meta-google-adsense-platform-account: ca-host-pub-2644536267352236 meta-google-adsense-platform-domain: sitekit.withgoogle.com

நின் பிரேமம் என் சிநேகம்-23

அத்தியாயம்-23

அன்று காலை எழுந்தவுடனே மிதிலாவுக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது.
உடம்பு லேசாக அசதியாகவே இருந்தது. தலை சுழலவில்லை, காய்ச்சலும் இல்லை, ஆனாலும் உள்ளே ஏதோ ஒழுங்கில்லாத உணர்வு. படுக்கையிலிருந்து எழுந்தவள் நேராக குளியலறைக்குள் போனாள்.
பேஸ்ட் எடுத்தவுடன் அந்த வாசனை மூக்கை அடைத்தது.

அந்த வாசனையே அவளுக்கு பிடிக்கவில்லை. குடலிலிருந்து வாந்தி மேலே வருவது போல உணர்ந்ததும், அவசரமாக சிங்கில் பிடித்துக் கொண்டாள்.

வாந்தி என்று எதுவும் வரவில்லை. ஆனாலும் அந்த தள்ளாட்டம் போக சில நொடிகள் நேரமெடுத்தது.

“என்னாச்சு எனக்கு? வாமிட் வர்ற மாதிரியே இருக்கு?” என்று மெதுவாக முனுமுனுத்தாள்.

அதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. நேற்று சாப்பாடு ஒத்துக்கொள்ளலையோ என்று மனதை மாற்றிக் கொண்டாள்.

ஆனால் அந்த நாள் முழுக்க உடம்பு ஒத்துழைக்கவில்லை.
ஹாஸ்டல் மெஸ்ஸில் உணவு வாசனை அடித்ததும் மீண்டும் அதே உணர்வு. தட்டையை அப்படியே நகர்த்தி விட்டு வெளியே வந்தாள்.
அங்கிருந்த தோழி “என்னாச்சு மிதிலா சாப்பிடாம போற” என்று கேட்டாள். “ஒரு மாதிரி இருக்கு பசிக்கல” என்று தப்பித்தாள்.

மாலைக்குள் சோர்வு உடம்பு முழுவதும் ஆட்சிசெய்ய ஓய்வெடுக்க வேண்டும் போலவே இருந்தது.
அன்றைய இரவு படுக்கையில் திரும்பித் திரும்பி படுத்தபடி சீலிங்யை பார்த்துக் கொண்டிருந்தபோது தான். மெதுவாக அந்த நினைப்பு வந்தது.
வேகவேகமாக தேதிகளை பார்த்தாள்.
மிதிலா மூளை திடீரென கணக்கு போட ஆரம்பித்தது.
சத்தமில்லாமல் “இல்ல.. இருக்காது.. ஆனா..” என்று உடனே குழப்பமாய் மாறினாள்.
குழப்பம் நீண்ட நேரம் நிலைக்கவில்லை.
படுக்கையிலிருந்து எழுந்து மூச்சு விட சிரமம்பட்டாள்.

தனது மாதவிடாய் தேதியை மீண்டும் மீண்டும் நினைவேட்டிலிருந்து நினைவுப்படுத்தினாள். ஒவ்வொரு முறையும் அதே இடத்தில் விரல் நின்றது.
அந்த நொடி அறை முழுக்க அமைதி பரவியது போல இருந்தது.
தலைசுற்றல் வாந்தி மயக்கம், ஓய்வெடுக்கும் நினைப்புக்கு காரணம் ‘அதுவா இருக்குமோ?’ என்று பயந்தாள்.
அடுத்த நாள் கல்லூரிக்கு போகும் வழியில் மருந்துக்கடையில் முன் நின்றாள்.
அக்கடைக்கு உள்ளே போக மூன்று முறை முயன்று திரும்பினாள். நான்காவது முறையில் கண்களை கீழே வைத்து உள்ளே சென்றாள்.
பிரகனன்சி கிட் கேட்டு வாங்கினாள். கடைப்பையன் அவளை பார்த்து மார்க்கமாய் சிரித்திட, அருவருப்புடன், கையில் சிறிய கவரில் வாங்கினாள்‌. இதயத்தின் தாளம் சத்தமாக துடிக்க ஆரம்பித்தது.
ஹாஸ்டல் அறைக்குள் வந்ததும் கதவை பூட்டினாள். ஜன்னல் திரையை இழுத்தாள். யாராவது பார்க்கிறார்களா என்று தேவையில்லாத பயத்தில்
கைகள் லேசாக நடுங்கின.

