onlinetamilnovels.com Forum - Recent Posts
தகிக்கும் நிலவொன்று-17
அத்தியாயம்-17
ஆஷா மெதுவாக ஷ்ரத்தாவை நோக்கி நகர்ந்தாள். அவளது சேலையின் மடிப்புக்குள் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தி விரல்களுக்குள் நழுவியது.
'இன்னும் இரண்டு அடி..' நெருங்கினால் போதும். குழந்தையோடு இருந்த ஷ்ரத்தாவை ஒரே குத்தில் முடித்துவிடலாம்.
அந்த நேரம் "ஆஷா." என்ற கார்த்திகாவின் குரல் பின்னால் ஒலித்தது. ஆஷா திடுக்கிட்டு திரும்பினாள்.
ஒரு நொடி பதறியவள், எதுவும் தெரியாதது போல கத்தியை மறைக்க முயன்றாள்.
ஆனால் கார்த்திகாவின் கண்கள் அதற்குள் அதை பார்த்துவிட்டிருந்தது.
"என்ன மறைக்கிற?" என்று மெதுவாக நடந்து வந்தாள்.
ஆஷா ஒரு கணம் தயங்கினாள்.
அடுத்த நொடியே அட்டம்ட் பெயிலானால் அதுவேறு தனக்கு இழிவென, கார்த்திகாவை புறம் தள்ளி 'சாவுடி!" என்று கத்திக்கொண்டு நேராக ஷ்ரத்தாவை நோக்கி பாய்ந்தாள்.
அவள் எதிர்பார்க்காத ஒன்று நடந்தது. அடுத்த நொடியில் மூன்று பெண் கைதிகள் ஒரே நேரத்தில் ஷ்ரத்தாவின் முன்னால் சுவராக வந்து நின்றனர். கிட்டதட்ட அரணாக.
ஒருத்தி ஆஷாவின் கையை முறுக்கினாள். மற்றொருத்தி அவளது இடுப்பில் ஓங்கி உதைத்தாள். மூன்றாவது கைதி அவளது கால்களை வாரிவிட,
ஆஷா சமநிலை இழந்து தரையில் விழுந்தாள். எழுந்திருக்க முயன்றவளை மூவரும் சேர்ந்து மண்டியிட வைத்தனர். அவளது கையில் இருந்த கத்தி தரையில் விழுந்து உருண்டது.
அந்த நேரம் கார்த்திகா மெதுவாக அருகில் வந்தாள்.
அவளது முகத்தில் கோபமோ பதற்றமோ எதுவுமில்லை.
மாறாக பதட்டமில்லாத அமைதி மட்டும் இருந்தது.
ஆஷாவின் முகத்தை பார்த்தவள் மெதுவாக குனிந்தாள். "என்ன போட்டு தள்ள வந்தியா?" என்று கேட்டாள்.
ஆஷா மாட்டிக் கொண்டதற்கிணங்க நிற்க "முதல்ல.. இந்த ஜெயிலுக்குள்ள யாரை கொல்ல வர்றேன்னு தெரிஞ்சிட்டு வரணும். ஆங்" என்று அதட்டினாள்.
பிறகு அந்த மூன்று கைதிகளையும் பார்த்து கண் காட்டியபடி, "பாத்ரூம்ல... கால் தடுக்கி கீழ விழுந்து... பின்மண்டை உடைஞ்சு செத்திருக்கணும். டெத் ரிப்போர்ட் எடுத்தா.. அப்படித்தான் வரணும். காட் இட்" என்றதும் மூவரும் அமைதியாக தலையசைத்தனர்.
ஆஷாவின் வாயை இறுக பொத்தி இழுத்துச் சென்றனர்.
ஆஷா இதற்கு தண்டனை தான் வரும பார்த்தால் மரணமா? என்று பயந்தாள். ஆனால் கதறல் கூட வெளியில் கேட்கவில்லை.
அத்தனை நேரமும் தள்ளி நின்றபடி ராயனுக்கு பால் புகட்டிக் கொண்டிருந்த ஷ்ரத்தா மட்டும் ஒன்றும் நடக்காதது போல அமைதியாக இருந்தாள்.
குழந்தை பால் குடித்து முடித்ததும், அவனை தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்தபடி கார்த்திகாவை நோக்கி நடந்தாள்.
"தேங்க்ஸ்..." என்றாள். கார்த்திகா திரும்பிப் பார்த்தாள்.
"எதுக்கு?" என்று புருவம் சுருக்கினாள்.
"எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இருந்தது. இன்னைக்கு புது கைதி ஆஷா வந்து அதை தீர்ந்து வச்சிட்டாங்க." என்றாள்.
"நீங்க... வினோத் அண்ணா மூலமா... என்னை பார்த்துக்கணும்னு இங்க வேலைக்கு வந்தவங்க தானே? நீங்க... அந்த மூணு கைதிகளும், அதே காரணத்துக்காகத் தானே உள்ள இருக்கிங்க." என்று கேட்டாள்.
கார்த்திகா சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.
பிறகு தலையிலிருந்த தொப்பியை சரி செய்தவள்
"சாரி டூ சே... வினோத் சாரை... இப்ப யாராலயும் பார்க்க முடியாது. அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில இருக்கார்னு. ஹரிணி சொன்னாங்க. அதுக்கு மேல... எனக்கும் எதுவும் தெரியாது."
சிறிது இடைவெளி விட்டாள் "ஆனா... எங்க குடும்பத்தோட செட்டில்மெண்ட்... மாத வருமானம்... எல்லாமே முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கு... அது யாருனு தனியா சொல்ல தேவையில்ல.. அதனால‌‌.. உங்களையும் உங்க குழந்தையையும் பாதுகாப்பா வைத்திருக்கறது. எங்க பொறுப்பு." என்று குரலை சற்றுக் கடினப்படுத்தினாள்.
"இதை அட்வான்டேஜா எடுத்துட்டு... என்னை கேள்வி கேட்டு தொந்தரவு பண்ணாதிங்க.. மத்தவங்களுக்கு எங்க மேல சந்தேகம் வராம இருக்கறதும்,  எங்க வேலைதான். சோ... நீங்க தள்ளியே நில்லுங்க மேம். நாங்க.. தள்ளி போகமாட்டோம். என்று கூறிவிட்டு திரும்பிச் சென்றாள்.
அவள் சென்ற பின்பும், ஷ்ரத்தா அங்கேயே நின்றாள்.
தன்னையோ, தன் குழந்தையையோ, கொல்ல வந்தவர்கள் இங்கே இருப்பது கூட அவளுக்கு புதிதல்ல.
ஆனால் அவர்களை தடுக்க, ஏற்கனவே இத்தனை பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டிருப்பது.
இன்று தான் முழுமையாக புரிந்தது. இதை செய்ய சத்ரியன் எந்தளவு யோசித்திருப்பான். ஐரீனை காப்பாற்ற முற்படும் முன்பே அதற்கு பின்னால் நேரும் ஆபத்தும் இழப்பும் அறிந்தவனாக பாதுகாப்பு செய்து விட்டு சென்றவனை எண்ணி வியந்தாள்.
அதன்பிறகு ராயனை வளர்ப்பதில் இருந்த பயம் மெதுவாக குறைய ஆரம்பித்தது. அவனை மற்றவர்களிடம் கொடுத்து விட்டு சில நேரமாவது நிம்மதியாக தூங்க கற்றுக்கொண்டாள்.
அடுத்த நாள் பேப்பரில் ஆஷா என்ற கைதி பாத்ரூமில் வழுக்கி விழுந்து மரணம் என்ற சின்னதான கட்ட செய்தியுடன் ஆஷா சேப்டர் முடிவடைந்தது.
நாட்கள்.. மாதங்களாக மாறின.
ராயன்... சின்ன சின்ன சிரிப்புகளை சிரிக்க ஆரம்பித்தான். கால்களை எட்டி உதைத்து விளையாடினான். குப்புற படுத்து தலையை தூக்க முயன்றான். அவன் செய்த ஒவ்வொரு அசைவும்...
ஷ்ரத்தாவுக்கு வாழ வேண்டிய காரணமாக மாறியது.
எல்லாருக்கும் அவன்...
'ராயன்.' என்றாலும் ஷ்ரத்தாவுக்கு மட்டும்...
'ரியன்.' ஆனான். சத்ரியனின் பெயரின் கடைசி ஒலி.
அவள் உயிராய் நேசித்த மனிதனின் நினைவு.
"ரியன்..." என்று அழைத்தாலே... சத்ரியனையே அழைப்பது போல இருந்தது.
அப்படியே... ராயன் உட்கார கற்றுக்கொண்டான்.
தவழ்ந்தான். பிறகு மெல்ல மெல்ல எழுந்து நிற்க முயற்சி செய்தான்.
ஒவ்வொரு நாளும அவன் சிறைக்குள்ளே வளர்ந்தான். அவனோடு ஷ்ரத்தாவின் தாய்மையும் வளர்ந்தது.
யதுநந்தன் மாதம் இரண்டு முறை தவறாமல் வந்தான். குழந்தைக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து கொடுத்தான்.
ஷ்ரத்தா எடுத்த புகைப்படங்களை ஹரிணிக்கு அனுப்பிக் கொண்டிருந்தான். ஹரிணி அதற்கெல்லாம் பதில் கூட அனுப்பவில்லை.
ருத்ரன் கூட வாரமிரு முறை வந்தான். ஆனால் ஷ்ரத்தா ருத்ரனிடம் அதிகம் பேசவில்லை. "கீர்த்தனா அம்மா வரலையா?" என்று மட்டும் கேட்பாள்.
கீர்த்தனா தான் ருத்ரனின் விருப்பம் தெரிந்து ஷ்ரத்தாவின் பெயரையே அவர் நினைவிலிருந்து மீட்க நினைத்தார். அதனால் சிறைக்கு வந்து பார்ப்பதை அறவே விட்டுவிட்டார்.‌
ருத்ரன் ஷ்ரத்தா கேட்கவும் "ரிலேட்டிவ் ஃபங்க்ஷனுக்கு போயிருக்காங்க."
"உடம்பு சரியில்ல."
"உன்னை பார்த்துட்டு வர சொல்லியிருந்தாங்க."
என்று ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு புது காரணம் சொல்லி சமாளித்தான்.
வாரம் ஒரு முறை ருத்ரனும், மாதம் இரண்டு முறை
யதுநந்தனும், இருவரும் மாறி மாறி வந்து சென்றனர்.
கீர்த்தனா மட்டும் வரவே இல்லை. அது ஷ்ரத்தாவுக்கு சிறிய சந்தேகத்தை கொடுத்தாலும். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
குழந்தை ராயன் அவளது உலகம். அவனது உலகை காக்கா அங்கே மூன்று பெண் கைதி இருக்க, கார்த்திகா இருக்க சிறைசாலைக்குள்ளே அவளது வீடாக உணர்ந்தாள்.
ஒருநாள் கார்த்திகா கேட்டதற்கிணங்க, ஹரிணி மட்டும் வந்தாள். ஷ்ரத்தாவின் முதல் கேள்வியே... "வினோத் அண்ணா எங்க ஹரிணி?" என்று ஆசையாக கேட்க, ஹரிணியின் கண்கள் கலங்கின.
மெதுவாக 'ஒரு நாள் வெளியே போனார். அதுக்குப் பிறகு திரும்ப வரலை. அதனால தான் அவர் இல்லாம நான் வர தயங்கியது' என்ற வாசகத்தை தட்டச்சு செய்து காட்டினாள்.
அந்த ஒரு வார்த்தை ஷ்ரத்தாவின் இதயத்தை மீண்டும் உடைத்தது.
பேச்சை மாற்றுவதற்காக ஹரிணியே, ஒரு தூரிகை புகைப்படத்தை எடுத்து நீட்டினாள் ஹரிணி.
அதில் ஷ்ரத்தா. ராயன் அவர்களுக்கு அருகில்.
சத்ரியன். உயிரோடு நின்றது போல தத்ரூபமாக வரையப்பட்டிருந்தான்.
"எப்படி வரைஞ்ச?" என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் ஷ்ரத்தா. ஹரிணி மெதுவாக விரக்தியாக சிரித்தாள்.
"சத்ரியன்... என்னை நெருங்கினப்ப, என்னால கத்த முடியல. ஆனா... அவரை பார்த்துக்கிட்டே இருந்தேன். ஒரு உருவத்தை... பத்து நிமிஷத்துக்கு மேல பார்த்தா... அதை அப்படியே வரைய முடியும். அதான்... அவரோட உணர்வையும் இதுல வரைஞ்சேன்." என்று போனில் தட்டச்சு செய்து கூறினாள்.
ஷ்ரத்தா அந்த ஓவியத்தை மார்போடு அணைத்துக் கொண்டாள்.
அதே நேரம்... ஹரிணியிடம் சத்ரியன் அத்துமீறிய நினைவும்... வினோத் மீண்டும் வருவாரா இல்லையா.. என்ற கேள்வியும் ஷ்ரத்தா மனதை மீண்டும் நொறுக்கியது.
ஹரிணி சென்ற பிறகு. அந்த ஓவியத்தை தனது உடமைகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் பாதுகாப்பாக வைக்கச் சொல்லி சிறை அதிகாரியிடம் தந்துவிட்டாள்.
ராயனின் கையை பிடித்தபடி,
மெதுவாக சிறைக் கம்பிகளை நோக்கி நடந்தாள்.
இன்னமும் அவளது தண்டனை காலம் இருக்கின்றதே..!
நாட்கள் நகர, வெளியுலகில் ருத்ரனை வீட்டில் இறக்கிவிட்டு திரும்பிய சேகர், டிரான்ஸ்பார்மரில் மோதி விபத்தில் இறந்துவிட்டதாக தகவல் வந்தது.
ராயன் கொஞ்சம் வளர்ந்திருந்தான்.
சிறைக்குள் இருந்தாலும்...
அவன் சிரிப்பு மட்டும் அந்த இடத்தின் இருளையே விரட்டும் அளவுக்கு இருந்தது.
"ரியன்... ஓடாத!" என்று ஷ்ரத்தா கத்தினாள். ஆனால் அவனோ இப்பொழுது எல்லாம் கேட்பது போலவே இல்லை.
சிறை வளாகம் முழுக்க தளதளவென்று ஓடிக் கொண்டிருந்தான்.
பின்னால் இரண்டு பெண் கைதிகள், "டேய் குட்டி... நில்லுடா!" என்று சிரித்தபடி துரத்திக் கொண்டிருந்தனர்.
ராயன் மட்டும் கலகலவென்று சிரித்தபடி ஓடினான்.
நேராக கார்த்திகாவின் முன்னால் வந்து நின்றான்.
"கார்த்தி." என்று அவன் அழைக்க, "மேம் சொல்லு." என்று கம்பீரமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள் கார்த்திகா.
"இல்ல." என்று தலையாட்டியவன், சட்டென்று அவளது போலீஸ் தொப்பியை எடுத்து தன் தலையில் போட்டுக் கொண்டான்.
"நான் போலீஸ்!" என்று கத்தினான். அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.
"அடேய்... ராயன் என் தொப்பியை குடு." என்று கார்த்திகா பிடிக்க வர, "என்னை பிடிக்கவே முடியாது." என்று மீண்டும் ஓடினான்.
ஓடிக்கொண்டே, "எல்லாரும் லைன்ல நில்லுங்க..." என்று கார்த்திகாவை போல கையை காட்டி கட்டளை போட்டான்.
பெண் கைதிகளும் அவனுக்காக வரிசையாக நின்றனர். "சார்... இப்போ போதுமா?" என்று ஒருவர் கேட்க,
ராயன் கம்பீரமாக கைகளை பின்னால் கட்டிக் கொண்டு நடந்தான்.
ஒவ்வொருவரையும் பார்த்து, நல்ல பிள்ளையா இருக்கணும். காட் இட்" என்று அறிவுரை சொல்ல, அந்த இடமே சிரிப்பில் மூழ்கியது.
அதே நேரம் கார்த்திகா பின்னாலிருந்து மெதுவாக வந்து, அவனை அப்படியே தூக்கிக் கொண்டாள்.
