meta-google-adsense-platform-account: ca-host-pub-2644536267352236 meta-google-adsense-platform-domain: sitekit.withgoogle.com

நின் பிரேமம் என் சிநேகம்-24

அத்தியாயம்-24

  ஹ்ருதேஷ் மிதிலா இருவருமே ஒரு ஜூஸ் கடையில் வீற்றிருந்தனர்.

ஹ்ருதேஷ் இரண்டு மாதுளை ஜூஸ் ஆர்டர் தந்துவிட்டு, “நான் தங்கியிருக்கற பிளேஸுக்கு போய் செலிபிரேட் பண்ண வேண்டியது. பச்.. எங்கம்மா அங்க இருக்காங்க” என்று மிதிலாவை சிரிக்க வைக்க முயன்றான்.

  அவளோ மாதுளை வரவும் அதை மெதுவாக பருகினாள்‌.
  
  “கன்சீவ் ஆனதிலருந்து பேயறைந்தது போல இருக்க. கொஞ்சம் ரிலாக்ஸா மாறலாம்ல?” என்றான்.

“நான் மாடர்ன் தான் ஹ்ருத். என் பேஷனை கனவை தேடி ஊர் விட்டு ஊர் வந்து படிக்க வந்தேன். அப்ப கூட என் காதலை விட்டுக்கொடுக்காம போராட தெரியும். கௌசிக் அண்ணாவிடம் உனக்காக எப்படியெல்லாம் வாயாடினேன். அப்ப எல்லாம்… நாம ஒன்னா இருந்ததை அவன் பேசறப்பவே ரொம்ப காயமாகிட்டேன். என்னயிருந்தாலும் தப்பு தானே.
  இப்ப… நம்ம தப்புக்கு எந்த தப்பும் செய்யாத இந்த குழந்தையை நினைச்சா பயமாகுது.
   ஊர்ல, உங்க வீட்ல, என் வீட்ல, கௌசிக் என்ன பேசுவான்னு நினைக்கவே உதறுது. என்னயிருந்தாலும் கல்யாணம் செய்யாம கர்ப்பமாவது தப்பு. நான் உன்னை இந்த தப்பை செய்ய தூண்டிவிட்டிருக்க கூடாது ” என்றாள்.

  ஹ்ருதேஷோ “தப்பு செய்யறப்பவே ஏதாவது ஆகும்னு எனக்கு தெரியும் மிதிலா.
  உன்னை காதலிக்கறப்பவே உன் அண்ணனோட நட்பை இழக்க நேரும்னு தெரிந்து தான் உன்னை காதலிச்சேன். உன்னை எனக்கு சொந்தமாக்கினப்பவும், ஏதாவது இப்படி ஆனா அதுக்கும் ரெஸ்பான்ஸா நான் முன்ன நிற்கணும்னு யோசித்தது தான்‌. ஆனா அப்படி நேராதுனு சேப்டியா இருந்தோம். பட்.. ஒரு நாள்ல உருவாக்கிடுச்சு.” என்று மிதிலாவின் தட்டையான வயிற்றை பார்த்தான்.

“நீ ரிப்போர்ட் எல்லாம் எடுத்துட்டு, ஹாஸ்டலுக்கு கிளம்பு மிதிலா. நான் அம்மாவிடம் விஷயத்தை சொல்லிட்டு, ஊருக்கு போகலாம். உங்க வீட்டுக்கு வந்து பேசறேன். கௌசிக் மறுத்தாலும் நம்ம கல்யாணம் சிம்பிளாவாது நடக்கும்.” என்று கையை பிடித்தான்.

  “கௌசிக் அண்ணா மறுத்தாலுமா??” என்றாள்.
   “ம்மம். முன்ன அவன் சம்மதிச்சா தான் கல்யாணம் நடக்கும்னு சொன்னேன். ஆனா இப்ப உன்னோட நிலை இக்கட்டுல இருக்கே. அவன் நட்பை ஏற்கனவே இழந்து நிற்கறேனே. காதலையும் இழக்கமுடியாது. காதலுக்காவது உண்மையா இருக்கணும்ல.” என்றதும் மிதிலா நிம்மதியடைந்தாள்.

