அத்தியாயம்-12
இன்று சனி கிழமை என்பதால் மதிய உணவை தாமதமாக தான் சமைத்து கொண்டிருந்தாள் ஆதினி. வீட்டில் சாம்பார் வாசனை கமழ்ந்தது.
அக்ஷயா தரையில் ஓவியம் வரைந்திருந்தாள்.
ஆதினி சமையலறையில் இருந்தபடி, “அயன், கத்தரிக்காய் வாங்கிட்டு வந்திங்களே எங்க வச்சிருக்கிங்க?” என்று கேட்டாள்.
சில விநாடிகள் பதில் இல்லை.
அக்ஷயாவை பார்த்துக்கொண்டே அயன் ஹாலில் நின்றிருந்தான்.
அவள் திரும்பி பார்த்தபோது, அயன் அசையவே இல்ல. அக்ஷயாவை தான் கூர்ந்து நோக்கினான்.
“அயன்?” என்றதும் அவன் மெதுவாகத் திரும்பினான்.
அந்த திரும்பும் அசைவு எந்திரத்தனமாக இருந்தது.
“என்னை அவ பார்த்து பார்த்து வரையாற. நான் துளியும் அசையக்கூடாதாம். இதுல நீ வேற கூப்பிட்டுட்டு இருக்க? இடது மேல் அலமாரில கத்திரிக்கா இருக்கு” என்றான்.
ஆதினிக்கு மகளது சேட்டை சிரிப்பை தர கத்திரிக்காயை எடுத்து அரிந்தாள்.
ஆதினி மகளை எண்ணி கவனம் சிதற கையை தவறுதலாக வெட்டினாள்.
“அச்சோ..” என்று டேப் தண்ணீரில் கையை கழுவ, அயனோ “பார்த்து செய்ய மாட்ட. இப்படியா கையை வெட்டிக்கறது” என்று உடனடியாக கட்டுப்போட்டுவிட்டான்.
அயன் குழந்தை அருகில் இருந்தான்.இந்த இடத்துக்கு உடனடியாக வேகமாய் வந்து நின்றிருந்தான்.
“அயன்… நீங்க அங்க குழந்தையிடம் இருந்திங்களே” என்றாள்.
அவன் ஆதினி கையை மெதுவாக பிடித்து, “நான் எங்க இருந்தாலும் என் பார்வை உன்னை விட்டு அகலாது ஆதினி. உனக்குன்னா அடுத்த நிமிஷம் உன் முன்ன நிற்பேன்.” என்றான். அவளுக்கு அவன் பேச்சு க்ரிஞ்சாக இருந்தாலும் ஆனந்தத்தை தந்தது.
ஆதினி அவன் அருகில் சாய்ந்து இருந்தாள். “உங்க ஹார்ட்பீட் ஒரு மாதிரி இருக்கு.” அவள் கையை அவன் மார்பில் வைத்தாள்.
“அங்கிருந்து இங்க ஓடி வந்திருக்கேன் ஆதினி இதயம் தாறுமாறா இருக்காதா?” என்று சிகையை ஓதுக்கி கேட்டான்.
“அயலா… நான் உன்னை இங்க தானே நிற்க சொன்னேன்.” என்று அக்ஷயா கோபம் கொள்ள, “இப்ப குழந்தையை கொஞ்சணும்.” என்று கூறிவிட்டு அக்ஷயாவை தேடி சென்றான்.
ஆதினியோ “டைம்டேபிள் போட்டு கொஞ்சுங்க” என்றவள் கையை ஆட்டி பார்த்தாள். அயன் போட்ட கட்டில் இரத்தம் உறைந்திருந்தது.
சாம்பாரை மீண்டு செய்ய ஆரம்பித்தாள்.
அன்று முழுக்க வீட்டில் படம் பார்க்க நேரம் கரைந்தது.
“ஏன் அயன்… படம் பார்த்தா கூட ஒரே மாதிரி முகவனை. இந்த எமோஸனல் காட்சி வந்தா ஹர்ட் ஆகாதா?” என்று வினவினாள்.
“ஏய்… அது படம்னு என் மைண்ட்ல பிக்ஸ் ஆகியிருக்கு. அப்படியிருக்க அந்த காட்சிக்கு எப்படி எமோசனல் ஆவேன். அதுவுமில்லாம நான் ஒன்னும் உன்னை மாதிரி இல்லை. இங்க பாரு… என் சட்டையெல்லாம் ஈரப்படுத்திட்ட. அழுதழுது என் ஷோல்டர்ல முகம் புதைச்சிட்ட. நீ விடற கண்ணீர் சட்டையில” என்று சுட்டிக் காட்டினான்.