"அய்யோ... பிடிச்சிட்டாங்க! அம்மா" என்று ராயன் கத்த,
"போலீஸ்கிட்டயே போலீஸ் விளையாட்டு விளையாடுறியா?" என்று அவன் கன்னத்தை கிள்ளினாள்.
"தொப்பி..." என்று அவள் கையை நீட்ட, "முத்தம் குடுத்துட்டு எடுத்துக்கோங்க." என்று பேரம் பேசினான்.
"அப்படியா?" என்று சிரித்த கார்த்திகா, அவன் இரு கன்னங்களிலும் மாறிமாறி முத்தமிட்டாள். உடனே தொப்பியை கழற்றி அவளது தலையில் வைத்தான்.
"குட் பாய்." என்று கார்த்திகா சொல்ல, "நான் குட் பாய் இல்ல..." என்று தலையசைத்தான்.
"அப்ப?"
"நான்... சத்ரியன் அப்பாவோட லிட்டில் பாய்!" என்று பெருமையாக சொல்லிவிட்டு சிரித்தான்.
அந்த ஒரு வார்த்தை ஷ்ரத்தாவின் கண்களை கலங்க வைத்தது. அவளுக்கே தெரியாமல் கண்கள் ஈரமானது.
கார்த்திகாவும் சில நொடிகள் அமைதியாக ராயனை பார்த்தாள்
அவனுக்கு தான் தந்தையின் முகமே தெரியாது.
ஆனால் தன் தாயின் வாயிலிருந்து தினமும் கேட்ட அந்த பெயரை மட்டும் பெருமையாக சொல்லக் கற்றுக் கொண்டிருந்தான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
வால்கனோ பூக்கள் அத்தியாயம் - 5
அத்தியாயம் - 5
Dmitri Korenov (டிமிட்ரி கொரேநவ்)
சுவிஸ் பெடரல் கவர்மெண்ட்டின் அறிவியல் மற்றும் அது சார்ந்த ஆராய்ச்சியின் டைரக்டர் மற்றும் டெபுட்டி டைரக்டர் ஸ்டேட் செக்ரட்டரி ஃபார் எஜூகேஷன் ரிசர்ச் அண்ட் இன்னோவேஷன்(நம்ம ஊர்ல எம்பி மாதிரி)
அந்த துறையில் எல்லா அதிகாரமும் மிக்கவர்.
அறிவியல் துறை சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு அனுமதி வழங்குதல் மற்றும் அதற்கான பட்ஜெட்டை ஒதுக்கீடு செய்து கொடுத்தல் மற்றும் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட வெளிநாட்டு தொடர்புகளை ஏற்படுத்ததுதல்.
இது எல்லாம் அவர் ஒருவர் கையில்தான்.
அவரை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருந்தான் ஆட்ரியன் கிம்.
அவரது அலுவலகத்திற்கு வந்து நின்றவன் தான் வாங்கிய அப்பாயிண்ட்மெண்ட்டை காட்டினான்.
அவனது ஐடி மற்றும் இதர பொருட்களை செக் செய்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை உள்ளே செல்ல அனுமதித்தனர்.
அங்கு உள்ளே மாளிகை போன்ற பகுதியில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர சொன்னார்கள்.
சமத்தாக சென்று அமர்ந்தான் ஆட்ரியன்.
(அவங்க ஆங்கிலத்தில் பேசினாலும் நாம தமிழ்லேயே கேட்போம்)
“நான் சர்க்கு இன்ஃபார்ம் பன்றேன் சர் கூப்பிடுவாங்க” என்றுவிட்டு ரிசப்ஷனிஸ்ட் சென்றுவிட அந்த மாளிகையை சுற்றி ஒரு தரம் பார்வையை ஓடவிட்டான்.
அதன்பின் தன் மொபைலை எடுத்து இன்ஸ்டாகிராம் நோண்ட ஆரம்பித்து விட்டான்.
நிறைய ரீல்ஸ் பார்த்தவன் வரிசையாக சிலவற்றை ரீபோஸ்ட் செய்து வைக்க அவனுக்கே அவனது பையித்தியக்காரத்தனத்தை எண்ணி சிரிப்பு தான் வந்தது.
இருக்கும் இடம் கருதி தன் புன்னகையை சுருக்கிக்கொண்டான்.
பத்து நிமிடங்கள் கழித்து அவனிடம் வந்த டிமிட்ரியின் உதவியாளர் அவனை அழைத்தார்.
எழுந்தவன் அவர் கைகாட்டிய திசையில் அவர்பின் நடந்தான்.
அது அரச மாளிகை என்பதால் பழையகால மாடல்படி இருந்தது.
ஆனால் கிட்டத்தட்ட ஒரு அரை கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டி இருக்கும் போல.
‘ஏன்டா இதுல நடந்துமா நீங்க இம்மாம் பெருசா இருக்கீங்க? நாம வேணா ரன்னிங் செய்வோமா? இவன் செத்துடுவானே’ என்று எண்ணியபடிதான் நடந்தான்.
நேரே நடந்தவர் வலதுபுறம் திரும்பி ஒரு அறையின் வாசலில் நின்று கதவை லேசாக தட்டியவர் திறந்தார்.
பிஏ மட்டும் தான் கொஞ்சம் ஃபிட்டாக இருந்தார் டிமிட்ரி இல்லை மற்ற யாருமே அங்கு ஒல்லியாக இல்லை.
எல்லாரும் கொஞ்சம் கொழுக் மொழுக்காகவும் டிமிட்ரி ஒரு அயல்நாட்டில் பிறந்தவர் என்பதால் கொஞ்சம் கருப்பாகவும் இருந்தார்.
உள்ளே சென்றவனை டிமிட்ரி ஹாய் சொல்லி கை நீட்ட அவனும் கை நீட்டினான் அதை பிடித்து குலுக்கியவர்.
“உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி ஆட்ரியன்.
நானும் உங்க ஃபேன்ஸ்ல ஒருத்தன்.
நீங்க கேஸ் எடுத்து ஹாண்டில் செய்யும் விதம் அவ்ளோ நல்லா இருக்கும்” என்றவர்
மேலும் “அதனாலதான் இந்த சிக்கலான கேஸைகூட உங்ககிட்ட கொடுக்க சொல்லி ரிக்குவஸ்ட் கொடுத்தேன்” என்று சொல்ல.
‘அப்போ என்னை தூங்கவிடாம செஞ்ச படுபாவி நீதானா? கிராதகா’ என்று மனதில் திட்டியவன் வெளியே லேசான சிரிப்பை உதிர்த்து
“ரொம்ப நன்றி சர். ஆனால் இது மருத்துவ ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட விஷயம் அதான் உங்ககிட்ட கொஞ்சம் டீடெயில்ஸ் கேட்டுட்டு போகலாம்னு வந்தேன்” என்று அவன் நிறுத்த
“ஓஓஓ ஷியூர் மிஸ்டர் கிம் ப்ளீஸ் உட்காருங்க” என்று சொன்னவர் தானும் அமர்ந்தார்.
“சொல்லுங்க என்ன சாப்பிடுறீங்க?” என்று டிமிட்ரி கேட்க
“ஒன் ஐஸ்டு அமெரிக்கானோ ப்ளீஸ் சர்” என்றான் பட்டென்று இதுவரை வந்தவர்கள் யாரும் அவர்முன் இப்படி பேசியதில்லை அதனால் சற்று ஜெர்க் ஆனவர் தன் பிஏவை பார்க்க
“எஸ் சர்” என்றபடி நகர்ந்தார்.
“சரி சொல்லுங்க ஆட்ரியன் என்கிட்ட இந்த கேஸ்ல என்ன டீடெயில்ஸ் கேட்கணும். உங்களுக்கு யார்மேலயாவது சந்தேகம் வந்து இருக்கா? அதுக்கு நான் ஏதாவது ஹெல்ப் செய்யணுமா? சீக்கிரம் இந்த கேஸை சால்வ் செய்யுங்க ஆபீசர்” என்று கேட்க
“எஸ் சர் என்னால முடிஞ்சவரை முயற்சி செய்யுறேன் ஆனா மண்டை சூடாகுறது தான் மிச்சம் இந்த கேஸ்ல ஒரு சின்ன க்ளூ கூட கிடைக்க மாட்டேங்குது சர்” என்று ஆட்ரியன் பேசியபடி அவரை ஓரக்கண்ணால் பார்க்க அவரது முகத்தில் ஒரு ஏளனசிரிப்பு வந்தது.
உடனே அதை சோகமாக மாற்றியவர்
“எக்ஸ்பெர்ட் போலீஸ் அண்ட் டிடெக்டிவ் நீங்களே இப்படி சொன்னா எப்படி ஆபீசர்?” என்று டிமிட்ரி கேட்க.
“ஐயம் ட்ரையிங் மை பெஸ்ட் சர்.
இதுல உங்கமேல கூட எங்களுக்கு சந்தேகம் வரலாம் சர் அதான் முன்னமே உங்ககிட்ட தகவல்களை கேட்டு தெரிஞ்சுக்கலாம்னு வந்தேன்” என்று ஆட்ரியன் பேச
சற்று அதிர்ந்தவர்
“ஓஓ இது என் துறை சம்பந்தப்பட்ட விஷயம் அதுவும் இல்லாமல் இது என் எல்லையில் நடந்த கிட்நாப்னு சந்தேகம் என்மேல வரும்தான் ஒன்னும் செய்யுறதுக்கில்லை.
நீங்க என்மேல சந்தேகப்பட்டா கூட அதிகாரமா விசாரிங்க ஆபீசர் கிம் உங்களுக்கு வேண்டிய எந்த தகவலா இருந்தாலும் நான் கொடுக்கிறேன்” என்றார் அவர்.
“தேங்க்யூ சர் இந்த வார்த்தை போதும் சர் எப்படியாவது இதை கண்டுபிடிக்க நான் கஷ்டப்படுவேன் சர்.
என் முதல் கொஸ்டின்
உங்களோட அனுமதியோட என்ன என்ன சயின்ஸ் அண்ட் மெடிக்கல் ஆராய்ச்சி நடக்குதுனு தெரியனும் சர்?” என்று ஆட்ரியன் கேட்க
உடனடியாக பதில் கொடுத்தார் டிமிட்ரி.
“சயின்ஸ் சம்பந்தமா நாசா விஞ்ஞானிகள் கூட சேர்ந்து நம்ம சேட்டிலைட் ஆராய்ச்சி அண்ட் அணுகுண்டு சோதனைங்க அப்புறம் எஜூகேஷன்ல என்னலாம் புதுமை செய்யலாம் பசங்க ஈஸியா படிக்க என்னலாம் செய்யலாம்னு டிஸ்கஷன்ஸ் போகுது ஆபீசர்.
மெடிக்கல் லைன்ல நிறைய லோ பட்ஜெட் மருந்துகள் கண்டுபிடிக்க ஆராய்ச்சி நடக்குது. அண்ட் அகெய்ன் கொரோனா ரேபிஸ் போல கொடிய வியாதிகள் வந்தா அதை எப்படி தடுக்கணும் குறைந்த செலவுல தடுப்பூசிகள் கண்டுபிடிக்கவும் ஆராய்ச்சி நடந்துட்டு இருக்கு ஆபீசர்” என்று அவர் கூறி முடிக்க
அந்நேரம் கதவை தட்டிவிட்டு உள்ளே வந்த அவரது பிஏ இருவருக்கும் பானங்களை வழங்கினார். எடுத்து கொள்ளும் படி கைகாட்டிய டிமிட்ரி அவருக்கு மட்டும் தேநீர் எடுத்துக்கொண்டார்.
“கென்ரி இவருக்கு நம்ம அப்ரூவல் செஞ்ச ஆராய்ச்சி டீடெயில்ஸ் ஃபைல் கொடுங்க அண்ட் அந்த ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட சீஃப் டைரக்டர்ஸ் கான்டாக்ட்ஸ்ஸூம் கொடுங்க இதோட நம்ம ஹெட் குவாட்டர்ஸ்ல நடக்குற வேலை டீடெயில்ஸ்ஸூம் கொடுத்துடுங்க அப்படியே என் பர்சனல் நம்பரும் கொடுத்துடுங்க.
அண்ட் இவர் எப்போ வந்தாலும் அவரை டைரக்டா என்னை பார்க்க கூட்டிட்டு வாங்க” என்றவர் ஆட்ரியனிடம் திரும்பி
“போதுமா சர் வேற ஏதாவது டீடெயில்ஸ் வேணுமா?” என்று கேட்க.
ஐஸ்டு காபியை அழகாய் பருகியவன் எழுந்து
“எஸ் சர் உங்க அண்டர்ல இருக்குற ஸ்டேட் லிமிட் டீடெயில்ஸ்ம் வேணும் பிகாஸ் அதுக்கு மேல நான் இன்வெஸ்டிகேட் செய்யணும்னா அந்த டைரக்டர் பர்மிஷன் வாங்கணும்ல அதுக்குத்தான் சர்” என்று அவன் விளக்க.
“ஓ ஷியூர் ஆபீசர்” என்றபடி தன் பிஏவை பார்த்தவர்
“அவர் கேட்ட டீடெயில்ஸ்ம் கொடுத்திடுங்க கென்ரி” என்றபடி தன் டேபிள் மேல் பார்த்தவர்
“நான் சொன்ன லெட்டர் ஹெட் குவாட்டர்ஸ்க்கு நீங்களே டைரக்ட்டா கொண்டு போய் கொடுத்திடுங்க கென்ரி.
பை தி வே எனக்கு ஒரு அர்ஜெண்ட் மீட்டிங் இருக்கு ஆபீசர் கிம் ஷெல் ஐ லீவ் நவ்?” என்று கேட்க.
“ஷியூர் சர் மை ப்ளஷர் ட்டூ மீட் யூ” என்றவன் அந்த பிஏவை பார்க்க ஒரு அட்டை போன்ற பேப்பரை ஒரு கவருக்குள் போட்டுக்கொண்டு இருந்தார் அவர்
“ஹான் மிஸ்டர் கென்ரி நான் கேட்ட டீடெயில்ஸ் என் ஆபீஸ்க்கு அனுப்பிடுங்க ப்ளீஸ் ஐ ஹாவ் ட்டூ கோ நவ்” என்று கேட்க
“ஷியூர் சர்” என்று சொல்ல
“தேங்க்யூ அண்ட் தேங்க்ஸ் ஃபார் யுவர் கோ ஆபரேஷன் சர் பை” என்று விட்டு கிளம்பிவிட்டான்.
அவன் சென்றதை உறுதிபடுத்திக்கொண்டு வந்த கென்ரி
“ரொம்ப திமிரா அர்ரோகண்ட்டா இருக்காரே சர் இவரையா இந்த கேஸ்ல இன்வால்வ் செஞ்சீங்க?” என்று கேட்க.
“அவன் அப்படித்தான் அவனோட திமிராலேயே அவன் நிறைய விஷயங்களை மிஸ் செய்வான் அதுக்குள்ள நாம நம்ம வேலையை முடிச்சுடுவோம் அதுக்குத்தான் அவனுக்கு இந்த வேலை.
அவனால இதுல ஒரு சின்ன துரும்ப கூட கண்டுபிடிக்க முடியாது.
கேஸை அவனே டிஸ்மிஸ் செய்ய வெச்சுடுவான் பாரு கென்ரி” என்றவர் கிளம்பி கென்ரியோடே சென்றார் இருவரும் சென்றது முதலில் ஹெட் குவாட்டர்ஸ்க்கு அதன்பின் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் Matterhorn glacier பகுதிக்கு சென்றனர்.
அங்கு மறைவிடத்தில் ஒரு ஆறு போன்ற பகுதியில் நகர்ந்த ஹெலிகாப்டர் உடனே கிளம்பிவிட்டது.அந்த ஆறு அருவி போல பாயும் அந்த ஆற்றின் குறுக்கே உள்ளே சென்று மறைந்தது.
அங்கு தரையிறங்கிய இருவரையும் வந்து வரவேற்றார் ஒரு தமிழ் மருத்துவர்.
“வெல்கம் சர்” என்று டிமிட்ரியை வரவேற்றார் அந்த மருத்துவ சயின்டிஸ்ட்.
