onlinetamilnovels.com Forum - Recent Topics

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-14
அத்தியாயம்-14

மதியம் சாரதி பேருந்தில் ஏறிய லாவண்யாவோ, அவனையோ விழுங்க, சாரதி அவளிருந்த பக்கம் கூட திரும்பி பார்க்கவில்லை.

ஆனால் அவள் அண்ணாநகரில் ஏறிய பொழுது கவனித்தான். பேருந்தின் கடைசி பின்னிருக்கையில் அமரவும் அந்தபக்கமே திரும்பாது தவிர்த்தான்.

லாவண்யா தான் அவனையே பார்த்து 'பார்க்கவே மாட்டேங்கறார்.‌ ரொம்ப காயப்படுத்திட்டேனோ?' என்று தவித்து தேவியிடம் கேட்டாள்.

"அம்மா தாயே... நீயும் அந்தண்ணாவும் பேசறதையே என்னால இன்னும் ஜீரணிக்க முடியலை. இதுல அவரை நீ விரும்பற மாதிரி இருக்கு. எனக்கு என்ன சொல்லறது தெரியலை.

பிராக்டிகல்லா ஒன்னு சொல்லவா? நீ டிகிரி படிச்சு முடிக்க இந்த காலேஜ்ல படிக்க வந்திருக்க. ஆனா அவர்... கண்டெக்டர். இதை நான் சொல்லலைடி... நீ தான் நேத்து... அவரை சொன்ன. ஆப்ட்ரால் கண்டெக்டர்னு குறிப்பிட்ட. இப்ப என்னடான்னா... காலையில இருந்து ஒரு மார்க்கமா யோசிக்கற.

இப்ப இப்படி பார்க்கற." என்றதும், "அவர் அதனால தான் என்னை கவனிக்காத மாதிரி நடிக்கறார்.

நான் அவரிடம் பேசணும்" என்றாள்.‌

தேவியோ "உதைப்பட போற... முதல்ல இது சரிப்பட்டு வருமானு யோசி." என்றாள்.

லாவண்யாவோ 'இதுல யோசிக்க என்னயிருக்கு. நான் அவரை கவனிச்சதுல இருந்து, நல்ல கேரக்டரா தான் தெரியறார்.' என்று மனதில் கூறிக் கொண்டாள்.

டிப்போ வரும் வரை சாரதியையே பார்வையிட, அவன் திரும்பாமல் இருந்தான். "பின்னாடி யாராவது டிக்கெட் வாங்கணும்னா கொடுத்து விடுங்க." என்று குரல் கொடுத்தான்.

"பஸ் பாஸ் இருக்கறவங்க நீங்களே டிக் பண்ணிக்கோங்கம்மா" என்று அடுத்து அதையும் தெரிவிக்க, இறக்கும் நேரம் கடைசியில் இறங்க முடிவெடுத்தாள்.

"ஏங்க.. என்னங்க" என்று லாவண்யா கூப்பிட, தேவியோ "லாவண்யா என்ன பண்ணற. பஸ்லயிருந்து எல்லாரும் இறங்கிட்டாங்க. இறங்கு" என்று கூற, "முத்து அண்ணா‌... ஸ்மோக் பண்ண போறிங்களா... எனக்கு தொண்டை கட்டியிருக்கு.. ஒரு தூதுவளை மிட்டாய் வாங்க வர்றேன்" என்று கூடவே சென்றான்.

"வேண்டுமின்னே அவாய்ட் பண்ணறார்" என்று லாவண்யா வருந்திட, "இவ வேற... வாடி" என்று லாவண்யாவை இழுத்துக் கொண்டுச் சென்றாள்.

லாவண்யா சோகமாய் வரவும், "உங்க வீட்ல துப்பட்டா இல்லாத சுடிதாரே வாங்க மாட்டாங்க. அப்படி துப்பட்டா போடாம ஆம்பள எதிர வந்தா, உங்கம்மா அதுக்கே அடி வெளுத்துடுவாங்கனு சொல்வ. காதலிக்கறதுக்கு மட்டும் திட்ட மாட்டாங்களா? ஒரு தடவைக்கு இரண்டு தடவை யோசி." என்று தேவி அவள் வீட்டிற்கு சென்றிட, லாவண்யா வீட்டிற்கு வந்தப்பொழுது தாத்தா ஆவுடையப்பன், டிவியை பார்த்தபடி இருந்தார்.

இஷிதா இன்னமும் பள்ளியிலிருந்து வர தாமதமாகும். இலக்கியாவோ நாளை சமையலுக்கு என்று, முருங்கை கீரையை ஆய்ந்துக் கொண்டிருந்தார்.

லாவண்யா வந்ததும் டிபன் பாக்ஸை கிச்சனில் கழுவி வைத்து விட்டு, முகமலம்பினாள்.

நைட்டியை மாற்ற நினைத்தவள், ஏதோ தோன்றவும், அப்படியே சுடிதாரே இருக்கட்டுமென வெளிவந்தாள்.

"நான் கீரையை ஆயட்டுமா சித்தி" என்று கேட்க, "முடிஞ்சுதும்மா." என்று எந்திரித்தாள்.

பெரும்பாலும் லாவண்யா அவளது உடையை காலையிலேயே துவைத்து விடுவாள். இலக்கியாவுக்கு உதவியாக சமையலில் காய்கறி நறுக்கி தந்து, உதவுவாள். பாத்திரம் கழுவுவாள்.

வீட்டை பெருக்கி கூட்டி, இஷிதாவுக்கு தலைவாறி என்று இலக்கியாவுக்கு பாதி வேலையை குறைத்து விட்டிருந்தாள்.

கல்லூரியிலிருந்து வந்ததும், மாடியில் தேவியோடு பேசியபடி துணியையும் மடித்து வைத்திடுவாள். அத்துடன் லாவண்யா வந்ததிலிருந்து, இஷிதாவும் அவளோடு உறங்குவதால், இலக்கியா சுரேஷுற்கும் தனிமை கிடைக்கின்றது என்று‌கூட சொல்லலாம்.

லாவண்யா ஏதேதோ யோசிக்க தேவி வந்து நின்றாள்.

"சித்தி மாடில துணி எடுத்துட்டு மடிச்சிட்டு வந்துடறேன்." என்று இருவரும் சென்றார்கள்.

இலக்கியாவோ "ஏன்டி.. காலையிலருந்து இப்பவரை சேர்ந்து பேசிட்டு திரியறிங்க. அப்படி என்ன தான் பேசுவிங்க" என்று சலித்திட தேவியோ "பிரெண்ட்ஸ்னா ஆயிரம் இருக்கும். பேசவா கன்டென்டுக்கு பஞ்சம்." என்று சிரித்து மாடிக்கு நடந்தார்கள்.

"முடிவு பண்ணிட்டேன் தேவி." என்றாள். தேவியோ "என்னனு." என்று குழம்ப, "பார்க் போகலாமா? நான் அவரிடம் பேசணும்." என்று துணைக்கு அழைத்தாள்.

தேவியோ "விளையாடறியா?" என்று கேட்டு மறுக்க, "ப்ளீஸ் ஒரே ஒரு‌முறை‌ நான் அவரிடம் சாரி மட்டுமாவது கேட்டுடறேன்." என்றாள்.

"உன் சாரியை டிப்போல பஸ் ஏறுறப்ப சொல்லு. 'அண்ணா அண்ணா.. நான் அன்னிக்கு 'ஆப்ட்ரால் கண்டெக்டர்'னு பேசிட்டேன்.‌ அதை மனசுல வச்சிக்காதிங்கனு சொல்லு. சொல்லணும்னு கூட அவசியமில்லை.... நீ பாட்டுக்கு பஸ்ல ஏறினமா படிக்க வந்தம்மானு இரு." என்று கூற, லாவண்யாவோ "நான் சாரதியை அண்ணானு எல்லாம் சொல்ல மாட்டேன். நான் அவரை அண்ணாவா பார்க்கலை" என்றாள் தலைகுனிந்து.

தேவியோ லாவண்யாவின் கண் கலங்க நின்ற கோலத்தை கவனித்து "அண்ணாவா பார்க்கலையா... ஜோலி முடிஞ்சுது... வந்து தொலையறேன். உங்க சித்தியிடம் பார்க் போயிட்டு வர்றேன்னு சொல்லு" என்றாள்‌.

லாவண்யா தலையாட்டி நடக்க, "இ...இஷிதாவை அனுப்புவாங்களே" என்று தேவி லாவண்யாவிடம் கேட்க, "அவளுக்கு டெஸ்ட் இருக்கு. சித்தி தமிழ் சொல்லி கொடுக்கறப்ப இரண்டடி போடுவாங்க. நான் தடுப்பேன். அதனால படிக்கறப்ப நான் அவளுக்கு சப்போர்ட் பண்ணிட கூடாதுனு சொல்லிட்டு கிளம்பலாம்" என்றாள் லாவண்யா.

'காதலிச்சா பொய் பேசுவாங்கனு சொல்வாங்க. இப்ப தான் பார்த்துட்டு இருக்கேன்.' என்று முனங்கி தேவி நடக்க, லாவண்யாவோ ''சித்தி இஷிதாவுக்கு தமிழ் சொல்லி தரப்போறிங்களா? எனக்கு எக்ஸாம் முடிந்ததால தேவியோட பார்க் மட்டும் போய் நடந்துட்டு வர்றோம்" என்றாள்.

''ஏன்டி தேவி.. உங்க அக்கா தானே ஜிம்முக்கு போறா... நீ என்ன பார்க்குல நடக்குற. நீயும் ஜிம்ல சேர்ந்துக்க வேண்டியது தானே?" என்றார் இலக்கியா.

"அவ வேலைக்கு போய் பணம் வச்சிருக்கா ஆன்ட்டி. எனக்கு அப்படியா. அதுவும் இல்லாம கதையடிக்க போறேன். நான் ஏன் உடம்பை குறைக்கணும். அவ குறைக்கணும்னா அது அவ தலையெழுத்து" என்றாள்.

தேவி லாவண்யா பார்க் போவதாக சொல்லவும், இஷிதாவோ தமிழ் புத்தகத்தை வைத்து பாவமாக பார்த்து வைத்தாள்.

லாவண்யா தேவி இருவருமே பார்க்கிற்கு செல்லாமல் வெளியே உள்ள இடத்தில் நின்றியிருந்தனர்.

"இப்படி தேவையில்லாம இந்த ரோட்ல நிற்பேன்னு கனவுல கூட நினைக்கல" என்று தேவி போவோர் வருவோரை வேடிக்கை பார்த்தாள்.

"இந்த நேரம் தானே டூயூட்டி முடிஞ்சு அவர் போவாரு? ஏன் இன்னும் காணோம்'' என்று லாவண்யா தேவியிடம் கேட்க, "அந்தண்ணா எப்ப போகும் வரும்னு நான் எங்கடி தெரிந்து வச்சிருந்தேன். ஏதோ பேசறப்ப கவனிச்சேன் சொன்னேன்." என்றாள்.

தேவியிடம் எது பேசினாலும் அலுத்துக் கொள்வதை லாவண்யாவுக்கு புரிந்தது.

தான் தவறான பாதையில் செல்கின்றோமோ? அதனால் கோபப்படுகின்றாளா? என்று கூட கேட்டாள்.

"ஆங்." என்று முறைத்துக் கொண்டிருக்க, "அவர் வர்றார்." என்று சாலையில் பார்த்தாள்.

சாரதி பைக்கில் தான் வந்துக் கொண்டிருந்தான்.

தேவி லாவண்யாவை கண்டதும், மெதுவாக வண்டியை விடுத்தான். லாவண்யா ஏதோ பேச வருவது போல தயங்க, சாரதி நிற்காமல் சென்றான்.

ஏதேனும் நின்று அவளிடம் கேட்டு, அவள் தங்கை அங்கே விளையாடியபடி இருந்தாள். இந்த அவமானம் உனக்கு தேவையா?' என்று மனசாட்சியே கேட்குமென அவளை தாண்டி வண்டியை இயக்கி சென்றான்.

தேவியோ ''அப்பாடி அவர் போயிட்டார். நீ இங்க நிற்கவும் அவரும் எப்படி இங்க நின்று உன்னிடம் பேச வருவார்.

நீ அவரை தான் பார்க்க வந்தேன்னு கூட அவருக்கு தெரியாது. இதுக்கு தான் சொன்னேன். பஸ் ஏறுறப்ப சாரி சொல்லி பேசிடுனு." என்று கூற லாவண்யாவோ தலைகுனிந்து வாடினாள்.

உண்மை தானே.. நானாக அவரிடம் பேச வந்ததை அவருக்கு எப்படி தெரியும்? என்று கலக்கத்துடன் ஒரெட்டு முன்னே வைக்கும் நேரம் சாரதியின் பைக் மீண்டும் யூடர்ன் போட்டு திரும்புவதை தேவி கவனித்தாள்.

லாவண்யாவின் புஜத்தை சுரண்டி, சாரதியை சுட்டிக் காட்டினாள்.

சாரதி லாவண்யாவை கண்டு பூங்காவினுள் செல்ல வண்டியை நிறுத்தினான். லாக் போடப்பட்டுள்ளதா என்று நன்றாக சரிப்பார்த்துக் கொண்டு, பூங்காவுக்குள் நுழைந்தான்.

பைக் நிறுத்தியதற்கு நேராக உள்ள சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து பைக்கை பார்த்து லாவண்யாவையும் கவனித்தான்.

லாவண்யா ''அவருக்கு நான் அவரிடம் பேச வந்திருக்கேன்னு புரிந்துடுச்சு" என்று தேவியை அழைத்து பூங்காவினுள் வந்தாள்.

தேவிக்கும் ஆச்சர்யம் தான்‌. இந்த அண்ணா வந்து நிற்கின்றாரென.

லாவண்யா தேவி இருவரும் சாரதிக்கு நேர் எதிரில் உள்ள சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்கள்.

லாவண்யா அவனை ஏறிட்டு, ''சாரி... ஆப்ட்ரால் கண்டெக்டர்னு உங்களை சொன்னது தப்பு தான். நீங்க டிரைவர் பிரேக் போட்டு என்‌ மேல விழுந்த அன்னிலயிருந்து தான், இந்த மாதிரி அந்த எருமை மாடு என்‌ முதுகு தோளை உரசியிருக்கான். என் இடுப்புல கையை வச்சியிருக்கான். நீங்க  அன்னிக்கு ஈவினிங்கே சில்லரையை என்‌ டிரஸ்குள்ள போட்டதும், தப்பா புரிஞ்சு நடந்த எல்லா தப்பும் நீங்களே செய்திருப்பிங்களோனு உங்களை யோசிக்காம திட்டிட்டேன்.

அடுத்து அவன் தான் தட்டினான்னு புரியவும், அவனை கண்டிச்சு  கத்திட்டேன். என்னயிருந்தாலும், கோபத்துல ஆப்ட்ரால் கண்டெக்டர்னு திட்டியது ரொம்ப தப்பு. ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுங்க." என்றாள்.‌

"மன்னிச்சு... என்ன செய்ய என் மனகாயம் ஆறுமா?" என்று கேட்டவன், லாவண்யா கண்கள் கலங்கவும், அதை கண்டு, "சரி... மன்னிச்சிட்டேன் போதுமா. நான் போறேன்" என்று வெடுக்கென எழுந்தான்.

"சாரி கேட்க மட்டும் வரலை" என்று கூற சாரதி கால்கள் அடுத்த அடி நடக்காமல் அசையாது நின்றது. "நா...நா..நான்... உங்களை விரும்பறேன். அதை தெரியப்படுத்தவும் வந்தேன்." என்று கூறினாள். அந்த நேரம் பூங்காவில் உள்ள செக்கியூரிட்டியின் விசில் சத்தம் கேட்டது.

பெரும்பாலான திறந்தவெளி பூங்கா மற்றும் மாநகராட்சி பூங்காவின் மூடப்படும் நேரம் எட்டு அல்லது ஒன்பது மணி கூட இருக்கும்.

விதிவிலக்காக பூங்காவில் மிகக் குறைவான விளக்கு வசதிகள் இருந்தால், பாதுகாப்பு கருதி ஏழு மணிக்கு பூங்கா சீக்கிரம் மூடலாம். அல்லது சில குறிப்பிட்ட அசோசியேட் விதிமுறையின் அமைதிக்காகவும் சீக்கிரம் மூட முடிவு செய்திருப்பார்கள்.

இங்கே இந்த பார்க் குறைவான மின்விளக்கு வசதியால் ஏழுமணிக்கு மூடப்படவும், மக்களும் குழந்தைகளும் வெளியேறினார்கள்

சாரதி லாவண்யாவை கண்டு, "லூசுத்தனமா யோசிக்காம பேசாத. தப்பா நினைச்சிட்டோமேனு நீ மன்னிப்பு கேட்கறது ஓகே.. அதுக்காக காதலிக்கறேன்னு சட்டுனு சொல்லாத. போய் ஆகற வேலையை பாரு.

நீ சொன்னது தப்பாவே இருந்தாலும்... நிஜம்‌.. நான் ஒரு ஆப்ட்ரால் கண்டெக்டர் தான். படிக்க வந்த இடத்துல படிக்கற வழியை பாரு.

தங்கச்சி.... லாவண்யாவுக்கு புரியவையுங்க.. கிளம்புங்க" என்று தேவியிடமும் கடைசியாக கூறி சென்றான்.‌

பைக்கில் சாவியை போட்டு திருகி அவன் ஒரு புறம் செல்ல, லாவண்யாவோ, கண்ணீரை உகுத்தினாள். அதை யாரும் காணாத வகையில் துடைத்துக் கொண்டாள்.

