நின் பிரேமம் என் சிநேகம்-18

அத்தியாயம்-18

  மிதிலாவும் ஹ்ருதேஷும் டீ ஷாப்பில் அமர்த்திருந்தனர்.

  “என்ன சாம்பிராணி போட்டாங்க. உங்கம்மா” என்று கோபமாக மிதிலா ஆரம்பித்தாள்.

“இப்ப எதுக்கு எங்கம்மாவை வில்லி ரேஞ்சுக்கு இமேஜின் பண்ணி என்னிடம் பேசற?” என்றான் ஹ்ருதேஷ்.

“ஒரு போன் கால் கூட இல்லை. இதுல… நீ என் பொயரை பிளாக் லிஸ்ட்ல போட்டு வச்சியிருக்க. என்னனு நினைக்க?” என்று கேள்வி எழுப்பவும், “பின்ன கால் பண்ணதானு சொல்லியும் நீ மெஸேஜ் பண்ணின. மாட்டிப்பேன்னு சொல்லி வார்ன் பண்ணினா, மாட்டினா‌ மாட்டுனு கிஸ்ஸிங் ஸ்டிக்கரா அனுப்பி விடற. அதான்… பிளாக் பண்ணி இரண்டு நாள் வச்சியிருந்தேன். அம்மா அப்பா போனதும் எடுத்து விட்டேன். உனக்கென்ன கொழுப்பு? என்னை மாட்டிவிட அவ்ளோ ஆசை?” என்று தொடையில் கிள்ளவும் செய்ய, “ஆ.. ஹ்ருத் வலிக்குதுடா.” என்று கையை தட்டிவிட்டாள்.

   “வர்ற சன்டே… இதுக்கு பயங்கரமான பனிஸ்மெண்ட் தந்து கதற வைக்கறேன் பாரு?” என்று தண்டனையை மெத்தையில் தருவதாக உரைத்திட, “நீ அப்ப என்ன பனிஷ்மெண்ட் தந்தாலும் எனக்கு ஓகேடா செல்லம்.” என்று தாடைப்பிடித்து சிரித்தாள்.
அவள் கையை தட்டிவிட்டான்.

  அதன்பிறகு அவனை சமாதானம் செய்து வழியனுப்பி தங்களது பணிகளில் படிப்பில் கவனம் செலுத்தி கொண்டனர் காதல் பறவைகள்.

    ஒருபுறம் கௌசிக் ‘மினி ஸ்னாஸ்’ கடை பிக்கப் ஆனது.

  அதனால் வந்த வருமானத்தில் கௌசிக் வீட்டில் மகிழ்ந்தார்கள்.

     இரண்டு மூன்று நம்பிக்கையான ஆட்களை நியமித்து கடையை பெருக்க நினைத்தார்கள். ஏற்கனவே தந்தையும் இந்த கடையில் ஒருவராக பணியில் இருந்தாலும், கடைக்கு வருபவருக்கு என்ன வேண்டும் ஏது வேண்டுமென கொண்டு சென்று எடுத்து செய்வதற்கு ஆட்களை தேவைப்பட்டது.

   நாட்களும் பறந்தோட, இரண்டு மூன்று மாதம் சென்ற தருணம், கடைத்திறந்து நூறாம் நாள் கொண்டாட திட்டம் போட்டான் கௌசிக்.

  அதற்கு ஊரெல்லாம் சலுகை முறையில் சாப்பிட அழைத்திருப்பதாக போஸ்ட்ர் ரெடி செய்து இரண்டு மூன்று இடத்தில் ஒட்ட ஏற்பாடு செய்ய திட்டமிட்டான்.

  துண்டு பேப்பரும் சேலத்தில் அவர்கள் இருந்த ஊரில் அக்கம் பக்கத்திலும் பிரபலப்படுத்திட நினைத்தான்.

நூறாவது நாள் புதன் கிழமை என்பதால் ஹ்ருதேஷ் வருவானோ? இல்லையோ? என்று யோசித்தான். செல்வராகவன் தான், ”நேர்ல போய் அழைச்சிப்பாரு… கடை இவ்ளோ சீக்கிரம் பிரபலம் ஆனதுக்கும், உனக்குன்னு ஒரு பிசினஸ், பணவருவாய் ஏற்படுத்தி தந்தது அவன் தானே. நேர்ல கூப்பிடு” என்று அறிவுறுத்தினார்.

