அத்தியாயம்-15
ஹ்ருதேஷ் அவன் தங்கியிருக்கும் இடம் வந்து சேரவும், கதவு திறந்தான்.
“நீ உள்ள வரவேண்டாம். இங்கிருந்து போடி. நாம பிரேக்கப் பண்ணிடலாம்” என்று துரத்த முயல, “அவனை தள்ளி விட்டு உள்ளே வந்து ஹாலில் சட்டமாக அமர்ந்தாள்.
“இப்ப எதுக்கு இங்க வந்த. ஏற்கனவே நமக்குள்ள ஆர்கியூமெண்ட் போகுது. தயவு செய்து சண்டை பெருசாகாம இருக்க, நீ உன் ஹாஸ்டல் போ. உன்னை காதலிச்சதே தப்பு” என்றதற்கு அவளோ கதவை தாழிட்டு அவன் கையை பிடித்து கொண்டு அமர்ந்தாள்.
“இப்ப எதுக்கு லாக் பண்ணற? கையை எடு மிதிலா. ” என்று கத்த, அவன் பேச்சை சட்டைசெய்யாமல் தலையை வருடி கோதினாள்.
கன்னம் பிடித்து அவளை பார்க்க வைக்க, இரண்டு மூன்று முறை அவள் பார்வையை தவிர்த்தவன், ஒரு கட்டத்தில் அவள் விழியில் விழுந்தான்.
மிதிலாவாக தொண்டையில் எச்சி விழுங்கி அவன் முகமருகே நெருக்கமாக சென்றாள்.
எப்பொழுதாவது கன்னத்தில் முத்தமிடுபவள் இன்றும் அவ்வாறு முத்தமிடுவதாக ஹ்ருத் நினைக்க, மிதிலாவோ ஹ்ருதேஷின் முரட்டு உதட்டில் தன் மென் உதட்டை பதித்து இமை மூடினாள்.
கண்கள் தெறித்துவிடுவது போல, ஹ்ருத் நினைத்தவன், பெண்ணவளின் மென்மையான பழகமற்ற முத்தத்தில் உசுப்பேற்றிவிட, ஹ்ருதேஷ் அவனது மனவுளைச்சலை எல்லாம் ஒன்றுதிரட்டி, அவளது இதழை ஆழமுத்தமிட்டான்.
இருவரின் உதடுகள் இணையை சந்தித்த சங்கமத்தில், நேரத்தை உணராமல் முத்தமழை பொழிந்துக் கொண்டார்கள்.
மிதிலாவோ ஒரு கட்டத்தில், ஹ்ருதேஷ் டீஷர்ட் காலரை பற்ற, உடலை சாய்ந்திட, அந்த சோபாலில் அவள் மீது படர்ந்தவனாக ஹ்ருதேஷ் நிலையிருந்தது.
ஹ்ருதேஷ் கைகள் மிதிலா இடையில் பிடிப்பிற்கு செல்ல, “ஹ்ருத் அன்கம்பர்டெபிளா இருக்கு” என்று வார்த்தையை கூறிவிட்டு இதழை கொய்ய, ஹ்ருதேஷ் இருந்த நிலையில் அவளை அள்ளிக்கொண்டு படுக்கை அறைக்கு சென்றான்.
முத்தங்களை கண் காது மூக்கு என்று வரிசையிட்டவன், கழுத்துக்கும் இடம் பெயர்த்திட, மிதிலா கைகளில் உரோமங்கள் கூச்சத்தில் அவனை மேலும் அவளோடு ஒன்றிட வைத்திடும் ஏக்கத்தை விதைத்தது.
மாந்தளிர் மேனியில் உடைக்கு மேலே இதழை வைத்து ஊர்வலம் நகர்த்தியவன், ஆவேசம் கொண்டவனாக, தன் டீஷர்டை தலைக்கு மேல் கழற்றி வீசியெறிந்தான்.