  “உங்கம்மா நம்ம கல்யாணத்துக்கு சம்மதிப்பாங்களா?” என்றாள்‌ மிதிலா.

“இந்த ஒன்றரை மாசம் சதா ஏதாவது புலம்பறாங்க. எப்படியாவது சம்மதிக்க வைக்கணும். ஓரே பையன்ல.. சம்மதிக்க வாய்ப்பு இருக்கு. அதோட நீ இப்படியிருக்கறப்ப வேற யாரோட எண்ணத்துக்கும் மதிப்பு தர்றதா இல்லை‌ அது எங்கம்மாவாகவே இருந்தாலும்…” என்றான். 

  மிதிலாவுக்கு லேசான தைரியம் மீண்டும் துளிர்த்தது.

அவளை பொறுப்பாக ஹாஸ்டல் அனுப்பிவிட்டு, தங்கியிருக்கும் வீட்டுக்கு வந்தான்.

  அவன் அலுவலகம் முடிந்து  மாலையில் வருவது வழக்கம். இன்று இந்த நேரம் வரவும், “என்னடா… அதுக்குள்ள வந்துட்ட?” என்று கேட்க, ஹ்ருதேஷ் அமைதியாக ஷூவை கழட்டினான்.‌

”ஆமா நான் எது கேட்டாலும் ஒன்றரை மாசம் மௌன சாமியாரா இருந்துடு. பதில் சொல்லாத.
   உன் ஒருத்தனுக்காக தான் வாழறேன். உனக்காக தான் என்‌ புருஷனை கூட அம்போனு விட்டுட்டு இங்க வந்துயிருக்கேன்.
  நீ என்னடான்னா.. அந்த கௌசிக் தங்கச்சி மிதிலாவை நினைச்சுட்டு என்னை வெறுக்கற. நாலு வார்த்தை திட்டினேன் தான்‌. அதுக்கா பெத்தவளிடம் பேச மாட்டியா?

  நில்லுடா.” என்று அவனை திருப்ப, சோபாவில் அமர்ந்தவன், “அம்மா… நீ பாட்டியாக போற. நான் அப்பாவாக போறேன். மிதிலா கன்சீவா இருக்கா. ஒன்றரை மாசமா.” என்று தேங்காய் உடைப்பது போல போட்டு உடைத்தான்.

“அபாண்டமா பொய் சொல்லறா. நான் இங்க வந்து உன் கூடவேயிருக்கேன்.  அப்படியிருக்க… அவ யாரோட படுத்து புள்ளை உண்டானாளோ?” என்று விஷம் போல பேசினார்.

“அம்மா.” என்று ஹ்ருதேஷ் கத்தியவன், “நீ வர்றதுக்கு முன்ன கௌசிக் வந்தான்ல.. அன்னைக்கு உருவான கரு போதுமா?

கல்யாணம் ஆனா முதலிரவு தேதியை பெரியவங்க தானே குறிச்சி தருவிங்க. அப்படி பார்த்தா நாள் நட்சத்திரம் பார்த்து ஒன்னு சேர்ந்த தினம் நினைவிருக்கும். எங்களுக்கு எங்க குழந்தை எப்ப உருவாச்சினு தெரியும். 

அப்படியும் நம்பலைன்னா… கொஞ்ச நாள் கழிச்சு பிறந்ததும் டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து பார்த்துக்கோ. ஆனா அதுக்கு அவசியம் இருக்காது. பிறக்கும் போதே உன்னை மாதிரியே முகம் அமையலாம். தோற்றத்துல உன்னை மாதிரி இருந்தா போதும் அம்மா. கேரக்டர்ல உன்னை மாதிரி வந்துடக்கூடாதுனு‌ வேண்டிக்கறேன். ஆனா ஒன்னும்மா… நீ இதுக்கு மேல மிதிலாவை ஏதாவது சொன்னா… அந்த குழந்தை சொல்றதுக்கு சமம். அந்த குழந்தை என்னோட உயிர்.” என்றான்.‌

  செல்வராணிக்கு இதற்கு மேல் மிதிலாவை வசைப்பாட முடியாத அளவிற்கு ஹ்ருதேஷ் குழந்தை வந்து விட்டது.