அதுகூட ரொம்ப புஷ் பண்ணாத, அவனுக்கு வேலை லீவு கிடைக்கலைன்னா விட்டுடு.” என்று கூறினார்.
 
“சரிப்பா” என்று கௌசிக் பெங்களூரேக்கு சொல்லாமல் கொள்ளாமல் நண்பனுக்கு ஆனந்த அதிர்ச்சி தரும் பொருட்டு வந்தான்.
 
  ஞாயிறு ஐந்து மணிக்கு கிளம்பி ஹ்ருதேஷ் வீட்டுக்கு ஒன்பது ஐம்பதிற்கு வந்து சேர்ந்து காலிங் பெல் அடித்தான்.

  ஹ்ருதேஷ் ஞாயிறு என்றாலே மினிமம் ஏழு மணிவரை தூங்குவான். அதிலும் மிதிலா கூடவே படுத்திருந்தால் எட்டு மணி நேரம் கூட எழவதற்கு மனமின்றி இருப்பார்கள்.

  ஹ்ருதேஷ் காலிங்பெல் அடிக்கவும், “பசி பேயு… எழுந்ததும் காபி கூட குடிக்காம ஃபுட் ஆர்டர் பண்ணிருக்கா’ என்று முனங்கிக்கொண்டே கதவை திறக்க, அங்கே கௌசிக்கை கண்டு அதிர்ந்தான்.

  கௌசிக் எதிர்பார்த்த அதிர்ச்சியை விட அளவற்ற அதிர்ச்சி. ஆனால் ஆனந்தமான முகமா என்றால் கிடையாது.

பேயறைந்தது போல நின்றான் ஹ்ருதேஷ்.
  “என்னடா மச்சி… என்னை பார்த்து ஷாக் ஆகற. என்னோட நண்பனை பார்க்க சர்பிரைஸா வந்துட்டேன். மச்சி உனக்கு ஒன்னு தெரியுமா? கடை திறந்து நூறாவது நாள் வரப்போகுது. துண்டு நோட்டிஸ்ல கடையில அன்னிக்கு வந்து சாப்பிடறவங்களுக்கு சலுகை தரலாம்னு பிளான். அதோட நீயும் வந்தா நல்லாயிருக்கும். அதான் அப்பாவே உன்னை நேர்ல மீட் பண்ணி சொல்ல சொன்னார்.” என்று பேச, ஹ்ருதேஷிற்கு எச்சி விழுங்க இயலாத நிலை. தொண்டையில் ஏதோ கல்லை வைத்த உணர்வு.

ஹ்ருதேஷிற்கு முகமெங்கும் வேர்த்துவிட்டது. “என்னடா… வேர்குது. பேன் ஓடலையா? இல்லை கரண்ட் கட்டா? என்ன முழிக்கற?” என்றவன் ஹாலில் ஒரு பெண்ணின் செருப்பை கண்டான். அது மிதிலாவின் புதுச்செருப்பு என்பதால் கௌசிக்கிற்கு அது யாருடையது என்று சட்டென கண்டறிய முடியவில்லை.

    கௌசிக் ஹ்ருதேஷ் முகம் ஏதோ உணர்த்த, ஹாலை கவனித்தான்.
   அங்கே செர்ரி நிறத்தில் துப்பட்டா இருந்தது.

  ஏற்கனவே ஹ்ருதேஷ் ஒரு பெண்ணை விரும்புகின்றானா? என்ற சந்தேகம் வலுக்க, “மச்சி யாரையாவது விரும்பறியா? அந்த பொண்ணு கூடயிருக்கா?” என்று கேட்டான்.

  ஹ்ருதேஷ் தலை கவிழ்ந்து குற்றவுணர்வில் நின்றான். அவனால் என்ன பேச முடியும்?

ஆனால் அவன் மௌனத்தை தாண்டி, “ஹ்ருத்… என் பிரஷ் சாப்ட்னஸ் போயிடுச்சு. உன்னோடதை எடுத்து யூஸ் பண்ணறேன்டா” என்ற மிதிலா குரலில், கௌசிக் உறைந்து நின்றான்.‌

  ஹ்ருதேஷ் தலையிலடித்து திரும்ப, மிதிலா வாயில் நுரையுடன் வந்து ஹாலில் வர, கையில் அவளுக்காக அன்னை தந்த புது உடை, உணவுகள் கொண்ட லக்கேஜை கீழே தவறவிட்டான்.

