நின் சிநேகம் என் பிரேமம் - Praveena Thangaraj - onlinetamilnovels.com Forum

நின் பிரேமம் என் சிநேகம்-34 (முடிவுற்றது)
அத்தியாயம்-34

மிதிலா குழந்தைக்கு பாலை தந்துவிட்டு, உறக்கம் வர போராடினாள். தீபாவோ நாளெல்லாம் வீட்டையும் குழந்தையும் மகளையும் பார்த்து சோர்ந்திருந்தனர்.

குழந்தை பாலை குடித்துவிட்டு விழித்திருக்க, மிதிலா கண்கள் சொக்கியது.

சற்று நேரம் பொறுத்து பார்த்து, கௌசிக் அறைக்கு வந்தாள். "இரண்டு பேரும் கதை பேசறிங்கள்ல? அப்படியே இவனையும் தூங்க வையுங்க. எனக்கு தூக்கமா வருது" என்று ஹ்ருதேஷ் கையில் குழந்தையை தந்துவிட்டு சென்றாள்.‌

"ஏய்‌ மிது நான் என்னடி பண்ணறது" என்றான் நாயகன்.
"ஆஹ்.. டயப்பரை மாத்தி தூங்கவை" என்று செல்ல, "என்னடா இவ இப்படியிருக்கா? ஆப்டர் பிரகனென்சி இப்படி தான் இருப்பாங்கனு கேள்விப்பட்டேன் அதுக்குன்னு குழந்தையை என் தலையிலேயே கட்டறா" என்றதும், கௌசிக் குழந்தையை நெஞ்சில் படுக்க வைத்து விளையாட்டு காட்ட நண்பன் அருகே ஹ்ருதேஷும் கொட்டாவி விட்டான்.‌

"ஆமா... இன்னிக்கு உன்னை பொண்ணு வீட்ல இருந்து நாலைந்து பேர் பார்க்க வந்தாங்களாமே. எப்படி போச்சு?" என்றான் ஹ்ருதேஷ்.

"நீ வேற.. கடைக்கு அந்த பொண்ணையும் கூட்டிட்டு வந்துட்டாங்க. அவ பேரு என்னவோ ஊர்மிளா. பப்ஸ் கேட்டுச்சு... கொண்டு போய் தந்தேன். என்னையே பார்த்துட்டு இருந்துச்சு.

"என்ன லுக்கு... தட்டை பார்த்து சாப்பிடு. கடைக்கு வந்தம்மா சாப்பிட்டமானு இல்லைனு ஏசிட்டேன். அந்த பொண்ணு 'ஙே'ன்னு முழிச்சிடுச்சு.

அப்பறம் அப்பா வந்து பொண்ணு வீட்டுக்காரங்களை இன்ட்ரோ பண்ணினதும் அசிங்கமா போச்சு. அவங்க சைட்ல என்னை பிடிக்குதுனு தெரியவும் என்னோட பேச வச்சாங்க.
அந்த பொண்ணுகிட்ட வந்ததும் 'சாரி சில பெண்ணுங்க சாப்பிட வந்து லுக்கு விட்டு பார்க்கறதுஅ நடக்கும். அது மாதிரினு நினைச்சிட்டேன்'னு சொல்லவும், 'புரியுது... நீங்க பேசறது சரிதான். நாளையப்பின்ன எவளாவது காதல் கத்திரிக்கானு ரூட் விட்டாலும் இப்படியே பதில் சொல்லுங்க. கூடுதலா, எனக்கு ஊர்மிளானு பொண்ணுக்கூட கல்யாணமாக போகுதுனு தகவலையும் சொல்லிடுங்க'னு பட்டாசா பேசினா.

அப்ப பல்பு எரியவும், போன் நம்பர் வாங்கினேன்." என்றான் கௌசிக்.

"டேய்... நீ நம்பர் தந்தியா? இல்லை.. அந்த பொண்ணு நம்பர் தந்துச்சா?" என்று கேட்க, வெட்கத்துடன், "அந்த பொண்ணு தான் நம்பர் தந்தா. கொஞ்சம் ஷாக்கா இருந்துச்சு. ஆனா அந்த பீலிங் நல்லாயிருந்துச்சு." என்று இளித்தான்.
"தேங்க்ஸ் சொல்லு.. அந்த பொண்ணுக்கு இல்லை.. எனக்கு. பிகாஸ்.. அந்த பொண்ணிடம் பேசினேன். ஏம்மா நீயும் வந்தா ஒரே வேலையா முடியும். அதோட பேச டைமிருந்தா இரண்டு வார்த்தை பேசி போன்‌ நம்பரை தந்துடு. எப்படியும் அந்த பக்கி அவனா போன் பண்ணி லவ்ஸ் விட ரொம்ப லேட் பண்ணுவான். நீ நம்பர் தந்துட்டா அதுக்கு ஏத்த மாதிரி பிக்கப் பண்ணிடுவான். பெரியவங்களுக்கு தெரிய வேண்டாம். நமக்குள்ள வச்சிக்கோனு ரெகமெண்ட் பண்ணினது நான்டா" என்றான் ஹ்ருதேஷ்.

கௌசிக்கோ அதானே பார்த்தேன். ஒரு பொண்ணா வந்து நம்பர் தந்துட்டு எனக்கு உங்களை பிடிச்சிருக்குங்கனு சொன்னப்பவே சந்தேகப்பட்டேன்." என்றான்.‌

"சரி பொண்ணு பிடிச்சிருக்கா?" என்றான் ஹ்ருதேஷ்.

''நல்லா தான் இருந்துச்சு." என்றதும், "குட்டி பையனுக்கு பெயர் வச்சப்பிறகு வீட்ல வரை பூ வச்சி நிச்சயம் பண்ணப்போறாங்க. அதுக்கு அடுத்து ஐந்தாவது மாசத்துல கல்யாணம் செய்யலாமானு மாமா என்னிடம் கேட்டார். அதுக்குள்ள இவனுக்கு தலை நின்னுடும், நல்லா கையில உட்கார ஆரம்பிச்சிடுவான். ஓகேன்னு‌ சொல்லிட்டேன்.‌ அதுவரை லவ் பண்ணு" என்று கண் சிமிட்டினான் ஹ்ருதேஷ்.

கௌசிக் மருமகனை நெஞ்சில் போட்டு தாளமிட்டபடி, "நீ சொல்லிட்டல்ல பண்ணிடுவோம்" என்றான்.‌
இப்படியாக சில நாட்கள் செல்லவும், மிதிலாவுக்கு, தன்னை காண வந்து கணவன் அண்ணனிடம் கதையளக்க செல்வதும், கூடவே மகனையும் அழைத்துக் கொண்டு போவதில் பொறாமை உருவானது.

ஹ்ருதேஷுக்கு இரவு சாப்பாடு பரிமாறியபடி "ஹ்ருத்... ரூம்ல வந்து தூங்கு. எப்ப பாரு இங்கயே தூங்கற" என்றாள்.

"மச்சி கூட பேசிட்டு வர்றேன்டி. இன்னும் மூன்று நாளு தான். நான் பெங்களூர் பறந்துடுவேன்." என்றான்.‌

"அப்ப என் கூட நேரம் செலவழிக்க தோணலையா உனக்கு?" என்று கேட்க, ''அப்படியில்லடி இங்க வர்றப்ப அம்மா சொல்லியே விட்டாங்க. நீயும் நானும் கொஞ்சம் தள்ளியிருக்க சொல்லி. அங்க வந்தா நெருக்கமா இருக்க தோணும்" என்றான்.‌

''டேய் நீயும் அவனும் பேசிட்டு கதையளந்தா எனக்கு வயிறு எரியுது. நீ என்னை விட அவனிடம் அதிகம் நேரம் செலவழிக்கற. ஐ மிஸ் யூ" என்றாள்‌

"ஏ லூசு... நின் பிரேமம் என் சிநேகம் இரண்டுமே எனக்கு வேண்டும்டி. இரண்டுமே எனக்கு ஈகுவள் தான்.
சும்மா பொறாமையில பொசுங்காத. மூன்று நாளில் பெங்களூர்ல போயிட்டு தனியா ஆர்டர் போட்டு சாப்பிடணும்‌. இந்த ஒன் இயர் உன் அண்ணனிடம் பேசாம விட்ட கதையெல்லாம் பேசணும். மனசு ரிலாக்ஸ் ஆகணும். அவனுக்கும் லவ் டிராக் அடுத்து போகும். நீ குழந்தையை கவனிக்க கத்துக்கோ. அடுத்து பெங்களூர் வந்துட்டா அம்மாவும் கூட வருவாங்க. ஒரு வருஷம் நம்ம குட்டி வளர்ற வரை, உன்‌படிப்பு முடியற வரை நாம பெங்களூர் வாசி. பிறகு சேலம் பிராண்ச் கேட்டு வந்துடலாம்‌ நீயும் இங்க பொட்டிக் வை. அதுக்குள்ள பையனும் வளருவான் இங்க ஸ்கூல் சேர்ப்போம். எங்கப்பா அம்மா பார்த்துப்பாங்க. உங்கம்மா அப்பா வீட்டுக்கு வருவோம் போவோம். இதுக்கு நடுவுல கௌசிக் கல்யாணம் வேற இருக்கு. தெளிவான நீரோடையா வாழ்க்கை போகும். அந்த நீரோடையில அடிக்கடி கல்லு விழுந்து அதுல வர்ற அழகான அலை கோலம் போல நம்ம சண்டை வரும். வராமல்லாம் இருக்காது‌. பட் பார்த்துப்போம்." என்று நீண்ட உரையாற்றினான்.‌
"ஸப்பா.. எனக்கு உன்னை மாதிரி பிளான் எதுவும் இல்லை மேன். இப்ப என் கூட வந்து படு. என்னை கட்டிப்பிடிச்சிக்கோ. நம்ம பையனை மட்டும் கௌசிக் வச்சிக்கட்டும்." என்று அவன் சட்டை பட்டனை நோண்டினாள்.

"ம்கூம்.. விவரம் தான். பாருடா.. குழந்தையை என்கிட்ட தள்ளி விடுவாளாம். உன்னை மட்டும் கட்டிபிடிச்சி படுனு கட்டளையிடறா. என் பிரெண்ட் ஹ்ருதேஷ் அடிக்கடி சொன்னான். டேய் நான் ஒதுங்கி ஒதுங்கிதான் போனேன். இவ தான்டா என்னை விலக விடாம பண்ணிட்டானு. மச்சி... இப்ப நம்பறேன்டா" என்று நண்பனை பார்த்து அறையில் மிதிலா பேசியதை கேட்டவனாக வந்தான் கௌசிக்.

''ஹே.. பின்ன என்ன இவருக்கு நான் பொண்டாட்டியா நீ பொண்டாட்டியா? உன் ரூம்லயே இருக்கான் ஹ்ருத். மரியாதையா என் புருஷனை என் கூட அனுப்பு. உனக்கு தான் ஊர்மிளா இருக்காளே. அவளிடம் ஜோள்ளு விடு போ" என்று பேச, தீபாவோ "தொடப்பகட்ட பின்னி எடுக்க போறேன். என்னனென் பேச்சு பேசற. உன்னை செல்வராணிக்கா சொல்லறதுல குத்தமேயில்லை." என்றார்.

'இரண்டு ஒல்டுக்கும் என்னை பத்தி காஸப் பேசவே நேரம் சரியா இருக்கும்' என்று மிதிலா யாரையோ சொல்வதாக கடந்தாள்.

இங்கு நாளை குழந்தையை பார்க்க வருவதாக ராஜலிங்கம் செல்வராகவனிடம் போனில் பேச, செல்வராணியும் அதை கேட்டவராக, "அண்ணனும் தங்கைக்கும் என் புள்ள என்னடி பாவம் பண்ணினான். எப்படி தான் இரண்டு பேரையும் பேலன்ஸ் பண்ணிட்டு சமாளிக்கறானோ." என்றார்‌ அவர்.

போன் ஸ்பீக்கரில் போட்டுவிட்டு தீபா குழந்தையை தூக்க, "ஆங்... உங்களுக்கும் எனக்கும் எப்படி உங்க பிள்ளை பேலன்ஸ் பண்ணினாரோ அப்படியே மெயின்டெயின் பண்ணட்டும்" என்று அவளும் போனிலேயே மாமியாரிடம் வம்புக்கு சென்றார்.‌

''குழந்தை பெத்தவனு பார்க்கறேன். இல்லைனு வை... அங்க வந்து ஆஞ்சிடுவேன்." என்றார் செல்வராணி.

"அம்மா அம்மா.. நாளைக்கு ஏதோ பிரசவ லேகியம் செய்யணும் அதுயிதுனு சொன்ன. செய்துட்டியா இல்லையா. இங்க இவளிடம் பேசிட்டு இருக்கிங்க." என்று நினைவுப்படுத்தி தாயும் தாரமும் சண்டையை முடித்து விட்டான்.
பிரசவ லேகியம் யாருக்கென்று தனித்து சொல்ல தேவையில்லை. மாமியாரிடம் மல்லுக்கு செல்லும் மருமகளுக்காக தான் செல்வராணி தயாரிக்க போகின்றார்.

கௌசிக்கோ மிதிலா ஹ்ருதேஷ் மணவாழ்க்கையை பார்த்து கையில் தன் மருமகனை கொஞ்சியபடி, 'நாம ஊர்மிளா அத்தை கூட நைட்டு பேசுவோம்‌' என்று ரகசியம் பேசினான்.

ஹ்ருதேஷ் குழந்தையோ பொக்கவாய் சிரிப்பில் மாமனிடம் மகிழ்ச்சியை பகிர்ந்தான்.

மிதிலா கௌசிக்கோடு மல்லுக்கு சென்றாலும் 'என் பிரெண்ட டி' என்று செல்லம் கொஞ்சும் ஹ்ருத். செல்வராணியிடம் மாமியார் என்று இடிப்பட்டு சண்டை கூட்டினாலும், 'எங்க அம்மா டி வயசானவங்க.' என்று அதற்கும் தடையிட்டு கொஞ்சி குழைந்து, தன்னை முத்தம் கித்தம் வைத்து, கட்டிப்பிடித்து காரியம் சாதித்துக் கொள்கின்றான் கணவனாக அவளது ஹ்ருத்.

-சுபம்.
-பிரவீணா தங்கராஜ்.

https://onlinetamilnovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-34/

வாசிக்கும் அன்பான வாசகர்கள் உங்கள் பெயரை தளத்தில் Register login செய்து கருத்தை comments பகுதியில் கூறலாம்.

அல்லது welcome corner பகுதியில் register login செய்வது எப்படி தரப்பட்டுள்ளது. மேலும்

https://onlinetamilnovels.com/community/novel-discussion-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf/

Novel Discussion பகுதியில் விமர்சனம் எழுதலாம். முகநூலில் கதைக்கான குழுவில் ரிவ்யு அளிக்கலாம்.

நின் பிரேமம் என் சிநேகம்-33
அத்தியாயம்-33

கதவின் அருகே நின்றவனை பார்த்த நொடியில் கௌசிக்கின் இதயம் ஒரு தாளம் தப்பியது.

ஹ்ருதேஷ் வாசல் விளக்கின் வெளிச்சத்தில் அவன் முகம் தெளிவாக தெரிய, அவன் பார்வை நேராக குழந்தை மீதிருந்தது.

கௌசிக் தன்னாலேயே குழந்தையை இன்னும் இறுக்கமாக மடியில் வைத்தான். ஹ்ருதேஷ்  பறித்து விட்டு தன்னை உதாசினம் செய்வானோ என்ற அச்சம்.

அடுத்த நொடியே தன் செயலில் அவனே திகைத்தான். ஹ்ருதேஷ் தானே அப்பா. அப்படியிருக்க அவன் குழந்தையை அவன் கேட்டா தரணும். எனக்கென்ன உரிமையிருக்கு?
அந்த உணர்வு கையை சற்று தளரச் செய்தது.

ஹ்ருதேஷ் மெதுவாக நடந்தான். ஒவ்வொரு அடியும் அளந்து வைத்தது போல. அவன் பார்வை இன்னும் குழந்தை மேல் தான். கௌசிக்கை நோக்கி ஒருமுறையும் திரும்பவில்லை.
கௌசிக்கின் உள்ளே ஏதோ சுருண்டது.
'பேசு… ஏதாவது பேசு…' என மனசாட்சி தூண்ட உதடும் தொண்டையும்  உலர்ந்திருந்தது.

ஹ்ருதேஷ் அருகே வந்து நின்றான். குழந்தையின் மூச்சு சத்தம் கூட அந்த அமைதியில் கேட்கும் அளவுக்கு சூழல் நிற்க,
கௌசிக்கை மெதுவாக தலை தூக்கி பார்த்தான்.
இரு நண்பர்களின் பார்வை சந்தித்தது.

ஒரு நொடி.

அந்த ஒரு நொடி‌.. பழைய சிரிப்பு, சண்டை, நட்பு, துரோகம், கோபம், எல்லாம் ஓடி போய் திரும்பி வந்தது போல ஹ்ருதேஷின் கண்களில் சோர்வு இருந்தது. மீண்டும் கௌசிக் தன்னிடம் முகம் காட்டி சென்றால் ஹ்ருதேஷிற்கு தாங்க இயலாதே.

தற்போது தன் மகனை தூக்கி வைத்துள்ளான் என்றவொரு மனநிம்மதி.
அவனாக வந்திருக்கான் உதவி செய்திருக்கின்றான்.‌

அந்த எண்ணம் அவனுடைய முகத்தில் தெரியாமல் ஒளிந்தது.

கௌசிக் உதட்டை நனைத்தான்.

