மையலிட்ட சிற்பமே-8

அத்தியாயம்-8

   கதிரவனின் வேண்டுதல் இறைவனுக்கு எட்டி தவமலர் விழித்திறக்க, கதிரவன், அவளை கட்டியணைத்து கொண்டான்‌.

  நர்ஸ் வந்து, “ஏம்மா உன் வயசென்ன? டேட் ஆப் பெர்த் சொல்லு” என்று கேட்க, அவளும் கூறினாள்.

  “என்ன தம்பி.. இந்நேரம் முடிஞ்சிடுச்சுனு சொன்னிங்க. இந்த பொண்ணுக்கு பதினெட்டு ஆக இன்னும் மூனு மாசம் இருக்கே.” என்றவர் கதிரவன் விழித்து தவமலரை கண்டவன், “உங்க மாமா இரண்டு மாசத்துல பதினெட்டு வயசு முடிஞ்சிடும்னு சொன்னாரே” என்று கேட்க, “மாமா பொய் சொல்லுங்சு. ஆறுமாசம்னா நீங்க வேண்டாம்னு சொல்விங்கனு அப்படி சொன்னார்.” என்றதும் கதிரவன் தொப்பென அமர்ந்தான்.
 
   “அடிப்பாவி…. இரண்டு மாசம்னு சொன்னதால தான் அவன் தாலியே கட்டியது. இப்ப இந்தம்மா போலீஸிடம் மாட்டிவிட போன் வேற போட்டுச்சு. நீயும் உங்க வீட்டு ஆளுங்களும் என்னதான்டி மனசுல நினைச்சுட்டு இருக்கிங்க. என் பையனை லாக்கப்ல தள்ள போறிங்களா. பெத்தவ இல்லை.. சித்திகாரியிடம் மாட்டிட்டு கஷ்டப்படும். இங்க வந்தா குடும்பத்தோட வாழ்வன்னு தானே அவன் யோசித்தான்‌” என்று முதுகில் அடிக்க, தவமலர் கவலைக்கொண்டாள்.

  இதில் நர்ஸ் தவமலரின் கையை பிடித்து இழுக்க, நாடி துடித்தது.

  இத்தனை வருட அனுபவமோ என்னவோ தவமலரை தன் பக்கம் அழைத்து, “ஏன்டி… தலைக்கு ஊத்தி எத்தனை நாளாச்சு?” என்று கேட்க, நினைவு வைத்து உரைத்தாள்.

  நர்ஸ் பெண்ணோ நெஞ்சில் கைவைத்து, தவமலரை அழைத்து, சென்றார். தனியாக அழைத்து ஏதேதோ கூற, தவமலர் திகைத்து நின்றாள். கதிரவனை மாமியார் மாமனாரை கண்டு விழிக்க, “போடி… இதை யூஸ் பண்ணிட்டு வந்து சொல்லு‌” என்று தள்ளினார்.

   சாமுண்டிஸ்வரியோ, “போச்சு… என் புள்ளையை ஜெயிலுக்கு அனுப்ப அவ என்னத்தையே சொல்லி அனுப்பறா. இந்த சிறுக்கியும் போறா” என்று புலம்ப, கதிரவனுக்கு உலகமே ஸ்தம்பித்தது.

   இன்றைய நாள் ஏன் இவ்வளவு மோசமானதாக அமைகின்றது என்று வருந்தினான்.

கண்ணனோ சிவநேசனுக்கு போனை போட்டு போட்டு துவண்டார். சிவநேசன் எடுக்கவில்லை என்றதும் என்ன செய்வதென்ற யோசனையில் மூழ்கினார்.

  அதற்குள் தவமலர் கொண்டு வந்த காட்டியதில், நர்ஸ் பார்த்துவிட்டு, “நீ கர்ப்பமா இருக்கடி” என்று கூறியவர், கதிரவன் முன் வந்து, “காலையில யார் முகத்துல முழிச்ச தம்பி? மைனர் பொண்ணை கல்யாணம் செய்தால் இரண்டு வருடம் கம்பி எண்ணணும். இதுல இந்த பொண்ணு கர்ப்பம் வேற.

   கடவுளே… உன் மேல போக்ஸா சட்டம் பாயும். கிட்டத்தட்ட இந்த பொண்ணை நீ கற்பழிச்சதா கேஸ் பதிவாகும். பதினெட்டுக்கு கீழே இருக்கற இந்த பொண்ணு கர்ப்பம்னா பாலியல் வன்முறைனு பத்து வருஷம் தண்டனை கொடுப்பாங்க.” என்று நர்ஸ் விஷயத்தின் தீவிரத்தை எடுத்து கூற கூற, தவமலருக்கு நெஞ்சுக்கூடு காலியானது.

