மையலிட்ட சிற்பமே ! - Praveena Thangaraj - onlinetamilnovels.com Forum

மையலிட்ட சிற்பமே-12 (முடிவுற்றது)
அத்தியாயம்-12

சாமுண்டிஸ்வரி பேத்தியை குளிப்பாட்ட காலில் வைத்து வெந்நீரை ஊற்றவும், தவமலரோ கணவன் கதிரிடம், "ஏங்க தண்ணீ ரொம்ப சுடுதுங்க.. கை வச்சாலே பொத்துடும் போல இருக்கு. அத்தை அதுல போய் குழந்தைக்கு தலைக்கு ஊத்துது. கொஞ்சம் பச்ச தண்ணியை கலந்து ஊத்த சொல்லுங்க" என்று பயந்து பேச, இரண்டு நாளாக இதையே கூறியவளை முறைத்தபடி, வெளியே வந்தவன், அன்னையிடம் நேரிடையாக பேசாமல் கையை அலம்புவது போல வந்து சுடத்தண்ணியில் கையை விட்டவன் அலறினான்.

"எம்மா... தண்ணி கொதிக்குது‌. இதை போய் குழந்தைக்கு ஊத்தற" என்று பதறினான்.

"உன் பொண்டாட்டி சொல்லி கூட்டிட்டு வந்தாளா? ஏன்டா... உன்னை வளர்த்த எனக்கு என் பேத்தியை வளர்க்க தெரியாது. பதினெட்டு வயசு பிறந்ததும் உன் பொண்டாட்டி பெரிய மனுஷி ஆயிட்டாளா?" என்று கத்திவிட்டு, ''நீ தான் அய்யோ அம்மானு கத்துவ. உன்‌பொண்ணு குளிஞ்சிட்டு சுகமா தூங்கும். படுத்தே கிடந்தா முதுகு நோவாது. குழந்தைக்கு சுடசுட ஊத்தினா தான் மேல் வலியில்லாம சுகமா தூங்கும். இதெல்லாம் இவளுக்கு என்ன தெரியும். பேசாம பாலை கொடுத்தமா ரெஸ்ட் எடுத்தமானு இருக்க சொல்லு." என்று அதட்டினார்.

சாமுண்டிஸ்வரி பேச்சுக்கு அடுத்து அவன் என்ன பேசுவான். குழந்தை சுடத்தண்ணி ஊத்தவும் வீறிட்டு அழுதது. தவமலருக்கு கண்ணீர் அரும்பியது.
ஆனால் சாமுண்டிஸ்வரி சொன்னது போல குளித்துக் கொண்டிருக்கும் பொழுதே குழந்தை சுகமாக உறங்கி வழிந்தது.

தினமும் குழந்தை குளித்து முடிக்கவே தவமலர் வாங்கி கொண்டு பால் கொடுத்திட, கதிரவன், "குழந்தைக்கு தோல் எல்லாம் ஒன்னும் ஆகலை. நான் இரண்டு மூன்று பேரிடம் கேட்டேன். அப்படி தான் சுடத்தண்ணி ஊத்துவாங்களாம்‌ நீ கவலைப்படாத. எங்கம்மா நல்லா தான் பார்த்துக்கோம்." என்று நெருக்கமாய் அமர்ந்தான்.

தவமலரோ "நீங்க பாட்டுக்கு பக்கத்துல வந்து படுக்கறிங்க. அத்தை அதுக்கும் திட்டும். ஏற்கனவே நர்ஸக்கா வேற சொல்லி அனுப்பிச்சு. இரண்டாவது குழந்தையாவது தள்ளி பெத்துக்கோ. பொசுக்குனு வயித்தை தள்ளிட்டு வந்து நிற்காதனு.
போங்க... அங்க.." என்று அவன் நெஞ்சில் கைவைத்து தள்ள முற்பட, "முன்ன விட அழகாயிருக்க மலரு. லேசா உடம்பு போட்டிருக்க" என்று கழுத்தில் முத்தமிட்டான்.‌

சாமுண்டிஸ்வரி கணக்கும் சத்தம் கேட்க பதறி விலகி, "மதியம் கருவாட்டு குழம்பே போதும்‌" என்று ஓடினான்.

தவமலருக்கு கணவனை கண்டு சிரிப்பு பொங்கியது.
மனம் நிறைவாக சிரித்திட, தலையில் கொட்டு விழுந்தது. சாமுண்டிஸ்வரி தான் நொறுக்கென கொட்டினார்.‌

"ஏன்டி.. ஒரு மாசமா சொல்லிட்டு இருக்கேன். என் பையன் எதிர்க்க குழந்தைக்கு பால் தந்தா துண்டு எடுத்து போட்டு கொடுன்னு. நீ பாட்டுக்கு சொல்லறதை கேட்கறதில்லை.
கண்ணுபடும்டி.. விவஸ்தை கெட்டவளே.
அந்த நர்ஸு பொம்பள எப்படி திட்டி அனுப்பிச்சு. அடுத்த குழந்தை உடனே வரக்கூடாதுனு. அறிவில்லை.." என்று கண்டிக்க, "அவர் தானே அத்தை பக்கத்துல வந்து உட்காருறார்." என்றாள் தலையை தேய்த்துக்கொண்டு.

"ஆஹ்... அவன் தான பூனை மாதிரி சுத்தி சுத்தி வருவான். பிள்ளை பெத்துக்கறது நீ தானே. உனக்கு அறிவில்லை." என்றார்.

"இனி கவனமா இருக்கேன் அத்தை" என்றாள்.

"ம்கூம்.. என்னத்த கவனமா இருப்பியோ" என்று சாமுண்டிஸ்வரி சென்றிட, குழந்தை உறங்க வைக்க தொட்டிலில் போட்டு தாலாட்டினாள்.

மதியம் போல கதிரவன் வந்தான். சற்று மெதுவாக... தயங்கியபடி, "அதுக்குள்ள வந்துட்டிங்க" என்று பாத்திரம் தேய்த்தவள் கதிரவனுக்கு பின்னால் இருந்தவரை கவனித்தாள். ஆவுடையப்பன் தான் தலைகுனிந்தபடி மகளை பார்க்க தயங்கி வந்தார்.

"பக்கத்து டவுன்ல இருந்தார். கூட்டிட்டு வந்தேன். சாப்பாடு போடு" என்று மட்டும் கூறினான்.

அவரோ லேசாக குளித்துவிட்டு கதிரவன் தந்த உடையை அணிந்தார். உடலெங்கும் அழுக்காய், போட்டிருந்த உடையும் கிழிசலாய் இருந்தவர் குளித்து முடித்து மாற்றுதுணி அணிந்து சாப்பிடும் போது "நல்லாயிருக்கியா தாயி" என்று வாய் திறந்தார் ஆவுடையப்பன்.

"எங்கப்பா போன.. ஏன் இவ்ளே நாளா யாரையும் பார்க்க வரலை. அங்க சித்தி தனியா லதாவையும் சுரேஷையும் வளர்க்குது தெரியுமா? எனக்கு பொண்ணு பிறந்திருக்கு அதுவாது தெரியுமா?" என்று கேட்டாள்‌.

தொட்டிலில் தூங்கிய குழந்தையை கவனித்தார். ஆனால் அழுக்கு கையோடு தூக்கவில்லை.

"மலரு... முதல்ல சாப்பாடு போடுடி." என்று அதட்டினான்.

கதிரவன் ஆவுடையப்பனை காணும் நேரம் அவர் பிச்சை கேட்டு நின்றியிருந்தார். அதுவும் சாப்பிட்டு பலநாள் ஆனதாக... அதனால் முதலில் சாப்பாடு போடவே கூறினான்.

தவமலர் சாப்பாட்டை போட்டு விட்டு அன்னத்திற்கு அழைத்து பேசினாள்.

கணவரோடு தந்தையை ஊருக்கு அனுப்பி வைப்பதாக பேசினாள்.

சாமுண்டிஸ்வரியோ ஆவுடையப்பனை நேரில் சந்தித்தால் நாக்கை பிடுங்கும் விதமாக நாலு கேள்வி கேட்க இருந்தவரோ பிச்சைக்காரனை போல வந்து நின்றவரை கண்டு, பேச்சிழந்து போனார். கண்ணன் தான் ஏன் இப்படி போனிங்க. ஏதோ தீபாவளிக்கு வந்து நாங்க போனது எல்லா வீட்லயும் உள்ள பிரச்சனை தானே?" என்றார்.

எத்தனையோ வீட்டில் மருமகனுக்கு தீபாவளி சீர் செய்ய முடியாமல் பெண் வீட்டார்கள் அல்லல் படுவது உண்டு தான். அதற்கா வீட்டை வீட்டு ஓடிவிடுவது என்று கேட்டு அறிவுரை வழங்கினார்கள்.

தவமலர் எதுவும் சொல்லாமல் முட்டை பொரியலை அள்ளி வைத்தாள்.

அதிகம் பேசாமல் ஆவுடையப்பனும் இருக்க, தூங்கி எழுந்த குழந்தையை மட்டும் தந்தையிடம் நீட்டினாள்.

அவரோ சட்டை பேக்கெட்டை தடவிவிட்டு, குலுங்கி குலுங்கி அழுதார்.
இந்த தாத்தா பத்து பைசா கூட உனக்கு தர வக்கு இல்லாதவனா உன்னை பார்க்க வந்துட்டேன்" என்று அழுதார். கதிரவனும் கண்ணனும் சமாதானம் செய்து முடிக்க, தவமலரோ "ஏன்பா இப்படியெல்லாம் பேசற." என்று துடித்தாள்.‌

அதற்கே சமாதானம் செய்து ஆவுடைய்ப்பனிடம் பேசி இனியாவது அன்னத்துடம், லதா சுரேஷ் குழந்தைகளுடனும் நல்லபடியாக வாழ அறிவுருத்தி கதிரவனே கொண்டா மலரின் ஊருக்கு சென்று விட வந்தான். மலர் குழந்தை பெற்ற உடம்பு என்பதால் இன்னமும் எங்கேயும் சாமுண்டிஸ்வரி அனுப்பவில்லை.
தந்தையிடம் தன்னிடம் உள்ள காசை சட்டை பையில் வைத்து, "செலவுக்கு வச்சிக்கோப்பா" என்றாள்.

ஆவுடையப்பனோ மகளது கையில் முகத்தை புதைத்து, நான் செய்த தப்புக்கு யாரிடம் மன்னிப்பு கேட்கணும்னு தெரியலை மலரு. ஆனா அந்த தப்பு என்னை வாழ விடமாட்டேங்குது. முடிஞ்சா இந்த அப்பனை மன்னிச்சிடு" என்று கண்ணீரால் மகளது கையை நனைத்தார்.

தவமலருக்கு அவர் சொல்ல வருவது புரிந்தும் எவ்வித வார்த்தையும் உதிர்க்காமல் நின்றாள். அவளுக்கு தான் அந்த விஷயம் தெரியுமே. அவள் குழந்தையாக இருந்த சமயத்தில் அவள் பார்க்க அன்னை ராசாத்தி மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பெட்டியை பற்ற வைக்க, முயன்றார்.
ஆனால் தீப்பெட்டி கீழே விழுந்து தண்ணி குடத்தில் நனைந்தது.
தவமலர் அழவும் நொடியில் ராசாத்திக்கு தான் செய்ய நினைத்த விபரீதம் புரிய தற்கொலை எண்ணத்தை மாற்றிடவே நினைத்தார். "அய்யோ... என்ன தப்பு பண்ண பார்த்தேன். என் குழந்தை அனாதையா போகுமோ. தப்பு தப்பு. நான் சாக மாட்டேன்" என்று புலம்பியவரை தான் ஆவுடையப்பன் அந்த நேர கோபத்தில் சண்டையை மனதில் வைத்து, பீடி பற்ற வைத்த தீப்பெட்டியை உரசி, ஜன்னல் வழியாக வீச, ராசாத்தி மேல் நெருப்பு பற்றி எரிந்தது.
அந்த வயதில் தவமலருக்கு தாயே தற்கொலை செய்துக்கொண்டதாக தான் நினைத்தாள். தந்தை ஜன்னல் வழியாக வீசிய தீக்குச்சி கண்ணில்படவில்லை‌.
ஆனால்... தவமலர் பத்தாவது படிக்கும் போது அன்னத்திடம் சண்டையிட்டு குடித்துவிட்டு உலறியதில், "உன்னையும் அந்த சிறுக்கி ராசாத்தியை எரிச்ச மாதிரி எரிக்கணும்டி. அன்னிக்கு அவ கடைசி நேரத்துல தீப்பெட்டி தண்ணில விழுந்து சாகற நினைப்பை தவிர்த்தா. நான் தான் ஜன்னல் வழியா தீக்குச்சி உரசி அவ மேல போட்டேன்‌. அவ என் கையால செத்தா. நீயும் ஒருநாளைக்கு அது போல சாகப்போற பாரு" என்று பேசியதை கேட்டவளால், தந்தையின் முக்ததை பார்க்க பிடிக்கவில்லை.

எத்தனை அன்பாக தந்தையை பார்த்து வளர்ந்தவளுக்கு தந்தையின் கையால் தாய் இறந்த செய்தியால் அந்த வீட்டிலிருந்து வெளியே வரவே துடித்தாள். இன்று கதிரவன் மனைவியாக நன்றாக வாழ்ந்தாலும், தந்தை காட்டிய பாசம் ஒருபுறம் இருந்தாலும், தாயை கொன்றவர் என்ற பார்வையும் ஆவுடையப்பனை பார்க்க, ஆவுடையப்பனுக்கு யாருக்கும் தெரியாத தன் குற்றம் மகள் அறிந்து தான் மணமாகி இங்கே வந்துவிட்டாளென்று தீபாவளி அன்று புரியவும் நொறுங்கிவிட்டார்.
அவருக்கு ராசாத்தி இறந்தப்பின் கிடைத்த வாழ்வும் சொல்லிக்கொள்ளும் விதமாக இல்லை.
இதில் ராசாத்தியோ என் இறப்புக்கு யாரும் காரணமில்லை என்று போலீஸிடம் தெரிவித்திருக்க, இன்றுவரை குற்றவுணர்வில் மறுகியவர், மகள் முன்னும் நிமிர்ந்து பார்க்க மனமின்றி கண்காணாத இடமாக பரதேசியாக வாழ்ந்தார்.

இன்று தான் கதிரவன் மாமனாரை ஊரில் கொண்டு வந்து விட்டுவிட்டு, அன்னத்திடம் "கொஞ்சம் நல்லா பார்த்துக்கோங்க.‌ டவுன்ல பிச்சையெடுத்துட்டு இருந்தார். மனசுல என்னத்தையோ போட்டுட்டு உழப்பறார். வர்றேன்" என்று சென்றான்.

அன்னமோ "எங்கயா போன.. என்னய்யா இப்படி வந்துயிருக்க." என்று அழுதாலும், சுரேஷ் லதா தந்தையை கண்டு பயந்து நின்றார். அந்தளவு முகத்தில் தந்தையை தேட வேண்டியிருந்தது.

எப்படியோ வீட்டிற்கு வந்துவிட்டதாக அன்னம் மகிழ்ந்தார்.

இரண்டு வருடத்திற்கு பிறகு....

சாமுண்டிஸ்வரி "ஏன்டி... இரண்டு குழந்தையை தூக்கிட்டு இப்ப உங்க அப்பன் வீட்டுக்கு போகணுமா?" என்று அதட்டினார்.‌

தவமலரோ "அத்தை.. லதா வயசுக்கு வந்திருக்குனு சித்தி சொல்லுச்சு. உங்களுக்கே தெரியும். அப்பா... திரும்ப கிடைச்சி ஒரு வாரத்துல மறுபடியும் காணாம போயிடுச்சு. இந்த இரண்டு வருஷமா நாமளும் தேடறோம். அங்க பார்த்தோம் இங்க பார்த்தோம்னு சிலர் சொல்லறாங்க. நாம போனா ஆளேயில்லை.

அப்பா மறுபடியும் காணாம போனதுலயிருந்து சித்தி தானே வீட்டை கவனிக்குது. எனக்கு வேணுமின்னா அவங்க சித்தியா இருக்கலாம். லதாவும் சுரேஷும் என்னை வாய் நிறைய அக்கானு தானே சொல்லுதுங்க. அக்காவா இருந்துட்டு போகலைன்னா எப்படித்தை?" என்று இலகுவாக பேச கற்றறிந்தாள்.

"ம்கூம்... கல்யாணமான அப்ப உனக்கு பேச தெரியுமான்ற ரீதியில இருந்த. இப்ப வந்து பாருனு நிற்கற.
அந்த நர்ஸு பொண்ணு அவ்ளோ சொல்லியும் இரண்டாவது புள்ளைய பெத்துட்ட. இப்ப என்னையும் எதிர்த்து பேசற அளவுக்கு வளர்ந்துட்ட... எல்லாம் உன்னைய சொல்லக்கூடாது, என்னைய சொல்லணும்." என்று மூன்று மாத கை குழந்தையான பேரன் மதிவாணனை தோளில் போட்டுவிட்டு, பேத்தி ரஞ்சிதாவை கையோடு இழுத்து சென்றார். தவமலருக்கு மூத்த குழந்தை ரஞ்சிதா பிறந்தப்பின் கொஞ்ச காலம் மட்டுமே கதிரவன் அருகே வராமல் இருந்தான். பிறகு வயசு கோளாறில் தவமலரை நெருங்க, அவளுமே கதிரவனை நெருங்க விட்டதன் விளைவு, மதிவாணன் பிறந்துவிட்டான்.

ரஞ்சிதா நன்றாக நடக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டாள். ஓரளவு மழலை மொழியில் பேசவும் செய்வாள். சாமுண்டிஸ்வரியும் லதாவின் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு தான் கிளம்பியிருந்தார்.

வெளியே வந்ததும், பேத்தி ரஞ்சிதாவை தாத்தா கண்ணன் தூக்கி கொண்டார்.

தவமலரோ சேலையை நன்றாக கட்டிவிட்டு, அலங்காரம் முடித்து, கண்மையை வைக்க கண்ணாடியில் ஊற்று நோக்கி வைத்தாள்.

கதிரவனோ சட்டையை மாட்டியபடி வந்தவன், மாநிறத்தில் அவனை இழுக்கும் இடையை கிள்ளி வைக்க, துள்ளி குதித்தாள்.

"கையை வச்சிட்டு சும்மாயிருங்க. பேமிலி பிளான் எல்லாம் பண்ணியிருக்கு." என்று கண்டித்தாள். அதான் பண்ணியாச்சுல" என்று கூறியவனை, "ஏய் மலரு... கதிரு" என்று சாமுண்டிஸ்வரி அழைப்பில் "வந்துட்டேன்மா" என்று ஓடினான்.

குடும்பமாய் டிராக்டரில் தான் ஊருக்கு செல்ல அமர்ந்தார்கள். இம்முறை கண்ணன் பேத்தியுடன் விளையாட, சாமுண்டிஸ்வரி பேரனுக்கு வெயில் படாமல் பாதுகாக்க, தவமலரோ வைகை ஆற்றங்கரை வந்ததும், "என்னங்க என்னங்க நிறுத்துங்க" என்று உத்தரவிட்டாள்.

''என்னடி" என்று நிறுத்திவிட்டு கேட்க, கொண்டு வந்த புதுக்குடத்தில், வைகை தண்ணியை குடத்துல பிடிச்சிட்டு போவோங்க. லதாவுக்கு மஞ்ச தண்ணி ஊத்தறப்ப இந்த வைகை தாயோட தண்ணியும் ஆசிர்வாதமா அமையும்" என்று கேட்க, "என்னமோ பண்ணு" என்று காத்திருந்தான்.

குடத்தை எடுத்துக்கொண்டு வைகை படிக்கட்டில் புதுச்சேலை கொஞ்சம் போல நகையும் பூவுமாக, நடந்த தவமலர், தண்ணீரில் தன் முகத்தை பார்த்தாள்.
வைகை ஆற்றில் அவளது முகமே அவளது நிறைவான வாழ்வை பறைச்சாற்ற, "நான் சந்தோஷமா இருக்கேன் வைகை தாயே. என் தங்கை பெரிய மனுஷி ஆகிட்டா... எங்கப்பா திரும்ப காணாம போனவர் இன்னமும் வரலை. பெத்தவங்க ஆசி முக்கியம். எனக்கு எங்கம்மா ராசாத்தி ஆசி கிடைக்கலை.
இப்ப லதாவுக்கு எங்கப்பாவோட ஆசி கிடைக்கலை. ஆனா எனக்கு அன்னையா இருந்த, உன்னோட தண்ணியை கொண்டு போறேன். அவளும் வாழ்க்கையில நல்லபடியா வாழ அருள்புரி" என்று தண்ணீரை நமஸ்கரித்து குடத்தில் நீரை நிரப்பினாள். அதற்குள் கதிரவன் கூடவே இறங்கி வந்து குடத்தை தூக்க உதவினான்.

தவமலரோ தண்ணீரை கையால் அள்ளி கதிரவன் மீது லேசாக தெளித்து விளையாட, கதிரவனோ குடத்தில் கையை விட்டு அந்த நீரை தவமலர் மீது தெளித்து சிரித்தான்.

"என்னடா விளையாட்டு வேண்டிகிடக்கு. என் பேரன் கண் முழிச்சிட்டான்‌. வெயில் வேற படுது விரசா.. வீட்டுக்கு வண்டியை விடுடா." என்று அதட்டவும் தவமலர் கதிரவன் இருவரும் டிராக்டரில் ஏறினார்கள்.

ஆவுடையப்பன் இல்லாத இடத்தில் அக்கா-மாமா என்று சபையில் நிற்கும் கடமை தவமலருக்கு இருக்கின்றதாக தவமலர் கதிரவனிடம் சொல்லி வைத்திருக்க, மையலிட்ட சிற்பம் தனக்கிட்ட கட்டளையை நிறைவேற்றும் சராசரி ஆணாக கதிரவன் தவமலரோடு பொறுப்பாக மாறினான்.

ஆவுடையப்பன் திரும்பி வருவாரா? இல்லையா என்ற பெரிய கேள்விக்குறி மனதை அரித்தாலும், தவமலர் வாழ்வில்... இனி எல்லாம் சுபமே!

~சுபம்~
-பிரவீணா தங்கராஜ்.

https://onlinetamilnovels.com/%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%87-12-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81/

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் கற்பனை கலந்து புனையப்பட்ட கதை. கண்மணி இதழில் வெளியானது.

வாசிக்கும் அன்பான வாசகர்கள் உங்கள் பெயரை தளத்தில் Register login செய்து கருத்தை comments பகுதியில் கூறலாம்.

அல்லது welcome corner பகுதியில் register login செய்வது எப்படி தரப்பட்டுள்ளது. மேலும் Novel Discussion

https://onlinetamilnovels.com/community/novel-discussion-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf/

பகுதியில் விமர்சனம் எழுதலாம். முகநூலில் கதைக்கான குழுவில் ரிவ்யு அளிக்கலாம்.

மையலிட்ட சிற்பமே-11
அத்தியாயம்-11

கதிரவன் பெரிதாக பராகிரமாக எந்தவொரு காரியத்தையும் இதுவரை செய்ததில்லை. ஆனால் முதல் முறை ஒரு விஷயம் 'இவர் தான் அவரா?' என்று பார்வையிட்டு வருவதே பெரிய விஷயமாக இருந்தது.