பிரகனென்சி கிட் எடுத்து வாசிக்கும்போது எழுத்துக்கள் எல்லாம் கலந்தது போல மங்கலாய் தெரிந்தது.
தன்னை தானே தேற்றிக்கொண்டு ‘பயப்படாதா மிதிலா.’ என்று கூறிக்கொண்டாள்.
அதிலுள்ள இன்ஸ்டரக்ஸன் படி செய்துவிட்டு முடிவுக்கு காத்திருந்தாள்‌
அந்த இரண்டு நிமிடம் அவளுக்கு நீளமான சாலையில் தனியாக நடப்பது போல இருந்தது.

இதய துடிப்பு மட்டும் படபடவென அடித்து கொள்ள கண்ணை இறுக மூடினாள்.

கடவுளை எல்லாம் வேண்டிவிட்டு அதிலுள்ள கோட்டை பார்த்தாள்.
முதல் கோடு வரவும் அதற்கே வேர்த்தது. இரண்டாவது கோடு மெதுவாக தெரிந்தது.

அந்த நொடி பார்வை மங்கி தலையை உலுக்கி நின்றாள்.
கையில் இருந்த கிட்டை இன்னும் நெருக்கமாக பார்த்தாள். தவறா இருக்குமோ என்ற நம்பிக்கையோடு. ஆனால் கோடு அங்கேயே இருந்தது.
அவள் கருவுற்று இருக்கும் உண்மையை பளிச்சிட்டு காட்டியது‌
காலில் பலம் இழந்தது போல மெதுவாக தரையில் அமர்ந்தாள்.

சுவரில் சாய்ந்து முட்டிக்கட்டி கொஞ்ச நேரம் அழுதாள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதிர்ச்சியை ஏற்றாள். ஹ்ருதேஷிடம் தன்னை இழந்தப்பின் இதெல்லாம் யோசித்தவள் தானே?!
மனதில் ஒரு வெறுமை.மூளை மட்டும் வேகமாக ஓட ஆரம்பித்தது.

அடுத்து என்ன செய்ய வேண்டும். இதை எப்படி ஹ்ருதிடம் கூறுவது? அவனிடம் கூறியதும் அடுத்து என்ன நிகழும்?
அண்ணன் சம்மதம் சொல்லாமல் ஹ்ருத் எந்த முடிவும் எடுக்காமல் போனால் என்ற எண்ணம் மனதில் வந்ததும் இதயம் இன்னும் கனமானது.

இந்த நேரத்தில் ஹ்ருத்தை அழைக்கலாமா? கூறிவிடலாம்? நேரில் கூறினால் நல்லதா? அல்லது போனிலேயே கூறலாமா?

கைகளை வயிற்றின் மேல் வைத்தாள். அங்கே எதுவும் மாறவில்லை. இயல்பான தோற்றத்தை தான் தந்தது.
ஆனால் அவள் வயிற்றில் கருவுண்டாகியிருந்தது.

கண்ணாடிக்கு முன் சென்று பார்த்தாள். அவளே அவளை அறியாதது போல இருந்தது.

“நான் கல்யாணம் ஆகாமலே கர்ப்பம் ஆகியிருக்கேன்” என்று சொல்லி நிறுத்தினாள்.
வார்த்தை வரவில்லை. குமறி குமறி அழுதாள். இதெல்லாம் அசிங்கத்தில் சேர்த்தி தானே.?!

எதுவென்றாலும் ஹ்ருத்திடம் பேசிவிடலாமென எண்ணி அவனுக்கு அழைத்தாள்.
ஹ்ருதேஷ் அழைத்துவிட இதயம் திடுக்கிட்டது.
போன் எடுத்ததும் அவனிடம் எப்படி உரைப்பது? போன் ஸ்கீரினையே வெறித்தாள்.