“நாளைக்கு காலையில ஊருக்கு போகணும். கிளம்பி ரெடியா இருங்க. விருப்பம் இருந்தா என் கல்யாணத்தை நடத்துங்க. இல்லைன்னா கூட பரவாயில்லை. அங்க கௌசிக் சம்மதிக்கலைன்னாலும் மிதிலா கழுத்துல தாலி கட்ட நான் ரெடி.” என்று துணிமணியை எடுத்தான்.

  இரவெல்லாம் உறங்காமல் செல்வராணி ஹ்ருதேஷின் நடவெடிக்கையை கவனித்தார்.

ராஜலிங்கத்திற்கு அழைத்து, “அப்பா… நாளைக்கு காலையில அங்க வர்றேன்.” என்றான். ஏன் எதற்கு என்று கேட்டதற்கு, விஷயத்தை கூறினான்.‌

  “மிதிலா கன்சீவா இருக்காப்பா” என்றான்.

  “என்னய்யா இது? பிரச்சனையை அதிகரிக்கறியே” என்று கேட்க, “அய்யோ.. அப்பா… கௌசிக் வந்தப்ப நடந்த விவகாரம்‌. அதுக்கு பிறகு எந்த தப்பும் பண்ணலை. சாமி சத்தியமா. பழைய பிரச்சனை இப்ப ஒன்றரை மாசம் ஆனதும் புதுசா கிளம்பிடுச்சு.

கன்சீவா இருக்கறதால மிதிலா ரொம்ப பயந்திருக்கா. அவளை எப்படியோ பேசி சமாதானம் செய்து ஹாஸ்டலுக்கு அனுப்பிட்டேன். நாளைக்கு ஊருக்கு வந்து, அவங்க அம்மா அப்பாவிடம் பேசிட்டு கல்யாணத்தை முடிக்கலாம்னு  இருக்கேன். இனியும் இப்படி இருந்தா அது ரொம்ப பெரிய தப்பாயிடும்லப்பா” என்றதும் ராஜலிங்கம் அமைதியானார்.  

   “சரி… வந்து பேசு. இனியும் தள்ளி போட்டா அது நல்லயிருக்காது. கௌசிக் சம்மதிக்காட்டினாலும் கல்யாணம் பண்ணி அந்த பிள்ளையட நல்லபடியா வாழு” என்று கூற “தேங்க்ஸ் பா” என்றான். ராஜலிங்கத்திற்கு இனியும் பிரித்து வைத்து வாழ்வது சாத்தியமில்லை என்ற உண்மை புரிந்து திருமணத்தை நடத்திட நினைத்துவிட்டார்.

மகன் அவளோடு கல்யாணம் என்றதும் மகிழ்வதை கண்டு பொறுமினார். எல்லாம் கைமீறி சென்றதில், வேடிக்கை பார்த்தவராக செல்வராணி இருந்தார்.

அடுத்த நாள் காலை பேருந்து ஏறும் போது, மிதிலாவை செல்வராணி கவனித்தார்.

   செல்வராணி பார்வை நேராக மிதிலா வயிற்றை பார்வையிட சங்கடமாக நின்றாள்‌.

   மூவர் அமரும் இருக்கையில் அமர்ந்து கிடைக்கும் பேருந்தில் ஏறினார்கள்.
  மருத்துவர் டிராவல் எல்லாம் செய்யலாம் என்று கூறியதில் பயமின்றி இருந்தனர்.

  “அம்மா பஸ்ல ஏறுங்க” என்றான்.‌

  சொல்வராணி பேருந்தில் ஏறியப்பின், மிதிலா ஏறவும், செருப்பு நழுவியது, “ஹீல்ஸ் செப்பல் எல்லாம் இந்த நேரம் போடணுமா. எத்தனை முறை சொல்லறது” என்று கடிந்தபடி அவளை தாங்கினான்.

“சாரி..சாரி” என்று மிதிலா பயந்தாள்.

  செருப்பு கீழே விழவும் அதை எடுத்து மிதிலா காலில் போட்டு விட்டவன், “ஓகே தானே.. ஏதும் பிராப்ளம் இல்லையே” என்று கேட்டறிந்தான்.