தவமலரிடமும் அன்னத்திடமும் நான் ஒருமுறை போலீஸிடம் பார்த்து பேசி வருகின்றேன் என்று வந்துவிட்டான்.

அரசாங்க மருத்துவமனையில் பிணத்தை கண்டா அடையாளம் காட்ட சென்றவனுக்கு குமட்டல் வயிற்றை பிரட்டியது.

லேசாக குமட்டியபடி, போலீஸோடு வந்து எட்டி பார்க்க, அவரில்லை என்றான். "அவரானு நல்லா பாருப்பா." என்று போலீஸ் அழுத்தம் கூட்ட, "இல்லைங்க... அவர் இந்த அளவுக்கு நிறமில்லை." என்று மறுத்தான்.

"அட ஆளு தண்ணீல ஊறியதில உப்பசமா தெரியறார். அதனால கூட நிறம் மாறியிருக்கும். சரியா பாருய்யா" என்று கூறினார்கள்.  லேசாக முகம் மாறியிருந்தது என்னவோ உண்மை தான் ஆனால் அது ஆவுடையப்பன் இல்லை என்று மறுத்தான்.

"இல்லை சார்... அவர் இந்தளவு உசரம் இல்லை. ஆளு என்னை விட கொஞ்சம் உயரம் கம்மி. இவர் நீட்டமா தெரியறார்." என்று மறுத்தான். அதோடு கல்யாணத்தில் எடுத்த புகைப்படத்தை வேறு காட்டினான்.

"அப்படியா?" என்று வாங்கி பார்த்தனர் போலீஸும். கதிரவன் கூறியது போல அவனை விட உயரம் குறைவாக இருப்பார் ஆவுடையப்பன். இறந்த மனிதர் கதிரவன் உயரத்திற்கு இருந்ததும் போலீஸும் "சரி சரி.. அப்ப உன் மாமனாரை மறுபடியும் தேடணும். வேண்டிக்கோ தம்பி... வீட்டை விட்டு ஓடுற பெருசுங்க எல்லாம் இப்படி தான் என்னைக்காவது அனாதை பிணமா தான் கிடைப்பாங்க. சொந்தத்துக்கு கூட தெரியாமலே போகும்‌" என்று கூறி அனுப்ப, கதிரவன் வெளிறி போய் மாமனார் வீட்டுக்கு வந்தான்.

அங்கே அன்னம் ஆர்வமாய் பார்வையிட, "ஏதோ தகவல் கேட்டாங்க. சொல்லிட்டு வந்தேன்‌" என்று மட்டும் உரைத்தான்.

தவமலர் அதன்பின் அழைத்துக் கொண்டு புறப்படவும் அன்னம் மறுக்கவில்லை.

என்ன இந்த முறை ஒட்டுதலாக, "உடம்பை பார்த்துக்கோ... நல்லா சாப்பிடு. உங்கப்பா கிடைச்சதும் வளைக்காப்பை செய்ய வர்றோம்" என்று கூற ஆறுதலாய் அணைத்து விடையனுப்பினார்.

பேருந்தில் ஏறியதும் கதிரவன் மீது சாய்ந்துக்கொள்ள, "என்ன தைரியம் உனக்கு? சொல்லாம கொள்ளாம கிளம்பிட்ட, அங்க நான் எப்படி பதறினேனு தெரியுமா? தனியா நீ கிளம்பியதுக்கு எங்கம்மா வேற வாயுக்கு வந்தபடி திட்டினாங்க. அப்படியென்ன பாசம்" என்று சத்தமின்றி அதட்டினான்.

"என் பயம் நிஜமாயிடுச்சே.. அவரை காணோமே. அப்ப என் உள்மனசு சரியா தானே பதறியிருக்கு.

அவரிடம் நான் உண்டாயிருப்பதை சொன்னா சந்தோஷப்படுவார். ஆனா பேசவே இல்லைன்னா ஏதோ மனசுல கிடந்து தவிக்கறார்னு நினைச்சேன்." என்றாள்.‌

"ம்கூம்" என்று கதிரவன் பேசவில்லை. இவளால் இன்று எங்கேயெல்லாம் அலைந்துவிட்டான்.

"எனக்கென்னவோ அப்பாவால அம்மா இறந்ததை நான் இத்தனை காலம் கேள்விக்கேட்டதில்லை. அன்னிக்கு கேட்டதும் சுருக்குனு நெஞ்சுல தச்சியிருக்கும். என் முகத்துல முழிக்காம ஒரெடியா போயிட்டாரோனு நினைக்கறேன்." என்று கூற, "இருக்கலாம்... அதுக்காக அவரை தேடிட்டு இப்படி வயிற்று பிள்ளையா எங்கயாவது போகாத. என்னால தாங்க முடியாது ஆத்தா.
அதோட எங்கம்மாவுக்கு பதில் சொல்ல முடியலை. இந்த மாமியார் மருமக பிரச்சனை எல்லாம் உங்களுக்குள் வந்தா, நான் அப்படியே வயல் வரப்பு மாடுனு போயிடுவேன். வீட்டு படி எடுத்து வைக்க மாட்டேன். அதனால தேவையில்லாத சண்டைக்கு அச்சாரம் போட்டு விடாத.
எங்க வீட்ல உன்னை எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாம தான் கட்டிக்க சம்மதிச்சது. நீ பாட்டுக்கு ஏதாவது ஏழரையை இழுத்து வைக்காத. எங்கம்மா நல்லவங்க தான். ஆனா இப்படி வீட்ல சொல்லாம கொள்ளாம இந்த நிலையில் நீ போனா அடுத்து வீட்ல இருக்கற வேலையை உன் தலையில கட்டிடும்‌.

ஏதோ மைனர் பொண்ணை கட்டிக்கிட்டதுக்கு போலீஸ்ல  என்னை சட்டத்தால ஜெயில்ல தள்ள இருந்தப்ப, நீ அழுது புரண்டு கையில கால்ல விழுந்து பேசியதுல, சின்ன பொண்ணுனு வுட்டுடுச்சு. இல்லைனு வை... இந்த வயசுல தான் எங்க அம்மா புள்ள பெத்தாங்க. ஆச்சி புள்ள பெத்தாங்கனு உன் முதுகெலும்பு உடைய வேலையை இழுத்து வைக்கும்.
அப்பறம் கட்டினவன் வந்து ஆதரவா பேசுவான்னு என்‌ முகத்தை பார்க்காத." என்று எச்சரிக்கையை விடுத்தான்.

இது போன்ற ஊரில் நடப்பது தானே... அதனால் கதிரவன் நடப்பை வெகு எதார்த்தமாக கூறினான்.

தவமலருக்கு என்ன புரிந்ததோ அவன் புஜத்தை இறுக்கமாக பற்றி கூடுதலாக தலையை சாய்ந்துக்கொண்டாள்.

கதிரவனோ பேருந்தில் யாராவது தங்களை கவனிக்கின்றனரா? என்று பார்வையிட, பெரும்பாலும் தவமலர் பிள்ளைதாச்சி என்பதால் அதை யாரும் தவறான கண்ணோட்டத்தில் காணவில்லை.

பத்து மணி அளவில் வீடு வந்து சேரவும், சாமுண்டிஸ்வரி மருமகளை கத்தி திட்டி தீர்த்தனர்.
பொழுது தாண்டி சென்று வந்ததால், நிற்க வைத்து சுற்றி போட்டு முடித்தார்.

"இந்தா... இப்ப புரிஞ்சுதா... உங்கப்பா போனு ஏன் எடுக்கலைனு... இனி வூட்டை வுட்டு தாண்டணும்னு நினைப்பு போகக்கூடாது. அந்தாளு வந்தா பேசு.. போலீஸ்ல தான் கண்டுப்பிடிக்க கேஸ் போட்டாச்சுல.. மருவாதையா.. புள்ளக்காரியா வீட்ல வெந்ததை திண்ணுட்டு சத்து பிடி" என்றார்.

இதற்கு மேல் பேச ஒன்றுமில்லையென சாமுண்டிஸ்வரி சென்றிட கதகரவன் மனைவியிடம் புரிதா' என்று பார்வையால் கண்டித்து அறைக்கு வந்தான்.

கதிரவன் குளித்து முடித்து வந்து உறங்க, தவமலரோ அப்பா எங்க போயிருப்பார் என்ற வேதனையுடன் நேரம் தாண்டி உறங்கினாள்.

நாளும் கிழமையும் யாருக்காகவும் காத்திருக்கவில்லை.
அது பாட்டிற்கு யாரும் தடுக்க இயலாது நகர்ந்தது.
தவமலருக்கு ஏழாம் மாதம் நெருங்க வளைகாப்பு பற்றி பேச்சு சென்றது. சிவநேசன் அந்த நேரம் ஊர் கோவில் திருவிழாவிற்கு தனியாக வந்தார்.

ஆவுடையப்பன் கிடைத்துவிட்டால் வளைகாப்பு இந்நேரம் விமர்சனையாக இல்லாவிட்டாலும் ஏதோ நடத்திருப்பார். இன்று அதையும் எடுத்து செய்ய ஆளில்லை.

கதிரவன் மனம் தாளாமல், "வளைக்காப்பை நான் செய்யட்டா?" என்று கேட்க, தவமலரோ "ஒன்பதாம் மாசம் கூட வளைகாப்பு செய்யலாம்னு காயத்ரி அத்தை சொன்னாங்களே. அதுவரை அப்பாவுக்காக காத்திருப்போமேங்க" என்ற பதிலில் கதிரவன் அதன்பின் மொத்தமாக அப்பேச்சை ஆரம்பிக்கவில்லை.

என்னதான் புகுந்த வீட்டில் நன்றாக கவனித்து கொண்டாலும் தந்தை இல்லாதது வருத்தம் தந்தது.

அன்னமோ கணவர் இல்லாமல் வாழவும் சம்பாதிக்கவும் கற்றுக்கொண்டார்.
அதில் பாதி ஓய்ந்து போனார். சொல்லப்போனால்... கட்டெறும்பாக மாறினார்.

இப்படியே செல்ல, தந்தை இறந்துவிட்டாரோ என்று தவமலர் அஞ்சினாள்.
ஆனால் ஊரில் சிலர் தந்தையை பல்வேறு கோவிலில் பார்த்ததாக கூறினார்கள்.
அவரிடம் மகள் மாசமாக உள்ளதை கூட தெரிவித்ததாக கூறியதையும் சொல்ல, மகிழ்ந்தாள். அப்படிக்கூட தந்தை தன்னை காண வரவில்லை என்ற வலியும் இருந்தது.

சாமுண்டிஸ்வரி தவமலருக்கு ஒன்பதாம் மாதம் துவங்கவும் காயத்ரியை அழைத்து, தங்கள் வீட்டு ஆட்கள் சிலரையும் கூப்பிட்டு வளைகாப்பு வைத்தார். அன்னம் அன்று கூட வரமறுத்துவிட்டார்.

புருஷனே போனப்பிறகு மூத்த தாரத்துக்கு என்ன உறவு வேண்டிக்கிடக்கு? என்று எண்ணிவிட்டார்.

வளைகாப்பு என்று சென்றால் அதற்கு வேறு ஏதாவது செலவை தன் தலையில் கட்டிவிடுவாரோ என்ற அச்சம். இரண்டு காரணமும் அன்னத்தை தவமலரின் வளைகாப்புக்கு வரவிடவில்லை.

காயத்ரி சிவநேசன் இருவரும் தாய் தந்தை ஸ்தானத்தில் நின்று செய்தனர். ஏதோ தங்கள் சக்திக்கு சபையில் தட்டை நிறைத்தனர். அதுக்கூட அவர்களுக்கு ஒரு பையன் அவனும் வெளியூரில் வேலை பார்த்து மனைவி மக்களோடு இருக்க, இங்கே தனியாக இருவருக்கு செலவு குறைவு என்பதால் ஏதோ தவமலருக்காக செய்ய முடிந்தது.

வளைகாப்பு முடியவும் அம்மா வீட்டிற்கு செல்லும் பெண்கள் மத்தியில் தவமலர் கணவன் அருகே தனக்கு அந்த கொடுப்பினை இல்லை என்று புலம்பினாள்.
"இங்க பாரு.. இல்லாதவங்களை நினைச்சு புலம்பாத. உனக்கு எங்கம்மா எல்லாம் குறையில்லாம பண்ணுச்சுல. உங்கத்தை மாமா ஊர்ல இருந்து வந்தாங்கள்ல. அதை நினைச்சு சந்தோஷப்படு" என்றான்.

அவனுக்கு சற்று எரிச்சலாக தான் இருந்தது.

"நான் உண்டாயிருக்கேன்னு தெரிந்தும் எங்கப்பா என்னை தேடி வரலை." என்றாள்.

'அந்தாளு செத்துட்டதா நினைச்சிக்கோ" என்று தோளில் உள்ள துண்டை உதறி வெளியேறினான்.
அவனுக்கு தினம் தினம் இதே புராணம் எரிச்சலை கூட்டியது‌.

காயத்ரி தான் மீண்டும் சாமுண்டிஸ்வரியிடம் 'பிரசவம் எல்லாம் அரசாங்க ஆஸ்பத்திரில பார்ப்பதால செலவு இருக்காது. ஆனாலும் எங்க வீட்டு பொண்ணை நீங்க நல்லா பார்த்துக்கறது சந்தோஷமுங்க." என்று பாராட்டி நன்றியுரைத்தார்.

அடுத்த நாள் அவர்களும் புறப்பட்டுவிட்டார்கள்.

ஒன்பதாம் மாதம் குழந்தை வெளியே வர துடிக்க, அரசாங்க மருத்துவமனைக்கு டிராக்டரில் தான் அழைத்து சென்றான் கதிரவன்.

ஏற்கனவே லேசாக வலி வந்தாலே அழைத்து வர டாக்டரும் நர்ஸும் அறிவுறுத்தியிருக்க, அதன்படி வந்து சேர்ந்தாள் தவமலர்.

பலவிதமான வலியை கடந்து வந்தாலும் பிரசவ வலி அவளை படுத்தி எடுத்துவிட்டது.

தவமலரின் கூச்சலும் கத்தலும் அன்று அந்த ஆஸ்பிடல் கட்டிடத்தையே உலுக்கி எடுத்து மதியம் ஒரு மணியளவில், பெண் பிள்ளையை ஈன்றெடுத்தாள்.

சாமுண்டிஸ்வரிக்கு பெண் வாரிசு என்றதும் சிறிது சோகம். ஆனால் இந்த காலத்தில் பிள்ளை உண்டாகாமல் எத்தனையோ பேர் தவமிருக்க, தவமலர் திருமணமாகி பெண் குழந்தையை பெற்று எடுத்ததில் திருப்தியும் பட்டுக்கொண்டார்.

கதிரவனுக்கு ஆணோ பெண்ணோ தன் குழந்தை பிறந்த ஆனந்தம் ஒன்றே அவனுக்கு போதும்.

தவமலர் தான் கிழிந்த நாறாக வார்டில் படுத்திருந்தாள். ஏகப்பட்ட ரத்தம் வீணானதில், மயக்கத்தில் கிடந்தாள்.
அவள் இன்னும் பழைய நிலைக்கு வர, நாட்கள் எடுக்குமென நர்ஸும் கூறினார்.

டாக்டரோ "தலை பிரசவம் என்பது பொண்ணுங்களுக்கு மறுபிறப்பு சார். இதுல இந்த பொண்ணுக்கு பதினெட்டு வயசுல குழந்தை பிறந்திருக்கு. அந்த பொண்ணோட உடல் ரொம்ப பலவீனமா இருக்கு. நல்லா சாப்பாடு கொடுங்க. பத்திரமா பார்த்துக்கோங்க. பழம் காய்கறி சாப்பிட சொல்லுங்க" என்று பெரிய உணவு பட்டியலையே கூறினார்.‌

அவர்கள் தலை மறையவும், "ம்கூம்... நாங்க எல்லாம் இதெல்லாம் சாப்பிட்டு தான் உடலை வளர்த்தோமா. வீட்ல கூழு கஞ்சினு ஒழுங்கா குடிச்சாலே உடம்பு வலுவா மாறும்." என்று கூற, தவமலர் எதற்கும் பதில் பேசாமல் படுத்து கிடந்தாள்.
அவள் அருகே அவளை போலவே ஒரு பெண் குழந்தை. ஆனால் கதிரவன் சாயலில்... என்று குழந்தையை வெறித்தாள்.

குழந்தைக்கு எழுந்து பால் புகட்டவும் தெரியாமல், தூக்கவும் தெரியாமல் தடுமாறியவளை சாமுண்டிஸ்வரி தான் திட்டி திட்டி தூங்க பழகினார். பால் குடிக்க எப்படி குழந்தையை படுக்க வைக்க வேண்டுமென்றும் கற்றுத் தந்தார்.

ஓரிருமுறை குழந்தையை நழுவ விட பார்த்து சாமுண்டிஸ்வரியிடம் திட்டு வாங்கியவள் அதன் பிறகு நன்றாக பிடிப்புடன் குழந்தையை தூக்க கற்றறிந்தாள்.

எப்படியோ ஆஸ்பிடலில் இருந்து வரும் பொழுது குழந்தையை தூக்கவும், பால் கொடுக்கவும் பழகியிருந்தாள்‌.

நர்ஸ் கனகவள்ளி தான் தவமலருக்கு ஏகப்பட்ட அறிவுரை தந்தார். சாமுண்டிஸ்வரி இல்லாத சமயமாக, "இதப்பாரும்மா.. டாக்டர் சொல்ல சொன்னது சொல்லியாச்சு. நல்லா சாப்பிடுனு. ஏதோ பதினெட்டு வயசு உனக்கும் வந்துடுச்சு. ஆனா உன்னை பார்த்தா இன்னமும் எனக்கு சின்ன புள்ளையா தான் தோணுது. உங்க அத்தை மாமா புருஷன் எல்லாம் நல்லா பார்த்துக்கறதை கவனிச்சேன்.
நீயும் புள்ளைய பெத்துட்ட,  அதுக்காக உடம்பு வலுவாயிடுச்சுனு அர்த்தமில்லை‌. இந்தயிந்த வயசு இந்த இந்த விஷயத்துக்கு சரியான நேரம்னு சொல்லுவாங்க. உன்‌வயசு இப்ப புள்ளையை பெத்துக்கற வயசே கிடையாது. காலேஜ் படிக்கற வயசுடி உனக்கு.
அதைமீறி குடும்ப சூழல்னு குழந்தை புருஷன்னு இந்த உலகத்துல விழுந்துட்ட. புகுந்த வீடும் பார்த்துக்கறது சரி. அதுக்காக அடுத்த புள்ளையாவது லேட்டா பெத்துக்கோ. புருஷங்காரன் அண்ட வந்தா தள்ளி நிறுத்து. இல்லைனு வை. அடுத்த வருஷமே வயித்தை தள்ளிட்டு நிற்ப. கைக்கும் காலுக்கும் புள்ளைய வச்சிட்டு கஷ்டப்படுவ. ஏதோ சொல்ல நினைச்சேன். சொல்லிட்டேன் இந்தா... இதெல்லாம் குழந்தைக்கு அரசாங்கம் தர்ற இலவசம்." என்று குழந்தை படுக்க மெத்தை, சத்துமாவு கஞ்சி பேக்கெட், தாய்க்கான ஊட்டச்சத்து மாவு, கொசுவலை, துண்டு, உலர்திராட்சைகள் என்று சிலதும் அதிலிருந்தது. அத்துடன் முதல் குழந்தை பெண் குழந்தையாக பிறந்திருக்க அதற்கும் பணம் தந்தனர்.
அதையும் தவமலரிடம் தந்தார் கனகவள்ளி. "ரொம்ப தேங்க்ஸ் சிஸ்டர்." என்று நன்றியுரைத்து நடந்தாள்.

-தொடரும்.

https://onlinetamilnovels.com/%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%87-11/

மையலிட்ட சிற்பமே-10
அத்தியாயம்-10

காயத்ரி சிவநேசன் வந்துவிட்டு சென்றப்பின், தவமலருக்கு பிறந்த வீட்டு ஆட்களை காண வேண்டுமென்ற ஆசை கூடுதலானது.

தினமும் கதிரவனிடம், "அப்பா வரலைன்னா என்ன? நாம அவர் வீட்டுக்கு போகலாமா?" என்று கேட்டாள். கதிரவனுக்கு எத்தனை நாள் தான் பொய்யை கூறி கூறி அலுப்பு நேரிட, கத்திவிட்டான்.

"சும்மா... அப்பா வரலை. அப்பா வீட்டுக்கு போகணும்னு புலம்பற. அந்தாளு உனக்கு அப்படி என்னடி நல்லது செய்தான். உங்கம்மாவையே பேசி பேசி தற்கொலைக்கு தூண்ட வச்சிட்டு சின்ன வீட்டை பார்க்க போயிட்டான். உங்கம்மா செத்ததும் சின்ன வீட்டை ஊரறிய இரண்டாதாரமா அறிமுகப்படுத்திட்டான்.‌
அங்க ஒரு வேலைக்காரியா இருந்த. அந்த வீட்டுக்கு போக அவ்ளோ ஆசையா. ஏன் இங்க உன்னை ராணியா தானே பார்த்துக்கறேன். என்ன குறையை கண்ட. தீபாவளிக்கு மரியாதை பண்ணினதே இன்னும் மறக்கலை. இதுல பிறந்த வீட்டு வளையல் வேண்டுமா? இன்னொரு முறை அப்பன்னு ஆரம்பிச்ச அவ்ளோ தான்" என்று தட்டை தட்டி விட்டு பேச, வயிற்றை பிடித்து பின்னால் நகர்ந்தாள் தவமலர்.

கண்ணன் எட்டி பார்த்து மனைவியை காண, சாமுண்டிஸ்வரியோ மகனை கண்டு, "என்னடா கோபம் உனக்கு. யார் மேலயோ இருக்கற கோபத்தை பிள்ளத்தாச்சிக்கிட்ட காட்டற. வரவர உனக்கு கோபம் அதிகமாகுது. அதுவும் இவளிடம் காட்டற." என்று அதட்டினார்.

கதிரவனோ எழுந்து நடக்க, "சாப்பிட்டு போடா" என்று கூற, "உன் மருமகளுக்கே ஊட்டி விடு." என்று எரிந்து விழுந்தான்.

அவன் சென்றதும் தவமலர் லேசாக கண்கலங்க, "இந்தா... ஏற்கனவே நோஞ்சானா கிடக்க. பிரசவத்துக்குரிய வயசும் இல்லைனு ஒவ்வொரு தடவையும் அந்த நர்ஸ் என் காதுல ரத்தம் வர்ற அளவுக்கு அட்வைஸ் பண்ணுது. இதுல நீ வேற சோகமா சுத்தினா எப்படி.
அவனுக்கு தான் உங்கப்பனை பத்தி கேட்டா பிடிக்கலைனு சொல்லிட்டான்ல. அவனையே நோண்டற. உங்கப்பான் வரலைன்னா உங்க சித்தியை கேளு" என்று கடிந்திட, தவமலருக்கு சங்கடமாய் போனது.