  தங்கையையும் ஹ்ருதேஷையும் பார்த்தவனுக்கு இதயம் நின்று துடித்தது. நண்பன் ஹ்ருதேஷின் சட்டையை அல்லவா தங்கை மிதிலா அணிந்திருந்தாள்.
  ஹ்ருதேஷ் ஸ்லீவ்லெஸ் பனியன் அணிந்து தலை கவிழ, அவனை பிடித்து தள்ளி விட்டு, “எப்படிடா மனசு வந்துச்சு. இந்த அசிங்கத்தை பண்ண? எனக்கு தங்கச்சின்னா உனக்கும் தங்கச்சி தானே? அவளோட பேஷன் ஷோவுக்கு உதவ வந்து, அவளை கைக்குள்ள போட்டுக்கிட்டே, இப்ப.. இப்ப.. உன் சட்டையை போட்டுட்டு நிற்க வச்சியிருக்க? எ..என்..என்னடா நடக்குது இங்க?” என்று ஆக்ரோஷமாக கத்தினான்.‌ ஒவ்வொரு வார்த்தை பேசும் போதும் ஹ்ருதேஷை அடிக்கவும் குத்தவும் செய்தான்‌.
 
  “கௌசிக் நான் சொல்லறதை கேளுடா” என்று ஹ்ருதேஷ் அடிவாங்கியபடி உரைத்தான்.

  மிதிலாவோ அண்ணனை இங்கே எதிர்பார்க்காததால், “அண்ணா… நானும் ஹ்ருதேஷேம் லவ் பண்ணறோம்.” என்று கூறி முடித்து அண்ணனை ஹ்ருதேஷிடமிருந்து தடுக்க ஆரம்பித்தாள். 

  “என்னடி… லவ்வு… பேஷன் ஷோல தொட்டு தொட்டு பேசி ஆரம்பிச்சதா?” என்று நண்பனை ஓங்கி கன்னத்தில் குத்துவிட்டான்.

தங்கை புறம் திரும்பி, “இதென்னடி அசிங்கம். அவன் சட்டையை போட்டுட்டு திரியற? அவன் வீட்ல அவன் ரூம்ல அவன் பாத்ரூம்ல இருந்து, அவன் டூத்பிரஸ்ல பல்லை விளக்கிட்டு…. சீ தூ” என்று காரி மிதிலா முகத்தில் உமிழ்ந்து, “அவன் கூடவே படுத்துட்டியா” என்று பேச ஹ்ருதேஷ் “கௌசிக்.” என்று ஹ்ருதேஷ் கையை பிடிக்க, மிதிலாவோ முகம் பொத்தி அழுதாள்.

இளமையின் வேகம், காதல் பறவைகளுக்கு தங்களுக்குள் நடந்த கலவிகள் எல்லாம், இனிதான உறவாகவே எடுத்துக் கொண்டார்கள். இதுல என்னயிருக்கு… அவன் தான் என் காதலன், கணவனும் அவனே, என் பெண்மையை அவனிடம் தர்றதுல என்ன இழப்பு வந்துடப்போகுது. அதனால ஹ்ருதேஷை தேடி வந்தது, அவன் அறையில் தங்கியது, அவனுடன் ஒன்றாக கணவன் மனைவி போல தாம்பத்திய சுகம் நாடியது எதுவுமா தவறாக இல்லாமல், இதெல்லாம் காதலர்களுக்கான சரியான புரிதலில் சரியானது’ என்ற எண்ணத்திலிருந்தவளுக்கு, கௌசிக் கேட்ட சொற்கள் காதை மூடி அழுதாள்.
 
  “உன்னை படிக்க அனுப்பினா, நீ இவன் கூட படுக்க வந்துட்ட? உன்னை சொல்லக் கூடாதுடி. நண்பன் நண்பன்னு இருந்துட்டு, தங்கச்சியா பார்ப்பான்னு நினைச்சா, உன்னை தாரமா பார்த்து வச்சி, விளையாடியிருக்கான்.” என்று கௌசிக்கை வசை மொழியால் தூற்ற, “அவ என்னை பிளஸ் டூ படிக்கறப்பவே விரும்பி லவ் லெட்டர் தந்தாடா. நான் அப்ப நோ சொல்லி அட்வைஸ் பண்ணி திட்டினேன். மிதிலா அன்னையிலயிருந்து இன்னைக்கு வரை என்னை விரும்பறா என்றதும் தான், நானும் லவ் பண்ணினேன். மிதிலா படிப்பு முடிய சொல்லலாம்னு இருந்தேன் கௌசிக்.” என்று ஹ்ருதேஷ் விளக்க முயன்றான்.