சாமுண்டிஸ்வரி நர்ஸ் பேச பேச அதிர்ந்து பார்க்க, தவமலரோ “அவர் மேல எந்த தப்பும் இல்லையே. நான் நானா தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்” என்று அழுதாள்.

“சட்டத்துக்கு உன் வயசு தான் முக்கியம். உன் சாட்சி தேவையில்லை.” என்று கூற, தவமலர் அந்த நர்ஸிடம், “அக்கா.. அக்கா.. தயவு செய்து போலீஸ் எல்லாம் வேண்டாம்க்கா. எங்களை இப்படியே விட்டுடுங்க. நாங்க போறோம்.” என்று கெஞ்ச, அதற்குள் போலீஸ் வண்டி வந்தது.
 
  இன்று தீபாவளி என்பதால் அவரவர் லீவு எடுத்திருக்க, தற்சமயம் காவல் நிலையத்தில் இருந்தவர் மட்டும் இருசக்கர வாகனத்தில் வந்து சேர்ந்தார்.

  “இச்க யாரும்மா நர்ஸ் கனவள்ளி? போன் போட்டு மைனர் பொண்ணை கல்யாணம் பண்ணியதா சொன்னது.” என்று கேள்வி கேட்க, தவமலர் ஈரக்குலை நடுங்கியது.

நர்ஸ் ஊமையாக இருக்க முடியுமா? போலீஸை அழைத்து விஷயத்தை கூறியவர் போலீஸ் வந்ததும் பதுங்க இயலாதே.

  “சார் நான் தான் கால் பண்ணினேன். இந்த பொண்ணு மிக்ஸில ஷாக் அடிச்சதா, சொல்லி இங்க கொண்டாந்தாங்க. வயசு கேட்டப்ப பதினேழு என்றதும், சந்தேகம் வந்தது. ஒருவேளை மைனர் திருமணம் செய்து கொடுமைப் படுத்தறாங்களோனு போன் பண்ணினேன். அப்ப இந்த பொண்ணு கண்ணு திறக்கலை சார். இந்தாளு பதினெட்டு வயசு இந்நேரம் முடிந்திருக்கும்னு சொன்னார். இந்த பொண்ணு வயசு சந்தேகிக்கும்படியா இருந்தது. அதோட வீட்ல ஷாக் அடிச்சது, இந்த பொண்ணோட உருவம் எல்லாம் வச்சி உங்களை அழைச்சிட்டேன். ஏன்னா பேஷண்ட் டீட்டெயில்ல பதினெட்டு முடியாம கல்யாணம் செய்த பொண்ணுக்கு கவர்மெண்ட்ல சிகிச்சை பார்த்தா பின்னால எனக்கு ஆபத்துனு அப்படி செய்தேன்.
  இந்த பொண்ணு கண்ணு முழிச்சதும் வயசை கேட்டேன். பதினேழு முடிய இன்னமும் மூனு மாசம் இருப்பதா சொன்னா. இதுல கர்ப்பமா வேற இருக்கா.. போலீஸுக்குபோன் பண்ணிட்டேனு சொன்னேன். இந்த பொண்ணு அவ புருஷன் மேல தப்பில்லைனு அழுவறா. சார்.. நான் என்ன பண்ணறதுனு தெரியலை சார்‌. நீங்களே பார்த்து முடிவு பண்ணுங்க. பொண்ணு புருஷனுக்காக அழுவுது.” என்றா தவமலரை சுட்டிக்காட்டினார்.

போலீஸோ “என்னம்மா.. இவங்களாலா உனக்கு பிரச்சனையா. பிரச்சனையே இல்லைன்னாலும் உள்ள தள்ளிடலாம்” என்று கேட்க, தவமலர் தடாலென போலீஸ் காலில் விழுந்து, “சார் எங்கம்மா எனக்கு பத்து வயசு இருக்கறப்பவே, என் கண்ணெதிர்ல மண்ணெண்ணெய் ஊத்தி இறந்துட்டாங்க. எங்கப்பா இரண்டாதாரமா அவர் திருட்டத்தனமா வாழ்ந்தவங்களை ஊர் அறிய கூட்டிட்டு வந்து அவங்களோட வளர்த்தாங்க. அவங்களோட வாழ்ந்தப்ப ரொம்ப ஏச்சும் பேச்சும் வாங்கினேன் சார். நானா தான் கல்யாடம் பண்ணி வையுங்கனு என் தாய்மாமாவிடம் கேட்டேன். அவர் தான் பண்ணி வச்சார். இவரிடம் இரண்டு மாசத்துல பதினெட்டு வயசு பூர்த்தியாகும்னு சொன்னார். ஆனா எனக்கு பதினெட்டு முடிய ஆறு மாசம் ஆகும்னு மறைச்சிட்டேன்.
  இவர் மேல எந்த தப்பும் இல்லை சார்.
  இவங்க என்னை நல்லா பார்த்துக்கறாங்க. தயவு செய்து கடவுள் கொடுத்த இந்த நல்ல வாழ்க்கையை பறிச்சிடாதிங்க.