ஆளாளுக்கு வேலை பார்த்திட சென்றதும், தனியாக அறையில் புரண்டு புரண்டு படுத்தாள்.

கருவுண்டாகியப்பின் சாமுண்டிஸ்வரி வேலைகளை செய்ய வேண்டாமென கூறிவிட்டார்.
இந்த வயதில் கருவுண்டானதால் சாதகமாக இந்த வசதி.

ரொம்ப நேரம் யோசித்தவள் தந்தையை நேரில் காண சென்றால் என்ன என்ற விபரீதமான எண்ணம் உதித்தது.

தனியாக செல்ல பயமிருந்தாலும், கடைசியாக தந்தை தீபாவளிக்கு அழைத்த அன்று தனக்கும் அவருக்கும் வார்த்தையால் வாதம் நிகழ்ந்து, அவர் மனதை தைத்தோம். தீபாவளிக்கு என்ன கடனை வாங்கினாரோ, எட்டு சவரனை தயார் செய்ததே பெரிய விஷயமில்லையா?

ஆனால் தந்தையை அன்று கடைசியாக கைப்பிடித்து நிற்க கூறிய போதும் கணவன் கதிரவனின் கையை பிடித்து, தந்தை முகம் பாராது நடந்து வந்துவிட்டாள்.

ஏனோ வயிற்றில் குழந்தை என்று ஆனதிலிருந்து மனம் இருதலைக் கொள்ளியாக பாசத்திற்கு ஏங்கவும் செய்தது.

இன்று கணவர் கத்திவிட்டதில் கூடுதலாக தந்தையை காணும் ஆசை பேராசையாக மாற, செல்ல வேண்டுமென மனம் உந்துதலிலேயே இருக்க, அத்தை மாமாவை கண்டாள். மாடும் கன்று ஈன்றிடும் நேரமென்பதால் அதை கவனிப்பதில் கவனம் சென்றது.
கதிரவன் தான் இவள் மீதுள்ள கோபத்தில் தூரத்தில் பம்பு செட்டில் இருப்பதையும் கண்டாள்.

மெதுவாக சேலை முந்தானையை எடுத்து முகத்தில் அரும்பிய வேர்வைத் துளியை துடைத்து, இடுப்பில் சொருகி கையில் நாகராஜ் நகைக்கடையில் கொடுத்த பழைய பர்ஸில், கதிரவன் சட்டையிலிருந்து கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு பூனை நடையிட்டு வெளியேறினாள்.

ரோட்டுக்கு வந்தவள் பேருந்து நிலையத்தில் அமர்ந்து கொண்டு வந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்தாள். இதற்கே இப்படி துவள்வதில், ஒரு மணி நேர பேருந்து பயணம் என்ன செய்யுமோ என்று வயிற்றை தீண்டினாள்.

அவளது வயிற்றில் அசைந்த அவளது கரு, நான் உனக்கு துணையிருக்கின்றேன் என்று ஆதரவு கரம் நீட்ட, பேருந்து வரவும் ஏறினாள்.

பேருந்து ஏறும் போதே படிக்கட்டு உயரமாக இருந்தது.
கஷ்டப்பட்டு தான் கம்பியை பிடித்து ஏறினாள்.

பேருந்தில் ஏறியப்பின், கணவர் கதிரவன் திட்டுவாரா? மாமியார் என்ன சொல்வார். மாமனார் என்ன சொல்வார்.
இந்த பயணத்தால் குழந்தைக்கு ஏதேனும் ஆகிடுமா? என்று யோசித்தவளுக்கு கொஞ்ச நேரத்தில் உறக்கம் வந்தது.

அசதியில் உறங்கினாலும், அடிக்கடி மேடுபள்ளம் வந்து குலுங்க, வயிற்றை பிடித்து பயந்தாள்.

ஒவ்வொரு முறையும் இதயம் பயத்தில் திளைக்க, எப்படியோ தனது ஊருக்கு வந்து சேர்ந்தாள்.

வைகை ஆற்றினை கண்டு அதில் கால் பதித்து, நீரோடையில் கையில் அலம்பி மூச்சை ஆழமாய் வெளியிட்டாள்.

தனது வீட்டுக்கு செல்ல, மாலை நேரம் என்பதால், ஆளாளுக்கு வெளியே அமர்ந்திருந்தனர். தவமலரின் உருவமும், ஆளும் சற்று சட்டென அடையாளப்படுத்தாத விதத்தில் இருக்க, சிலர் உற்று நோக்கும் முன் அவ்விடம் விட்டு நடந்திருந்தாள்‌. சிலர் அப்பவும் அடையாளப்படுத்தி நலம் விசாரிக்க, நின்று நிதானமாக பதில் தந்து சென்றாள்.

கர்ப்பம் ஆனதே தெரியாது. உன் சித்திகாரி ஒரு வார்த்தை சொன்னாலா? உங்கப்பனை பத்தி கேட்டாலும் கத்தறா. உன்னை பத்தி கேட்டாலும் கத்தறா" என்று கூற, தவமலருக்கு ஏதோ சரியில்லை என்று புரிய, வீட்டை நோக்கி விரசாய் நடந்தாள்.

வீட்டு வாசலுக்கு வந்த நேரம், லதா சுரேஷ் பாடம் படித்துக் கொண்டிருந்தனர்.

"ஐ... அக்கா" என்று சுரேஷ் துள்ள, "மலரக்கா" என்று லதா ஓடிவந்தாள்.
சுரேஷோ "அம்மா... அம்மா.." என்று கத்த, "என்னடா... ஓடிப்போன உங்கப்பன் வந்துட்டானா" என்று வந்து நின்றார். மேடிட்ட வயிற்றுடன் தவமலரை கண்டவரோ, "எங்கடி வந்த?" என்று அதட்டி கேட்டார்.

"சித்தி... சித்தி... அப்பா எங்க? நான் கர்ப்பமா இருக்கறது உங்களுக்கு அப்பாவுக்கு தெரியும் தானே?
அப்பாவுக்கு போன் போட்டா போகலை. நீங்களும் என்னை பார்க்க வரலை. தீபாவளிக்கு வந்துட்டு போனதும் கன்சீவ் ஆனதை அப்பாவுக்கு சொல்ல எத்தனை மீறை போன் போட்டேன்." என்று கேட்க, அன்னமோ "வாயை மூடுடி." என்றார்.

"அந்தாளு அன்னைக்கு காணாம போனவரு தான். இப்பவரை வீட்டுக்கு வரலை. என்னடி தப்பு பண்ணினேன். உனக்கு வாங்கிய வளையலை நான் வேணும்னு எடுத்து வச்சிக்கிட்டேன். அதுக்கு அந்தாளு அப்படி கத்தறார். சரி அதான் வளையலை உனக்கு கொடுத்து அனுப்பிட்டானே. வீட்டுக்கு வர வேண்டியது தானே. என்னவோ பெருசா வீட்டுக்கு வராம சுத்தறார்.
சாப்பாட்டுல என்ன விஷமா வைக்க போறேன். இந்தா இரண்டு பிள்ளைங்களும் அப்பனை கேட்டுட்டு இருக்குதுங்க." என்று கூற தவமலருக்கு தந்தை இத்தனை நாள் வீட்டுக்கு வரவில்லையா? காணாமல் போனாரா? என்றா தலை கிறுகிறுவென சுற்றியது.

அதே நேரம் கையிலிருந்த பட்டன் போன் அலறியதும், இறுக பற்றினாள்.

கணவன் கதிரவன் தான் அழைத்திருக்க, தூணில் சாய்ந்து, அழைப்பை ஏற்றாள்.

"மலரு... எங்கயிருக்க?" என்றான். அவளை காணாமல் துடிதுடித்து போனவனின் வலி குரலில் தெரிந்தது.

"என்னங்க... அப்பாவை பார்க்க வீட்டுக்கு வந்தேன். அப்பாவை காணோமாம். தீபாவளியிலருந்தே அப்பாவை காணோமாம்." என்று அழுவது அவனுக்கு கேட்டது.

கதிரவன் தலையிலடித்த சத்தம் கேட்க, அதை தொடர்ந்து, "ஆமா.. அவரை காணோம். அதனால தான் அவர் போன் எடுக்கலை. அவர் உன்னை பார்க்க வரலை. இரண்டு நாளைக்கு முன்ன தான் சிவநேசன் சித்தப்பா போலீஸ்ல கம்பிளைன் கொடுத்திருந்தார்." என்றான்‌.

தவமலரோ தனக்கு தெரியக்கூடாதென இத்தனை நாள் மறைத்து இருப்பதை அக்கணம் அறிந்தாள்.

"உன்னை யாருடி தனியா அங்க போக சொன்னது." என்று அதட்ட, "அப்பாவை பார்க்கணும்னு தோணுச்சுங்க வந்தேன்." என்று விசும்பினாள். சாதாரணமாக தவமலரை அதட்டியது இல்லாததால் அவளது இந்த விகற்பமில்ல பேச்சில் அவளது பாசத்தை உணர்ந்தவனாக, "உங்கப்பாவுக்கு ஒன்னும் இல்லை. அங்கயே இரு. நான் கிளம்பி வர்றேன்." என்று கூறிவகட்டு அவளை தேடி புறப்பட்டான்.

அன்னமோ பிள்ளைத்தாச்சி பெண் என்றும் பாராமல் அவள் பாட்டிற்கு வீட்டு வேலையில் மூழ்க, அதே தூணில் சாய்ந்த தவமலர் கொண்டு வந்த தண்ணீரை குடித்து குடித்து முடித்தாள்.

லதாவும் சுரேஷும் அக்காவிடம் பேச ஆசையாக இருந்தாலும், அன்னை திட்டுவாரென அடிக்கடி மலரை கண்டு நின்றார்.

மாலை டீ போடவும், தனது பிள்ளைகளுக்கு மட்டும் டீயை தந்தார். அதற்குள் பக்கத்து வீட்டில் மலர் வந்த செய்தி அறிந்து வீடு தேடி சிலர் வந்து பேச, மலருக்கு குடிக்க கூட எதுவும் தராமல் அன்னம் செல்ழதை கண்ட கண்மணியோ தன் வீட்டிலிருந்து பாலை ஆத்தி வந்து கொடுத்தார்.

வெயிலில் வந்த அலைச்சலோ அல்லது இத்தனை தூரம் பயணம் செய்து வந்த களைப்போ மறுக்காமல் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்காக பாலை வாங்கி பருகினாள்.

தன் அக்கா தவமலரின் வயிறு உப்பசமாக தெரிய லதா சுரேஷ் இருவரும் ஆர்வமாக கவனித்தார்கள்.

ஏனோ அன்னம் அவர்கள் பாட்டிற்கு ஆவுடையப்பனை தகட்டி தீர்த்தார். கூடுதலாக தவமலர் வந்து சேர்ந்திருக்க, அவளையும் வசவு மழையில் கொட்டி தீர்த்தார்.

எதையும் செவிக்கு ஏற்றாமல் தந்தை எங்கு சென்றியிருப்பார் அவரிடம் தான் முகத்திருப்பி பேசியதை எண்ணி கவலைக்கொண்டாள்.

ஆனால் இதே போல தான் தன் தந்தை தாய் ராசாத்தியிடம் மனம் நோகும்படி பேசியதை அவள் அறிவாள். ஒருவேளை அன்னை ராசாத்தியை போல ஏதேனும் விபரீதமாக முடிவை நாடியிருப்பாரா என்று எண்ண பயந்தாள். அடிவயிறு ஆட்டம் கண்டது.

"அப்பா... அப்பா... அப்பாவுக்கு ஒன்னும் ஆக்ககூடாது" என்ற வேண்டுதலை இறைவனுக்கு ஜெபித்தபடி இமை மூடி வேண்டினாள்.

தவமலர் கண்மூடி அழுது வேண்ட, லதாவும் சுரேஷும் அருகே வந்து கையை பிடித்தனர்.
அந்த நேரம் தவமலருக்கு அந்த தொடுகை அவசியமாக இருந்தது.
அதேநேரம் இவர்களும் தந்தை இல்லாமல் பயந்திருப்பது புரிய, "அப்பா.. அப்பா... வந்துடுவார்‌ பயப்படக்கூடாது சரியா" என்று தேற்றினாள்.
தவமலருக்கே யாராவது தேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்க, அவள் தம்பி தங்கையை தேற்றினாள்.

அன்னமோ வாய் ஓயாமல் தகட்டி தீர்த்து அறைக்குள் சுவரோடு சாய்ந்து அழுதார்.

ஒருமணி நேரம் தாண்ட, மூச்சு வாங்க, கதிரவன் ஓடிவந்து தவமலர் முன் நின்றான்.

"ஏன் புள்ள சொல்லாம கொள்ளாம வந்துட்ட. எப்படி பயந்தேன் தெரியுமா?" என்று அவளை அணைத்து நிற்க, கதிரவன் வந்ததும் அன்னம் சேலை முந்தானையில் மூக்கை துடைத்து எழுந்து வந்தார்.

ஏன் வந்த? எதுக்கு வந்த? உன்னால தான் அவர் காணோம், என்ற பேச்சை தவிர்த்து, "அவரை எப்படியாவது கண்டுபிடிச்சு கொடுங்க போதும். மூனு மாசமாகுது அவர் வீட்டுக்கு வந்து, எங்க தான் போனாரோ, இல்லை மொத்தமா போயிட்டாரா ஒன்னுமே தெரியலை. யாரிடமாவது உதவிக்கு கேட்கலாம்னா, ஒருத்தரும் உதவ வரமாட்டேங்கறாங்க." என்று புலம்ப கதிரவனுக்கு கஷ்டமாக போனது. ஏற்கனவே மனைவி மலருக்காக தேட ஆரம்பித்து விட்டான். ஆனாலும் அன்னம் கேட்டதில் தவமலரே ஆச்சரியமாக பார்த்தாள்.

"அப்பாவை எப்படியாவது கண்டுபிடிச்சு தாங்க" என்று அவளும் கோரிக்கை வைக்க கதிரவன் தான் திக்குமுக்காடி போனான்.

இங்கு வந்து கால் வைக்கும் நேரம் தான், ஆவுடையப்பனை போல ஒருவர் இறந்துவிட்டதாக போலீஸிடமிருந்து தகவல் வந்தது. அதையும் போய் பார்க்க வேண்டும். அது உண்மையா பொய்யா என்று அறியாமல் இங்கே எந்த வாக்கும் தரயியலாது நின்றான்.

-தொடரும்.

https://onlinetamilnovels.com/%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%87-10/

மையலிட்ட சிற்பமே-9
அத்தியாயம்-9

வீட்டில் இனியும் சென்று சமைக்க இயலாதென, வழியில் ஒரு மத்திய தர ஹோட்டலில் வண்டியை நிறுத்தி சாப்பிட்டனர்.

கதிரவன் தவமலர் அமர்ந்து சாப்பிட, சாமுண்டிஸ்வரியோ "நல்லா சாப்பிடு... ஏற்கனவே ஓடிசலா இருக்க. இப்ப வம்சத்தை வேற விருத்தி பண்ண போற. குழந்தை பெத்தெடுக்க உடம்புல தெம்பு வேண்டும். இந்த வயசுல குழந்தை பெத்துக்க கஷ்டம்னு படிச்சவங்க சொல்வாங்க. ஆனா பழைய காலத்துல எல்லாம் பதினாறு வயசுலயே பிள்ளைய சுகபிரசவத்துல பெத்துயிருக்காங்க.

நீயெல்லாம் நல்லபடியா சாப்பிட்டா நல்லதா நடக்கும்." என்று கூறவும் தலையாட்டினாள்.

"டேய்... அவளுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காதுனு கேட்டு வாங்கிக் கொடு." என்று கூற கதிரவனும் சரியென்றான்.

பிரியாணி எல்லாம் சாப்பிட்டு, அதே கடையில் வெளியே இனிப்பு விற்க அரைகிலோ இனிப்பை வாங்கிக் கொண்டான். மீண்டும் வீட்டுக்கு வர மாலை ஆனது. தீபாவளி என்பதால் வெடிவெடித்து கொண்டாடினார்கள்.

சாமுண்டிஸ்வரி தான், "மாமனார் வீட்ல வெடி வெடிச்சு, கொண்டாட வேண்டியது." என்று சலித்துக்கொண்டார்.
அக்கம் பக்கத்தில் மாமனார் வீட்டுக்கு போகலையா? என்று கேட்டு குடைய, தவமலர் உண்டான விஷயத்தை கூறி, மருத்துவமனை சென்றுவிட்டு இங்கயே வந்துவிட்டதாக கூறினார்கள். அலைச்சல் கூடாதென மருத்துவர் கூறியதாக சொல்லவும் மற்றவர்கள் வினாத்தொடுக்கவில்லை.

இரவு தவமலரை தன் மார்பில் போட்டுக் கொண்டு, கரத்தை அவளது குட்டி வயிற்றில் வைத்து,  "இன்னிக்கு நான் எவ்ளோ பெரிய தப்பு பண்ணிருக்கேன்னு தெரிந்துக்கிட்டேன். முன்னயே உங்க மாமா வயசை சொன்னார் தான். நான் கல்யாணம் முடியவும் இரண்டு மாசத்துல பதினெட்டு ஆகிடுமேனு மிதப்பா இருந்துட்டேன்.
இன்னிக்கு அந்த நர்ஸம்மாவும் பேச பேச, கன்பார்மா  ஜெயிலுக்கு போயிடுவேன்னு நினைச்சேன்‌. போலீஸ் வந்ததும் ரொம்ப பயந்துட்டேன்.
நீ மட்டும் எடுத்து பேசலைன்னா களித் திண்ணுயிருப்பேன். உன்னை போட்டோவுல பார்த்ததும் பிடிச்சது மலரு. அதனால இரண்டு மாசம் தானே ஓடிடும்னு இருந்தேன். உனக்கு பதினெட்டு தொட இன்னும் மூனு மாசம் இருக்குனு தெரிந்தா, உன்னை தொட்டிருக்க மாட்டேன்.
முதலிரவு அப்ப, ஒரு வேகம் ஆசை நெருங்கிட்டேன். ஏன் இப்பவரை ஒரு மயக்கமிருக்கு. நீ உண்டானது, நான் அப்பாவாயிட்டேன்னு இப்பவும் நம்ப முடியலை.
அம்மா சொல்லற மாதிரி இந்த குழந்தையை பெத்தெடுக்க உடம்பு தாங்குமா? முன்னயெல்லாம் அதுக்கேத்த உணவு இருக்கும்.
நீ உங்க வீட்ல இருந்தப்ப ஒழுங்கா மூனு வேளை சாப்பிட்டதே அதிசயம்னு சொல்லற‌. உடம்பு தாங்குமா?'' என்று கேட்க, "இங்க வந்ததிலருந்து நான் நல்ல சாப்பிட்டு வெயிட் போட்டிருக்கேன் தெரியலை. அதெல்லாம் பார்த்துக்கலாம்." என்று கதிரவன் தாடியை பிடித்து ஆட்டினாள்‌.

"எனக்கு இருபத்திரெண்டு வயசு மலரு. குழந்தை பிறக்கறப்ப இருபத்தி மூனு ஆகும். உனக்கு பதினெட்டு வயசு இருக்கும்." என்று கூற, "அதெல்லாம் தெரியாமலையா படிப்பை கூட வேண்டாம்னு கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்" என்றாள்.

கதிரவனோ "ஏன் மலரு.. நீ பன்னிரெண்டாவது படிச்சிட்டு இருந்தல்ல... ஏன் மேள்கொண்டு படிக்க பிடிக்கலையா?" என்று கேட்டாள்.

"படிச்சு என்ன செய்யறது? இதே போல வீட்டு வேலை செய்து இருப்பேன். இதுக்கு எதுக்கு படிப்பு. நான் படிச்சா மட்டும் அந்தஸ்து மாறுமா?" என்று கேட்டாள்.

"தப்பு பண்ணிட்ட மலரு. படிச்சா என்னை விட வசதியா, படிச்சவனா, கல்யாணம் பண்ணிருப்ப" என்றான்.

"எங்க சித்திக்கு என்னை வசதியானவனையோ, படிச்சவனோடவோ கட்டி தர நினைக்காது. உங்களை கூட, படிக்காதவன் விவசாயம் பார்த்துட்டு ஆடுமாடு மேய்க்கறதா கேலி பண்ணுச்சு. அதுக்கு என்ன தெரியும். எந்த வேலையும் தப்பில்லைனு.
சொல்லப்போனா எனக்கு நீங்க கிடைச்சது அதிர்ஷ்டம் தெரியுமா? அத்தை பார்க்க தான் கரடுமுரடா பேசுது. நகை நட்டு சரியா போடலைன்னு திட்டினாலும், உனக்கு என்ன வேணுமோ ஆக்கி சாப்பிடுனு சொல்லுச்சு.
நானா பயந்துட்டு கொஞ்சமா சோறு போட்டா கூட, எனக்கு அள்ளி வச்சி குச்சிக்கணக்கா இருக்க, திண்ணுடினு திட்டும். அது திட்டி வைச்சாலும் என்னை சாப்பிட சொல்லி வைக்கும். நம்மளை ஒருத்தர் கவனிக்கறப்ப எவ்ளோ சந்தோஷமா இருக்கும் தெரியுமா.?

மாமா கூட ஏதோ சின்ன புள்ளனு இருப்பார். இந்த இரண்டு மூனு மாசத்துல நீங்க என்னை அடிச்சி திட்டி பேசுனதே இல்லை. ஏன் அதட்ட கூட செய்ததில்லை. இதெல்லாம் போதாதா? நிஜமானவே நான் சந்தோஷமா இருக்கேன்" என்றாள்.

கதிரவன் மனைவியை அணைத்துக் கொண்டான். ஏற்கனவே வந்ததும் வராததும், சாமுண்டிஸ்வரி வேறா, "ஏலேய்.. அந்த பொண்ணு உண்டாயிருக்கு. எப்பவும் காஞ்ச மாடு கம்பங் செடில பாய்ந்த மாதிரி பாஞ்சிடாத. கர்ப்பமா இருக்கா.. டாக்டரிடம் வேற பார்க்கணும். சூதகமா இரு." என்று பேசவும், சரியென்று தலையாட்டிக் கொண்டான்.

அதன் காரணமாக அன்பை மட்டும் பகிர்ந்துக் கொண்டான்.

மூன்று நாட்களாக தவமலர் கதிரவனிடம் "அப்பாவிடம் நான் கர்ப்பமா இருப்பதை சொன்னிங்களா?" என்று கேட்க, கதிரவனோ தயக்கமாய் பேச்சு தடுமாற்றம் கொண்டு, "ஆங்.. சொல்லிட்டேன்." என்றான்.

"நீங்க சொன்னப்பிறகும் அப்பா எனக்கு போன் பண்ணலை. நேர்ல வந்து பார்ப்பார்னு நினைச்சேன்." என்றவளின் கையை விடுவித்து கொண்டு வெளிவராண்டா வந்தான்.

"ஒரு வேளை சித்தி என்னை பார்க்க விடாம தடுத்திருப்பாங்க" என்றவள் கதிர் எதுவும் பேசாமல் இருக்க, "ஆனா அப்பா என்னிடம் போன்லயாவது பேசுவார். ஒருவேளை நான் அன்னிக்கு திட்டியதில பேச தயங்கறார் போல." என்றவள் போனை எடுத்து தந்தைக்கு அழைக்க, போன் ரிங் போகவில்லை‌.