தேவியோ சாரதியையும் லாவண்யாவையும் மாறி மாறி பார்த்து அமைதியாக நடந்தாள்.

லவாண்யா சித்தி வீடு வரவும், தேவியோ "லாவண்யா... எதை பத்தியும் யோசிக்காத. இனனிக்கு தானே காதலை சொல்லிருக்க, அவகாசம் கொடு. அதுவரை காத்திரு." என்று கூறினாள்.

லாவண்யாவோ மனபாரத்துடன் சரியென தலையாட்டினாள்.

சாரதியோ வீட்டுக்கு வந்து பைக்கிற்கு கவரை போட்டுவிட்டு, அன்னை தந்த டீயை பருகினான்.

சாரதி இதயத்தில் அந்த டீயின் சுவை இதமாக தான் இருந்தது. லாவண்யா இவனை நேசிப்பதை அவளாக கூறியதை கேட்டு தடுமாறினாலும், ஒரு பெண் அவளாக வந்து, இரண்டு முறை சூழ்நிலை தவறாக சித்தரித்து இருந்தாலும், காதலிப்பதாக இவனிடமே கூறியிருக்கின்றாள் என்றால் அவனுக்கு இதமாக இருக்காதா? ஆனால் அவனுக்குள்ளும் தான் கண்டெக்டர், அந்த பொண்ணு அண்ணாநகர் கல்லூரியில் படிக்கின்றாள் என்றதே முரணாக தெரிந்தது.

அதனால் தொலைக்காட்சியில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்த அன்னை மடியில் வந்து படுத்துக் கொண்டான்.

சாரதி இப்படி அன்னை மடியில் படுப்பது வழக்கமென்பதால் அவன் சுருட்டை முடியை கோதி டிவியை பார்த்தார் காஞ்சனா.

அன்னையிடம் லாவண்யாவை பற்றி கூறலாமா என்று மனதில் தேன்றியது. நானே அவளோட காதலை ஏற்கலை. பிறகு

ஏன்‌ அம்மாவிடம் சொல்லணும். எதுவும் தெரியாம போகட்டும்' என்று முடிவெடுத்தான்.‌

-தொடரும்.

-பிரவீணா தங்கராஜ்.

மஞ்சள் பூசணிக்காய் மசியல்
மஞ்சள் பூசணிக்காய் மசியல் செய்ய தேவையானவை:

மஞ்சள் பூசணிக்காய் – கால் கிலோ

சின்ன வெங்காயம்- ஒரு கை அளவு

பச்சை மிளகாய் – 2

பூண்டு – 3 பல்

மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க எண்ணெய் – 1½ டேபிள்ஸ்பூன்

கடுகு – ½ டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு – ½ டீஸ்பூன்

சீரகம் – ½ டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2

கறிவேப்பிலை – சிறிது

பூசணிக்காயை தோல், விதை நீக்கி துண்டுகளாக நறுக்கவும்.

பாத்திரத்தில் பூசணிக்காய் வெட்டி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் கடுகு உளுந்து, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.

பூசணிக்காய் நன்றாக குழையும் வரை வேகவிடவும்.

வெந்ததும் கரண்டியால் நன்றாக மசியல் பதத்திற்கு மசிக்கவும். முழுவதுமாக மசிக்க செய்ய வேண்டாம்; கொஞ்சம் துண்டுகள் இருந்தால் சுவையாக இருக்கும்.

சிலருக்கு மொத்தமாய் மசிக்க விரும்புவார்கள்.

தேங்காய்த் துருவல் சேர்த்தால் அருமையாக இருக்கும் சீரகய் கொத்தமல்வி தூவி அலங்கரித்து கொள்ளலாம்.

சூடான சாதத்துடன் நெய் சேர்த்து, மஞ்சள் பூசணிக்காய் மசியலுடன் அப்பளம் சேர்த்து சுவைத்தால் நன்றாக இருக்கும்.

20260801_104922.jpg

குடல் குழம்பு
நான் எல்லாம் நான்வெஜ் சொய்வேன்னு கனவுலையும் நினைச்சதில்லை. ஆனா பாருங்க... இப்ப எல்லாம் செய்துடறேன். கிரிடிட் டூ குட்டி வாலு. சரி வாங்க செய்முறை பார்ப்போம்.

குடல் குழம்பு செய்ய தேவையானவை:

ஆட்டுக்குடல் – ½ கிலோ

சின்ன வெங்காயம் – 200 கிராம்

தக்காளி – 2

இஞ்சி பூண்டு விழுது – 1½ டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

கறிவேப்பிலை – 1 கொத்து

மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – 1½ டீஸ்பூன்

தனியாத்தூள் – 2 டீஸ்பூன்

சீரகத்தூள் – ½ டீஸ்பூன்

கரம் மசாலா – ½ டீஸ்பூன்

உப்பு – தேவைக்கு

எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்

அரைக்க:

தேங்காய் – ½ கப்

சோம்பு – 1 டீஸ்பூன்

மிளகு – ½ டீஸ்பூன்

குடலை கடைக்காரர்களே இப்ப எல்லாம் நன்றாக கட் செய்து சின்னதாக வெட்டி தர்றாங்க. நாம அதை நுட்பமாக சுத்தம் செய்யணும். முடிந்தா கொஞ்சம் சுடத்தண்ணீரில் காலிபிளவர் போட்டு வேக விட்டு எடுக்கற மாதிரி பத்து நிமிஷத்துல எடுத்தா, மிக நன்றாக சுத்தமாக கழுவிடலாம்.

அதுல மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கழுவிக் கொண்டு

பிரஷர் குக்கரில் குடலை, சிறிது மஞ்சள் தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து 5அல்லது6 விசில் வேகவைக்கணும். நல்லா வெந்தால் தான் சாப்பிட சாப்டா இருக்கும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, கறிவேப்பிலை போடணும்.

சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கணும்.

இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கணும்.

தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கிட்டு

மஞ்சள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள் ஒன் பை ஒன்னா சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளணும்.

வேகவைத்த குடலை அதில் சேர்த்து நன்றாகக் கிளறணும்.

அரைத்த தேங்காய் சோம்பு மிளகு விழுது இருக்கும்ல, அதையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி

மூடி வைச்சி, 10–15 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

கடைசியில் கரம் மசாலா தூவி 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கிடணும்

அவ்வளவு தான்.

சிறப்பு டிப்ஸ்: குடல் குழம்புக்கு சின்ன வெங்காயம் கொஞ்சம் அதிகமாகவும், மிளகு-சோம்பு சேர்த்தும் செய்தால் நல்ல வாசனையும் சுவையும் வரும்.

சூடான சாதத்திற்கு குடல் குழம்பு நல்லா இருக்கும்.

அதோட இட்லி சப்பாத்திக்கும் செமையா இருக்கும்.

20260909_115744.jpg

ஹைக்கூ -இயற்கை
மௌனமாய் பூத்தது

வார்த்தைகள் இல்லாமல்

காதல்.

மழை நின்ற பின்னும்

ஜன்னல் கம்பியில்

ஒருதுளி.

நிலவு மறைந்தது

விடியலைத் தேடி

சூரியன்.

உதிர்ந்த இலைக்கும்

மரத்தை விட்டுப் போகவில்லை

சருகுகள்.

-பிரவீணா

நீர் பருகு
தண்ணீர் என்பது இந்த உலகத்தில் அதிகம் உள்ள ஒன்று. அதே போல நம் உடலிலும் அதிகமாக தேவைப்படுவதும் தண்ணீர் தான்.

தினமும் தண்ணீர் குடிப்பதை மறக்ககூடாது.

நம் உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு தண்ணீர் ம்டடுமே மிகவும் அவசியம். தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல், நாள் முழுவதும் சிறிது சிறிதாக ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை, தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

*காலை எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். அது மிகவும் முக்கியம். வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது உடலை சுத்தப்படுத்தும்.

*வேலை செய்யும்போதும் இடையிடையே தண்ணீர் குடிக்க வேண்டும். பள்ளி குழந்தைகளும் ஒவ்வொரு வகுப்பு முடியவும் தவறாது நீரை பருக வேண்டும்.

*அதிக வெயில் அல்லது உடற்பயிற்சி இருக்கும் நாட்களில் திரவத் தேவையை கவனித்து அதற்கேற்றவாறு நீரை பருக வேண்டும்.

* அதிக சர்க்கரை உள்ள குளிர்பானங்களுக்கு பதிலாக தண்ணீர் அல்லது சர்க்கரை சேர்க்காத பானங்களைத் தேர்வு செய்வதும் தண்ணீரை பருகுவதற்கு சமம்.

சிறிய பழக்கம் என்றாலும், உடலுக்கு பெரிய பயன் என்பார்கள்.

எந்த உணவும் அதிக காய்கறியும் வீட்டில் இல்லாத சித்தாள் பணி செய்யும் மனிதர்கள் ஆரோக்கியமாக உடல்வலுவுடன் கற்களை சுமப்பது, தண்ணீரை அதிகம் பருகும் காரணம் மட்டுமே.

அதனால் நீரின்றி அமையாது உலகு மட்டுமில்லை. நம் உடலும்.

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-13
அத்தியாயம்-13

அடுத்த நாள் பேருந்துக்குள் மயான அமைதி என்பார்களே அப்படித்தான் இருந்தது.

பேருந்தில் லாவண்யா, தேவி, சாரதி மூவரும் இருந்தும், வழக்கமாக அவர்களுக்குள் இருக்கும் சின்னச் சின்ன பார்வைகளோ, புன்னகைகளோ, சாரதியின் விசில் சத்தத்தோடு கலந்த விளையாட்டுத்தனமோ எதுவுமே இல்லை.

சாரதியின் முகத்தில் குதூகலமோ, புன்னகையோ, சந்தோஷமோ எதுவும் இல்லை.

மாறாக... அவனது முகத்தில் நேற்று நடந்தவற்றின் வேதனை மட்டும் அப்பட்டமாகத் தெரிந்தது.

அவன் பயணிகளிடம் டிக்கெட் வாங்கி, இயந்திரமாக டிக்கெட்டைக் கிழித்து கொடுத்துக் கொண்டிருந்தான்.

"ஸ்கூல் பசங்க கொஞ்சம் உள்ளே போங்க... காலேஜ் பசங்க படியில நிக்காதீங்க..." என்று வழக்கம்போல் பயணிகளைக் கவனித்துக் கொண்டிருந்தாலும், அவனது குரலில் கூட முன்பிருந்த உற்சாகம் இல்லை.

ஒவ்வொரு நிறுத்தத்திலும் விசில் அடித்தபடி முன்னும் பின்னுமாகச் சென்று கொண்டிருந்தான்.

லாவண்யாவும் தேவியும் அருகருகே நின்று கொண்டிருந்தனர். அன்று லாவண்யாவுக்கு உட்கார இடமும் கிடைக்கவில்லை.

சாரதி அவளைக் கடந்து செல்லும் நேரத்தில், அவள் செவிகளை மூடிக் கொள்வாள் என்பது அவனுக்குத் தெரியும்.

எப்போதும் அவளுக்கு அருகில் வந்து விசில் கருவியால் விசிலை அடித்தால் அப்படி தான். அதிலும் கடைசியாக ஒருமுறை "அறிவில்லை..." என்று முறைத்துப் பார்த்திருக்க, அதனால் இந்த முறை அவளைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று நினைத்தவன், விசிலை வாயில் வைக்காமல், வலது கையின் விரல்களை உதட்டில் குவித்து விசில் சத்தம் எழுப்பினான்.

ஆனால் அந்த நேரத்தில் யாரோ தன்னுடைய பின்பக்கத்தில் தட்டியது போல லாவண்யா உணர்ந்தாள். அவள் சட்டென்று திரும்பினாள்.

அங்கே சாரதிதான் நின்றிருந்தான். "எ.. என்னாச்சு?" என்று மனம் கேளாமல் சாரதி புரியாமல் கேட்டான். லாவண்யா பதில் சொல்லவில்லை. அவள் இமை மூடியபடி அப்படியே நின்றாள்.

அவளது மனதில் நேற்று நடந்த சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஓடின.

அவளைத் தீண்டிய கை, வலது கை. அதே நேரத்தில் சாரதி விசில் சத்தம் எழுப்பப் பயன்படுத்தியதும் வலது கை. அப்படியென்றால் சாரதி தன்னை இவ்வாறு செய்யவில்லை என்பது நூறு சதம் உறுதியானது.

அவளுடைய பார்வை சட்டென்று பேருந்தில் இருந்த ஆண்களை நோக்கிச் சென்றது.

அப்போது அவளது நினைவுக்கு வந்தது. சில நாட்களுக்கு முன்பு பேருந்து ஏறியதும், தன்னிடம் காதலைச் சொல்லி ஒரு கடிதம் கொடுத்தவன்.

அந்தக் கடிதத்தைத் தன்னிடம் இருந்து தேவி வாங்கிப் படித்துவிட்டு கிழித்துப் போட்டிருந்தாள்.

அந்தப் பையன்... பேருந்தில் தன்னைத் தாண்டி வரும்போதெல்லாம் பார்த்திருக்கின்றாள்.

ஒருமுறை ஒரு பெண்ணின் உடலைப் பார்த்துக் கொண்டு, "குண்டு... குண்டு..." என்று கேலி செய்தவனும் அவன்தான்.

லாவண்யாவின் கண்கள் கோபத்தில் சிவந்தன. "இடியட்..."
என்று பற்களைக் கடித்தவள், தேவியை நோக்கி திரும்பினாள்.

"தேவி.." என்று கூப்பிட,

"என்னடி?"

"பஸ்ல இத்தனை நாளா என்னை இடுப்புல தொட்டது... முதுகுல உரசியது... சாரதி இல்லை." என்றாள். தேவி அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

"அப்ப யாரு?"

"அந்த லெட்டர் தந்த எருமை." சாரதி அந்தப் பேச்சைக் கேட்டுவிட்டான். அவன் சட்டென்று திரும்பிப் பார்த்தான்.

அவனுடைய முகத்தில் முதலில் குழப்பம். பிறகு.. அனைத்தும் புரிந்தது.

"அந்தப் பையனா?" தேவியின் பார்வை உடனே அந்த இளைஞனைத் தேடியது.

அவன் தான் சில நாட்களாக லாவண்யா தன்னை ஏன் வெறுப்புடன் பார்த்தாள் என்பதற்கான விடை இப்போது சாரதிக்கு கிடைத்துவிட்டது.

தான் செய்யாத குற்றத்திற்காக... இத்தனை நாட்களாக அவள் தன்னை குற்றவாளியாக நினைத்திருக்கிறாள்.

அவனது மனம் ஒரு நொடி வலித்தது.

அவளை அத்துமீறி தொந்தரவு செய்தவன் மீது கோபமும் வந்தது. "திருமங்கலம்... இ.பி. ஆபீஸ் இறங்குங்க..." என்று அடுத்த நிறுத்தத்தை அறிவித்தபடி அவன் தன்னுடைய வேலையைத் தொடர்ந்தான்.

தேவியோ அந்தப் பையனை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தாள். "அண்ணா..." சாரதி திரும்பிப் பார்த்தான். "அந்த பையன்தான் லாவண்யாவிடம் அத்துமீறி இருக்கான்." சாரதியின் முகம் இறுகியது.

"ஏன்மா?" என்ற சாரதி, லாவண்யாவை ஒரு நொடி பார்த்துவிட்டு, "நேத்தே என்னை லெஃப்ட் ரைட் வாங்கணும்னு குதிச்சாளே. இப்ப அதே கோபத்தை அவன்கிட்ட காட்டச் சொல்லு." என்றான். தேவியோ பேச்சற்று தலை கவிழ்ந்தாள்.

"ஏன்மா கேட்க முடியாதா" சாரதியின் குரலில் வேதனை கலந்த கோபம். "ஆப்ட்ரால் கன்டெக்டர்னா என்ன வேண்டும்னாலும் பேசலாம். அதே காலேஜ் பையன், நல்ல டிரஸ் போட்டு, வசதியானவனா தெரிஞ்சிருந்தா... அவனை கத்தவோ திட்டவோ யோசிச்சிக்க வேண்டியதா இருக்குல்ல?" என்றதும், லாவண்யா அந்த வார்த்தைகளைக் கேட்டாள்.

அவனுடைய குரலில் இருந்த கசப்பு அவளது மனதைத் தொட்டது.

நேற்று தான் அவனை எவ்வளவு காயப்படுத்தி விட்டோம் என்று அவளுக்குத் தோன்றியது. ஆனால் அடுத்த நொடியே... அந்தப் பையன் மீண்டும் அவளை நெருங்கி வந்தான்.

லாவண்யாவின் கோபம் மீண்டும் தலைதூக்கியது. சாரதி தேவியிடம் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், யாரும் எதிர்பார்க்காதபடி அவள் கையில் இருந்த காம்பஸை எடுத்துக் கொண்டு அந்தப் பையனின் கையில் குத்தினாள்.

"ஆ..." என்று அவன் அலறினான். பேருந்தில் அங்கே  அவனை சுற்றியிருந்த அனைவரும் சட்டென்று திரும்பிப் பார்த்தனர்.

"வலிக்குதா?" லாவண்யாவின் குரல் நடுங்கியது.

"வலிக்குதாடா?" அவள் மீண்டும் காம்பஸை உயர்த்தினாள். "அன்னிக்கு முதுகுல உரசியது இந்த கைதானே?" அவன் பயந்து பின்னால் நகர்ந்தான்.