“ம்ம் ஹவ் ஈஸ் தட் கிட்? ஈஸ் தேர் எனிதிங் ஆன் திஸ் கேஸ் எக்ப்ரிமெண்ட்?” என்று கேட்க
“நோ சர் அந்த ஒரு பொண்ணு தவிர மத்த பசங்க எல்லாம் சோல்(soul) பிரிஞ்சு திரும்ப சேரக்குள்ள இறந்துடுறாங்க சர் அந்த ஒரு பொண்ணு மட்டும் தான் கோமால இருக்கு” என்று அவர் விளக்க.
“ம்ம் பட் சோல் பிரிஞ்சும் அந்த பொண்ணு மட்டும் எப்படி உயிரோட இருக்கு? உங்க ஃபார்முலா எல்லாம் ரிவைஸ் செஞ்சீங்களா? ஒன்ஸ் எல்லாம் செக் செய்யுங்க எனக்கு இது ரொம்ப முக்கியமான ப்ராஜெக்ட் இதை நம்பி என்கிட்ட எத்தனை கண்ட்ரீஸ் இன்வெஸ்ட் செஞ்சு இருக்காங்க தெரியுமா? இது மட்டும் சக்ஸஸ் ஆச்சு ஆல் கண்ட்ரீஸ் என் முன்ன பிச்சை எடுக்கும்.
இண்டியன் கேர்ள் கிட் க்கு எவ்ளோ வேல்யூ வரும் தெரியுமா? ஆல்ரெடி பிளாக் மார்கெட்ல இண்டியன் கேர்ள்ஸ் செக்ஸ்க்காக தான் பாப்புலர் இந்த எக்ஸ்பிரீமெண்ட் மட்டும் ஓகே ஆகிட்டா நான் தான் இண்டியன் கேர்ள்ஸ் சப்ளையர்ஸ்க்கு காட் ஃபாதர்” என்றவர் தன் பிஏவை பார்க்க அவர் ஒரு கவரை நீட்டினார்.
அதை வாங்கி அவரிடம் நீட்டியவர்
“இதுல ஃபார்முலா வேறமாதிரி எழுதி இருக்கு டெஸ்ட் செஞ்சு பார்” என்றவர் உள்ளே செல்ல அருவியின் உள்ளே செல்ல செல்ல பனி சூழ்ந்த பகுதியின் கீழ் அரண்மனை போன்ற கண்ணாடியால் ஆன ஒரு கட்டிடம் இருந்தது.
உள்ளே செல்ல அவர் பின்னே அனைவரும் செல்ல அந்த மருத்துவர் கைரேகை வைக்க கண்ணாடி கதவு திறந்தது.
உள்ளே சென்றவர்கள் பார்த்தது.
அங்கு கண்ணாடி பெட்டிக்குள் தலை முழுவதும் ஒயர்களும் எலெக்ட்ரானிக் டிவைஸ் கருவிகளும் பொறுத்தப்பட்டு சுவாசம் மட்டும் வந்து செல்ல கோமாவில் படுக்க வைக்கப்பட்டு இருந்த ஹனிஷாவை தான்.
பக்கத்தில் அதே போன்ற பெட்டில் கிளாரா இருக்க அவள் அப்போது தான் இறந்துவிட்டாள் என்று சுவாச கருவியை அகற்றினர்.
வால்கனோ பூக்கள் அத்தியாயம் -4
அத்தியாயம் - 4
அவளை ரெஸ்ட் எடுக்க சொல்ல அவளால் தூங்க முடியவில்லை.
“ஹனி ஹனி” என்று புலம்பியபடியே இருந்தாள்.
அருகில் இருந்த டாக்டர் அவளுக்கு லேசான மயக்கமருந்தை செலுத்த அதன் வீரியத்தில் உடனே உறங்கி போனாள்.
அவள் எழும்போதெல்லாம் சுவாசிக்க சிரமம் படுவதால் ஆக்ஸிஜன் ஸ்பீட் கம்மி செய்து அவளுக்கு செலுத்தப்பட்டது.
“ஏன் சர் இப்படி இருக்கா?” என்று ஆருத்ரனிடம் அவளது அந்த கொரியன் ப்ரண்ட் கேட்க
“தூக்கத்திலேயும் அவளது மூளை ரொம்ப வேலை செஞ்சுட்டு இருந்ததுல அதனால தான் இப்படி இருக்கா நல்லா தூங்கி எழுந்தா சரி ஆகிடுவா ஆனா அவதான் சரியா தூங்குறது இல்லையே அதான் வீக்கா இருக்கா அதுக்குத்தான் அவளுக்கு கம்மியான சடைன் கொடுத்து இருக்கேன் கொஞ்சம் நல்லா தூங்குவா.
ஓகே நீங்க போங்க நான் அவளை பார்த்துக்கிறேன்” என்று அவர் சொல்ல
“இல்ல சர் நாங்களும் இருக்கோம் ப்ளீஸ்” என்று கேட்க அவள்மீது அவர்களது பாசத்தை உணர்ந்தவர்.
“ஓகே வொர்க் ஹியர்” என்று சொல்லி விட்டு அவரும் தன் லேப்டாப்போடு அமர்ந்து விட்டார்.
நம் மூளைக்கு போதிய அளவு உறக்கமும் ஆக்ஸிஜனும் கிடைக்காவிட்டால் நம்மால் எந்த வேலையும் செய்ய முடியாது எதையும் சரியாக யோசிக்கவும் முடியாது.
அப்படி ஒரு மனநிலையில் தான் இருந்தாள் யாழினி.
அதனாலேயே அவளுக்கு மயக்கமருந்து கொடுத்து உறங்க வைத்தனர்.
அங்கு,
தனக்கு வந்த ஈமெயிலை பார்த்தவனுக்கு இதில் பெரிய தலை ஏதோ வேலை செய்கிறது அதனால்தான் இது இவ்வளவு இரகசியமாக யாருக்குமே தெரியாமல் இருக்கிறது இதை கண்டுபிடிப்பதற்குள் தனக்கு பெரிய பெரிய ஆபத்துகள் வரப்போகிறது என்பதை மட்டும் உணர்ந்தவன்.
அவர்கள் வழியாக தான் இன்வெஸ்டிகேட் செய்வதை பார்த்தால் நிச்சயம் இது எல்லோருக்கும் ஆபத்தை விளைவிக்கும் அதனால் அவர்களது வழியை விட்டு வேறு வழியில் தான் விசாரணையை துவக்க வேண்டும் என்று உணர்ந்தவன்.
ஒரு பெருமூச்சை விட்டு தனக்கு வந்த மெயிலை டெலீட் செய்தவன் தனது பேக்பேக்கை மாட்டிக்கொண்டு கிளம்பிவிட்டான்.
எங்கு என்று பார்த்தால் டிரக்கிங்கும் பங்கி ஜம்ப்பிங்கிற்கும் சென்றுவிட்டான்.
அவனது அஸிஸ்டென்ட் அவனுக்கு ஃபோன் செய்ய
“ஐயம் சாரி ஜார்ஜ் டோன்ட் கால்மீ ட்டூ டேய்ஸ்(i am sorry George don't call me two days)” என்று கூறினான்.
“வாட் ஹாப்பன்ட் சர்? ஆர் யூ கோயிங் ட்டூ இன்வெஸ்டிகேட் திஸ் கேஸ் சம்வேர்?(wat happens sir? Are you going to investigate this case somewhere?)” என்று அவன் கேள்வி கேட்க.
“நோ நோ ஐ டுக் மை ஹாலிடேய்ஸ்(no no i took my holidays)” என்று விட்டு கட் செய்துவிட்டான்.
ஃபோனை பார்த்த ஜார்ஜ் ‘இவருக்கு பையித்தியம் ஏதாவது புடிச்சுடுச்சா? கேஸ் எவ்ளோ பீக்கா இருக்கு அதை கண்டுபிடிக்காம ஹாலிடேய்ஸ்னு போய்ட்டாரே இவர நம்பி கேஸை கொடுத்து ஏமாந்துட்டாங்களே இந்த ஆபீசர்ஸ்’ என்று தான் எண்ணினான்.
நேராக Matterhorn glacier பகுதிக்கு சென்றவன் அங்கு பனிசருக்கு சென்றான்.
இரண்டு நாள் டிரக்கிங் ஸ்கேட்டிங் என்று செய்தவன் புத்துணர்ச்சியாக திரும்பி வந்தான்.
அவனை விசித்திரமாக பார்த்த ஜார்ஜை பார்த்து கண் அடித்தவன்
“எனக்கும் ரிப்ரஷ்மெண்ட் வேணும் ஜார்ஜ்” என்று சொல்லி விட்டு சென்றவனுக்கு புதிய கோணத்தில் இந்த கேஸை பார்க்க ஐடியா கிடைத்தது.
இங்கு,
நீண்ட நேரம் தூங்கி எழுந்த யாழினிக்கு சற்று தெம்பாக இருந்தது.
எழுந்தவள் பார்த்தது அவளது கூட பணியாற்றும் அனைவரும் அவளது டீம் லீடர் ஆருத்ரன் உட்பட எல்லோரும் அவள் அருகிலேயே அமர்ந்து வேலை பார்த்து கொண்டு அப்படியே உறங்கிவிட்டதை தான்.
அதை பார்த்தவள் அவர்களை தொந்தரவு செய்யாமல் எழுந்து அமர பார்க்க அவளது அசைவில் அனைவரும் விழித்துக்கொண்டனர்.
“ஆர் யூ ஓகே யாழினி யாழ்?” என்ற கேள்விகள் அவளை சூழ
“யா ஐயம் ஓகே நீங்கலாம் ரெஸ்ட் எடுக்காம என்ற செய்யுறீங்க?” என்று கேட்டாள் மெதுவாக.
“நான் போக சொன்னேன் ஆனா அவங்கதான் போகமாட்டோம் உன்கூடவே இருப்பேன்னு இருந்துட்டாங்கமா” என்றார் ஆருத்ரன்.
தான் தனியாக இல்லை என்று உணர்ந்தவளுக்கு கண்கள் கலங்கியது.
அதை உணர்ந்தவர் போல அவளது கையை தட்டி கொடுத்தவர்.
“ஓகே எல்லாரும் சாப்பிடலாமா?” என்று கேட்க.
அனைவரும் ஓகே என்று கூற அவளையும் தங்களோடு அழைத்து சென்றனர் கைதாங்கலாக.
அனைவரும் சாப்பிட அமர ஆருத்ரனை பார்த்தவள்
“சீஃப் ஏன் எனக்கு இவ்ளோ டயர்டா இருக்கு?” என்றாள்.
“அது நீ ஆல்ரெடி வீக் பாடி சடைன் கொடுத்ததால இன்னும் லீன் பாடி ஆகிட்ட அதான் டயர்ட்டா இருக்க” என்று அவளை கிண்டல் செய்ய அனைவரும் சிரிக்க அவளோ ஆவென பார்த்தாள்.
“உன் ப்ரெயின நீ ரெஸ்ட்டே இல்லாம ஓவர ஸ்டெரியின் செஞ்சு இப்போ ரெஸ்ட் கொடுக்கவும் அதுக்கு ரெஸ்ட் இன்னும் தேவைப்படுது அதான் டயர்டா இருக்க” என்று சொல்ல
அமைதியானவள்
“அப்போ ரெக்கார்ட் ஆகலையா சர்?” என்று கேட்க
அவளை பார்த்தவர்
“நாங்க எப்போ சொன்னோம்?” என்று எதிர்கேள்வி கேட்டார்.
அதில் அவரை அதிர்ந்து அவள் பார்க்க
“ம்ம் ரெக்கார்ட் செஞ்சு அதை ஏஐ டிகோடிங் செஞ்சு விஷூவலா மாத்தி கொடுத்துடுச்சு நீ சரியான அப்புறம் போட்டு காட்டலாம்னு இருக்கேன்” என்று அவர் சொல்ல அதிர்ந்து எழுந்து அமர்ந்தவள்
“சீஃப் எனக்கு உடனே அதை பார்க்கணும்” என்றாள்.
“நீ இப்போ நல்லா ரெஸ்ட் எடுக்கணும் யாழினி உன்னோட ப்ரெயின் எந்த விதமான அதிர்ச்சியையும் தாங்க முடியாது அது நிறைய சைட் எபெஃக்ட்டை தரும் யாழினி இன்னைக்கு ஃபுல் ரெஸ்ட் எடு நாளைக்கு பார்க்கலாம்” என்று அவர் கூற
“இல்ல எனக்கு இப்பவே பார்க்கணும் சைட் எஃபெக்ட் பத்திலாம் எனக்கு கவலை இல்லை சர் எனக்கு உடனே பார்க்கணும்” என்று அவள் கேட்க.
“நீ வேணா உன்னை பத்தி கவலை படாம இருக்கலாம் யாழினி பட் எங்களுக்கு இருக்கு நாளைக்கு தான் அதை உன்னால பார்க்க முடியும் லெட்ஸ் கோ கைய்ஸ்” என்றுவிட்டு அவர் எழுந்து சென்று விட அனைவரும் அவரது பின்னே செல்ல
“ஹே ப்ளீஸ்” என்ற அவளது கெஞ்சல்கள் எல்லாம் காற்றோடு கரைந்து போனது.
அனைவரும் சென்றுவிட எழுந்து அமர்ந்தவள் தன் மொபைலை எடுத்தாள்.
அதில் அவள் ரெக்கார்ட் செய்ய கனெக்ட் செய்து இருந்த கேமிராவின் ஆப் இருந்தது.
அதை ஓபன் செய்தவள் தனது செட் செய்த கேமிராக்களை திரும்ப வரும்படி செய்தாள் அதன்படி இரண்டு கொசு போன்ற கேமிராக்கள் பறந்து வந்தது அவளிடம்.
அதனை கனெக்ட் செய்து எல்லா மெமரியும் மொபைலுக்கு மாற்றியவள் அதனை ஆஃப் செய்தாள்.
இரண்டு நாட்கள் தனது மொபைல் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறதே என்பதை உணர்ந்தவள் அதனை சார்ஜில் போட்டாள்.
அப்படியே அதை ப்ளே செய்தாள்.
முதலில் அவளை ஆராய்ச்சி அறைக்கு கொண்டு செல்வது தான் இருந்தது.
அப்போது முதல் இப்போது வரை ஆருத்ரன் மற்றும் அவளது நண்பர்கள் அவளுடனே தான் இருந்தனர் என்று தெரிந்து அவளுக்கு கண்கள் கலங்கியது.
ஆருத்ரன் அவளை விட்டு நாகராமல் அவளது கையை பற்றியபடி இருந்தது அவளுக்கு அவளது தந்தையே அவளுடன் இருந்தது போல இருந்தது.
இருந்தாலும் கலங்கினால் தன்னால் எந்த வேலையும் சரியாக செய்ய முடியாது என்று எண்ணியவள்
கலங்கிய கண்களை அப்படியே நீரை உள்ளிழுத்து தன் கண்களை சரி செய்தவள் அதை தொடர்ந்து பார்க்கலானாள்.
அதை பார்க்க பார்க்க அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
புகை மண்டலம் போன்ற பகுதி அதில் ஐஸ் மலை அவ்வளவு தான் தெரிந்தது. அதன்பின் தன் அக்கா மகள் ஹனிஷா ஏதோ ஒரு கண்ணாடி பெட்டியில் படுத்து இருப்பது போலவும் ஏதேதோ ஒயர்கள் கனெக்ட் செய்யப்பட்டு அவள் உறங்குவது போலவும் அவளை சுற்றி நிறைய மருத்துவர்கள் இருப்பது போலவும் பக்கத்திலேயே இன்னொரு கண்ணாடி பெட்டியில் வேறு ஒரு ஆள் படுத்து இருப்பது போலவும் அவரும் அதேபோல இருப்பது போலவும் அடிக்கடி ஹனிஷாவின் உடல் தூக்கி போடுவதை பார்த்தவளுக்கு
“ஹனிஇஇஇ” என்று அழுகையே வந்துவிட்டது.
இதையெல்லாம் பார்த்தவள் முன் அவளது அண்ணன் மகள் ஹனிஷாவின் முகம் வந்தது.
எழுந்திரு அத்தை அங்கதான் நான் இருக்கேன் நான் சாகலை அத்த.
இன்னும் உயிரோட தான் இருக்கேன் ஆனா என்னால எதையும் டச் பண்ண முடியல கரன்ட் ஷாக் அடிக்கிற மாதிரி இருக்கு வலி ஆனா என்னால எழுந்துக்கவே முடியல.