அவனுக்கும் வார்த்தை வரவில்லை.
ஹ்ருதேஷ் கையை மெதுவாக நீட்டினான். குழந்தை முகத்தை தொடும் முன் ஒரு நொடி நின்றான்.
அவன் விரல்கள் நடுங்கின.
கௌசிக்கின் மார்பில் ஏதோ நெரித்தது.
"தூங்கறான்" என்று கிசுகிசுத்தான் அவன். குரல் தன்னையே ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு மென்மை.
ஹ்ருதேஷ் சிறிது தலையசைத்தான். அவன் விரல் குழந்தையின் கன்னத்தை மெதுவாக தொட்டது.
குழந்தை முகம் சுருங்கி மீண்டும் தளர்ந்தது.
அந்த நொடியில் ஹ்ருதேஷின் மூச்சு உடைந்தது போல வெளியேறியது.
அவன் கண்கள் மூடியது. நான் "அவளை பார்த்துட்டு வர்றேன். இல்லைன்னா... என்னை விட இன்னிக்கு பிறந்தவன் முக்கியமானு கேட்டு என்கிட்ட சண்டைக்கு வருவா.. உன்னை மாதிரியே.." என்றதும் கௌசிக் சிரித்தான்.

கௌசிக் அந்த மாற்றத்தை பார்த்தான். அந்த நொடியில் தான் உணர்ந்தான்‌
ஹ்ருதேஷ் தன்னை விட மிதிலாவையும் அவள் காதலையும் நாடியதில், தான் முகம் தூக்கி சண்டையிட்டோமோ? அதை தான் சொல்கின்றானா?!

இங்கே மிதிலாவின் பார்வை
மருந்தின் மந்தமான வாசனையில்,
தலைக்கு மேலே சுழன்ற விளக்கின் வெள்ளை வெளிச்சம், தூரத்தில் யாரோ மெதுவாக பேசும் சத்தம்…
மிதிலா கண்களை திறக்க முயன்றாள்.
உடம்பு முழுக்க ஒரு சோர்வு. வயிற்றில் வெறுமை.
ஆனா அந்த வெறுமையோடு சேர்ந்த ஒரு ஆழ்ந்த நிம்மதி.
குழந்தை…அந்த எண்ணம் வந்த நொடியே அவள் மூச்சு வேகமாயிற்று.
கண்களை மீண்டும் திறந்தாள். முதலில் தெளிவில்லாத நிழல்கள். பிறகு மெதுவாக உருவம் எடுத்தது.

வாசலருகே சேர் அருகே இருவர் ஹ்ருதேஷ்-கௌசிக்.
அவர்களுக்கிடையில் ஒரு சிறிய வெள்ளை துண்டில் குழந்தை.

மிதிலாவின் இதயம் மெதுவாக துடித்தது. அவர்கள் பேசாமல் பார்வை பரிமாற்றம் செய்ததை கவனித்தாள்.

மிதிலா கணவன் வந்ததும் அசைய முயன்றாள். உடம்பு உடனே எதிர்த்தது. ஒரு லேசான வலி. உதட்டில் சத்தமில்லா மூச்சு.
அந்த சத்தத்தைக் கேட்டு ஹ்ருதேஷ் நெருங்கினான்..

அவன் பார்வை அவளைத் தொட்ட நொடி. முகம் முழுக்க ஏதோ உடைந்தது போல மென்மையாயிற்று.
"மிது" ஹ்ருதேஷின் குரலில் கிசுகிசுப்பு.

கௌசிக் உடனே தங்கை பக்கத்திற்கு நகர்ந்தான். அவன் முகத்தில் ஒரு தயக்கம். ஒரு நிம்மதி… இரண்டும் கலந்து இருந்தது. ஹ்ருதேஷ் குழந்தையை சரியாக பார்த்தானோ என்னவோ தங்கையோடு சேர்ந்து பார்க்க விரும்பினால்?

அவன் எதிர்பார்த்தது போல மிதிலா பேச முடியவில்லை. அவள் பார்வை குழந்தை மேல் ஒட்டிக் கொண்டது.
ஹ்ருதேஷ் அருகே வந்தவன் கைகளில் குழந்தை.
"பாரு" என்றான் மெதுவாக.

அவன் குனிந்து குழந்தையை அவள் பார்வைக்கு அருகில் கொண்டுவந்தான்.
சிறிய முகம். சுருங்கிய விரல்கள். மூச்சின் லேசான அசைவு.
மிதிலாவின் கண்கள் நிரம்பின.
'இது… நம்ம குழந்தை' என்ற உணர்வு அவளுக்குள் அலை போல பரவியது.

அவள் கையை உயர்த்த முயன்றாள், ட்ரிப்ஸ் போட்ட கைகள் நடுங்கியது. ஹ்ருதேஷ் உடனே அவள் கையை பிடித்து குழந்தை அருகே கொண்டு போனான்.
அவள் விரல் குழந்தையின் கன்னத்தை மெதுவாக தொட்டது.
உலகமே அந்த நொடி அமைதியாக நின்றது போல.

கண்ணீர் அவள் காதருகே வழிந்தது. "ஹ்ருதேஷ்" அவள் குரல் மிக மெலிதாக கேட்டது.

"ஹ்ம்…" என்றான் அவனும்.

"ஏன்டா உடனே வரலை." என்றாள்.

"வேலையில வரமுடியலைடி சாரி" என்றான்.‌

கௌசிக் ஹ்ருதேஷ் இருவரையும் பார்த்த மிதிலா, ''என் மேல உங்க இரண்டு பேருக்கும் கோபமா? நான் உங்க நட்பை சிதைச்சிட்டு என் காதலை அடைய விரும்பலை. என் காதலை புரிஞ்சிப்பிங்கனு நினைச்சேன்" என்றாள்.
"ஏ லூசு... எதுக்கு இந்த டாபிக். ரெஸ்ட் எடு" என்றான் ஹ்ருதேஷ்.

கௌசிக்கும், "உன்னால பேசவே முடியலை கஷ்டமாயிருக்கும். முதல்ல ரெஸ்ட் எடு. முடிஞ்சதை பத்தி பேசாத." என்றான்.

"டேய்... குழந்தையை சரியா பார்த்தியா இல்லையா. இங்க பாரு உன்னை மாதிரியே கைகால், மூஞ்சு கூட அச்சு அசலா உன்னை குட்டியா பார்க்கற மாதிரி இருக்கு" என்று கௌசிக் ஆனந்த கண்ணீரோடு பேசினான்.‌

ஹ்ருதேஷோ "ரொம்ப ஸ்ட்ராங்கா உன் கையை பிடிச்சிருக்கான். ரொம்ப அழுத்தக்காரனா உன் தங்கச்சி மாதிரி இருப்பான். தாய்மாமா குணமும் வரும் பாரு" என்றான் அவனும்.
இருவரும் இயல்பாக பேச மிதிலா நிம்மதியாக  பார்த்தாள்.

"இரண்டு பேரும் பேசுங்க. நான் என் மாப்பிள்ளையோட அங்கயிருக்கேன்" என்று கணவன் மனைவிக்கு தனிமை தந்து விலகினான்.

அறையில் ஒரு புதிய சமநிலை இருந்தது.
ஹ்ருதேஷ் மெதுவாக மிதிலாவை தன் மார்பில் சாய்த்தான். இன்னொரு கையால் மிதிலாவின் நெற்றியை வருடினான்.
"ரெஸ்ட் எடு.. அந்த கல்லு கரைஞ்சிடுச்சு. இனி பேசாம முகம் திருப்ப மாட்டான். என் பிரெண்டை பத்தி எனக்கு தெரியும்‌" என்றான்.

அந்த வார்த்தையும் அவன் தொடுதலும், அவளுக்கு  பாதுகாப்பு போல இருந்தது.
கண்கள் மெதுவாக மூடியது.

மனைவி நெற்றியில் முத்தமிட்டு மகனை மீண்டும் காண வந்தான். குழந்தை தற்போது பெரியவர்கள் மாறி மாறி தூக்க ஆரம்பித்து கொஞ்சினார்கள்‌

கௌசிக் தான் "சாரிடா." என்றான் ஹ்ருதேஷிடம்.

"போடா... எவ்ளோ வலிச்சது தெரியுமா? நான் நட்புக்கு துரோகம் பண்ணலைடா. என்னால அவ காதலையும் இக்னோர் பண்ண முடியலை." என்று கட்டிக்கொள்ள கௌசிக்கும் அணைத்தான்.

"நீ சொன்னது மாதிரி நான் கொஞ்சம் புரிஞ்சிக்கிட்டுயிருந்தா, விமர்சனமா கல்யாணம், வளைகாப்பு பண்ணிருக்கலாம். அதோட நம்ம மனசால வலியோட நடமாடியிருக்க மாட்டோம்‌‌." என்று கௌசிக் கூறியதும், "சரி விடு வேற பங்ஷனுக்கு ஜமாய்ச்சிடலாம்" என்றான் ஹ்ருதேஷ்.

"என் மாப்பிள்ளைக்கு பெயர் வைக்கறப்ப பெரிய மண்டபம் பிடிக்கணும்" என்று கண்ணீரை அடக்கினான்.‌

அடுத்த நிமிடம் 'மாமா என்னை இந்த பெருசுங்களிடமிருந்து காப்பாத்து‌ ஆளுக்கு ஆள் தூக்கி பந்தாடறாங்க' என்பது போல ஹ்ருதேஷ் குழந்தை சிணுங்கவும், கௌசிக் "குழந்தையை கொஞ்ச நேரம் பார்த்துக்க சொன்னா அழ வச்சிட்டிங்க" என்று பிடுங்கி கொண்டான்.

குழந்தையை கௌசிக் தூக்கி ஹ்ருதேஷிடம் தரவும், அவன் வாங்கிக் கொண்டு, "நீ பிறந்த பிறகு தான் உன்‌ மாமா என்னிடம் பேசுவேன்னு சபதம் ஏதாவது போட்டிருக்கான் போல‌. நீ உங்கம்மா வயித்துல என்டர் ஆனப்ப சண்டை ஆரம்பம். எக்ஸிட் ஆனதும் சமாதானம்" என்று கௌசிக்கிடம் கூறியபடி, மகனை முத்தமிட்டான் ஹ்ருதேஷ்.

ஹ்ருதேஷின் தாடி குத்த, அதற்கும் குழந்தை அழுதது. கௌசிக்கோ, "ஏன்டா... தாடி குத்தும்ல. இதுல குழந்தையிடம் என்டர் எக்ஸிட்டுனு பேசறான்." என்று குழந்தையை வாங்க முயல, "அட இருடா.. பத்து நிமிஷம் கூட முழுசா தூக்கலை" என்று குழந்தையை தந்தையான தன்னிடம் கொடுக்க வேண்டுதல் வைக்க, நர்ஸ் வந்து, "ஆளாளுக்கு குழந்தையை கையில வச்சிட்டு இருந்தா குழந்தைக்கு ஒத்துக்காது. குழந்தையை அம்மாவோட அரவணைப்புல படுக்க வைங்க" என்று அதட்டி செல்ல வேறு வழியின்றி மிதிலாவிடம் சேர்த்தனர்.

அதன்பின் குழந்தை உறங்குவதால் நண்பர்கள் இருவரும், கேன்டீன் சென்று தங்கள் பேச்சை நீட்டித்து உலகை மறந்தறனர்.

இந்த இடைப்பட்ட நாளில் அவர்கள் பிரிவை முறியடிக்கும் விதமாக ஒன்றாக உலாவினார்கள்.

செல்வராணி தீபா மாறி மாறி குழந்தையையும் மிதிலாவையும் கவனிக்க உணவை எடுத்துக் கொண்டு வந்தார்கள். ஒரு வாரம் ஹாஸ்பிடல் வாசம் தான்.

கௌசிக் கடைக்கு ஆளை நியமித்துவிட்டு அடிக்கடி‌ தங்கை குழந்தையை காண வரவும், ஹ்ருதேஷும் அங்கு தான் விடுப்பு எடுத்துவிட்டு இருந்தான்.

அங்கேயிருந்த நர்ஸ் கூட, "சார் இது ஒன்னும் காலேஜ் இல்லை. சத்தமா சிரிச்சிட்டு இரண்டீ பேரும் கதையடிக்கறிங்க. குழந்தை இருக்கு மெல்லமா பேசுங்க." என்றார்.

ஹ்ருதேஷ் கௌசிக் இருவரும் அதை காதில் வாங்கினால் தானே.

ஹ்ருதேஷே ''டேய்... கடையில அடிக்கடி ஆளை வச்சிட்டு வர்ற. முதல்ல பிசினஸை பாரு" என்றான்.

"அடப்போடா.. குழந்தை முக்கியமா கடை முக்கியமா?" என்றான்.‌

"குழந்தைக்கு பெயர் வச்சதும் உனக்கு ஒரு கல்யாணம் செய்துடணும்னு மாமா சொன்னார்.

ஏதோ அசல்ல ஒரு வரன் அமையுதாம். அந்த வீட்லயிருந்து வந்து உன்னை பார்க்க முந்தா நேத்து கடைக்கு வந்திருக்காங்க. நீ என்னடானா இங்க வந்துட்ட. கடைப்பையன் ஓனர் ஹாஸ்பிடல் போனதா சொல்லவும் கிளம்பியிருக்கார். நேத்தும் வந்திருக்காங்க நீ இல்லை. இங்க வந்திருக்க." என்றான்.‌

கௌசிக்கோ "அப்பா எதுவும் என்னிடம் சொல்லலையே" என்றான் கௌசிக்.‌

''அவங்க சட்டுனு வருவாங்கனு மாமாவுக்கும் தெரியாது. இன்னிக்கு தான் போன்ல சொல்லவும், தங்கச்சிக்கு குழந்தை பிறந்து ஹாஸ்பிடல்ல இருக்கா. குழந்தையை பார்க்க ஓடினான்னு சொல்லியிருக்கார்." என்றதும், "சொல்லியாச்சுல அப்பறம் பார்க்கலாம்." என்றான்.‌

மிதிலா குழந்தையுடன் தன் பிறந்த வீட்டிற்கு சென்றிட ஹ்ருதேஷ் தான் தற்போது மாமனார் வீடு தேடி ஓடினான்.

செல்வராணியோ 'இனி பாருங்க நம்ம வீடு தங்க மாட்டான். முன்னவே பிரெண்டை தேடி ஓடுவான். இப்ப பொண்டாட்டி புள்ளனு சேர்ந்தாச்சு. மரியாதையா பேரனுக்கு பெயர் வச்சி இங்க கூட்டிட்டு வாங்க" என்றார். ராஜலிங்கம் தலையாட்டி பொம்மையாக, தலையாட்டி முடித்தார்.

நண்பன் வீட்டுக்கு பழையபடி துள்ளலாய் மகனை காணும் ஆர்வத்துடன், தோழனை காணவும் வந்தான். முன்பு தீபா ஹ்ருதேஷை கரித்து கொட்டுவார், இன்றோ மாப்பிள்ளை மரியாதையுடன் வரவேற்றார்.

இந்த முறை கௌசிக் வரவேற்பு... சொல்லவா வேண்டும். மிதிலா காதில் புகைச்சல் வராத குறையாக மகனை மடியில் வைத்து கொஞ்சி அண்ணனும் கணவனும் பேசிபேசியே மூழ்கினார்கள்.

ஏதோ பிரசவ கால ஓய்வு தேவைப்படுவதால் மிதிலா இளைப்பாறினாள்.

-தொடரும்.

https://onlinetamilnovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-33/

நின் பிரேமம் என் சிநேகம்-32
அத்தியாயம்-32

கௌசிக்கிற்கு தங்கை அவளது மாமியார் வீட்டில் இருந்து இப்பொழுது வருவாள் அப்பொழுது வருவாளென்று எதிர்நோக்கி அவள் வரமாட்டாள் என்றதும் தான் லேசாக புரிந்தது.

அதிலும் ஹ்ருதேஷ் ஒரிருமுறை சேலம் வந்து மிதிலாவை பார்த்துவிட்டு சென்றதில், 'கடை பக்கம் ஆளே வரலை. எப்பவும் கடைக்கு உள்ள வராட்டியும், தூரமா இருந்து பார்ப்பான்.
வீட்டுக்காவது மாப்பிள்ளை முறுக்கோட வரலாமே. இவன் ஏன் வரலை' என்று யோசித்தான்.

இதில் ஹாஸ்பிடல் செக்கப் எல்லாம் தீபா தான் அழைத்து சென்றார்.
குழந்தை பிறக்கும் பொழுது, பிறந்த பிறகும் தீபா அதிகமாக சென்று வர வேண்டியது இருக்குமென அறிந்து வைத்திருந்தார்.

அன்று செக்கப் முடித்து தீபா வந்தவர், பேனை போட்டு கணவரிடம், "குழந்தையெல்லாம் நல்லா சத்து பிடிச்சு இருக்கு. இவளுமே நல்லா தான் எடை ஏறியிருக்கா. ஆனா மூஞ்சு... எப்பபாரு புருஷன் பக்கத்துல இல்லைனு வாடுது. அவராவது இவளிடம் தினம் பேசலாம்ல. நல்லா பேசி நாலு மாசத்துக்கு மேல ஆகுது.

இவன் தான் நட்பு வேண்டாம் நண்பன் வேண்டாம்னு இருந்துட்டான்ல. அவராவது கட்டினவளை இத்தனை நாள் அன்பா பார்த்த மாதிரி இப்பவும் பார்த்துக்கலாம். எங்க... இப்பலாம் இவளிடமும் பேசாதது, இவளுக்கு ஒரு மாதிரி பித்து பிடிச்சு கிடக்கா." என்று புலம்பினார்.

செல்வராகவனும், "புருஷன் பொண்டாட்டி சண்டையில நாம என்ன சமாதானம் செய்யறது?" என்றார்.