"நேத்து காலையில இடுப்புல அழுத்தியது இந்த கைதானே?" என்றாள் காளி அவதாரமாக.

"நான்..." என்று தடுமாறினான்.

"இப்ப பிட்டத்தின் பின்னாடி தட்டினதும் இந்த கைதானே?" என்றாள். அவன் பதில் சொல்ல முடியாமல் நின்றான். மறுத்தால் காம்பஸ்ஸால் நெஞ்சில் குத்திடுவாளோ என்ற பயம்.

"இப்ப தட்டு! தட்டுடா!" அவளுடைய கோபக் குரல் பேருந்துக்குள் முழங்கியது.

அன்று சற்று பருமனாக இருந்த பெண்ணும் "என்னை குண்டுனு சொல்லி கேலி பண்ணுவான். ஆனா நான் அவனை தாண்டி வர்றப்ப எல்லாம் சகட்ட மேனிக்கு இடிப்பான். இன்னிக்கு இந்த பொண்ணு கொடுக்கற தண்டனை சுகமா இருக்கா" என்றாள்.

அருகில் இருந்த சில பெண்களும் உடனே, "இவனுங்களுக்கு இதே வேலையா போச்சு. நாமளே கஷ்ப்பட்டு படிக்கவும் வேலைக்குன்னும் கூட்ட நெரிசல்ல இடிபாட்டுல வந்தா, இந்த தடிமாடுங்க வேற இடிச்சிட்டு இளிச்சிட்டு இருப்பானுங்க. நல்லா நாலு போடும்மா!" என்று சில பெண்கள் ஆதரவாகப் பேசினார்கள்.

முத்து பேருந்தை ஓரமாக நிறுத்தினார்.

நிலைமை பெரிதாகாமல் சாரதியும் அந்தப் பையனை கீழே இறங்க கூற, அவனும் கீழே இறங்கினான்.

லாவண்யாவின் கையால் காம்பஸ் கீறலோடு, அவன் முகத்தில் விழுந்த அறையும் சேர்ந்து அவனது கோபத்தை மேலும் அதிகப்படுத்தியது.

இறங்கிச் செல்லும் முன் அவன் லாவண்யாவையும், சாரதியையும் மாறி மாறிப் பார்த்தான்.

அந்தப் பார்வையில் பழிவாங்கும் கோபம் தெரிந்தது.

ஆனால் பேருந்து புறப்பட்டுவிட்டது. லாவண்யா நீண்ட பெருமூச்சு விட்டாள்.

"இன்னிக்கு சீட் கிடைக்காம நிக்கற மாதிரி இருக்கேன்னு நினைச்சேன்..." தேவி அவளைப் பார்த்தாள்.

"ஆனா அதுவும் நல்லதுதான்." லாவண்யா முகத்தில் இப்போது நிம்மதி.

"அந்த ராஸ்கல் நெருங்கவும் அடக்கிட்டேன். இப்பதான் நிம்மதியா இருக்கு." சாரதி கம்பியில் சாய்ந்து நின்றிருந்தான்.

அவனது முகத்தில் இன்னமும் நேற்று நடந்தவற்றின் சுமை இருந்தது. "ட்வெல்த் மெயின் ரோட்... இறங்குங்க." என்று பயணிகளுக்கு அறிவித்தான்.

பிறகு அடுத்த நிறுத்தம் வந்ததும், "அண்ணா நகர்... அண்ணா நகர்..." என்று குரல் கொடுத்தான்.

வழக்கம்போல் விசில் அடிக்காமல், வலது கையை உதட்டருகே குவித்து மெதுவாக விசில் சத்தம் எழுப்பினான்.

லாவண்யா அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நேற்று தப்பி தவறி, டிப்போவிலோ அல்லது, அவன் அன்னையிடமோ அவசரப்பட்டு புகார் செய்திருந்தால், இவர் நிலை என்ன? அதிலும் அறிவில்லையா? கண்டெக்டர் தானே என்று குறைத்து மதிப்பிட்டு பேசினாளே.

"என்ன பார்க்கற? இறங்கு." என்றான் சாரதி.

அந்த வார்த்தையில் ஒருமை இருந்தாலும், கோபம் இல்லை.

ஒருவிதமான விலகல் மட்டுமே இருந்தது. லாவண்யாவும் தேவியும் இறங்கினர்.

பேருந்து புறப்பட்டுச் சென்றது. சில நொடிகள் இருவரும் அமைதியாக நடந்தனர்.

பிறகு தேவி திடீரென்று லாவண்யாவின் கையைப் பிடித்தாள்.

"எப்படிடி இவ்வளவு தைரியமா காம்பஸ் வச்சி குத்தின?"

"அவன் செய்தது தப்புதானே?"

"அது சரி. நாளைக்கு ஏதாவது பிரச்சனை வந்தா?"

லாவண்யா தயக்கமே இல்லாமல் சொன்னாள்.

"அதான் சாரதி இருக்காரே." தேவி அப்படியே ஸ்தம்பித்து நின்றாள்.

"என்ன?"

"ம்ம்ம. சாரதி பார்த்துக்குவான்." என்று அழுத்தமாய் உரைத்தாள் புன்கையுடன்.

தேவியின் முகத்தில் குழப்பம். 'அவர் என்னடான்னா 'என்ன பார்க்கற இறங்கு'னு ஒருமையில பேசுறார். சரி... ஏதோ இவ அவரை முன்னாடி எவ்வளவு பேசினதால, மரியாதை கொடுக்கப் பிடிக்கலைன்னு நினைச்சேன்.

இவ என்னடான்னா.. 'அதான் சாரதி இருக்காரேன்னு சொல்றா.'

'எந்த உரிமையில பேசுறாங்க. அவளால் ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை. கூடுதலாக துருவி பேச்சை கூட்டவில்லை. கல்லூரியில் வகுப்பும் வந்துவிட்டது காரணமாக இருக்கலாம்.

ஆனால் லாவண்யாவோ அன்றைய நாள் முழுவதும் வேறு எந்த விஷயத்திலும் மனதைச் செலுத்த முடியவில்லை.

அவளுடைய மனதிற்குள் ஒரே ஒரு விஷயம்தான் சுற்றிக் கொண்டிருந்தது.

சாரதி அவனிடம் தான் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டோம் என்பது இப்போது தெளிவாகிவிட்டது.

நேற்று அவன் எவ்வளவு வேதனைப்பட்டிருப்பான்?

'எங்கப்பா மேல பிராமிஸ்... நான் அப்படி செய்யலை.' அந்த வார்த்தை மீண்டும் மீண்டும் காதுக்குள் ஒலித்தது.

அவன் கண்களில் தெரிந்த வலி... அம்மாவைப் பற்றி அவன் கொண்டிருந்த அக்கறை... தன்னைத் தண்டிக்கச் சொல்லியும், தன் அம்மாவை காயப்படுத்த வேண்டாம் என்று கேட்ட விதமும்... எல்லாமே நினைவுக்கு வந்தது.

அவள் மெதுவாகத் தன் நெஞ்சின் மீது கை வைத்தாள்.

இதுவரை சாரதி மீது இருந்தது வெறும் மதிப்பு தானா? அவனுடைய சிரிப்பு பிடித்தது. அவன் குழந்தைகளிடம் பேசும் விதம் பிடித்தது. வயதானவர்களிடம் காட்டும் மரியாதை பிடித்தது. பயணிகளிடம் பொறுமையாக நடந்து கொள்வது பிடித்தது.

அவன் விசில் சத்தம் கூட தனக்காகவே என்று தோன்றிய நாட்கள் இருந்தன.

இப்போது... அவள் தன்னையே கேட்டுக் கொண்டாள். 'தனக்கும் அவருக்குள்ளும் என்ன பந்தம்' என்று. அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அவள் முகம் சிவந்தது.

ஆம். அவள் மனம் ஏற்கனவே அந்த முடிவுக்கு வந்துவிட்டது.

ஆனால்... அதை இனி சாரதியிடம் எப்படி சொல்வது? அவன் ஏற்றுக் கொள்வானா?

இத்தனை தவறான புரிதல்களுக்குப் பிறகு... 'நான் உன்னை காதலிக்கிறேன்' என்று சொன்னால் அவன் தன்னைப் பற்றி என்ன நினைப்பான்?

'நேத்து என்னை குற்றவாளியா பார்த்தவ... இன்னிக்கு காதலிக்கிறேன்னு சொல்றாளே?' என்று கேலி செய்வானா? தன்னை நிராகரித்துவிட்டால்?
தன் மனம் தாங்குமா? அதையும் தாண்டி தேவி... அவளிடம் இதை எப்படி சொல்வது?

தேவி தன்னை என்னவென்று நினைப்பாள்? வீட்டில் அம்மாவும் அப்பாவும் படிக்க அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

'காதல் எல்லாம் எதுக்கு?' என்று கேட்பார்களா? எத்தனை கேள்விகள்... எத்தனை பயங்கள்... ஆனால் அவற்றை எல்லாவற்றையும் விட பெரியதாக இருந்தது ஒரே ஒரு உணர்வு.

சாரதியை இழக்கக் கூடாது.
அதே நேரம்... பேருந்துக்குள் சாரதியின் மனதிலும் ஒரு சிறிய நிம்மதி பிறந்திருந்தது.

'அப்படின்னா... அந்தச் சம்பவங்களெல்லாம் நான் இல்லன்னு அவளுக்குப் புரிஞ்சிடுச்சு.' அது மட்டும் அவனுக்கு போதுமானதாக இருந்தது.

ஆனால் அடுத்த நொடியே அவன் மனம் மீண்டும் அவனைத் துன்புறுத்தியது.

'அவ என்ன நினைச்சிருப்பா? என்ன இருந்தாலும் சில்லரையை அவ டிரஸ்குள்ள போட்டது நான் தான். தெரியாம போட்டாலும் தப்பு தானோ? அதை நினைச்சு வருத்தப்படுவாளோ?"
அவனுடைய மனம் மீண்டும் அவளைச் சுற்றியே சுழன்றது.

கொஞ்ச மாதங்கள் கடந்திருக்க, ஒரு வருடம் கூட ஆகவில்லை. அந்த லாவண்யா பேருந்தில் பயணம் செய்து. அதிலும் இந்த இரண்டு நாளில், தன்னுடைய மனதை இப்படி புரட்டிப் போட்டு விட்டாள். அவளை கண்டால் என் மனம் தத்தி தாவுகின்றது. இது.. அது தானோ? என்று தடுமாறினான்.

மாலை நேரத்தில் டிரைவர் இருக்கையில் இருந்த முத்து அவனைப் பார்த்தார்.

"சாரதி..."

"ஆங் அண்ணா?" என்றான்.

"என்னடா ஆச்சு?" சாரதி புரியாமல் பார்த்தான்.

"எதுவுமில்லையே அண்ணா."

"எதுவும் இல்லையா?"

முத்து அவனைப் பார்த்து சிரித்தார். "இரண்டு மூனு நாளா தனியா பீல் பண்ற... தனியா என்னத்தடா யோசிக்கற." சாரதி உடனே முகத்தை மாற்றிக் கொண்டான்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லை அண்ணா.."

"என்னத்த ஒண்ணுமில்லையோ" என்று அவர் அதன்பிறகு கேட்கவில்லை.

'ஒண்ணுமில்லைன்னா ஒண்ணுமில்லை தான்.' என்று சொல்லிவிட்டு டிக்கெட் பையைச் சரி செய்தான்.

ஆனால் அவனது உதட்டின் ஓரத்தில் வந்து மறைந்த அந்தச் சிறிய நிம்மதியான புன்னகையை முத்துவால் தவறவிட முடியவில்லை.

சாரதியோ அந்தப் புன்னகைக்குக் காரணம் யார் என்று அவனுக்குத் தெரிந்திருந்தது.

லாவண்யா அவளுக்குத் தெரியுமா? அவன் மனதிலும் இப்போது அவள் மட்டும் தான் இருக்கிறாள் என்று.

அவளிடம் கூற முடியுமா? நேற்று அவள் பேசிய போது, 'ஆப்ட்ரால் கன்டெக்டர்' என்ற வார்த்தையை விட்டதும் லாவண்யா தான் என்று புரிய அவசரப்படாதே சாரதி என்று மனதிடம் கூறிக் கொண்டான். தன்னிலையும் அவளது நிலையும் யோசி என்றது மனம். தானாக ஆசைப்பட்ட நெஞ்சம் மீண்டும் கூட்டுக்குள் அடைப்பட்டது.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-12
அத்தியாயம்-12

சாரதிக்கு ஏன் லாவண்யா தன்னை முறைத்துப் பார்க்கிறாள் என்பதே புரியவில்லை.

பேருந்தில் முன்பு நடந்தது தவறுதலானது என்பது அவனுக்குத் தெரியும். ஆனால் அதற்குப் பிறகு அவள் பார்வையில் தெரிந்த கோபம். அவனை உள்ளுக்குள் உறுத்திக் கொண்டே இருந்தது.

அதற்குமேல் டிப்போவில் அவள் பேசிய விதம் வேறு. "ஆப்ட்ரால் ஒரு கன்டெக்டர்..." அந்த வார்த்தை இன்னமும் அவன் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.

தான் வேண்டுமென்றே எதையும் செய்யவில்லை என்பதை அவளிடம் சொல்லிவிட்டான். இருந்தாலும் அவள் தன்னை நம்பினாளா இல்லையா என்பதே தெரியவில்லை.

அந்தக் குழப்பத்தோடும் மனக்கஷ்டத்தோடும் மீண்டும் தன்னுடைய டியூட்டிக்குச் சென்றான்.

மாலை வரைக்கும் அவனுடைய மனம் அமைதியாகவில்லை.

அதே நேரம்... தேவியும் லாவண்யாவும் மாடியில் பேசிக்கொண்டே நின்றிருந்தனர். அவள் கண்ட மோசமான அனுபவமாக சாரதியை பற்றி கூறினாள். தேவிக்கு என்ன செய்வதென்று புரியாமல் "சரி... இப்ப என்ன செய்யணும்?" என்று தேவி கேட்டபோது, இலக்கியா வந்தார். மாலதி நிச்சயதார்த்தம் வரவும், லாவண்யா சேலை கட்டுவதற்கு, தைக்கக் கொடுக்க வேண்டியிருந்த பிளவுஸ் துணியை லாவண்யாவின் கையில் கொடுத்திருந்தார்.

"இந்த பிளவுஸை தைக்கக் கொடுத்துட்டு வந்துடுங்க. பார்க் தாண்டி இரண்டு தெரு போனா... ஐந்தாவது வீடு. அங்கே காஞ்சனா அப்படின்னு கேளுங்க. அவங்கதான் தைப்பாங்க." என்றார் இலக்கியா. ஏற்கனவே இதை பற்றி பேசி கூறியதால், "சரி சித்தி..." என்றாள்.

தேவி தான் லாவண்யாவை அழைத்துக்கொண்டு கிளம்பினாள்.

இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு பைக் வந்தது.

லாவண்யாவின் பார்வை தன்னையும் அறியாமல் அந்தப் பக்கம் சென்றது.

அது சாரதி. அவளைத் தாண்டிச் செல்லும் அந்த நொடி, சாரதியும் அவளை கவனித்தான்.

ஆனால் முன்பைப் போல அவன் முகத்தில் புன்னகை இல்லை. அவளை நோக்கிய பார்வையில் ஒரு தயக்கம். அதனுடன் சிறு வருத்தமும் இருந்தது.

தேவி இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள். 'இவங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனை? ஏன் இந்த திடீர் சம்பவம்.' அவளுக்குப் புரியவில்லை.

சாரதி வீட்டுக்கு வந்ததும் பைக்கை வாசலில் நிறுத்தினான்.

பைக்கை வாங்கிய நாளே காஞ்சனா தன் கையால் தைத்துக் கொடுத்திருந்த அழகான கவரை எடுத்தான்.

வீட்டில் தையல் வேலை செய்வதால், மீதமாகும் துணிகளில் பைக் கவர், ஃப்ரிட்ஜ் கவர், வாஷிங் மெஷின் கவர் என்று தேவையானவற்றை காஞ்சனா தைத்துக் கொடுப்பது வழக்கம்.

ஆனால் சாரதிக்காக மட்டும் அவள் ஒரு அழகான சேலையை வைத்து பைக் கவர் தைத்திருந்தார். சைக்கிளுக்கும் அப்படித்தான்.

அந்தக் கவரை மெதுவாக பைக்கின் மீது போர்த்திவிட்டு வீட்டுக்குள் வந்தான். "சாரதி... டீ போடவாப்பா?" என்று கேட்டார் காஞ்சனா.

"நா... நான் போட்டுக்கறேன்மா. நீங்க வேலை பாருங்க." என்று முகத்தைக் கழுவிக் கொண்டவன், சட்டையைக் கழற்றி ஹேங்கரில் மாட்டிவிட்டு சமையலறைக்குச் சென்றான்.

பால், சர்க்கரை, டீத்தூள் என தேவையான அளவு போட்டுத் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்தான்.

அப்போது வெளியிலிருந்து ஒரு பெண்ணின் குரல் கேட்டது.

"மனசே ஆறமாட்டேங்குது தேவி..." சாரதியின் கை வடிக்கட்டியை எடுத்த பொழுது, சட்டென்று நின்றது.

அந்தக் குரல்... லாவண்யா! அவனுடைய இதயம் ஒரு நொடி திடுக்கிட்டது. "அவ இங்க எதுக்கு வந்திருக்கா?"