"போன் ரிங் ஆகலை." என்று உதடு பிதுங்கி கூற, "ஏன் தாயி.. போனை விட்டு தள்ளு. அதெல்லாம் கோபம் குறைஞ்சு அவங்களா வருவாங்க" என்று கூற, மாமியார் பேச்சுக்கு கட்டுப்பட்டாள்.

கதிரவன் பெருமூச்சை விடுத்து அன்னை தந்தையை பார்வையிட, தவமலர் சென்றதும் தந்தையிடம் வந்தான்.‌

"அப்பா மாமா இன்னும் எங்கயிருக்கார்னு தெரியலையா?" என்று கேட்க கண்ணனோ "தெரியலை‌... அந்த பொம்பளைக்கு போன் போட்டு என்னம்மா சம்பந்தி வந்துட்டாரானு கேட்டா, 'உங்களால போனவரு இன்னும் வரலை'னு கரிச்சு கொட்டுது. இந்த புள்ளைக்கு அவங்க அப்பா எங்கயோ காணாம போயிட்டார்னு எப்படி சொல்லறது. அந்த பொண்ணு கர்ப்பமா இருக்கு. இந்த வயசுல கர்ப்பமா இருப்பதே பலவீனம்னு அந்த நர்ஸம்மா சொல்லுச்சு. இதுல அவங்க அப்பா இப்ப காணோம்னு சொல்லி ஏதாவது ஆகிடுமோனு பயமாயிருக்கு. நம்ம வீட்டு வாரிசுக்கு எதுவும் ஆகக்கூடாது." என்று கூறவும் கதிரவனுக்கும் அதே எண்ணம் தோன்றியது.

தவமலருக்கு இன்னமும் பதினெட்டு வயது பூர்த்தி ஆகவில்லை. ஏதோ அந்த நர்ஸும் அவர்கள் மூலமாக அந்த டாக்டரும் நிறைய அட்வைஸ் செய்து குழந்தை பெற்றுக்க சிகிச்சை அளிக்கின்றனர்.
இதில் ஏதாவது அதிர்ச்சியான செய்தி வேண்டாமென்று கூறியிருக்க, மனைவி நலத்தை தான் அவன் யோசித்தான்.

சிவநேசனும் காயத்ரி கூட தவமலரிடம் சொல்ல வேண்டாம். நாங்க அடுத்த வாரம் வர்றோம் நேர்ல பேசறோம் என்று கூறியிருந்தனர்.

இதெல்லாம் தவமலருக்கு தெரியாமல் பார்த்துக்கொள்ள, தவமலருக்கு ஐந்தாம் மாதம் ஆரம்பமானது.

ஓடிசலாக மாநிறமாக இருந்தவள், நிறம் மட்டும் கொஞ்சம் கூடுதலானது போல தோன்றியது‌. மற்றபடி வயிறு மட்டும் கொஞ்சம் போல வளர்ந்திருந்தது. மற்றபடி வயிறு பெரிதாக கூடயில்லை.

அன்று சிவநேசன் காயத்ரி நேராக தவமலரை பார்க்க வந்தார்கள்.
பையில் பழம் பூ ஸ்வீட் என்று வந்தாலும், முகத்தில் லேசான பதட்டம்.

தவமலர் தான் ஆனந்தமாய் வரவேற்றாள்.

"அத்தை... மாமா.. சென்னைமில இருந்து நீங்க கூட வந்துட்டிங்க. ஆனா அப்பா இங்க வரலையே‌. நான் தான் திட்டினேன். ஆனா.. அப்பா இந்த அளவு கோபத்துல இருப்பார்னு நினைக்கலை. சித்தி தான் என்னை பார்க்க விடாம பண்ணிருப்பாங்க. ஆனா போனாவது பண்ணலாம்ல அத்தை. ரொம்ப கஷ்டமாயிருக்கு அத்தை" என்று கூற, சிவநேசனும் கையை பிசைந்து வேடிக்கை பார்த்தார்.‌

காயத்ரி தான் சமாளிக்கும் விதமாக, "மலரு... உங்க சித்தி பத்தி தான் உனக்கு தெரியுமே. உங்கப்பாவே உனக்கு தந்த வளையலை கூட அவங்க ஓளிச்சுவச்சி ஆட்டம் கண்டவங்க. ஏதாவது சொல்லி உங்கப்பாவை இங்க வரவிடாம பண்ணிருப்பாங்க." என்று கூறவும் சமாதானம் ஆகாமல் நின்றாள் தவமலர்.

ஆனால் அத்தையிடம் மேலும் பேசி சிக்கலை கூட்டவில்லை.

"அத்தை... நான் போய்.. மாட்டுக்கு தீவனம் காட்டிட்டு வந்துடறேன்." என்று எழுந்து சென்றாள்.

கதகரவனோ சிவநேசனிடம், "இப்படி தாங்க... சதா புலம்பறா. பக்கத்துல யாரோ பிறந்த வீடல ஐந்தாவது மாசம் வளையல் போடுவாங்க. அந்த வளையல் சத்தத்தை குழந்தை கேட்கும்னு சொன்னாங்க. அதுலயிருந்து அப்பா வீட்லயிருந்து வளையல் போடணும்னு ஒரே தொல்லை.
எங்கம்மா கூட கண்ணாடி வளையல் போட ஆசைப்படறாளேனு அவங்க இரண்டு டஜன் வளையலை சாமி முன்ன வச்சி போட்டு விட்டாங்க. ஆனாலும் அவ மனசுல அவங்க அப்பா வீட்ல வந்து போடணும்னு ரொம்ப எதிர்பார்க்கறா.
அவளுக்கு என்ன தான் அவங்க வீட்ல ரொம்ப கஷ்டம் என்றாலும், அவங்க அப்பாவை பிடிக்காத மாதிரி நடிச்சாலும், அவளுக்கு பிறந்த வீடுன்னா அந்த குடும்பத்தை தான் எதிர்பார்க்கறா. முடியலைங்க... அவங்க அப்பா இல்லைனு சொல்ல முடியலை‌. அட்லீஸ்ட் காணாம போனதா கம்பிளைனாவது பண்ணலாம்னா, கொஞ்சம் பயமாவும் இருக்கு. மலருக்கு பதினெட்டு ஆக இன்னும் ஒரு மாசம் இருக்கு. எங்க அவங்க அப்பா காணோம்னு புகார் தர போய் என்னை பிடிச்சி வச்சிப்பாரோனு பயமாவும் இருக்குங்க‌.

எங்க தான் போனாரு? செத்துகித்து தொலைஞ்சிட்டாரா? அதுவும் தெரியலை. பைத்தியம் பிடிக்குதுங்க. என் மலரிடம் என்னைக்காவது சொல்லறப்ப, என்னிடம் ஏன் மறைச்சிங்கனு கேட்பா தானே சித்தப்பா" என்று வருந்தினான்.

அவர்களும் இவனிடம் என்னவென்று கூறுவார்கள்.
ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து துவண்டனர்.

சாமுண்டிஸ்வரியோ "இப்படி தாங்க அவ ஏதாவது அவங்க அப்பாவை பத்தி பேசினா, அவ தலை மறைந்ததும் புலம்பறான்." என்று காயத்ரியிடம் கூறினார்.

கண்ணனோ "ஏங்க அந்த பொம்பளை அவங்க வீட்டுக்காரர் காணோம்னு புகார் தரலையா. அதுக்கு இருக்கற வாயுக்கு ஊரையே விலைக்கு வாங்குமே" என்று கேட்டார். என்ன இருந்தாலும் அன்னத்தின் கணவர் அல்லவா?!

சிவநேசனோ "அட அவர் பொண்ணுக்கு வளையலை வாங்கி தந்துட்டார்னு அந்த பொம்பளை கோபத்துல இருக்கு. அதனால அவரே வரட்டும்னு சொல்லிட்டு சுத்துது. சொந்த வீடு, பக்கத்துல ஏதோ தீப்பெட்டி ஒட்டி தந்து வேலை பார்க்குது. போதாதுக்கு ஏதோ ஜாக்கெட் தைய்த்து கொடுத்து காசு பார்க்கு. அதனால மச்சான் ஆவுடையப்பனை தேடலை. அவரா வருவார்னு சொல்லுது. ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தானு காயத்ரி கூட கேட்டதுக்கு, அந்தாளு எல்லாம் சாக மாட்டான். சாகடிக்கற மாதிரி பேச தான் தெரியும்னு சொல்லுது. என்னத்த சொல்ல... தவமலரை நினைச்சு தான் எங்களுக்கும் கவலையா இருக்கு.
பத்து வயசுலயே எங்களோட வர்றியானு கேட்டதுக்கு, அப்பாவோடவே இருக்கேன்னு விவரம் தெரியாதப்ப சொல்லுச்சு. அவளுக்கு அப்பான்னா உசுருங்க. என்ன பண்ண... விதி..." என்றார்.

தவமலர் வரவும் கதிரவனோ "மலரு வருது‌ அவங்க அப்பா பத்தி பேச வேண்டாம்." என்று எச்சரிக்கையை கொடுத்தான்.

-தொடரும்.

https://onlinetamilnovels.com/%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%87-9/

மையலிட்ட சிற்பமே-8
அத்தியாயம்-8

கதிரவனின் வேண்டுதல் இறைவனுக்கு எட்டி தவமலர் விழித்திறக்க, கதிரவன், அவளை கட்டியணைத்து கொண்டான்‌.

நர்ஸ் வந்து, "ஏம்மா உன் வயசென்ன? டேட் ஆப் பெர்த் சொல்லு" என்று கேட்க, அவளும் கூறினாள்.

"என்ன தம்பி.. இந்நேரம் முடிஞ்சிடுச்சுனு சொன்னிங்க. இந்த பொண்ணுக்கு பதினெட்டு ஆக இன்னும் மூனு மாசம் இருக்கே." என்றவர் கதிரவன் விழித்து தவமலரை கண்டவன், "உங்க மாமா இரண்டு மாசத்துல பதினெட்டு வயசு முடிஞ்சிடும்னு சொன்னாரே" என்று கேட்க, "மாமா பொய் சொல்லுங்சு. ஆறுமாசம்னா நீங்க வேண்டாம்னு சொல்விங்கனு அப்படி சொன்னார்." என்றதும் கதிரவன் தொப்பென அமர்ந்தான்.

"அடிப்பாவி.... இரண்டு மாசம்னு சொன்னதால தான் அவன் தாலியே கட்டியது. இப்ப இந்தம்மா போலீஸிடம் மாட்டிவிட போன் வேற போட்டுச்சு. நீயும் உங்க வீட்டு ஆளுங்களும் என்னதான்டி மனசுல நினைச்சுட்டு இருக்கிங்க. என் பையனை லாக்கப்ல தள்ள போறிங்களா. பெத்தவ இல்லை.. சித்திகாரியிடம் மாட்டிட்டு கஷ்டப்படும். இங்க வந்தா குடும்பத்தோட வாழ்வன்னு தானே அவன் யோசித்தான்‌" என்று முதுகில் அடிக்க, தவமலர் கவலைக்கொண்டாள்.

இதில் நர்ஸ் தவமலரின் கையை பிடித்து இழுக்க, நாடி துடித்தது.

இத்தனை வருட அனுபவமோ என்னவோ தவமலரை தன் பக்கம் அழைத்து, "ஏன்டி... தலைக்கு ஊத்தி எத்தனை நாளாச்சு?" என்று கேட்க, நினைவு வைத்து உரைத்தாள்.

நர்ஸ் பெண்ணோ நெஞ்சில் கைவைத்து, தவமலரை அழைத்து, சென்றார். தனியாக அழைத்து ஏதேதோ கூற, தவமலர் திகைத்து நின்றாள். கதிரவனை மாமியார் மாமனாரை கண்டு விழிக்க, "போடி... இதை யூஸ் பண்ணிட்டு வந்து சொல்லு‌" என்று தள்ளினார்.

சாமுண்டிஸ்வரியோ, "போச்சு... என் புள்ளையை ஜெயிலுக்கு அனுப்ப அவ என்னத்தையே சொல்லி அனுப்பறா. இந்த சிறுக்கியும் போறா" என்று புலம்ப, கதிரவனுக்கு உலகமே ஸ்தம்பித்தது.

இன்றைய நாள் ஏன் இவ்வளவு மோசமானதாக அமைகின்றது என்று வருந்தினான்.

கண்ணனோ சிவநேசனுக்கு போனை போட்டு போட்டு துவண்டார். சிவநேசன் எடுக்கவில்லை என்றதும் என்ன செய்வதென்ற யோசனையில் மூழ்கினார்.

அதற்குள் தவமலர் கொண்டு வந்த காட்டியதில், நர்ஸ் பார்த்துவிட்டு, "நீ கர்ப்பமா இருக்கடி" என்று கூறியவர், கதிரவன் முன் வந்து, "காலையில யார் முகத்துல முழிச்ச தம்பி? மைனர் பொண்ணை கல்யாணம் செய்தால் இரண்டு வருடம் கம்பி எண்ணணும். இதுல இந்த பொண்ணு கர்ப்பம் வேற.

கடவுளே... உன் மேல போக்ஸா சட்டம் பாயும். கிட்டத்தட்ட இந்த பொண்ணை நீ கற்பழிச்சதா கேஸ் பதிவாகும். பதினெட்டுக்கு கீழே இருக்கற இந்த பொண்ணு கர்ப்பம்னா பாலியல் வன்முறைனு பத்து வருஷம் தண்டனை கொடுப்பாங்க." என்று நர்ஸ் விஷயத்தின் தீவிரத்தை எடுத்து கூற கூற, தவமலருக்கு நெஞ்சுக்கூடு காலியானது.

சாமுண்டிஸ்வரி நர்ஸ் பேச பேச அதிர்ந்து பார்க்க, தவமலரோ "அவர் மேல எந்த தப்பும் இல்லையே. நான் நானா தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்" என்று அழுதாள்.

"சட்டத்துக்கு உன் வயசு தான் முக்கியம். உன் சாட்சி தேவையில்லை." என்று கூற, தவமலர் அந்த நர்ஸிடம், "அக்கா.. அக்கா.. தயவு செய்து போலீஸ் எல்லாம் வேண்டாம்க்கா. எங்களை இப்படியே விட்டுடுங்க. நாங்க போறோம்." என்று கெஞ்ச, அதற்குள் போலீஸ் வண்டி வந்தது.

இன்று தீபாவளி என்பதால் அவரவர் லீவு எடுத்திருக்க, தற்சமயம் காவல் நிலையத்தில் இருந்தவர் மட்டும் இருசக்கர வாகனத்தில் வந்து சேர்ந்தார்.

"இச்க யாரும்மா நர்ஸ் கனவள்ளி? போன் போட்டு மைனர் பொண்ணை கல்யாணம் பண்ணியதா சொன்னது." என்று கேள்வி கேட்க, தவமலர் ஈரக்குலை நடுங்கியது.

நர்ஸ் ஊமையாக இருக்க முடியுமா? போலீஸை அழைத்து விஷயத்தை கூறியவர் போலீஸ் வந்ததும் பதுங்க இயலாதே.

"சார் நான் தான் கால் பண்ணினேன். இந்த பொண்ணு மிக்ஸில ஷாக் அடிச்சதா, சொல்லி இங்க கொண்டாந்தாங்க. வயசு கேட்டப்ப பதினேழு என்றதும், சந்தேகம் வந்தது. ஒருவேளை மைனர் திருமணம் செய்து கொடுமைப் படுத்தறாங்களோனு போன் பண்ணினேன். அப்ப இந்த பொண்ணு கண்ணு திறக்கலை சார். இந்தாளு பதினெட்டு வயசு இந்நேரம் முடிந்திருக்கும்னு சொன்னார். இந்த பொண்ணு வயசு சந்தேகிக்கும்படியா இருந்தது. அதோட வீட்ல ஷாக் அடிச்சது, இந்த பொண்ணோட உருவம் எல்லாம் வச்சி உங்களை அழைச்சிட்டேன். ஏன்னா பேஷண்ட் டீட்டெயில்ல பதினெட்டு முடியாம கல்யாணம் செய்த பொண்ணுக்கு கவர்மெண்ட்ல சிகிச்சை பார்த்தா பின்னால எனக்கு ஆபத்துனு அப்படி செய்தேன்.
இந்த பொண்ணு கண்ணு முழிச்சதும் வயசை கேட்டேன். பதினேழு முடிய இன்னமும் மூனு மாசம் இருப்பதா சொன்னா. இதுல கர்ப்பமா வேற இருக்கா.. போலீஸுக்குபோன் பண்ணிட்டேனு சொன்னேன். இந்த பொண்ணு அவ புருஷன் மேல தப்பில்லைனு அழுவறா. சார்.. நான் என்ன பண்ணறதுனு தெரியலை சார்‌. நீங்களே பார்த்து முடிவு பண்ணுங்க. பொண்ணு புருஷனுக்காக அழுவுது." என்றா தவமலரை சுட்டிக்காட்டினார்.

போலீஸோ "என்னம்மா.. இவங்களாலா உனக்கு பிரச்சனையா. பிரச்சனையே இல்லைன்னாலும் உள்ள தள்ளிடலாம்" என்று கேட்க, தவமலர் தடாலென போலீஸ் காலில் விழுந்து, "சார் எங்கம்மா எனக்கு பத்து வயசு இருக்கறப்பவே, என் கண்ணெதிர்ல மண்ணெண்ணெய் ஊத்தி இறந்துட்டாங்க. எங்கப்பா இரண்டாதாரமா அவர் திருட்டத்தனமா வாழ்ந்தவங்களை ஊர் அறிய கூட்டிட்டு வந்து அவங்களோட வளர்த்தாங்க. அவங்களோட வாழ்ந்தப்ப ரொம்ப ஏச்சும் பேச்சும் வாங்கினேன் சார். நானா தான் கல்யாடம் பண்ணி வையுங்கனு என் தாய்மாமாவிடம் கேட்டேன். அவர் தான் பண்ணி வச்சார். இவரிடம் இரண்டு மாசத்துல பதினெட்டு வயசு பூர்த்தியாகும்னு சொன்னார். ஆனா எனக்கு பதினெட்டு முடிய ஆறு மாசம் ஆகும்னு மறைச்சிட்டேன்.
இவர் மேல எந்த தப்பும் இல்லை சார்.
இவங்க என்னை நல்லா பார்த்துக்கறாங்க. தயவு செய்து கடவுள் கொடுத்த இந்த நல்ல வாழ்க்கையை பறிச்சிடாதிங்க.

நீங்க இவரை கூட்டிட்டு போய் ஜெயில்ல போட்டா. நான் செத்துடுவேன்" என்று அழுதாள்.

போலீஸோ ''என்னம்மா நீ இப்படி  பேசுற. கவர்மெண்ட் ஆஸ்பிடல்ல வேலைபார்க்கற நர்ஸ் கம்பிளைன் பண்ணினா நான் கேஸ் எடுக்கணும்." என்று உண்மையை உரைத்தார். அவருக்கு தவமலரின் நிலையும் கெஞ்சலும் அந்தளவு உருக வைத்தது.

நர்ஸிடம் தவமலர் கையை பிடித்து கெஞ்ச, அவரோ நான் என்ன செய்யறது தெரியலையே. டாக்டர் இருந்தா பொறுப்பை அவங்களிடம் தந்திருப்பேன். இப்ப நான் என்ன செய்வேன்." என்று முழிக்க, "எம்மாடி... நீயா கேஸ் தரலலன்னா அவர் போயிடுவார்." என்று சாமுண்டிஸ்வரி கூற, தவமலரும் ஆமென்று தலையாட்டினாள்.

நர்ஸும் போலீஸை பார்த்து, "சாரி சார்.. எனக்கு என்ன செய்யறதுனு தெரியலை. இந்த பொண்ணு கண் முழிச்சதும் கால் பண்ணியிருந்தா உங்களை நான் கூப்பிட்டுயிருக்க மாட்டேன். நீங்க தப்பா எடுத்துக்கலைனா உங்களை தொந்தரவு செய்ததுக்கு மன்னிச்சிடுங்க" என்றுரைத்ததும், "தப்பில்லை சிஸ்டர்.. நீங்க கடமையை தானே பார்த்திங்க. இதே இந்த இடத்துல இந்த பொண்ணுக்கு அநீதியா ஏதாவது நடந்திருந்தா இந்த பையனை அழைச்சிட்டு போயிருப்பேன். பாவம் இந்த பொண்ணே வேண்டாம்னு தாலியை பிடிச்சிக்கிட்டு சொல்லுது. அந்த பையனும் இந்த பொண்ணை நல்லா பார்த்துக்கறது இந்த பொண்ணு பேச்சுல தெரியுது.
அப்படியிருக்க.. நாம கேஸ் பைல் ஆகலைன்னா நம்ம வேலை பார்க்கலாம். இதுல உங்க தப்பு இல்லை." என்றார்.

கூடுதலாக கதிரவனை அழைத்து, "இங்கபாரு தம்பி பதினெட்டு கீழே இருக்கற பொண்ணை கல்யாணம் செய்தது சட்டபடி தப்பு. இதுல குழந்தை வேற. ரொம்ப பெரிய தப்பு. ஆனாலும் அந்த பொண்ணு உனக்காக கெஞ்சறதால விடறேன். கடைசிவரை அந்த பொண்ணை நல்லபடியா பார்த்துக்கணும். என்ன சரியா?" என்று அதட்ட கதிரவன் தலலயாட்டினான்.

பிறகு போலீஸ் போனதும் தான் கதிரவன் வீட்டாளுக்கு நிம்மதியுண்டானது.

அதே நேரம் சிவநேசன் அழைக்க, "ஏம்மா.. இவங்க தாய்மாமா தான். மருமக உண்டான விஷயத்தை சொல்லலாமா? எப்படி?" என்று கேட்க, நர்ஸ் கனகவள்ளியோ, தவமலரை கண்டு, "அம்மாடி... இந்த வயசுல குழந்தை பெத்துக்கறது கஷ்டம். அதனால தான் பதினெட்டு வயசு முடியறவரை கல்யாணம் குழந்தை வேண்டாம்னு அரசாங்கம் சொல்லுது. அதை மீறி இரண்டு மாசம் கருவோட நிற்கற. உடம்பை நல்லா கவனிச்சிக்கோ. நல்லா சாப்பிடு. டாக்டர் அம்மா நாளைக்கு வந்துடுவாங்க. ஒரெட்டு கண்டிப்பா வந்து நல்லா செக்கப் பண்ணிக்கோ" என்று அறிவுறுத்தி கருவுற்றதை வீட்டில் கூற சொல்லிவிட்டார்.

கதிரவன் அதன்பின்னே தவமலர் அருகே வந்ததும் சாமுண்டிஸ்வரியும் மருமகள் அருகே வந்தார்.

"ஏன்டிம்மா... வீட்ல எல்லாம் கர்ப்பமானதை சொல்லக்கூடாதுனு இங்க வ்நது பெரிய பெரிய குண்டை தூக்கி போட்டு புள்ள உண்டானதை சொல்லியிருக்க" என்று கேட்டு கையை பிடித்தார்.