“போங்க… நான் எல்லாம் ரொம்ப சென்சிடிவ். என்னால எமோஷனலை கண்ட்ரேல் பண்ண முடியாது. நீங்க எந்திரம் மாதிரி இருங்க. நான் அப்படி இருக்க முடியாது. நான் மனுஷி” என்றாள்.
“நான் ஒன்னும் எந்திரம் இல்லை.” என்றான்.
அக்ஷயாவோ அயனை பார்த்து, “அயலப்பா ரோபாவும் இல்லை, மனுஷனும் இல்லை. எனக்கு அப்பா மட்டும் தான்.” என்று கிலுக்கி சிரித்தாள்.
“வாலு படத்தை பாருடி” என்று ஆதினி சிரிக்க, “நீ படத்தை பாரும்மா. நீ அப்பாவிடம் தேம்பி தேம்பி அப்பா பாக்கெட் பக்கம் பாரு… கண்மை இழுவி வச்சியிருக்க” என்றதும் தான், சட்டையில் கண் மை இழுவியதை கண்டாள்.
“சாரி சாரி சாரி” என்று முகம் சுருக்கி மன்னிப்பு வேண்ட, “ஏய்… ஜஸ்ட் சட்டை தானே. இந்த பாண்டிங் எமோஷனல் இதெல்லாம் எனக்கு ஸ்பெஷல்டி” என்று கூற, இரு கண்களும் ஒன்றை ஒன்று தழுவியது.
அழகான குடும்பம் அமைதியாக பயணித்தது.
மீண்டும் ஒரு சங்கடம் உருவாகவே அனிதாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.
அதற்கு ஆதினி செல்ல தயாரானாள்.
அயனிற்கு செல்வதற்கு துளியும் பிடிக்கவில்லை.
“இப்ப இந்த பங்ஷனுக்கு போகணுமா?” என்று சட்டை மாட்டியபடி கேட்டான்.
“பிரெண்ட் பா” என்று கூற, ‘நல்ல பிரெண்ட் ஒவ்வொருத்தி ஒரு வன்ம கொடோன்.’ என்று முனங்கினான்.
அக்ஷயாவுக்கு தலைவாறி பூவை சூடினாள்.
பிரதாப்பின் இருசக்கர வாகனம் இருக்க அதில் தான் நாற்பது நிமிட பயணத்தில் அந்த பார்ட்டி ஹாலிற்கு வந்து சேர்ந்தார்கள்.
அனிதா வெட்ஸ் சுதாகர் என்ற பேனர் அவர்களை வரவேற்றது.
பெரும்பாலும் உறவுகள் சூழ்ந்ததால், தெரியாத விழாவில் சென்ற உணர்வு தான் ஆதினிக்கு.
மணமகள் அறைக்கு வந்து அனிதாவை பார்த்து வந்துவிட்டதாக காட்டிக் கொண்டாள்.
“ஏ… ஆதினி.. தேங்க்ஸ் பார் கம்மிங்” என்று கட்டியணைத்தாள்.
“பிரெண்ட்ஸ் எல்லாம் யாரும் வரலையா?” என்று கேட்க, “பச் எல்லாம் செட்டில் ஆனதுங்க. குழந்தை குட்டினு ரெடி பண்ணி வர லேட்டாகும். நீ கூல் ட்ரிங்க்ஸ் குடிச்சியா? பிரதாப்கு கொடுத்தியா?” என்றதும், ஆதினி மௌனமானாள்.
“ஓ.. சாரி சாரி.. பிரதாப் இறந்ததே மறந்துட்டேன். ஐ ரியலி சாரி. அயன் வந்திருக்காரா? குழந்தை எங்க?” என்றாள் அனிதா.
“அயன் குழந்தையை வச்சிட்டு இருக்கார். நான் உன்னை பார்க்கலாம்னு வந்தேன்” என்றாள் மெதுவாக.
“இன்னும் நம்ம கேங்க்ல எவளும் வரலை.” என்றதும் “சரி நான் அயன் கூட வெயிட் பண்ணறேன்” என்று நகர்ந்தாள்.
“ஏய்… அனிதாக்கா.. இது பிரதாப் அண்ணாவோட ஓய்ப் தானே? குழந்தையை என்ன செய்தாங்க.” என்றாள் அனிதாவின் தங்கை.
“அக்ஷயாவை அந்த அயன் தான் வச்சிட்டு இருக்கான். குழந்தையை நல்லா பார்த்து பழகி, நைஸா அம்மாவை தூக்கிட்டான்.” என்றாள் அனிதா.