என்னை போல நிறைய பசங்க இங்க இருக்காங்க எல்லாரும் இண்டியன்ஸ் வேற.
காப்பாத்து அத்த.
நான் உன் பக்கத்திலேயே தான் இருக்கேன் ஆனா பேச முடியல உன் கனவுலதான் பேச முடியுது.
என்னோட முகத்துல ஏதோ மார்க் இருக்கு அண்ட் என்று நாக்கை காட்டினாள் அதோடு இவள் ஹனிஇஇஇ என்ற அலறலில் ஹனிஷாவின் உருவம் மறைந்து போனது திரையில்.
இவ்வளவும் தான் அவளுக்கு தினம் வரும் கனவு.
அதைதான் ஏஐ டிகோடிங் செய்து விஷூவலாக அவளுக்கு மாற்றி கொடுத்து உள்ளது.
அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனவளுக்கு மண்டையே வலிப்பது போல் ஆனது.
அவளது மூளை ரெஸ்ட்டே இல்லாமல் இப்போதும் வேலை செய்ததன் பக்கவிளைவு அவளை மயக்கத்திற்கு தள்ள முற்பட உஷாராக தன் மொபைலை லாக் செய்தவள் அப்படியே மயங்கிவிட்டாள்.
ஆருத்ரன் அனுப்பிய அந்த கொரியன் பையன் வந்து பார்த்தபோது மொபைல் சார்ஜில் இருந்தது அவளோ தூங்கி கொண்டு இருக்கிறாள் என்று தான் நினைத்தான்.
அதையே போய் சொல்லவும் யோசனையோடு ஆருத்ரன் “மொபைல் சார்ஜ்ல இருந்தது ஓகே ஆனா எந்த பொஷிஷன்ல இருந்தது யாழினி பெட் பக்கத்துலயா? இல்ல அவ கையிலயா?” என்றார் அதற்கு அவன்
“அவ கையில் இருந்தது சீஃப்” என்று கூற அவசரமாக எழுந்து சென்றார் அவளது அருகில் சென்றவர் அவளை
“யாழினி யாழி” என்று எழுப்ப அவளிடம் தூக்கத்தில் இருக்கும் அசைவுகூட இல்லை என்பதை உணர்ந்தவர் உடனே டாக்டரை அழைத்தார்.
அவர் வந்து பரிசோதனை செய்து அவர் வீடியோவை பார்த்தாரா என்று விசாரிக்க
இல்லை இன்னும் அவளுக்கு காட்டவே இல்லை என்ற பதில் வர உடனே மருந்தை செலுத்தியவர்
“அப்போ அவங்க அகெய்ன் அந்த கனவு கண்டாங்க போல அதான் அவங்க ப்ரெயின் ரொம்ப ஸ்டெரியின் ஆகி இருக்கு நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும். நார்மலா தூங்க முடியல போல மருந்து கொடுத்து இருக்கேன் நல்லா தூங்கட்டும் நர்ஸ் நீங்க கூடவே இருங்க பல்ஸ் அண்ட் பிபி ட்டூ அவர்ஸ் ஒன்ஸ் செக் செய்ங்க” என்று விட்டு
“ரொம்ப வீக்கா இருக்காங்க சர் அவங்க ப்ரெயின் ரெஸ்ட்லெஸ் ஆனா மயக்கம் வரும் சர்.
இது இந்த டெஸ்ட்டோட சைட் எஃபெக்ட்ஸ் நான் ஒரு டேப்ளட் தர்றேன் அதை இந்த மாதிரி ஆகுற நேரம் கண்டிப்பா எடுத்துக்க சொல்லுங்க”என்றுவிட்டு அவர் செல்ல.
தலையில் கைவைத்து உட்கார்ந்து விட்டார் ஆருத்ரன்.
“நான் தான் அவளுக்கு இந்த டெஸ்ட் பத்தி சொல்லி தப்பு செஞ்சுட்டேனோ?” என்று பேச
“சர் அவ ரொம்ப ஃபோர்ஸ் பண்ணதால தானே இந்த டெஸ்ட்டே செஞ்சீங்க எல்லா எக்ஸ்பீரிமெண்ட்ஸ்லயும் வர்ற டிராபேக்ஸ் தானே சர் இதுலயும் அவளை நல்லா பார்த்துகலாம் சர் டோண்ட் வொர்ரி” என்று எல்லாம் சேர்ந்து அவருக்கு ஆறுதல் அளிக்க
அவளைவிட்டு எங்குமே நகராமல் அமர்ந்து விட்டார் ஆருத்ரன்.
மற்றவர்களும் அவரோடே அமர்ந்துவிட்டனர்.
அப்படியே எல்லோரும் உறங்கிவிட அவளை நர்ஸ் செக் செய்யும் போதெல்லாம் ஆருத்ரனும் சேர்ந்து செக் செய்தார்.
அவளது வைட்டல்ஸ் நார்மலாகவே இருப்பதை உணர்ந்தவர் அதிகாலையில் உறங்கி போனார்.
காலையில் எல்லோரும் எழ ஆருத்ரனும் யாழினியும் மட்டும் உறங்கி கொண்டிருந்தனர்.
ஷிப்ட் நர்ஸ் வர ஏற்கனவே இருந்தவர் போக கிளம்ப ஆருத்ரனை ஒருவன் எழுப்ப போக
“அவர் தூங்கட்டும் சர் அவர் நைட்டு ஃபுல்லா தூங்காம அந்த பொண்ணை செக் செஞ்சுட்டே இருந்தாரு.
மார்னிங் ஃபைவ் ஓ கிளாக் தான் தூங்கினார்.
இன்னும் கொஞ்சம் தூங்கட்டும்” என்று சொல்லி செல்ல அனைவரும் எழுந்து அங்கிருந்த சேரில் அமர்ந்தனர்.
அவர்களுக்குள் அமைதியாக பேசியபடி காஃபி ஆர்டர் செய்துவிட்டு அனைவரும் வேலையை துவங்க நீண்ட நேரம் கழித்தே விழித்தனர் இருவரும்.
ஆருத்ரன் எழுந்ததும் யாழினியை செக் செய்ய அவளும் எழுந்தாள்.
அவளை பரிசோதனை செய்த டாக்டர் இந்த சைட் எஃபெக்ட் எப்போது வேண்டுமானாலும் வரலாம் அதுபோல் ஆவதற்கு முன் இந்த மருந்தை எடுத்தே ஆகவேண்டும் என்று அறிவுரை வழங்கி அனுப்பினார்.
RE: மதுர ஜில்லா... மச்சானே!-46
Super sis nice epi 👌 😍 iniyan eppo evlo pesuravan edhu ellathukum kaaranam avan dhan nu purinjikkanum🙄 madhurakum edhala periya vali dhan atleast iniyavudhu thirundhi vaazha parkanum🧐🤔
RE: மதுர ஜில்லா... மச்சானே!-46
இன்னும் தன்னோட பக்கமே பேசறானே அவளுக்கும் அது எவ்வளவு வலி தரும் யாரும் யோசிக்கல
மதுர ஜில்லா... மச்சானே!-46
அத்தியாயம்-46
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட மதுரா மெதுவாக நடந்து வெளியே வந்தாள். உடல் சற்று தேறியிருந்தாலும், மனம் இன்னும் வெறுமையோடு இருந்தது.
"மதுரா... நம்ம வீட்டுக்கு வந்துடு மா. அங்கேயே போகலாம்." என்று இளையமதி கெஞ்சினார்.
மதுரா மெதுவாக தலையசைத்தாள். ''இல்லம்மா... இப்பவே நான் அப்பா வீட்டுக்கு வந்துட்டேன்னா, 'வாழாவெட்டியா வந்துட்டா'ன்னு ஊரே பேசும். இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும். ஒரு வருஷம் எப்படியாவது முடிச்சிட்டு வர்றேன்." என்றாள்.
"ஏன்டி... தூரிகா சொல்றா... இனியனிடம் வெற்று பத்திரத்துல கையெழுத்து போட்டுக் கொடுத்திருக்கியாமே. அவன் அதை விவாகர்தது பத்திராமா மாத்திப்பான்னு பேசியிருக்கான்.‌
அப்படியிருக்க அங்கே எதுக்குடி வாழப் போற?" என்று இளையமதி வேதனையோடு கேட்டார்.
மதுரா அவரைப் பார்த்து சிரிக்க முயன்றாள்.
"நீங்க கட்டிக் கொடுத்த வீடும்மா அது. அனுபவிக்க வேண்டியதை அனுபவிச்சுட்டு வர்றேன்." அந்த பதிலைக் கேட்ட இளையமதி கல்யாண சுந்தரம் இருவரும் கண்கலங்கிப் போனார்.
"துறுதுறுன்னு சுத்திக்கிட்டு இருந்த பொண்ணை இப்படி மாத்திட்டானே... இதுல வீட்டுக்கு வாடின்னா கூட இவளும்  வரமாட்டேங்கற. நமக்குக் கிடைச்ச தண்டனைன்னு நம்மளையும் பழி வாங்குறா." என்று அழுதார்.
கல்யாணசுந்தரம் மனைவியின் தோளைத் தட்டினார்.
"ஆசைப்பட்டோம்ல... பெரிய பொண்ணு நல்ல இடத்துல வாழணும்னு. இப்ப விதி என்ன எழுதியிருக்கோ அதைத்தான் அனுபவிக்கறோம்." அதற்கு மேல் யாராலும் பேச முடியவில்லை.
அந்த நேரத்தில் இனியன் காரை கொண்டு வந்து நிறுத்தினான்.
மதுரா எதுவும் பேசாமல் பின்பக்க இருக்கையில் அமர்ந்தாள். அவனுமே அத்தை மாமா பேசியதை செவிக்கொடுக்கவில்லை. அவன் மரம் போல மறித்து இருந்தான். இளையமதி கல்யாண சுந்தர் ஒரு பக்கம் நிலானி வீட்டில் இருக்க அவளையாவது நன்றாக வளர்க்க முனைந்து சென்றனர்
தூரிகாவும் மதுரா இனியனுடன் ஏறினாள். சிறிது தூரம் சென்றபின் மதுரா கண்ணாடி வழியாக, "உன்னை வேண்டும்னா வீட்டுல இறக்கிடவா?" என்று தூரிகாவிடம் கேட்டாள்.
"வேண்டாம் அண்ணி. முதல்ல உங்களை வீட்டுல விட்டுட்டு ரெஸ்ட் எடுக்க வச்சிட்டு அப்புறம் நான் போறேன்."‌ என்றாள்.
மதுரா அதற்குபின் வற்புறுத்தவில்லை.
வீட்டிற்கு வந்ததும் வேல்விழி ஆரத்தி எடுத்துக் கொண்டு உள்ளே அழைத்துச் சென்றார்
"காபி குடிச்சிட்டு படுத்துக்கோ மா." என்று அன்போடு கூறினார். மதுரா அமைதியாகக் காபியைக் குடித்துவிட்டு அறைக்குள் சென்றாள்.
அருளாளனும் வேல்விழியும் அவள் ஓய்வெடுக்கட்டும் என்று வெளியேறினர்.
இனியன் மட்டும், "தூரிகாவை வீட்டுல விட்டுட்டு வர்றேன்." என்று சொல்லிவிட்டு மீண்டும் காரை எடுத்தான்.
தூரிகா காபி குடித்துவிட்டு இனியனுடன் காரில் பயணித்தாள்.‌
"அண்ணா..." என்று இனியனை அழைக்க, கார் ஓட்டியபடி  திரும்பிப் பார்த்தான்.
மதுரா அண்ணியை கஷ்டப்படுத்தாதீங்க அண்ணா." என்றதும் அவன் புருவம் சுருங்கியது. சின்ன பெண் அறிவுரை வேறு கூறப் போகின்றாளென்று.
"அது ரொம்ப நல்ல பொண்ணு அண்ணா. நான் அகிலன் தங்கச்சியா சொல்லலை. எப்படி எடுத்துச் சொல்றதுன்னு தெரியல... ஆனா மதுரா மனசுக்கு இவ்வளவு கஷ்டம் கடவுள் கூட தரக்கூடாது அண்ணா. நாங்க உங்களை எப்பவும் போட்டியாவோ, உங்களை மீறி வளர்ந்து உங்களை மட்டம் தட்டணும்னோ அப்பா நினைச்சதில்லை. அகிலன் அண்ணன் கூட நினைக்கலை. இந்த காவ்யாவை கல்யாணம் கட்டிக்கிட்டது கூட அவங்க தான் அகிலன் அண்ணன் முன்ன வந்து கேட்டுச்சு. அப்ப கூட அண்ணன் மறுத்ததுக்கு என்னென்னவோ சொல்லிடுச்சு‌.
பெரிப்பாவுக்கு என்ன கோபமோ, உங்களுக்கு என்ன கோபமோ, எதையாவது மனசுல வச்சி மதுராவை காயப்படுத்தாதிங்க." என்றதற்கு இனியன் அமைதியாகவே இருந்தான்.
"தயவு செய்து... அண்ணியை அத்துவிடாதீங்க. நல்லா பார்த்துக்கோங்க." இனியன் பதில் சொல்லவில்லை.
ஒரு கணம் தூரிகாவைப் பார்த்தவன், அகிலன் வீட்டிற்கு முன்காரை நிறுத்தினான். தூரிகா பேசியதற்கு எவ்வித பதிலும் உரைக்கவில்லை.
அகிலன் வீட்டில் தேங்காய் மூட்டைகளை எடைபோடும் மின்னணு தராசின் முன் நின்று ஒரு பெட்டியை எடுத்து வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள் காவ்யா.
"அத்தை... இருபது கிலோ இருக்கு. இன்னும் ஐந்து கிலோ ஏத்தலாமா? வேற ஏதாவது மூட்டை வைக்கணுமா?" என்றதும் மீனாட்சி சிரித்தார்.
"அகிலனைக் கேளும்மா." என்றார் அவர்.‌
"ஏங்க... ஏங்க..." என்றவள், 'பச்..  கூப்பிட்டா அலாவுதீன் பூதம் கணக்கா முன்னாடி வர்றதில்லை.' என்று முனங்கிவிட்டு "அகிலா." என்றாள்.‌
உள்ளிருந்து அகிலன், "ஏலம் விடாத காவ்யா.. வந்துட்டேன்." என்று வந்தான்.
தராசைப் பார்த்தவன், "இருபது கிலோ போதும். அதுக்கு மேல வைக்க வேண்டாம். எல்லா ஊரில் இப்ப எல்லாம் கிடைக்குது. அதோட பத்து நாள் தானே." என்று கடிந்தான்.
தூரிகாவை இறக்கிவிட்டு கிளம்பும் முன் இனியன் இதை காண நேர, தூரிகாவோ கார் கிளம்பாமல் இருக்கவும்,
"இனியன் அண்ணா... நாளை மறுநாள் அகிலன் அண்ணாவும் காவ்யா அக்காவும் வெளிநாடு கிளம்புறாங்க. அங்க அவங்க நாட்ல ரிசப்ஷன் முடிஞ்சு பத்து நாள்ல திரும்பிடுவாங்க. காவ்யா அக்காவோட அப்பா மட்டும் அங்க இருக்கற வேலைகளை முடிச்சுட்டு கொஞ்ச மாசம் கழிச்சு வருவாராம்.
இனியன் அண்ணா.. வீட்டுக்கு வந்துட்டுப் போறீங்களா?" என்று கேட்டாள்.
இனியன் சோர்வாகத் தலையசைத்தான்.
"அப்புறமா வர்றேன்மா... மனசு சரியில்லை. உங்க மதுரா அண்ணி மேல இனி‌ காயப்படுத்தற‌ மாதிரி எதுவும் செய்யமாட்டேன்" என்றான்
அவ்வளவுதான். கார் மீண்டும் மதுரா இருக்கும் வீட்டை நோக்கிப் புறப்பட்டது.
'அட யார் காரு. இனியன் வந்தானா? அவனை இருக்க சொல்லி காபி டீ போடலாம்ல" என்று மீனாட்சி அப்பொழுது தான் கவனித்து கூற, தூரிகாவோ "பச் அவர் டீ காபி குடிக்கற மூட்ல இல்லை." என்று சின்ன அண்ணனை கண்டு முகம் திருப்பி சென்றாள்.