"ஆமா... அவளும் அப்படி தான் பேசிட்டு திரியறா. இங்க வந்தா காலடி கூட வைக்க மாட்டேனு மறுத்துட்டார். அவ அதுக்கு வேற இங்க வர்றதில்லை. நாளைப்பின்ன குழந்தை பிறந்த பிறகும் அங்க மாமியார் வீட்ல இருப்பாளா? இங்க வந்து தானே ஆகணும். இல்லை உங்க பொண்ணு வரமாட்டானு சொல்லிட்டு திரியப்போறாளா?" என்று தலையிலடித்து புலம்பி சென்றார்.

கௌசிக் இதை கேட்டும் கேளாதவன் போல நகர்ந்தான்.

மறுபுறம் ஹ்ருதேஷிற்கு வேலை பளு அதிகமானது. ஸ்ட்ரஸ் வரும் அளவிற்கு மனம் பாதித்தது.

முதல் காரணம் மனைவியிடம் நேரம் செலவழிக்க இயலாத சூழல். அவளிடம் நன்றாக பேச முடியாத நிலை. நட்பும் காதலும் தன்னை தன்னிலை இழக்க வைத்த வலி.

இதில் கூடுதலாக வேலைசுமை. எல்லாவற்றையும் மனதில் போட்டு உழப்பினான்.

செல்வராணி கூட மிதிலாவை நேரில் பார்க்க வாடா. நான் அவளை நல்லா பார்த்துக்காம கொடுமைப்படுத்தினா உனக்கு தெரியாதே" என்றார்.

அவனோ "நீ கொடுமைப்படுத்தனும்னு நினைச்சாளே அவ உன்னை கொடுமைப்படுத்துவா அம்மா. நீ ஜாக்கிரதையா இருந்துக்கோ" என்பான்.

தந்தை ராஜலிங்கம் அதற்கே சிரிப்பார்.

இப்படியாக நாட்கள் நெருங்கும் சமயம் ஹ்ருதேஷ் பணிச்சுமைக்காரணமாக பெங்களூரில் இருக்க, வீட்டில் ராஜலிங்கமும் இல்லாத நேரமாக மிதிலா வயிற்றை பிடித்து "ஒரு மாதிரி பண்ணுது. லேசா விட்டு விட்டு வலிக்குது. மூச்சு வாங்குது." என்று தரையில் அமர்ந்தாள்.

"அய்யோ... இன்னிக்குனு பார்த்து உங்க மாமா போனை வீட்ல வச்சிட்டு போயிருக்கார். இரு.. பையனிடம் போன் பண்ணறேன்." என்றார்.‌

அவனும் எடுக்காமல் போக, தீபாவுக்கு அழைத்தார்.

அன்று பார்த்து தீபாவும், செல்வராகவனும் குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டி, கோவிலுக்கு சென்றியிருந்ததால் அவர்களுமே போனை வீட்டில் மறந்து வைத்தனர்.
கடையில் பணியாளை இருக்க வைத்துவிட்டு வீட்டில் ரொட்டேஷனுக்கு தரும் பணத்தை, எடுக்க வந்த கௌசிக் அன்னை போன் அலறுவதை கண்டு எடுத்தான்.

"அம்மா கோவிலுக்கு போயிருக்காங்க. வந்ததும் கால் பண்ண சொல்லறேன்" என்றான் எந்திரனாக.

"எப்பா.. எப்பா... உன் தங்கச்சி மிதிலா பிரசவ வலியில துடிக்கறா.  இங்க ஹ்ருதேஷ் அப்பா எங்கயோ பேயிருக்கார். போன் வீட்ல வச்சிட்டார். நீயும் உங்க அம்மாவும் வாங்கப்பா. எனக்கு என்ன செய்யனு தெரியலை. கையும் ஓடலை காலும் ஓடலை." என்றார்.‌

''எங்கம்மா இங்க இல்லை. சொன்னா புரியலையா?" என்றான்.

"தீபா இல்லையா.? அப்ப நீ வா. உன் தங்கச்சி ஹாஸ்பிடலில் அழைச்சிட்டு போக" என்றார்.

கௌசிக்கோ நேரம் காலமின்றி ''நான் வரமாட்டேன். நான் அவளுக்கு அண்ணன் இல்லை. அவ எனக்கு தங்கச்சி இல்லை." என்றான்.‌

செல்வராணியோ இருந்த கோபத்தில், "எடுப்பட்டவனே... பிள்ளை துடிக்குது உனக்கு காதுல விழலை. இந்த நேரம் தான் கண்ட கருமத்தை பேசுவியா? வைடா போனை." என்று கத்திவிட்டார்.‌

கௌசிக்கோ 'ஆமா.. பிரசவவலி வந்தா அண்ணனுக்கு கால் பண்ணுனு சொல்வியிருப்பானா? ஏன் பிள்ளையோட அப்பனுக்கு போன் பண்ண வேண்டியது தானே?" என்று புலம்பிவிட்டு, தீபா போனிலிருந்து ஹ்ருதேஷிற்கு அழைத்தான்.‌

"அத்த..வேலையா இருக்கேன். அரைமணி நேரம் கழிச்சு கால் பண்ணறேன்" என்று ஹ்ருதேஷ் குரல் தர, "ஏய் உன் ஒய்ஃப்-கு பிரசவ வலினு உங்கம்மா சொன்னாங்க. உடனே வரத்தெரியாது. இங்க யாருமில்லை." என்றான்.

"இதை சொல்ல தான் போன்‌ போட்டியா? லூசாடா நீ. நான் இருக்கறது பெங்களூர்ல. இனிமே கிளம்பி வந்தாலும் அங்க வர போர் ஹவர்ஸாவது ஆகும். எங்கம்மா இல்லைன்னா நீ கூட போக வேண்டியது தானே. அந்தளவு ஈகோ இருக்குன்னா எனக்கு எதுக்கு கால் பண்ணின. என் குழந்தை எக்கேடு கெட்டு போகட்டும்னு விட்டு தொலை. வைடா போனை" என்று திட்டினான் ஹ்ருதேஷ்.

'அம்மாவும் பையனும் போனை வைக்க சொல்லி திட்டறதுல ஒன்னு போல இருக்காங்க' என்று கௌசிக் முனங்கினான்.

ஹ்ருதேஷ் கௌசிக்கை திட்டிவிட்டு அடுத்த நிமிடம் அன்னைக்கு அழைத்து, "அம்மா... நீங்களா ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போங்க. ஏற்கனவே செக்கப் போன இடம் தானே. ஆட்டோ கேப் புக் பண்ணிட்டு நேரத்தை கடத்தாம ஹாஸ்பிடல் கிளம்புங்க" என்று அறிவுறுத்நினான்.

அவரிடம் பேசும் போதே, கதவை தட்டிவிட்டு கௌசிக் வந்தான்.

"உன் பிரெண்ட் கௌசிக் வந்துட்டான்டா." என்றார் செல்வராணி.

"அவன் பார்த்துப்பான். நான் இங்க வேலை முடியவும் அங்க கிளம்பி வந்துடுவேன். அவளை பயப்படாம இருக்க சொல்லுங்க." என்று தெம்பூட்டினான்.

"சரிப்பா" என்று துண்டித்தார் செல்வராணி. ஹ்ருதேஷ் உள்ளமோ மிதிலா துடித்த துடிப்பை அலைப்பேசி வழியாக கேட்டு அவனும் தவலியை அனுபவித்தான்.

தன்னவளுக்கு பிரசவ வலி, உடனே செல்ல வேண்டுமென்றதால் மேலதிகாரியிடம்‌ சொல்லிவிட்டு கிளம்ப அதற்கான ஆயத்தங்களை பார்த்தான்.

"வலிக்குது அத்தை. அய்யோ முடியலை. எழுந்துக்க கஷ்டமாயிருக்கு. அம்மா... வலிக்கே." என்று மிதிலா துடிக்க, அவளை கௌசிக் கையில் ஏந்தினான்.

"சும்மா கத்தாதே.. பயத்துல கீழே போட்டுட போறேன்.அப்பறம் அவன் வந்தா பதில் சொல்ல முடியாது." என்றதற்கு, "நீ ஒன்னும் என்னை தூக்க வேண்டாம். கீழே இறக்கு. நான் நடந்து போவேன்" என்றாள் வீம்புடன்.

"புருஷனுக்கும் பொண்டாட்டிக்கு நக்கல் மட்டும் எந்த சூழ்நிலையிலும் குறைச்சலில்லை‌" என்று காரில் அழைத்து வந்தான்.

மிதிலா ஏற்கனவே சேலத்தில் செக்கப்பிற்கு வந்த ஹாஸ்பிடல் என்றதும், நர்ஸ் டாக்டர் அவளை சூழுந்தனர். இனி செல்வராணி பார்த்துக்க ஓடினார்.

கௌசிக் ஓரமாய் நின்றான்.‌ டாக்டர் நர்ஸ் என்று அவ்விடம் பரபரப்பாய் மாறவும், அம்மா அப்பா இல்லாத நேரமாக தான் வந்து தங்கைக்காக நிற்பதில் கடவுள் நிர்பந்திக்கப்படுவதாக எண்ணினான்.
அன்னை தீபாவின் போன் தன்னிடமிருக்க, தந்தைக்கு அழைத்து முடித்து நிலவரத்தை சொன்னான்.

"இங்க பாரு... மாப்பிள்ளையும் இல்லை... நாங்களும் இல்லை. ஒரு உயிர் பிறக்கறப்ப, அதுவும் தாய்மாமாவா இருந்துட்டு, இப்பவும் உன் ஈகோ பிடிச்சி தொங்கின, உன் பிரெண்ட் ஹ்ருதேஷ் உன்னை காலம் பூர மன்னிக்க மாட்டான். அவன் மன்னிச்சாலும், உன் தங்கச்சி மிதிலா உன்னை மன்னிக்க மாட்டா. நாங்களும் தான். அதனால அட்லீஸ்ட் பேஸிக் மனித நேயத்தோட அங்க இரு‌." என்று கூற, "எனக்கு என்ன பண்ணணும்னு தெரியும். நீங்க சொல்ல வேண்டாம். அம்மாவும் நீங்களும் சீக்கிரம் வாங்க" என்று துண்டித்தான்.

செல்வராணி கடவுளை வேண்டியபடி, லேபர் வார்டில் அமர்ந்திருக்க, கௌசிக் வரவும், "வரமாட்டேனு சொல்விட்டு ஏன்டா வந்த?" என்று பாய்ந்தார்.‌

"என்ன பிரச்சனை உங்களுக்கு? அப்ப வான்னு பதறி கூப்பிட்டு, இப்ப ஏன் வந்தனு இழுக்கறிங்க? உங்க பையன் இருந்தா நான் ஏன் வரப்போறேன். ரொம்ப முக்கியமான வேலையோ? பொண்டாட்டியை கூட பிரசவ நேரத்துல கவனிக்காம" என்று கோபமாய் ஆரம்பித்தான்.

"என் பையனை கேள்வி கேட்கணும்னா அவன் வந்ததும் கண்ணை பார்த்து கேளுடா. அதை விட்டுட்டு என்கிட்ட வீம்பா பேசற.  மச்சான்னு அவனை பார்த்து பேச முடியுமா? அதான் உறவும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்னு பணத்தை வீசிட்டு போனவன் தானே நீ.

இப்ப மட்டும் என்ன? தாய் மாமான் உறவு இழுக்குதோ?" என்றதும் கௌசிக்கிற்கு அப்படி தான் என்று சொல்ல முடியவில்லை.
உண்மையில் மிதிலா மீதும், ஹ்ருதேஷ் மீதும் இருந்த கோபங்கள் எல்லாம் வரப்போகும் புது உயிருக்கு முன் தோற்றுவிட்டதாக தான் நினைத்தான்.

தங்கை மிதிலாவுக்கு பிரசவ வலியில் துடிக்கவும், அவளை தூக்கிய நிமிடம், தங்கை வயிற்றில் அசைந்து உருண்ட குழந்தையின் சேட்டையை உணர்ந்தானே.

அந்த நிமிடமே இதயம் தாறுமாறாய் துடித்ததால் தான் கத்தாத கீழே போட்டுட போறேன் என்று பயந்தான்.
ஆனாலும் குழந்தையின் அசைவுகள் அவன் உணர, அவன் மனமும் அசைந்துவிட்டது.
தங்கையும் தங்கை குழந்தையும் நலமாக இருக்க ஆசைக்கொண்டான்.
அதுவும் குழந்தையை காண பேராவல் கொண்டது மனம்.

ஹ்ருதேஷ் வந்துவிட்டால் குழந்தையை எல்லாம் ஆசை தீர்க்க பார்க்க முடியுமா? இப்பொழுதே பார்த்து ரசித்து குழந்தையோடு நிறைய புகைப்படம் எடுத்து சேமிக்க விரும்பினான்.‌

அரை மணி நேரம் செல்வராணி ஏதேதோ திட்டி பேச, ஒன்னும் பாதியுமாக காதில் வாங்கினான்.

''உன்னால உன் தங்கச்சிகிட்ட அவன் பேசறதில்லை அது தெரியும். நட்பை சிதைச்சிட்டியேடினு உன்னை காதலிச்ச இதயம், வெறுக்க வச்சிடாதனு சொல்லிட்டு
உன் தங்கையிடம் அளவா தான் பேசறான். நீ வீசியெறிந்த பணத்தை அவன் உன் தங்கையிடமே தூக்கி போட்டுட்டு இப்பவரை தொடலை தெரியுமா?" என்று கூறிட, கௌசிக் அமைதியாக மாறினான்.

லேபர் வார்டில் மிதிலா துடிப்பதை கேட்க, இவர் வேறு தன்னை திட்டுகின்றாரே என்று செவிடனாக இருக்க முயன்றான்.
செல்வராணிக்கு ஹ்ருதேஷ் போன் செய்தான்.

"அம்மா.. எங்கயிருக்கிங்க? ஹாஸ்பிடல்ல சேர்த்தியா? குழந்தை பிறந்துடுச்சா? நான் பஸ் ஏறிட்டேன்" என்றான்.

"உன்‌ பிரெண்ட் கௌசிக்.. இல்லை இல்லை.. உன்‌ மச்சான் கௌசிக் வந்தான். அவன் தங்கச்சியை தூக்கிட்டு ஹாஸ்பிடல்ல வந்து சேர்த்துட்டு கூட தான் இருக்கான். இன்னும் குழந்தை பிறக்கலை. அவ லேபர் வார்டுல குய்யோ முய்யோனு கத்தறா.
நீ சீக்கிரம் வா. டேய் நேரா ஹாஸ்பிடலுக்கு வந்துடு." என்றார்.

"சரிம்மா. என் பிரெண்ட் கௌசிக் வந்துட்டான்ல பார்த்துப்பான்" என்று வைத்தவனுக்கு கௌசிக் இருக்கவும் தான் நிம்மதி.

ஹ்ருதேஷ் பேச்சை கேட்ட கௌசிக்கிற்கோ ஹ்ருதேஷ் பேச்சில் என்றைக்கும் மாற்றமில்லாமல் வந்த வார்த்தையில் கண்ணீர் வந்தது. ஆனால் கடினப்பட்டு தன்னை மாற்றிக்கொண்டான்.

ஆனால் அந்த கண்ணீரை கன்னத்தில் வரவைக்காமல் விடமாட்டேன்‌ 'மாமா' என்று மிதிலா குழந்தை சபதமெடுத்து பூமிக்கு வந்தான்.

மிதிலா அலறலை தாண்டி குழந்தையின் அழுகை சத்தம் அமுதமாக செவியில் விழவும், "குழந்தை பிறந்துடுச்சா?" என்று செல்வராணியிடம் கேட்டான்.

"காது கேட்கலையா... எனக்கு குழந்தை அழற சத்தம் கேட்டுச்சு." என்று முசுடுத்தனமாகவே பேசினார் செல்வராணி.

'இவங்க இருக்கறப்ப குழந்தையை என்னை பார்க்க விடமாட்டாங்க. கௌசிக் இங்க இருந்து அசிங்கப்பட போற.' என்றாலும் குழந்தை முகத்தை எட்டி நின்று பார்க்க நினைத்தான்.‌

நர்ஸ் பெண்ணோ குழந்தையை துணியில் சுற்றி கொண்டு வர, செல்வராணி ஆசையாக வாங்கினார்.

கௌசிக் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்று ஹ்ருதேஷ் அன்னை அருகே வந்து குழந்தையை பார்த்தான்.

நர்ஸ் பெண்ணோ "உங்க மருமகளுக்கு ஆம்பளை பிள்ளை பிறந்திருக்கு" என்று கொடுக்க, "என் ராசா... ஐய்யம்மைகிட்ட வாங்க" என்றார்.

கண்கள் மூடியிருக்க, காது சிவந்திருக்க, மூக்கு குட்டியூண்டாக, உதடு இளஞ்சிவப்பில் கொட்டாவி விட்டு கைகாலை அசைத்து உடலை முறுக்கியது சிசு.

'ஓ.எம்.ஜி.' என்று ஆச்சரியமாக பார்வையிட, "என் பையன் ஹ்ருதேஷை அப்படியே உறிச்சு வச்சியிருக்கான்." என்று கூற, கௌசிக் தலை தானாக ஆமென்று அசைந்தது.

"ஏலேய்.. இவனை பிடி. நான் இவன் ஆத்தாளை பார்த்துட்டு வர்றேன். இல்லைன்னு வை. உன்‌ பிரெண்ட் போனை போட்டா முதல்ல என் பொண்டாட்டி எப்படியிருக்கானு தான் கேட்பான்‌" என்று குழந்தையை தர, கௌசிக் 'நா..நானா" என்றான்.

"அந்தா.. சேர்ல உட்காரு. மடில வைக்கறேன்" என்று கூற, கௌசிக் அமர்ந்துக் கொண்டான்.

அவன் மடியில் ஹ்ருதேஷ் குழந்தையை கொடுக்க, கௌசிக்கின் கண்கள் ஆனந்த கண்ணீரை பொழிந்தது.