அடுத்த நொடி அவன் மனதில் வேறொரு பயம் எழுந்தது. 'கம்ப்ளைன்ட் பண்ணப் போறேன்னு சொன்னாளே... இங்கே அம்மாகிட்ட ஏதாவது சொல்லிடுவாளா?' அவனுடைய உள்ளங்கையில் வியர்வை படர்ந்தது. தான் செய்யாத ஒன்றுக்காக தன்னுடைய குணத்தைத் தவறாகச் சித்தரித்துவிட்டால்?

அம்மா என்ன நினைப்பார்? தன்னுடைய அப்பாவைப் பற்றி இந்த ஊரில் இருந்த நல்ல பெயர் என்ன ஆகும்?

எல்லாமே அவன் மனதுக்குள் ஒன்றன் பின் ஒன்றாக ஓடியது.

அப்போது, "ஆன்ட்டி... இங்க காஞ்சனா அப்படின்னு டிரஸ் தைக்கறவங்க நீங்கதானே?" என்று தேவி கேட்ட குரல் கேட்டது.

"ஆமாம்மா... என்னம்மா?" என்று காஞ்சனா கேட்டார்.

"அம்மா... டீ..." என்று சொல்லிக் கொண்டு சாரதியும் சமையலறையிலிருந்து அவசரமாய் வெளியே வந்தான்.

வாசலில் லாவண்யாவையும் தேவியையும் பார்த்ததும் அவன் அப்படியே நின்றுவிட்டான்.

லாவண்யாவுக்கும் அவனைப் பார்த்ததும் பேச்சே வரவில்லை.

'இவர் வீட்டுக்கா வந்திருக்கோம்?' அவள் பார்வை தன்னையும் அறியாமல் வீட்டைச் சுற்றிப் பார்த்தது.

"உட்காருங்கம்மா..." என்று காஞ்சனா இரண்டு பேர் அமரக்கூடிய திண்டு வைத்திருந்த இருக்கையைக் காட்டினார்.

தேவியும் லாவண்யாவும் அமர்ந்தனர். "டீ குடிக்கறீங்களாம்மா?" என்று காஞ்சனா கேட்க,  "ஆங்... வேண்டாம் ஆன்ட்டி." என்று தேவி மறுத்தாள்.

"சாரதி... டீ இருந்தா ஊத்திட்டு வா." அவனுக்கு மீண்டும் ஒரு கலக்கம்.

சைக்கிள் தொலைந்தபோது இருந்த பதற்றம் போலவே இப்போதும் உள்ளுக்குள் ஏதோ உருண்டது.

'இவங்க முன்னாடி நான் இப்படியா இருக்கணும்?' அவன் அமைதியாக உள்ளே சென்று டீயை ஊற்றிக் கொண்டிருந்தான்.

"அளவு பிளவுஸ் இருக்காம்மா?" என்று காஞ்சனா கேட்டார்.

"இல்ல ஆன்ட்டி. பிளவுஸ் தைக்கணும். ஆனா அளவு பிளவுஸ் கொண்டு வரல."

"சரிம்மா. இந்த டீ குடிங்க. இதை முடிச்சதும் அளவு எடுத்துக்கலாம். கன்டினியூ மிஸ் ஆகிடும். இரண்டு நிமிஷம் தான்." சாரதி அவசரமாக டீயை ஊற்றி எடுத்துக்கொண்டு வந்தான்.

அவசரத்தில் டீ கொஞ்சம் சூடாகவே இருந்தது.

லாவண்யா டம்ளரை வாங்கி ஒரு மிடறு வைத்ததும், "ஸ்ஸா..." என்று உதட்டைச் சுருக்கினாள்.

அதே நேரம் சாரதியும் தன் கையில் கொதிக்கும் டீ பட்டிருந்ததை உணர்ந்து, கையை லேசாக ஊதிக் கொண்டிருந்தான்.

அதைப் பார்த்த லாவண்யா ஒரு நொடி அவனைப் பார்த்தாள். 'எனக்கு கொதிக்கும் டீ ஊற்றிக்கொண்டு, அவர் கையிலும் ஊத்திக்கிட்டிருக்காரு.' அவளுடைய கோபத்தின் நடுவே ஒரு சிறிய குற்றவுணர்வு வந்து தொட்டது.

"என்னப்பா... நீ போய் உன் வேலையைப் பாரு. அம்மா டீ குடிச்சிடுவேன்." சாரதி அங்கேயே நின்றான்.

"நேரத்துக்கு எதுவும் சாப்பிட மாட்டேன்னு பக்கத்துலயே இருந்து குடிக்க வச்சி சாப்பிட வச்சுட்டுத்தான் வேற வேலை பார்ப்பான்.'' என்று பொதுவாய் இரு பெண்களிடம் கூறிவிட்டு,  "சூடா இருக்கு சாரதி. நீ போ. அம்மா குடிச்சிடுவேன்." என்றார்.

"சரிம்மா." அவன் மெதுவாக அறைக்குள் சென்றான். ஆனால் கதவை மூடவில்லை.

ஜன்னல் வழியாக அவனது பார்வை வெளியே சென்றது. தேவியும் லாவண்யாவும் காஞ்சனாவுடன் பேசிக் கொண்டிருந்தனர்.

'டிப்போல கம்ப்ளைன்ட் பண்ணப் போறேன்னு சொன்னவ... இப்ப அம்மாகிட்ட என்ன சொல்லப் போறாளோ?' அவன் மீண்டும் பதற்றமடைந்தான்.

"டீ நல்லாயிருக்குல்ல?" என்று தேவி மெதுவாக லாவண்யாவிடம் கிசுகிசுத்தாள்.

"ம்ம்..." என்றாள் லாவண்யா. இங்கே டீ குடிக்கவா வந்தோமென சலிப்பும் கூடியது.

அதைக் கேட்ட காஞ்சனா புன்னகைத்தார்.

"அவன் எல்லாமே செய்வான்மா. சமையல் கூட நல்லா பண்ணுவான். எனக்கு மேலுக்கு முடியாத நேரத்துல சமையல் பொறுப்பையே கையில எடுத்துக்குவான். டீ, காபி எல்லாம் சில நேரம் அவன் தான்." மகனைப் பற்றி பெருமையாகப் பேசினார்.

லாவண்யாவின் மனதுக்குள் ஏதோ அசைந்தது. சில நிமிடங்களில் அளவு எடுக்கத் தொடங்கினர் காஞ்சனா. "கை தூக்கும்மா..." லாவண்யா கையை உயர்த்தினாள்.

"கை இவ்வளவு போதுமா? இன்னும் கொஞ்சம் இடுப்பு இறக்கம் வைக்கவா?"

"இவ்வளவு போதும் ஆன்ட்டி."

"முதுகு இவ்வளவு வைக்கலாமா?"

"ம்ம்... ஓகே ஆன்ட்டி." என்றாள்.

பிறகு காஞ்சனா நெக் டிசைன் அட்டை ஒன்றைக் காட்டினார்.

"இதுல எது பிடிச்சிருக்கு? சொல்லுங்க. அதையே வச்சிடலாம்." என்று இருவரும் பேசிட, "இது ஓகே ஆன்ட்டி." பணம், எப்போது வந்து வாங்க வேண்டும் என்பதையெல்லாம் கேட்டுக் கொண்டாள்.

காஞ்சனா துணியின் ஒரு சிறிய துண்டை வைத்துக் கொண்டு, பெயர், அலைபேசி எண்ணையும் குறித்து வைத்தார்.

"தைத்ததும் கால் பண்ணறேன்மா." என்றார்.

"சரிங்க ஆன்ட்டி." தேவியும் லாவண்யாவும் எழுந்தனர்.

"சரி ஆன்ட்டி... நாங்க கிளம்பறோம்." என்றாள்.

"பத்திரமா போயிட்டு வாங்கம்மா." அவர்கள் வெளியே வந்தனர்.

ஜன்னல் வழியாக அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சாரதிக்கு, ஒரு நொடி நிம்மதி வந்தது.

'லாவண்யா எதுவும் சொல்லலை..' ஆனால் அடுத்த நொடியே இன்னொரு எண்ணம்.

'இப்ப அவளிடம் பேசாம விட்டுட்டா... இந்தப் பிரச்சனை தீராது.' என்றது புரிய, அவன் சட்டென்று ஹேங்கரில் இருந்த வேறு ஒரு சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டான்.

தலையை இரு கைகளாலும் கோதிவிட்டு, பைக் சாவியை எடுத்தான். "அம்மா... நான் இப்ப வந்துடறேன்."

"எங்கப்பா"

"சும்மா... இப்ப வந்துடறேன்மா."

"பார்த்து பத்திரம்யா!" அவன் பதில் சொல்லாமல் பைக்கை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

பார்க்கைத் தாண்டி லாவண்யாவும் தேவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

"இவர் வீட்டுக்கே போய் நிற்போம்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை" என்றாள் லாவண்யா. தேவியும், எனக்கு இவர் வீடு இந்த பக்கம்னு தெரியும். இந்த வீடுனு தெரியாது.'' என்றாள்.

திடீரென அவர்கள் முன்னால் பைக்கை வந்து நிறுத்தினான் சாரதி.

லாவண்யா திகைத்தாள். "உன்கிட்ட பேசணும்." தேவி இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள்.

"நீங்க பேசுங்க. நான்..." என்று செல்லப் போனாள் தேவி.

"தேவி... நானும் வர்றேன்." என்றாள் லாவண்யா‌ நழுவும் பொருட்டு.

"லாவண்யா..." சாரதியின் குரலில் இருந்த வேதனை அவளை நிறுத்தியது.

"நான் என்ன தப்பு பண்ணேன்னு எனக்கே புரியல." லாவண்யா அமைதியாக அவனைப் பார்த்தாள்.

"ஆனா... இரண்டு நாளா நீ என்னை ஒரு குற்றவாளி மாதிரி பார்க்கற. உன் பார்வையே என்னை எரிச்சலடைய வைக்குது." அவன் குரல் உடைந்தது.

"என்னால அதைத் தாங்க முடியல. நாம சரியா பேசினதே இல்ல. ஆனா இதே இடத்துல உன்னைப் பார்த்தப்போ... என்னைப் பத்தி கொஞ்சமாவது புரிஞ்சிருப்பேன்னு நினைச்சேன். ஆனா நீ என்னை அறிவில்லாதவன்னு கூட சொல்லற அளவுக்கு வந்துட்ட." அவன் ஒரு பெருமூச்சு விட்டான். "நான் பஸ்ல இருந்தப்ப பிரேக் போட்டதும் தெரியாம தான் இடிச்சேன். இன்னிக்கு நடந்ததும் அப்படி தான். உனக்குத் தெரியலையா?" என்று தவித்தபடி கூறினான்.

"நீங்க இரண்டு முறைன்னு சாதாரணமா சொல்றிங்க..." என்றாள் லாவண்யா குழப்பமாக.

"ஆமா. இரண்டு முறை." தேவி உடனே இடையில் வந்தாள்.

"அண்ணா... இரண்டு முறை இல்ல. நாலு முறை." சாரதி புரியாமல் பார்த்தான்.

"முதல்ல பிரேக் போட்டப்போ அவ மேல உரசினிங்க." என்று தேவி லிஸ்ட் போட,

"அது தெரியாம நடந்ததும்மா.. முத்து அண்ணா பிரேக் போட்டார். நான் கொஞ்சம் பேலன்ஸ் பண்ணாம நின்றுட்டேன்" என்றான் சாரதி.

"சரி. அடுத்து டிக்கெட் கொடுக்கும்போது முதுகுல கைப்பட உரசினிங்க." என்றதும் சாரதியின் முகம் மாறியது.

"நா... நானா?"

"ஆமா."

"ஒரு நிமிஷம்..."

அவன் தலையைப் பிடித்துக் கொண்டான்.

"எனக்கு ஞாபகமே இல்ல. எத்தனையோ பேர் டிக்கெட் வாங்க பணத்தை நீட்டியிருக்காங்க. அவங்களை தொட்டு தடவி ரசிக்கற அளவுக்கு நான் கீழ்த்தரமானவன் இல்லை" என்றான்.

தேவி தொடர்ந்தவளாக, "அதுக்கப்புறம் இன்னைக்கு காலையில அவ இடுப்புல கை வச்சு அழுத்தினிங்களாம்." என்று பெரியளவில் குற்றச்சாட்டினாள்.

"என்ன?" சாரதியின் முகத்தில் உண்மையான அதிர்ச்சி. அவன் மறுப்பாய் தலையாட்டினான்.

"இன்னிக்கு ஈவினிங் சில்லரையை இவ சுடிதாருக்குள்ள போட்டிருக்கிங்க." என்றதும் சாரதி "நான் சில்லரை வேண்டுமின்னே போடலயே. அது நழுவிப் போச்சு. அதோட அவ தான் முன்ன வந்தா, ஆக்சிடெண்டா அவ ஸ்கின்ல பட்டதும் கை பதறி இழுத்தேன்." என்றான்.‌

"அதெல்லாம் தப்பும் தவறுமா  இவளுக்கு நடந்தது தானே?" சாரதி சில நொடிகள் பேசாமல் நின்றான்.

"இங்க பாரு லாவண்யா.." என்று லாவண்யாவை நோக்கிப் பார்த்தான்.

"பிரேக் போட்டப்போ உன் மேல உரசியது தற்செயல். அதுக்கு நான் அன்னிக்கே  சாரி கேட்டேன். இன்னைக்கு சில்லரை பாட்டி கேட்டதும் எடுத்துக் கொடுக்கும்போது... எதிரே யாரும் இல்லைன்னு நினைச்சு கையை நீட்டினேன். நீ முன்னாடி வந்துட்ட. காயின் நழுவிடுச்சு. வேண்டும்னே நான் எதையும் உள்நோக்கத்தோட பண்ணல." அவன் குரல் பதற்றமடைந்தது.

"ஆனா... இடுப்பை நான் தொடவே இல்லை." லாவண்யா அமைதியாக அவனைப் பார்த்தாள்.

"உன் முதுகை என் கையால உரசியதாவும் எனக்கு ஞாபகம் இல்லை." என்றான். லாவண்யா சந்தேகமாய் நிற்கவும் சாரதி திடீரென, "எங்கப்பா மேல பிராமிஸ்... நான் அப்படி செய்யலை." என்றான்.

அந்த வார்த்தையில் இருந்த உண்மை லாவண்யாவின் மனதைத் தொட்டது.

அவள் சில நொடிகள் பேசாமல் நின்றாள். "லாவண்யா..." அவள் மெதுவாக நிமிர்ந்து பார்த்தாள்.

"புகார் தர்றதா இருந்தாலும்... எங்கம்மாகிட்ட எதுவும் சொல்லி அவங்களை காயப்படுத்தாத." அவன் குரல் மிகவும் மென்மையாகியது.

"எதுவா இருந்தாலும் என்னிடமே சொல்லு. என்னைத் தண்டிக்கணும்னா... தண்டனை கொடு. ஆனா என் அம்மாவை இந்த விஷயத்துக்குள்ள கொண்டு வராத." லாவண்யாவின் பார்வை மாறியது.

"என்னை குழப்பாதிங்க." சாரதி அமைதியாக நின்றான்.

"ஒரு பொண்ணுக்கு ஒரு தீண்டல் தப்பா... சரியானதா... தெரியாம இருக்காது. அந்த இரண்டு தீண்டலும் எனக்கு தப்பான தீண்டல் தான்." என்றாள் உறுதியாக.

சாரதியின் முகம் வெளிறி இறுகியது. "ஆனா..." அவள் தயங்கினாள். "நீங்க தொடவே இல்லைன்னு சொல்லும்போது... உங்களை நம்பாமலும் இருக்க முடியலை." சாரதி அவளைப் பார்த்தான்.

"ஏன்னா... இதே இடத்துல அன்னிக்கு உங்களைப் பார்த்திருக்கேன். பஸ்ல கூட... சில நேரம் உங்களோட சின்ன சின்ன அசைவுகள், செய்கைகள், குழந்தைகளிடம் பேசுற விதம். வயசானவங்களுக்கு உதவுற விதம்... அதெல்லாம் நான் கவனிச்சிருக்கேன்." அவள் ஒரு நொடி அவனைப் பார்த்தாள்.

"அதனால நீங்க வேண்டும்னே இப்படிச் செய்திருக்க மாட்டீங்கன்னு என் மனசு இப்பவும் சொல்லுது." சாரதியின் கண்களில் ஒரு சிறிய நிம்மதி தோன்றியது. ஆனால் அவள் அடுத்த வார்த்தை அந்த நிம்மதியை முழுமையாக வரவிடவில்லை."ஆனா... அந்தத் தீண்டல் என்னை எரிச்சல்படுத்துதே." அவன் அமைதியாக நின்றான்.

"இப்போதைக்கு... நான் போறேன் என்னை யோசிக்க விடுங்க." தேவியின் கையைப் பிடித்துக் கொண்டு லாவண்யா நடந்தாள்.

சாரதி அங்கேயே நின்று கொண்டிருந்தான். அவளைத் தடுக்க அவனுக்கு மனம் இல்லை.

அவள் தன்னை முழுமையாக நம்பவில்லை. ஆனால் முழுமையாகத் தவறாகவும் நினைக்கவில்லை.

அதுவே இப்போதைக்கு அவனுக்கு கிடைத்த ஒரே ஆறுதல். அவள் சில அடிகள் சென்ற பிறகு ஒருமுறை திரும்பிப் பார்த்தாள்.

சாரதி இன்னும் அதே இடத்தில் நின்றிருந்தான். அவன் பார்வையும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தது.