"இனியன் அண்ணா மூட் சரியில்லைனு அவனிடம்.. சாரி.. சாரி அவரிடமெல்லாம் பேசிட்டு போறா உங்க தங்க. இங்க நீங்களும் தான் அவ பேசலைனு முகம் வாடி இருக்கிங்க. இதெல்லாம் கண்ணுக்கு தெரியாதா? இருந்தாலும் இந்த நாத்தனார் பார்ஷியாலிட்டி பார்க்குதுப்பா" என்று அகிலனிடம் கூறினாள்.
"நாம அதுக்கு ஒன்னும் பண்ண‌ முடியாது. சில நேரம் நாம எதுவும் செய்யாம இருந்தாலே நல்லது நடக்கும்னு சொல்வாங்களே. அது போல விட்டுடணும்" என்றான் அகிலன்.‌
'ம்கூம்.. ஒன்னும் செய்யாம பேபிக்கு தர்ற முத்தம் மாதிரி தந்து எஸ்கேப் ஆகறது. இருடி.. அமெரிக்கால ரிஸப்ஷன் மட்டுமில்ல.. பஸ்நைட்டே கொண்டாடிட்டு தான் திரும்பறது' என்று முடிவெடுத்தவளாக நின்றாள் காவ்யா.
"ஏதாவது சொன்னியா?" என்றான் அகிலன். இல்லை என்று காவ்யா தலையாட்ட அகிலனோ 'ஏதாவது முனங்கிட்டே கிடக்கறது. கேட்டா ஒன்னுமில்லைனு தலையாட்டறது' என்று அவனும் முனங்கினான்.‌
இந்த மூன்று‌ நாட்களாக நன்றாக தான் இருவரும் பேசிக் கொள்கின்றார்கள். அகிலனிடம் செல்லம் கொஞ்சி, சிணுங்கி, அவனை தொட்டு பேசி, அணைத்து கொள்வதெல்லாம் காவ்யா அவளிஷ்டம் போல செய்ய, அகிலன் அவளது கை பிடித்து, தோளில் சாய்த்து, முத்தத்திற்கு பதில் முத்தம் எல்லாம் தந்து அவனால் முடிந்த முதலடிகளை எடுத்து வைத்து முயல்கின்றான். ஆனாலுமே அதை தாண்டி இருவருமே அடியெடுத்து வைக்கவில்லை.
இங்கே வீட்டுக்குள் நுழைந்த இனியன், மதுரா இருந்த அறைக்கதவை மெதுவாகத் திறந்தான்.
மெத்தையில் சாய்ந்து, ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்த மதுரா, இனியன் காலடி சத்தம் கேட்டு மெதுவாகத் திரும்பினாள்.
இருவருக்கும் இடையே சில நொடிகள் அமைதியே பேசிக் கொண்டிருந்தது.
இனியனே பேச்சை ஆரம்பித்தான். "உடம்பு பரவாயில்லையா?" என்று கேட்டான்.
"ம்." என்று மட்டும் தலையசைத்தாள். சில நிமிடம் அவன் உடலை பற்றி கேட்கவும், "ஒன்னா இருக்கறதுக்கு இன்னும் ஒரு மாசம் ஆகட்டும்னு டாக்டர் சொன்னாங்க" என்றாள்.
திடீரென்று இனியன் சிரித்தான்.
அந்தச் சிரிப்பில் சந்தோஷம் இல்லை. வலி மட்டுமே இருந்தது.
"ஏன்.. மறுபடியும் ஏதாவது குழந்தை உருவானா அழிக்கணுமா? அவ்வளவு ஆர்வமா" என்றதும் மதுரா அவ்வார்த்தையில் துடித்தாள்.
"அன்னிக்கு கிச்சன்ல ரத்த வெள்ளத்தில இருந்தியே டி. அப்பவே என் பாதி உயிர் போயிடுச்சு. இதுல டாக்டர்... 'குழந்தைய காப்பாத்த முடியல'ன்னு சொன்னப்ப..." என்றவன் குரல் தடைப்பட்டது.
"என் காதுல எதுவுமே விழல. செத்துட்டேன்டி.. செத்துட்டேன்" என்றவன் கண்களை மூடி நின்றவன், "என்னோட குழந்தை..." என்று சொல்லிவிட்டு சுவரில் தன் கையை வைத்து குத்துவிட்டான்.‌
சுவரில் அவன் கை முஷ்டி இடிபோல இடித்ததை கண்டு பயந்தாள்.
"என்னோட ரத்தத்துல உதிக்கும் என்ற ஒரே காரணத்துல அழிச்சிட்டியே" என்றான்.
அவன் குரல் கரகரத்தது.
"ஒரு தடவையாவது... ஒரே ஒரு தடவையாவது... அந்த குழந்தை பிறந்து வளர்ந்தா எப்படி இருந்திருக்கும்னு யோசிச்சியா? அந்த குழந்தை பொண்ணா.. பையனா...? என் மூக்கு மாதிரி இருக்குமா? உன் கண் மாதிரி இருக்குமா ஏதாவது யோசிச்சியா? இந்த உலகத்துல உன்னையும் என்னையும் மாதிரி அப்பா அம்மா கிடைப்பாங்கனு தெரியாமலேயே ரத்தத்தோட ரத்தமா அனுப்பிட்ட." என்று தலையைப் பிடித்துக் கொண்டான்.
அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அந்த அழுகையைப் பார்த்த மதுராவின் விரல்கள் நடுங்கின. இனியனுக்கும் அவனது குடும்பத்துக்கும் தரப்படும் தண்டனை என்று தான் மதுரா நினைத்தது. ஆனால் அவளுக்கு டி.என்.சி செய்தப் பொழுது அவளுக்கு காட்டப்பட்ட சிறு உருவமற்ற வட்டவடிவ உயிரை கண்டு அவளுமே துடித்துவிட்டாள்.
அந்த வலியும் வேதனையும் அனுபவித்த வலியினால் எதுவும் பேசவில்லை.
சில நொடிகளுக்குப் பிறகு இனியன் முகத்தைத் துடைத்துக் கொண்டான்.
"உன்னை மட்டும் திட்டணும் கொல்லணும்னு மனசு சொல்லுது. ஆனா... நீ இப்படி ஆகற அளவுக்கு காரணம் யாருன்னு யோசித்தா நானும் தானே குற்றவாளி. உன்னை ஒவ்வொரு நாளும் வார்த்தையால கொன்றிருக்கேன், பயமுறுத்தி இருக்கேன்.. உனக்குனு என் மேல நம்பிக்கையே இல்லாம நடந்திருக்கேன். உ..உன்.. உன்னை கற்பழிச்சிருக்கேன் ரைட்.. அதனால தானே நீ.. எனக்கு பெரிய தண்டனை தந்துட்ட... என் கு..குழந்" என்றவனால் அந்த வார்த்தையைச் சொல்ல முடியவில்லை.
திடீரென்று கண்களைத் திறந்தான். இனியன் பார்வை மீண்டும் கடினமாயிற்று. வேகமாக பீரோவை திறந்து அன்று இவளிடம் வெத்து பத்திரத்தில் வாங்கிய கையெழுத்தை கொண்டு வந்து சுக்குநூறாக கிழித்து அவள் கண்ணெதிரே வீசினான்.
"பாரு... ஒன்னுமே எழுதாத பத்திரம். வெத்து பத்திரம். இதுல கையெழுத்து வாங்கியதால உன்னை விட்டுடுவேன்னு முடிவே கட்டிட்டல்ல.. நான் தான் அப்படி பேசியது. உன்னிடம் முரட்டுத்தனமா நடந்தது. நீயா முரண்டு பிடிக்காம வந்தப்பிறகு, நான் ஏதாவது உன்னை அடிச்சேன்? காயப்படுத்தினேன்? டீயை ஊத்தியதும் உங்கப்பா போலீஸை அழைச்சிட்டு வந்ததும் அதுக்கு பிறகு நான் உன்னிடம் கேவலமா நடந்துக்கிட்டேன்னு எனக்கே புரியவும் அந்த மாதிரி ஆக்டிவிட்டிஸை குறைச்சிட்டேனே.
அதெல்லாம் நீ யோசிக்கவேயில்லை. உன்னை கட்டிக்கிட்ட முறை பழிவாங்க என்றதாலும், உன்னிடம் முதல்ல சில நாள் முரட்டுத்தனமா நடந்துக்கிட்டதாலும் மட்டும் தண்டிச்சிட்ட. என்னை தண்டிச்சிட்ட.. இல்லை.. நம்ம குழந்தையை ஏன்டி தண்டிச்ச?உனக்கு என் மேல கோபமிருந்தா, வெறுப்பிருந்தா, பழிவாங்கற எண்ணம் உருவாகினா, என்னை தண்டிக்க, எவ்வளவோ வழி இருக்கே. என்னை உங்கப்பா கூட்டிட்டு வந்த போலீஸ்ல மாட்டி விட்டு கம்பி என்ன வச்சியிருக்கலாமே. இல்லை நீயே போலீஸ் ஸ்டேஷன் போய் கம்பிளைன் பண்ணிருக்கலாம்.
எனக்கு சோத்துல விஷம் வச்சிருக்கலாமே. இல்லையா.. வாழவெட்டியா நீ மட்டுமா இருக்க போற. எனக்கும் அதே பெயர் பொண்டாட்டி விட்டுட்டு போயிட்டானு பெருமையா சொல்லற மாதிரி மாத்தியிருக்கலாமே.
ஒரு தப்பும் செய்யாத நம்ம குழந்தையை ஏன்டி பலியாக்கின? அந்த உயிரை உருத்தெரியாம பண்ண வேண்டிய அவசியம் என்ன?" என்றதும், மதுராவின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.
"நா..நான்..." என்று தொடங்கினாள் மதுரா.
இனியன் உடனே கையை நீட்டி தடுத்தான். "வேண்டாம். இப்ப எந்த விளக்கமும் வேண்டாம். என்னால கேட்க முடியாது. உன் மேல கோபப்படணும்னு தோணுது. அதே நேரம்... உன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்தது நான் என்பதால் அதையும் பண்ண முடியலை. என்னையே நான் வெறுக்க ஆரம்பிச்சிட்டேன் டி" என்றான்.‌
இனியன் மெதுவாக கதவை நோக்கி நடந்தான். கைப்பிடியில் கை வைத்தபடியே நின்று, "இப்ப நீ செய்த தப்புக்கு உன்னை மன்னிக்கிற நிலையிலையும் நான் இல்ல... உன்னை தண்டிக்கிற மனநிலையிலையும் நான் இல்ல. நான் செய்த தப்புக்கா நீ தந்த தண்டனையை தாங்கமுடியாம, இப்ப என்னையே புரிஞ்சிக்க முடியாமவும் நிக்கறேன்." என்று சொல்லிவிட்டு வெளியேறினான்.
மதுரா அப்படியே அமர்ந்திருந்தாள். அவன் சென்ற கதவையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது கண்ணீர் மட்டும் அமைதியாக வழிந்தது.
உண்மை தானே.. ஒரு பாவமும் அறியாத குழந்தையை ஏன் தண்டித்தோம். தனக்கே தண்டனையாக அல்லவா இந்த வலி உணர்த்தி விட்டதேயென துடித்தாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
Kindly Register Login To Read.
Thank u Readers
உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் -19
உதயம் 💏 19 💏
குளித்து விட்டு வெளியே வந்து கட்டிலில் இருந்த பரிசை பிரிக்க, அதிலிருந்த ட்ரெசை பார்த்ததும் எனக்கு கண்களிலிருந்து நிற்காமல் கண்ணீரை வந்தது.
வாய் மட்டும் இடியட் இடியட் இடியட் என முணுமுணுத்தது‌.
எப்படி எனக்கு இந்த ட்ரஸ் பிடிக்கும்னு தெரிஞ்சது. அன்னைக்கு டிரஸ் கடைல கூட ஆதித்யா இல்லையே என அந்த கருப்பு நிற சேலையை தடவிப் பார்த்தேன்.
ஒருவேளை எதார்த்தமாக இந்த சேலையை எடுத்து இருப்பானோ?
எதுவாக இருந்தால் என்ன.ஆதி எனக்கு பிடித்த கறுப்பு நிறத்தை எடுத்துக் குடுத்திருக்கிறான். அதுவும் முதன்முதலாக.
தங்க நிற பார்டர் வெள்ளை நிறக் கற்களை கொண்ட அந்த கருப்பு நிற சேலை எனக்கு அமைப்பாகவே இருந்தது.
வாழ்க்கையில் முதல்முறையாக கருப்பு நிறத்தில் அணிகிறேன்.
சேலையுடன் சில நகைகளும் இருக்க அதையும் அணிந்துகொண்டேன்.
அப்பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்டது.
" யாரு?"
" நான்தான் தி. ரெடி ஆயிட்டியா? ஸ்டோரை ஓபன் பண்ணவா வா?"
"முடிஞ்சது. உள்ள வா ஆதி."
உள்ளே நுழைந்தவன் என்னைப் பார்த்ததும் சிலையானான். அவனின் பார்வை வீச்சு தாங்காமல் நான் குனிந்து கொண்டேன்.கன்னங்கள் எல்லாம் சூடு ஏறியது.
வெட்கம் பிடுங்கித் தின்ன திரும்பிக்கொண்டேன்.
என் பின்னால் வந்தவன் என் கூந்தலை முன்புறம் ஒதுக்கி அவன் கையில் வைத்திருந்த நெக்லஸை மாட்டு விட்டான்.
"செம அழகா இருக்க."
என் காதில் கிசுகிசுத்தான்.அவன் உதடுகள் என் காதை உரச, அவன் மீசை என் கன்னத்தின் குறுகுறுத்தது.
மெதுவாக அவனிடமிருந்து விலக முயற்சித்தேன். ஆனால் என்னை நகரவிடாமல் பின்னாலிருந்து அணைத்தவன் என் தோளில் அவன் நாடியை வைத்து கண்ணாடியை காட்டினான்.
"அழகுதான். ஆனா என் அளவுக்கு இல்ல.  நெக்ஸ்ட் இன்னும் கொஞ்சம் மேக்கப் போட்டுக்கோ."  என்று சொல்லி சிரித்தான்.
நான் திரும்பி நின்று அவனை முறைத்தேன்.
"உடனே கோபம் வந்ததுமே." என்றவாறு மூக்கை பிடித்து ஆட்டி விட்டான்.
"கொஞ்ச நேரம். நானும் ரெடி ஆயிட்டு வந்திர்றேன்." என குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
குளியலறையிலிருந்து வெளியே வந்தவனை பார்த்து சிலையாக நிற்பது இப்பொழுது என் முறையானது.
வயிட் சர்ட் பிளாக் கோட் சூட் என அம்சமாக இருந்தான். அவனையே பார்த்துக்கொண்டு இருந்தேன்.
" இன்னும் எவ்வளவு நேரம்  என்னையே சைட் அடிப்ப. இப்போவே டைம் ஆச்சு சீக்கிரம் வா."
"நான் எதுக்கு உன்ன சைட் அடிக்க போறேன். எனக்கு என்ன கண்ணு இல்லயா."  சொல்லிவிட்டு அவன் பின்னே சென்றேன்.
அந்த ஐந்து நட்சத்திர விடுதியில்  பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மதுவின் நெடி  ரூம் ஸ்ப்ரேயுடன் கலந்து மூக்கில் நிறைந்தது.
அங்குள்ள பெண்களின் ஆடை அவர்களின் சிக்கனத்தை காட்ட, நான் ஆதியை நெருங்கி நின்றேன்.
ஆதித்யா அவன் கையில் என் கையை கோர்க்க கையை நீட்ட நானோ அவன் கையை தட்டி விட்டு நகர்ந்து நின்றேன்.
தோளை குலுக்கிக்கொண்டு அவன் முன்னே செல்ல நான் அவன் பின்னே சென்றேன்.
உள்ளே நுழைந்தால் எல்லோரையும் ஒரு பார்வை பார்க்க, கடைசியில் அவன் பார்வை ஒரு இடத்தில் நிலைகுத்தி நின்றது.