“இல்லை… இனி ஹீல்ஸ் அவாய்ட் பண்ணிடறேன்” என்று பாவமாக முகத்தை வைத்து கூறினாள்.

“பயப்படாம போடி” என்று இலகுவாக, ‘போடா’ என்று சத்தமில்லாமல் உதட்டில் உச்சரித்து முன் நகர, அங்கே செல்வராணி இருவரையும் பார்த்து முறைத்து முன்னேறினார்.‌

“தாலி கட்டினவளுங்க தோத்து போயிடுவாளுங்க. என்னா நடிப்பு.” என்று மிதிலாவையும், “இந்த பயலுக்கு அறிவில்லை. அவ செருப்பை எடுத்து கால்ல வைக்கறான். அவ காலடில விழுந்துட்டான்.” என்று முனங்கி ஜன்னல் பக்கம் அமர்ந்தார்.

  “உட்காரு” என்று மிதிலாவை முன்னே போக கூற, “இல்லை… நீ உங்க அம்மா பக்கத்துல உட்கார்ந்துக்கோ” என்று அவனை முன்னே அனுப்பினாள்.

   ஹ்ருதேஷுக்கும் ஏதாவது சொல்லி மிதிலாவை காயப்படுத்தினால் கஷ்டமென நடுவில் அமர்ந்தான். மிதிலா காலை நீட்டி அமர்ந்தாள்.

ஏனோ அமர்ந்ததும் வண்டி எடுக்க, ஹ்ருதேஷ் கை வளைவில் சாய்ந்து படுத்துக் கொண்டாள்.

    “ம்கூம்… ஏன்டா இத்தனை பேரு பார்க்கறாங்க உன் தோளில் சாய்ந்துப்பாளா? வெட்கம் கெட்ட சிரிக்கி” என்றதற்கு, “அம்மா… வாயை மூடலை இப்பவே இறக்கி விட்டுடுவேன். அப்பறம் இந்த ஊர்ல மொழி தெரியாம திண்டாடுவிங்க” என்று மிரட்டினான்.‌

  ஒரு இரண்டு மணி நேரப்பயணம் செல்ல, ஒரு இடத்தில் நிறுத்தினார்கள். “ஹ்ருத்.. வவ.. வாமிட் வர்ற மாதிரி இருக்கு” என்றாள்.

  அவளை அழைத்து கீழே இறங்கினான்.

அடுத்த நொடி வாந்தி எடுத்து முடிக்க, தண்ணீரை புகட்டி, கர்ச்சீப்பால் துடைத்து விட்டான்.

  ”ஏதாவது சாப்பிடறியா?” என்று கேட்க, ஜூஸ் குடிக்கறேன்” என்று கூறியிருக்க, இரண்டு சாத்துகுடி ஜூஸை வாங்கினான்.  

  “வர்றியா?” என்று கேட்க, இல்லை… நீ போ. பஸ் கிளம்பறப்ப ஏறுறேன். ஒரு மாதிரி காற்று இல்லாத பீலா இருக்கு.” என்று நடந்தாள்.

   சாத்துகுடி கொண்டு வந்து அன்னையிடம் தர, அவர்களையே பார்த்தவருக்கு ”இவயென்னடா நோஞ்சா கணக்கா இருக்கா? பஸ் ஏறியதிலயிருந்து உச்சு தச்சுனு உப் உப்னு ஊதறா” என்று கரிச்சுக் கொட்டினார்.

  ஹ்ருதேஷ் அதையெல்லாம் காதிற்கு கொண்டு செல்லாமல், வர, அவன் காலரை இழுத்து, “ஏன்டா ஏதாவது சொல்லிட்டே வர்றாங்க” என்றாள்.
 
  இவள் காலரை இழுக்கவும் செல்வராணி கழுத்து திரும்பியது. “ஏய் என்ன நீ வாடா போடானு சொல்லற. எம் பையன் காலரை இழுக்கற.” என்று சத்தமாய் குரல் தர, சேலம் வந்து விட்டதால் எழுந்த கூட்டம் இவர்களை தான் பார்த்தது.

“ஹ்ருத்.. அசிங்கமா கத்தறாங்க” என்று முனங்கினாள்.