இருவருக்கும் நடுவே ஒரு உறவுக்கான பாலம் கட்டத் தொடங்கியிருந்த நேரத்தில், அதைத் தாண்டிச் செல்ல வேண்டிய பாதையில், ஒரு சிறிய பிரிவு வந்து நின்றது.

அந்தப் பிரிவு எவ்வளவு நாள் நீடிக்கும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. இருவருடைய மனதிலும் ஒருவரைப் பற்றிய எண்ணம் மட்டும் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டிருந்தது.

-தொடரும்

-பிரவீணா தங்கராஜ்

வால்கனோ பூக்கள் அத்தியாயம் - 7
அத்தியாயம் - 7

ஆட்ரியன் அப்படி சொல்லி அனுப்ப அவனை ஒருமாதிரி பார்த்தான் ஜார்ஜ்.
அவனை பார்த்து
“என்ன ஜார்ஜ் நான் அவ்ளோ அழகா இருக்கேனா? இப்படி சைட் அடிக்கிற? நான் பையன் ஜார்ஜ்” என்று சொல்ல.
தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக ஜார்ஜ் “சர் அதெல்லாம் எதுவும் இல்ல சர் எதுக்கு அப்படி சொன்னீங்கனு யோசிச்சேன் சர்” என்று ஜார்ஜ் சொல்ல

“அதுவா நீ ஒரு ஒலறுவாயா அதான் நீ பாட்டுக்கு டீடெயில்ஸ்ஸ வெளியே சொல்லிட்டா அதான் ஜார்ஜ் எனக்கு மட்டும் சொல்ல சொல்லி இருக்கேன்” என்றான் கிண்டலாக
“எதே?” என்று ஜார்ஜ் அதிர்ந்து கேட்க சிரிக்காமல் முகத்தை வைத்துக்கொள்ள மிகவும் சிரமப்பட்டான் ஆட்ரியன்.
“சும்மா சொன்னேன் ஜார்ஜ்.
ஆனாலும் கொஞ்சம் உண்மையை தான் சொன்னேன்” என்று சொல்ல அதற்குள் மீடியாவும் கிளாராவின் பெற்றோர்களும் போலீஸ் ஃபோர்ஸ்ஸும் வந்துவிட
“சரி சரி வா வா மீடியாக்கு அழகா பேட்டி கொடுக்கணும்” என்று அவனை இழுத்து செல்ல

“ஒரு டெட்பாடியை வெச்சுட்டு எப்படித்தான் உங்களுக்கு இப்படிலாம் நடந்துக்க முடியுதோ?” என்று கேட்டே விட்டான் ஜார்ஜ்.
நடந்து கொண்டு இருந்தவன் சட்டென நின்று திரும்பி அவனை பார்த்தவன்
“இதுதான் நடக்கும்னு தெரியும் ஜார்ஜ் அதுக்குத்தான் நான் காம் ஆ இருக்க ட்ரை பண்றேன்.
பதட்டத்துலேயும் அவசரத்திலேயும் நம்ம மைண்ட் நம்ம கமெண்ட்ட கேட்குற நிலையில கூட இருக்காது” என்று அவன் விளக்க அதிர்ந்த ஜார்ஜ்
“என்ன சர் சொல்றீங்க? இப்படித்தான் நடக்கும்னு உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா?” என்று கேட்க.
“ம்ம் எல்லாம் உனக்கு அப்புறம் சொல்றேன் வா” என்றுவிட்டு திரும்ப அதற்குள் மீடியா அவனை கேள்வி கேட்க முன்வர பாதுகாவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்திக்கொண்டு இருந்தனர்.

“போய் கிளாரா ஃபேரண்ட்ஸ்ஸ கூட்டிட்டு வா” என்று இப்போது விளையாட்டையெல்லாம் விட்டு கறாரான ஆபீசராக சொல்ல மண்டையை ஆட்டிய ஜார்ஜ்
“எஸ் சர்” என்றபடி அவர்களை அழைத்து சென்றான் அழுதபடி சென்ற பெற்றோர்கள் தங்களது மகளது உடலை பார்த்த கதற உடனே ஃபோஸ்ட்மர்டம்க்கு உத்தரவிட்டவன் மீடியாவின் அருகில் வந்தான்.
அனைவரும் அவனை கேள்விகளால் துளைக்க
“சர் எப்படி சர் இப்படி செஞ்சு இருக்காங்க? இதுக்கு அரசியல் பின்னனி ஏதாவது இருக்கா? இல்ல ஏதாவது ப்ரூட்டல் கேங் ரேப்பா?” என்று கேட்க அந்த கேள்வியை கேட்டவனை முறைத்த ஆட்ரியன் முறைப்பில் அவன் சாரி என்று சொல்ல
“இது ஏதோ சைக்கோ கில்லர்போல தெரியுது இன்னும் எதுவும் கன்பார்ம் ஆகலை பட் இது ரேப் கேஸ் இல்லை.
அதனால ரிசல்ட் வந்ததும் உங்களுக்கு நியூஸ் வரும் இப்போ நீங்க கிளம்பலாம்” என்றான்.
அவனது பார்வையே அவர்களை அங்கிருந்து ஓடிவிடு என்பது போல் மிரட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.
கிளாராவின் பெற்றோர் அருகில் சென்றவன்
“சாரி ட்டூ ஆஸ்க் அகெய்ன் உங்களுக்கு யாராவது ஃபோன் ஏதும் செஞ்சு மிரட்டினாங்களா? இல்லனா பிஸினஸ் த்ரட்ஸ் ஏதாவது?” என்று கேட்க

“அப்படி எதுவுமே இல்ல சர் நாங்க நார்மல் பேக்கிரவுண்ட் கிரீன் கார்ட் இண்டியன் ஃபேமிலி சர் கிளாரா எங்களுக்கு ஒரே பொண்ணு சர் எங்களுக்கு எங்கேயுமே எதிரிங்கனு யாருமே இல்ல சர்” என்று கிளாராவின் தந்தை அழுதபடி சொல்ல

“ம்ம் ஐயம் சாரி உங்களுக்கு என்ன ஆறுதல் சொன்னாலும் சரியாகாது. பட் கிளாராவோட டெத்க்கு நான் நியாயம் செய்வேன்.
நீங்க ஹாஸ்பிடல் போய் ஃபார்மாலிட்டீஸ் முடிச்சுட்டு பாடியை வாங்கிக்கோங்க ஐ வில் ஹெல்ப் யூ ஃபார் திஸ் ஜார்ஜ் ஹெல்ப் தெம்” என்றவன் திரும்பி சென்று தன் பைக்கை ஸ்டார்ட் செய்தவன் கிளம்பிவிட ஜார்ஜ் போஸ்ட்மர்டம் முதல் பாடியை கொடுக்கும்வரை எல்லாம் முடித்து பெற்றவர்களிடம் பாடியை ஒப்படைத்துவிட்டு ரிப்போர்ட் வாங்கிகொண்டு உடனடியாக ஆட்ரியனை பார்க்க சென்றான்.
அவன் வீட்டுக்கு சென்று கதவை தட்ட திறந்த ஆட்ரியன் அவனை பார்க்க
“சர் ரிப்போர்ட் வந்துடுச்சு சர் இது பிளாக் மார்கெட் மாஃபியா வேலை தான் சர்” என்று ரிப்போர்ட்டை நீட்ட
“எது எரிச்சதா?” என்றான் ஆட்ரியன்.
“இல்ல சர் அதுக்கு முன்ன அந்த கிட் டோட பாடி பார்ட்ஸ் எடுத்து இருக்காங்க” என்று பதட்டமாய் ஜார்ஜ் சொல்ல
“ஏற்கனவே செத்துபோன குழந்தையை திரும்ப திரும்ப சாகடிச்சு இருக்காங்களா?” என்று ஆட்ரியன் கேட்க குழப்பமாய் பார்த்தான் ஜார்ஜ்.

“உலகம் தெரியாத பிள்ளையா இருக்கியே ஜார்ஜ்” என்று அவன் கேட்க
“நீ பேசுறது எனக்கே புரியல அவனுக்கு எப்படிடா புரியும்?” என்று சொல்லியபடி ரூமிலிருந்து வெளியே வந்தார் அவர்களது ஹையர் ஆபீசர் டேவிட்.
“சர்” என்று சல்யூட் அடித்த ஜார்ஜ் அவரை கூட்டி வந்து ஃசோபாவில் அமரவைத்தான்.

“ம்ம் நீயும் உட்காரு ஜார்ஜ்” என்ற ஆட்ரியன் அவனுக்கும் காபியை கலக்கி கொடுத்தான்.
“அவனோட ஆக்டிவிட்டீஸ் உனக்கு புரியவே இல்லல? எனக்கும்தான் ஜார்ஜ்” என்றார் டேவிட்.
லேசாக சிரித்த ஆட்ரியன்
“உங்களுக்கு எக்ஸ்ப்ளைன் செஞ்சா நீங்க ரெண்டு பேரும் நல்லா சொதப்பி காட்டி கொடுத்துடுவீங்களே? அதான் சொல்லாம இருக்கேன்” என்றான் ஆட்ரியன் கிம்.

“டேய் உனக்கு ஹையர் ஆபீசர் நான்டா என்னை என்ன சொல்ற நீ?” என்று அவர் கேட்க இருவரையும் புரியாமல் பார்த்தான் ஜார்ஜ்.

“என்ன ஜார்ஜ் ரொம்ப குழப்பமாவே இருக்கா? என்னை நீ நம்புறல?” என்று ஆட்ரியன் கேட்க அதிர்ந்த ஜார்ஜ்
“சர் என்ன சர் நீங்க இப்படிலாம் பேசுறீங்க? நீங்க செய்யுறது குழப்பம் இருந்தாலும் ஏதாவது காரணம் இருக்கும்னு நம்புறவன் சர் நானு.
ஆனா உங்க ஆக்டிவிட்டீஸ்ல யாரும் ஹர்ட் ஆகிடகூடாதுனு மட்டும் தான் நான் யோசிப்பேன் சர்” என்று ஜார்ஜ் சொல்ல ம்ம் என்பது போல மண்டையை ஆட்டியவன்

இருவரையும் அமைதியாக தன்னை கவனிக்கும்படி சைகை மொழியில் பேச ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
டேவிட் ஏதோ கேட்க வர ஷ்ஷ் என்று சைகை செய்தவன் சைலண்ட் அண்ட் வாட்ச் என்று தான் வைத்திருந்த போர்ட் அருகே சென்றவன் மார்க்கர் எடுத்து எழுதிக்கொண்டே பேசலானான்.

“நம்புறீங்களா? அப்போ விடுங்க” என்று பேசியவனது கையோ போர்டில்
‘நம்ம பேசுறதுல இருந்து செயல்வரை எல்லாம் ரெக்கார்ட் ஆகுது. சோ எதையும் பேசாதீங்க’ என்று எழுதி இருந்தார்.
“பட் ஹவ் ஈஸ் திஸ் பாஸிபிள்” என்று டேவிட் சட்டென பேசிவிட தலையில் அடித்துக்கொண்டவனை சமாதானம் படுத்தும் வகையில்
“நம்புறதுக்காக அப்படியே எப்படி சர் விடமுடியும்? அதைதான் சர் கேட்டார்” என்று ஜார்ஜ் கூற தன் ஆட்காட்டி விரலையும் கட்டை விரலையும் சூப்பர் என்பது போல காட்டியவன்
“சரி இப்போ உங்களுக்கு என்ன தெரியணும்? இந்த கேஸ் விஷயமாவா? நான் சொல்லுவேன் ஆனா ரெண்டு பேரும் உளறாம இருக்கணும் ஓகே?” என்றபடி போர்டில் வேறு எழுதினான்.
“ம்ம் ஓகே ஓகே சொல்லுடா” என்று டேவிட் கேட்க.

“இது என்னோட கெஸ்தான்.
இந்த கேஸ் ஏதோ சைக்கோ திரில்லர் கொலை போல தெரியுது” என்றான் ஆட்ரியன்
போர்டில்
‘இது நம்ம ஸ்டேட்டோட முக்கியமான ஆள் சம்பந்தப்பட்ட கேஸ் அதை நான் கண்டுபிடிக்க கூடாதுனு தான் என்னை திசை திருப்ப இந்த கொலை நாடகம்’ என்று எழுதி இருக்க.

அவன் பேசுவதை வைத்து “எப்படி சர் இதை தொடர்பு படுத்தி சொல்றீங்க? ஐ மீன் சைக்கோ கொலைனு? ஒரே போல பேட்டர்ன் இல்ல, பாடி இந்த குழந்தையோடது தான் கிடைச்சது அதுக்கு முன்ன ஹைனா ஏதாவது இழுத்துட்டு போய் இருக்கும்னு கேஸ் குளோஸ்” என்று ஜார்ஜ் அவனது பேச்சை சரியாக பிடித்துக்கொள்ள பேச்சு இப்படி இருந்தாலும் சைகை மொழியில் அந்த பெரிய ஆள் டிமிட்ரியா என்று இருந்தது.
“யூ ஆர் பிர்ரிலியண்ட் ஜார்ஜ்” என்று சொல்லி தன் கட்டைவிரலை உயர்த்திய ஆட்ரியன்
“முதல் கேஸும் அவன் எரிக்கத்தான் ட்ரை செஞ்சு இருப்பான் அதுக்குள்ள ஹைனா ஏதாவது வந்து இருக்கும் அவன் விட்டுட்டு ஓடி இருப்பான்.
பிகாஸ் ரெண்டு பேரும் ஒரே ஏஜ் குழந்தைங்க அது ஒரு க்ளூ, அண்ட் ரெண்டு பேரும் கேர்ள்ஸ் அது ஒரு க்ளூ, இதுல புதுசா கிடைச்ச தகவல் அவன் அந்த பொண்ணை ரேப் செய்யல.
வெறும் கொடுமை படுத்தி கொன்னு எரிச்சு இருக்கான் அவ்ளோதான் அவனோட தாட் அதனால நான் அந்த வழியில தான் இந்த கேஸை மூவ் செய்ய போறேன் இப்போ உங்களுக்கு புரிஞ்சுதா?” என்று கேட்க.
“ஓஓ புரிஞ்சது அப்போ அந்த சைக்கோ கில்லர் வேற குழந்தைகள கடத்துறதுக்கு முன்ன தடுக்கணும் சர்” என்று ஜார்ஜ் சொல்ல
“எஸ் ஐ வில் டூ மை லெவெல் பெஸ்ட் டிமிட்ரி சர் எனக்கு இந்த கேஸ்ல எல்லா ரைட்ஸ்ஸும் கொடுத்து இருக்கார் சோ சீக்கிரமே அந்த சைக்கோ கில்லர கண்டுபிடிப்பேன் ஒகே பை” என்றவன் தலையை மட்டும் ஆட்டிவிட்டு நகர்ந்தான்.
அவர்களது உரையாடலை கேட்டுக்கொண்டு இருந்த டிமிட்ரிக்கு அவனை வேறு வழியில் திசைதிருப்பியது திருப்தியே.
“கென்ரி எதுக்கும் அவன்மேல ஒரு கண்ணு வை” என்றவர் கிளம்பி சென்றுவிட்டார்.
அவன் நகரவும் அவர்கள் பேசுவது போல பேசினர்.
“என்ன ஜார்ஜ் இவன் இப்படி சொல்லிட்டு போறான்.
சைக்கோ கொலைகாரன்னு வேற சொல்றான் இவனுக்கு ஏதாவது ஆகிடுச்சுனா? என்ன செய்யுறது?” என்று டேவிட் கேட்க
“அதான் டிமிட்ரி சர் ஃபுல் சப்போர்ட் கொடுத்து இருக்காருனு சொன்னாரே சர் அப்போ அவரே இவருக்கு புரொடக்ஷன் கொடுக்காமலா இருப்பாரு? அவருக்கு எதுவும் ஆகாது சர் கவலைபடாதீங்க நான் கிளம்புறேன்” என்று ஜார்ஜ் சொல்ல
“ம்ம் நானும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன்” என்றவர் அவனுக்கு பாய் சொல்ல போகும்முன் ஆட்ரியன் மொபைலை வீட்டிலேயெ வைத்துவிட்டு ஷூ போடாமல் வீட்டில் இருப்பது போல் கிளம்பி ஒரு இடத்துக்கு வர சொல்லி எழுதி அதை அழித்துவிட்டு சென்று இருந்ததால் மற்றவர்கள் சாதாரணம் போல கிளம்பி சென்றனர்.
ஆட்ரியன் சொன்ன இடத்திற்கு வந்ததும் டேவிட்
“ஏன்டா இதுக்கு எதுக்கு இவ்ளோ ரிஸ்க்? பேசாம அந்த டிவைஸ்லாம் ஜாமர் வெச்சு அவங்க ஒட்டு கேட்கமுடியாதபடி செய்யலாம்ல? யாருக்கு அவ்ளோ தைரியம் என் வீட்டுக்குள்ளேயே வந்து ஆடியோ டிவைஸ் செட் பண்ணது?” என்று அவர் வரிசையாய் கேட்க.