மிதிலாவையும் குர்தாவை கழட்டிட அவசரப்படுத்தினான். “ஹ்ருத்” என்று மிதிலா அடுத்த நடக்கவிருக்கும் விபரீதம் உணர்ந்தவளாக அவன் நெஞ்சில் தன் விரலை வைத்து அவன் செய்கையை உணர்த்த முயல, அவனோ அவளது கையை மெத்தையில் அவன் கரத்தினுள் உடும்பாய் பிடித்து இதழை கொய்ய துவங்கினான்.
இரு கைகளும் ஹ்ருத் கரத்தில் வசமாக, இதழும் அவன் இதழால் சிறைப்பட்டிருக்க, மதிமயங்கி போனாள்.
ஹ்ருதேஷும் அவனது தேடல்களுக்கு ஏதுவாக கைகளை சுதந்திரமாக மிதிலா மேனியில் படரவிட, இதழிலிருந்து விடுபட போராடியவள் உதிர்த்த மோனா வார்த்தையும் “ஹ்ருத்”தாக இருக்க, ஹ்ருதேஷிற்கு இளமையெனும் போதை தலைக்கேறியது.
மிதிலா விழிகள் வலி தாளாமல் கண்ணீரை வழியவிட, ஹ்ருதேஷின் வேகம் அவனை தாங்கிய தேகத்துடன் மிதிலா துவண்டாள். ஆங்காங்கே ஹ்ருதேஷின் பற்தடமும், மிதிலாவின் நகக்கீறல் ஹ்ருதின் முதுகையும் பதம் பார்த்து முனகல் கூடியது.
ஒருவழியாக அவர்கள் ஒருமணி நேரம் தங்கள் சுற்றுசுழுலை மறந்தார்கள்.
ஹ்ருதேஷ் தன் போதை தெளிந்து மிதிலா மீதே துயில் கொள்ள, அவளுமே இமைத்திறக்கவும் இயலாது அவனை தாங்கியிருந்தாள்.
மெதுவாக நேரம் நகர, ஹ்ருதேஷ் இமைகள் மிதிலா மார்பில் திறப்பதை உணர்ந்தாள்.
ஹ்ருதேஷ் மிதிலா மீதிருந்து முதலில் நகர்ந்தவன், “மி…மிது..மிதிலா” என்று தீண்ட, “ம்ம்ம் டயர்டா இருக்கு ஹ்ருத்” என்றாள்.
ஹ்ருதேஷோ மெத்தையில் ஓங்கி குத்தி எழுந்தான். மிதிலா இமை திறக்காமல் பாதி ஆடையில் தனது மெத்தையில் கிடக்க, போர்வையை போர்த்தி விட்டு குளியலறை புகுந்தான்.
ஷவரை திறந்தவன், “தப்பு பண்ணிட்டேன்.. பெரிய தப்பு பண்ணிட்டேன். இவளை நெருங்க விட்ருக்க கூடாது. எல்லாம் போச்சு. எல்லாம் போச்சு.” என்று புலம்ப, மிதிலாவோ செவியில் விழுந்தாலும் இமை திறக்காமல் அசதியில் கிடந்தாள்.
‘மிதிலா இப்ப என்னை என்ன நினைப்பா?’ என்று கதவை திறந்தான். இடையில் டவலணிந்து வந்தவன், வேகமாய் ஷார்ட்ஸ் மட்டும் எடுத்தணிந்தான்.
மிதிலா அவன் வரவும், எழுந்தவள், அமைதியாக போர்வையை உடலில் சுற்றிமுடித்து குளிக்க சென்றாள்.
தலைக்கு குளித்து முடித்து, கதவை திறந்து தலையை மட்டும் வெளியே நீட்டி, “எனக்கு டவல் வேணும்” என்றாள்.
ஹ்ருதேஷ் தரவும் பெற்றுக்கொண்டவள், “எனக்கு இன்னொரு டவல் வேணும்” என்றாள்.
