டான்.

“நீ என்னை மன்னிக்க மாட்டேங்கறியே?” என்றாள்.

அயன் உதடு புன்னகை பூரித்தது. அவள் தந்த துப்பட்டாவை அவள் கண்ணில் கட்டிவிட்டு “கண்ணு பாரு… க்ரீன் ஐ.” என்று முனங்க, அவள் தன் கண்ணை வைத்து பேசிய உதட்டை தண்டித்தான்.

மெதுமெதுவாக அவளை ஆக்கிரமித்து, காதல் தண்டனை தந்து, அயன் பெயரை உச்சரிக்க வைத்து, ஆனந்தத்தை கூட்டினான்.‌

பால்கனியில் சேலை அங்கங்கே நழுவியிருக்க, “அயன்… உனக்கு ஸ்டார் மூன் இதெல்லாம் பிடிக்குமா? எப்பபாரு அதை அப்படி ரசிக்கற.” என்றாள்.

”நிலாவையும் நட்சத்திரத்தையும் யாருக்கு தான் பிடிக்காது. கவுண்ட் பண்ணுவேன்” என்று முன்பு அவள் கூறியதை பதிலாக தரவும், “பிராடு… அது நான் சொன்னது” என்று அவன் கை புஜத்தில் அடித்து அவன் கையை இறுக பற்றினாள்.

  “நாளைக்கு அக்ஷயாவுக்கு பிறந்த நாள். அதோட நாளைக்கே ஊருக்கு போறோமா? இப்ப வரை சர்பிரைஸ்னு சொல்லி எந்த ஊருனு சொல்லவேயில்லை. எங்க தான்டா கூட்டிட்டு போற?” என்று கேட்டாள்.

“நாளைக்கு இதே நேரம் உனக்கு தெரியும். அப்ப டிராவல் பண்ணறப்ப நீயே தெரிந்துப்ப.” என்று உதட்டை இருவிரலால் பிடித்து இழுத்தான்.

“போடா..” என்று செல்லம் கொஞ்ச, “ஆதினி… நாம செகண்ட் ரவுண்ட் போகலாமா?” என்று கேட்டான்.

“விளையாடறியா? நான் ஆல்மோஸ்ட் பிரகனென்ட். ஐ அம் டயர்ட் அயன்” என்றாள்.

அயனோ “பச்… ஓகே.. லைட்டா… என்னை உரசிக்கிட்டே, என் மேல படுத்துயிரு” என்று அவளை இழுத்துக் கொண்டான்.

  “சாரி அயன்… நான் குழந்தை வளர்ச்சி அதிகம்னு சொல்லவும், என்னைக்காவது நானே மயங்கினப்ப, கல்யாணத்துக்கு முன்ன, நீ என்னை ரே-ப் பண்ணிட்டியோனு நினைச்சேன்.” என்று மனதில் நினைத்ததை தற்போது கேலியாக கூறினாள்.

“உன்னை அடையணும்னா நீ மயங்கணும்னு அவசியமில்லை ஆதினி. என்னால உன் சுய உணர்வோட, உன் சம்மதத்தோட கூட தொட்டிருக்க முடியும். என்னால உன்னை அந்தளவு வசியப்படுத்த முடியும்.” என்றான்.

“ஆமா… வசியம்.” என்று சிரித்தவள் அயன் கண்ணை கண்டு, “ஏ.. அயன்.. அனிதா திரும்ப கால் பண்ணினா. நாம ஊடலில் இருந்தப்ப. ஐ மீன் சண்டைப் போட்டுட்டு இருந்தப்ப. நான் கட் பண்ணிட்டு சைலண்ட்ல போட்டுட்டேன். இப்ப தான் போனை அகைன் பார்த்தேன்.
‘அந்த மோதிரத்தை பத்தி பேசணும்’னு மெஸேஜ் பண்ணிருந்தா. அவளுக்கு நம்ம மேரேஜ்ல இருந்தே அந்த மோதிரத்துல ஒரு கண்ணு. அந்த டிசைன் கேட்கறாளோ என்னவோ. பேசாம போட்டோ எடுத்து அனுப்பவா?” என்றாள்.‌

அயனோ “ஒன்னும் வேண்டாம். அவ பிரெண்ட்ஷிப்பை கட் பண்ணு” என்று எரிச்சலடைந்தான்.

“ஏ… ஏற்கனவே கல்யாணம் முடிந்தப்ப அந்த போட்டோவை கேப்சர் பண்ணினா. ஆனாலும் அது கிளாரிட்டியா இல்லையோ என்னவோ. அவளுக்கும் அவ மேரேஜிக்கு நகை வாங்க ஆசைப்படலாம்‌.” என்றதற்கு, அயனோ இடைப்புகுந்து, “ஒரு விஷயம் நம்மிடம் ஸ்பெஷலா இருந்தா தான் அதுக்கு பெயர் ஸ்பெஷல். அதுவே எல்லாரிடமும் இருந்துட்டா அது நார்மல்.
  நான் உனக்கு தந்த கிப்ட் ஸ்பெஷலா இருக்கணுமா? இல்லை எப்படி?” என்னு புருவம் தூக்கி கேட்க, “ஸ்பெஷலாவே இருக்கணும். அவ கேட்டா… அது உன்னிடம் இருக்குனு சொல்லிடறேன்.” என்றாள்.

“தட்ஸ் குட்” என்று அயன் கழுத்தை கவ்வி முத்தமிட்டான்.

-தொடரும்.

பிரவீணா தங்கராஜ்
 







2 thoughts on “அயலா… அயலா…-15”

  1. அட ராமா.! இவன் வில்லனா, ஹீரோவான்னே தெரியலையே..?

    😔😔😔
    CRVS (or) CRVS 2797

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top