செல்வராணி மிதிலாவை ஒரேட்டு பார்க்க சென்றார்.‌
"கடவுளே... ஆத்தாளையும் பிள்ளையும் நல்லபடியா தந்துட்ட. " என்று இறைவனை வேண்டி மருமகளை சந்திக்க சென்றார்.

இங்கு கௌசிக் தன்‌ மருமகனை கண்டு, உள்ளமெல்லாம் பூரிக்க, குழந்தையோடு ஒன்றினான்.‌

சில புகைப்படம் ப்ளாஷ்லைட் அணைத்துவிட்டு, மடியில் வைத்து புகைப்படம் எடுத்தான். பிறகு அந்த வழியில் சென்ற நர்ஸிடம் போனை தந்து ஒரு சில புகைப்படம் எடுக்க கூறினான்.
ஹ்ருதேஷ் வந்துவிட்டாலோ அல்லது மற்றவர் வந்துவிட்டாலோ தன்னிடமிருந்து குழந்தை அவர்கள் கைக்கு மாறிடுமேன நிறைய புகைப்படம் எடுத்து தள்ளினான்.‌

அதை ஸ்டேடஸ் வேறு வைத்து விட்டப்பின்னே கை அடங்கியது.

'என் கியூட் மாப்பிள்ளையுடன் முதல் செல்பி' என்று ஸ்டேடஸை ஹ்ருதேஷ் பார்த்ததும், தன் குழந்தையை அவன் வைத்திருக்க ஆனந்தப்பட்டான். போன் போட்டோ அல்லது ஸ்டேடஸில் ஏதாவது கேட்டால் முருங்கை மரம் ஏறுவானென ஏதும் கேட்கவில்லை.

'புள்ள பிறந்து ஸ்டேடஸ் வச்சா, உடனே கால் பண்ணறானா?' என்று கௌசிக் நண்பனை வறுத்தான்.

பின்னர் குழந்தையுடன் தான் ஏதேதோ பேசி சிரித்து, பொழுது கழித்திட, தீபா செல்வராகவன் ராஜலிங்கம் என்று வந்து சேர்ந்தனர்.‌

"குழந்தையை கொடுடா" என்று தீபா பிடுங்க நினைக்க, "தொடாம அப்படியே பாருங்க. நான் தரமாட்டேன்" என்றான்.

"பேரனை தூக்கி கொஞ்ச வேண்டாமா?" என்று செல்வராகவன் கேட்க, "வெளிய இருந்து அப்படியே வந்துட்டிங்க. குழந்தையை தரமுடியாது. அப்படியே கொஞ்சுங்க." என்றான்.

தீபாவோ "ஏன்டா.. இத்தனை நாள் தங்கச்சி உறவும் தங்கச்சி புருஷனும் கண்ணுக்கு தெரியலை. இந்த குட்டி மட்டும் கண்ணுக்கு தெரிதா?" என்று கேட்க "கம்முனு இருக்கிங்களா. குழந்தை தூங்கறான்." என்றான்.

ராஜலிங்கம் வரவும் அவரிடம் வேறு வழியின்றி குழந்தையை தந்தான்.
இரண்டு நொடி கடந்திருக்காது செல்வராகவன் தீபாவிடம் இரண்டு இரண்டு நிமிடம் சென்று விட்டு, "என்கிட்ட கொடுங்க நீங்களே குழந்தையை வச்சிக்கிட்டு இருக்கிங்க" என்று அள்ளிக் கொண்டான்.

இதுவரை குழந்தையை தூக்கவே தெரியாதவன் லாவகமாக தங்கை மகனை அணைத்து நெஞ்சோடு இதமாக வைத்துக் கொண்டான்.
செல்வராணியோ "மிதிலா நார்மல் வார்டுக்கு மாத்திட்டாங்க. குழந்தையை கேட்கறாங்க" என்று கூறி வந்து சேர, "குழந்தை தூங்கறான் என்னிடம் இருக்கட்டும்" என்றவனிடம் நர்ஸோ "சார்.. பீட் பண்ணிட்டப் பிறகு குழந்தையை தூக்கிக்கோங்க" என்றதும் தான் மிதிலாவிடம் அவனாக கொண்டு சென்று நீட்டினான்.

சோர்வுடன் குழந்தையை வாங்கியவள் கௌசிக்கை கண்டு குழந்தையை காண, "எவ்ளோ நேரம் ஆகும்? என்னை கூப்பிடு நான் வந்து குழந்தையை திரும்ப எடுத்துக்கறேன்" என்று கூற, மிதிலா பார்வை வாசலை ஏறிட்டு ஏமாற்றத்துடன் குழந்தையை காண, "ஹ்ருதேஷ் பஸ் ஏறிட்டான். ஆன் தி வேல இருக்கான்.‌ குழந்தை பிறந்தது தெரியப்படுத்திட்டேன். டிராவல் நேரம் ஆகும்ல வந்துட்டு இருப்பான்." என்று தங்கை கேட்காமலே கூறினான் கௌசிக்.

தீபாவோ "டேய் வெளியே வந்தா தான் அவ பால் தர முடியும்" என்றதும் தான் அறையிலிருந்து வெளியேறினான்.

தீபாவும் செல்வராணியும் அறையில் இருக்க, குழந்தை பால் குடித்ததும் அவர்களே வைத்துக் கொள்வார்களோ என்று அடிக்கடி "முடிஞ்சுதா? குழந்தையை எடுத்துக்கவா?" என்று கதவுக்கு வெளியே கேட்டுக் கொண்டேயிருந்தான்.

கால் மணி நேரம் கழித்து மிதிலா பாலை தந்துவிட்டு அசதியில் அவள் உறங்க, குழந்தையும் உறங்கியது. ஆனால் குழந்தை தாய்மாமாவான கௌசிக் மடியில் தான் உறங்கினான்.‌

ஆளாளுக்கு கேட்டும், குழந்தை தூங்கறான்ல சத்தம் போடாதிங்க" என்று கடித்து குதறாத குறையில் விரட்டினான்.

ஹ்ருதேஷ் பெற்றவர்களும் கௌசிக் தூக்கியதால் அவனிஷ்டத்திற்கு விட்டுவிட்டார்கள். தீபாவும் செல்வராகவனும் கூட அதற்கு மன்னிப்பு கோர, "அட ஹ்ருதேஷ் வந்தா குழந்தையை தூக்க முடியாதுனு இப்ப வச்சிட்டு இருக்கார். இருக்கட்டும்.. இனி நம்ம கூட தானே குழந்தை இருக்க போகுது." என்று தேற்றிக் கொண்டார்கள்.

மிதிலா லேசாக கண் விழித்த நேரம் கூட அண்ணன் தன் குழந்தையை பார்த்து கொள்ளவும் அசதியில் உறங்கினாள்.

கௌசிக் குழந்தையின் கை விரலில் தன் ஆள்காட்டி விரலை கொடுத்திட, குழந்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டதும் அதையே பார்த்து மகிழ்ந்தான்.‌

தன்னருகே நிழலாட, "குழந்தையெல்லாம் இப்ப தரமுடியாது. செல்ல குட்டி தூங்குறான்." என்று நிமிராமலேயே கூற, எதிர்புறம் எவ்வித சத்தமின்றி நிற்கவும் விழி நிமிர்த்தினான். அங்கே ஷ்ருதேஷ் கௌசிக் கையிலிருந்த தனது உதிரத்தை கண்டு பேச்சு வராமல் பார்வையிட்டான்.‌

-தொடரும்.

https://onlinetamilnovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-32/

நின் பிரேமம் என் சிநேகம்-31
அத்தியாயம்-31

தீபா கௌசிக் சென்றதும் செல்வராணி பணத்தை எடுத்து, "உங்கண்ணா கடை வச்சதுக்கு என் பையன் தான் பணத்தை தந்தானா?" என்று கேட்க, ஹ்ருதேஷ் கோபமாக நடந்துக்கொண்டதும், கௌசிக் செய்த செயலிலும் துவண்ட மிதிலா, இவர்கள் வேறு கேள்வி கேட்டு தொலைக்கின்றனர் என்று "ஆமா." என்றாள்‌.

"இவனுக்கு ஏது பணம்?" என்றதும்,  "தங்க அரைஞான் கொடி வச்சி பணத்தை தந்தார்." என்றதும், செல்வராணியோ "தங்கம் விற்கற விலைக்கு அதை திருடி எடுத்து தந்திருக்கான்." என்று பேச, "ப்ளீஸ்... எனக்கு உங்களோட வாதம் செய்ய முடியாது. ஏற்கனவே நொந்துட்டேன். ரொம்ப டயர்டா இருக்கு. என்னை விட்டுடுங்க" என்று அழாத குறையாக கும்பிட்டாள்.

செல்வராணியோ அவளை உட்கார வைத்து, கூட அமர்ந்தார்.

"நான் இங்க இருக்கறது உங்களை தொந்தரவு செய்யறதுக்குயில்லை. உன்னை எனக்கு முதல்ல பிடிக்காது. உன்னை என்னென்னவோ ஏசி விட்டுயிருக்கேன்.

ஏன் இப்பவும் பிடிக்குமானு கேட்டா சந்தேகம் தான்‌. உன்னை கல்யாணம் செய்தப்ப, என் மகனை என்னிடமிருந்து மொத்தமா பிரிச்சிடுவியோனு பயந்தேன்.
இப்பவும் அந்த பயமிருக்கு. ஆனா என் பையன் மேல நம்பிக்கை வந்துடுச்சு. எவ்ளோ பேசியும் என்னையும் உன்னையும் சரியா நகர்த்திட்டு பேறான்.
இந்நேரம் அவன் பொறுமை பறந்து வீட்டை விட்டு போங்கனு கத்தலை. அதுவரை சந்தோஷம் தான்.

நான் ஏன் இன்னும் இங்க இருக்கேன் தெரியுமா?'' என்று கேட்க "உங்க பையன் வீடு உரிமையா கூடவேயிருக்கிங்க" என்றாள்.

"அதுவும் உண்மை தான்" என்று சிரித்தவர், "ஆனா அதுக்காக மட்டுமில்லை. என் பையனை காதலிச்சு, அவன் ஆசைக்கு இணங்கி, உன்னை இழந்து நின்று, கர்ப்பமாகி முழிக்கற.

எதுலையும் சூதனமா இல்லையா.? இல்லை... என் பேரனுக்கு உலகத்தை பார்க்கற அவசரமோ?

அவனும் வேலைக்கு சேர்ந்த புதுசு.
இந்த நிலையில் நீங்க எப்படி வாழறிங்கனு தெரியலை. ஏனோதானோனு வாழ்ந்து, பணத்தை செலவழிச்சு உடலையும் கவனிக்காம போய், உன் வீட்ல என்‌ பையன் அவப்பெயரை வாங்க எனக்கு விருப்பமில்லை.

அதான் முதல்ல கொஞ்ச நாள் தூரயிருந்து கவனிச்சேன்.
அவன் வேலைக்கு போறான். நீ படிக்க போற. சமைக்கறதுக்கு பதிலா ஆர்டர் தந்து திண்ணுட்டு இருந்திங்க.

அதெல்லாம் குழந்தைக்கு ஆரோக்கியமா இருக்குமா? இல்லை உங்களுக்கு தான் ஆரோக்கியமா இருக்குமா? எத்தனை காலத்துக்கு ஆர்டர் தந்து சாப்பிடறது?

அதான் உன்னை சமைச்சி சாப்பிட சொன்னேன். உன் ருசி எனக்கு தெரியாது.
அதனால காலையிலையும் மதியமும் நீ சமைச்சதை ருசி பார்த்து வச்சிக்கிட்டேன்.‌

நீ படிக்க போய் சோர்ந்து வர்றப்ப நைட் நான் சமைச்சி வச்சேன்.

நடுவுல படிப்பு முக்கியமானு கேட்டேன். முடியலைனா படிப்பை நிறுத்திட்டா கூட நீ வீட்ல ரெஸ்ட் எடுப்பனு நினைச்சேன். ஆனா நீ படிப்பும் பார்த்துப்பேன்னு வீம்பு பிடிச்ச. பிடிவாதமா இருந்த.

இங்க இருக்கறது நான் உன்னை கவனிச்சிக்க தான். உனக்கோ எங்க வீட்டு வாரிசுக்கோ எதுவும் ஆகாம கூடயிருந்து கவனிச்சிக்க மட்டும் தான் இருக்கேன். என்ன.. எனக்கு உன் புருஷன் கணக்கா குழஞ்சிட்டு பேசிட்டு பின்னாடி சுத்த வராது‌.

நேத்து கூட ஐந்தாம் மாசம் வளையல் போட்டு விட்டா இந்த பொண்ணு அதுக்கும் மூஞ்சை தூக்குமானு யோசிச்சிட்டே வந்தேன். நல்லவேளை உங்கம்மா வரவும் அழகா வளையல் போட்டுக்கிட்ட." என்றார்.

"நான் உங்களை அன்பா பார்த்துக்கலையே. பிறகு இந்தளவு என்னை பார்த்துக்க யோசித்திருக்கிங்க? உங்க பையன் உயிர் என் வயித்துல வளர்வதாலையா?" என்று கேட்டாள். லேசாக கண்ணை துடைத்து கேட்டாள்.

"நீ அன்பா பார்த்துக்கலையா? யார் சொன்னா?" என்று கேட்க, மிதிலா விழித்தாள்.‌

"அந்தா.. அது என்னது?" என்றார் சின்ன மெத்தையை காட்டி.

"சிங்கிள் காட்.. ஐ மீன் பெட்" என்றாள்.‌

"யாருக்கு வாங்கின?" என்றார் செல்வராணி.

"யாருக்குன்னா.. உங்களுக்கு தான்‌. வந்ததிலருந்து பாய்ல படுத்திங்க.  எந்திரிக்க கஷ்டப்படுவதை பார்த்தேன். சோ சிங்கிள் கார்ட் பெட் ஆர்டர் போட்டேன்‌." என்றாள் மிதிலா.

"நான் சொல்லலை. என்‌ பையன் சொல்லலை. நீயா எனக்குனு செய்த. சமைச்சி போட்டுட்டு போறப்ப எனக்கு வசதியா எல்லாம் செய்துட்டு போவ. வந்ததும் நான் ஏதாவது பேசினா கூட என்னை நீ நேரிடையா கரிச்சுக் கொட்டுவ. இங்க நல்லவ மாதிரி பேசி என் பையனிடம் நாடகமாடாம, அவன் இருக்கறப்பவே பேசுவ.
நீ நடிக்கலையே.
அப்படியிருக்க.. ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்னு தெரியாதா. நான் உனக்காக தான் இருக்கேன்.‌ என் பேரப்புள்ளைக்காக தான் இருக்கேன். அப்பறம் தான் என் பையனுக்காக.
இந்த இரண்டும் அடிச்சிட்டு பணத்தை மாறி மாறி தூக்கி போட்டு விளையாடுதுங்களே. இதுங்களை எப்படியும் என் பேரன் பார்த்துப்பான்." என்று கூறினார்.

மிதிலாவோ "பேரன் இல்லாம பேத்தியா இருந்தா என்னை கரிச்சி கொட்டுவிங்களா?" என்றாள் மிதிலா.

செல்வராணியோ, "மாட்டேன்... சாமியா வளர்ப்பேன். ஏன்னா ஹ்ருதேஷுக்கு பிறவு ஒரு பெண் குழந்தை எனக்கு பிறந்து இருந்துச்சு. அப்பறம் எனக்கு கொடுப்பினை இல்லை அல்ப ஆயுசுல போயிடுச்சு‌. அதனால பொட்டப்பிள்ளை வந்தாலும் ஜம்முனு பார்த்துப்பேன்." என்றதும் மிதிலா சிரித்தாள்.

முதல் முறையாக மாமியாரும் மருமகளும், ஒன்றாக முறுவலிட்டனர்.‌

"நான் ஒன்னும் அவ்ளோ நல்ல மருமக கிடையாது." என்றாள்‌.

"நானும் தான் நல்ல மாமியார் கிடையாது.." என்று செல்வராணி தோளைக் குலுக்கினார்.‌

"சரி இந்தா.. பணத்தை ஒழுங்கா வை" என்றார்.

மிதிலா அறைக்கு வந்தப்பொழுது,  ஹ்ருதேஷ் சீலிங்கை பார்த்தவாறு வெறித்திருந்தான்.

"ஹ்ருத் பீரோல வைக்கறேன்" என்று கூற, "ஏதாவது பேசிட போறேன். வாயை மூடிட்டு போடி" என்று கர்ஜித்தான்.‌ அந்த கர்ஜனை ஹால் வரை கேட்டது.

அடிக்கடி நடக்கும் முகத்திருப்பல் சண்டை போல இதுவும் கடந்துவிடுமென மிதிலா நினைத்துக் கொண்டாள்.

தீபா தான் பேருந்து ஏறியதும் போன் போட்டு பேச, "ஹ்ருதேஷ் உம்முனு இருக்கார்மா. உன் பையனுக்கு கிறுக்கா பிடிச்சியிருக்கு. அவன் பிரெண்டை தான் காதலிச்சேன். அவன் பிரெண்ட் நல்லவன் தானே. பிறகு என்னவாம். துரோகம் அதுயிதுனு. இன்னொரு முறை பேசினா சும்மாயிருக்க மாட்டேன். ஹ்ருதேஷ் என்னை கத்நதிட்டான் தெரியுமா" என்று கத்த கௌசிக் காதில் தெளிவாக விழுந்தது.

எப்படியும் புருஷனும் பொண்டாட்டியும் சமாதானம் ஆவாங்க' என்று கௌசிக் பெரிதாக நினைக்கவில்லை‌.