நானும் அவன் பார்வை செல்லும் திசையை நோக்க அங்கே தங்கப்பதுமையாய் அழகே உருவாய் ஒரு பெண் நின்றிருந்தாள்.
சிவப்பு நிற சில்க் சாரி கையில்லா பிளவுஸுடன்.எனக்கு சற்று பொறாமையாக இருந்தது.
ஆதி அந்த பெண்ணையே பார்த்துக் கொண்டிருக்க,நான் அவனை முறைத்துக் கொண்டிருந்தேன்.
எவ்வளவு தைரியம் இருந்தால் நான் இருக்கும் போதே வேறொரு பெண்ணை பார்ப்பான்.
அவனை உலுக்க அவன் என்ன என்னை கண்டு கொண்டதாக தெரியவில்லை. அவன் வாய் ஸ்வே என முணுமுணுத்தது.
அவனின் ஸ்வே என்ற முணுமுணுப்பு என் காதில் தெளிவாக விழ எனக்கு உலகம் சுழல்வது நின்று விட்டதைப் போல் தோன்றியது.
நான் டக்கென திரும்பி அந்த பெண்ணை பார்த்தேன். உள்ளுக்குள் ஏதோ பயப்பந்து உருளுவதை என்னால் உணர முடிந்தது.
"ஹலோ,மிஸ்டர். ஆதித்யா குமார்.உங்களுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். கம்." எங்கிருந்தோ வந்த ஒருவன் எங்களை அந்த பெண்ணை நோக்கி அழைத்துச் செல்ல ஆதியும் பார்த்துக்கொண்டே சென்றான்.
வேறு வழியின்றி நானும் ஆதித்யாவை பின் தொடர்ந்தாலும் என் பார்வையும் அந்தப் பெண்ணிடத்தில் இருந்தது.
அந்த மனிதன் எங்களை அந்தப் பெண்ணிடமே அழைத்துச் சென்றவன்,
"மிஸ்டர் ஆதித்யா குமார்.  மீட் மை ஒய்ப் மெசேஜ் ஸ்வேதா ஜெயராமன்."
நான் சந்தேகப்பட்டது உறுதியாகிவிட்டது. இவள்தான் ஸ்வேதா. ஆதியின் முன்னாள் காதலியாக இருந்திருக்க வேண்டும்.
ஆனால் அவள் தான் இறந்து விட்டால் என சஞ்சய் அண்ணாவின் அம்மா கூறியது நினைவில் வந்தது. அப்போது எப்படி இவள் இங்கே என குழம்பிக் கொண்டிருந்தேன்.
"எஸ்கியூஸ் மீ" என்ற ஆதி அங்கிருந்து நகர்ந்தான். அங்கு மது பாட்டில்கள்அடுக்கி வைக்கப்பட்டிருந்த  இடத்திற்கு சென்றான்.
அங்கிருந்த ஒரு ஆசாமி கிளாசில் ஏதோ ஊற்றி கொடுக்க ஒரே மடக்கில் முழுவதையும் குடித்து முடித்தான். நான் ஆதியையே பார்த்துக் கொண்டிருக்க அந்தப் பெண் என்னிடம் பேச ஆரம்பித்தாள்.
"யார் நீ?"
நான் அவளைப் பார்த்து விட்டு எங்களை அவளிடம் அழைத்து வந்த அந்த ஆளை தேடினேன். ஆனால் அவனோ அங்கு இருந்ததற்கான அடையாளம் இல்லை.
"நான் ஆதித்யா வைஃப்."
என்னை பார்த்து நக்கலா சிரித்தவள்,
" நான் யாருன்னு தெரியுமா? ஆதி யோட கேர்ள் ஃப்ரெண்ட்."
"அந்த பொண்ணு செத்துட்டா தா சொன்னாங்க."
"ஆமாம் நான் தான் அப்படி சொல்ல சொன்னேன்."
"எதுக்கு?"
"அதை தெரிஞ்சு நீ என்ன பண்ண போற"
"நான் எதுவும் பண்ண போறதில்லை.செத்தவ செந்தவலாவே இரு.எங்க லைஃப்ல வர்ற நினைக்காத. ஆதி என் ஹஸ்பன்ட். என்னோட ஹஸ்பண்ட் கிட்ட இருந்து தள்ளியே இரு."
என அவளிடம் இருந்து விலக முயற்சித்தேன்.
நான் தள்ளி இருந்தாலும் உன்னோட "ஹஸ்பண்ட் என்னை விட்டு தள்ளி இருக்க மாட்டான். ஏன்னா அவன் என்ன அவ்வளவு காதலிக்கிறான்.ஆதித்யாவ என் கிட்ட இருந்து உன்னால பிரிக்க முடியாது."
"மைன்ட் யுவர் வேர்ட்ஸ் மிஸஸ். ஜெயராமன். ஆதித்யா என்னோட புருசன்.எனக்கு மட்டும் சொந்தமானவன்.  உனக்கு மேரேஜ் ஆயிடுச்சு. அத ஞாபகத்துல வச்சிக்கோ.
ஆதித்யா மனசுல இப்போ நான் தான் இருக்கேன். நான் மட்டும்தான் இருக்கேன். புரிஞ்சுதா?" என்ன அவளே புரியவைக்க முயற்சி செய்தேன்.
"அதையும்தான் பார்க்கலாமே. நானா உன் புருஷன் கிட்ட போக மாட்டேன். உன் புருஷன் என்கிட்ட வந்தா விடவும் மாட்டேன்." எனக்கே சவால் விட்டவள் என்னிடமிருந்து விலகி சென்றாள்.
நான் ஆதியிடம் சென்று அவனின்  கையை பிடித்து அவனை அங்கிருந்து அழைத்து வந்தேன்.
"ஆதி என்ன பண்ற. போதும் நீ குடிச்சது."
அவன் என் பேச்சை கவனிக்காமல் கண்களால் அந்த இடத்தை துலாவினான்.
அதேபோல் அவனின் பார்வை ஸ்வேதாவின் மீது பட்டதும் மெதுவாக அவன் மீது போட்டிருந்த என் கையை நீக்கிவிட்டு ஸ்வேதாவிடம் சென்றான்.
என்னை விலக்கிவிட்டு ஸ்வேதாவை நாடி சென்றது என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
எனக்குத்தான் தெரியுமே ஆதித்யா ஸ்வேதாவை எவ்வளவு காதலித்தான் என்று.
இறந்து போனவளாய் இருந்தவள்  எப்படி திடீரென வந்தாள் என தெரியவில்லை. ஆனால் எங்கே என் ஆதித்யாவை என்னிடமிருந்து பிரித்து விடுவாளோ என்ற பயம் எனக்குள் இருந்தது.
ஆதித்யா ஸ்வேதாவின் அருகில் சென்றதும் அவனை கண்டுக்காமல் என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றாள்.
ஆனால் ஆதித்யா அவளை விடுவதாக இல்லை. அவள் பின்னேயே சுற்றிக் கொண்டிருந்தான்.
ஒரு கட்டத்தில் அவளின் கையை பிடித்து அவன் அருகில் இழுக்க அவன் மேலேயே மோதி நின்றாள்.
ஸ்வேதா ஆதியின் நெருக்கம் என்னுள் சொல்ல முடியா உணர்வுகளை ஏற்படுத்தியது.
மனம் வலித்தது. இந்த உலகம் இந்த நிமிடமே நின்று விடக்கூடாதா என்ற அளவிற்கு ஏக்கம் பிறந்தது. வந்த கண்ணீரை அடக்கிக்கொண்டேன்.
ஆதித்யாவும் ஸ்வேதாவும் நெருங்கி நிற்க ஸ்வேதாவின் இடது கை அவனின் இடுப்பை வளைத்து, அவள் வலது கையால் ஆதித்யாவின் கன்னங்களை  வருடினாள்.
கையை மெதுவாக கீழிறக்க அவனின் மார்புகளில் ஆரம்பித்த கோலத்தை அவனுடைய நடு வயிற்றுப் பகுதியில் நிறுத்தி ஓரக்கண்ணால் என்னை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தாள்.
அதிலேயே உடைந்துவிட்டேன். என் இதயம் சுக்கு நூறாகி விட்டது.என் ஆதித்யா எனக்கு இல்லை.
இவ்வளவு நடந்தும் ஆதித்யா அவளை தன் நெருக்கத்திலேயே வைத்திருந்தான். அவளின் கண்களை அவன் கண்களால் விழுங்கிக் கொண்டிருந்தான்.
எனக்கே கேட்காத உடைந்த குரலில் ஆதி என முனங்கினேன். அதற்கு மேல் நிற்க முடியாமல் சற்று கீழே அமர்ந்து. கண்ணீர் என் கன்னங்களை வருடி சென்றது.
அருகில் இருந்த ஒருவன் என் தோளை தொட அவனிடமிருந்து வந்த மதுவின் வாடையில் அவனிடமிருந்து விலகி அந்த இடத்திலிருந்து ஓடினேன்.
வழிந்த கண்ணீரை துடைக்க மனமில்லாமல்  டாக்ஸியில் ஏறி நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்தேன்.
ஹோட்டலில் நாங்கள் தங்கியிருந்த அறைக்கு வந்தபோது  அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தது.
அந்த ரூம் பாய் நான் சொன்னதை கேளாமல் மீண்டும் அறையை அலங்கரித்து வைத்து விட்டான்.
எனக்கு வந்த கோபத்தில் என் இயலாமை தனத்தை அந்த அலங்காரங்கள் மீது காட்டினேன்.
எல்லா அலங்காரத்தையும் கலைத்து விட்டு மடிந்து அமர்ந்து அழுதேன்.
என்னை ஆறுதல் படுத்த கூட யாரும் இல்லாமல் தனியாக இருந்தேன்.
என் ஆதி என்னை விட்டு சென்று விட்டான் என்று நினைக்கும் பொழுது என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
அவன் கை என் கையை விலக்கிவிட்டு சுவேதாவின் நெருக்கத்தில் இருந்தது திரும்பத் திரும்ப என் கண்முன் வந்து சென்றது.
கண்கள் கலங்க அமர்ந்திருந்தேன். என்னால் என்ன செய்வது என்று தெரியவில்லை. கண்ணாடியில் என்னை பார்த்தேன்.
அழகுதான் ஆனா என்னை விட கொஞ்சம் கம்மிதான் என்று அவன் சிறிது நேரத்திற்கு முன் என் தோளில் நாடியை புதைத்துக்கொண்டது கண்ணாடியில் நிழலாக தோன்றியது.
மீண்டும் அழுக நான் அணிந்திருந்த கருப்பு நிற சேலையை கண்ணாடியில் பார்த்தேன்.
பாட்டி சொன்னது நினைவு வந்து தாக்கியது.
"என்னடி இது அபசகுனமா? கல்யாணத்துக்குப் புடவை எடுக்க வந்தா, கருப்பு கலர் எடுத்து  மேல் வைச்சுக்கிட்டிருக்க."
"கொஞ்சமாவது அறிவு இருக்கா. முத முதல கல்யாணத்துக்காக புடவை எடுக்க வந்தா. இப்படி அபசகுணமா பண்ணிக்கிட்டு இருக்க. வா வந்து என் கூட நில்லு."
உண்மையிலேயே கருப்பு நிறம் அபசகுணமாக என்னுள் தோன்றியது.
வேகவேகமாக என்னை சுற்றி இருந்த அந்த சேலையை கழட்டி தூக்கி எறிந்தேன். சேலையின்றி சட்டையுடனும் பாவாடையுடனும் நின்று வந்து அழுதேன். என் கண்ணீர் வற்றும் வரை அழுது கொண்டிருந்தேன்.
இதற்கு மேல் ஆதித்யாவை எதிர்கொள்ளும் சக்தி எனக்கு இல்லை. துணியை எடுத்துக் கொண்டு குளியல் அறையில் புகுந்து வேறு உடைக்கு மாறி விட்டு வெளியேறினேன்.
எங்கு செல்ல என்று தெரியவில்லை. என் பெற்றோர்களிடம் சென்றால் அவர்களிடம் என்ன சொல்வது. அத்தை மாமாவிடம் சொன்னால் அவர்களிடம் எப்படி சொல்வது.
ஆதி அவனுடைய முன்னாள் காதலுடன் சேர்ந்து விட்டாள் என்று.
வந்த கண்ணீரை அடக்க வழி இன்றி கால்கள் சென்ற வழியில் சென்றேன்.
கையில் அலைபேசி கூட இல்லை.
"தியா..." என்ற குரல் கேட்க உணர்வுகள் இன்றி திரும்பி நின்றேன்.
ஆறடி உயரத்தில் ஒருவன் நின்றிருந்தான். நான் அவனை யாரென்று புரியாத கேள்வியுடன் பார்க்க அவனை பார்த்தேன்.
என்னை அவன் நெருங்க என் மூக்கை தொட, என் நினைவுகள் என்னைவிட்டு செல்வதையும் நான் அவன் மேலேயே சரிந்ததையும் உணர்ந்தேன்‌.
நான் கண் விழிக்கும் பொழுது என் எதிரே ஸ்வேதா அமர்ந்திருந்தாள்.
அதே சிவப்பு நிற சில்க் சாரியில் ஸ்வேதா நின்றிருந்தாள். கண்களை கசக்கி விட்டு மீண்டும் பார்த்தேன். ஸ்வேதாவே தான். சுற்றி முற்றிப் பார்த்தேன்.
அந்த இடம் ஏதோ ஹோட்டலில் அறை போல் இருந்தது.
என் கைகால்கள் கட்டியிருக்க நான் அதைக் கழற்ற முயற்சி செய்து கொண்டிருந்தேன்.
"உன்னால முடியாது தியா."
"உனக்கு என்ன வேணும். ஏன் இப்படி எல்லாம் பண்ற.எதுக்கு என்னை இங்க கூட்டிட்டு வந்த?"
"வெயிட் பண்ணு. வெயிட் பண்ணு. இப்படியே மொத்தமா எல்லாம்  கேட்டா நான் என்ன பண்றது?
ஒன்னொன்னா சொல்றேன். எனக்கு ஆதி வேணும். எனக்கு மட்டும் முழுசா வேணும்."
"என்னோட புருசனை கேக்குறியே. உனக்கு வெக்கமா இல்ல."
"நான் எதுக்கு வெட்கப்படனும் ஆதி என்னைதான் காதலிச்சான்."
"நீதான் செத்துப் போயிட்டதா சொன்னாங்க.எப்படி திரும்ப உயிரோட வந்த. ஆதி வேணும்னு சொல்றவ இவ்வளவு நாள் எங்கே போயிருந்தாய் எதுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணுன"
"நான் என்ன பண்ணட்டும் .எனக்கு மட்டும் என்ன செத்துப்போயிட்டேன்னு சொல்ல ஆசையா?
லோயர் மிடில் கிளாஸ் ஃபேமிலில பிறந்தது என் தப்பு இல்லயே.
அப்பப்போ பாக்கெட் மணிக்காக நாலஞ்சு பசங்க லவ் பண்ணனுனேன். அதுல ஆதியும் ஒருத்தன்.
ஆனா ஆதி இவ்வளவு பணக்காரனா இருப்பான்னு எனக்கு தெரியாது. அதனால அவளோட சொத்தை அடைய   அவன் கூட  க்ளோசா பழகினேன்.
ஆனா அந்த லூசு என்னன்னா எனக்கு பணம் வேணாம் சொத்து வேணாம் ஸ்வேதா மட்டும் போதும்னு அவங்க அப்பாகிட்ட வீரவசனம் பேசிட்டு வந்துட்டான்.
அதுக்கப்புறம் அவன வச்சுட்டு நான் என்ன பண்ண முடியும்.
எனக்கு ஆதிய பத்தி நல்லா தெரியும். அவனுக்கு ஒரு விஷயம் வேணும்னா கண்டிப்பா வேணும்.
வேணாம்னா அதை அவன் மேல திணிக்க முடியாது.
அவன சமாளிச்சு திரும்ப அவன் அப்பா கிட்ட இருந்து சொத்தை வாங்குவது கஷ்டம். அதுக்கு மேல என்னோட அண்ணே ஆதியோட அப்பா கிட்ட என்னை பத்தின எல்லா உண்மையும் சொல்லிட்டான். இதுக்கு அப்புறம் என்ன கல்யாணம் பண்ணி வப்பாருங்குற.