“அதெப்படி டா.. என் தங்கச்சி லவ் பண்ணினா, நீ என்னிடம் சொல்லியிருந்தா நானே அன்னிக்கு நாலு செருப்படி தந்து அண்ணானு கூப்பிட வச்சியிருப்பேன். அப்பலாம் கமுக்கமா இருந்துட்டு, இங்க நீயும் அவளும், ஒரே வீட்ல குடும்பம் நடத்தறிங்க?

   அன்னைக்கே சந்தேகமாச்சு… பேஷன் ஷோல ஒட்டி ஒட்டி உரசி சட்டை பட்டன் போட்டு விடறது என்ன? காலரை சரிப்படுத்தறது என்ன? போட்டோ.. மயிறு போட்டோ எல்லாம் எடுத்தாலே… அதை என்னை வேற ப்ரேம் போட்டு மாமா வேலையை பார்க்க வச்சிட்டா” என்று அங்கே தொங்கியிருந்த போட்டோவை எடுத்து தரையில் உடைத்து, காலால் உடைத்தான்.

  “நண்பன் நண்பன்னு சொல்லிட்டு திரியறவன் ஒருநாளைக்கு தங்கச்சிக்கு ரூட் விடுவான்னு சொல்வாங்க. அதை செய்துட்டியே.. நாயே.. எனக்கு துரோகம் பண்ணிட்டியேடா” என்று ஹ்ருதேஷை உதைக்க, மிதிலா விசுக்கென நிமிர்ந்து, கௌசிக்கை தள்ளி விட்டாள்.

“இங்க பாரு… பிளஸ் டூ படிக்கறப்ப லவ் லெட்டரை கொண்டு வந்து இவரிடம் நீட்டியது நான் தான். அவர் அப்பவே கிழிச்சி குப்பையில போட்டு, என்னை திட்டி விட்டுட்டார். நான் தான் அவரை மறக்க முடியாம ஊருக்கு வர்றப்ப எல்லாம் இவரிடம் என்னை காதலிக்க சொல்லி குடைச்சல் தருவேன். அவர் உன்னிடம் சொல்லவும் முடியாம, என்னை அவாய்ட் பண்ணவும் முடியாம தவிச்சார்.

கடைசியா பொங்கல் அன்னிக்கு தான் என் காதலை ஏற்றுக்கிட்டார். நீயா துரோகம் அதுயிதுனு அவரை திட்டாத. அவரை அடிக்காத…

என்னை அடி…
நான் தான் இவரை விடாம துரத்தி, இங்க வரை வந்தது. நானா தான் இவர் வீட்டுக்கு வந்து இவரோட ஒட்டி உரசியதே தவிர, இவர் இல்லை. சும்மா துரோகம்னு பேசாத. நீ என் பிரெண்டை சைட் அடிச்சதில்லை. அதெல்லாம் டைம் பாஸுக்கு. நான் இவரை உண்மையா நேசிக்கறேன். கால் முழுக்க இவரோட டிராவல் பண்ண.” என்று அண்ணனை எதிர்த்து பேசினாள்.

“ஓ.. அவன் படுக்க கூப்பிட்டதும், சம்மதிச்சிட்ட? நீ நம்ம அப்பா அம்மாவுக்கு தான் பிறந்தியாடி?” என்று கொத்தாக முடியை பிடிக்க, “கௌசிக்.. ப்ளிஸ் அவளை விடு. அப்படி பேசாத.. அவ சின்ன பொண்ணு. நான் தான்.. அவளிடம் வரம்பு மீறி பழகிட்டேன்.” என்று மன்னிப்பு வேண்டினான் ஹ்ருதேஷ்.