"நீயேன்டா.. அவளை பார்த்துட்டு இருக்க, விரசா வீட்டுக்கு கூட்டிட்டு போ." என்று கூற அவள் கையை பிணைத்து நடந்தான்.
கண்ணனோ போனில் சிவநேசனிடம் பேசிவிட்டு மருமகளிடம் தந்தார்.

"மாமா.." என்று பேச, "சந்தோஷமா இருக்கும்மா. தீபாவளி அதுவுமா, உங்க சித்திக்காரி சண்டையா போட்டு சாப்பிட விடாம பண்ணிட்டாலேனு ஒரு வருத்தமா இருந்தது. இப்ப இந்த நல்ல விஷயம் தான் மனசுக்கு குளிர்ச்சியா இருக்கு.  உங்கப்பாவிடம் இப்ப சொல்ல வேண்டாம். நீ வீட்டுக்கு போய் இரு. நாளைக்கு சொல்லிக்கலாம்." என்று கூற சரிங்க மாமா. அத்தையிடம் பேசவா?" என்று கேட்டாள்.
சிவநேசனோ "உங்க அத்தையிடமா?" என்று கேட்டு, "அத்தை கோவிலுக்கு போயிருக்கா. வந்ததும் பேச சொல்லறேன்" என்று காயத்ரி அருகேயிருந்தும் தர மறுத்தார்.

தவமலரோ சரிங்க மாமா." என்று துண்டித்து விட்டாள். கண்ணன் தனியாக சென்று "அவங்க அப்பாவிடம் பேசிட்டு சொல்லுங்கப்பா" என்று அணைத்தார்.

கண்ணன் டிராக்டர் வண்டியை ஓட்ட, கதிரவன் தவமலர் அருகருகே அமர்ந்து வர, சாமுண்டிஸ்வரியோ சேலையில் காசை முடித்து, "ஐய்யனாரே... என் குலம் தழைக்குது. கூடவே இருந்து அந்த பொண்ணை பார்த்துக்கோ" என்று வேண்டுதலிட்டார்.

கணவன் கதிரவன் தோளில் சாய்ந்தபடி தவமலர் மலர்ந்த முகமாக வந்தாள்.

காயத்ரியோ "உங்க மச்சான் இந்த நேரம் எங்க போனாரு? வீட்டை விட்டு போனவருக்கு கால் பண்ணினா கால் போகலைனு சொல்லறார். வீட்டை விட்டு போக தீபாவளி தான் கிடைச்சதா?
சாயந்திரம் குடிச்சிட்டு வீட்டுக்கு வருவான். என்னவோ பதட்டமா இருக்கிங்க? அந்தாளு என்ன செத்தாப் போவாரு" என்று புலம்பி சென்றார்.

சிவநேசனுக்கு தவமலர் கர்ப்பமாக இருப்பது சந்தோஷம் என்றால் மறுபுறம் ஆவுடையப்பன் இந்நேரம் இல்லை என்றது ஏதோ நெருடலை தந்தது.

-தொடரும்.

https://onlinetamilnovels.com/%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%87-8/

மையலிட்ட சிற்பமே-7
அத்தியாயம்-7

அன்றிரவு கதிரவன் காமத்தை வழங்கவில்லை. காதலை வழங்கும். விதமாக தன் நெஞ்சில் தவமலரை சாய்த்துக்கொண்டான்.

தவமலர் உறங்கியதும், அவளை கண்டு, ரசிக்க துவங்கினான்.
இவ எத்தனை கஷ்டம் அனுபவிச்சாலும், இனி ஒரு கஷ்டமும் அனுபவிக்காம பார்த்துக்கணும்.' என்று எண்ணினான்.

அதன்பின் வந்த நாட்களில் மாட்டு சாணம் அல்லும் நேரம், "ஏய்... மலரு.. நான் அள்ளிக்கறேன். நீ போ. என்னை கட்டிக்கிட்டு கஷ்டப்பட வேண்டாம்" என்று அனுப்ப, "இது நம்ம வீட்டு வேலை தானே. இதுல ஏது கஷ்டம். வீட்டு வேலையை எல்லாம் கஷ்டத்துல சேர்த்தியில்லைங்க" என்று புன்னகை முகமாக கூறி சந்தோஷமாக வேலையை கவனித்தாள்.

முன்பை விட மனதால் நெருக்கமான தம்பதிகள், நன்றாக பழகவும் செய்ய, அது பொறுக்காமல் தீபாவளி உருவத்தில் அரக்கன் வந்தான்.

அரக்கனை மன்னித்து அனுப்பியிருந்தால் கூட, தீபாவளி அன்று புது மாப்பிள்ளைக்கு நகை நட்டு துணிமணி சீர் என்று செய்யும் தேவை இருந்திருக்காது.
இங்கு மன்னிப்பை வழங்காமல் ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரா பெண் வீட்டில் சங்கடம் சண்டை நிகழும் வகையில் இன்னமும் தீபாவளி வலி தந்து செல்கின்றது.
அப்படி தான் ஆவுடையப்பன் வீட்டுக்கு வந்த கதிரவனுக்கு மோதிரம் செயின், மற்றும் தவமலருக்கு முன்பு சபையில் போடத குறைக்கு ஒரு கழுத்தொட்டிய செயினை தந்தார் ஆவுடையப்பன்.

ஆனால் மொத்தத்தையும் கூட்டினாலும் ஐந்து சவரன் அளவிற்கு செய்திருக்க, இது தீபாவளிக்கு செய்த சீர், வரதட்சனையாக போட வேண்டிய எட்டு சவரன் நகை எங்கே என்று சாமுண்டிஸ்வரி கேட்க, அன்னமோ ''இந்தா.. எங்களால் இவ்ளோ தான் போட முடியும்." என்று சட்டமாய் கூற, சாமுண்டிஸ்வரிக்கும் அன்னத்திற்கும் சண்டை உருவானது. கதிரவன் தவமலர் இதில் யாரை தணித்து போக கூறுவது?
கண்ணனுக்கும் அதிருப்தி என்மதால் ஆவுடையப்பனிடம், "தீபாவளிக்கு போடறதா சொன்ன நகையை போடாம ஏமாத்தறிங்க. இதுக்கு முதல்லயே நகை எதுவும் போடாம தான் மகளுக்கு கல்யாணம் பண்ணப்போறதா செல்லிருந்தா கூட பெரிய மனசு பண்ணி கேட்க மாட்டோம்ல" என்றார்.‌

"இல்லைங்க அது வந்து" என்று பேச, கண்ணனோ அவ்விடம் விட்டு எழுந்துக்கொண்டார். தனியாக சிவநேசனிடம் பேசுவதற்கு சென்றார்.
சாமுண்டிஸ்வரியோ அன்னத்திடம் வாதிட்டு தவமலரையும் ஏசினார்.
தவமலரை ஏசுவதை தான் கதிரவனால் தாங்கமுடியஸில்லை‌.

"அம்மா அவங்க நகை போடலைன்னா இது என்ன பண்ணும்‌. இத்தை போய் திட்டற" என்று கேட்டான்.‌

சாமுண்டிஸ்வரிக்கு கோபம் அதிகமாக, "பேசுவடா... பேசுவ... உன்னை மயக்கி வச்சியிருக்கால.. இதை விட நிறைய பேசுவ." என்று பேசவும், கதிரவன் மௌனமானான்.
அவனொன்றுமா காவிய நாயகன் இல்லை. அன்னை பார்வைக்கு அடங்கும் மகன். பலர் வீட்டில் மகன் சொல்லுக்கு அஞ்சும் அன்னையர் இருக்கலாம்‌. அதெல்லாம் நிதர்சனமில்லையே. அன்னை சொல் கோட்டு அடங்கும் மகன் இயல்பு தானே.!

ஆவுடையப்பனோ மகளிடம் ஏதோ பேச வர, அவளோ அவரை காணாமல் அவ்விடம் விட்டு நகர்ந்தாள். அந்த வலி அதிகம் தாக்கவும், அன்னத்தின் அறைக்கு சென்றவர், அங்கே பளபளப்பான ஒரு ஜோடி வளையலை எடுத்துக் கொண்டு வந்தார்.

சாமுண்டிஸ்வரக முன்னே பகளது கையில் அணிவித்து, "இதை தவிர என்னிடம் எந்த நகையும் இல்லைம்மா. எட்டு சவரன் இருக்கு. ஆனா தீபாவளிக்குன்னு என்னால எதுவும் கொடுக்க முடியலை" என்றுரைத்தார்.

"யோவ் உனக்கு என்ன அறிவில்லையா?" என்று அன்னம் அதட்ட, சாமுண்டிஸ்வரியோ "நகை வாங்கி வச்சிட்டு தான் இல்லைனு விளையாடுதா. இந்தாம்மா... நீ இவளுக்கு சித்திக்காரி தான். அதுக்குன்னு பெத்தவர் அவ பொண்ணுக்கு வாங்கியதையும் ஒளிச்சி வச்சிக்கற." என்று கத்தினார்.

லதா மற்றும் சுரேஷ் இருவரும் சண்டையில் மிரண்டு வேடிக்கை பார்த்தனர்.

மீண்டும் ஆரம்பம் ஆன சண்டையில் தவமலரை இழுத்துக் கொண்டு சாமுண்டிஸ்வரி நடையை கட்டினார்.

தீபாவளிக்கு ஒரு வாய் கூட கறி சோறு உண்ணாமல் செல்ல, தவமலருக்கே திகிலானது.
மாமியார் கோபமாக இருக்கின்றார் என்று.

அவளுக்குமே அன்னத்தின் இந்த செய்கை அருவெறுப்பாக இருக்க யாரை நோவாள்.

தந்தை தான் பின்னாடியே வந்து நின்றார். தவமலர் கதிரவனை காண "நீங்க வீட்ல அவங்களை போய் பாருங்க" என்று அனுப்பினான்.

கதிரவனுக்கு சிவநேசன் போன் செய்து மன்னிப்பு கேட்டு, அந்த குடும்பமே அப்படி தான் தம்பி. தவமலரை வாழ விடக்கூடாதுனு அந்த அன்னம் கங்கனம் கட்டிக்கிட்டு அலையுறா.

சிவநேசனிடம் பேசியப்பின் சாமுண்டிஸ்வரி போனை பிடுங்கி, "தம்பி... இனி எங்களுக்கு அந்த குடும்பத்துல எதுவும் வேண்டாம். அந்த பொம்பளையை பார்த்தாலே எரிச்சலாகுது. இதோட அந்த வீட்டுக்கு மலரு போகாது. உங்களுக்கு மலரை பார்க்கணும்னா எங்க வீட்டுக்கு வந்து பார்த்துட்டு போங்க." என்று அழுத்தமாய் முடித்து கொண்டார்.

சிவநேசன் காயத்ரி தொலைவில் இருந்தபடி என்னவென்று சமாதானம் செய்வார்‌.

தவமலர் எல்லாவற்றையும் பார்த்து அமைதியாக வந்தாள். காயத்ரி மட்டும் வீட்டுக்கு வந்தப்பின் தவமலருக்கு போனில்  அழைத்து பேச, "மோதிரம் செயின் எனக்கு ஒரு செயின் எல்லாம் ஐந்து சவரன்ல வாங்கியிருக்காங்க அத்தை. வளையலும் அப்பா வாங்கியிருப்பார் போல. அதை தான் சித்தி அது பீரோல ஒளிச்சு வச்சிக்கிச்சு. அத்தை திட்டி சண்டை போடவும், அப்பா என்ன நினைச்சாரோ வளையலை கொண்டா வந்து முன்ன வச்சிட்டார்.
அத்தைக்கு அது பிடிக்கலை. நகை போச்சேனு புலம்ப, எங்கத்தைக்கு இப்படி சண்டை போட்டு வாங்கணுமானு கடுப்பாகவும் வந்துட்டாங்க. அந்தளவு இரண்டு பேரும் பேசி சண்டை போயிடுச்சு.
இப்படி வீட்டுக்கு வந்து அவமானப்படணுமானு எங்கத்தை சோத்துல கூட கை வைக்கலை. இந்தா... இங்க வந்து தான் அரிசி கழுவி வச்சிட்டு இருக்கேன். எங்கத்தை கோழியை பிடிச்சி தீயில கருகி இறகை பிடுங்குது.

அங்கிருந்து வந்ததிலருந்து சித்தியை கரிச்சு கொட்டறாங்க. இப்படியா பொண்டாட்டி கால்ல ஒருத்தன் விழுந்து கிடப்பான். மூத்த பொண்ணு என்ன இளக்காரமானு கத்திட்டாங்க. என்னமோ போ அத்தை.. ஒரு மணி நேரத்துல அப்பா வீடு. ஆனா அங்க இனி போக முடியாத அளவுக்கு என் நிலைமை." என்று வருந்தினாள்.

காயத்ரியோ "ஏன்டி.. இல்லைன்னா மட்டும் நீ அங்க போய் நிற்பியா? இல்லை உங்க சித்திகாரி தான் வாடினு கூப்பிடும்மா." என்றார்.‌

தவமலரோ "இல்லத்தை... என்னயிருந்தாலும் அப்பா வீடுனு ஒரு இடம் இருந்தது. இப்ப அதுவும் இல்லை." என்று விசும்பினாள்.

காயத்ரிக்கு அவள் சொல்ல வரும் சாரம்சம் புரிய, "என்னடி பண்ணறது. சிலருக்கு எல்லாம் நல்லதா அமையும். உனக்கு இவ்ளோ தான் நல்லது நடக்கும்னு கடவுள் விதிச்சிட்டார்." என்றார்.

"மசாலா அரைச்சிட்டியா இல்லையா? இன்னும் போன்ல கதை அளக்கறியா?" என்றதும், "போ.. உங்கத்தை பேச்சையாவது கேட்டு நல்லபடியா இரு. ஊருக்கு வர்றப்ப வந்து பார்க்கறேன்" என்று அணைத்தார்.

தவமலரும் போனை அணைத்துவிட்டு மசாலா அரைக்க வந்தாள்.
ஏற்கனவே மிக்சியில் மின்சாரம் லேசாக கசியும். அதில் கதிரவன் தான் கருப்பு டேப் போட்டு ஒட்டி வைத்திருந்தான்.
இன்று அதை கவனகக்காமல், தவமலர், மிக்சியை போட்டுவிட, மின்சாரம் பாய்ந்து, தூக்கி எறியப்பட்டாள்.

கதிரவன் தவமலரை பார்த்து தான், தந்தையிடம் பேசிக் கொண்டிருக்க, தவமலருக்கு மின்சாரம் தாக்கவும், "மலரு..." என்று கத்தி ஓடிவந்தான்‌.

சாமுண்டிஸ்வரியும் மினது அலறலில் கோழியை அப்படியே போட்டுவிட்டு வர, அங்கே சமலயல் அறையில் தவமலர் மகன் மடியில் சரிந்தபடி ஆங்காங்கே மசாலாவுக்கு அரைக்க எடுத்த பொருட்கள் சிதறியிருந்தன.

நொடியில் நிலைமையை ஊகித்த கண்ணனோ, "கதிரு... மூச்சு இருக்கா பாரு. சட்டுனு ஹாஸ்பிடலுக்கு தூக்குடா" என்றார். சாமுண்டிஸ்வரியும் போடா" என்றதும் டிராக்டரில் தவமலரை தூக்கி போட்டுக்கொள்ள கதிர் கூடவே இருந்தான்.
கண்ணன் டிராக்டரை ஓட்ட, சாமுண்டிஸ்வரி வீட்டை அப்படியே பூட்டி விட்டு, விசிறியால் தவமலருக்கு விசிறியபடி வந்தார்.‌

கதகரவனோ "மலரு... ஏய் மலரு.. எந்திரிடி." என்று பைத்தியம் போல அணத்த துவங்கினான்.

சாமுண்டிஸ்வரியோ, "ஒத்த வளையலை தூக்கி கொடுத்துட்டு சபிச்சியிருக்கா பாரு. வீட்டுக்கு வந்து அரை மணி நேரத்துல ஷாக் அடிச்சிருக்கு. விளங்குவால அந்த சிறுக்கி. இப்பவே இப்படி பண்ணிருக்காளே, பத்து வயசுல இருந்து இந்த புள்ளையை என்னயென்ன பண்ணியிருப்பாளோ. எப்பா ஐய்யனாரே.. இந்தப்புள்ளையை காப்பாத்து" என்று பயந்தபடி வேண்டினார்.

கதிரவன் தாடையை தட்டி தட்டி தவமலரை எழுப்ப முயன்றும் அவளோ துளியும் சலனம் காட்டாமல் இருந்து அவனுக்கு பயத்தை கூட்டினாள்.

அரசாங்க மருத்துவமனையில் டிராக்டர் நின்றதும் கதிரவன் தவமலரை தோளில் தூக்கியபடி மருத்துவரை காண வந்தான்.
அன்று தீபாவளி என்றதால் மருத்துவர்கள் இல்லை. சொர்ப்பமாய் சிலரே இருக்க, பல வருடமாக நர்ஸாக இருந்த பெண் தவமலரை காண வந்தார்.

"டாக்டர் இல்லையாங்க" என்று கதிரவன் துடிக்க, "என்னாச்சுப்பா" என்று கேட்க, மின்சாரம் தாக்கியதை கூறினான்.

கண்ணின் கருவிழியை இழுத்து பார்வையிட்டு கவனிக்க ஆரம்பித்தார்.

"உயிருக்கு ஒன்னுமில்லை. பயத்துல மயங்கி இருக்கா" என்று ஊசியை செலுத்தினார்.

கன்னத்தை தட்டி தட்டி "எப்படியும் அரை மணி நேரத்துல எந்திரிப்பா. கன்னத்தை மட்டும் தட்டி விடுங்க." என்றார்.

"பேஷண்ட் பெயர் என்ன? இந்த பொண்ணுக்கு என்ன வயசு? கல்யாணமாகிடுச்சா?" என்று தாலியை பார்த்து கேட்டார்.

கதிரவனோ "மலரு.. தவமலருங்க. வயசு 17 ஆகுது. கல்யாணமாகிடுச்சு. நான் தான் இதோட புருஷன்" என்று கூறினான்.

நர்ஸ் எழுதுவதை நிறுத்திவிட்டு, "மைனர் பொண்ணை கல்யாணம் பண்ணிருக்க? தானா ஷாக்கடிச்சதா? இல்லை நீங்களா ஏதாவது செய்திங்களா? உங்களை பார்த்தா சரியா தெரியலை. இருங்க நான் போலீஸுக்கு போன் போடறேன். அதென்ன மைனர் பொண்ணை யார் கல்யாணம் பண்ணி வச்சா? லவ் மேரேஜா இருந்தா உன்னை உள்ள தூக்கி போடுவாங்க. அரேஜ் மேரேஜா இருந்தா இந்த பொண்ணோட அப்பா அம்மாவை உள்ள வைப்பாங்க." என்று போன் போட எடுத்தார்.

"இரண்டு மாசத்துல பதினெட்டு ஆகும்னு சொன்னாங்க. இப்ப கல்யாணமாகி மூனு மாசமாகுதுங்க. பதினெட்டு வயசு ஆகியிருக்கும்" என்று கதிரவன் கூற, "அதெல்லாம் நீ போலீஸ் வந்தப்பிறகு சொல்லு" என்று முடித்துவிட்டு போலீஸுக்கு அழைத்தார்கள்.

கதிரவனோ தவமலர் கண் திறக்க காத்திருக்க, கண்ணனோ இதென்ன இந்த தீபாவளி நமக்கு நல்லாவே போகலை. ஆண்டவா" என்று வாய்விட்டு புலம்ப, சாமுண்டிஸ்வரியோ "அந்த கேடுகெட்டவ மனசுல பொறுமறா போல. எல்லாம் நம்ம தலையில விடியுது." என்று சுவரோடு தரையில் அமர்ந்தார்‌.

கதிரவனுக்கு மட்டும் மலர் எழுந்து நடமாடினாள் போதுமென்ற வேண்டுதலோடு காத்திருந்தான்.

-தொடரும்.

https://onlinetamilnovels.com/%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%87-7/

மையலிட்ட சிற்பமே-6
அத்தியாயம்-6

தவமலர் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி, "எனக்கு தெரியும் அப்பா. அம்மாவை நீங்க தான் உயிரோட கொன்னீங்க. அம்மா என் எதிர்ல தான் மண்ணெண்ணெய் ஊத்திக்கிச்சு. ஆனா அதுக்கு முன்ன நீங்க பேசிய வார்த்தை எனக்கு அப்ப புரியலை. பத்தாவது பரீட்சை முடிஞ்சி வீட்ல இருந்தேன்ல அப்ப மூக்கு முட்ட குடிச்சிட்டு வந்து புலம்பினிங்க. அதை நான் கேட்டேன். எனக்கு எல்லாம் புரிஞ்சிடுச்சு." என்று கூற நெஞ்சை நிடித்தபடி மகளை ஏறிட்டாள்.

"அதெப்படிப்பா..‌. அம்மாவை நீ எதுவும் பண்ணலை. ஆனா அம்மாவே அது மேல மண்ணெண்ணெய் ஊத்தி கொளுத்திக்க வச்ச? உன் மேல அன்பா பாசமா இருந்தது தப்பா? நீ பாட்டுக்கு பேசிட்டு போயிட்ட. அம்மாவை பார்றேன்... லூசு மாதிரி அது உயிரை மாய்ச்சிக்கிச்சு. பத்து வயசு நான் அது கண்ணெதிர இருந்தும் அதுக்கு என் நினைப்பு வரலை பார்றேன். நான் என்ன நிலைக்கு ஆளாவேன்னு கொஞ்சமும் யோசிக்காம போயிடுச்சு." என்று தழுதழுக்க கூற ஆவுடையப்பன் துண்டை வாயில் வைத்து கடித்து அழுகையை அடக்கினார்.

அந்த நேரம் நாய் குலைக்க, நான் கல்யாணம் பண்ணிட்டு வந்தது உன் முகத்தை பார்க்க வேண்டாம்னு தான்." என்று கூறிவிட்டு மாட்டுக்கு தீவனம் கலக்க சென்றாள்.

ஆவுடையப்பனோ அவ்விடம் விட்டு நடைப்பிணமாக நடந்தார்.

தவமலர் தடுக்கவில்லை... அவள் வீட்டுக்கு வரும் நேரம் கதிரவன் அனைத்தும் கேட்டவனாக தவமலரை பார்வைமிட்டான்‌.

தவமலரோ கணவன் பார்வையில் "டீ போட்டு தரவா?" என்று கேட்க, மறுப்பாய் தலையசைத்தான்.

அதற்குள் சாமுண்டிஸ்வரியோ "எங்கடி உங்க அப்பனை காணோம்." என்று விசாரிக்க, அவர் போயிட்டார் அத்தை." என்றாள்.

"என்னது போயிட்டாரா? இதென்ன  கிளம்பறப்ப சொல்லிட்டு போகணும்னு வழக்கமில்லை. எங்களை கண்டா என்ன நினைப்பாம்." என்று தவபலரை வறுத்தெடுத்தார்.