“அம்மா சும்மா வாயேன்மா” என்று அதட்டினான் ஹ்ருதேஷ்.

“ஹ்ருத்..தா.. இப்படியே கொஞ்சி கொஞ்சி அவ உன்னை என்னிடமிருந்து பிரிச்சிட்டாடா” என்று சேலையில் வராத கண்ணீரை துடைக்க, மிதிலா அவளாக படியில் இறங்கினாள்.

“அம்மா.. ஏன்ம்மா.. ஏதாவது பேசற. வாயை மூட மாட்டியாம்மா?” என்றான் கோபமாக.

   “நேரா அவ வீட்டுக்கு போகணும்” என்றான்.‌

  “நான் வரலை.” என்றார் செல்வராணி.

  “என் குழந்தை பிறந்தப்பிறகு தொடக்கூட விடமாட்டேன். யோசித்து சொல்லுங்க” என்று மிரட்ட, அவன் பின்னால் வாயைமூடி வந்தார்.

   ஆட்டோவில் மெதுவாக ஓட்ட கூறி வந்தான்.

  கௌசிக் இருப்பதை அறிந்து மதியம் சாப்பிடும் பொழுது வந்தான்.

  கௌசிக் சாப்பாட்டில் கையை உதறி வர, “மிதிலா நான் உன்னோட அப்பா அம்மாவிடம் பேச வந்திருக்கேன். நடுவுல எவனாவது வந்தா முன்ன மாதிரி இடிப்பட்டு சும்மா போக மாட்டேன். பதிலுக்கு முகறையை பேத்துடுவேன்” என்று ஜம்பமாக உரைத்தவன் சோபாவில் அமர்ந்தான்.‌

மிதிலா வரும் பொழுதே “அப்பா… ஹ்ருதேஷ் உங்களிடம் பேசணும்னு சொன்னார். மதியம் வந்துடுங்க” என்றாள். அதனால் அவரும் கடையை பொறுப்பான பணியாளிடம் பார்த்துக்க கூறி வந்திருந்தார்.

ராஜலிங்கம்-செல்வராணி வேறு இருக்க, கௌசிக்கிற்கு இந்த ஹ்ருதேஷ் ஏதோ திட்டத்தோட வந்திருக்கான்’ என்று வேடிக்கை பார்த்தான்.

செல்வராகவன் மற்றும் தீபா இருவரும் மகளிடம் என்னவென்று விசாரிக்க, அவளோ தண்ணீரை கொண்டு வந்து ராஜலிங்கத்திற்கு தந்தாள்.

  “ஹ்ருத்” என்று அவனையும் எடுத்துக்க கூறினாள்.

  “நீ தண்ணி குடி. வாந்தி எடுத்ததிலருந்து வாய் கசக்குதுடானு ஏழெட்டு தடவை சொல்லிட்ட” என்றான்.

தீபாவோ ‘மகள் வாந்தி எடுத்தாளா? எதுக்கு?’ என்று பார்க்க, “அங்கிள்… ஆன்ட்டி… எங்களை மன்னிச்சிடுங்க. நானும் மிதிலாவும் ஏற்கனவே செய்த தப்பை ஒருத்தர் மூலமா உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.” என்று கௌசிக்கை பார்த்தவன், அடுத்த வார்த்தையாக, “அந்த தப்பை மூடி மறைக்க முடியாம ஊருக்கே சொல்லற விதமா இன்னொருத்தர் உருவாகிட்டு இருக்காங்க.” என்றவன் மிதிலா வயிற்றை பார்வையிட்டு, “மிதிலா பிரகனென்டா இருக்கா.” என்றான்.‌

கௌசிக்கோ “சீ..” என்று முகம் திருப்பி அருவருப்பாய் தங்கையை கண்டான்.
தீபாவோ இடிந்து போனவராய் தொப்பென்று தரையில் அமர, செல்வராகவனோ, தலையிலடித்து முடித்தார்.‌

“சாரி… இது நிச்சயம் உங்களுக்கு சந்தோஷத்தை தரக்கூடிய விஷயமில்லை. ஆனா நான் இதுக்கு மேலும் மிதிலாவை கல்யாணம் பண்ணாம இருக்க முடியாது. உங்க சம்மதம் இருந்தா எங்க கல்யாணத்தை எப்ப வேண்டுமென்றாலும் நடத்திட நான் தயார். எங்கப்பா அம்மா என் விருப்பத்திற்கு தடைப்போட மாட்டாங்க.” என்றான்.