“குழந்தையிடம் போறேன்னு சொல்லலை. அயனிடம் போறேன்னு சொன்னதும் குழந்தையை போர்டிங் ஸ்கூல் ஹாஸ்டல் இப்படி போட்டுட்டாங்களோனு நினைச்சேன்.” என்று லிப்ஸ்டிக் எடுக்க முனைய, ஆதினி கண்ணில் நீர்க்கோர்த்து, “குழந்தையை நான் அப்படி என்னை விட்டு எங்கயும் தனியா அனுப்ப மாட்டேன். குழந்தை என்னோட உயிர். பிரதாப் இறந்ததால, அயனை மறுமணமா மணந்ததால அக்ஷயா என் குழந்தை இல்லைன்யென்றது ஆகாது.
குழந்தை இருக்கற இடத்துல அயன் இருப்பார்னு தான் அப்படி அயனிடம் போறேன்னு சொன்னேன். மத்தபடி…” என்றவள் பேச்சு அடைத்தது. சட்டென வெளியே வந்து அயனிடம் வந்து அமர்ந்துவிட்டாள்.
“அனிதாக்கா உன் பிரெண்ட் பீலிங்கா போறாங்க” என்றாள்.
“நான் ஒரு எட்டு சாரி கேட்டுட்டு வந்துடறேன்” என்று எழவும், “மேக்கப் போடணும் பாதில போனா உன் மாமியார் திட்டுவாங்க.” என்று தங்கை கூறவும் தனியாக பேசிப்போமென விட்டுவிட்டாள்.
அவளுக்கு ஆதினியிடம் மோதிரம் பற்றியும் பேச வேண்டுமே!
தன் கண்ணீரை அயன் பாராமல் மறைத்து, நண்பர்கள் தோழிகள் யாராவது வருகின்றார்களா என்று வாசலை எட்டியெட்டி பார்த்தாள்.
ஆண் நண்பர்கள் கதிர் அவனது குடும்பம் வந்தது.
முகமகிழ்வோடு கையை அசைத்து தன்னிருப்பதை உரைத்தாள். அவனும் குழந்தை குடும்பம் மனைவி என்று வந்து, அயனிடம் நலம் விசாரித்தான்.
“எப்ப வந்த.. அனிதாவை பார்த்தியா? எப்படி போகுது லைப்” என்று ஆதினியிடம் கேட்டான் கதிர்.
“அமைதியா போகுது.” என்று கூற, கதிர் மனைவியோ அவனை சுரண்டி, “இவங்க ஹஸ்பெண்டை இதுக்கு முன்ன பார்த்த மாதிரி நினைவில்லை. அவர் தாடி மீசை இருக்கும் தானே?” என்று கிசுகிசுத்தாள்.
கதிர் மனைவியின் காதில், “அது பிரதாப்மா பிரதாப் இஸ்ரோ தீவிபத்துல இறந்துட்டான். இறந்து ஒரு வருஷமாகுது.
இது அயன். பிரதாப் கூட வேலை பார்த்தவர். பிரதாப் டெட் பாடியை கொண்டு வந்து கொடுத்தவர், ஆதினி கூடவே இருந்து இப்ப பிரதாப்போட முதலாண்டு நினைவு நாள் முடிஞ்சு பத்து நாள்ல கோவில்ல கல்யாணம் பண்ணினாங்க. இப்ப அது நடந்து மூனு மாசமாகிடுச்சு. நீ பிரதாப் இறந்தப்ப பஸ்ட் பேபி பிரகனென்ட் ஆனதுல உங்க அம்மா வீட்ல இருந்த. பிரதாப் நினைவு நாளுக்கும் நான் உன்னை கூட்டிடுட போகலை. இது ஆதினி செகண்ட் மேரேஜ் பண்ணிட்டவர்.” என்று விளக்கினான்.
ஆதினி இரண்டு சீட்டிற்கு முன்னால தான் இருந்தால் அவள் காதில் துல்லியமாக இந்த விளக்ங்கள் வேறு விழுந்தது.
“பிரதாப்-ஆதினி லவ் மேரேஜ் பண்ணினவங்க. இவங்க லவ் ஸ்டோரி தான் காலேஜில ஹைலைட்னு புகழ்ந்திங்க. எப்படிங்க.. செகண்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க. ப்ப்ப்ஆஆ.” என்று தன்னால் நினைத்து கூட பார்க்காத விஷயம் என்பது போல உடலை குலுக்கினாள்.
அதன்பின் வந்த நட்புகளும் மனதை உடைத்து பேசவில்லை. ஆனால் பிரதாப் புராணம் பேசினார்கள்.
பிரதாப் பற்றி பேசினால் தவறில்லை. அது அவர்களது நண்பனை பற்றி பேசுவது தான். ஆனால் கூடவே ஆதினி ஏதோ பிரதாப்பிற்கு துரோகம் இழைத்ததாக இலை மறையாக பேசி வைத்தார்கள். அது தான் அவளை துவள வைத்தது.