கண்ணனோ "ஏம்மா.. போறப்ப ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் தானே?" என்று கேட்க, கதிரவனோ அன்னை தந்தை கேட்க தவமலர் கையை பிசைந்து நின்ற நிலையில், "என்கிட்ட சொல்லிட்டு போனார்ப்பா." என்றான் அவளை காப்பாற்றும் விதமாக. இது தான் அவன் தவமலருக்காக முதல் முறை யோசித்து பேசியது.

"ம்கூம்... மாப்பிள்ளையிடம் மட்டும் பேசிட்டு கிளம்பிட்டாரா." என்று அதற்கும் சாமுண்டிஸ்வரி குத்தல் பேசினார். கண்ணனுக்கு என்னவோ போங்க' என்று விட்டுவிட்டார்.
அவருக்கு தவமலர் வயதில் சின்ன பிள்ளை. அவள் பிறந்த வீட்டில் சற்று சரியில்லை என்று சிவநேசன் கூறியதால் பெரிதுப்படுத்த மாட்டார். கொஞ்சம் வருத்தம் உண்டு. ஆனால் தெரிந்தே பெண்ணை எடுத்த பிறகு கேட்டு என்னவாக போகின்றது என்ற எண்ணமுண்டு.

இரவு கம்பு தோசை சுட்டு முடித்து, அன்றாடும் செய்யும் வேலையை எல்லாம் முடித்து கதிரவனும் அவளேம் புழங்கும் அறைக்கு வந்தாள்.

எப்பொழுதும் தவமலர் வந்ததும் கட்டிக்கொண்டு தாம்பத்திய ருசியை தேடுபவன். இன்று அவள் வந்ததும், உட்கார கூறினான்.

தவமலர் அவள் சீதனமாக கொண்டு வந்த கட்டிலில் அமர்ந்ததும், "இத்தனை நாள் பிறந்த வீட்ல சித்திகாரியால கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கற பொண்ணு. என்னை கட்டிக்கிட்டா இங்க வந்து நல்லா வாழ வைக்கலாம் நினைச்சேன். அப்படி தான் நீ சந்தோஷமா இருக்கனு நினைச்சேன். ஆனா கல்யாணம் பண்ணியதே உங்க அப்பா முகத்தை கூட பார்க்க பிடிக்காம வந்தது இன்னிக்கு தான் தெரிந்தது.
என் தப்பு தான்... இதுவரை உன் மனசுல என்ன ஓடுதுனு நானா கேட்டதில்லை. வீட்ல எப்பவும் அம்மா அப்பாவும் இருப்பாங்களா. இந்த ரூமுக்கு நீ வருவதே அதிசயம். வெளியே நின்னு பேசறது வேலை செய்யறதுமா போகும். ரூமுக்கு வந்ததும் என்னோட இளமை பசியை தான் தேடினேன். உன்னிடம் ஆரஅமர்ந்து பேசியது கிடையாது. அதுக்கு அவசியமிருக்காதுனு நினைச்சேன்.
சின்ன வயசுல அடிதிட்டு வாங்கியிருப்ப இனி அது இங்க இருக்காதுனு நினைச்சேன்.
ஆனா உங்கப்பாவிடம் நீ பேசியது புரியலை. நீயா கல்யாணம் பண்ணிக்க கேட்டதுக்கு என்ன காரணம்? உன்‌மனசுல ஏதாவது ஒளிச்சி வச்சிட்டு இருந்தா என்னிடம் சொல்லு." என்றான்.

தவமலர் கதிரவனை ஏறிட்டு பார்த்து மௌனமானாள். எப்பொழுதும் தன்னை பாய்ந்து வந்து கழுத்தில் உதட்டால் ஊர்ந்து, தன்னை இன்பக்கடலில் தள்ளி அதில் கதிரவனும் முக்குளிப்பது போல இன்று நடக்கப்போவதில்லை. மாறாக தன்னிடம் காரணம் அறிவதற்கு நிற்பதை கண்டு வாய் திறக்க தயாரானாள்.

"எனக்கு பத்து வயசு இருக்கும் வரை அம்மா அப்பா கூட தான் இருந்தேன்.‌ விவரம் தெரியறதுக்கு முன்னயே அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டுக்கிட்டு கத்தறதை நிறைய முறை பார்த்திருக்கேன். அப்ப எல்லாம் ஏன் சண்டை எதுக்கு சண்டைனு எனக்கு தெரியாது.
அம்மா தனியா உட்கார்ந்து அழும். அப்பா ஒரு நேரம் நல்லா இருப்பார் ஒரு நேரம் கத்துவார். இப்படி தான் இருந்தது.

அன்னிக்கு அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பெரிய சண்டை. அப்பா அப்மாவை அடிச்சி உதைச்சு என்னென்னவோ சொல்லிட்டு போயிட்டார். அம்மா ஓரமா உட்கார்ந்து அழுதுட்டு இருந்தது. நான் தமிழ் புக் வச்சிட்டு படிச்சிட்டு இருந்தேன். அம்மா என்ன நினைச்சதோ, அடுப்படியில இருந்த கெரஸினை எடுத்து மேல ஊத்திக்கிட்டு பத்த வச்சிக்கிச்சு.
தீ திகுதிகுனு எரிந்தப்ப, என்னடா இது இவ்ளோ வெளிச்சம்னு திரும்பினேன். அது வெளிச்சமில்வை.. என் வாழ்க்கையில இருள் சூழ்வதற்கான அறிகுறினு அப்ப தான் தெரிந்தது.
என் கண்முன்ன அம்மா அலறிட்டு எரிவதை பார்த்தேன். 'அம்மா அம்மா'னு அலறுறேன். ஆனா வார்த்தை வரலை. அக்கம் பக்கத்துல இருந்தவங்க வந்து தண்ணீ ஊத்தி அம்மாவை காப்பாத்த போராடினாங்க.

ஆனா முக்காவாசி எரிந்துடுச்சு. தொண்டைக்குழில கொஞ்சுண்டு உசுரு மட்டும் மிச்சம் இருந்தது.

ஹாஸ்பிடல்ல போலீஸ் எல்லாம் வந்தாங்க.
என்னிடம் விபத்து நடந்தப்ப அப்பா இருந்தாரா? அவர் தான் அம்மாவை இப்படி செய்தாரானு கேட்டதும் இல்லைனு தலையாட்டினேன்.

அதென்னவோ சாகறப்ப கூட அம்மாவை உதாசினப்படுத்தி இன்னொருத்தியோட வாழ்ந்த அப்பாவை அம்மா காட்டிக்கொடுக்க விரும்பலை. போலீஸ் போற உசுரை நிறுத்தி, 'உன் சாவுக்கு உன் புருஷன் காரணமா?'னு கேட்டு நின்றப்ப கூட அம்மா இல்லைனு சொல்லிட்டு செத்துடுச்சு.
சாகறப்ப கூட புருஷனை காட்டிக்கொடுக்காத எங்கம்மாவுக்கு, என் ஙினைப்பு துளிக்கூட இல்லை. என்னை அனாதையா விட்டுட்டு போயிடுச்சு." என்றவள் கையை காமத்தை ஆறுதலுக்காக முதல் முறை தவிர்த்து தீண்டினான்.

"அம்மா செத்து போச்சு. அதுவும் நெருப்புல துடிதுடிச்சு. பொண்டாட்டி செத்தா புருஷன் புதுமாப்பிள்ளைல? எங்கப்பா தான் ஏற்கனவே அன்னத்தோட வாழ்ந்தாரே. லதா, சுரேஷ்னு அவங்களோட வாழ என்னை அழைச்சிட்டு போயிட்டார்.

அப்பாவுக்கு தனியா ஒரு குடும்பம் இருப்பதே அன்னிக்கு தான் எனக்கு தெரியும். அம்மாவை விட அப்பாவுக்கு அவங்களை தான் ரொம்ப பிடிக்கும்னு தெரிந்துக்கிட்டேன். ஏன்னா என்னை அடிச்சி திட்டறப்ப எங்க சித்தி அன்னத்தை ஏன் இப்படி பண்ணறனு ஒரு வார்த்தை கேட்க மாட்டார்.

நான் அங்க வளர வளர, சித்தி எப்ப பாரு திட்டும் வேலை வாங்கும். சோறு ஒரு வேளை போடும் ஒரு வேளை போடாது. வயிறு காய அழுதுட்டே பட்டினியா இருந்த காலம் உண்டு. நிறைய வேலைக்கு நடுவ நானும் வளர்ந்தேன். சித்தின்னா இப்படி தான். அம்மா எதுக்கோ செத்துடுச்சு. எதுக்கோ என்ன எதுக்கோ.. அதோட இடத்தை விட்டு தர முடியாம செத்துடுச்சு.
அப்ப பத்தாவது படிச்சி பரீட்சை முடிஞ்சி பாஸ் மார்க் வந்துச்சு.
அப்பா அன்னிக்கு சந்தோஷத்துல குடிச்சார்.

அன்னிக்கு வராண்டாவிலேயே உருண்டுட்டு இருக்க விட்டுட்டாங்க.
அப்ப தான் அப்பா உலறினார். 'உன்னை பொருட்டா மதிக்காம இன்னொருத்தியை தேடி போய் விழுந்தேன். என்னை வராண்டாவுல படுக்க விரட்டிட்டா. இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிந்தா ராசாத்தி உன்னை செத்து போடினு திட்டியிருக்க மாட்டேன். உன்னை வேறொருத்தனோட தப்பா பேசியிருக்க மாட்டேன். உன்னை தற்கொலை பண்ணிக்க வைக்கிற அளவுக்கு பேசியிருக்க மாட்டேன்னு புலம்பினார்.
ஏதேதோ பேசினார். அதுல ஒன்னு மட்டும் நல்லா புரிந்தது. எங்கப்பா எங்கம்மா மேல வச்ச அன்புக்கு மதிப்பில்லைனு அம்மாவுக்கு புரியவும் அவங்க வாழ விரும்பாம இறக்க முடிவெடுத்தது.

கொலை செய்தவனை விட கொலை செய்ய தூண்டினவனை சட்டம் தண்டிக்கும். அப்படி பார்த்தா... தற்கொலைக்கு தூண்டின எங்கப்பாவை சட்டம் தண்டிச்சிருக்கணும். ஆனா எங்கம்மா உயிர் போகறப்ப கூட எங்கப்பாவை கிட்டி கொடுக்கலை. அவங்களுக்கு தீராத வயிற்று வலியால தற்கொலை பண்ணிக்கிட்டதா சொல்லிட்டாங்க. உண்மையில அம்மா நினைச்சா என்னை தவிர்த்து இன்னொரு பொண்ணோட கல்யாணம் செய்து வாழ்ந்திருக்கார்னு கேஸ் போட்டு உள்ள தள்ளியிருக்கலாம். அவங்க அப்படி பண்ணலை. சாகறப்ப கூட புருஷனை காப்பாத்தின புண்ணியவதி. போலீஸ் வந்து என்னிடம் கேட்டப்ப அம்மாவே கொளுத்திக்கிச்சுனு சொன்னேன். அதனால அப்பா மேல எந்த கேஸும் பதிவாகலை. எந்த குற்றவுணர்வும் நேராம அவர் இருந்துட்டார்.

ஆனா மனசாட்சி குத்தவும், அன்னிக்கு குடிச்சிட்டு நான் தான் உன்னை சாகடிச்சிட்டேன். உன்னை நல்லபடியா பார்த்திருந்தா எனக்கு இந்த நிலைமை வராதுனு சொல்லவும் அப்பா மேல தான் தப்புனு புரிந்துடுச்சு. இர்ணடாதாரமா ஒரு பொண்ணோட வாழறான்‌ அப்பவே தப்புனு தெரியலையானு கேட்கலாம். ஆனா அப்ப அம்மா இறப்புக்கு அவங்க தப்பான முடிவு எடுத்ததா நினைச்சேன். இனா அவங்க எடுத்த முடிவே அப்பாவோட ஏச்சும் பேச்சும்னு தெரியறப்ப அவரை பார்க்கவே பிடிக்கலை. கொஞ்சம் கொஞ்சமா அப்பாவை தவிர்த்தேன். எப்படியும் அவரை விட்டு தொலைவா போக முடிவெடுத்து தான் கல்யாணம் பண்ணி வீட்டை விட்டு வெளியேற நினைச்சேன்." என்றாள்.

இப்பவரை அப்மாவுக்கு வயித்து வலினு சிலரும், சிலர் இரண்டாதாரமா ஒருத்தி வந்ததால தான் செத்ததாகவும் சொல்வாங்க. ஆனா அப்பாவோட பேச்சு கேட்க சகிக்காம இறந்துட்டாங்க. எனக்கு கூட சித்தி ஏதாவது பேசி திட்டறப்ப செத்துடலாம்னு யோசிப்பேன். ஆனா அம்மா மாதிரி முட்டாளா நானும் முடிவெடுக்க கூடாதுனு நினைச்சு தான் கல்யாணத்தை தேர்ந்தெடுத்து வீட்டை விட்டு இங்க வந்தது. ஏன்னா எங்கம்மா துடி துடிச்சு அலறி வீட்ல அங்கயும் இங்கயும் தள்ளாடி கத்தி கூச்சலிட்டது இப்பவும் என் காதுல கேட்குது.

இங்கயும் நிறைய வேலை இருக்கு, திட்டும் கிடைக்குது. ஆனா இது என்‌ வீடு. எங்கம்மாவை கொன்ற எங்கப்பாவை தினம் தினம் பார்க்கலை. அந்த நிம்மதி. போதும்." என்றாள்.

அனைத்தும் பேசிவிட்டு, கண்ணீரை துடைத்து கதிரவனை கண்டாள்.

"உனக்கு இப்பவும் உங்கம்மாவை மிஸ் பண்ணறியா?" என்று கேட்க, "ஒரு பொண்ணுக்கு அம்மா இருந்து இறந்துட்டாலே, அவ அவங்க அம்மாவை மனசுக்குள் தேடாம இருக்க மாட்டா. எனக்கு எச்கம்மாவை ரொம்ப பிடிக்கும். நான் தினமும் அவங்களோட மனதுக்குள்ள பேசுவேன்.

-தொடரும்.

https://onlinetamilnovels.com/%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%87-6/

மையலிட்ட சிற்பமே-5
அத்தியாயம்-5

தவமலர் அவளது சித்தி வீட்டுக்கு வந்தப்போது, ஆவுடையப்பன் நன்றாகவே வரவேற்றார். சிவநேசன் காயத்ரி எல்லாம் மாப்பிள்ளை வீட்களுக்காக, மதிய உணவை சமைத்து முடித்து சாமுண்டிஸ்வரியிடம் பேச அமர்ந்தனர்.

லதாவும் சுரேஷையும், வேண்டுமென்றே பள்ளிக்கூடத்திற்கு அனுப்பியிருக்க, தவமலர் வந்ததும் அவர்களை பள்ளி சித்தியிடம் விசாரித்தாள்.

"நேத்து லீவு போட்டாச்சு. இன்னிக்கும் எதுக்குனு அனுப்பிட்டேன். இந்த வயசுல புள்ளைங்களுக்கு படிப்பு தான் முக்கியம். உனக்கென்ன...  பதினொன்னாவது கூட தாண்டாம கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லிட்ட. எம்புள்ளைங்க படிச்சி பெரிய வேலைக்கு போக வேண்டாம்." என்று பேசினார்.

ஏன் தான் கேட்டோமோ என்ற நிலையில் தவமலர் முகம் வாடினாள். அவளுக்கென்ன இந்த வயதில் படிக்க பிடிக்காமல, திருமணத்தை கேட்டாள். சொல்லப்போனால் படிப்பில் நடுத்தரத்தில் மதிப்பெண்ணை பெற்று விடுவாள். எந்த பாடத்திலும் அதிக மதிப்பெண்ணும் எடுத்ததில்லை‌ ஆனால் அதே நேரம் பெயில் மார்க் என்று எடுத்ததும் இல்லை.

சற்று ஊக்கப்படுத்தி, படிக்க வைத்தால் அதிக மதகப்பெண் எடுத்திருக்க வாய்ப்புண்டு.

ராசாத்தியின் பார்வை தவமலர் மேனியில் ஊர்ந்தது. புதிதாக மணமான பெண்ணிற்குண்டான காயங்கள் அதிலிருந்தது.

காயத்ரி தான் தவமலரை இழுத்துக்கொண்டு தனியாக பேச சென்றார்.

அவருமே காயத்தை கண்டு நேற்றைய நாளில் நடந்ததை யூகித்து கொண்டார்.
"அந்த தம்பி நல்லா பேசுதா? உங்க அத்தை நகையை ப்ததியோ வீட்டை பத்தியோ பேசினாங்களா? காலையில சாப்பிட்டியா?" என்று விசாரிக்க, "அவர் என்னிடம் பேசலை அத்தை. அத்தை பேசுச்சு. நகை கூட போடாம கை வீசகட்டு வந்ததா. ஆனா காலையில சாப்பிடறப்ப தட்டு நிறைய கறியை வச்சி நல்லா சாப்பிடுனு சொன்னாங்க. அவருமே, அன்பா சாப்பிட சொன்னார்.
நீங்க சொன்ன மாதிரி அவர் தொட்டப்ப தடுக்கலை. காலையில நீங்க சொன்ன மாதிரி  குளிச்சிட்டேன். அத்தை சுடத்தண்ணி வச்சி தந்தாங்க. பாத்திரம் கிடந்தது கழுவினேன், துணியும் துவைச்சேன்.

இங்க வர்றதுக்கு கிளம்ப சொன்னாங்க கிளம்பிட்டேன்.
ஏன் அத்தை... தினமும் இதே போல வேலை பார்த்தா போதுமா? இப்படி தான் இருக்குமா?" என்று கேட்க, காயத்ரி தலையாட்டினாள்.

"என்னை ராசியில்லாதவனும், சிறுக்கி மக, சோறுண்ணா கொட்டிக்க வந்துட்டா, வேலையை சொல்லிட்டு அப்படியே தலையில நங்குனு கொட்ட மாட்டாங்களே? சூடு துடப்பத்தால அடிக்க மாட்டாங்க தானே? வெளிப்பார்வைக்கு படினு சொல்லிட்டு புத்தகத்தை எரிச்சாங்க சித்தி. இப்ப படிப்பு தான் போச்சு. பச்... படிச்சாலும் பன்னிரெண்டாவது முடிச்சிருப்பேன். நான் என்ன காலேஜிக்கா போவேன். அதுக்கு படிக்க வைக்க தான் அப்பாவிடம் காசு இருக்கா. அப்படியே இருந்தாலும் இவங்க படிக்க விட்டிருக்க மாட்டாங்க.

வீட்டு வேலை பார்த்தும் அடிக்கடி திட்டி அடிச்சு, தலைவலியே வந்துடுச்சு அத்தை. நேரத்துக்கு சாப்பிடாம வயிற்று வலி வந்துச்சு அத்தை. இனியாவது ஏச்சும் பேச்சும் இல்லாம இருக்கணும்." என்றவளிடம் காயத்ரி தலைகோதிவிட்டாள்.

"அத்தையும் மாமாவும் இன்னிக்கு ஊருக்கு கிளம்பிடுவோம். இத்தோட இங்க வர்றது எப்பனு தெரியாது.
ஊருக்கு வந்தா... உன்னை பார்க்க உங்க மாமா வருவார். வீட்டு வேலை அங்க எப்படியிருக்குமோ? ஆனா இது கிராமம் மலரு. இங்க வீட்டு வேலைக்கு பஞ்சமிருக்காது. ஆடுமாடு தோப்பு துறவுனு பார்க்கவே சரியா இருக்கும்.
உனக்கு இங்க சித்திக்காரி மாதிரி உங்கத்தைகாரி இருந்தாலும் ஆச்சரியப்படுவதுக்கு இல்லை. இல்லை... நல்லாவும் பார்த்துக்கலாம் ஆனா பிறந்த வீட்ல இருந்த வாழ்க்கையில் இருந்து, இந்த வாழ்க்கைக்கு கடந்த மாதிரி, இன்னொரு வாழ்க்கைக்கு ஓடி தப்பிக்க முடியாது. எந்த வாழ்க்கையா இருந்தாலும் நீ தான் போராடணும்." என்று கூற, தவமலருக்கு புரிந்தது.

"சரி.. நேத்து எப்படி? சந்தோஷமா இருந்தியா?" என்று பேச்சை மாற்றினார். முதல் நாளே ஏன் புகுந்த வீட்டை பற்றி பயமுறுத்தி பேச வேண்டுமென.

ஆனால் தவமலருக்கு இந்த பேச்சு தான் பயத்தை தந்தது.

சந்தோஷமா.. பயமாக இருந்தது என்று கூறினால் தவறாகுமோ?! என்று மௌனமானாள்.
அதை வெட்கமென்று பட்டியலில் சேர்த்து கொண்டார்.

"சரி சரி.. உன்ற துணிமணி, உனக்கு வாங்கின பாத்திர பண்டம் எல்லாம் இருக்கு. அதையெல்லாம் ஏறக்கட்டணும். மதியம் சாப்பிட்டு நீ கிளம்பறப்பவே நாங்களும் கிளம்பணும். நைட்டு டிரெயின் பிடிக்கணும். உனக்கு ஏதாவது வேண்டுமின்னா கேளு. மாமா உடனே வாங்கிட்டு வந்துட முடியுமானுபார்க்கறோம்." என்று எழுப்பினார்.

ஏதோ சக்திக்கு முடிந்தளவு சில பாத்திரங்கள் வாங்கி பெட்டி கட்டினார்கள்.

சாமுண்டிஸ்வரி எட்டிபார்த்துக் கொண்டார். மகனுக்கு இன்னும் கூட நல்ல இடம் பார்த்திருக்கலாம். இப்படி புகுந்த வீட்டில் மாமியார்காரி பட்டும் படாமலும் தான் விருந்துக்கு வரவேற்று நிற்பாளென ஆருடம் பார்த்ததில்லையே.
ஏனோ ராசாத்தியை சாமுண்டிஸ்வரிக்கு துளியும் பிடிக்கவில்லை.

மதியம் போல ஆவுடையப்பன் தான் பரிமாறினார். மாப்பிள்ளை மாப்பிள்ளை என்று வாய் நிறைய அழைத்து பேசினார்.
சபை நடுவே தீபாவளிக்கு நகை போடுவதாக உரைத்தார். அதை கேட்டு சாமுண்டிஸ்வரி அமைதியாக வந்தார்.

ஆட்டுக்கறி நாட்டுக்கோழி என்று பரிமாறி சாப்பிட்டனர். அவ்வளவு தான். மற்றபடி இயல்பாக உரையாட அங்கே வார்த்தைகளுக்கு பஞ்சமிருந்தது.

லதா சுரேஷ் இருவரும் பள்ளியிலிருந்து வந்ததும் பார்த்துவிட்டு செல்லலாமென தவமலர் காத்திருக்க, சாமுண்டிஸ்வரி தான் "ஆஹ்.. உன் அம்மா வயித்துல பிறந்தவங்க பாரு. தங்கச்சி தம்பினு. நேரத்துக்கு வீட்டுக்கு புறப்படு" என்று அதட்டவும் தவமலர் சரியென்று கேட்டுக் கொண்டாள்.

அவள் இனி அப்படி தான் கேட்க வேண்டும்.