அவன் தற்போது தந்ததை உடலில் அணிந்து நின்றாள்.
கப்போர்டை திறந்து மற்றொரு துண்டை தர, அதை தலைக்கு கட்டிக்கொண்டு வெளிவந்தாள்.
ஆடை அணிவதற்காக மெத்தையில் தேடி எடுத்தவள் அதில் சில கறைகள் லேசாக பட்டதும் அதை நீக்க சென்றாள்.
தன் குர்தாவை ஃபாலோஸோ பேண்ட் இரண்டையும் நீரில் பிழிந்து பால்கனியில் காய வைத்தாள்.
“ஹ்ருத்.. எனக்கு போட்டுக்க டிரஸ் வேண்டும்” என்றாள்.
“இங்க என்ன டிரஸ் இருக்கும்” என்று எரிந்து விழ, மிதிலாவாக கப்போர்டை திறந்து ஹ்ருதேஷ் டீஷர்டை ஒன்றை எடுத்து அணிந்தாள். ஷார்ட்ஸ் ஒன்றை போட்டுவிட்டு தலையை துவட்டினாள்.
“ஐ அம் சாரி.. நான் இதெல்லாம் நடந்திடும்னு நினைக்கலை. நட்பா காதலானு கிறுக்குத்தனமா திங்க் பண்ணி காதலை வேண்டாம்னு தான் தவிர்க்க நினைச்சேன். ஆனா… என்னால எந்த நேரம் எல்லை தாண்ட நினைச்சேன்னு தெரியலை. ஐ அம் ரியலி சாரி” என்று மன்னிப்பு கேட்டு கண்ணீர் வடித்தான் ஹ்ருதேஷ்.
“இப்ப என்ன நடந்துச்சு.. ஆப்டர் மேரேஜ் நமக்குள் நடக்க வேண்டியது. ஃபிபோரா நடந்துடுச்சு. பஸ்ட் நைட்டுக்கு பதிலா பஸ்ட் நூன் ஆகிடுச்சு. தட்ஸ் இட். இதுக்கு எதுக்கு சாரி. நடந்ததுல என் தப்பும் இருக்கு தானே” என்றாள்.
ஹ்ருதேஷ் மெதுவாக ஏறிட்டு, “தட்ஸ் இட்டா? ஏய்… நமக்குள்ள நடந்தது உனக்கு ஓகேவா?” என்றான்.
“நீ தானே.. ம்ம் ஓகே.. தான்” என்றாள்.
ஹ்ருதேஷ் தலையை தாங்கி இரண்டு வினாடி யோசித்தவன், “மிதிலா… இதுவும் வெல் பிளானோட நீ போட்டோ எடுத்து, உன் அண்ணனை ப்ரேம் போட வச்சி, என் கையால உன் ரூம்ல மாட்டி விட வச்ச மாதிரி, இன்னிக்கும் திட்டம் போட்டு, நானா உன்னிடம் வரம்பு மீற வச்சியிருக்க, அப்படி தானே? சொல்லுடி?” என்றான். அவள் அப்படியில்லை என்று கூறுவாளென எண்ணியதற்கு மாறாக, “கிட்டதட்ட..” என்றாள் மிதிலா.
அதில் ஹ்ருதேஷ் திடுக்கிட்டு, “என்ன பொண்ணு நீ. உன்னிடம் நான் இப்படி பிஹேவ் பண்ணுவேன்னு தெரிந்தே, என்னிடம் மூவ் பண்ணிருக்க ரைட்?” என்றான்.
“எக்ஸாட்லி” என்று தோளைக் குலுக்கினாள்.
ஹ்ருதேஷ் கோபத்தில் மிதிலாவை அறைய, மெத்தையிலேயே விழுந்தாள். தன்னை உணர்ச்சியின் பிடியில் தள்ளிவிட்டு காரியம் சாதித்துவிட்டாளே.