நான் அவள காதலிச்சதே அவனோட சொத்துகாக தான். அதுவே இல்லாதப்போ அவனுடைய இருந்து என்னை வேலைக்கு போயி கொடுக்க போற நாற்பதாயிரம் ஐம்பதாயிரம்க்கு என்னால குடும்பம் நடத்த முடியாது.
அதான் அவனை கழட்டிவிட அந்த ஆக்சிடெண்ட்ட யூஸ் பண்ணிக்கிட்டேன்."
"உன் வீட்ல கூட நீ செத்துட்டதா மாலை போட்டு இருந்தாங்க."
"அவங்களுக்கு வேற வேலை இல்ல. குடும்பம் மானம் மரியாதை கற்புன்னு டயலாக் பேசிட்டு இருப்பாங்க. அதுல என்னோட அண்ணனும் சேர்த்தி.
அதான் அன்னைக்கு பார்க்ல ஆதி அடிக்கும்போது நல்ல அடி வாங்கட்டும்னு வேடிக்கை பார்த்தேன்.
அதுக்கப்புறம் போலீஸ் வரத பாத்துட்டுதான் காப்பாற்ற மாதிரி நடிக்க வேண்டியதா போச்சு."
"கூட பிறந்த அண்ணன் அடி வாங்குறதையே ரசிச்சிருக்கயே."
"வேற என்ன பண்ணனும்.  அவனுக்காவது தங்கச்சிக்காக சம்பாதிக்க துப்பு இருக்கணும். அதுவும் இல்லைங்கும் போது என்னை என் வழியில் விடணும்.
அத விட்டுட்டு எத்தனை பையன் கூட பேசுவ. லவ் பண்ணுவன்னு  கேட்குறான்.அதான் ஆதி அடிச்சுகிட்டு இருக்கும்போது வாங்கட்டும்னு விட்டுட்டேன்."
"நான் கூட ஆதியோட காதலை பார்த்து உங்க ரெண்டு பேரோட காதலை பார்த்து, வாழ்ந்தா உங்கள மாதிரி வாழனும் னு நினைச்சேன். ஆனால் நிச்சயமாக நான் நினைச்சு கூட பாக்கல நீ இருப்பன்னு. ச்சீஈ நீஎல்லாம் ஒரு பொண்ணா?"
"இதெல்லாம் ரொம்ப வாட்டி கேட்டாச்சு. நான் பொண்ணா பையனான்னு நீ தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமில்லை.
எனக்கு ஆதித்யா வேணும் அவ்வளவு தான்."
"அவன் நீ பணத்துக்காகத்தானே  லவ் பண்ண. இப்ப தான் உனக்கு அந்த பணம் இருக்குல. அப்புறம் எதுக்கு ஆதித்யாவ கேக்குற."
"அப்ப எனக்கு பணம் தேவை பட்டது. இப்ப அது என்கிட்ட நிறைய இருக்கு. ஏன்னா ஜெயராமனோட மொத்த சொத்தும் இப்ப என் பேர்ல தான் இருக்கு.
அதனால இப்போ எனக்கு ஆதித்யா வேணும். அவனோட காதல் வேணும்.அவன மாதிரி யாராலும் என்னை காதலிக்க முடியாது.
நானே திரும்ப ஆதித்யாவை சந்திக்க நினைச்சேன்.
ஆனா விதி எங்களை சேத்து வச்சுருச்சு. ஆனா எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நீ இருக்க. அதனாலதான் உன்னை இப்போ கொலை பண்ண போறேன்."
"நீ என்ன பைத்தியமா? நீ என்னை கொன்னா மட்டும்  ஆதித்யா உன்கூட சேர்ந்து வாழ்வான்னு  நினைக்கிறியா? உன்னை பத்தி தெரிஞ்சா உன் பக்கம் கூட திரும்பி பார்க்க மாட்டான்."
"இப்பவும் ஆதித்யா மனசுல நான் தான் இருக்கேன். நீ மட்டும் இல்லாம இருந்திருந்தா இந்நேரம் ஆதித்யா கூட அவன் ரூம்ல நான் இருந்திருப்பேன்."
எவ்வளவு தைரியம் இருந்தால் என்னுடைய ஆதித்யாவை பற்றி இப்படி பேசியிருப்பாள்.
அவள் ஆதித்யாவை உண்மையிலே காதலித்திருந்தால் என்னுடைய ஆதிக்காக விட்டுக் கொடுத்து இருப்பேன்.
ஆனால் இப்படிப்பட்ட ஒருத்தியை என்னுடைய ஆதித்யா எப்படி காதலித்தான் என்றுதான் தெரியவில்லை. கண்டிப்பாக இவளிடம் ஆதித்யாவை விடமாட்டேன்.
"அது என் உயிர் இருக்கிற வரைக்கும் நடக்காது."
"அதனால தான் உன் உயிரை எடுக்க போறேன்."
"ஸ்வேதா.... ஸ்வேதா..." என கதவு தட்டும் சத்தம் கேட்டது. அது என் ஆதித்யாவின் குரல்.
"ஆதி..."என ஆதிக்கு கேட்டுவிட வேண்டும் என என்னால் முடிந்த மட்டும் கத்தினேன்.
ஆதிக்க என் குரல் கேட்டு இருக்கவேண்டும் கதவை உடைக்க ஆரம்பித்தான்.
ஆதி கதவை உடைத்து உள்ளே வருவதற்கும் ஸ்வேதா என் கழுத்தில் கத்தி வைப்பதற்கும் சரியாக இருந்தது.
"அவள விட்டு அவள ஏதும் பண்ணாத."
"நான் இன்னும் உன்ன தான் லவ் பண்றேன். நாம நம்ம லைஃப்ப அமைச்சுக்கலாம். நமக்கு நடுவுல தி ய கொண்டு வராதா."
"நான் உன்ன நம்பமாட்டேன் ஆதித்யா. ஏன்னா நான்
உன் கண்ணுல இவளுகான காதலை பார்த்தேன்.
இவை இருக்கிற வரைக்கும் நீ என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்ட. இவ செத்துட்டா தான் நாம நிம்மதியா வாழ முடியும்."
என்றவள்  நொடியும் தாமதிக்காமல் என் நெஞ்சில் கத்தியை இறக்கினாள்.
கத்தி என்னுள்ளே இறங்க ஆதித்யாவின் 'தி' என்ற அலறல் மட்டுமே எனக்கு கேட்டது. கண்கள் சொருக மயங்கினேன்.
வெளிச்சம் - 17
அத்தியாயம் 17
இன்று சாயங்காலம் ஊருக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்து கொண்டிருந்த சிவகாமியின் அங்கு அமைதியாக அமர்ந்திருந்த நளினியை கண்டார்.
"என்ன ஆயிற்று நளினிக்கு? ரொம்ப அமைதியாக இருக்கிறாள்!" என்று பார்வதியிடம் கேட்டபடியே நளினியின் அருகில் வந்து அமர்ந்த சிவகாமி, அவள் நாடியை பிடித்து தன்னை பார்க்கச் செய்து, "என்ன ஆயிற்று நளினி?" என்றார்.
அவரைப் பார்த்ததும் அவளது கண்கள் கண்ணீரில் குளம் கட்டிக் கொண்டது. அதை கண்டு பதறிய சிவகாமி, "என்ன ஆயிற்றுடா? ஏன் அழுகிறாய்?" என்று தன் முந்தானைக் கொண்டு அவளது கண்ணீரை துடைத்து விட்டார்.
"நீங்கள் ஊருக்கு போவது எனக்கே மிகவும் வருத்தமாக இருக்கிறது. அப்படி என்றால் அண்ணிக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும்? அதை நினைத்து தான் அழுகிறேன் அத்தை" என்று அவரை வயிற்றுடன் கட்டி அணைத்துக் கொண்டாள்.
அதில் புன்னகைத்த சிவகாமி, அப்பொழுது அங்கு வந்த சிவன்யாவையும் தன் அருகில் வரவைத்து அணைத்து கொண்டார். சிவன்யாவின் பின்னாடியே அனைவரும் குடிப்பதற்கு மோர் எடுத்துக்கொண்டு வந்த பார்வதி சிவகாமி, அனைத்து நிற்கும் இரு பெண்களையும் பார்த்து புன்னகைத்தபடி, "என்ன அண்ணி? ரெண்டு பேரும் உங்க கிட்ட இப்படி ஒட்டிக்கிட்டு நிக்கிறாங்க?" என்று கேட்டபடியே மோரை எடுத்து அவர் கையில் கொடுத்தார்.
"எல்லாம் கல்யாணம் முடிந்த பிறகு பெண்களுக்கு வரும் கவலைதான் அண்ணி" என்று சொல்லியபடியே தன் கையில் இருந்த மோரை நளினிக்கு கொடுத்து குடிக்கும்படி சொல்லிவிட்டு, மகளுக்கும் கொடுத்து விட்டு தானும் ஒன்றை எடுத்து அவர்கள் இருவருக்கும் நடுவில் அமர்ந்து கொண்டார்.
"நம் கலாச்சாரத்தில் திருமணத்திற்குப் பிறகு பெண்கள் கணவன் வீட்டில் செல்ல வேண்டும் என்பது ஒரு முறையாகி விட்டது. இது மேலோட்டமாக பார்த்தால் ஒரு சாதாரண நிகழ்ச்சி போலத்தான் இருக்கும். இவ்வளவு நாள் உன் அப்பா அம்மா கூட இருந்த, இப்ப இங்க என் வீட்ல இருக்க போற, என்று ஆண்களால் சாதாரணமாக சொல்லிவிட முடியும். ஆனால் உண்மையில் ஒரு பெண்ணிற்கு இது ஒரு சவாலான காலம். ஓர் இடத்தில் வாழ்ந்த வளர்ந்த செடியை பிடுங்கி, மற்றொரு இடத்தில் நட்டு வைத்தால், அந்தச் செடி எப்படி இருக்கும்?" என்று நளினியை பார்த்து கேட்டார் சிவகாமி.
மோர் குடித்துக் கொண்டிருந்த நளினி நிமிர்ந்து அவரை பார்க்க மோரில் இருந்த வெள்ளை நுரை, அவள் மேலுதட்டில் மீசை போல் ஒட்டிக் கொண்டிருப்பதை கண்டு புன்னகைத்து, "நளினிக்கு வெள்ளை மீசை முளைத்து விட்டதே!" என்று கிண்டல் அடித்தார்.
தன் புறங்கையால் தன் மேல் வாயை துடைத்துக் கொண்ட நளினி, "செடி வாடி போய்விடும் அத்தை" என்றாள் அவர் கேட்ட கேள்விக்கு பதிலாக.
"ஆமாம், முதலில் செடியின் வாடி தான் போகும். அதை கவனமாக பார்த்துக் கொண்டால், அந்த மண்ணில் நன்றாக வேர் பிடித்துக் கொண்டு செழித்து வளர்ந்து பூத்து காய்க்க தொடங்கி விடும், இல்லையா?" என்றார் இரு பெண்களையும் பார்த்து.
"ஆமாம்" என்று இருவருமே மௌனமாக தலையாட்டினார்கள்.
"அதுதான் இப்பொழுது உனக்கு நடக்கிறது" என்று சிவன்யாவின் நாடி பிடித்து கூறினார். "இன்னும் கொஞ்ச நாளில் உனக்கு நடக்கும்" என்று நளினியிடமும் கூறினார்.
"நாம் பிறந்து வளர்ந்த இடத்தில் நம் பழக்க வழக்கங்கள் ஒரு விதமாக இருக்கலாம். நாம் திருமணம் முடித்து செல்லும் வீட்டில் உள்ள பழக்கவழக்கங்கள் ஒருவிதமாக இருக்கலாம். நான் இப்படித்தான் இருப்பேன் என்று முரண்டு பிடித்துக் கொண்டு இருந்தால், நான் அந்த இடத்தில் தான் வளர்ந்தேன், அதே மண்ணில் தான் இருப்பேன், இந்த மண்ணை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று, செடியின் வேர் மணலுடன் ஒட்டாமல் இருந்தால் அந்தச் செடி வாடிவிடும்.
அதை விட்டுவிட்டு புது மண்ணில் உள்ள புது சத்துக்களை எடுத்துக்கொண்டு தன்னை வளர்த்துக் கொள்ள முயன்றால், அச்செடி நன்றாக வளர்ந்து செழிக்கும். அதுபோலத்தான் நாமும், இதுவரை நான் இப்படி இருந்தேன், இனிமேலும் இப்படித்தான் இருப்பேன் என்று முரண்டு பிடித்துக் கொண்டிருந்தால், நம் வாழ்க்கை சிறப்பாக இருக்காது. ஆனால் புது இடத்திற்கு நுழைந்ததும் அவர்களது பழக்கவழக்கங்களையும் தனது பழக்க வழக்கங்களாக ஆக்கி கொண்டால், நீண்ட நாட்கள் நிம்மதியாக வாழலாம் இல்லையா?" என்று மீண்டும் இருவரையும் பார்த்தார். இருவருக்கும் புரிந்தது போல் தலையாட்டினர்.
"அப்படி என்றால் நமக்கென்று எந்த விருப்பு வெறுப்புமே இருக்கக் கூடாதா அத்தை?" என்று கவலையாக சிவகாமியை பார்த்தாள் நளினி.
"அப்படி இல்லடா, உன் விருப்பு வெறுப்பு போலவே உன் துணையின் விருப்பு வெறுப்புக்கும் கொஞ்சம் செவி சாய்க்க வேண்டும் என்றுதான் சொல்கிறேன். உன்னுடைய சுயம் அனைத்தையும் தொலைத்து விட்டு, உன் துணையை சார்ந்து இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. உன் விருப்பு வெறுப்போடு, உன் துணையின் விருப்பு வெறுப்பையும் புரிந்து கொண்டு, அவருக்கு இணையாக, அவருடன் பயணிக்க வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.
கணவன் மனைவிக்குள் எந்த ஒளிவு மறைவும் இருக்கக்கூடாது. உனக்கு தோன்றுவதை, உங்கள் கணவனிடத்தில் சொல்ல வேண்டும். அதற்கு அவர் கூறும் பதில்களையும் கவனமாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் இல்லறம் செழிப்பாக இருக்கும். அதை புரிந்து கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் அது மிகவும் கடினமாக தான் இருக்கும். ஆனால் அந்த குடும்பத்தில் உள்ள எல்லோரையுமே உங்கள் பிறந்த குடும்பத்தில் உள்ளவர்கள் போல் பார்க்க ஆரம்பித்து விட்டால், எல்லாமே சுலபம்தான்" என்று இருவருக்கும் பொதுவாக அறிவுரை கூறிய சிவகாமி,
"நளினிக்கு பக்கத்து ஊரு தான். அரை மணி நேரத்தில் நினைத்ததும் அவள் அவள் தாயைப் பார்க்க வந்துவிடுவாள். பார்வதிக்கும் மகளைப் பார்க்க வேண்டும் என்று தோன்றினால் உடனே சென்று பார்த்து விடலாம். ஆனால் எனக்கும் உனக்கும் அப்படி இல்லை. ஆகையால் நளினியை விட நீ தைரியமாக இருக்கணும். உன் கணவன் குடும்பத்தை உன் குடும்பமாக ஏற்றுக் கொண்டால் உனக்கு என்னை பார்க்க வேண்டும் என்ற எண்ணமே வராது" என்று புன்னகைத்து கூறினார் மகளைப் பார்த்து.
சிவன்யா தாயை அணைத்துக் கொண்டு, "நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன் அம்மா" என்று கூறி அவரது கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.
"நானும் அத்தை" என்று அவரின் மறுபுறம் நின்று அணைத்துக் கொண்ட நளினி, அவரின் மற்றொரு கன்னத்தில் முத்தம் கொடுக்க, இரு கன்னங்களையும் துடைத்துக் கொண்ட சிவகாமி "அதற்கு இப்படி தான் எச்சில் பண்ணுவீங்களா" என்று விளையாட்டாக கோபித்துக் கொண்டார்.