ஹ்ருதேஷ் பெயர் மின்னியதே தவிர அவன் இவளது அழைப்பை எடுக்கவில்லை.
இரண்டு மூன்று முறை அவனை அழைத்தாள். அறை முழுக்க பேன் ரிங் ஆகும் சத்தம் மட்டும். கூடுதலாக மிதிலாவின் மூச்சு விடும் சத்தம் மட்டும்.
மீண்டும் வயிற்றை தொட்டாள்.
உதடுகள் கிட்டத்தட்ட காற்றாக ஒரு கேள்வியை வெளியிட்டது

இம்முறை இவளது போன் ரிங் டோன் அடித்தது. மிதிலா அவளது போன் ஸ்கீரினை பார்த்தாள்.
ஹ்ருதேஷ் தான் அழைத்திருக்க, இந்த முறை கையைப் பின்னே இழுக்கவில்லை எடுத்தாள்.

“ஹலோ” அவள் குரல் சாதாரணமா இருக்கணும் என்று நினைத்தது. ஆனால் சின்ன கரகரப்பு இருந்தது.
“எதுக்கு இத்தனை முறை கால் பண்ணற. இங்க அம்மா இருக்காங்க தெரியும் தானே. போன் எடுக்கலைன்னா பிஸினு தெரியாது.” என்று வழக்கம்போல கேட்டான்.

“இல்ல… ஹ்ருத்.. நான்..” என்றவள் வார்த்தை அங்கே நின்றது.
ஹ்ருதேஷ் அவளது குரலின் மாறுபாட்டை கவனித்தான்.

“என்ன ஆச்சு?” குரல் மெதுவானது.
அந்த ஒரு கேள்விதான் அவளுக்கு எல்லாத்தையும் உடைக்க போதுமானது.
மிதிலா கண்களை மூடினாள். இப்போ சொல்லணும், இல்லன்னா ஒருபோதும் முடியாது.
“நான்… உன்னிடம் ஒரு விஷயம் சொல்லணும்” என்றாள்.

“அதுக்கு தானே கால் பண்ண குயிக்கா சொல்லு எனக்கு வேலை இருக்கு” என்றான்.

“ஹ்ருத்… இரண்டு நாளா.. தலைசுற்றல் வாந்தினு இருந்துச்சு. புட் ஏதோ ஒத்துக்கலைனு நினைச்சேன். ஆனா… பிரகனென்சி கிட் யூஸ் பண்ணி பார்த்தேன்.” என்று கூற அவன் புரியாமல் இருந்தான்.

“அதெதுக்கு?” என்று இயல்பாக கேட்டான்.
அந்த நொடி அவள் இதயம் காதுக்கு கேட்கும் அளவுக்கு அடித்தது.

“ஹ்ருத்” என்றவள் குரல் நடுங்கியது. “ஏய்… இங்க விட்டுவிட்டு கேட்குது. உடம்பு சரியில்லைன்னா.. டாக்டர் பார்க்கணும். நீ ஏன் அதை வாங்கி யூஸ் பண்ணின” என்று கேட்க, “அதுல பாஸிடிவ்னு வந்திருக்கு ஹ்ருத்” என்றாள். அடுத்த நொடி மறுபக்கம் அமைதி.

அந்த அமைதி அவளுக்கு மணி நேரம் போல தோன்றியது.
“ஹ்ருத்…?” மெதுவாக அழைத்தாள்.

அவன் மூச்சு விடுவது துள்ளியமாக கேட்டது.
“மிதிலா… விளையாடாதா?” என்றான்.
அவன் குரல் இப்போது வேற மாதிரி. மெதுவாக. கனமாக சீரியஸ் மோடிற்கு தாவியது.

“ரெண்டு கோடு… இருக்கு. வீடியோ வேண்ணா அனுப்பட்டா? இல்லை.. நேர்ல வரவா?” என்று கிட்டத்தட்ட வார்த்தைகள் தட்டுதடுமாறி விழுந்தது. .

ஹ்ருதேஷிடம் மீண்டும் அமைதி.
அந்த அமைதியில் ஆயிரம் எண்ணங்கள் ஓடின மிதிலாவுக்கு.
அவன் பயப்படுவானா…?
கோபப்படுவானா…?
தன்னை குற்றம் சொல்வானா…? என்றெல்லாம் எண்ணி பயந்தாள்.