கௌசிக் நக்கலாய் சிரித்து, “நான் சம்மதிக்காம கல்யாணம் நடக்காதுனு சீன் போட்ட. நட்பை தேவைக்கு போடற செருப்பு மாதிரி தூக்கியெறிந்துட்டு இப்ப கல்யாணம் செய்ய துடிக்கற?” என்று இகழ்ச்சியாக பேசினான்.

  “கௌசிக்..‌.. நண்பனா உன்னை பார்த்தப்ப உனக்காக யோசித்து தான்டா அவளை காதலிக்க தயங்கி விலகி விலகி போனேன். அப்படி போனப்பிறகும், உன் தங்கயோட காதல் என்னை அசைச்சிடுச்சு.
  நானும் காதலிச்சிட்டேன். காதலோட எல்லையை தாண்டிட்டேன். அந்த நேரம் தான் உன் சம்மதம் இல்லாம நான் கல்யாணம் பண்ண மாட்டேன்னு நட்புக்கு மரியாதை தரணும்னு நினைச்சேன். ஆனா.. நட்புக்கு மரியாதை தந்தா மட்டும் நீ என்னை புரிஞ்சுக்கறியா என்ன? நான் தான் உண்மையான நட்பில்லை துரோகினு காயப்படுத்திட்ட.

அப்படியிருக்க.. அட்லீஸ்ட் உன் தங்கையோட காதலுக்கு உண்மையா இருந்து அவளை ஏற்றுக்கிட்டு கல்யாணம் செய்து காதலுக்கு உண்மையா இருக்கேன்.

நீ சம்மதிக்காட்டியும் இந்த கல்யாணம் நடக்கும்.

அங்கிள்… ஆன்ட்டி… நீங்களே சம்மதிக்கலைன்னாலும் இந்த கல்யாணம் நடக்கும். என்னால என் மிதிலா எங்கயும் அசிங்கப்படக்கூடாது. அவ கழுத்துல தாலி ஏறணும்.” என்று பேசினான்.

   சொல்வராகவனும்-தீபாவும் ஒருவரை ஒருவர் பார்த்து நின்றனர்.

ஏற்கனவே கௌசிக் இல்லாத பொழுது மிதிலாவை ஹ்ருதேஷிற்கு கட்டி வைத்தால் என்ன? என்று பேசியிருந்தார்கள். அதுவும் ஒரே வீட்டில் அவளோடு ஒன்னுக்குள் ஒன்றாக இருந்ததை வைத்து முடிந்தளவு பிரச்சனையின்றி கட்டி வைக்கவே முடிவெடுத்தனர்.
  இன்று மிதிலா வயிற்றில் குழந்தை என்ற விஷயமும், அதற்கு ஹ்ருதேஷ் மணக்க கேட்டு நிற்பதையும் கண்டு மறுக்கவா முடியும். பெண்ணை பெற்றவராக, மகள் விரும்பியவனோடு மணக்கவே நினைத்தனர்.

  கௌசிக்கிற்காக யோசித்தால் மகள் வாழ்க்கை அல்லவா கேள்விக்குறி.

  “ஏய்… என்னடா உங்கப்பா அம்மாவை கூட்டிட்டு வந்து சீன் போடறியா?” என்று கேட்க, “டேய் மச்சி.‌.. நான் சீன் போட எந்த அவசியமும் இல்லை. அது உனக்கே தெரியும்.” என்றவன் தீபா செல்வராகவனை பார்த்து, “கல்யாணம் எப்படி வச்சிக்கிட்டாலும் எனக்கும் மிதிலாவுக்கும் ஓகே. எப்படி முடிவுப்பண்ணறிங்க?” என்று கேட்டான். அவன் தோரணையே நீங்க ஒத்துக்கொள்ளாவிட்டாலும் எங்கள் திருமணம் நடக்கும்’ என்ற செய்தி பொதிந்திருந்தது.

-தொடரும்.

பிரவீணா தங்கராஜ்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top