கன்னத்தை தாங்கியபடி, “என்னடா பிரச்சனை உனக்கு? ஆங்.. என்ன பிரச்சனை. அவனவன் லவ் பண்ணி வீட்ல தெரிந்த பிறகு பிராப்ளம் பேஸ் பண்ணுவாங்க. நீயிருக்கியே.. இப்பவே பிரச்சனையை கண்டு பத்தாடிக்கு ஓடற. எனக்கு வேற என்ன பிளான் போட தோன்றும்.
உனக்கு என்னை விட என் அண்ணன் நட்பு தான் முக்கியம்னு சொல்லிட்ட. எனக்கு அப்படியில்லை. எனக்கு என் காதல் மட்டும் தான் முக்கியம். அதான்… என்னை தந்து என் காதலுக்கு ஸ்டிராங்கா அஸ்திவாரம் போட்டேன். இனி நீயே கை கழுவ நினைச்சா, எனக்கு துரோகம் பண்ணறதா அர்த்தம்.
நட்புக்கு துரோகம் பண்ணியதா நீ தான் சொல்லிட்டு இருக்க. காதலுக்கும் துரோகம் பண்ணிடாத.” என்றாள்.
“ஏன்டி இப்படி பண்ணின?” என்று கழுத்தை நெறிக்க வந்தான்.
“எனக்கு வேற வழி தெரியலை ஹ்ருத். ஒருபக்கம் என்னை லவ் பண்ணறதை சொல்லவே உனக்கு இரண்டு வருஷமாகுது. எங்கண்ணா கூடவே இருக்க. அவன் நட்பு தான் பெருசுனு பேசற.
மறுபக்கம் உங்கப்பா அம்மா உனக்கு வேற வரன் தேடறாங்க. இதுக்கு நடுவுல நீ… நீயே என்னை பிரேக்கப் பண்ணிடலாமானு திங்க் பண்ணற.
என்னைக்கு என்னை விட நட்பு பெருசுனு சொன்னியோ அப்பவே நான் தான் உனக்கு முக்கியம்னு சொல்ல வைக்க நினைச்சேன்.
நான் நடந்துக்கிட்டது தப்பு சரினு நீ முடிவு பண்ணிக்கோ. ஆனா.. என் ஹ்ருதேஷுக்கு தான் என் உடம்பை தந்தேன். அவனை தவிர எவனும் என்னை தொட விடமாட்டேன்.” என்றாள்.
ஹ்ருதேஷிற்கு வார்த்தை போர் செய்ய துணிவில்லை. தவறு நிகழ்ந்துவிட்டதே… இனி பேசி வாதிட்டு என்னவாக போகின்றது.
மிதிலாவை குற்றம் சுமத்துவதாக இருந்தால், தன் மீதும் குற்றம் உள்ளதை அறிந்தவனே. மெத்தையில் உடலை சாய்த்து, மின்விசிறியை கண்டு அமைதிக்காத்தான்.
மிதிலா உடல் அசதி இன்னமும் இருக்க, வயிற்றை பிடித்து அவளும் படுத்துக் கொண்டாள்.
ஹ்ருதேஷ் இரண்டு முறை மிதிலாவை பார்வையிட, அவள் உறங்கவும், விட்டத்தை பார்த்து சிந்தனைக்கு தாவினான்.
இன்று காலை வரை நட்பா காதலா என்று பட்டிமன்றம் வைத்து நட்பு முக்கியமென காதலை தியாகம் செய்துவிடுவதா பேச எண்ணினான். இவன் எண்ணத்தை அறிந்து பேசவும் விடாமல், இந்த சூழலை அவளுக்கு சாதகமாக அமைத்து, நட்பா காதலா என்று வாதாடாதே, ‘காதலென்ற கோட்டுக்குள் வந்து நில்’ என்று சொல்லாமல் சொல்லிவிட்டாள்.