   நீங்க இவரை கூட்டிட்டு போய் ஜெயில்ல போட்டா. நான் செத்துடுவேன்” என்று அழுதாள்.

போலீஸோ ”என்னம்மா நீ இப்படி  பேசுற. கவர்மெண்ட் ஆஸ்பிடல்ல வேலைபார்க்கற நர்ஸ் கம்பிளைன் பண்ணினா நான் கேஸ் எடுக்கணும்.” என்று உண்மையை உரைத்தார். அவருக்கு தவமலரின் நிலையும் கெஞ்சலும் அந்தளவு உருக வைத்தது.

நர்ஸிடம் தவமலர் கையை பிடித்து கெஞ்ச, அவரோ நான் என்ன செய்யறது தெரியலையே. டாக்டர் இருந்தா பொறுப்பை அவங்களிடம் தந்திருப்பேன். இப்ப நான் என்ன செய்வேன்.” என்று முழிக்க, “எம்மாடி… நீயா கேஸ் தரலலன்னா அவர் போயிடுவார்.” என்று சாமுண்டிஸ்வரி கூற, தவமலரும் ஆமென்று தலையாட்டினாள்.

நர்ஸும் போலீஸை பார்த்து, “சாரி சார்.. எனக்கு என்ன செய்யறதுனு தெரியலை. இந்த பொண்ணு கண் முழிச்சதும் கால் பண்ணியிருந்தா உங்களை நான் கூப்பிட்டுயிருக்க மாட்டேன். நீங்க தப்பா எடுத்துக்கலைனா உங்களை தொந்தரவு செய்ததுக்கு மன்னிச்சிடுங்க” என்றுரைத்ததும், “தப்பில்லை சிஸ்டர்.. நீங்க கடமையை தானே பார்த்திங்க. இதே இந்த இடத்துல இந்த பொண்ணுக்கு அநீதியா ஏதாவது நடந்திருந்தா இந்த பையனை அழைச்சிட்டு போயிருப்பேன். பாவம் இந்த பொண்ணே வேண்டாம்னு தாலியை பிடிச்சிக்கிட்டு சொல்லுது. அந்த பையனும் இந்த பொண்ணை நல்லா பார்த்துக்கறது இந்த பொண்ணு பேச்சுல தெரியுது.
  அப்படியிருக்க.. நாம கேஸ் பைல் ஆகலைன்னா நம்ம வேலை பார்க்கலாம். இதுல உங்க தப்பு இல்லை.” என்றார்.
 
  கூடுதலாக கதிரவனை அழைத்து, “இங்கபாரு தம்பி பதினெட்டு கீழே இருக்கற பொண்ணை கல்யாணம் செய்தது சட்டபடி தப்பு. இதுல குழந்தை வேற. ரொம்ப பெரிய தப்பு. ஆனாலும் அந்த பொண்ணு உனக்காக கெஞ்சறதால விடறேன். கடைசிவரை அந்த பொண்ணை நல்லபடியா பார்த்துக்கணும். என்ன சரியா?” என்று அதட்ட கதிரவன் தலலயாட்டினான்.

பிறகு போலீஸ் போனதும் தான் கதிரவன் வீட்டாளுக்கு நிம்மதியுண்டானது.

  அதே நேரம் சிவநேசன் அழைக்க, “ஏம்மா.. இவங்க தாய்மாமா தான். மருமக உண்டான விஷயத்தை சொல்லலாமா? எப்படி?” என்று கேட்க, நர்ஸ் கனகவள்ளியோ, தவமலரை கண்டு, “அம்மாடி… இந்த வயசுல குழந்தை பெத்துக்கறது கஷ்டம். அதனால தான் பதினெட்டு வயசு முடியறவரை கல்யாணம் குழந்தை வேண்டாம்னு அரசாங்கம் சொல்லுது. அதை மீறி இரண்டு மாசம் கருவோட நிற்கற. உடம்பை நல்லா கவனிச்சிக்கோ. நல்லா சாப்பிடு. டாக்டர் அம்மா நாளைக்கு வந்துடுவாங்க. ஒரெட்டு கண்டிப்பா வந்து நல்லா செக்கப் பண்ணிக்கோ” என்று அறிவுறுத்தி கருவுற்றதை வீட்டில் கூற சொல்லிவிட்டார்.