ஒரு கட்டத்தில் ‘பொண்டாட்டி செத்தா மட்டும் புதுமாப்பிள்ளை இல்லை. புருஷன் சொத்தாலும் இனி பொண்ணு புதுப்பொண்ணு தான்.” என்று கேலிக்கை வரை செல்ல, எல்லை தாண்டிய விரக்தியில், “அயன்… நாம போகலாம்” என்று எழுந்தாள்.
“மேடையில இப்ப தானே உன் பிரெண்டை கூட்டிட்டு வந்தாங்க. அதுக்குள்ள போகணும்னு சொல்லற. மேடையில போய் போட்டோ எடுக்கலையா? விஷ் பண்ணலையா? அப்பறம் பந்திக்கு முந்து படைக்கு பிந்து’னு சொல்லற மாதிரி சாப்பாடு தான் முக்கியம்னு சாப்பிட போகலையா? இன்னிக்கு டின்னர் பங்ஷன்லனு சொன்ன?” என்று கேட்டான். அயனும் நக்கலாய் தான் கேட்டான்.
அவனுக்கு இச்கே வரவே பிடிக்கவில்லை. இதில் வலுக்கட்டாயமாக வந்து நின்றால் சுற்றி பிரதாப் புராணம் என்றதில் கடுகடுப்பை காட்டினான்.
ஆதினியோ ‘நீயுமா?’ என்பது போல பார்க்க அக்ஷயாவையை தோளில் தூக்கி போட்டு, ஆதினியை கைப்பிடித்து அழைத்து வெளியேறினான்.
நண்பர்கள் முதலில் அயனுடன் எங்கோ செல்வதாக நினைக்க ஆதினி வெளியேறவும், “ஏ.. ஆதினி கிளம்பிட்டா. கோச்சிக்கிட்டா போல” என்று கூடி பேசினார்கள்.
ஆனால் யாருமே அவளை நிறுத்நி அழைத்துவர முன்வரவில்லை. மற்றவர்கள் போவார்கள் என்று ஆளாளுங்கு அதே இருக்கையில் பசை தடவியது போல அமர்ந்துக் கொண்டார்கள்.
பைக்கில் வீடு வந்தடைந்ததும், ஆதினி வேகமாய் உடையை களைந்து நகையை கழட்டி வீசினாள்.
அக்ஷயாவுக்கு அயன் தான் இரவு உடையை மாற்றி விட்டான்.
ஆதினி மெத்தையில் குலுங்கி குலுங்கி அழவும், அயன் அக்ஷயா கிச்சனில் இரவு உணவை சமைத்தார்கள். பிரெட் ஆம்லேட் போட்டு அதை எடுத்துக் கொண்டு வந்தான்.
“சாப்பிட்டு தெம்பா அழு ஆதினி” என்றான் அயன்.
“உங்களுக்கும் கிண்டாலா போச்சுல. எதுக்கு நீங்க பிரதாப் உடலை எடுத்துட்டு வந்திங்க. ஏன் இங்கயே தங்கனிங்க. அக்ஷயா கூட ஏன் அட்டாச் ஆனிங்க. அப்பாவா அவ மனசுல பதிஞ்சு, பிரதாப் மாதிரி நல்லா குழந்தையை பார்த்துக்கறாரேனு ஏன் மனசுலயும் விதைச்சிங்க.
என்னிடம் ஏன் லவ் பண்ணறதா சொன்னிங்க. என் மனசை கலைச்சி, கல்யாணம் செய்து, இப்ப என்ன பேசறாங்க பாருங்க. என்னை அப்படியே தற்கொலை செய்துக்க விட்டிருக்கலாம். இல்லை… அப்படியே நீங்க போயிருக்கலாம்.
ஏன் என்னோட வாழ்க்கையில வந்திங்க அயன். என்னை விட்டு போங்க.. எனக்கு நீங்க தேவையில்லை.” என்று கதறி அழுது கத்தினாள்.
“உனக்கு நான் தேவையில்லை. ஆனா எனக்கு நீயும் குழந்தையும் தேவை ஆதினி. உன்னை விட்டு போக முடியாது.” என்றான் அயன். அக்ஷயா அயனையும் ஆதினியையும் பார்த்து மிரண்டு நின்றாள்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.

அட ராமா..! ஏற்கனவே இவன் நடந்துக்கிறது விசித்திரமா இருக்கு, இதுல இவ வேற நினைச்சு நினைச்சு அழறா.
😔😔😔
CRVS (or) CRVS 2797
apo aathini yala etho aga vendiya velai iruka ayan unaku atha vanthu irukiya inga