“மிதிலா” என்றான்.
“ம்ம்”
“நீ… ஓகே தானே?” என்றான்.
அந்த கேள்வி அவளை உடைத்தது. கண்ணீர் தானாக வந்தது.

“எனக்கு பயமா இருக்கு ஹ்ருதேஷ். வீட்ல தெரிந்தா எப்படி எடுத்துப்பாங்க. கல்யாணமாகாம குழந்தை என்றால் என்னை அசிங்கமா பேசுவாங்க” என்று அவள் உடைந்து பேசினாள்.
அவன் உடனே “ஏ லிசன் நான் சொல்லறதை கேளு” என்றான்.

அவன் தன்னையே சீர்படுத்திக் கொண்டது அப்பேச்சில் தெரிந்தது.
“நீ பயப்பட அளவுக்கு நீ தனியா இல்ல. உன் கூட நான் இருக்கேன் சரியா” என்றான்.
அந்த ஒரு வரி அவள் மார்பில் நெஞ்சை அழுத்திய கல் கொஞ்சம் இலகுவாகியது.
“நாம இதை சேர்ந்து ஹாண்டில் பண்ணலாம்.” என்று தைரியம் ஊட்டினான்.

“எப்படி?” அவள் தைரியம்வற்றிய, குழந்தை போல கேட்டாள்.

அவன் மூச்சை ஆழ இழுத்தான்.
“முதல்ல ரிலாக்ஸா ஆகணும். நாளைக்கு டாக்டரை கன்சல்ட் பண்ணலாம். ஒருமுறை கன்பார்ம் பண்ணிக்கலாம். பேனிக்ஆகாத.” என்றான். அவனுக்குள்ளும் ஒரு புயல் அடித்து கடப்பது அவளுக்குத் தெரிந்தது.

“ஹ்ருத்”
“ம்ம்ம்?”
“நீ… என்னை விட்டுட மாட்டியே?” என்ற அவள் கேள்வி நேராக அவன் நெஞ்சில் விழுந்தது.

ஒரு வினாடி கூட யோசிக்கவில்லை ஹ்ருதேஷ் “லூசு.” அவன் குரல் இப்போது உறுதி.
“நீ என்ன கேட்கிறேன்னு புரியுதா? இது நம்ம இருவரோட பெர்சனல் விஷயம். நான் உன்னை தனியா விட்டுட்டு ஓட மாட்டேன்.” என்று வாக்கு தந்தான்‌.

“ஹ்ருத். லவ் யூ” என்று கூற அவன் உதட்டில் புன்னகை அரும்பியது

இந்த முறை அவள் வயிற்றில் கையை வைத்தாள். ஆனால் மிதிலா நடுங்கவில்லை.

அடுத்த நாள் மருத்துவமனையின் வாசலில் நின்றபோது மிதிலாவின் கால்கள் கனமாக இருந்தது.
“பயப்படாமா வா” ஹ்ருதேஷ் மெதுவாக சொன்னான். அவன் குரலில் திணிப்பு இல்லை. கட்டாயமும் இல்லை பொறுப்பு கூடியிருந்தது.

மிதிலா அவனுடன் நடந்தாள்.
அந்த மருத்துவமனையில் மருந்து நெடி, மாத்திரை வாசம், பினாயில் ஸ்மெல், காத்திருக்கும் பகுதி, குழந்தைகள் அழுகை, ரிசப்ஷன் ஹால் என்று எல்லாவற்றையும் உணரதுவங்கினாள். எல்லாமே சாதாரண வாசம் ஆனால் மிதிலாவுக்கு மட்டும் உலகம் வேறு மாதிரி நகர்ந்தது. நான் உண்மையிலேயே இங்கே வந்துட்டேனா? என்ற அச்சம்.

மெடிக்கல் பார்ம் நிரப்பும்போது ஹ்ருதேஷ் அவள் பெயரை எழுதினான்.
பெயர் வயது போன் நம்பர் உறவுமுறை எல்லாம் எழுதினான்.
கணவன் என்ற இடத்தில் ஒரு நொடி நிறத்தி மிதிலாவை கண்டு கணவன் என்றே நிரப்பினான்.