ஆனால் அன்றைய இரவு சாப்பிட வரக்கூறும் பொழுது "எனக்கு பசிக்கலை" என்று மறுத்ததும் தான் மிதிலா செல்வராணியை பார்க்க, "அவன் இரண்டு நாள் சாப்பிடாட்டியும் திடக்காத்திரமா இருப்பான். நீ அப்படியா? தலைசுத்தும் மயக்கம் வரும் குழந்தைக்கு சத்து சேரணும். நீ சாப்பிடு. வயித்துல பிள்ளையை வச்சியிருக்கறவங்க யாரும் குடும்ப சண்டை வந்தா சாப்பிடாம தவிர்க்கணும்னு எந்த ரூல்ஸும் இல்லை. நல்லா தெம்பா சாப்பிட்டு புருஷனோட சண்டை போடலாம்" என்று சாப்பிட வைத்தார்.

மிதிலாவும் ஹ்ருதேஷ் சாப்பிடாததை கண்டுக்கொள்ளாமல் விட்டாள்.

அடுத்த நாள் விடியலில் எழுந்த ஹ்ருதேஷ் மடமடவென கிளம்பி அலுவலகம் விரைந்தான்.
காலை டிபன் வேண்டாம் என்று மறுத்துவிட்டான். மதியம் உணவும் எடுத்துக்கக் கூறியும் மிதிலாவை முறைத்து விட்டு கடந்தான்‌.

செல்வராணியோ ''அவளே பிள்ளைத்தாச்சி கஷ்டப்பட்டு செய்தா சாப்பிடாம போறடா" என்று கேட்க, நின்று பதிலளிக்காமல் அகன்றான்.‌

மிதிலா நிதானமாக கல்லூரிக்கு கிளம்பினாள்.
இப்பொழுது எல்லாம் நின்றுக்கொண்டே பாடம் கேட்பதற்கு பதிலாக, ஒரு சேரை போட்டு படிப்பை கவனிப்பாள்.

துணிக்கு அளவெடுத்து கவனம் செலுத்தும் போது மட்டும் எழுந்துக் கொள்வாள்.

இதில் சீனியர் மட்டும் கேலி கிண்டல் செய்து அவளை காயப்படுத்த நினைத்தனர். மிதிலாவோ, "வாட்ஸ் யுவர் பிராப்ளம். இங்க நிறைய பேர் லிவ் இன் ரிலேஷன்ஷிப்ல இருக்கிங்க. அதெல்லாம் எனக்கு தெரியாதுனு நினைக்காதிங்க. என்னை சொல்லறதுக்கு முன்ன உங்க முதுகுல இருக்கற அழுக்கை பாருங்க.
அப்பறம்.. இதெல்லாம் ஹ்ருதேஷ் காதுக்கு போகாத வரை நீங்க தப்பிக்கலாம். அவன் வந்தா அப்பறம் பேசற ஒருத்தரையும் சும்மா விடமாட்டான்.' என்று எச்சரித்துயிருந்தாள்.

அடுத்தடுத்த நாளில் ஹ்ருதேஷ் தன்னிடம் அளந்து பேசுவது, வருத்தமும் கோபமும் கொண்டு பார்ப்பது என்று இருந்தான்.

மிதிலா எது பேசினாலும், "சுயநலமா என் பிரெண்ட்ஷிப்பை கலைச்சிட்டியேடி" என்று முகம் காட்டுவான்.

அதுவே மிதிலாவுக்கு வெறுப்பை காட்டுவதாக தெரிய அவளுமே சோர்ந்துவிட்டாள்.

அதனால் ஹ்ருதேஷ் பேசாதது, அவனது தினசரி வேலை, ஒட்டம் என்று அது பாட்டிற்கு கடந்தது.

ஹ்ருதேஷ் பழங்கள் நட்ஸ் காய்கறி எல்லாம் வாங்கி வந்து நீட்டுவான்.
செல்வராணி முன்பை விட நன்றாக கவனிப்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள, அலுவலக வேலையில் மூழ்கினான்.

"கால் வலிக்கு... வீக்கமா இருக்கு ஹ்ருத்" என்று கூறினால், இரவில் கால் அமுக்கி விடுவான்.

"ஹ்ருத்... இன்னிக்கு இப்ப இந்த சாட் சாப்பிடணும் போல இருக்கு லேசா பசிக்கு" என்றால் உடனடியாக நள்ளிரவை தாண்டினாலும் ஆர்டர் போட்டு வாங்குவான்.

"ஹ்ருத்... இங்க பாரு எல்லா டிரஸுமே பத்தலை" என்றதற்கு இலகுவாக அணிய, நைட்டி மெத்தட் ப்ராக் வாங்கி கொடுத்தான்.

"முன்ன மாதிரி பேசமாட்டேங்கற ஹ்ருத்" என்றால் மட்டும், "என் நட்பை சிதைச்சிட்டேன்னு உன் மேல கோபம் வருது மிதிலா. எங்க அந்த கோபம் வெறுப்பா மாறிடுமோனு பயமாயிருக்கு." என்று படுத்து விட்டான்.

மிதிலாவுமே அதன்பிறகு அவனை தோன்டி துருவி, எதையும் பேசவில்லை. அவளுக்கும் லேசான பயம் கவ்வியது.

நட்பை பிரித்தவளாகவே ஹ்ருதேஷ் பார்த்து தன் மீது வெறுப்பு விழுந்து விட்டால்? அதை தாங்கும் வல்லமை தற்போது கிடையாது.

இப்படியே மாதங்கள் நகர, படிப்புக்கு சில நாட்கள் விடுப்பு எடுத்துவிட்டு, ஊருக்கு வர முடிவெடுத்தார்கள். ஏனென்றால் மிதிலாவுக்கு எட்டாம் மாதம் முடியும் தருவாயில் இருந்தாள்.

ஹ்ருதேஷ் மிதிலா செல்வராணி மூவருமே சேலம் வந்தார்கள்.

நேராக ஹ்ருதேஷ் வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், தீபா-செல்வராகவன் இருவரும் மகளை காண வந்தார்கள்.

"நாளைக்கு நம்ம வீட்டுக்கு எப்ப வருவ? நல்ல நேரம் பார்க்கணும்" என்று கூற, "நீ அங்க போனா... நான் அங்க வரமாட்டேன். இப்பவே சொல்லிடறேன். பிறகு அங்க போயிட்டு என்னை பார்க்க வா ஹ்ருத்னு கேட்காத" என்றான் ஹ்ருதேஷ்.

தீபா மூலமாக ஹ்ருதேஷ் கௌசிக் நட்பு இன்னமும் விரிசலில் இருப்பதும், கௌசிக் பெங்களுரில் அன்று பணத்தை தந்ததும், ஹ்ருதேஷ் மகள் முகத்தில் விசியதை கேட்டறிந்ததில், ஹ்ருதேஷ் பேசியதை கேட்டு கோபம் வரவில்லை.

"அத்தை இந்தயிந்த ஹாஸ்பிடல்ல எங்க கம்பெனி இன்ஸ்சூரன்ஸ் இருக்கு. மிதிலாவுக்கு எது பிடிக்குதோ, நல்ல ஹாஸ்பிடல்லோ அதுல செக்கப் பாருங்க." என்று கார்ட்டை நீட்டினான். அதில் மிதிலா மனைவி என்ற பதவியில் இன்சூரன்ஸ் கார்ட் இருந்தது.

"மாப்பிள்ளைக்கு இன்னமும் கோபம் போகலையா?" என்று செல்வராகவன் கேட்க, "வலிக்குது மாமா... கௌசிக் நட்பை முன்ன இழந்ததா நினைக்கலை. எப்ப பணத்தை தந்துட்டு போனானோ அப்ப நட்பை மொத்தமா இழந்துட்டோமோனா வலிக்கு." என்று கவலைப்பட்டான்.

ராஜலிங்கமோ, "டேய்.. ஏதோ அடுத்த பஸ்ஸுக்கு போகணும்னு சொன்ன. பேசிட்டே இருக்க?" என்று நினைவுப்படுத்த, மிதிலாவை மனமேயில்லாமல் தன் வீட்டில் விட்டுவிட்டு  பெங்களூர் பறந்தான்.

ஹ்ருதேஷ் இல்லாமல் தன் பிரசவ காலத்தை அவன் வீட்டில் கழிப்பதற்காக, அவனது அறையில் தங்கினாள். அம்மா அப்பா கூட மாப்பிள்ளை அப்படி தான் சொல்வார். நீ நம்ம வீட்டுக்கு வா" என்று தீபா வற்புறுத்த, "எனக்கே கௌசிக் அண்ணா முகம் காட்டினா, வரவர இவங்க நட்பை கெடுத்துட்டேனோனு கஷ்டமாயிருக்கும்மா. நான் இங்கயே இருக்கேன் விடு" என்றாள்.

தங்கை தன் வீட்டுக்கு வராமல் அம்மா அப்பா மட்டும் வரவும், கௌசிக் குழம்ப, "உனக்கென்னடா... இப்ப சந்தோஷமா. நீ பண்ண வேலைக்கு அங்க மாப்பிள்ளை...‌ இல்லை.. உன் பிரெண்ட் ஹ்ருதேஷ், உன் தங்கையிடம் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?    'நட்பை சிதைச்சிட்டேன்னு உன் மேல கோபம் வருது மிதிலா. எங்க அந்த கோபம் வெறுப்பா மாறிடுமோனு பயமாயிருக்கு.' சொல்லியிருக்கார். சொன்னது போதாதுனு அவளோட பேசறதே இல்லையாம். இனி இங்க அவளா வரமாட்டா" என்று தீபா புலம்ப, கௌசிக் இப்பவரை ஹ்ருதேஷ் மிதிலா பேசிக்கறது இல்லையா? சண்டை போட்டா அடுத்து கட்டிப்பாளே' என்று எண்ணியவன், ஹ்ருதேஷ் தங்கை மசக்கை என்றும் பாராமல் பணத்தை அவளிடம் வீசியது மனக்கண்ணில் வந்து மோதியது.

-தொடரும்.

https://onlinetamilnovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-31/

நின் பிரேமம் என் சிநேகம்-30
அத்தியாயம்-30

இதற்கு முன் வந்து தங்கிய பொழுது இருந்ததை விட வீடு முழுக்க தன் தங்கையின் கைவண்ணம் மிளிர்வதை கண்டான்.

'எப்படி மாத்தி வச்சியிருக்கா? ஒருயிடமும் முன்ன இருந்த மாதிரி இல்லை. நம்ம வீட்லயே அவ முடிவு எடுப்பா. இங்கயும் ஹ்ருதேஷை முடிவெடுக்கவே விடமாட்டா போல.' என்று ஹ்ருதேஷை பார்த்தான்.

காதலியை ஒளிந்து நின்று காணும் காதலனை போல, கள்ளப்பார்வை போல நண்பனை பார்க்க தயங்கி, கெத்து விடாமல் கௌசிக் பார்வையிட, ஹ்ருதேஷ் எல்லாம் நேர்பட பார்த்து தான் கூர்ந்தாராய்ந்தான்.

மதியம் போல செல்வராணி தீபா சமையல். முன்பு வேண்டா வெறுப்பாய் பேசுவார்கள். இன்றும் அப்படி தான். மிதிலாவை பற்றி புகார் வாசித்து பட்டியலை ரயில் போல ஒப்பித்தார்.

மிதிலாவோ அடிக்கடி ஹ்ருதேஷை பார்த்து முடிக்க, 'இந்தம்மாவும் சும்மாயிருக்க மாட்டறாங்க' என்றவன், "அம்மா... கொஞ்சம் குறை சொல்லறதை நிறுத்தறியா?" என்றான்.‌

"இப்படி தான்... உங்க பொண்ணை ஒன்னு சொல்லிட்டா உடனே மூக்கு வேர்க்க வந்துடுவான்." என்று கூற, "அட தனியா போய் மிதிலாவை திட்டி புத்திமதி சொல்வார். நாங்க வர்றப்ப கூட கை ஓங்கி திட்டினார்." என்றார்.

"எதுக்கு கை ஓங்கினான்?" என்று கேட்க, "அ..அது தெரியாது. வர்றப்ப கையை ஓங்கி மிதிலாவை அடிக்க வந்தவர் ஆனா அடிக்கலை." என்று மட்டும் உரைத்திடவும், மகனை கவனித்தார்.

"அதை விடுங்க.. படிப்பெல்லாம் இப்ப உங்க பொண்ணுக்கு தேவையா? தினமும் நிற்க முடியலை நடக்க முடியலைனு போன்ல பிரெண்ட் கூட புலம்பறா, அதுக்கு உடம்பை கவனிச்சிட்டா நல்லதுல்ல? ஆனா அதை காதுல போடறது கிடையாது." என்றார் செல்வராணி.

தீபாவோ என்னவென்று உரைப்பார். பேஷன் டிசைனிங் படிக்க அந்தளவு வாதம் செய்து சேர்ந்தாளே. சொல்லப் போனால் கௌசிக் அளவிற்கு இவளுக்கும் படிப்பு செலவு ஆனது. இதில் நடுநடுவே பேபரிக் க்ளாத் அதுயிது என பணத்தை கரைப்பாள்.

எதிர்காலத்தில் தனியாக தானே ஆடைவடிவமைப்பாளராக மாறி, பௌட்டிக் வைப்பதாக பேசுவாள். இவளிடம் வம்பு வளர்த்தால் சாப்பிடாமல் கூட மிதிலா நினைத்ததை சாதிக்கும் ரகமாயிற்றே.

ஏதோ செல்வராணி பேசவும் மறுத்து பேசாமல் கேட்டு கொண்டார்.

ஹ்ருதேஷ் கௌசிக்கிடம் பேச வரும் போது, கௌசிக் அவனாக "அம்மா நைட் வர்றேன்" என்று கிளம்பினான்.‌

"கௌசிக்.. எங்க போற? நானும் வர்றேன்டா" என்று ஹ்ருதேஷ் ஓடிவர, அவன் கைப்பிடித்திட உதறிவிட்டு வேகமாக சென்றான்.‌

"எங்கத்த போறான். என் மேல கோபம் போகலையா?" என்று தீபாவிடம் கேட்டான்.

"வீட்லயும் பேசறதை குறைச்சிட்டான். இங்க கூட கட்டாயப்படுத்தி தான் வந்தான். நான் என் இஷ்டத்துல கிளம்பிட்டா விட்டுடுங்கனு சொல்லி தான் துணைக்கு வந்தான்." என்று கூறவும், ஹ்ருதேஷ் நண்பனாக எப்பொழுது கோபம் நீங்கி பேசுவானோ என்று தவித்தான்.

இரவு சாப்பிட தீபா அழைத்த போது கூட, நான் தியேட்டர்ல இருக்கேன். இங்க பக்கத்தில சாப்பிட்டேன். படம் பார்த்து வர லேட்டாகும்." என்று மட்டும் சொல்லிவிட்டு துண்டித்தான்.

அன்றைய நாளில் இரண்டு படம் சினிமா தியேட்டரில் பார்த்து ஹ்ருதேஷிடம் பேசுவதை தவிர்க்க இப்படி திட்டம் தீட்டினான்.‌

ஹ்ருதேஷும் வாசலுக்கும் அறைக்கும் தவமிருந்தான்.

தீபா செல்வராணியுடன் வந்து கதை பேசினார். நடுநடுவே இப்படி பொசுக்குனு கல்யாணம் வச்சதுல சொந்த பந்தம் எல்லாம் நோண்டி நோண்டி கேட்குதுங்க‌. அப்படி கல்யாணம் செய்யணும், இப்படி செய்யணும்னு கனவெல்லாம் கண்டதாக இருவருமே சலித்து பேசி உறங்கினார்கள்.

மகன் வாசல் வரை வந்து  செல்வதை கண்ட செல்வராணியோ, "ஏன்டா.. தூக்கம் வரலையா?" என்று கேட்க "இல்லைம்மா." என்று ஹ்ருதேஷ் அறைக்கும் வாசலுக்கும் நடந்தான்.

"உன் பிரெண்ட் நைட் ஷோ முடிச்சிட்டு தான் வருவான். மூடிட்டு படு ஹ்ருத். அடிக்கடி என் தூக்கத்தை வேற கெடுக்கற." என்று அரை உறக்கத்தில் மிதிலா வேறு திட்டினாள்.

கௌசிக் வரும் போது ஹ்ருதேஷ் கதவை திறந்து விட, "மொழி தெரியாத ஊர். எப்ப மொழியால சண்டை வந்து அடிச்சிப்பாங்கனு தெரியாது. நீ பாட்டுக்கு வெளியே ஊர் சுத்தற" என்று நண்பனை நிறுத்தி கேட்க, "என்னை நான் பார்த்துப்பேன். உன் காதலியை கண்ணுக்குள்ள வச்சி பார்த்துக்கோ. நட்பு மாதிரி காதலுக்கு துரோகம் பண்ணிடாத" என்று அன்னை தீபா அருகே சென்று படுத்துக் கொண்டான்.

"கௌசிக் உள்ள வந்து தூங்குடா." என்று ஹ்ருதேஷ் கூப்பிட்டவனை கௌசிக் போர்வை போர்த்தி இமை மூடிட, 'காதலுக்கு துரோகம் பண்ணிடாதேனா சொல்லறான்.' என்று அறைக்குள் மிதிலா அருகே ஹ்ருதேஷ் சென்றான்.

கௌசிக் வந்துவிட்டான் என்றதும் ஹ்ருதேஷ் நிம்மதியாக தூங்கினான்.

அடுத்த நாள் டீ குடிக்க, தீபா செல்வராணி பேசிக் கொண்டு இருக்கவும், கௌசிக் அருகே அமர போக அவனோ எழ நினைக்கவும், மிதிலா அருகே சென்று அமர்ந்தான்.