“கொஞ்சம் மூச்சு விட்டுக்கோங்க உங்க கேள்வி எல்லாத்துக்கும் பதில் சொல்றேன்.
முதல்ல உங்க வீட்ல மட்டும் இல்ல நம்ம மூணு பேர் வீட்டுலேயும் ஆடியோ டிவைஸ் வெச்சு இருக்கு. அண்ட் நம்ம எல்லாரோட ஃபோன் கால்ஸ்ஸூம் ஹேக் ஆகி இருக்கு.
டிமிட்ரியோட ஆளுங்க எல்லா இடத்துலேயும் இருக்காங்க.
அதுல யாராவது இந்த வேலையை ஈஸியா செய்யலாம் நம்ம லொகேஷனை டிராக் செஞ்சு இருக்காங்க சோ நாம மொபைலோட எங்கே போனாலும் நம்மள ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிடுவாங்க” என்று ஆட்ரியன் கூற
“இவ்வளவும் உனக்கு எப்போ தெரிஞ்சது யார் சொன்னது?” என்று டேவிட் கேட்க
“எல்லாம் நம்ம வொயிட் ஹார்ஸ்தான்” என்று சொல்ல அதிர்ந்து பார்த்தார் டேவிட்.
குழப்பமாய் பார்த்தான் ஜார்ஜ்.
“டோண்ட் வொர்ரி ஜார்ஜ் இதனால உங்களுக்கோ உங்க ஃபேமிலிக்கோ எந்த ஆபத்தும் வரவிடமாட்டேன்.
அவங்க மொபைல்ல பேரண்டல் ஆக்செஸ் இருக்குறனால அவங்களால ஹேக் செய்ய முடியாது” என்று சொல்ல
“அது பிரச்சனை இல்லை சர் வொயிட் ஹார்ஸ்னு சொன்னீங்களே அந்த ஹேக்கர் யாருனு யோசிச்சேன் அவர் சொல்றதை அப்படியே நம்புறீங்களே அவரும் அந்த டிமிட்ரியோட ஆளா இருந்தா?” என்று ஜார்ஜ் கேட்க.
லேசாக சிரித்த ஆட்ரியன்
“நான் பார்த்து பழகிட்டு இருக்குற வொயிட் ஹார்ஸ் என்னோட சைட்ல்வுட் ப்ரண்ட் ஷின் அலைஸ் ஷிவன் தான்.
அவன் இதுவரைக்கும் எந்தவித ஆளுக்கும் தப்புக்கு துணை போக மாட்டான்.
அதுவும் இல்லாம இந்த கேஸ்க்கு எனக்கு க்ளூ கொடுத்ததே அவன்தான்.
அவன் நம்ம டேவிட் சாரோட பையன் அவன் தலைமறைவா தான் இருப்பான்” என்று சொல்ல அதிர்ந்து போன
ஜார்ஜ்
“ஐயோ சார் மன்னிச்சிடுங்க சர் நான் நான் யாரோ எனன்வோனு பேசிட்டேன் சர்” என்று இருவரிடமும் மன்னிப்பு கேட்க.
“டோண்ட் வொர்ரி ஜார்ஜ் உனக்கு அவனை பத்தி தெரியாதுல விடு” என்று டேவிட்
“இப்பவாச்சும் குழப்பாம தெளிவா சொல்லுடா என்னானு?” என்று டேவிட் ஆட்ரியனிடம் கேட்க.

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-11
அத்தியாயம்-11

சாரதி புது பைக்கிலிருந்து பார்வையை அகற்றி அத்தெரு வாசலில் யாரையோ தேடுவதாக தெரிய, காஞ்சனா வந்ததும், "யாரை சாரதி தேடற " என்றார்.

"அது வந்து மா." என்று லாவண்யாவை பற்றி கூற வந்தவன், ஏனோ தயங்கி ஒன்னுமில்லைமா" என்றான்.

சைக்கிள் தொலைந்த பொழுது சந்தித்த பெண்ணை பார்த்தேன் என்று கூறவா முடியும்? அதற்கு முன்னரே லாவண்யாவை பார்த்ததால் கூற தயங்கினான். மேலும், இப்பொழுது தான் பைக் வாங்கி உள்ளது. இந்த நேரம் பெண் என்று ஆரம்பித்தால் எங்கே பொறுப்பற்ற பேச்சு என்று நினைத்தாலும் கஷ்டம். காஞ்சனா அவ்வாறு நினைப்பவர் அல்ல.. ஆனாலும் தவிர்த்தான்.

லாவண்யா பின்னால் திரும்பி திரும்பி பார்த்து நடக்கவும் இலக்கியாவுமே, "என்னடி முன்னால பார்க்காம பின்னால பார்க்கற?" என்றார்.

"இல்லை சித்தி.. இஷிதா மயங்கி விழுந்தப்ப ஒருத்தர் உதவி செய்தார். ஆனா அவரோட சைக்கிள் தொலைந்துடுச்சுனு சொன்னேன்ல.‌‌.. அவருக்கு சைக்கிள் கிடைச்சிடுச்சு. பைக் வேற வாங்கவும் செய்திருக்கார் போல வெளிய இருந்தது. அதை பார்த்துட்டு சந்தோஷமா இருந்தார். நீங்க ஏதாவது நினைப்பிங்களோனு பேசாம வந்துட்டேன்" என்றாள்.

"ஏன்டி இஷிதா மயங்கினப்ப உதவினார். என்னை கூப்பிட்டுருந்தா நன்றி சொல்லியிருப்பேன். ஏன் தப்பா நினைக்க போறேன். இங்க பாரு உங்கம்மா அளவுக்கு நான் தப்பா நினைக்க மாட்டேன். ஆம்பள பசங்களிடம் பேசினாவே தப்புனு சொல்லலை" என்று பேசவும், லாவண்யா தவறை உணர்ந்தாள்.

இலக்கியாவோ ''மறுபடியும் எங்கயாவது பார்த்தா சுட்டிகாட்டு பேசுவோம்." என்று முன்னால் நடந்தாள்.

லாவண்யாவோ இலக்கியாவின் பேச்சால் கலவரம் குறைந்து ஏதோ ஆனந்தமாய் வந்தாள்.

வீட்டில் ஆவுடையப்பன் சுரேஷ் பேசிக் கொண்டிருந்தார்கள். மாலதியை பொண்ணு பார்க்க வரும் போது சொந்தமென யாராவது இருக்க வேண்டுமென்று சித்தப்பா ஆவுடையப்பன் மற்றும் சுரேஷ் இலக்கியாவை தான் அழைத்திருந்தார். ஏனெனில் புருஷோத்தமனும் தந்தைக்கு ஓரே பையன், ஆவுடையப்பன் சித்தப்பாவுக்கும் சுரேஷ் ஒரே பையன் என்பதால் உறவென இருப்பவர் தானே செல்ல வேண்டும்.
இங்கு ஆவுடையப்பன் பெரும்பாலும் இருக்குமிடம் தெரியாமல் இருப்பவர்.
வயதான காலத்தில் அலைச்சல் வேண்டாமென வருவதை தவிர்க்க, சுரேஷ் இலக்கியா செல்ல பேசினார்கள்.

ஆவுடையப்பனுக்கு சாப்பாடு என்று பேச்சு அடிப்படும் போது, லாவண்யாவோ 'எனக்கு சமைக்க தெரியும் சித்தி. நான் பார்த்துக்கறேன்." என்றாள்.
"அப்படியா.. செமஸ்டர் வேற. படிச்சிட்டு எழுதிட்டு இருப்ப, இதுல சமையல் வேற, வேலை கூடுமே" என்றாள்.

"அதெல்லாம் ஒரா நாள்ல சமாளிச்சிடுவேன் சித்தி" என்றாள்.

அதனால் அடுத்து வேலூருக்கு செல்ல முடிவெடுத்தார்கள் சுரேஷ் இலக்கியா.

அன்றைய நாள் இனிதாக கழிய, அடுத்த நாள், சைக்கிளில் தான் டிப்போவிற்கு வந்தான் சாரதி.

காஞ்சனா கூட, ஏன் சாரதி பைக்ல போகலாமே. வீட்ல சும்மா வாங்கி வச்சி அழகு பாராக்கவா வாங்கியது" என்று கேட்க, "அப்படியில்லைம்மா... இத்தனை நாள் சைக்கிள்ல வந்தது, சட்டுனு பைக்னா.. ஒரு‌மாதிரி அசௌகரியமா இருக்கு. நான் பைக்கை எங்கயாவது வேற விஷயத்துக்கு கொண்டு போய் சுத்தறேன். கொஞ்சம் நாள் கழிச்சு டிப்போவுக்கு போக உபயோகிக்கறேன்" என்றான்.

'உன் இஷ்டம்யா' என்றதும் சைக்கிளில் வந்து அதன் இருப்பிடத்தில் வைத்துவிட்டு அங்கே நிர்வாகிக்கும் ஆளிடம் சைக்கிளை பத்திரமாக பார்த்துக்க கூறி, கையெழுத்து போட்டு நடத்துனர் இருக்கையில் அமர, அவனுக்கு முன்னே இருந்தது லாவண்யா தேவி தான்.

ஒரு சிநேக புன்னகை சிந்தி, "முத்து அண்ணா ரைட்" என்றான்.

தேவியிடம் லாவண்யா, "மாலதி அக்காவை பொண்ணு பார்க்க சுரேஷ் சித்தப்பாவையும், இலக்கியா சித்தியும் போறாங்க. இஷிதாவை கூட கூட்டிட்டு போறாங்க. நானும் சின்ன தாத்தா மட்டும் தான். ஏதாவது ஈஸியா சமைக்க டிப்ஸ் கொடு" என்றாள்.

தேவியோ "மேகி பாஸ்தா பாக்கெட்டை வாங்கி சுடுதண்ணில போட்டு கொண்டு வா. எனக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்" என்றாள்.

"அய்ய... மூனு வேளை செய்ய கேட்டா ஒரு வேளைக்கு சொல்லற. உன்னை மாதிரி ஆளுக்கு தான் எல்லாமே பாக்கெட்ல விற்கறது வந்துடுச்சு." என்று கடிந்தாள்.

சாரதி பேசியதை கேட்டு லேசாக சிரிக்க, லாவண்யா சாரதி சந்திப்புகள் 'தெரிந்தவர்', என்ற ரீதியில் தான் பயணித்தது.

அப்படியென்றும் இலக்கியா இல்லாத நாளில் லாவண்யா பயந்து போகவில்லை‌ காலையில் உப்புமா, மதியம் பூண்டு குழம்பு அப்பளம் என்று வைத்தாள்.

தேவி கூட "நான் எதுக்கோ உனக்கும் சேர்த்து எங்கம்மாகிட்ட டிபன் வாங்கிட்டு வந்தேன்" என்றாள்.

"உப்புமாவை டேஸ்ட் பண்ணி பாரு" என்றாள். பேருந்தில் சின்னதாக இருந்த டிபன்‌பாக்ஸை திறந்து, சீனியை தொட்டு சாப்பிட்ட தேவியோ "இருக்கறதிலயே எனக்கு பிடிக்காத புட் உப்புமா. ஆனா அதையே செய்து என்னை சாப்பிட வச்சி, செமையா இருக்குனு சொல்ல வச்சிட்ட. உனக்கு வர்றவன் பொழைச்சிப்பான்" என்றாள்‌.

"உன்னை.." என்று தோளில் இடித்து டிபன் பாக்ஸை மூடினாள். சாரதி அதெல்லாம் கவனித்தவனாக முறுவலிட்டான்.
சில நேரம் தான், இதே போன்ற பயணியர்களோடு சிரிப்பும் பேச்சும் கேட்டு ரசிப்பது.
பெரும்பாலும் குழந்தைகள் முன்ன வந்து நின்றால் அந்த நேரம் முகத்தை உற்றென்று‌ மாற்றி சிரிக்க வைப்பான். அதிலும் விசிலை வைத்து ஓசையெழுப்பி, அது போல லாவண்யாவை கவனிப்பதையும் வாடிக்கையானது.

கல்லூரி முடிந்து வீடு திரும்பிய பொழுதும் வீடு பெருக்கி, சுத்தம் செய்து தாத்தாவுக்கு டீயை போட்டு தந்தாள்.
தேவியிடம் பேசியபடி இரவு சப்பாத்தி செய்து தந்தாள். தேவியுமே அன்று அங்கு தான் சாப்பிட்டாள்.

நேரமாகவும், தேவி சென்றப்பின் உறங்க போனாள்.
ஆவுடையப்பனோ "லாவண்யா... கதவை நல்லா தாழ்போடு..‌ மறந்துட போற.. அப்பறம் கேஸ் ஆப் பண்ணிட்டியா? ஒருக்கா பார்த்துக்கோ. அந்த ஜன்னல் கதவு அதையும் சாத்திடு. இல்லைன்னா ஏதாவது பூச்சிகிச்சி வந்துடும்" என்று ஒவ்வொன்றாக கூற, "கேஸ் ஆப் பண்ணிட்டேன் தாத்தா. லாக் பண்ணிட்டேன்." என்று கூறியவள் இரவு அக்கா மாலதியிடம் வீடியோ காலில் 'மாப்பிள்ளையை பார்த்தியா? உனக்கு பிடிச்சிருக்கா? மாமா எப்படியிருக்கார்" என்றெல்லாம் கேட்டாள்.

"அம்மா அப்பாவுக்கு பிடிச்சிருக்கு. எனக்கும் பிடிச்சிருக்கு. நகை பத்தி பேசினாங்க. வரதட்சனை எவ்வளோ கேட்டதா சித்தி சொன்னாங்க. அப்பா எல்லாம் போடறதா சொன்னார்.
நீ கூட இல்லையேனு வருத்தமா இருந்தது" என்றாள் மாலதி.

"எனக்கும்... அங்கிருந்தா உன் கூட சண்டை போட்டுட்டு சுத்திட்டு இருந்தேன். இப்ப இங்க வந்தப்பிறகு உன்னை ரொம்ப மிஸ் பண்ணறேன். அதுவும் உனக்கு கல்யாண தடை ஆகுதுனு அம்மா ஒரு வருஷமா புலம்பவும், நான் சாமிகிட்ட கூட வேண்டினேன். அக்காவுக்கு பிடிச்சவனா வந்து கல்யாணம் நடக்கணும்னு." என்றாள் லாவண்யா. என்னயிருந்தாலும் அக்கா தங்கை உறவு என்பது அடித்தாலும் அணைத்துக் கொள்ளும் அல்லவா.

"சரி.. இப்ப.. பொண்ணு பார்க்க தான் வரலை. கல்யாணத்துக்கு எந்த எக்ஸாம் இருந்தாலும் வரணும். எப்படியும் செமஸ்டர் டேட் எல்லாம் பார்த்து தான் அப்பா நிச்சயம், கல்யாணம் வைப்பார்." என்று பேச, லாவண்யா ஆமென்றாள்.

அப்படியே அன்னை அலமேலுவோ, "சாப்பிட்டியா இல்லையாடி." என்று கேட்டார்.

"சப்பாத்தி சாப்பிட்டாச்சும்மா." என்றாள்.

"லாவண்யா... பூனை நடுராத்திரி வரும் அதனால ஜன்னலை சாத்திடு" என்றாள்.

"பூனை உள்ள வருமா சித்தி. பாலை சூடுபடுத்தி ப்ரிட்ஜில வச்சிட்டேனே." என்றாள்.

"அட பால் இல்லைன்னாலும் கிச்சனை உருட்ட வரும்" என்றார்.

"அவ தூங்கிட்டா நடுவுல எந்திரிக்கவே மாட்டா" என்று அலமேலு கூற, "அம்மா.. குறை சொல்லறதிலயே இரும்மா. சித்தி ஜன்னலும் லாக் பண்ணிடறேன் சித்தி." என்றாள் லாவண்யா.

அன்னை அலமேலு, அக்கா மாலதி, அப்பா புருஷோத்தமன், சித்தப்பா சுரேஷ்யிடம் எல்லாம் பேசிவிட்டு இஷிதாவை பற்றியும் கேட்டுவிட்டு திரும்ப, ஆவுடையப்பன் தாத்தா எப்பொழுதே உறங்கியிருந்தார்.

நைஸாக தேவியிடம் போனில்  பேசிக் கொண்டிருந்தாள். பிறகு நேரம் கழித்து உறங்கினாள்.

அடுத்த நாள் மதியமே இலக்கியா வந்துவிடுவார் என்றாலும் பருப்பும் அவரை பொரியலும் சமைத்து வைத்து கிளம்பினாள்.

இரண்டு மூன்று முறை அடுத்தடுத்த நாட்கள் சாரதி நட்பாக தான் புன்னகைத்தான்.

லாவண்யாவுமே... அப்படி தான். ஏன் கூடவந்த தேவியும் நட்பு ரீதியில் புன்னகைத்து ஏறுவார்கள்.

அப்படி சென்றுக் கொண்டிருக்கும் தருணம், அன்று தேவி ஏறிவிட்டு, லாவண்யா ஏறினாள்.

தேவிக்கு இடம் கிடைக்கவும் அமர்ந்துவிட்டாள். ஆனால் லாவண்யாவுக்கு இடம் கிடைக்காமல் நின்றுக் கொண்டு வந்தாள்.

சாரதி பின்னிருக்கையிலிருந்து முன்னே கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறி, டிக்கெட் பணம் வாங்கி கிழித்து டிக்கெட் கொடுத்தபடி, ஆங்காங்கே நின்று விசிலடித்து முன் நோக்கி வந்தான்.

லாவண்யாவை கடக்கும் போது முத்து அண்ணா சிக்னல் என்று வண்டியை சட்டென நிறுத்த, லேசாக இடித்து விட்டான் சாரதி. ஆனால் பதட்டத்துடன் 'சாரி." என்று கூற, லாவண்யாவோ அங்கும் இங்கும் பார்த்து மௌனமாய் தன் துப்பட்டாவை சரிசெய்துக் கொண்டாள்.