“ஏய்… ஓகே தானே” என்றதற்கு ஆமதித்தாள். ஆனால் உள்ளுக்குள் ஏதோ உறுத்தல்.
அதற்குள் டாக்டர் அழைக்க, இருவரும் சென்றார்கள்
அவ்விடத்தில் மிதிலா பேச முடியாமல் இருந்தாள்.
ஹ்ருதேஷ் தான் தொடங்கினான்.

“வீட்ல டெஸ்ட் எடுத்ததில் பாஸிடிவ்னு வந்திருக்கு டாக்டர்” என்று மிதிலா இங்கு வந்ததும் தந்த கிட்டை காட்டினான்.

“ஓகே… லாஸ்ட் பீரியட்ஸ் ஆனது எப்பம்மா?” என்று ஆங்கிலத்தில் கேட்க, மிதிலா மெதுவாக சொன்னாள். டாக்டர் மாதங்களை கணக்கிட்டார்.
“ஒரு ஸ்கேன் எடுத்துட்டா க்ளியரா எத்தனை மாத கரு வளருதுனு தெரிந்திடும்” என்று டாக்டர் சொன்னார்.

ஸ்கேன் எடுக்கும் இடம் மிகவும் குளிராக இருந்தது.
மிதிலாவை படுக்க கூறினார்கள் ஸ்கீரின் அவள் பக்கம் திருப்பப்படவில்லை.
டாக்டர் மட்டும் ஸ்கேன் செய்து பார்த்தார். சில விநாடிகள்.”பேபி பார்ம் ஆகியிருக்கு. நல்லா வளர்ந்திருக்கு” என்றார் அமைதியாக.

அந்த நொடி…மிதிலாவின் மூச்சு தடைப்பட்டது. அவள் பயந்த விஷயம் நூறு சதம் உண்மை என்று உணர்த்திவிட்டது. ஹ்ருதேஷ் ஸ்கிரினை பார்த்தான்.
அவனுக்கு எதுவும் புரியவில்லை ஏதோ கோலி குண்டு அளவிற்கு கருப்பு உருவத்தை காட்டி பேசினார்.
மிதிலாவுக்கு டாக்டர் டிசு பேப்பர் கொடுத்தார்.
அப்போதுதான் மிதிலா அழுது கொண்டிருப்பதை கவனித்தாள்.

அவள் அழுகை சத்தமில்லை. ஆனா உடல் நடுங்கியது. ஹ்ருதேஷ் அவள் கையை பிடித்தான்.”எதுக்கு அழற? இது ஹாஸ்பிடல் மிதிலா” என்றான்.

அழுகையை மறைக்க போராடினாள். “ஸ்டிரஸ் அவாய்ட் பண்ணுங்க. ரெகுலரா மெடிஸனை பாலேவ் பண்ணுங்க. நல்லா சாப்பிடணும்” என்று கூறினார்.

எல்லாவற்றையும் ஹ்ருதேஷ் கவனமாய் கேட்டான்.
வெளியே வந்தபோது காரிடரில் இன்னும் அதே மாதிரி இருந்தது.

மிதிலா மெதுவாக கையை வயிற்றின் மேல் வைத்தாள்.
“ஹ்ருத்”
“ம்ம்ம்?”
“இது… உண்மையா…?” என்றாள்.
“லாஸ்ட் டே காண்டம் காலினு யூஸ் பண்ணலையேடி. அதுல பேபி பார்ம் ஆகியிருக்கு. நம்ம செய்த தபபுக்கு நாம தான் பொறுப்பாக முடியும். அப்படியிருக்க.. பார்த்துக்கலாம்.
நான் உன்னை விட்டு ஓடமாட்டேன். பயப்படாத.. வீட்ல நானே பேசறேன். எது நடந்தாலும் உன்னை விட்டு போக மாட்டேன்.” என்று மீண்டும் கூறித் தோளை அணைத்தான்.

மிதிலா நெஞ்சை அழுத்திய வலிகள் வேதனை அழுகை எல்லாம் நிவர்த்தியானது போன்ற வாரத்தையை கேட்டு அவனை இறுக்கினாள்.

-தொடரும்

பிரவீணா தங்கராஜ்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top