'நேத்து உங்கண்ணா ஏதோ காதலுக்கு துரோகம் பண்ணாதனு சொல்லறான். ஏன்டி.. உன்னை அடிக்க கை ஓங்கவும் அப்படி சொல்லிருப்பானோ?" என்று வினா தொடுக்க, "பக்கத்து வீட்டு பொண்ணு உன்னை ரூட் விடறதா அம்மாவிடம் சொல்லி அவளை எல்லாம் வளையல் போட கூப்பிடாதனு சொன்னேன். அப்ப அந்த லூசு அதை கேட்டுச்சு. அந்த பொண்ணு வந்ததும், உன்னையும் உத்து உத்து பார்த்தான். அதனால அப்படி சொல்லியிருக்கலாம். நீ என்னிடமே துள்ளி விளையாடிட்ட, அவளிடம் விளையாடாதனு சொல்லிருப்பான்." என்று கிசுகிசுப்பாய் கூறினாள்.
"அடிங்க.. என்னை பாத்தா எப்படி தெரியுது உனக்கும் உங்கண்ணாவுக்கும்" என்றவன் அவளை கிள்ள வழி தேடினான். இடையில் கிள்ள பயந்து, மோதிரவிரலில் அழுத்தம் தந்து பிடிக்க, ''விடு ஹ்ருத் கையை. இங்க பாரு.. ஆல்ரெடி வீக்கமா இருக்கு" என்று மோதிர விரலை காட்டினாள்.

"ஏ... என்ன இது? இவ்ளோ டைட்டா போட்டிருக்க. கொஞ்சம் லூசான மோதிரத்தை போடலாம்ல" என்று கடிய, "ஹ்ருத்... கை கால் வீங்குதுடா" என்று கூறியதும் தான் அவளது கை கால்களை பார்த்தான்.

"எ...என்னாச்சு." என்று கேட்க, "நீர்க் கோர்த்தா அப்படி தான்டா இருக்கும்" என்று செல்வராணி கூறினார்.

"இப்படி தான்... ஏதாவது பிராப்ளம்னு சொன்னா.. உடனே அப்படி தான் இருக்கும்னு ஒரே போடா போடறது." என்று ஹ்ருதேஷ் காதை கடிக்க, "எங்கம்மா தான் ஒரே பிள்ளையை பெத்தாங்க. பேசாம நீ உங்கம்மாவிடம் கேளு." என்று கூறிவிட, அவர்களும் "அது அப்படி தான்டி இருக்கும்.' என்றார்.

டிவியில் படம் ஓடவும், கௌசிக் பார்த்துக்கொண்டிருக்க, ஹ்ருதேஷ் டிவி சேனலை மாற்றினான்.‌

"மா... அதையே வைங்க" என்று வீட்டு நினைவில் கூறினான் கௌசிக். தீபாவிடம் தான் ரிமோர்ட் இருந்ததாக எண்ணின்ன். கூறிவிட்ட பின்னோ ஹ்ருதேஷ் கையில் ரிமோர்ட் இருக்க, முகத்தை தூக்கி வைத்து போனில் சோஷியல் மீடியாவில் உலாவினான்.‌

"டேய் அதே படம் வச்சிட்டேன்." என்று ஹ்ருதேஷ் கூற, "அம்மா... எப்ப கிளம்ப போற?" என்று சலித்தபடி தீபாவிடம் கேட்கவும், ''சாப்பிட்டு கிளம்பலாம்" என்றார்.

"ஏன் அத்த... இருந்துட்டு போகலாமே" என்று ஹ்ருதேஷ் கூற ''அவன் கடையை விட்டுட்டு வந்திருக்கான். இங்க வரவே மாட்டேன்னு சொன்னான். அப்பறம் கால் வேற பிசகிடுச்சுனு தான் துணைக்கு அவங்க அப்பா அதட்டி அனுப்பி விட்டார். நேத்தே கிளம்பலாம்னு தான் காலையில வந்தோம். மிதிலா தான் ஒரே அடம்." என்றார்.‌

"சரிங்க அத்தை" என்று ஹ்ருதேஷ் கூறிவிட்டான்.‌

தீபாவோ "இப்ப படிப்பும் செக்கப்பும் இங்க பார்க்கறிங்க. நிற மாசம் ஆனா நம்மூர்ல பிரசவம் பார்க்கலாம். ஏன்னா.. எனக்கும் பக்கத்துல வீடு இருந்தா பார்த்துப்பேன். இங்க ஏதாவதுனா ஓட முடியாது." என்றார்.‌

ஹ்ருதேஷ் யோசித்தவனாக மிதிலாவை பார்க்க, "எப்படியும் நைன்த் மந்த் காலேஜ்ல சொல்லிட்டு லீவு எடுக்கணும். எனக்கும் அங்கன்னா பெட்டர்." என்றாள்.

ஹ்ருதேஷ் "சரிங்க அத்தை... ஆனா வளைகாப்பு எதுவும் வேண்டாம் அத்தை.
குழந்தை ஓன்பதாம் மாசம் பிறந்தா குறை மாசத்துல பிறந்ததா காட்டிப்போம். என்னால மிதிலா அசிங்கப்பட்டவரை போதும்" என்றதும் தீபா சம்மதமாய் தலையாட்டி கொண்டார்.

அவருக்கு விமர்சையாக செய்ய ஆசையிருந்தாலும், ஊர் வாயும் உறவுகள் வாயும் ஏதாவது பேசி காயப்படுத்தும் என்றதால் தலையாட்டி விட்டார்கள்.

''அம்மா... நீயும் சேலம் கிளம்பறதா இருந்தா போ. எனக்கு லீவு எதுவும் இல்லை." என்றான்.

"நான் இப்ப போறேன். டிக்கெட் எடுனு உன்னை சொல்லலையே. எனக்கு எப்ப போகணும்னு எனக்கு தெரியும்." என்று வெடுக்கென கூறினார்.‌

ஹ்ருதேஷ் மெதுவாக மிதிலாவை காண, அவளோ நெருப்பை விழுங்கியவளாக நின்றாள்.

மதியம் சாப்பிட ஹ்ருதேஷோ "கௌசிக்கு வைடி" என்று கூற, "கன்சீவா இருப்பது நான்டா" என்றதற்கு, குழம்பை முன்னே வைத்தான்.‌

தீபா பரிமாறினால் சாப்பிடுபவன், தங்கை குழம்பை ஊற்ற வந்தால் தட்டை தன் மடியில் வைத்துக் கொள்ள மிதிலா குழம்பு கரண்டியை நங்கென பாத்திரத்திலேயே விட்டாள்.

அடுத்து மூன்று மணி அளவில் புறப்படும் நேரம், தான் கொண்டு வந்த பையிலிருந்து, பணத்தை எடுத்து, ஹ்ருதேஷிடம் நீட்டினான்.

"நீ தந்த பணம். வட்டியும் சேர்த்தே வச்சிட்டேன்." என்று கொடுக்க, "கௌசிக்... ஏன்டா இப்படி பண்ணற. நான் இப்ப பணத்நை கேட்டேனா?" என்றதற்கு, "யாரும் இன்னொரு முறை கேட்கற மாதிரி வச்சிக்க கூடாதுனு முடிவு பண்ணினேன்.
சண்டை வந்த அடுத்த நொடியே பணத்தை தர நினைச்சவன் தான். ஆனா என் கையாளாகாத தனத்தால பணத்தை புரட்ட முடியலை. உன் கல்யாணம் முடிஞ்சு உன் புதுபொண்டாட்டி கேட்டப்பவாது பணத்தை விட்டெறிந்து இருக்கணும். அப்பவும் என்னால புரட்ட முடியலை. அடுத்து குழந்தை வந்தப்பிறகு கொடுத்தா அசிங்கமா இருக்கும். அதான் அவசரமா கடனை வாங்கியாவது தந்துடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.
நீங்க தான் கர்ப்பம், கல்யாணம், வளைகாப்பு கூட இல்லாம குழந்தை வரவுனு பிசியா லைப்பை அமைச்சிக்கறிங்க. நான் பணத்தை தர்றதுல ஸ்லோ தான். துரோகத்தை தாங்கிட்டதுலயும் ஸ்லோ தான். இங்க வந்தது லக்கேஜை தூக்க மட்டுமில்லை... என் கடனை அடைக்கவும் தான் வந்தேன். அம்மா.. உன் பொண்ணு மாப்பிள்ளையிடம் சொல்விட்டு வாங்க. நான் ரோட்ல கேப் புக் பண்ணறேன்" என்று செல்வராணியிடம் கூட மரியாதைக்கு கூறாமல் நகர பார்க்க, அந்த பணத்தை மிதிலா பக்கம் விட்டெறிந்து, "அன்னைக்கே வாயை மூடுனு சொன்னேன். கேட்டியா?
நண்பனா இருந்தேன், எதிரியா மாத்திட்ட. பணத்தை கேட்டு எவனோ ஒருத்தனா மாத்திட்ட" என்று மிதிலாவை கத்தினான் ஹ்ருதேஷ்.‌

மிதிலாவோ பணக்கட்டு முகத்தில் விசிறியடிக்க பேயறைந்தது போல மாறி நின்றாள். ஏற்கனவே அண்ணன் பணத்தை தந்துவிட்டு பேசியதற்கு துவண்டவள் ஹ்ருதேஷ் பணத்தை வீசவும் தள்ளாடினாள்.

தீபாவோ, "என்னடா கௌசிக் இப்படி பண்ணிட்ட?" என்றார்.‌

"அம்மா.. வர்றியா இல்லையா?" என்று கேட்டான் கௌசிக்.‌

தீபாவோ கலங்கிய விழிகளோடு நின்ற மிதிலாவை கண்டு மீண்டும் பிரச்சனை செய்த மகனை ஒன்றும் செய்ய முடியாத நிலையில் ஹ்ருதேஷை காண, அவனோ இன்-செய்த சட்டையை எடுத்து விட்டு அறையில் படாரென கதவை அடைத்துக் கொண்டான்.

-தொடரும்.

https://onlinetamilnovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-30/

நின் பிரேமம் என் சிநேகம்-29
அத்தியாயம்-29

வீட்டுக்கு வந்தவர்களை வாங்க என்று கூறவும் அருகதையின்றி ஹ்ருதேஷ் கூனிகுறுகி நின்றான். இதில் கௌசிக் வேறு மிதிலாவையும் ஹ்ருதேஷையும் மாறி மாறி பார்த்திடவும், ஹ்ருதேஷ் நடந்ததை விவரிக்க இயலாது எச்சி விழுங்கினான்.

கஷ்டப்பட்டு தான் "வாங்க அத்தை. வாங்க மச்சான்" என்று கௌசிக்கை வரவேற்றான்.

"அம்மா... லக்கேஜை கொண்டு வர ஒரு ஆள் வேண்டும்னு சொன்னிங்க. கொண்டு வந்துட்டேன். நான் அப்படியே கிளம்பறேன்" என்று கௌசிக் கூற, "திரும்ப இதெல்லாம் உங்க அப்பா வந்து எடுத்துட்டு போவாரா? மரியாதையா வாயை மூடிட்டு உள்ளவா" என்று தீபா அதட்டினார்.

மாப்பிள்ளையை அதட்ட இயலுமா?

"நல்லாயிருக்கிங்களா?" என்று பொதுவாக கேட்க, மகளோ தலையாட்டி, நீங்க வர்றதா சொல்லவேயில்லை?" என்று கேட்டாள்.

"சொல்லிட்டு வந்தா உஷாரா இருந்திருப்பல்ல?" என்று சாடவும் ஹ்ருதேஷ் வந்தவர்களுக்கு குளிர்பானத்தை ஊற்ற கிச்சன் சென்றான். அங்கே ப்ரிட்ஜை திறந்து டம்ளரில் ஊற்றினான்.

தீபா மகளிடம் "அண்ணி இல்லையா? இங்க தான் இருப்பதா உன் மாமனார் சொன்னார் " என்று ஆரம்பித்தார்.‌

"காலையிலேயே குளிச்சி முடிச்சிட்டு ஏதோ கோவிலுக்கு போயிருக்காங்க." என்றாள்‌.

ஹ்ருதேஷ் அத்தையிடமும் மச்சானிடமும் குளிர்பானத்தை தர, தீபா முகம் பாராது எடுத்துக் கொண்டார்.

கௌசிக் 'இவன் எதுக்கு கை ஓங்கியிருப்பான்? இதுக்கு முன்ன மிதிலாவை அடிச்சிருப்பானா? ஏதாவது பிரச்சனையா? இவ இதுக்கு முன்ன அம்மாவிடம் எதுவும் சென்ன மாதிரி தெரியலையே. சண்டைக்கு நான் தான் காரணமா இருப்பேனோ' என்று பலவிதமான முறையில் நினைத்தவன் ஹ்ருதேஷ் நீட்டிய ஜூஸை வாங்கி விட்டான். கையில் வைத்தபடி பருகாமல் சிந்தனையில் உழன்றான்.‌

"நான் அம்மாவுக்கு கால் பண்ணறேன்" என்று ஹ்ரீதேஷ் சற்று நகர்ந்து போனை செய்தான். அந்த போனோ ஹாலில் உள்ள ஷெல்பில் இருப்பதாக தன்னிருப்பை உணர்த்தியது.

"என்ன சண்டைடி? எதுக்கு அவர் கை ஓங்கினார்? நீ என்னத்த பண்ணி வச்சியிருக்க? இப்படி தான் வாழறியா?" என்று அவளது கையை பிடித்து பல்லை கடித்து தீபா கேட்க, "அம்மா கை வலிக்கு விடு. இது சாதாரண சண்டை தான். அவன் இதுக்கு முன்ன என்னை கை நீட்டியது இல்லை. சும்மா... இப்ப பார்த்ததை வச்சி இப்படி தான் வாழறேன்னு முடிவு கட்டாத." என்றாள்.

அதற்குள் ஹ்ருதேஷ் முன் வந்து, தீபாவிடம், "எங்களுக்கு கல்யாணமானதிலருந்து அம்மா கூடயிருக்காங்க அத்தை. அவங்களை சேலத்துக்கு அனுப்பு, இன்னும் ஏன் இருக்காங்கனு தினம் தினம் கேட்டுட்டு தொல்லை பண்ணறா‌.

அவங்க என்ன மோட்டிவ்ல இருக்காங்கனு தெரியலை. ஆனா கூட இருக்காங்க. இவ எப்ப பாரு அவங்களை விரட்டற மாதிரி பேசறா. நான் என்ன செய்யறது. இரிட்டேடா இருக்கு.
அம்மாவுக்கு இவளுக்கும் நடுவுல மாட்டிட்டு, இதுல என் வேலை டென்ஷன்ல தலை பிச்சிக்குது.
இவ பாட்டுக்கு படிக்க போறா. அவங்க பாட்டுக்கு ஹால்ல இருக்காங்க. இன்னும் என்னவாம்?" என்று மிதிலாவை பார்த்து பல்லை கடித்தான்.

தீபாவுக்கு போன உயிர் திரும்ப வந்தது. ''என்னடி இதெல்லாம்? மாமியாரை விரட்டற பழக்கம்?'' என்று மிதிலாவுக்கு தான் திட்டு விழுந்தது.

கௌசிக்கும் நண்பன் சும்மா எல்லாம் கை ஓங்க மாட்டானென்று நிம்மதி பரவியது. ஆனாலும் ஹ்ருதேஷிடம் பேசவில்லை. ஹ்ருதேஷும் கௌசிக்கிடம் தானாக பேசாமல் நின்றான்.

"நீயும் சேர்ந்துட்டியா? இப்ப எதுக்கு இங்க வந்த?" என்று காரமாக வினவினாள் மிதிலா.

செல்வராணியோ வாசலில் செருப்பை கண்டு, "யாரு வந்திருக்கா?" என்று கேட்டபடி வந்தார்.

''வாங்க அண்ணி" என்று தீபா வரவேற்க, கௌசிக் எழுந்து நின்றான்.‌

"நீங்களா.. எப்ப வந்திங்க?" என்று சம்பிரதாயத்திற்கு கேட்டுவிட்டு ஹ்ருதேஷு தண்ணி கொண்டாடா" என்றார்.

அன்னைக்கு தண்ணீரை எடுத்து தந்தவன், "எங்க போனிங்க? இதெல்லாம் என்னது?" என்று கையிலிருந்தவையை கேட்டான்.

"வளையலும் பூவும். மாசம் ஐந்தாக போகுது. குழந்தைக்கு கை நிறைய வளையல் சத்தம் கேட்க வேண்டாம். என் பேரனுக்கு கண்ணு காது மூக்கு எல்லாம் வளர்ந்திருக்கும். வளையல் சத்தம் கேட்டு சிரிக்கணுமே. அதான்... காலையிலேயே வளையல் பூ பழமெல்லாம் வாங்கிட்டு, கோவிலுக்கு போயிட்டு உங்க பேர்ல அர்ச்சனை பண்ணிட்டு நேரா வர்றேன்.

டேய்... இந்த பிரசாதம் அவளுக்கு கொடு. நாம கொடுத்தா எங்க வாங்கும்" என்று குறைப்பட, ஹ்ருதேஷ் குங்குமம் வைத்துவிட்டு, இனிப்பான கேசரியை ஊட்டினான்.

இதை தட்டுல வச்சி கொடு" என்று தூக்கு வாலியில் கேசரியை தர, "அம்மா... கோவில்ல இருந்து மொத்தமா வாங்கிட்டு வந்துட்டியா?" என்று கேட்டான் ஹ்ருதேஷ்.

"என்ன பார்த்தா எப்படி தெரியுது. கோவில்ல வரிசையில நின்னு, தூக்குல கேசரி வாங்கிட்டு வர்றேன்னா. அடேய்.. நம்ம வீட்ல செய்ததுடா. எங்க... புருஷனும் பொண்டாட்டியும் ரூமை மூடி நல்லா தூங்கி வழிஞ்சா, கிச்சன்ல என்னத்த சமைச்சேன்னு கூட தெரியாது." என்றார்.