இனி காதலிக்க மாட்டேன் என்று உரைத்தால் அது பாவமாகாதா?
மிதிலா முன்பிருந்தே தெளிவாக முடிவெடுத்து அவளுக்கு தேவையானதை அடைந்திடும் தில்லாலங்கடி.
இனி என்ன செய்வதென்று நகத்தை கடிக்க, இமை திறக்காமலே மிதிலா, “ஹ்ருத்.. எனக்கு பசிக்குது. காலையில சாப்பிடலை… இப்ப நமக்குள் நடந்ததில கூடுதலா பசிக்குது. என் போன் எடுத்து ஆர்டர் தந்துடு. என்னால ஹோட்டலுக்கு இப்ப வரமுடியாது” என்றாள்.
ஒரு முடிவோடு எழுந்து மிதிலா போனை எடுத்து பேட்டர்ன் போட்டு, போனை திறந்து, தேவையான உணவை ஆர்டர் தந்தான்.
அரை மணி நேரம் மிதிலா அறையில் உறங்க, ஹ்ருதேஷ் ஹாலில் அமர்ந்திருந்தான்.
காலிங்பெல் சப்தம் கேட்டதும், எழுந்து சென்றான். அங்கே பனியன் கூட அணியாமல், ஷார்ட்ஸ் அணிந்து வாங்கிக் கொண்டான்.
அதை ஹாலிலேயே வைத்துவிட்டு, மிதிலா அருகே சென்றான்.
“புட் வந்துடுச்சு. சாப்பிட வா” என்றான் உயிரற்ற குரலில்.
மிதிலா ஹ்ருதேஷை பாராமல் வந்து உணவை எடுத்து விழுங்கினாள்.
“நடந்த தப்புக்கு நானும் தான் காரணம். உன்னை மட்டும் சொல்லி என்ன புரோஜனம். அப்படி செய்தா உன்னை பிளேம் பண்ணறதா மாறிடும். இதுல என் விருப்பம் இருந்துச்சு” என்று ஹ்ருதேஷ் கூறவும் நீரை பருகி முடித்து மிதிலா ஹ்ருதேஷை கட்டிக்கொண்டு “சாரி… நான் உன்னோட உணர்ச்சியை தூண்டி விடற மாதிரி நடந்துக்கிட்டேன். இல்லைன்னா.. நீ என்னிடம் இப்படி நடந்திருக்க மாட்ட. எனக்கு நீ வேணும் ஹ்ருத். நட்பு தான் முக்கியம்னு நீ கௌசிக் பக்கம் போயிட்டா.. நான் தனியா என் காதலுக்காக போராட முடியாது. இதுல என்னோட பக்கா சுயநலம் மட்டும் யோசித்துட்டேன்.” என்றாள்.
ஹ்ருதேஷ் லேசாக சிரிக்க முயன்று “தனியா போராட வேண்டாம். நானும் இருக்கேன். வேற வழி” என்றவன் மிதிலா காதை திருகினான்.
“ஹ்ருத்… உடம்பெல்லாம் வலிக்குடா. அங்கங்க கடிச்சி வச்சியிருக்க?” என்று நெஞ்சில் செல்லமாய் அடித்தாள்.
“கண்ணாடில பார்த்தியா?” என்று கேட்க ஆமென்று கூறினாள்.
“எங்கெங்க கடிச்சேன்” என்று கேட்க மிதிலா அவனை ஏறிட, “சரி என் டீஷர்ட் கொடு.. நானே எங்க கடிச்சி வச்சேன்னு பார்த்துக்கறேன்” என்று டீஷர்டை இழுக்க, “ஹ்ருத்… நோ..” என்று தடுக்க, இருவரும் பாதி சாப்பிட்டு ஒடிப்பிடித்து விளையாட்டை தொடர்ந்தார்கள்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்