இவ்வளவு நேரம் அவர் கூறியது அனைத்தையும் கேட்ட பார்வதி "சரியாக சொன்னீங்க அண்ணி. ஆண்களுக்கு குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பொறுப்பு இருந்தாலும், பெண்களுக்கு இரு குடும்பத்தையும் சீராக இணைக்கும் கூடுதல் பொறுப்பு இருக்கத்தான் செய்கிறது. எனக்கு சிவன்யாவை பற்றி கவலை இல்லை. நான் பார்த்தவரைக்கு ரொம்ப பொறுப்பா எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறாள். ஆனால் இவளை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது. ஒரு வேலையும் செய்வது இல்லை. இவள் மாமியாரிடம் போய் என்னென்ன திட்டுகள் வாங்க போகிறாளோ?" என்று கவலையாக சொல்லியபடியே அவளின் தலையில் செல்லமாக ஒரு கொட்டும் வைத்தார்.
தலையை தடவிக் கொண்ட நளினி "நான் எதற்கு வேலை செய்யணும்? அத்தை வீட்ல தானே இருக்காங்க! அவங்க எல்லாத்தையும் பார்த்துப்பாங்க" என்று கூறி "இல்லையா அண்ணி?" என்று சிவன்யாவையும் தன் பேச்சுக்கு கூட்டு சேர்த்துக் கொண்டாள் நளினி .
அவளது செயலில் சிவன்யாவிற்குமே சிரிப்பு வந்துவிட்டது. சிரித்துக் கொண்டே தன் தாயைப் பார்த்தாள் சிவன்யா. மகளின் முகத்திலிருந்த புன்னகையை பார்த்து, தானும் புன்னகைத்த சிவகாமி, சிவன்யாவை தோளுடன் அணைத்துக் கொண்டு "திருமணத்திற்கு பிறகு தாய் தந்தையரை பிரிந்து தான் ஆக வேண்டும். நாங்கள் ஊருக்குச் செல்லும் பொழுது நீ அழுதால் எங்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அதுவும் உன் அப்பாவால் கொஞ்சம் கூட தாங்கிக்க முடியாது, நொறுங்கி போய்டுவார். அதனால அப்பா முன்னாடி அழுதுவிடாதேடா!" என்று அவளின் நாடி பிடித்து செல்லமாக ஒரு வேண்டுகோளையும் வைத்தார்.
"சரி அண்ணி, நீங்க கொஞ்ச நேரம் ஓய்வெடுங்க" என்று சிவகாமியிடம் சொல்லிவிட்டு,
"அம்மா கூட பேசிகிட்டு இருமா" என்று சிவன்யாவிடம் சொல்லிவிட்டு,
அவர்களுக்கு தனிமை கொடுக்க நினைத்து, "நீ வா, நாம் மதிய உணவுக்கு அண்ணன் சொல்லி விட்டானா? என்று கேட்போம்" என்று நளினியையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தார் பார்வதி.
- தொடரும்..
- அருள்மொழி மணவாளன்..
வெளிச்சம் - 16
அத்தியாயம் 16
மலர்ந்த முகமாக பதிலுக்கு காலை வணக்கம் சொல்லிய தங்கையின் முகத்தை புன்னகையாக பார்த்துக் கொண்டே அமர்ந்தான் மேகநாதன்.
"இரவு மண்டபத்தில் இருந்து வருவதற்கு நேரம் ஆகிவிட்டதா அண்ணா?" என்று கேட்டுக் கொண்டே அவன் குடிப்பதற்கு காபி எடுத்து வர இருக்கையில் இருந்து எழும்பொழுது, அங்கு வந்த பார்வதி மேகநாதனின் கையில் காபியை கொடுத்தார்.
புன்னகையுடன் நன்றி சொல்லி வாங்கிய மேகநாதன் தங்கையின் அருகில் அமர்ந்து கொண்டு காபியை குடித்துக்கொண்டே அவளுடன் பேசலானான்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, சிவன்யாவின் தாயும் தந்தையும் அங்கு வந்துவிட, வேலையை முடித்து பார்வதியும் வந்து அமர்ந்தார்.
காலை தினசரி வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்த விஸ்வநாதன், அனைவரும் ஹாலில் கூடியிருப்பதை கண்டு, "என்ன எல்லோரும் உட்கார்ந்து கதையடித்து கொண்டிருக்கிறீர்களா?" என்று கேட்டுக் கொண்டே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.
தந்தை வந்ததும் எழுந்து அவர் கையில் இருந்த நாளிதழை வேகமாக வாங்கி கொண்டு வந்து அமர்ந்து படிக்க ஆரம்பித்தாள் நளினி.
"பரவாயில்லையே, வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தாலும் தினசரி படிக்கும் பழக்கம் வைத்திருக்கிறாயே என்று அவளை பாராட்டினான் மேகநாதன்.
"அட போங்க தம்பி நீங்க வேற, கடைசியில சினிமா பக்கத்தை தான் எடுத்து பார்த்துட்டு உட்கார்ந்து இருப்பா. அதை தவிர நியூஸ் பேப்பர்ல எதையும் பார்க்க கூட மாட்டா" என்று அவளை கலாய்த்தபடி நக்கலாக கூறினார் பார்வதி.
"அம்மா" என்ற சிணுங்கிய நளினி அவர் கூறியது போலவே சினிமா பக்கத்தை மட்டும் பார்த்துவிட்டு, தினசரியை மடித்து தந்தையின் கையில் கொடுத்துவிட்டு அவருக்கு அருகிலேயே அமர்ந்து கொண்டாள்.
அவளின் செயல் கண்டு அனைவரும் புன்னகைத்து கொண்டிருக்க, "மாமா இன்று சாயங்காலம் நாங்கள் ஊருக்கு கிளம்பலாம் என்று இருக்கிறோம்" என்றான் மேகநாதன்.
அதில் அதிர்ந்த சிவன்யா "என்னண்ணா சொல்றீங்க? நான்கு நாட்கள் இருப்பதாக தானே சொன்னீர்கள். அப்படித்தானே டிக்கெட்டும் எடுத்து இருந்தீர்கள்?" என்று அதிர்ச்சியாக கேட்டாள்.
தங்கையை சங்கடமாக பார்த்த மேகநாதன், "அப்படித்தான் எடுத்திருந்தேன் குட்டிமா. ஆனால் அலுவலகத்தில் கொஞ்சம் அதிக வேலை இருக்கிறது. என் விடுப்பை ரத்து செய்துவிட்டு வரும்படி சொல்லிவிட்டார்கள்" என்றான் தயக்கமாக.
அண்ணன் அப்படி கூறியதும் அவளுக்கு தன்னால் கண்களில் கண்ணீர் முட்டியது. எழுந்து தாயின் அருகில் சென்று அமர்ந்து கொண்டு "அம்மா, அண்ணன் என்னம்மா இப்படி சொல்றாங்க? நீங்களாவது சொல்லுங்கம்மா? ஒரு நான்கு நாட்கள் இருந்துவிட்டு செல்லுங்கள் என்று கண்ணீருடன் தாயின் கைகளை பிடித்துக் கொண்டாள்.
மகள் அழுவது பெற்றோருக்கு வருத்தமாக இருக்க, "அழாதே குட்டிமா. எப்படியும் நாங்கள் நளினி கல்யாணத்திற்கு வருவோம் தானே! அப்பாவிற்கும் முக்கியமான வேலை ஒன்று வந்து விட்டது. அண்ணனுக்கும் விடுமுறை இல்லை. அதனால் நாங்கள் இப்பொழுது போய்விட்டு நளினி கல்யாணத்திற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே வர பார்க்கிறோம்" என்று மகளின் தலையை தடவி விட்டபடியே கூறினார் சிவனேசன்.
சிவன்யாவிற்கு திடீரென்று தான் தனித்து விட்டது போல் தோன்றியது. தந்தையின் தோளில் அமைதியாக சாய்ந்து கொண்டாள்.
இவ்வளவு நேரம் கலகலப்பாக இருந்த வீடு சற்று என்று அமைதியாகிவிட்டது. அதில் பார்வதிக்கும் சங்கடமாகி போய்விட்ட, "நான் காலையிலேயே சொன்னேன் அண்ணி. பாருங்கள் இப்பொழுது சிவன்யா முகம் வாடிவிட்டது" என்றார் மருமகளின் வாடிய முகத்தை கண்டு வருந்திய படியே.
"அவர்களுக்கும் மகளை விட்டு பிரிந்து செல்வதற்கு விருப்பமா என்ன? அவசர வேலை என்று தானே உடனே கிளம்புகிறார்கள். நீ வேறு ஏதாவது பேசி மருமகளையும் அவர்களையும் சங்கடப்படுத்தாதே!" என்று மனைவியிடம் சொல்லிவிட்டு,
"உன்னுடன் இருப்பதற்காக தான் அவர்கள் வந்திருக்கிறார்கள். ஏதோ அவசர வேலை என்று உடனே கிளம்புகிறார்கள். நீ இப்படி வருத்தப்பட்டு கொண்டு இருந்தால் அவர்களும் நிம்மதியாக கிளம்ப முடியுமா? நீ கொஞ்சம் தைரியமாக இருமா. உன் அப்பா அம்மா போல நானும் உன் அத்தை உன்னை நன்கு கவனித்துக் கொள்வோம். நீ சந்தோஷமாக இருந்தால் தான் அப்பாவும் அம்மாவும் அங்கு நிம்மதியாக இருப்பார்கள்" என்று சிவன்யாவிற்கு ஆறுதல் கூறினார் விஸ்வநாதன்.
இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது தேவ் எழுந்து வந்தான். மேகநாதனின் அருகில் "என்ன எல்லோரும் சீரியஸா ஏதோ பேசிக்கிட்டு இருக்கீங்க போல?" என்ற படியே அமர்ந்தான்.
"அது ஒன்றும் இல்லை மாப்பிள்ளை. எனக்கும் மேகநாதனுக்கும் முக்கியமான வேலை ஒன்று வந்து விட்டது. அதனால் இன்று சாயங்காலம் ஊருக்கு கிளம்பலாம் என்று முடிவு செய்தோம். அதைப்பற்றி தான் பேசிக்கொண்டு இருக்கிறோம்" என்றார் மருமகனிடம் சிவனேசன்.
"ஓ" என்று மட்டும் சொல்லிவிட்டு தன் தாயைப் பார்த்த தேவ், "அம்மா டிபன் ரெடி ஆயிடுச்சா? மணி ஒன்பதாக போகிறதே!" என்றான்.
அவன் சிவனேசன் கூறியதற்கு எந்த மறுப்போ, காரணமோ கேட்காமல் சாப்பாட்டை பற்றி கேட்டதில் பார்வதியும் சற்று அதிர்ந்து விட்டார். அந்த அதிர்ச்சி குறையாமல் தலையை மட்டும் ஆட்டிவிட்டு, எழுந்து உணவை எடுத்து வைக்க சென்று விட்டார்.
அவன் அப்படி மொட்டையாக பேசியது அனைவருக்குமே அதிர்ச்சியாக தான் இருந்தது. அவனின் அலட்சியம் சிவன்யாவின் கண்களில் கண்ணீரை உற்பத்தி செய்தது. மென்மையாக தன் மகளை பார்த்த சிவனேசன் எதுவும் பேசாமல் அவளது கண்ணீரை துடைத்து விட்டார். அவருக்கும் தேவ்வின் செயல் வருத்தமாக இருந்தாலும் தன் வருத்தத்தை மகளின் முன் காண்பிக்க கூடாது என்று அமைதியாக அழாதே என்று மறுப்பாக மகளிடம் தலையாட்டினார்.
அனைவரும் முகத்திலும் ஒருவித இறுக்கம் தோன்றியது. சூழ்நிலை மோசமாவதை உணர்ந்த விஸ்வநாதன், "என்ன தேவ்? அவர்கள் இரண்டு நாட்கள் கழித்து தான் ஊருக்கு செல்வதாக இருந்தது, இப்பொழுது திடீரென்று கிளம்புவதால் சிவன்யா வருத்தமாக இருக்கிறாள். அதனால் அவளுக்கு ஆறுதல் சொல்லும் படி ஏதாவது சொல்வாய் என்று நினைத்தேன். அதுமட்டுமின்றி அவர்களை இன்னும் கொஞ்ச நாள் இருக்க சொல்லலாம் அல்லவா? அதை விட்டுவிட்டு இப்படி அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம்?" என்று மகனின் அலட்சியத்தை பொறுக்காத விஸ்வநாதன், கண்டிக்கும் பாணியில் அவனிடம் கேட்டார்.
"இதில் என்னப்பா இருக்கிறது? அவர்கள் நான்கு நாட்கள் இருக்க வேண்டும் என்று திட்டம் தீட்டி தானே வந்தார்கள்? அவசர வேலை என்று கிளம்புகிறார்கள். அவர்களை எப்படி தடுக்க முடியும்? அது மட்டுமல்லாது பத்து மணிநேர பயணம் தானே! வேலை முடிந்தால் மகளைப் பார்க்க விரைந்து வரப்போகிறார்கள். இதில் நான் பார்மாலிட்டேசிற்காக பேசுவதற்கு என்ன இருக்கிறது?" என்று சொல்லிவிட்டு, "வாங்க எல்லோரும் ஒன்றாக சாப்பிடலாம்" என்று உணவு மேசை நோக்கி நடந்தான்.
முதலில் அவனது செய்வதில் வருந்திய சிவநேசன், தேவ் கூறியதை கேட்டு நிம்மதி அடைந்தார். மருமகன் நிலவரத்தை புரிந்து கொண்டு சகஜமாக இருப்பதில் மகிழ்ந்த சிவநேகன், "அதைத்தான் நான் சிவன்யாவிடம் சொல்லிக் கொண்டு இருந்தேன் மாப்பிள்ளை. அவள் தான் அழுது கொண்டு இருக்கிறாள்" என்று நிலைமையை சீராக்கும் பொருட்டு சொல்லிக்கொண்டு, மகளை சாப்பிட அழைத்து வந்தார்.
அனைவரும் சுற்றி அமர்ந்து விட, பார்வதியும் சிவகாமியும் பரிமாற ஆரம்பித்தனர். "ஏன் அத்தை? எல்லோரும் பக்கத்தில் தானே இருக்கிறோம். நீங்களும் உட்காருங்கள் எல்லோருமே ஒன்றாக சாப்பிடலாம்" என்று சிவகாமியிடம் ஆரம்பித்து "உட்காருங்கள் அம்மா" என்று தன் அருகில் இடத்தை தன் தாய்க்கு காண்பித்து முடித்தான்.
அதன் பிறகு அனைவரும் சாதாரணமாக அவரவர்களே பரிமாறி உண்டுகொள்ள, "சாப்பாடு சூப்பர் அத்தை" என்றான் மேகநாதன்.
"நீங்கள் தான் அனைத்தையும் செய்தீர்களா அம்மா?" என்றான் தேவ் தாயை பார்த்து.
அவரும் ஆமாம் என்று தலையாட்ட, "இன்று சிவன்யாவோட அப்பா அம்மா ஊருக்கு கிளம்புகிறார்கள் அவர்களிடம் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருங்கள். மதிய உணவை வெளியே வாங்கிக் கொள்ளலாம், சரியா?" என்று தாயிடம் சொல்லிவிட்டு, "அப்பா, எந்த ஹோட்டலில் சாப்பாடு நன்றாக இருக்குமோ அங்கு மதியத்திற்கு சாப்பாடு சொல்லிவிடலாம்" என்றான் தந்தையிடம்.
அவருக்கும் மகன் சொல்லுவது சரியாகப்பட்டது. சரிப்பா, என்று தலையாட்டி காலை உணவை அனைவரும் பேசி உண்டு முடித்தனர்.
ஆண்கள் அப்படியே ஹாலில் உட்கார்ந்து பேச,
சிவகாமி "நான் துணிகளை எல்லாம் எடுத்து வைக்கணும் அண்ணி" என்று சொல்லி அவர்களது அறைக்குச் செல்ல,
பின்னாடியே பார்வதியும் அவருக்கு உதவி செய்வதற்காக சென்றார்.
துணிகளை எல்லாம் எடுத்து அடுக்கி மடித்து வைத்துக் கொண்டு இருக்கும் பொழுது, அங்கு அமைதியாக இருந்த நளினியை பார்த்தார் சிவகாமி.
- தொடரும்..
- அருள்மொழி மணவாளன்..
RE: தகிக்கும் நிலவொன்று-16