ஹ்ருதேஷ் கேசரியை தட்டில் வைத்து அத்தை கௌசிக்கிற்கு தரவும், "நாங்களும் ஐந்தாம் மாசம் ஆரம்பிக்குதுனு தான் பலகாரம் சுட்டு கொண்டு வந்தோம். ஐந்து வகை சாதம் கூட கொஞ்சமா செய்துட்டு வந்திருக்கோம்.  வளையல் மட்டும் இங்க வந்து வாங்கிடலாம்னு இருந்தோம். கண்ணாடி பொருள் பாருங்க. பூவும் வாங்க நினைச்சது தான்." என்று கூறினார்.

"நல்லதா போச்சு. ஒத்த பட்டையில வளையலை போட்டுட்டு சோறூட்டிடலாம்." என்றார் செல்வராணி.

தீபாவும் மிதிலாவை பார்த்து ஒவ்வொரு லக்கேஜை திறந்து வைத்தார்.

செல்வராணி தலை மறையவும், "உனக்குன்னு நான் சோறாக்கி ஐந்தாம் மாசம் வளையல் போட வந்திருக்கேன். அவங்களும் நினைவு வச்சி கேசரி செய்து கோவிலுக்கு போயிருக்காங்க. ஏன் நீயும் உங்கண்ணா மாதிரி தவறான கண்ணோட்டத்தில் பார்த்து தொலைக்கற?" என்று பொரிந்தார்.

மிதிலாவுக்கு என்னவென்று சொல்வது? செல்வராணி கரித்து கொட்டும் போது, இங்கிருந்து இவங்க போனா தேவலை என்று தானே தோன்றுகின்றது. இப்படி தனக்காக கூட யோசித்தாரா என்ன? இருக்காது அவங்க பேரன் வளரணும்னு இதெல்லாம் பண்ணுவாங்க' என்று கௌசிக்கை போலவே இடக்காக யோசித்தாள்.

இன்று சனிகிழமை என்றாலும் நல்ல நாளாக இருக்க, சேலை மட்டும் கட்டிக்கொண்டு வந்து அமர கூறினார்.‌

"எனக்கு இந்த சுடிதார் போதும். சேலை வேண்டாம்." என்றாள் மிதிலா.

"இரண்டு நிமிஷமாகுமா? சேலை கட்ட? ஏன்டா இப்படியிருக்கா. ஒரு நல்லநாளு கூட சேலை கட்ட என்ன வலிக்குது?" என்று செல்வராணி ஆரம்பிக்க, மிதிலாவோ "ஆரம்பிச்சிட்டாங்க இனி இவன் வேற சேலைக் கட்டு நோட்டுனு இம்சை பண்ணுவான்" என்று முனங்கி செல்லவும் தீபாவுக்கு கோபமானது.

ஹ்ருதேஷ் எதிரே இப்படி பேசுவது, தீபாவுக்கு பிடிக்கவில்லை. கௌசிக்கோ 'இவ என்ன இப்படி பேசறா. அவன் எப்படி அமைதியா விடறான்? ஓ இப்படி தான் கை ஓங்கற லெவலுக்கு போகுதோ?' என்று தலையை உலுக்கி கொண்டான்.

தன் கைக்கு கிடைத்த சேலையை மாற்ற வந்தவளிடம், கதவை தாழிட்டு, ''மே ஐ ஹெல்ப் யூ?'' என்று கேட்டான்.

"ஒன்னும் வேண்டாம். காலையில கையை ஓங்கற" என்றாள்‌ மிதிலா.

"மேடம் உங்க சுடிதார் டாப்பை நீங்க தனியா கழட்ட முடியாது‌. அந்தளவு இறுக்கமா போட்டியிருங்க. கொஞ்ச நாளா நான் தான் கழட்ட உதவறேன். அதை நினைவு வச்சிட்டு கையை தூக்குங்க" என்றான்.

"பெருசா உதவ வர்றான்' என்று முனங்கியபடி, கையை தூக்க, உதட்டில் குறுநகையுடன், உதவியவன், நம்ம பைட்டை இப்ப தள்ளிவை மிதிலா. என் பிரெண்ட் வந்திருக்கான்... நான் எவ்ளோ ஹாப்பி தெரியுமா?" என்று முகம் அளவற்ற ஆனந்தத்துடன் கூற, "ம்கூம்." என்றாள் மிதிலா.

"என்னடி ஒழுங்குகாட்டற?" என்று தாடை பிடிக்க, "விடுடா... அதான் வாயெல்லாம் பல்லா இருக்கு" என்று தட்டிவிட்டாள்.

சேலையை மடமடவென கட்டவும் அவளது ப்ளீட்ஸை எடுத்து ஒழுங்குப்படுத்தியவன், "ரொம்ப ரொம்ப அழகா மாறிட்டே வர்ற. கன்னம் புசுபுசுனு, உடம்பு ஒரு சுத்து பெருசாகுது. வயிறு வளருது." என்று அணுஅணுவாய் கூறினான்.

"கண்ணு வைக்காத" என்று அவனை தள்ளிவிட்டு, வெளியே வர, செல்வராணி பூவை நீட்டினார்.‌

"எனக்கு இந்த ஸ்மெல்லே பிடிக்கலை. வேண்டாம்" என்று மறுத்தாள்.

"ஒரு நிமிஷம் தானே வை" என்று தலையில் பின்னால் குத்தவும், ஹ்ருதேஷை அளவிட்டாள். அவனோ போன் கேமிராவால போட்டோ எடுத்துக்கலாம்" என்று கூறினான்.‌

செல்வராணி உடனடியாக "நீங்க நானு, என் பையன் உங்க பையன் நாலு பேர்ல வளையல் போடற மாதிரி வருது. ஒரு ஆள் குறையுதே. நான் பக்கத்து வீட்ல இருக்கற பொண்ணை கூப்பிடறேன்." என்று செல்ல, "அவங்களாம் வேண்டாம். எனக்கு அந்த பொண்ணை பிடிக்காது" என்றாள் மிதிலா.

'"உனக்கு யாரை தான் பிடிக்கும். என் பையனை தவிர" என்று செல்வராணி சென்றதும், ''அந்த பொண்ணு தானே உன்னை முழுங்கற மாதிரி பார்த்து பேசி ஹான்ட்ஸம்னு வழிஞ்சா. அவ வரணுமா?" என்று மிதிலா கூற, "வந்தா வந்துட்டு வளையல் போட்டுட்டு போகட்டும்." என்றான் ஹ்ருதேஷ்.

"அவ அப்படியே உன்னை சைட் அடிப்பா. உனக்கு குளுகுளுனு இருக்கும்ல?" என்றாள்.

"அம்மா தாயே.. வாயை மூடு" என்று ஹ்ருதேஷ் அதட்டினான்.‌

கௌசிக் இதை கேட்டு சிரிக்க முயன்றான். ஆனால் கோபத்துடன் வந்ததாக காட்டிக்கொள்ள மெனக்கெட்டான். அதனால் சிரிப்பை அடக்கினான்.

தீபாவும் செல்வராணியும் அழைத்து வர, ஹாலில் சேரில் அமர வைத்து வளையல் போட ஆரம்பித்தார்கள்.

முதலில் செல்வராணி தான், கையில் வளையல் போட்டு, சந்தனம் முகத்தில் தடவி, பூக்களால் ஆசிவழங்கி ஆரத்தி எடுத்தார். அடுத்து தீபா செய்யவும், புன்னகை பூத்து அன்னை தனக்காக கொண்டு வந்த ஐந்து வகை சாதத்தை சுவைத்தாள்.

மூன்றாவதாக பக்கத்து வீட்டு பெண் செய்யவும் நடிப்பாக ஒரு சிரிப்பை உதிர்த்தாள்.

அவர்களுக்கு தட்டில் வளையல் பூ பழம் சில இனிப்புகள் தட்டில் வைத்து நீட்டவும் வாங்கிக் கொண்டார்.
அடுத்து ஹ்ருதேஷ் போடட்டும் என்று கௌசிக்கும், கௌசிக் போடட்டும் என்று ஹ்ருதேஷும் இருக்க, ஹ்ருதேஷே "பொண்ணுக்கு அண்ணன் தான் கஷ்டப்பட்டு லக்கேஜை சுமந்து வந்தார். அவரே போடட்டும்‌." என்று முன்னுக்கு தள்ளும் விதமாக பேச, கௌசிக் நண்பனை முறைத்துவிட்டு, தங்கைக்கு வளையலிட்டான்.

மிதிலா லேசாக கண்ணீர் துளிர்க்க, கௌசிக்கும் கலக்கமாய் போட்டுவிட்டான்‌.

அவளுக்கு பிடித்த கருப்பட்டி மிட்டாய் எடுத்து ஊட்டி விட்டவன், முகம் காணாமல் எழுந்துவிட்டான்.

ஹ்ருதேஷும் மண்டியிட்டு வளையலை அணிவித்து கன்னத்தில் சந்தனம் குழைத்து பூசினான்.‌

குங்குமம் வைத்து பூ மழை தூவவும், அவளை கண்டதும், மனதில் நிறைவு தோன்றி நிம்மதி தர, காலையில் இந்த பூமுகத்தையா அடிக்க கை ஓங்கினோமென அவன் நெஞ்சில் சாய்த்து கொண்டான்.‌

"லவ் யூ பேபி" என்றான். "ஹ்ருத்" என்று அவளும் கட்டிக்கொண்டாள்.
கௌசிக் தான் ஹ்ருதேஷ் வளையல் போடும் நேரம் கேமிரா போனை கௌசிக்கிடம் எதார்த்தமாக நீட்டிவிட்டு செல்ல கௌசிக் வாங்கி போட்டோவை எடுத்து தள்ளினான்.

போட்டோ வால்பேப்பரில் கௌசிக் மிதிலா ஹ்ருதேஷ் மூவரும் ஒன்றாக எடுத்த போட்டோ இடம் பெற்றியிருக்க, முன்பு வந்தப்போது உடைத்து போட்ட ப்ரேமை தேடினான். அங்கே அதுயில்லை, உடைந்துவிட்டதோ? அல்லது அன்று உடைத்து விட்டதால் அவ்விடம் காலியாக உள்ளதா? என்று பார்த்தான். ஆனால் நண்பன் போன் வால் பேப்பரில் அந்த புகைப்படம் தான் இருந்தது‌. அதையே பார்த்தவன் நினைவு பின்னோக்கி சென்றது.

-தொடரும்.

https://onlinetamilnovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-29/

நின் பிரேமம் என் சிநேகம்-28
அத்தியாயம்-28

மிதிலா மாலை நேரம் வீடு வந்து சேர அமைதியாக இருந்தது.
மிதிலா புத்தகத்தையும் ஸ்கெட்ச் பேடையும் எடுத்துக்கொண்டு டைனிங் டேபிளில் அமர்ந்தாள்.
சப்மிஸ்ஸன் டேட் நெருங்கிக் கொண்டிருந்தது.
அவள் டிசைன் லைன் வரையும்போது செல்வராணி கிச்சனில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

"இன்னும் இந்த படிப்பு எதுக்கு? அவனுக்கு தான் அறிவில்லை."  குரல் கூர்மையாக வந்தது.
மிதிலா தலை தூக்கினாள். மிதிலா எதுவும் வாயாடாமல் இருக்கவும், செல்வராணி மெதுவாக அருகே வந்தார்.

"உன் நிலை என்னனு தெரியாதா? கர்ப்பமா இருக்கே. இப்பவும் காலேஜ் காலேஜின்னு அலையணுமா?" என்றார்.

மிதிலா பென்சிலை மெதுவா வைத்தாள்.
"டாக்டர் அதெல்லாம் படிக்க போகலாம்னு சொன்னாங்க"

"டாக்டர் எல்லாம் சொல்லுவாங்க. ஆனா நாளைக்கு ஏதாவது ஆயிட்டா?" என்றதும் அந்த வார்த்தை காற்றை நெருப்பாக்கியது.

மிதிலா மூச்சை கட்டுப்படுத்தினாள். ஏதாவது அபசகுனமாக கூறிகின்றாரே.

"எதுவும் ஆகாது. நான் கவனமா இருக்கேன்." என்றாள் மிதிலா.
செல்வராணி இடுப்பில் கையை மடக்கி நின்றார்.

"குழந்தை முக்கியமா? படிப்பு முக்கியமா?" என்றார் செல்வராணி. ஹ்ருதேஷ் இல்லாததால் கிட்டதட்ட பனிப்போர் நிகழ்ந்தது.

மிதிலா பார்வை நேராக சென்றது.
"இரண்டும்." என்றாள். அந்த பதில் செல்வராணியை எரிச்சலடைய வைத்தது.

"கல்யாணமானா பொண்ணு புகுந்த வீட்டுக்கு வந்ததும் படிப்பெல்லாம் ஒதுக்கணும். இது தான் வழக்கம்." என்றார் மாமியாராக.

மிதிலாவின் குரல் மெதுவாக இருந்தாலும் உறுதியாக "நான் என் படிப்பை முடிக்கணும். இது என் ப்யூட்சர். ஆம்பிஷன்" என்றாள் மருமகளாக.

"ப்யூட்சரா?" என்று செல்வராணி கேலியாக சிரித்தார்.
"குழந்தை பிறந்ததும், நீ புஸ்தகத்தை எடுத்துட்டு படிக்கப் போறியா?" என்ற அந்த கேள்வி மிதிலா நெஞ்சை குத்தியது. ஆனா அவள் தளரவில்லை.

"ஆமா படிப்பேன்." என்றாள் வீம்பாக.
அந்த நேரம் ஹ்ருதேஷ் உள்ளே வந்தான். இருவரின் முகத்தையும் பார்த்தவுடனே ஏதோவொன்று என புரிந்தது.

"என்னாச்சு?" என்றான்

செல்வராணி உடனே பேசினார்.
"உன் பொண்டாட்டி இந்த நிலையில கண்டிப்பா காலேஜ் போகணுமா?" என்றார்.‌
ஹ்ருதேஷ் மிதிலாவை பார்த்தான். அவள் அமைதியா நின்றாள். இவன் பேசட்டுமென்ற காத்திருப்பில் அவளிருந்தாள்.

"அவளுக்கு ஓகேன்னா போகட்டும்மா" என்ற ஒரே வரியில்
செல்வராணி அதிர்ந்தார்.

"நீயும் இவளுக்கே சப்போர்ட் பண்ணறியா" என்றார்.

"அம்மா… அவ உடம்பை அவ கவனிக்கிறா, படிப்பும் முடிக்கணுமே... மேனேஜ் பண்ணிடுவோம்" என்றான்.
சில விநாடிகள் அமைதியில் கழிந்தது. தனக்காக ஹ்ருத் பேசுவதால் வந்த நிறைவில் மிதிலா.

செல்வராணி முகத்தை திருப்பிக் கொண்டார்.

"நாளைக்கு ஏதாவது ஆயிட்டா தலைசுத்தல் வாந்தி, அதுயிதுனு இருக்கும். உடம்புல சத்து பிடிக்கணும். இவளை பாரு... இப்பவே ரத்தமில்லாதவளா வெளுப்பா தெரியறா." என்று மகனிடம் உரைத்தார் செல்வராணி.

மிதிலாவோ "நான் பொறுப்பா என்னை பார்த்துப்பேன். இன்னிக்கு கூட மயக்கமா இருந்தது மயங்கிட்டேன். அப்பறமா மேமிடம் தாலியை காட்டி கல்யாணம் ஆகிடுச்சுனு சொல்லிட்டேன். அதோட கன்சீவா இருப்பதால லாவன்யாவோட சேர்ந்து உதவி செய்து பார்த்துக்கிட்டேன்." என்றாள்.

"காலேஜிலயும் மயக்கம் வந்துச்சா?" என்று ஹ்ருதேஷ் பயந்து கேட்டான்.

"ஆமா.. ஆனா நான் சமாளிச்சிடுவேன்" என்றாள் மிதிலா.

செல்வராணியோ "என்னத்த சமாளிப்ப... ரொம்ப நேரம் ஒரேயிடத்துல உட்கார முடியுமா? உடம்பு சூடாகிடும். வாந்தி மயக்கம் வந்தா இதே வீட்லயிருந்தா ரெஸ்ட் எடுப்ப. அங்க படுத்துக்கோமானு தூங்க சொல்வாங்களா? சரி.. அதெல்லாம் விடு... படில ஏறற இறங்கற.. கால் இடறினா குழந்தை கலைந்துடாது. உனக்கென்ன... இந்த குழந்தை எங்க வீட்டு முதல் வாரிசாச்சே" என்று பேசவும் ஹ்ருதேஷோ இவளுக்கு ஹீல்ஸ் போட்டாளே கால் இடறுமே? என்று யோசித்தான்.‌

"அம்மா சொல்லறது சரியா தானே இருக்கு. பேசாம குழந்தை பிறக்கறவரை படிப்பை தள்ளி வைக்க முடியாதா?" என்று கேட்டான்.

"என்ன ஹ்ருதேஷ் பேசற? அவங்க தான் இப்படி பேசறாங்கன்னா மெடிக்கல் பீல்டுல எத்தனையோ வசதி வந்துடுச்சு. இப்ப போய் நீ இப்படி பேசற.
எனக்கு ஏதாவது பிரச்சனைன்னா நான் பார்த்துப்பேன். உங்கம்மாவை என்னை நோண்டாம இருக்க சொல்லுங்க" என்று கத்திவிட்டு அகன்றாள்.

ஹ்ருதேஷோ வந்ததும் வராததும் பிரச்சனையா என்று சலித்து குளிக்க சென்றான்.‌

அடுத்து செல்வராணியோ தோசை மாவை வாங்கி ஊற்றி, இரண்டு வகையான சட்னி செய்தார்.

பரவாயில்லை.. சமையலை முடிச்சிட்டாங்க' என்று மிதிலா சாப்பிட வந்தாள்.