அரசு பேருந்தில் கதிரவனுடன் அமர்ந்து தவமலர் வரவும், பேருந்து பயணம் அவனுக்கு சுவாரசியமாக இருந்தது.

புதுமனைவியை உரசியபடி கையை தீண்ட முயல, அவளோ நகர்ந்தபடி இருந்தாள்.

சாமுண்டிஸ்வரி பின்னிருக்கையில் அமர்ந்து கவனித்தார்.

வீட்டுக்கு வரும் பொழுதே பொழுதுசாய்ந்தது. கோழிகள் அதனது இடத்தில் நின்று கொண்டே உறங்கியது. ஆடுளும் மாடும் ஏற்கனவே கட்டி போட்டு தீவனம் போட்டு வைத்தே சென்றிருந்தனர்.
நாய் மட்டும் குரைத்தது. அதுவும் உரிமையானர்கள் தான் வருகின்றார்கள்‌ என்று அறிந்ததும் கதிரவன் மீது பாய்ந்து நெஞ்சில் கால் வைத்து நன்றியை காட்டியது.

பக்கத்தில் வந்த தவமலர் நாய் ஓடிவந்த தினுசில், கதிரவன் கையை பிடித்து முதுகு பின்னால் ஒட்டி நிற்க, கதிரவனுக்கு ஜிவ்வென்று இருந்தது.

வீட்டுக்கதவை திறந்து உள்ளே நுழைய, மின்விளக்கை போடவும், "ஏன்டா... அங்க என்ன கண்ணை மூடி நிற்கற. உள்ள வா" என்று கண்ணன் கூறவும் தான் தவமலர் அருகே இல்லை என்பதை தாமதமாக உணர்ந்து தலையை சொரிந்து உள்ளாற வந்தான்.

வரும் வழியில் பரோட்டாவை வாங்கி வந்திருக்க அதை சாப்பிட்டு ஆளாளுக்கு படுக்க சென்றனர்.

தவமலர் பாத்திரம் விளக்க, கண்ணன்  உள்வராண்டாவில் இருந்த கயிற்று கட்டிலில் படுக்க, அதற்கு கீழே சற்று தள்ளி, பாயை விரித்து சாமுண்டிஸ்வரி படுக்க தயாரானார்.‌

கதிரவன் அறைக்குள் இருந்து எட்டியெட்டி பார்வையிட, தவமலர் கையை கழுவி, சேலையில் துடைத்து, "அத்தை பாத்திரம் கழுவி கவுத்திட்டேன்" என்று கூற, "நல்லது போய் தூங்கு" என்று கூறிட அறையை கவனித்தாள்.

மெதுவாக நடந்து உள்ளே வரவும் கதிரவன் அணைத்திட, தவமலர் பதற, "ஏய்... என்ன பார்த்து பார்த்து மிரளற." என்று கேட்க, ஒன்னுமில்லை என்று தலையாட்டினாள்.

"எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு தெரியுமா. நீ பக்கத்துல வந்தா ஜிவ்வுனு இருக்கு. உன்னை கட்டிக்கிட்டே இருக்கணும்னு தோணுது. உனக்கு என்னை பிடிச்சிருக்கு தானே?" என்று கேட்க, தலையை ஆட்டினாள்.

அதற்கு பிறகு பேச்சுக்கு வேலை இல்லை.

அடுத்த நாள் எழுந்ததும் தினசரி வேலைகளை இழுத்து போட்டு செய்தாள்.
காலையில் கீளித்து முடித்து சாமுண்டிஸ்வரியிடம் டீயை வாங்கி குடித்து பாத்திரம் விளக்கி துணியை துவைத்தாள்‌.

சாமுண்டிஸ்வரி ஆடு மாடு கட்டி வைத்த இடத்தில் சுத்தம் செய்வதை கண்டாள்.
அடுத்து அதையும் செய்தாள். கொஞ்சம் சமையல் செய்யும் போது காய்கறி நறுக்கி தந்தாள்.

கதிரவன் துரத்திலிருந்து பார்த்து தவமலரை ரசிக்க, அடிக்கடி பார்வை அவள் மீது பதிந்தது.
விவாசாயம் என்பதால் அதுவும் வீட்டுக்கு பக்கத்தில் தான் நெல்லும் சோளக்கதிரும் போட்டிருந்தான்.

இதில் அடிக்கடி டவுனுக்கு மட்டும் ஏதேனும் வாங்க விற்க சந்தைக்கு ஓடுவான்.
மாட்டுக்கு தீவனம், பயிருக்கு பூச்சிகொல்லி மருந்து என்று சென்று வருவான். நடுநடுவே தவமலருக்கு ஏதாவது வளையல், பூ, திண்பண்டம் என்று கொடுக்க, வெட்கத்துடன் வாங்கி கொண்டாள்.
இந்த இடைப்பட்ட காலத்தில் அவனது மோகத்தை மட்டும் பார்த்தவளுக்கு, இப்த சிறுசிறு அன்பளிப்பும் காதலாக நேசமாக உணர்ந்தாள்.

தவமலருக்கு கதிரவனை பிடித்திருந்தது. ஒரு  பெண்ணின் மனதை வெல்வதற்கு, சினிமா பாணியில் காதல் வசனங்களை பேச வேண்டியதில்லை. அவளுக்காக பராகரங்கள் எதுவும் நிகழ்த்த வேண்டாம். ஏன் தவமலரின் மனதில் அவளுக்குள்ள பாரத்தை கூட இறக்கி வைக்க தோள் தரவில்லை‌ அவன்.

ஆனாலும் தவமலரை எதற்கும் கட்டாயப்படுத்தவில்லை, அதட்டவில்லை, இதை செய்யாத அதை செய்யாத என்று ஆண்மகனென்று ஆரம்பிக்கவில்லை‌.

ஒரு பெண்ணை காதலும் காமத்துடனும் உண்மையாக நேசிக்க பின்னால் சுற்றினான். அவ்வளவே. அந்த உண்மை இருந்தாலே பெண் மனதை ஜெயிக்கலாம்.

சாமுண்டிஸ்வரிக்கு தவமலர் மாஞ்சி மாஞ்சி வேலை செய்வதில் மனதிற்கு பிடித்திருந்தது‌. ஆனால் அதற்காக தலையில் தூக்கி வைக்கவில்லை. மாமனார் கூட அவருண்டு வேலையுண்டு என்று இருந்தார்.

தவமலருக்கு அங்கிருக்கும் ஆடுமாடு, கோழியை கொஞ்சிக்கொண்டு பால் கறந்து அவ்விடத்தை சுத்தம் செய்வதிலும் நேரம் சரியாக இருந்தது. முதலில் பார்த்து பயந்த நாய் கூட அவளுக்கு செல்லப்பிள்ளையாக மாறியது.

வாழ்க்கை சுபமாக சென்று கொண்டிருந்த சமயம் தீபாவளி வந்தது. ஆவுடையப்பன் மகளை காண வந்து மாப்பிள்ளையை தீபாவளிக்கு அழைக்க வந்தார். ஸ்வீட்டும் பழமும் வாங்கி கொண்டு வந்து நின்றவருக்கு, தவமலர் டீ வடை போட்டு உபசரித்து தம்பி தங்கையை விசாரித்தாள். ராசத்தியையும் கூட...

சாமுண்டிஸ்வரி கண்ணன் சற்று சம்பந்தி என்று பேசிவிட்டு நகர்ந்தப்பின், தவமலரை பார்வையிட்டார்.

மகள் முன்பை விட முகத்தில் தெளிவாக இருப்பதை கவனித்தார்.

ராசாத்தி தினமும் வீட்டில் வேலை செய்யும் பொழுது எல்லாம், 'சிறுக்கி வேலைக்கு பயந்து கல்யாணம் கட்டிட்டு ஓடிட்டா. இப்ப எல்லா வேலையும் பார்க்கவே இடுப்பு எலும்பு உடையுது" என்று புலம்ப, இத்தனை நாட்கள் தன் மகள் எத்தனை வேலை செய்தாளோ என்று எண்ணாமல் இல்லை. ராசாத்தியை முன்பு கடிந்து பேசி பழகாததால் அப்படியே காது கேளாதவர் போல இருந்துக் கொள்வார்.

"நீ எப்படிம்மா... இருக்க?" என்று கேட்க, "நல்லாயிருக்கேன் அப்பா." என்றாள்.‌

"இரண்டு மாசமா நீ இல்லாம வீடே வெறிச்சோடி கிடக்கு" என்றார்.

தவமலர் மெதுவாக நிமிர்ந்து, "எனக்கு கல்யாணம் பண்ணி வையுங்கனு சிவநேசன் மாமாவிடம் நானா போய் நின்னேன். ஆனா அது சித்தி ஏவுற வேலை செய்ய பயந்துட்டோ இல்லை அது அசிங்கமா திட்டுதுன்னோ இல்லைப்பா. என் அம்மாவை நீயே கொன்னுட்டதை எப்ப எனக்கு தெரியுமோ அப்பவே அந்த வீட்ல இருந்து எங்கயாவது போயிடணும்னு யோசித்து தான் கல்யாணம் பண்ணிக்க வாய்விட்டு கேட்டேன்." என்று கூற ஆவுடையப்பன் திகிலாக மகளை பார்வையிட்டார்.

-தொடரும்.

https://onlinetamilnovels.com/%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%87-5/

மையலிட்ட சிற்பமே-4
அத்தியாயம்-4

இரவில் மின்விளக்கு அணைந்தப்பின், நடந்து முடிந்த கூடலில் தவமலரின் மிரட்சி நடுக்கம், வலி, பயம், போன்ற எந்த உணர்வும் கதிரவன் அறியவில்லை. உடல்மொழியில் அவள் நடுக்கத்தை கூட முதல் கூடலில் வந்த வெட்கத்திற்குரியதாக எடுத்துக்கொண்டான்.

தவமலரும் கத்தி அழுது சத்தமிடவில்லை. அவளிடம் காயத்ரி சொல்லி சென்ற காரணத்தாலும், சில படத்தின் காட்சி அமைப்பில் ஏதோ புத்திக்கு இந்த நேரம் அவ்விடத்தில் எதிர்வினையாக மறுப்பு தெரிவிக்க தெரியாமல் போனாள்.
உண்மையில் ஒரு குழந்தையை அறைக்கு சென்று முத்தம் வைத்து அத்துமீறினால் அக்குழந்தையால் எவ்விதமாக அமைதிக்காத்து விழிக்கும அந்த நிலையில் தவமலர் இருந்தாள்.
நள்ளிரவு இருட்டில் கதிரவனுக்கு தேடல்கள் முடிவடைந்து ஓய்வில் உறக்கத்தில் சென்றியிருந்தான். தவமலருமே அசதியில் உறங்கிவிட்டாள்.

அடுத்த நாள் அறையின் மெற்பரப்பில் இருந்த சிறு ஜன்னல் மூலமாக வெளிச்சம் அறையை நிறைக்க, எழுந்தபோது தேகம் வலியெடுக்க, தன்னிலையை கண்டவளுக்கு பகீரென்றது.

சேலை களைந்து காணாமல் போக, அதை உதடு கடித்து தேடினாள்.

நேற்றே காயத்ரி எழுந்ததும் குளித்து முடித்து இருக்க கூறி உடையை தந்து சென்றியிருக்க, சேலையை எடுத்து கட்ட துவங்கினாள்.
இதே தாவணி என்றால் நொடியில் கட்டிடும் தவமலர். இந்த சேலை, அதுவும் இந்த உடல் அசதியில் நடுக்கத்துடன் கட்ட துவங்கி ஏனோதானோ என்று சொருகி மேலே போர்த்திக்கொண்டாள்.

கதிரவன் இன்னமும் உறங்குவதை கண்டதும், கதவை திறந்து வெளியே கொக்கை போல தலைநீட்டி பார்த்தாள்.

குழியலறை வாசலுக்கு பக்கமாக அஞுப்பில் வெந்நீர் சூடாக, அங்கே கரிமை கொண்டு சாமுண்டிஸ்வரி பல்லை தேய்த்தார்.

தவமலரை கண்டதும், "எந்திரிக்க இம்புட்டு நேரமா? வெந்நீர் போட்டுயிருக்கு போய் குளிச்சிட்டு வா" என்றார்.

தவமலர் தலையாட்டி நடந்து செல்ல, அவளை சாமுண்டிஸ்வரி கூர்ந்து நோக்கினார்.

அவசரமாய் யாராவது பார்த்திடுவாரோ என்று குளியலறைக்கு ஓடினாள்‌. சாமுண்டிஸ்வரி வெந்நீரை கொண்டு வந்து ஊற்ற கதவை திறந்தார்.

தவமலரோ நடுக்கத்துடன் வலியை தாங்கியது தெரிய, "வெந்நீர்ல குளி உடம்பு வலி போகும்." என்று செல்ல, கதவை தாழிட்டாள்.

தவமலருக்கு அழுகை உடைப்பெடுத்தது. குளித்து முடித்து அங்கேயே சேலை கட்டவும் முடியாது தடுமாறினாள்.

"ஏன்டி எம்புட்டு நேரம் குளிப்ப?" என்று சாமுண்டிஸ்வரி குரலில், "சேலை கட்டிட்டு இருக்கேன் அத்தை. நழுவிட்டே இருக்கு" என்று குரல் கொடுத்தாள்.

"அந்த ஈரத்துல என்னத்தை கட்டுவ. மேல போர்த்திட்டு உள்ளறைக்கு போய் கட்டு" என்று கூறவும் சேலையை போர்த்தி கதவை திறந்தாள்.

வேகமாக அறைக்கு வந்ததும், மீண்டும் தடுமாற்றம். சேலை கட்ட முடியாது தடுமாற, கதிரவன் அதற்குள் எழுந்து அவளை பின்னாலிருந்து அணைக்கும் நோக்கத்துடன் பூனை நடையிட்டு வந்து இடையை கட்டிக்கொள்ள, சேலையை நழுவவிட்டு, "அம்மா" என்று கத்தினாள்.

"ஏய்... மலரு நான் தான்" என்று கதிரவன் கூற, "அங்க என்னடி சத்தம். இன்னுமா சேலை கட்டற?" என்று கத்தவும், "அய்யோ அம்மா வெளிய தான் நிக்குது" என்று கதிரவன் வேஷ்டியை சரியாக அணிந்து வெளியேற முனைந்தான்.

கதிரவன் சென்றதும், சாமுண்டிஸவரி உள்ளே நுழைய, கீழே நழுவிய சேலையை எடுத்து கட்ட முடியாது விழித்தவளை, "கொண்டா.... சேலை கூட கட்ட தெரியலையா?" என்று சாமுண்டிஸ்வரியே சேலை கட்ட உதவினார்.

மாமியாரை கண்டு பயந்தாலும், சேலை கட்டும் லாவகத்தை கவனித்தாள்.

சாமுண்டிஸ்வரியும் சேலை கட்ட உதவுவது போலவே, மருமகள் மேனியை கூர்ந்திட, மாநிறமென்றாலும் ஆங்காங்கே ரத்தகட்டாக தடயத்தை கண்டதும் நிம்மதியானார்.

அவருக்கு வம்ச விருத்தி தான் முதன்மையானது. சின்ன பெண்ணின் நிலையை மனதை அவர் ஏன் அறியப்போகின்றார்.

"இட்லி அவிச்சு வச்சியிருக்கு. நாட்டுக்கோழி குழம்பும் செஞ்சாச்சு. தலையை காயவச்சி வாறிட்டு வா. டீ யும் இருக்கு. உங்க அப்பன் வீட்டுக்கு மதியத்துக்கு போகணும்ல" என்று கூறிவிட்டு சென்றார்.

எல்லாவற்றிற்கும் தலையாட்டிக் கொண்டாள். அவர்கள் சென்றதும் லேசாக முகத்துக்கு பவுடர் பூசி பொட்டு வைத்தாள்.
தலை கூட துண்டால் துடைத்து காயவைத்தபடி, இருக்க கதிரவன் மீண்டும் வந்து சிரித்தான்.

தவமலரை கட்டிப்பிடித்து கழுத்தில் மஞ்சள் வாசத்தை நுகர, கண்ணாடியில் நடுக்கமாய் உதடு தந்தியடிப்பதை கண்டான்.

''எதுக்கு மிரண்டுட்டு இருக்க? எனக்கு உன்னை கட்டிக்கிட்டே இருக்கணும்னு தோணுது." என்று அவனது நிலையை மட்டும் விளக்கினான்.
அவளது நிலையை அவன் கவனிக்கவில்லை. அப்படியொன்று யோசிக்கவும் அவன் அறிவுக்கு தெரியவில்லை.

"அ..அத்தை. டீ குடிக்க வரச்சொன்னாங்க. ஏற்கனவே சேலை கட்ட லேட்டாகுதுனு சொன்னாங்க அப்பா வீட்டுக்கு வேற போகணும்." என்றதும், "ஆமா ஆமா இந்த அம்மைக்கு கூரேயில்லை. நீ போ. நான் குளிச்சிட்டு ரெடியாகறேன்" என்று கன்னத்தில் முத்தமிட்டான்.

தவமலர் விட்டால் போதுமென்று வராண்டாவுக்கு வந்தாள்.
அங்கேகருப்பட்டி போட்டு சூடாக டீ இருக்க, வாங்கி குடித்தாள்.

"டீ நல்லாயிருக்கா?" என்று சாமுண்டிஸ்வரி கேட்க, தலையாட்டினாள்.

"பால் நம்ம மாட்டுல கரந்தது." என்று விளக்கம் தர, நல்லாயிருக்கு அத்தை" என்றாள்.

"விரசா... பாலை கறக்க கத்துக்கோ. நாளைப்பிறவு நீ தான் கறக்கணும்" என்று இடியை இறக்க, அதற்கும் மறுக்காமல் தலையாட்டினாள்.

சற்று திகிலுடன் அங்கே கட்டியிருந்த மாட்டை வேடிக்கை பார்த்தாள்.
எல்லா மாடும், கொம்பு கூர்மையாக இருக்க, துள்ளலாய் நின்றது. பார்க்கவே குத்தி கிழித்திடுவேன் என்ற ரகத்தில் இருக்க, டீயை விழுங்கி பார்வையிட்டாள்.

"அம்மோவ்... எனக்கு டீ" என்று கதிரவன் வந்தான். தலையை சரியாக துவட்டாமல் உடலில் ஈரம் வைரமாய் தோளில் நெஞ்சில் வீற்றிருக்க, இடுப்பில் லுங்கி மட்டும் அணிந்திருந்தான்.

"ஏன்டா... தலையை துவட்டமாட்ட" என்று எழுந்து வந்தவர் டீயை அவன் கையில் திணித்து, சேலை முந்தாணையில் தலையை துவட்டியும் விட்டார்.

அதை தவமலர் கண்டு அம்மாவின் அன்பை கவனித்து ஏக்கமாய் பார்வையிட, கதிரவனோ கிடைத்த தருணத்தில் கண்சிமிட்டி, அவளை நத்தை ஓட்டுக்குள் அஞைப்பது போல குறுக வைத்தான்.‌

டீயை குடித்துவிட்டு, அங்கிருந்த பாத்திரத்தை பார்த்தாள். சாமுண்டிஸ்வரி ஏள்கனவே இட்லி குழம்பு செய்ததால் அங்கே பாத்திரம் விளக்க நிறைந்திருந்தது.

ஏற்கனவே இந்த வேலையெல்லாம் தவமலருக்கு கை வந்த கலை என்பதால், சேலையை தூக்கி சொருகி பாத்திரம் விளக்கினாள்.

சாமுண்டிஸ்வரி தடுக்கவில்லை, மடமடவென பாத்திரம் விளக்கியவளை கண்டு மனதிற்குள் மெச்சிக்கொண்டார்.

கண்ணன் அவசரமாய் வந்தவர், "ஏம்மா... நீ ஏன் பாத்திரத்தை விளக்குற?" என்று கேட்டுவிட்டு மனைவியிடம், "ஏன்டி கல்யாணமான அடுத்த நாளே பாத்திரத்தை தேய்க்க விட்டுட்ட" என்று கேட்டார்.

"மாமா.. அத்தை எதுவும் சொல்லலை. நானா தான் சும்மா இருக்கேனேனு விளக்கினேன்." என்று கூறினாள்.

"இப்ப என்ன தேய்ச்சா... நாளைபிறவு அவ தானே எல்லாம் செய்யணும். செய்யட்டுமே... வந்து இட்லியை வயித்துக்கு பிச்சி போடுங்க" என்றார்.‌

மருமகளை கண்டு, சாப்பிட சென்றார்.
"நேத்து வந்தவளுக்கு இன்னிக்கே சாதகமா பேசறிங்க. இத்தனைக்கும் போடறதா சொன்ன நகை நட்டு கூட போடலை. தாய்மாமன் போட்ட இரண்டு சவரன் நகயை வச்சிட்டு கைவீசி அனுப்பிட்டாங்க. இப்ப வேலை செய்தா தான் என்னவாம்" என்று இட்லியை பரிமாறியபடி அப்படியே சப்பணமிட்டு அமர்ந்தார்.

கதிரவனையும் உட்கார கூற, புதுமனைவியுடன் அமர்ந்து சாப்பிட ஆசைப்பட்டவனோ அவளை கண்டு சங்கடமாய் அம்மா சொன்னதற்காக தந்தையோடு அமர்ந்தான்.

கண்கள் மட்டும் மனைவியை தேடியது. அன்னையிடம் பேசி யார் திட்டு வாங்குவது.

"ஏன்டா... இன்னிக்கு மறுவீட்டுக்கு போயிட்டு தங்கலாம் வேண்டாம். வீட்டுக்கு வந்து சேரு. இவ சித்திக்காரி சமைச்சி நீ ஒன்னும் தகங்க வேண்டாம். ஏன் தங்கலைனு கேட்டா... முதல்ல எட்டு சவரன் நகையை போட்டா தான் அடுத்து வீட்ல கை நனைப்பேன்னு கறாரா சொல்லிடு." என்றார். கதிரவன் பதிலாக தலைகூட அசைக்கவில்லை.

"என்னடா... புரிதா?" என்று அதட்டவும் "சரிம்மா." என்று கடுப்பாய் மொழிந்தான்.

"தங்கம் விக்கற விலைக்கு அவஅவ கிலோ கனக்குல வரதட்சனை தர்றாளுங்க. சரி நம்மளும் அந்தளவு வசதியில்லை. படிப்பில்லைனு தான் பத்து சவரனாவது போடறாங்கனு தலையாட்டினோம். இப்ப வெறும் கையோட அனுப்பினா என்ன அர்த்தம். சித்திக்காரி தரலைன்னா அப்பனுக்கு எங்க போச்சு புத்தி. மக வாழணுமா வேண்டாமானு யோசிக்கலை. அப்ப கை நனைக்காம வர்றது தானே சரி" என்று பேசவும், பாத்திரம் வகளக்கிய தவமலர் காதில் வாங்கினாலும் பாத்திரத்தே தேய்த்து கழுவி, குடையில் கவுத்தி, கையை சேலையில் துடைத்து, அப்படியே கதிரவன் உடையையும் இவளது உடையையும் துவைத்து உதறி காயப்போட்டிருந்தாள்.

உள்வராண்டாவிற்கு வரவும் மாமனாரும் கணவரும் சாப்பிடுவதை கண்டவள், "ஏதாவது வேலையிருக்கா அத்தை" என்று கேட்டு நின்றாள்.