சாரதிக்கு அவளது செய்கையால் பகீரென்றது. லாவண்யா தோளை தான் உரசியபடி மேலே சாய்ந்தான். இத்தனை நாள் நட்பாக பேசிய பெண் மீது எதிர்பாராமல் உரசியதை கண்டு அவனுமே பதறினான்.‌

அடுத்தடுத்து டிக்கெட் கிழிப்பதில் கூட கவனம் சிதறியது. லாவண்யா ஸ்டாப் இறங்கும் போது, லாவண்யா சாரதியை காண அவனோ கஷ்டத்துடன் 'சாரி' என்ற முகவாட்டத்துடன் தான் பார்த்தான்.‌

லாவண்யா தெரியாமல் நடந்திருக்கும் என்று அன்றைய நாளை கடந்தாள்‌. பிறகு மதியம் கூட அவன் பேருந்தில் வந்தாலும், அவனது பார்வையை தவிர்த்து கொண்டாள்.

சாரதியும் காலையில் தெரிந்து உரசியதால் அவள் பார்வை தவிர்ப்பதாக புரிந்துக் கொண்டான்.‌

இரண்டு நாள் கழித்து சாரதி டிக்கெட் கிழித்து கம்பியில் கை வைக்க, சட்டென திரும்பிய லாவண்யாவோ முதுகில் தட்டி விட்டாள்.

சாரதிக்கோ தெரியாம கை பட்டுடுச்சா? என்று தான் குழம்பினான்.
ஏனோ லாவண்யா முறைத்து தள்ளுவது போல சாரதிக்கு தோன்றியது.

அடுத்த இரண்டு நாளும் பார்வைகள் தவிர்த்தாள் லாவண்யா.
ஆனாலும் அதே வழக்கமான ஏழு மணி பஸ்ஸை தவிர்க்க இயலாது சோர்ந்தாள்.
சாரதி காது பக்கம் வந்து விசிலடித்து தொலைக்க, லாவண்யா வெடுக்கென முறைத்தாள்.

"அறிவில்லை... பக்கத்துல வந்து.. இப்படியா?" என்று பல்லை கடித்தாள்.

சாரதியோ அக்கம் பக்கம் பார்த்து, என்ன நடந்ததென புரியாமல், தவிர்த்து அடுத்து வாயிலேயே விசில் சப்தம் எழுப்பினான்.
ஏன் தன்னிடம் அறிவில்லையா?' என்ற அளவு அனைவர் மத்தியிலும் திட்டினாளென்று சாரதிக்கு புரியவில்லை.

அதே நேரம் கல்லூரியில் லாவண்யாவால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. தேவி எவ்வளவோ என்னவென கேட்டும் மௌனமாய் சொல்லாமல் மறுத்தாள்.

சாரதி சமீபத்தில் பேருந்து பிரேக் அடித்ததும் தன் மீது வந்து மோதி, தள்ளி சென்ற நாளிலிருந்து நினைத்து பார்த்து, பேருந்து பயணத்தையே கிட்டதட்ட வெறுத்தாள்.

ஆனாலும் கல்லூரி முடியவும் இம்முறையும் பேருந்தில் தானே பயணம் செய்ய வேண்டியதாயிருந்தது.

சாரதி பேருந்து வரவும், லாவண்யா தேவியிடம், "தேவி.. அடுத்த பஸ்ல போகலாமா?" என்று ஏறாமல் கேட்டாள்.

தேவியோ "என்ன விளையாடறியா? நேரத்துக்கு வீட்டுக்கு வந்து தொலைக்கலை அங்க எங்கம்மா ஏன் எதுக்கு லேட்டுனு கேட்டு தொலைப்பாங்க. என்ன தான் பிரச்சனைனு கேட்டாலும் சொல்ல மாட்டேங்கற" என்று பேருந்து படிக்கட்டில் ஏறினாள்.

"நீ வர்றியா வரலையா?" என்று கேட்க, சாரதியை பார்த்து வேண்டாவெறுப்பாக ஏறினாள்.

சாரதிக்கு லாவண்யா கோபமாக இருப்பதை ஒரளவு யூகித்திருந்தான். அவனுக்கும் அவளது பார்வை மாறிய விதத்தை வைத்து, யோசித்து பார்த்து, தான் அவள் மீது மோதியதில் இருந்து, இந்த எரிச்சலுடன் தன்னை காண்பதை யூகித்துக் கொண்டான்.

சிநேக புன்னகை வீசியது கடவுளுக்கு கூட பொறுக்கவில்லை போலும். அதனால் பயணியராகவே கடந்து செல்ல முயன்றான்.

அம்பத்தூர் எஸ்டேட் வந்ததும் டிப்போவில் வண்டி நின்றது. பயணிகள் எல்லோரும் விழுந்தடித்து இறங்குவதை கண்டாள்.

தேவியும் அவசரமாய் இறங்க போனவளிடம், "இருடி... இந்த கூட்டத்துல இடிச்சிட்டு இறங்க வேண்டாம். எல்லாரும் இறங்கினப் பிறகே இறங்கலாம்." என்று லாவண்யா கூற, தேவியும் சரியென மற்றவர் இறங்க காத்திருந்தனர்.‌

அந்த நேரம், ஒரு வயசான பெண்மணியோ "தம்பி பிராட்வேல ஏறினப்ப, மீதி சில்லரை இறங்கறப்ப கேளுங்க தர்றேன்னு சொன்னியே" என்றதும், "சாரி பாட்டி... ஏதேதோ யோசனையில மறக்க பார்த்தேன் இருங்க" என்று ஐம்பது ரூபாய் நோட்டும் இருபது ரூபாய் நோட்டை எடுத்தான். கூடவே ஏழு ரூபாயுக்கு சில்லரை தேடினான். லாவண்யாவின் மாற்றத்தை புரிந்துக்கொள்ள இயலாத சிந்தனை தான் அது.

பையில் ஐந்து ரூபாய் காயினும், இரண்டு ரூபாய் காயினும் எடுத்து நீட்டும் நேரம் முகம் நிமிராமல் கையை நீட்ட சாரதியின் கை அந்த நேரம் பார்த்து, லாவண்யா குறுக்கே அவசரமாய் இறங்க போகவும், அவள் கழுத்தில் தீண்டியது.
லாவண்யா பதறி பின்னால் நகரும் முன், சாரதியோ நாணயத்தின்‌ பிடியை நழுவ விட, ஐந்து ரூபாய் நாணயமோ அவளது ஆடைக்குள் சென்றது. சாரதியும் ரூபாய் தாளை பாட்டியிடம் தந்தவன், பதட்டத்துடன் மீண்டும் ஐந்து ரூபாய் சில்லறை காயினை அவசரமாக எடுத்து பாட்டியிடம் தந்தான்.

அனைவரும் முட்டி மோதி இறங்கி முடிக்க, லாவண்யாவோ  "அப்ப அவ்ளோ திட்டிட்டேன்னு இப்ப பழிவாங்கிட்டல்ல? அதுவும் காயினை எங்க போடற? நான் என்ன போஸ்ட் பாக்ஸா? இல்லை உண்டியலா? அறிவில்லை உனக்கு? உனக்கு இதே வேலையா?" என்று கத்த, கூட வந்த தேவியோ "என்னடி ஆச்சு?" என்று கேட்டாள்.

சாரதி கை தன் கழுத்துக்கு கீழ் வந்து தீண்டி, சில்லரை வேறு தன் மார்புக்கு மத்தியில் சிக்கிக் கொண்டதை கூற தயங்கினாள்.

சாரதியோ, லாவண்யாவை பார்த்து, "இங்க பாரு.. நான் எதையும் வேண்டுமின்னே பண்ணலை. நான் உன்னை கவனிக்கலை. தேவையில்லாம கத்தாத. நான் கன்டெக்டரா நாலு வருஷம் சர்வீஸ்ல இருக்கேன்.. இந்த மாதிரி எப்பவும் நடந்ததில்லை. ஏன் தான் உன்னிடம் இப்படி மாட்டிக்கிட்டேன்னு சத்தியமா தெரியலை. தயவு செய்து பெருசுப்படுத்தாத." என்றான்.

"ஏது... இப்ப நடந்ததை பெருசுப்படுத்தக் கூடாதா? அத சொல்ல நீயாருடா. ஆப்ட்ரால் ஒரு கண்டெக்டர்." என்று லாவண்யா கத்தவும், டிரைவர் முத்துவோ "என்னப்பா சாரதி அங்க என்ன பிரச்சனை?" என்று வந்தார்.

"அதெல்லாம் ஒன்னுமில்லை அண்ணா." என்று கூறியவன். லாவண்யாவிடம் மென்குரலில், "தயவு செய்து ஏதாவது சொல்லி நீயே உன்னை பேசுப்பொருளா மாத்தாத." என்றான் அவசரமாய்.

"சீ.. உன்னிடம் பேசறதே அசிங்கம். இதுல நடந்ததை மறைக்க சொல்லறல்ல" என்று நின்றாள்.

தேவியோ "என்னடி நடந்துச்சு? கொஞ்ச நாளா நீ அப்செட்டாவே பஸ்ல டிராவல் பண்ணற. கேட்டா சொல்ல மாட்டேங்கற" என்று கேட்டாள்.

லாவண்யாவோ அதே கோபத்தில் நிற்க, சாரதியோ, "உனக்கு என்கூட சண்டை போடணுமா.. அங்க டிப்போவுக்குள்ள இருப்பேன். ஏதாவது புகார் தந்துட்டு, நீயே சண்டை போட வா. இப்ப என்னை விடு" என்று அவசரமாய் இறங்கி டிப்போவுக்குள் சென்றான்.

மதிய நேர உணவு நேரமென்பதால் நிறைய கண்டெக்டர் டிரைவர் இருந்தார்கள். சாரதிக்கு இந்த நேரம் அந்த பெண் இங்கு வந்து தவறுதலாக நடந்ததை கூறி என்னை தவறாக நினைக்க வைத்தால்?' என்று பயந்தான். இத்தனை நாள் வாங்கி வைத்த நல்ல பெயரும், தந்தைக்கு உண்டான மதிப்பும் நொடியில் அழிந்துடுமோ என்று பயந்தான்.

ஆனால் என்ன தான் நடந்தது? இப்பொழுது நடந்ததும், முன்பு அவள் மீது மோதியதும் தவறு தானே என்று சாட்சி கடிந்தது.

சாரதி வேதனையின் உச்சத்தில் நின்றான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்‌

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-10
அத்தியாயம்-10

போலீஸ் ஸ்டேஷனில் சாரதியின் சைக்கிளைத் திருடியவன், ஒரு குற்றவாளியைப் போல அல்லாமல், அங்கே வந்திருந்த விருந்தாளியைப் போல நாற்காலியில் அமர்ந்திருந்தான்.

அவனுடைய பெயர் கோவிந்தன். அந்த ஏரியாவில் அவனைத் தெரியாதவர்கள் குறைவு. ஆளுங்கட்சியிலும் சரி, எதிர்க்கட்சியிலும் சரி அவனுக்கு வேண்டிய ஆட்கள் இருந்தார்கள்.

அதனால் போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளேயே அவனுடைய குரல் ஓங்கிக் கேட்டுக் கொண்டிருந்தது.

"யோவ்... நான் எல்லாம் பலானதைத் திருடி பெரிய சம்பவம் பண்ணுவேன். எத்தனையோ கேஸ் என் மேல இருக்கு. இப்போ... ஒரு சைக்கிளுக்காக சிசிடிவி வச்சு என்னை இங்க வரவழைச்சிருக்கீங்க!" என்று கையை விரித்தான்.

"என்னை மாதிரி ஒரு ஆளுனு சொல்லிட்டா போயிட்டே இருப்பேனா? என்னய்யா பிரச்சனை? பணம் வேணுமா? எந்தக் கட்சி ஆளுகிட்ட வேணும்னாலும் வாங்கித் தர்றேன். இல்ல... வேற ஏதாவது வேணுமா? சொல்லுங்க."என்று திமிராகப் பேசிக்கொண்டிருந்தான்.

எதிரில் இருந்த போலீஸ் அதிகாரியோ அவனை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஒரு கான்ஸ்டபிள் உள்ளே வந்து, "சார்... அந்தப் பையன் வந்துட்டான்." என்றான்.

"வரச்சொல்லு." சில நொடிகளில் சாரதி உள்ளே வந்தான்.

அவனது பார்வை முதலில் போலீஸ் அதிகாரியிடம் சென்றது. பிறகு அங்கே இருந்த கோவிந்தனைப் பார்த்தது

கோவிந்தனோ அவனை மேலிருந்து கீழ்வரை பார்த்தான். "எவன் அவன்?" என்றான்.‌

"சைக்கிள் திருட்டுப் போச்சுன்னு கம்ப்ளைன்ட் கொடுத்த பையன்." என்றார் அதிகாரி.

கோவிந்தன் உதட்டைச் சுழித்தான். "ஏன்டா... பெருசா BMW காரையா திருடிட்டேன்? சிசிடிவி எல்லாம் வச்சு ஆதாரம் காட்டி என்னை இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க. என்னடா வேணும்?" சாரதி ஒரு நொடி கூட யோசிக்கவில்லை.

அவன் நேராக கோவிந்தனருகில் சென்று, அடுத்த நொடி அவனது கால்களைப் பிடித்துக் கொண்டான்.

"அண்ணா.." என்றவனது குரலில் கோவிந்தனே அதிர்ந்து போனான்.

அங்கே இருந்த போலீஸ்காரர்களும் ஒரு நொடி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். "என் சைக்கிளை எனக்குத் தந்துடுங்க அண்ணா." என்றான்.

"டேய்... என்னடா இது? எழுந்திரு!"

"ப்ளீஸ் அண்ணா..." சாரதியின் குரல் உடைந்து போயிருந்தது. "அது எங்கப்பா பயன்படுத்தின சைக்கிள். அவர் இறந்ததுக்கப்புறம்... அவரோட கடைசி நினைவா நான் அதை மட்டும் தான் வச்சிருக்கேன். உங்ககிட்ட சண்டை போடவோ, பெரிய ஆளுன்னு காட்டிக்கிட்டு என் பொருளை வாங்கிக்கவோ நான் வரலை அண்ணா. அது எனக்கு வேணும். அவ்ளோதான்." என்று கேட்டான்.

கோவிந்தன் அவனை வெறித்துப் பார்த்தான். அவன் எதிர்பார்த்தது வேறு. 'என் பொருளைத் திருடிட்டியே... கொடு' என்று சத்தம் போட்டு, கழுத்தில் சட்டை காலரை பிடித்து சண்டை போடுவான். ஜம்பமாக என்ன செய்ய முடியுமோ போடா' என்றுதான் கூற நினைத்திருந்தான்.

ஆனால்... இவன் தன்னுடைய காலில் விழுந்து கெஞ்சிக் கொண்டிருக்கிறான் என்று ஆச்சரியமாய் பார்த்தான்.

"டேய்... என்னடா நெஞ்சை நக்கற?" என்று கேட்டாலும் அவன் குரலில் இருந்த திமிர் சற்றுக் குறைந்திருந்தது.

சாரதி எழுந்து நின்றான். "சென்டிமென்ட்டா பேசறேன்னு நினைக்காதீங்க அண்ணா. அதான் உண்மை. என்னிடம் வேற எதுவும் இல்லை. அதனாலதான் உங்களிடம் வந்து கேட்கிறேன்." என்று பணிவாக கேட்டான்.

கோவிந்தன் அவனை மீண்டும் உற்றுப் பார்த்தான். ஆள் வாட்டசாட்டமாகத்தான் இருந்தான் சாரதி.

வயதுக்கேற்ற உடற்கட்டும் இருந்தது. எப்படியும் அடிக்க வேண்டுமென்று நினைத்தால் நிச்சயம் மலையோடு கூட மோதும் வல்லமை இருக்கின்றவனாக தான் சாரதி தெரிந்தான். ஆனால்... இப்படி கெஞ்சிக் கொண்டிருப்பது அவனுடைய தோற்றத்துக்கே முரணாக இருந்தது.

"பேஜாரா இருக்கியேடா..." என்று முணுமுணுத்தவன், "சரி... உன் சைக்கிளை ஏன் திருடினேன்னு தெரியுமா?" சாரதி அமைதியாக நின்றான்.

"நீ வச்சிருந்த சைக்கிள் நல்லா இருந்துச்சு. எண்ணெய் போட்டு பளிச்சுனு வச்சிருந்த. புதுசு மாதிரி கண்ணுல பட்டுச்சு. அதான் தூக்கிட்டேன்."

சிறிது நேரம் அமைதியாக இருந்தவன், "ரொம்ப நாளாச்சு.. சின்னதா திருடி... அதான் திருடி விலைக்கு விற்க நினைச்சு வேற இடத்துக்கு அனுப்பிட்டேன். இப்ப அது எங்க இருக்குன்னு..." என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே 'ஒரு நிமிஷம்' என்று அவனது அலைபேசி எடுத்து விற்க கூறியவனிடம் பேசினான்.

"டேய் நேத்து விற்க சொல்லி தந்தேனே... ஆங்... அந்த சைக்கிளை எடுத்துட்டு நம்ம ஏரியா ஸ்டேஷனுக்கு வந்துடு. ஆமா... அந்த சைக்கிளை உடனே எடுத்துட்டு வா. விற்க வேண்டாம்... பணம் வாங்கிட்டியா.. இல்லை இல்லை கொண்டா.. ஆமா... காரணமாத்தான். சீக்கிரம்." என்று கூறி அழைப்பைத் துண்டித்தான் கோவிந்தன்.

சாரதியின் முகத்தில் முதல் முறையாக சிறிய நம்பிக்கை தெரிந்தது.