    கதிரவன் அதன்பின்னே தவமலர் அருகே வந்ததும் சாமுண்டிஸ்வரியும் மருமகள் அருகே வந்தார்.

  “ஏன்டிம்மா… வீட்ல எல்லாம் கர்ப்பமானதை சொல்லக்கூடாதுனு இங்க வ்நது பெரிய பெரிய குண்டை தூக்கி போட்டு புள்ள உண்டானதை சொல்லியிருக்க” என்று கேட்டு கையை பிடித்தார்.

“நீயேன்டா.. அவளை பார்த்துட்டு இருக்க, விரசா வீட்டுக்கு கூட்டிட்டு போ.” என்று கூற அவள் கையை பிணைத்து நடந்தான்.
  கண்ணனோ போனில் சிவநேசனிடம் பேசிவிட்டு மருமகளிடம் தந்தார்.

  “மாமா..” என்று பேச, “சந்தோஷமா இருக்கும்மா. தீபாவளி அதுவுமா, உங்க சித்திக்காரி சண்டையா போட்டு சாப்பிட விடாம பண்ணிட்டாலேனு ஒரு வருத்தமா இருந்தது. இப்ப இந்த நல்ல விஷயம் தான் மனசுக்கு குளிர்ச்சியா இருக்கு.  உங்கப்பாவிடம் இப்ப சொல்ல வேண்டாம். நீ வீட்டுக்கு போய் இரு. நாளைக்கு சொல்லிக்கலாம்.” என்று கூற சரிங்க மாமா. அத்தையிடம் பேசவா?” என்று கேட்டாள்.
  சிவநேசனோ “உங்க அத்தையிடமா?” என்று கேட்டு, “அத்தை கோவிலுக்கு போயிருக்கா. வந்ததும் பேச சொல்லறேன்” என்று காயத்ரி அருகேயிருந்தும் தர மறுத்தார்.

     தவமலரோ சரிங்க மாமா.” என்று துண்டித்து விட்டாள். கண்ணன் தனியாக சென்று “அவங்க அப்பாவிடம் பேசிட்டு சொல்லுங்கப்பா” என்று அணைத்தார்.

  கண்ணன் டிராக்டர் வண்டியை ஓட்ட, கதிரவன் தவமலர் அருகருகே அமர்ந்து வர, சாமுண்டிஸ்வரியோ சேலையில் காசை முடித்து, “ஐய்யனாரே… என் குலம் தழைக்குது. கூடவே இருந்து அந்த பொண்ணை பார்த்துக்கோ” என்று வேண்டுதலிட்டார்.

கணவன் கதிரவன் தோளில் சாய்ந்தபடி தவமலர் மலர்ந்த முகமாக வந்தாள்.

  காயத்ரியோ “உங்க மச்சான் இந்த நேரம் எங்க போனாரு? வீட்டை விட்டு போனவருக்கு கால் பண்ணினா கால் போகலைனு சொல்லறார். வீட்டை விட்டு போக தீபாவளி தான் கிடைச்சதா?
   சாயந்திரம் குடிச்சிட்டு வீட்டுக்கு வருவான். என்னவோ பதட்டமா இருக்கிங்க? அந்தாளு என்ன செத்தாப் போவாரு” என்று புலம்பி சென்றார்.

  சிவநேசனுக்கு தவமலர் கர்ப்பமாக இருப்பது சந்தோஷம் என்றால் மறுபுறம் ஆவுடையப்பன் இந்நேரம் இல்லை என்றது ஏதோ நெருடலை தந்தது.

-தொடரும்.
  பிரவீணா தங்கராஜ்

4 thoughts on “மையலிட்ட சிற்பமே-8”

  1. M. Sarathi Rio

    அந்த ஆளு ரோசம் வந்து சாக போயிட்டானோ..?

    😔😔😔

    CRVS (or) CRVS 2797

  2. Dharsini Priya

    Happa oruvazhiya thavamalar happy ah veetuku pora ennoru Pakkam avaga appa va kaanum parpom 🤔🧐

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top