"ஆஹ்.. உன் புருஷன் பக்கத்துல உட்காரு சாப்பிடு" என்று கூறினார்.

கதிரவனுக்கு வாயெல்லாம் பல்லாக, தவமலரோ அமர்ந்தாள்‌.

"துணிகூட துவைச்சிட்ட போல" என்று கேட்க, "ஆமா அத்தை கையோட வேலையை முடிச்சிடலாம்னு" என்றாள்.

கதிரவனுக்கு வயிறு நிரம்பிவிட்டாலும், மனைவியோடு சாப்பிட ஆசைப்பட்டதால் சும்மாவே ஒரு இட்லியை வைத்து அவ்விடத்திலேயே இருந்தான்.

"சமைக்க தெரியுமா?" என்று கேட்க, "தெரியும் அத்தை. சோறு வடிச்சிடுவோன். குழம்பு கூட வைப்பேன். ஆனா உங்க அளவுக்கு வராது. முதல் முதல்ல சோறு வடிக்கறப்ப கையில ஊத்திக்கிட்டேன். இந்த தழும்பு அப்படி தான் வந்துச்சு" என்று சுட்டிக் காட்டினாள்.

கதிரவன் வாயுக்கு கொண்டு போன இட்லியை அப்படியே வைத்து பார்வையிட்டான்.

தவமலரின் மென்கரத்தில் உற்று பார்த்தால் அந்த தழும்பு தெரிந்தது.

"உனக்கு சமைக்க சொல்லி தர அவசியமில்ல. நல்லது... ஏன்னா... எனக்கும் மேலுக்கு முடியலைனு தான் கதிரவனுக்கு உன்னை கட்டி வச்சது. வீட்டு வேலையும் சமையலும் கத்துக்கிட்டு வந்தது நல்லதுக்கு தான்." என்று கறியை அள்ளி அவள் தட்டில் நிறைத்தார்.

தவமலர் திடுக்கிட்டு சாமுண்டிஸ்வரியை பார்த்தாள்.

"என்ன?" என்று அதட்டலாய் கேட்டார்.

"இல்லை... என் தட்டுல இம்புட்டு கறியை இன்னிக்கு தான் பார்க்கறேன். எப்பவும் கடைசியா சாப்பிடுவேன். ஆனா கறித்துண்டு காலியாகியிருக்கும். இப்பவும் கடைசியா தான் சாப்பிட வந்தேன். ஆனாலும் கறியை அள்ளி வச்சியிருக்கிங்களா... எனக்கு ஆச்சரியமா இருக்கு." என்று கூறினாள்.

சாமுண்டிஸ்வரி புருவம் சுருங்க பார்வையிட, கதிரவனோ மனைவியை அணைத்துக் கொள்ள ஆறுதல் கூற துடித்தான்.

அன்னை எதிரில் பேசவே பயமாக இருக்க, மௌனமானான்.
சாமுண்டிஸ்வரியோ "உன் வயிற்றுக்கு என்ன தேவையோ அதுக்கு ஏத்த அளவு நீ எப்பவும் சாப்பிடு. சாப்பிட்டா தான் வீட்டு வேலையை பார்க்க முடியும். சும்மா.. குருவி கொத்தி சாப்பிட்டு வேலை செய்ய முடியாம இருக்க கூடாது‌. அதே போல உனக்கு பிடிச்சதையும் செய்து சாப்பிடு. இப்படி ஒடிசலா இருந்தா புள்ள பெத்துக்க முடியாது." என்று சாப்பிட்டு அவரும் கையை கழுவி ஒரு செம்பு தண்ணீரை தொண்டையில் நிறைத்து கீழே வைத்தார்.

சாமுண்டிஸ்வரி சென்றதும் கதிரவன் தவமலரின் கையை பிடித்து, அவளதே தழும்பை பார்வையிட்டு, "எப்ப இப்படி ஆச்சு?" என்று கேட்டான்.

"ஐந்தாவது படிக்கறப்ப" என்றாள். அவனுக்கு திகைப்பு, ஐந்தாவது என்றால் பத்து வயசு இருக்குமே. அப்பொழுதே சாதம் வடிக்க விட்டதை எண்ணி துடித்தான்.

"எங்க அம்மை சொன்ன மாதிரி நல்லா சாப்பிடு. சுருக்குனு ஏதாவது பேசுமே தவிர, சாப்பிடறதுக்கு எல்லாம் கணக்கு பார்க்காது." என்றான்.

கதிரவனின் நேற்றைய ஆளுமையில், தீண்டலில், இப்பொழுதும் திடுக்கிட்டு பயந்தவள், அவன் பேசியதை கேட்டு நிம்மதியானாள். அந்த நேரம் அவன் தீண்டல் கூட மயிலிறகாக வருட, அவன் கையில் இட்லியும் கறியும் எடுத்து அவளுக்கு ஊட்டிவிட, 'ஆ'வாங்கி கொண்டாள்.

கதிரவனோ கூடுதலாக அவளது கன்னத்தில் உதட்டை ஒற்றி எடுத்து ஓடினான்.

இந்த வீட்டில் இனி தனது வாழ்வு எப்படி? என்று கூட சிந்திக்காமல் கதிரவனின் சிறு முத்தம் நேற்றைய கூடலை விட இதத்தை தந்தது என்னவோ உண்மை.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

https://onlinetamilnovels.com/%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%87-4/

மையலிட்ட சிற்பமே-3
அத்தியாயம்-3

கல்யாணம் இனிதே முடிவடைந்த தருணத்தில், கல்யாண சாப்பாடு வேறு பந்தியில் பரிமாறப்பட்டது. கதிரவன் தவமலர் இருவரையும் அமர வைத்து தலைவாழை இலையில் தண்ணீர் தெளித்து, முதலில் இனிப்பை வைக்கும் விதமாக ஜாங்கிரி. அத்துடன் கல்யாண சாப்பாடு பரிமாறப்பட்டதும், மணமானவர்களை ஊட்டி விட வைத்து போட்டோவும் எடுக்கப்பட்டது.

ஒரு குழந்தைக்கு பள்ளிக்கு செல்லும் போது முதல் முறை தயக்கமான மனநிலையில் செல்ல, அங்கிருக்கும் ஆசிரியர் இனிப்பை தந்து வகுப்பில் அழைத்து செல்வது போல தான் தவமலருக்கு இனிப்பு ஊட்டப்பட்டது.

கதிரவன் இனிப்பை ஊட்டும் போது தான் 'என்ன இந்த பிள்ளை சின்னகுழந்தையாட்டும் இருக்கு. அவசரப்பட்டுட்டோமோ' என்று தற்போது தான் மிக நெருக்கத்தில் அவளை கண்டான்.

அவன் வீட்டின் தாழ்வாரத்தில் பழைய புகைப்படம் இருக்கும். அதில் தன் அன்னை தந்தையோடு இப்படி தான் சேலை கட்டி நின்றிருப்பார்.
அவனுக்கு அது நினைவு வரவும் தான் சற்று தெளிந்தான். ஆனாலும் பதினெட்டு வயசு முடியலை என்ற உறுத்தலும் அவனுக்கு இருந்தது.

எப்படியோ போலீஸ் எதுவும் இல்லாமல் அவன் திருமணம் நல்லபடியாக நிகழ்ந்ததில் அவனுக்கு முறுவலே உதிர்த்தது.

அது கிராமம் என்பதாலும், உறவுகள் தத்தமது வேலையில் முழ்கினார்கள்.

சிவநேசனுக்கும் காயத்ரிக்கும் தான்  கதிரவனின் தந்தை கண்ணன் சாமுண்டிஸ்வரியிடம் நகையை தீபாவளிக்குள் போடுவதாக எடுத்து சொல்லி சமாதானம் செய்தார்கள்.

அன்றைய பொழுது மதியம் தாண்ட சத்திரத்தில் இருந்து மாலை கதிரவன் வீட்டுக்கு டிராக்டர் வண்டியில் தான் மணமக்களை அழைத்து வந்தனர்.

அதே டிராக்டரில் தான் தவமலரின் அப்பா, சித்தி, தம்பி, தங்கை, சிவநேசன், காயத்ரி என்று வந்தனர். வீட்டுக்கு வந்து நின்றதும் ராசாத்தி இடத்தை கண்டு வாயை பிளந்தாள்.

வீடு ஒன்றும் அப்படியொன்றும் அரண்மனை பேன்றதல்ல, ஓட்டு வீட்டில் ஒரு அறை, பெரிய கூடம், சற்று விசாலமான உள்வராண்டா, சமையல் பகுதி என்று தான் இருந்தது.

குளியலறை கூட வீட்டுக்கு வெளியே தான் கட்டி வைத்திருந்தனர்.

ஆனால் சுற்றியுள்ள இடம், ஆட்டுக்குட்டி வளர்ப்பு என்று பத்து பதினைந்து ஆட்டையும் இரண்டு மாடும் அங்கே கட்டியிருக்க, கூடுதலாக கோழிகள் அங்கொன்றும் இங்கொன்றும் மேய்ந்திருக்க கண்டார்.

ராசாத்தியோ, "ம்கூம்... உன் மகளுக்கு இதெல்லாம் தேவை தான். முன்ன நம்ம வீட்டுக்குள்ளயே பாத்ரும் இருக்கும்.   ஆனா இங்க பாரு... வெளிய தான் பாத்ரூமே கட்டி வச்சியிருக்காங்க. அங்க வேலை எல்லாம் வீட்டுக்குள்ள பாத்திரம் தேய்க்கவும், துணி துவைக்கவும் பொழுது போகும். இங்க பாரு... ஆட்டு மந்தை எம்புட்டு இருக்கு. இதுங்களை கட்டி மேய்க்கவும், இதுங்க அசுத்தம் செய்யற கழிவுகளையும், இடத்தை பெருக்கி கூட்டி அள்ளவும் உன் பொண்ணுக்கு வேலை சரியா இருக்கும்யா.

சிருக்கி மக வேலைக்கு பயந்து வெட்கங்கெட்டு கல்யாணம் பண்ணிக்கறதா பேசினா, இப்ப இடுப்பு எலும்பு உடையற வரை வேலை தான். என்னைக்காவது 'சித்தி புகுந்த வீட்ல வேலை செய்து மாளல, நான் இங்கயே கூழோ கஞ்சியோ குடிச்சிட்டு இருக்கட்டாமா'னு கண்ணை கசக்கிட்டு வருவா பாரு" என்று அழகான சாபத்தை திருமணமான அன்றும் கொடுத்தார்.

ஆவுடையப்பனோ "ஏன்டி... இப்ப உன் ஊத்த வாயை வச்சிட்டு‌ சும்மாயிருக்க மாட்ட. உனக்கென்ன.. அவ அவ பொழுப்பை பார்க்க கல்யாணம் செய்து அனுப்பியாச்சுல. வாயை மூடிட்டு கிட" என்று கண்டித்தார்.

என்னயிருந்தாலும் தவமலருக்கு அவர் தந்தை. அப்படியிருக்க, இதுபோன்ற பேச்சுக்கு கண்டித்தார். அந்த வகையில் போற்றலாம்.

இவர்கள் பேச்சு தவமலர் காதுக்கு எட்டவில்லை. அவள் பூஜை அறையில் விளக்கேற்ற கூறியிருக்க அங்கிருந்தாள்.

'சாமி... நானா தான் கண்ணாலம் பண்ணிக்க மாமாவிடம் நச்சரித்து இப்ப இந்த வீட்டுக்கு வந்திருக்கேன். எனக்கு கூழோ கஞ்சியோ எனக்கு மனசார உத்தினா போதும். யாரும் திட்டாம அடிக்காம இருந்தா கோடி புண்ணியம். என்னை ராசியில்லாதவ தண்டச்சோறுனு திட்டு வாங்க வச்சிடாத. எத்தனை வேலை இருந்தாலும் செஞ்சுடறேன். உனக்கு தினமும் விளக்கேத்தி நன்றி சொல்வேன்' என்று மனதிற்குள் கடவுளோடு அன்பான கோரிக்கையை வைத்தாள்.

கதிரவனோ இமை மூடி தன் வீட்டு குலதெய்வ சாமியிடம் என்ன வேண்டுவாளென்ற ஆர்வத்தோடு புதுமனைவியை ரசித்தான்.‌

கீழே விழுந்து வணங்கி எழுந்திடும் நேரம், காயத்ரி அத்தை கட்டியணைத்தார்.

எந்தவிதமான அறிவுரையும் வாழ்த்தும் சொல்ல முடியாத நிலை. ஆனால் வந்தவர்கள் ஒவ்வொருத்தராக பார்த்து சென்று வீடு நிறைந்தபடியிருக்க, மாலை ஆகவும் டீ காபி குடித்து, ஒவ்வொருத்தராய் புறப்படவும் ஆரம்பித்தனர்.

ஆவுடையப்பனும் நாளை மகள் தன் வீட்டுக்கு மறுவிருந்துக்கு வருவாளெனவும், இங்கே சாந்தி முகூர்த்தம் என்பதால் சொல்லி கொண்டு புறப்பட்டார். காயத்ரி சிவநேசன் கூட கதிரவன் பெற்றவர்களிடம் பேசிவிட்டு தவமலரிடம் 'நல்லபடியா நடந்துக்கோ... நாளைக்கு மறுவீட்டுக்கு வர்றப்ப மத்தது பேசலாம்" என்றார் காயத்ரி.

தவமலரை கதிரவன் வீட்டில் விட்டுவிட்டு தாய்மாமா சிவநேசன் காயத்ரி சென்றதும், பயந்தே போனாள்.

எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுங்க என்று திருமணம் செய்ய வாய் விட்டு கேட்டவளே, தனியாக இவ்வீட்டில் நின்றதும் அதிர்ந்தாள்.

கதிரவனும் அவன் அப்பா கண்ணனும் சற்று தொலைவில் இருக்க, சாமுண்டிஸ்வரி மருமகளை மேலும் கீழும் பார்த்தார்.

காயத்ரி ஏற்கனவே சாத்தி முகூர்த்த சேலை கட்டிவிட்டு சென்றதால், அலங்காரம் கூட செய்ய தேவையின்றி நின்றாள். ஆனால் திருமணத்திற்கு செய்த அலங்காரமே களையாமல் இருந்தது.

சாமுண்டிஸ்வரி குறுகுறுவென பார்வையிட, கண்களை மிதமாக உருட்டி பயந்தவளை கண்டு, "ம்கூம்.. காத்தடிச்சா பறந்துட மாதிரி இருக்க, சோள கொல்ல பொம்மை மாதிரி கையு. நிறமும் இல்லை...
சேலை மாராப்பு கூட ஒழுங்கா நிற்க மாட்டேங்குது. கூத்துல வேஷம் கட்டறாப்ள கொட்டாங்குச்சி வச்சிட்டு திரிவானுங்க. உனக்கு அப்படி தான் வைக்கணும் போல. இதுல நகையை வேற உன்ற சித்தி போடறதா சொல்லிட்டு முழுங்கிட்டா. இங்க பாருடி... உன்னிடம் வாரிசையாவது எதிர்பார்க்கறேன். அதாவது பெத்து போடு." என்று கூறிவிட்டு "அந்த அறைக்கு போ" என்று கை காட்டினார்.

தவமலருக்கு மாமியார் பேசியது புரிந்தும் புரியாமலும் மனதில் பதிவாக, அறைக்கு வந்தவள் தன் உருவத்தை அங்கிருந்த சதுர கண்ணாடியில் கவனித்தாள்.

கருப்புக்கும் மாநிறத்திற்கும் மத்தியில் உள்ள நிறம். அதனால் கதைகளில் வரும் சந்தன நிறத்தையோ, பால் வண்ண மேனி என்றோ இவளை நிச்சயம் வர்ணிக்க முடியாது.

கண்ணாடியில் தவமலருக்கு தான் ஒரு கருப்பி என்று பதிவானது.
இத்தனை நாள் உடலும், நிறமும் பெரிதாக கவனித்தது இல்லை. சொல்லப்போனால் கவனிக்கும் சூழலுக்கு அவள் எங்கே நிதானமாக இருந்தாள். வரிசைக்கட்டி பிரச்சனைகள் வேலைகள் சோகங்கள் நிற்க, தன்னையோ தன் நிறத்தையும் உடலையும் சரியாக கவனித்தது கிடையாது.

இன்று அதை சுட்டிகாட்டி மாமியார் பேச, தன் கைகளையும் நிறத்தையும் பார்த்தாள்.
கண்ணீர் வரவும், அதை துடைக்க, காயத்ரி திருமண அலங்காரத்திற்கென்று பூசி வைத்த பவுடர் கலைந்தது. முகமே வெள்ளை சுண்ணாம்பை நீரால் துடைத்ததுபோல தனியாக எடுத்து காட்டியது.

இத்தனை நாள் வராத கவலை, புதுக்கவலையாக முதுகில் சேர்ந்தது.

இதில் கண்மை கரையவும் முகமோ  பவுடர் திட்டுதிட்டாக கலைந்து, கண்மையும் இழுவி, மலிவாக வாங்கிய உதட்டுசாயமும் தாடையில் இழுவியது.

அந்த நேரம் கதிரவன் கதவை தாழிடும் சத்தம் கேட்டு பதட்டத்துடன் திரும்பினாள்.

கதிரவனோ அளவான அலங்காரத்தில், நன்றாக இருந்தவள் ஏன் பேய் படத்தில் சரியாக மேக்கப் போடாத பெண்ணை போல நிற்கின்றாளென விழித்தான்.

அவனுக்கு தவமலரை பார்த்தபோது ஏனோ அவசரம் காட்டாமல் நடந்து வந்தான்.

"அழுதியா புள்ள?" என்று தாடை பிடித்து கேட்க, அவசரமாய் தவமலர் கண்ணீரை மறைக்க இரண்டடி பின்னால் நகர்ந்தாள்.
தவமலர் முகத்தை துடைக்கவும் பவுடர் அழிந்தே போனது. திகிலுடன் வெளிறி நின்றாள்.

இதுவரை ஒரு ஆடவனோடு தனியாக நின்றதில்லை. காயத்ரி அத்தை ஏதேதோ சொல்லிவிட்டு சென்ற அறிவுரைகள் அப்பொழுது புரியாது முழித்தது, இன்று புத்திக்கு உரைத்தது.

'இது விளையாட்டு இல்லை தவமலரு... கல்யாணம்.

கல்யாணம் பண்ணிட்டு போனா எல்லா பொண்ணுங்களும் நிம்மதியா இருக்கலாம்னு ஆயிடாது. அங்கயும் உன் சித்திகாரி மாதிரி மாமியாகாரி இருப்பா.
அதுக்கூட விடுடி. எல்லா வீட்லயும் தான் மாமியாகாரி நாத்தனார்காரினு இருக்காங்க.

உனக்கு பதினெட்டு வயசு கூட ஆகலை. சட்டத்துல பதினெட்டு முடியறதுக்கு முன்ன கல்யாணம் பண்ணினா அப்பன் ஆத்தால ஜெயில்ல போடுவாங்க தெரியுமா? சரி அதையும் மீறி கட்டி வைச்சா, புருஷனோட குடும்பம் நடத்த வேண்டாமா? புள்ளக்குட்டி பெத்துக்கணும். உன் உடம்பு தாங்குமா?' என்று பேசியதற்கு அன்று காயத்ரியோடு வந்த அவரது அம்மா, 'ஏன்டி... நான் எல்லாம் பதிமூனு வயசுல வயசுக்கு வந்தேன். ஆறு மாசம் ஆகவும், பதினாலு வயசு வந்தப்பவே என்னை கல்யாணம் கட்டி கொடுத்தாங்க. பதினாறுல முதல் புள்ளைய பெத்தேன். அப்பறமும் சொகுசாவா வாழ்ந்தேன்... வரிசையா புள்ளைய பெத்துட்டுல இருந்தேன்.

இந்த பதினாறு பெத்து பெருவாழ்வு வாழுங்கனு வாழ்த்தின மாதிரி, எனக்கு பதினாறு புள்ளைங்க பிறந்தது. என்ன... அதுல பத்து புள்ளைங்க ஏதேதோ ஜூரம் வயித்தால போயி செத்துடுச்சு. பத்து புள்ள தான் வளர்த்து ஆளாக்கினேன்.

இவளுக்கு என்ன... பதினேழு வயசு வந்துடுச்சுல. அதெல்லாம் புள்ள பெத்து பொறவு வளர்ப்பா. அதெல்லாம் விவரம் வந்துடும். உடம்புலயும் சத்து பிடிக்கும். மீன் குட்டிக்கு என்ன நீந்த கத்து கொடுக்கவா செய்வாங்க' என்று கூறியதிலும், சற்று முன் மாமியார் 'புள்ளயாவது பெத்து கொடு' என்று பொருமியதையும் அதை தொடர்ந்து கதிரவன் வந்ததில் திகிலுற்றாள்.

ஓரளவு இந்த பதினேழு வயதில், மணமான பிறகு என்ன நடக்குமென அறியாத சிறுமியில்லை தவமலர். படத்திலும் நாடகத்திலும் காதல் காட்சிகளை கன்னத்தில் கையை முட்டுக்கொடுத்து பார்த்து  சிரித்தவளே! ஆனாலும் நிஜத்தில் தன் முன் ஒருவன், இதற்கு முன் பழகாதவன், தாலி கட்டி நிறுத்தி, தனியறையில் அந்த நேரத்தில் நிற்க பயந்தாள்.

கதிரவனோ "ஏம்புள்ள... எதுக்கு அழுவுற? என்ன இது மூஞ்சிலாம் பவுடர் அழிஞ்சு... கண்மை இழுவி," என்று அங்கிருந்த கயிற்றில் துண்டு இருக்க, எடுத்து முகத்தை துடைத்து விட்டான்.

கதிரவன் இருபத்தியொரு வயது என்றதாலும், படிப்பு வரவில்லை என்று தான் விவசாயமாவது பார்ப்போமென தன் வீட்டை சுற்றியுள்ள இடத்தில் சில பயிரை நட்டும், ஆடு மாடு மேய்த்தும் சம்பாரிக்கின்றான்.‌

அதற்காக எல்லாவிதமான புரிதல் இருக்கும் என்று உரைத்திட முடியாது.

தவமலர் அழவும், துண்டை வைத்து முகத்தை துடைத்து விட்டான். காலையில் காயத்ரி பார்த்து பார்த்து பவுடரை அடித்து அலங்காரம் செய்தவை, தவமலர் கண்ணீரில் பாதி கரைய, கதிரவன் முழுவதுமாக துடைத்தெடுத்தான்.

எல்லா அலங்காரம் போனதும், இயல்பான முகம் அவளை கூடுதலாக தான் அழகாக காட்டியது. பருவத்தில் இருக்கும் தவமலரின் இமைகள் படபடவென அடிக்க, கதிரவனின் மோக பார்வை அவளுக்கு விளங்கும் முன் மின்சார விளக்கு அணைக்கப்பட்டது.
இவ்வளவு நேரம் மின்சாரம் எரிவதற்கே, 'கதிரவன் என்ன விளக்கை அணைக்கலை' என்று நினைக்க வைத்திருக்கலாம்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

https://onlinetamilnovels.com/%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%87-3/