கோவிந்தன் அதை கவனித்தான். "உன்னைப் பார்த்தா பாவமா இருக்கு. என்னடா வேலை பார்க்க?" என்று கேட்டான்.

"கண்டெக்டரா இருக்கேன் அண்ணா." என்றான்

"கண்டெக்டராவா?"

"ஆமா."

"காக்கி டிரஸ் போட்டிருக்கியே..."

"அது கண்டெக்டர் யூனிஃபார்ம் அண்ணா."

"ஓ..." கோவிந்தன் தலையசைத்தான்.

"உங்கப்பா என்ன பண்ணாரு?"

"அவரும் கண்டெக்டர்தான். அவர் வேலை பார்த்த இடத்திலேயே எனக்கும் வேலை தந்தாங்க" என்றான் சாரதி.

"உங்கப்பா பெயர்?"

"சண்முகம்."

கோவிந்தன் சில நொடிகள் அமைதியாக இருந்தான்.

"சண்முகமா?"

"ஆமா அண்ணா."

"கூடப்பிறந்தவங்க இருக்காங்களா?"

"இல்ல. அம்மா மட்டும் அண்ணா."

"சொந்த வீடு இருக்கா" என்றார்.

"ஆமா அண்ணா... ஆனா பெருசா இல்லை. ஒரு பெட்ரூம், ஹால், கிச்சன் அவ்ளோதான்." என்று விவரித்தான்.

"அம்மா என்ன பண்றாங்க?"

"வீட்டுலேயே தையல் மெஷின்ல அக்கம் பக்கத்துல மட்டும் துணி தச்சி தருவாங்க. அப்பா இருந்தப்ப இருந்த வீட்டை கொஞ்சம் மாற்றி இருக்கு." என்றான்.

கோவிந்தன் அவனைப் பார்த்தபடி மெதுவாகத் தலையசைத்தான்.

"ம்ம்..." அப்போது வெளியே ஒரு ஆட்டோ வந்து நின்ற சத்தம் கேட்டது.

சில நொடிகளில் ஒரு ஆள் உள்ளே வந்து, ''அண்ணா... இதுதானே?" என்று சைக்கிளை நீட்டினான்.

சாரதி திரும்பிப் பார்த்தான். அவனது கண்கள் விரிந்தன.

"இதான் எங்கப்பா சைக்கிள்.." என்று முணுமுணுத்தவனின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.

இரண்டு நாட்கள் தூசி படிந்திருந்த அந்தச் சைக்கிளை பார்த்தவுடனேயே, அவன் ஓடிச் சென்று அதைத் தொட்டுப் பார்த்தான்.

ஹேண்டிலை வருடினான், சீட்டைத் தொட்டான், பிறகு சைக்கிளின் பெல்லை அழுத்திப் பார்த்தான். டிரிங்... அந்த ஓசை அவனுக்குள் 'அப்பா உன்னிடமே வந்துட்டேன் கண்ணா' என்று கூறி மனதை மீண்டும் உயிர்ப்பித்தது.

கண்களை மூடிக் கொண்டவன், சைக்கிளின் ஹேண்டிலைப் பிடித்தபடி சில நொடிகள் நின்றான்.

கோவிந்தன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"என்னய்யா இது..." என்று அருகில் இருந்த போலீஸ்காரரிடம் மெதுவாகக் கேட்டான்.

"சைக்கிள் கிடைச்ச சந்தோஷத்துல அழறான் இவன் சண்டை போடுவான், கத்துவான், பேஜார் பண்ணுவான்னு நினைச்சா... இப்படி இருக்கான்." போலீஸ் அதிகாரி லேசாகச் சிரித்தார்

"ம்ம்... எல்லா நேரமும் இப்படித்தான் இருப்பான் போல." என்றார் அவர். சாரதி தன்னுடைய கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.

பிறகு கோவிந்தனருகில் வந்து, "ரொம்ப தேங்க்ஸ் அண்ணா." என்று கூறி, தன்னுடைய கையில் இருந்த மோதிரத்தைக் கழற்றினான்.

"இதை வச்சுக்கோங்க." என்றான்

கோவிந்தன் அவனைப் பார்த்தான்.

"என்னாதிது?"

"சைக்கிள் வாங்கித் தந்ததுக்காக..." என்று கூறினான்

"ஏய்... என்னை என்ன பைத்தியக்காரன்னு நினைச்சியா?" என்று கோவிந்தன் கத்தினான்.

சாரதி திகைத்தான். "ஒன்னும் வேண்டாம். நான் திருடினதை திருப்பிக் கொடுத்தேன். அதுக்கு நீ எனக்கு பணமோ, பொருளோ தர்றது எனக்கு வேண்டாம். எதுனாலும் திருடி எடுத்துக்கறது தான் என் ஸ்டையில். நீயா தந்தா வாங்கமாட்டேன். புரிதா." என்றான்.

"அண்ணா..."

"மோதிரத்தை நீயே வச்சுக்கோ." என்று அவனது கையை மூடி வைத்தான்.

பிறகு அவனது தோளில் தட்டியபடி, "என்னமோ தெரியலடா... உன்னைப் பிடிச்சிருக்கு." சாரதி அமைதியாக அவனைப் பார்த்தான்.

"ஏதாவது உதவி வேணும்னா... கோவிந்தன்னு கேட்டு என்னை தேடி வா. என்னால முடிஞ்சதை பண்ணறேன்." என்றான்.

"தேங்க்ஸ் அண்ணா." சாரதி மனதாரக் கூறினான்.

பிறகு போலீஸ் அதிகாரியிடம் திரும்பி, "சார்..."

"என்ன?"

"உங்களுக்கும் ஏதாவது காசு தரணுமா சார்?" என்று தயக்கத்துடன் கேட்டான்.

"என்ன?" என்று அதிகாரிகள் கடுப்பானார்கள்.

"இப்ப என்கிட்ட பணம் இல்லை சார். இந்த மோதிரம் மட்டும் இருக்கு. இதை நீங்க வச்சுக்கோங்க." என்று மீண்டும் மோதிரத்தை நீட்டினான்.

போலீஸ்காரர் அவனைப் பார்த்து சிரித்தார். "ஏன்டா... திருடனே உன்னை பார்த்து மோதிரத்தை வாங்காம திருட்டு போன பொருளையும் தந்துட்டு போனா போகட்டும்னு விட்டுட்டுப் போறான். எங்களை களவாணியா மாத்தப் பார்க்கிறியா?" என்றார்.

சாரதி உடனே கையைப் பின்னால் இழுத்துக் கொண்டான்.

"சாரி சார்."

"போ... போ. இனிமே எதையும் தொலைக்காத."

"சரிங்க சார்."

"அப்புறம்... மோதிரம், காசு எதுவும் கழட்டிக் கொடுக்காத. உழைச்சு சம்பாதிச்சது. அதை நீயே வச்சுக்க." என்றார்.

"சரிங்க சார்." சாரதி மீண்டும் சைக்கிளை ஒருமுறை பார்த்தான்.

அவனது முகத்தில் இப்போது நிம்மதி மட்டுமே இருந்தது.

"தேங்க்ஸ் சார்." என்று கூறிவிட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான். எப்படியும் ஏதாவது வாங்கிக்கொண்டு தான் சைக்கிளை எடுக்க முடியுமோ என்ற அர்த்தத்தில் தான் மோதிரத்தை நீட்டினான். நல்லவேளை யாரும் அப்படி ஏதும் கட்டளையிடவில்லை.

சைக்கிளை மிதித்தபடி, வீட்டின் வாசலுக்கு வந்ததும், 'டிரிங்... டிரிங்..' என்று சைக்கிளின் பெல்லை அழுத்தினான்.

அந்தச் சத்தத்தைக் கேட்டதும் வீட்டுக்குள் இருந்த காஞ்சனா அவசரமாக வெளியே ஓடி வந்தார்.

வாசலில் மகனுடன் நின்றிருந்த சைக்கிளைப் பார்த்ததும் அவரது முகம் மலர்ந்தது.

"அட.. சைக்கிள் கிடைச்சிடுச்சா?"

"ம்ம் ஆமா அம்மா."

"எனக்குத் தெரியும் சாரதி.. கஷ்டப்பட்டு தேடினது எதுவும் சும்மா போகாது. எப்படியாவது கிடைச்சிடும்னு எனக்கு நம்பிக்கை இருந்துச்சு. அதுவும் இல்லாம இது உங்கப்பாவோடது. நம்மை விட்டு அவர் தொலைய விரும்ப மாட்டார்" என்று சைக்கிளைத் தொட்டு பார்த்தார்.

சாரதி பெருமூச்சு விட்டான். "அம்மா... இப்பதான் நிம்மதியா இருக்கு."

அந்த நேரமே அவன் முத்து அண்ணாவுக்கு போன் செய்தான். "அண்ணா... சைக்கிள் கிடைச்சிடுச்சு."

அங்கிருந்து வந்த சந்தோஷக் குரலைக் கேட்டபடி சாரதியும் சிரித்தான். போனை வைத்ததும் காஞ்சனா அவனைப் பார்த்தார்.

"இனி இந்த சைக்கிளை எடுக்காதய்யா." என்றார் காஞ்சனா. சாரதி திடுக்கிட்டான்.

"ஏன்மா?" என்று பதறினான். ஒரு முறை தொலைத்ததால் இப்படி சொல்கின்றாரோ? என்று.

காஞ்சனா வீட்டுக்குள் சென்று கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொண்டு வந்தார்.

அதை மகனது கையில் வைத்தார். "இனி நீ எங்கயாவது போகணும்னா... பைக்குல போ. ரகுமான் பாயிடம் பேசி வச்சிருக்கேன். இந்த பண்ததை முன் பணமா தந்துட்டு சாவி வாங்கிட்டு உனக்கு பிடிச்ச வண்டியை வாங்கிக்கோ." என்றார்.

"என்ன பைக்கா?''

"ம்ம்ம பைக்குக்கு தான்" என்றார்.

அவன் அதிர்ச்சியுடன் அம்மாவைப் பார்த்தான்.

"என்னம்மா சொல்லற?" என்று விழித்தான்.

"நம்ம இன்ஸ்டால்மென்ட்ல பொருட்கள் வாங்கற ரகுமான் பாய்கிட்ட பைக் பத்தி சொல்லி வச்சிருக்கேன். இன்னைக்கு சாயங்காலம் போய் பார்த்துட்டு எடுத்துட்டு வாய்யா." என்றார்.

"ஏன்மா? எதுக்கும்மா? தேவையில்லாத செலவு" என்றான்.

காஞ்சனா மகனின் முகத்தைப் பார்த்தார். "எம்புள்ள இப்படிக் கலங்கி நிக்கறதை இனிமே நான் பார்க்கக்கூடாது. சைக்கிளும் உபயோகிச்சிக்கோ. பைக்கும் தேவைக்கு உபயோகிச்சிக்கோ.''  சாரதியின் கண்கள் கலங்கின.

"எல்லாம் உங்கப்பா இருந்தப்பவே நீ கேட்டது தான்யா." சிறிது நேரம் அமைதியாக இருந்தவர்,

"அப்போ உங்கப்பா இருந்தாரு. 'இப்ப முடியல... கொஞ்சம் நாள் கழிச்சு வாங்கித் தர்றேன்'ன்னு அவரும் சொல்லிட்டே இருந்தாரு. இப்ப..." அவரது குரல் உடைந்தது. "இப்ப அம்மா இருக்கேன்ல?" சாரதி தலையைக் குனிந்தான்.

"நம்மகிட்ட பெருசா எதுவும் இல்லன்னு எனக்குத் தெரியும். ஆனா... புள்ளைங்க சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கறது அம்மாவோட பெரிய ஆசை." என்றார்.

"அம்மா..."

"நீயும் இந்த நாலு வருஷமா வேலை பார்த்துட்டு இருக்க? உன் காசுலதான் இந்த வீட்டுக்கு எத்தனையோ நடந்திருக்குது. அதுல கொஞ்சம் உனக்காக செலவு பண்ணினா என்ன? இது நீ சம்பாரிச்சதுல தான் பணம் கட்டறேன். என்ன இன்ஸ்டால்மெண்ட்"

"ஆனா..."

"பத்து வருஷத்துக்கு லோன் கட்டணும்னு இருந்தாலும் பரவாயில்லை." என்று புன்னகைத்தார்.

"என் புள்ளை இனிமே சைக்கிள் திருட்டுப் போயிடுச்சுன்னு நெஞ்சைப் பிடிச்சிட்டு நிக்கக்கூடாது. பைக்குல போகணும். அதுதான்." சாரதியால் அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை.

அவன் பணத்தை கையில் இறுகப் பற்றிக் கொண்டு,

"அம்மா..." என்று அழைத்தபடியே தாயை அணைத்துக் கொண்டான்.

காஞ்சனாவும் மகனது தலையை வருடினார்.

"எம்புள்ள ராஜா கணக்கா இருக்கணும்னு சொல்ல மாட்டேன். நீ எனக்கு ராஜா தான்யா'' என்று கூறியபோது சாரதியின் கண்களில் மீண்டும் கண்ணீர் வழிந்தது.

ஆனால்... இந்த முறை அந்தக் கண்ணீரில் வலி இல்லை. அம்மாவின் அன்பு இருந்தது.

"சரி போய் நல்ல நேரத்தில பைக்கை வாங்கிட்டு வர்ற வழில கோவில்ல வச்சி ஒரு பூஜை முடிச்சிட்டு வந்துடுவோம்" என்றார்.

சரிம்மா.. இரண்டு நிமிஷத்துல வந்துடறேன்" என்று ஓடினான்.

ரகுமான் பாயிடம் பைக்கை வாங்கினான். சில பத்திரத்தில் கையெழுத்தும் போட்டான்.

பக்கத்திலேயே கோவில் என்பதால் அங்கு வண்டியை தள்ளிக் கொண்டு வந்து நிறுத்தினான்.

காஞ்சனா பூவை வாங்கி பைக்கில் போட்டு, அர்ச்சனை செய்ய அர்ச்சனை தட்டு வாங்கினார்.

அதே கோவிலில் தான் இலக்கியா இஷிதாவுடன் லாவண்யா வந்திருந்தாள்‌. லாவண்யாவின் அக்கா மாலதிக்கு நல்லபடியாக இந்த பெண் பார்க்கும் நிகழ்வு நடந்தேறி, இதே வரன் திருமணத்தில் முடிய வேண்டுமென வேண்டிக்கொள்ள வந்திருந்தாள்.

சாரதியின் பெயரில் அர்ச்சை செய்ய காஞ்சனா கூறினார். சாரதி வாசலில் இருந்த பைக்கை கவனித்து புன்னகை பூக்க, அந்த நேரம் லாவண்யா கோவிலை முதல் சுற்று சுற்றிக் கொண்டிருந்தாள். கொடிமரத்தை தொட்டு கும்பிட்டு மேலே விழியை பார்வையிட்டாள்.

சாரதிக்கு லாவண்யாவை பார்த்ததும், ஏதோ ஒரு சிறு புன்னகை உதட்டில் வந்தது. அதே நேரம் கோவில் மணி அடித்திட, இளைஞருக்கே உரித்தான ரசனையான பார்வையை அவள் மீது பதித்தான்.

லாவண்யா மூன்று‌முறை சுற்றும் சிந்தனையில் சாரதியை கவனிக்கவில்லை.

தீபாராதனை காட்டி சாரதி முன் நீட்ட, அவசரமாய் தொட்டு கும்பிட்டவன், "அம்மா.. வெளிய பைக்கை பார்த்துக்கறேன். நீங்க எனக்காக கோவிலை சுற்றிட்டு வாங்க." என்று பறந்தான்.

காஞ்சனா சரியென்றிட, சாரதி அவசரமாய் லாவண்யா முன் வந்தான். இஷிதாவோ "அக்கா... நானும் அம்மாவோட பிரசாதம் வாங்க அவங்க கூட போறேன்" என்று கையை விடுத்து இலக்கியாவுடன் செல்லவும், லாவண்யா தனியாக நின்றாள்.

சாரதி முன்னே வரவும், இவரா' என்று தான் திகைத்தாள் சாரதியோ "ஸ்டேஷன்ல சைக்கிள் கிடைச்சிடுச்சுங்க. ஆனாலும் அம்மா பைக் வாங்கி தந்திருக்காங்க. பைக் வெளிய நிற்கு." என்றான்.

லாவண்யா பதட்டமாய் அங்கும் இங்கும் சித்தி பார்த்து விடுவாரோ என்று பயந்திட, "அடையாளம் தெரியலையாங்க. நான் சாரதி. பஸ் கன்டெக்டர்" என்று கூற, "அய்யோ.. தெரியும்ங்க. சித்தி கூட வந்தேன்.. அவங்க என்னை தப்பா" என்று கூற வருவதை விழுங்கி பயப்பட, "சாரிங்க." என்று நகர்ந்தான்.

"லாவண்யா.. இஷிதாவிடம் உனக்கு பிரசாதம் தந்திருக்கேன் அதை வாங்கிடு. இல்லைன்னா அவ டிரஸ்லே சிந்தி சாப்பிடுவா‌" என்று கூற, சாரதியோ 'லாவண்யா... பெயரை நினைவு வச்சிக்கணும்' என்று சாரதி தள்ளி சென்றிருந்தான்.

காலமோ தள்ளி செல்ல வைக்கலாமா?! அல்லது நெருக்கத்தை கூட்டுமா?! என்று கற்சிலையாக இருந்த கடவுள் அவர்களை கவனித்தார்.

-தொடரும்.

-பிரவீணா தங்கராஜ்