  “என்ன மயிறுக்கு வரம்பு மீறின? நீ என்ன நேக்கா பெங்களூர் வேலையை தேர்ந்தெடுத்திருக்க, சின்ன பொண்ணு.. பிளஸ் டூ படிக்கறப்பவே லவ் லெட்டர் தந்தா. இப்ப கொஞ்சி குலாவினா படுக்கயறை வரை வந்துடுவானு திட்டம் போட்டு இங்க வேலையை பார்த்திருக்க. இதுல நான் அடிக்கடி வந்துடுவேன்னு எனக்கு நேக்கா அங்க பிசினஸ் பண்ண ஐடியா தந்து பணமும் தந்து, என் தங்கையை உஷார் பண்ண எனக்கே பணம் கொடுத்திருக்க. இது தெரியாம உன்னை கடைத்திறக்க வச்சி கௌரவப்படுத்தணும்னு நினைச்சேன் பாரு.. என் புத்தியை செருப்பால அடிக்கணும். செருப்பால..‌” என்று பேசவும், “கௌசிக்.. எனக்கு இங்க வேலை கிடைச்சது எதர்சையமா கிடைச்சதுடா. நானா எந்த பிளானோட மூவ்  பண்ணலை. டிரஸ்ட் மீ” என்று கௌசிக் கையை பிடிக்க வர, கையை உருவியபடி, “என்ன மயிருக்கு உன்னை நம்பணும். நம்பின வரை புத்தியை காட்டிட்டியே.. என் தங்கையை உன் ஆசைக்கு இணங்க வச்சி மயக்கி வச்சியிருக்க,” என்றான்.‌

  “அண்ணா… நாங்க உண்மையா காதலிக்கறோம்” என்று மிதிலா கூற, “உண்மையா காதலிக்கறியா? இதென்னது.. ஆங் இதென்னது? அவன் கூட நேத்து படுக்குறப்ப பல்லால கடிச்சி வச்ச உன்னதமான காதல்” என்று இகழ்ந்தான்.‌

  கழுத்தில் ஹ்ருதேஷ் பற்தடம் ‘லவ்பைட்’ என்று மிதிலாவுக்கு வெட்கம் தரும் விஷயம், இன்று அசிங்கமாக கௌசிக் கூற, அதை காலரால் மறைக்க முயன்றாள்.

  “கௌசிக்… நானும் மிதிலாவும் உண்மையா தான்டா நேசிக்கறோம். உன்னிடம் பழகறப்ப குற்றவுணர்வு வருதுன்னு கூட இவளிடம் காதலை சொல்லாம இருந்திருக்கேன். இப்ப தான் காதலிப்பதையே சொன்னேன். அதுகூட நீ என்‌ பிரெண்ட். நீ என்னை மிதிலா கணவனா ஏற்றுப்பனு நம்பினேன்டா.
  
  நான் என்ன அவ்ளோ கெட்டவனா? நான் மிதிலாவை கல்யாணம் பண்ணக்கூடாதா?” என்று கேட்க, “என்ன பூசி மொழுகினாலும்.. நீ பண்ணியது துரோகம், பச்ச துரோகம். தங்கச்சியா நினைக்க வேண்டியவளை காதலிச்சி படுக்கயறை வரை நிற்க வச்சியிருக்க… உன்னை சொல்லக்கூடாதுடா.. இவளை சொல்லணும். நீ படிச்சி கிழிச்சது போதும். கிளம்பு.. கிளம்புடி” என்று கௌசிக் மிதிலா கழுத்தை பிடித்து இழுக்க, ஹ்ருதேஷ் தடுக்க சென்றப்பின்னும், அவனை தள்ளி விட்டு மிதிலாவை இழுத்தான்.

மிதிலாவோ கௌசிக் கையை உதறி, “நீ ஒன்னும் எனக்கு ஆர்டர் போட வேண்டாம். எனக்கு என் வாழ்க்கையை எப்படி பார்த்துக்கணும்னு தெரியும். உன் வேலையை பார்த்துட்டு போ” என்றாள்.

  “ஓ… அவனோட கல்யாணமாகாமலையே படுத்து பிள்ளையை சுமக்கற வரை உனக்கு தைரியம் இருக்குல்ல? அவன் முன்ன அசிங்கப்படுத்தற. நீயே தே–விடியாத்தனம் செய்தா, இவன் ஆம்பளை உன் மடில தான் விழுந்து கிடப்பான். இரு.. வீட்ல அப்பா அம்மாவிடம் உன் வண்டவாளத்தை சொல்லறேன்” என்று வந்த வேகத்திலேயே படிகட்டில் தடதடவென நடந்தான்.

-தொடரும்.

பிரவீணா தங்கராஜ்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top