எப்பொழுதும் ஆர்டர் தரும் பொழுது ஒரு தோசை மட்டும் அவளுக்காக ஆர்டர் தருபவள். இன்று நான்கு தோசை சாப்பிடவும், மிதிலா காதில் விழாத அளவிற்கு "பாரு.. அவ நேத்து ஒரு தோசை தான் சாப்பிட்டா. இன்னிக்கு நாலு தோசை. வீட்ல சமைச்சி சாப்பிட்டா கூடுதலா சாப்பிடுவா‌ குழந்தையும் நல்லா வளரும். இதை சொன்னா அவ சண்டை போடுறதா சொல்வா. ஒழுங்கா சாப்பிட்டா தானே குழந்தையும் நல்லா வளரும்." என்று ஏற்றிவிட, இந்த முறை ஹ்ருதேஷ் குழந்தைக்காக பேசினான்.

நல்லவேளை அப்பொழுதே ஆரம்பிக்காமல், உறங்கும் பொழுது அந்த பேச்சை பேசினான்.‌

"நீ கன்சீவா இருக்க. நல்லா சாப்பிட்டா தானே நம்ம குழந்தை ஹெல்தியா வளரும். நாம கடையிலேயே வாங்கி சாப்பிடறோம். அதுல என்ன சத்து இருந்திட போகுது. இதே வீட்ல இருந்து பொறுமையா சாப்பிட்டா நிறைய சாப்பிடற. பேசாம காலேஜ் போகாம இருந்து, குழந்தை பெத்த பிறகு போகலாம். எனக்கும் அம்மா சொல்லறது சரியா தெரியுது மிதிலா." என்றான்.‌

மிதிலா எழுந்து அமர்ந்தவாறு., "ஏன் ஹ்ருத் இப்படி பேசற. என்னால முடியும். சும்மா உங்க அம்மா பேசியதை கேட்டு சண்டைக்கு வராத.
எப்பவும் சனி ஞாயிறு ஆனா என் கையை விடாம பிடிச்சிட்டு சந்தோஷமா இருப்போம். ஆனா இந்த இரண்டு நாள் அவங்க கூடயிருப்பதால சண்டை தான் வருது. அவங்களை உங்க வீட்டுக்கு அனுப்பு" என்றாள் சிடுசிடுவென.

"அவங்க என் அம்மா. என் கூட இருக்கணும்னு வந்திருக்காங்க. நல்லதோ கெட்டதோ. அவங்க சொல்லற ரீஸன் பாயிண்ட்டா இருக்கு. அதை தான் கன்சிடர் பண்ண சொன்னேன். எங்கம்மாவையே பேக் பண்ண பேசற. திஸ் இஸ் யுவர் லிமிட்." என்று பொரிந்து தள்ளி திரும்பி படுத்துக் கொண்டான்.‌

மிதிலாவோ நான் என்ன பேசினேன். இவன் என்ன பேசறார். அவங்க வேற இம்சை பண்ணறாங்க. அது இவருக்கு புரியலை.' என்று கோபமாக தனது வேலையாவது கவனிக்க ஆரம்பித்தாள்.

''லைட்டை ஆப் பண்ணறியா?" எனக்கு தூங்கணும்" என்றான்.‌

"எனக்கு சப்மிட் பண்ண வேண்டிய வேலை இருக்கு. தூக்கம் வருதுன்னா ஹாலுக்கு போங்க" என்று கோபமாக உரைத்தாள்.

அவனும் இருந்த கடுப்பில் அன்னையுடன் வந்து உறங்க, செல்வராணி எட்டி பார்த்துவிட்டு மகனுக்கு போர்வை போர்த்தி விட்டார்.‌

மிதிலா இரவெல்லாம் கண் விழித்து, தன் வேலையை முடித்துவிட்டே கண்ணயர்ந்தாள்.

அடுத்த நாள் காலையில் மிதிலா சமையல் கட்டில் உருட்டவும், ஹ்ருதேஷ் எழுந்து பார்த்துவிட்டு கண் அசந்தான். செல்வராணியோ எட்டியெட்டி பார்த்துவிட்டு வேடிக்கை பார்த்தார்.

இரண்டு மூன்று முறை குக்கர் சத்தம் கேட்டதும், மிதிலா சமைப்பதை யூகித்தான் ஹ்ருதேஷ்.
இங்கே முன்பு சனி ஞாயிறு இருக்கும் பொழுது சமைப்பவள் தான்‌
அதனால் சமைக்கவும் எழாமல் விட்டான். சற்று நேரத்திற்கு எல்லாம் மிதிலா வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டு ஓடிவந்தான்.

வாந்தி எடுத்து சோர்வுடன் நின்றவளிடம், "என்ன பண்ணிட்டு இருக்க?" என்றான்.

"சமைத்து நல்லா சாப்பிட்டா தானே நம்ம குழந்தை ஹெல்தியா வளரும். நாம கடையிலேயே வாங்கி சாப்பிடறோம். அதுல என்ன சத்து இருந்திட போகுது. இதே வீட்ல இருந்து பொறுமையா சாப்பிட்டா நிறைய சாப்பிடற.'னு சொன்னியே. அதான்.. சமைச்சிட்டேன். பட் அந்த ஸ்மெல் குமட்டுது." என்று முகத்தை அலம்பினாள்.

ஏனோ இம்முறை ஆர்டர் தந்துடலாமே. ஏன் கஷ்டப்படற என்று கூற வாய் வரவில்லை‌. வீட்டு உணவை சாப்பிட்டால் மிதிலாவுக்கு பரவாயில்லை என்ற எண்ணமே அவன் உணர்ந்தான்.

செல்வராணி அப்பொழுதும் கொஞ்சம் உப்பு கூட போட்டுட்ட. இப்படி போட்டா எப்படி? காரம் சுத்தமா இல்லை" என்று ஆரம்பிக்க, சப்புக்கொட்டிய ஹ்ருதேஷோ "ஹாஸ்டல் வெக்கட் பண்ணறதை சொல்லிட்டியா? ஈவினிங் வர்றேன். திங்க்ஸ் புக்ஸ் டிரஸ் எல்லாம் கொண்டு வந்துடலாம்" என்றான்.

"ம்ம்ம." என்று மிதிலா கூற, செல்வராணியோ தனது பேச்சை மதிக்காதது எரிச்சலுடன் விழுங்கினார்.

ஹ்ருதேஷ் மட்டும் அம்மாவிடம் சொல்லிவிட்டு புறப்பட, மிதிலா மறுபுறம் கல்லூரிக்கு விரைந்தாள்.

லேசான தள்ளாட்டம் ஓய்வு, இதெல்லாம் பார்த்தபடி தனது படிப்பை கவனித்தாள்.

மாலை ஹ்ருதேஷ் ஹாஸ்டல் வாசலில் வர, தனது உடமைகளை எடுத்து வந்தாள் மிதிலா.

"கொஞ்சம் பிரைவேஸி மிஸ்ஸாகுது ஹ்ருத். பெரிய வீடா பிடிக்கலாமா? இங்க பேசினா அங்க கேட்குது. அங்க பேசினா இங்க கேட்குதுனு நாம பேசறதே குறைந்து போகுது." என்றாள்.

"நாம இந்த வீட்ல இரண்டு பேர் மட்டும் இருந்து பழகிட்டு இப்ப அம்மா வந்தது அப்படி தோணலாம்‌. அம்மா கிளம்பிட்டா அப்படி தோணாது." என்றான்.

"அவங்க தான் இங்கிருந்து போகமாட்டேன்னு இருக்காங்க. ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கறாங்க." என்றாள்.

"அவங்க பையன் வீட்டுக்கு வந்துயிருக்காங்க மிதிலா. இப்ப போய் வராதிங்கனு சொன்னா நல்லாயிருக்காது. ஊர்லயே வராதிங்கனு சொன்னதை மீறி வந்திருக்காங்க. அவங்களா போரடிச்சா போயிடுவாங்க" என்று கூறினான்.

நினைச்ச நேரம் தூங்கலாம்னு படுத்தா, இந்த நேரம் தூங்கற எந்திரினு சொல்லறாங்க. புட் ஆர்டர் போட்டா இதெல்லாம் வீட்ல செய்ய மாட்டியானு கேட்கறாங்க.

டயர்டா இருக்கேனு ஒரு ஜூஸ் வாங்கிட்டேன். இதை கூட கடையில வாங்குவனு கேட்கறாங்க. துணியெல்லாம் எடுத்து வச்சி பேபரிக் வச்சி டிசைன் பண்ண முயன்றா என்ன எப்ப பாரு துணியை கலைச்சி போட்டு வச்சியிருக்கனு கேட்கறாங்க‌. முடியலை ஹ்ருத். ஸ்டிரஸ் பீல் ஆகுது." என்றாள்.

"கர்ப்பமா இருக்கறப்ப தேவையில்லாத ஸ்டிரஸ் கோபம் வருமாம். மூட் ஸ்விங் மாதிரி." என்று எளிதாக கூறினான்.

"நீயும் நானும் இருந்தப்ப இப்படி ஆனதில்லை." என்றாள்.‌

ஹ்ருதேஷோ "சுத்தி சுத்தி அவங்களை வெளியே அனுப்பறதை பத்தி பேசாத. அவங்களை அனுசரிச்சி வாழு. இல்லையா அவங்களை இக்னோர் பண்ணிட்டு நீ பாட்டுக்கு அமைதியா இரு." என்று முகம் கோபத்துடன் எச்சரித்தான்.

மிதிலா மீண்டும் அமைதியாக மாறினாள்.

'முன்னயெல்லாம் நீ இப்படி இல்லை ஹ்ருத். என் பீலிங்கை புரிஞ்சுக்க மாட்டேங்கற' என்று மனதோடு வெதும்பினாள்.

வீட்டில் ஹாஸ்டலிலிருந்து கொண்டு வந்ததை எடுத்து சேகரித்து வைத்தாள்.

இரவானால் செல்வராணி சமையல், காலையில் மதியத்தில்  மிதிலா சமையல், என்று மாறியது.

அடித்து பிடித்து மசக்கையை சமாளித்தாள் மிதிலா.

கல்லூரியில் என்னவொரு கஷ்டங்கள் என்றால், அவள் படிக்கும் பேஷன் டெக்னாலஜிக்கு அதிக நேரம் நின்று அளவெடுத்து பேப்ரிக் பார்த்து கத்தரித்தல் என்று சதா நின்றுக்கொண்டே நடமாட, அடிக்கடி கால்கள் வலி முதுகு வலி கூடியது.

ஒய்வு எடுக்க நேரமின்றி திரிந்தாள். முன்பை விட வாந்தி மயக்கம் மட்டும் மட்டுப்பட்டது. கூடுதலாக சாப்பிட துவங்கினாள்‌.

ஹ்ருதேஷ் தான் செக்கப்பிற்கு எல்லாம் அழைத்து சென்றான். அதற்கும் செல்வராணி 'ஏன் பிறந்த விட்ல அவ அம்மா வந்து செக்கப் கூட்டிட்டு போக மாட்டாங்களா" என்று கேட்டிட, "அம்மா... ஆபிஸ்ல இன்ஸ்சூரன்ஸ் கார்ட் இருக்கு. இந்த ஹாஸ்பிடல்ல அவளுக்கு உண்டாகற செலவை ஆபிஸே தந்திடும்" என்று கூற, இருந்தாலும் அவ அம்மா வரலாம்ல." என்று தான் கூறினார்.‌

அதற்கும் மிதிலா கணவனை முறைத்து சென்றாள்.

முன்பை விட மேடிட்ட வயிற்றில் ஹ்ருதேஷ் தொட்டு தடவி கதை பேச, தனது நிலையை குழந்தையிடம் வர்ணிப்பான். உங்க பாட்டி அம்மா இரண்டு பேருக்கு நடுவுல மாட்டிட்டு முழிக்கறேன் டா பட்டு' என்பான்.
சில நேரம் மிதிலா கோபம் மறைந்து சிரித்திடுவாள். சில நேரம், 'உனக்கு வரவர என்னை விட குழந்தை தான் முக்கியமாகிடுச்சு. முன்ன கௌசிக் கௌசிக்னு புலம்புவ. இப்ப குழந்தை குழந்தைனு புலம்பற. விழுந்து விழுந்து காதலிச்ச நான் தனியா தத்தளிக்கறேன்." என்று குமைவாள்.

இப்படியே ஐந்தாம் மாதம் துவங்கும் நாள் அன்று செக்கப்பிற்கு அழைத்தாள் மிதிலா.

இந்த முறை நான் வரமுடியாது. ஆபிஸ்ல ஹேவி வேலை. நீ மட்டும் போ. இல்லை அம்மாவை கூட்டிட்டு போ" என்றான்.

"நீ வரலைனு சொல்லு. அவங்களை அழைச்சிட்டு போன்னு சொல்லாத." இங்க வந்து மூனு மாசம் தங்கிட்டாங்க. எனக்கு இப்ப ஐந்து மாசமாகுது. ஊருக்கு போற ஐடியா இருக்கா இல்லையா?" என்று கேட்க, அந்த நேரம் செல்வராணியும் வீட்டில் இல்லை. எங்கோ வெளியே சென்று வருவதாக சென்றியிருக்க, ஹ்ருதேஷ் இருந்த கடுப்பில், "ஏய்.. என்னதான்டி பிரச்சனை அவங்க இருந்தா உனக்கென்ன? இந்தளவு மோசமானவளாடி நீ. நீ என்னை காதலிச்சன்றதுக்காக நான் மட்டும் உன்னோட வரணுமா? எங்க அப்பா அம்மாவும் தான் குடும்பம்.

இன்னொரு முறை ஏதாவது பேசின.. அறைஞ்சுடுவேன்" என்றான்.‌

அவன் நேரமோ என்னவோ அவன் கையை ஓங்கி பேசும் சமயம் வாசலில் கதவு திறந்திருக்க, தீபா மற்றும் கௌசிக் இருவரும் நின்றியிருந்தனர்.

மிதிலா இமை மூடி பயந்து கண்ணை திறக்காமல், வயிற்றில் ஒரு கையை வைத்து நின்றுயிருந்த கோலம் தீபாவுக்கும் கௌசிக்கிற்கும் பதபதைப்பை கூட்டியது.

-தொடரும்.

https://onlinetamilnovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-28/

நின் பிரேமம் என் சிநேகம்-27
அத்தியாயம்-27

மிதிலா வீட்டில் தீபா மருமகனுக்கு வகையாக சமைத்து வைத்து பரிமாற, அங்கு மதியம் சாப்பிட வந்த கௌசிக் ஹ்ருதேஷை கண்டு, மரியாதைக்கு கூட பேசாமல் அறைக்கு சென்றான்.

ஹ்ருதேஷ் கைகள் சாப்பாட்டை துழாவியது.

மிதிலாவோ "பெங்களூர் கிளம்பணும்னு சொன்ன. சாப்பிடு ஹ்ருத்" என்று கூறவும், சாப்பாட்டை கவனித்தவன், "அத்தை... கௌசிக் எப்ப சாப்பிட வருவான்?" என்று கேட்க, "அவன் முகம் கைகால் கழுவிட்டு வந்துடுவான். ஆனா இன்னிக்கு என்ன செய்ய காத்திருக்கானோ?" என்று பதில் தந்தார்.‌

கௌசிக் வருவானோ என்னவோ என்று அவன் இருந்த அறைப்பக்கம் பார்வையிட, மிதிலாவோ "ஹ்ருத்.. அவன் வரமாட்டான். நான் இருந்தாலே ஹாலுக்கு வராதவன். நீயிருந்தா வெளியே வருவானா? ரூம்ல அடைகாத்து முட்டை போடுவான்." என்று கேலி செய்தாள்.

"சும்மாயிருக்கியா" என்று ஹ்ருதேஷ் கோபமாக முகம் காட்டியதும், மிதிலா எனக்கென்ன என்று சாப்பிட்டாள். மீன் குழம்பு புளி ஊற்றி வாயுக்கு சுவையாக இறங்கவும், அதில் கவனம் செலுத்தினாள்.‌

ஹ்ருதேஷிற்காக மட்டன் குழம்பும் இருக்க, மெதுவாக சாப்பிட்டு எழுந்தான்.
நாம ரூம்ல போனா தான் அவன் வெளியே வருவான்.' என்று மிதிலா கூறியதும் எழுந்துவிட்டான். செல்வராகவனும் மாப்பிள்ளை மகளோடு சாப்பிட்டார்.

மிதிலா அறைக்கு ஹ்ருதேஷ் சென்றதும், தீபா மகனை அழைத்தார். அவனும் தனியாக சாப்பிட வந்தான்.

பாதி சாப்பிட்டு முடிக்கும் தருணம், ஹ்ருதேஷ் வெளியே வந்தான்.

"அத்தை... மாமா.. நாங்க நாலு மணிக்கு பெங்களூர் கிளம்பறோம். அடுத்து எப்ப வருவோம்னு எங்களுக்கே தெரியாது. மேபீ... குழந்தை பிறக்கறப்ப இங்க தான் மிதிலா இருப்பா. ஏதாவது எங்களிடம் சொல்லணும்னா சொல்லுங்க." என்று ஆசையாக நண்பன் தன்னிடம் பேசுவதற்கு ஏங்கினான்.

கௌசிக்கோ சாப்பிட்டு பொறுமையாக கை கழுவியவன், "உன் குழந்தை இந்த மன்னில் உதிக்கக்கறதுக்கு முன்ன, உன்னிடம் நான் வாங்கின பணத்தை தந்துடுவேன். அதுவரை வட்டி போடணும்னா போட்டுக்கோ." என்று பேசிவிட்டு அறைக்குள் அடைந்தான்.

"கௌசிக் நான் பணத்தை என்னைக்கும் கேட்கலையே. என்கூட பழையபடி பேசுடா." என்று ஹ்ருதேஷ் கௌசிக் கைகளை பிடிக்க, கையை உதறினான்.

"ஏதாவது பேசிடுவேன். பிறகு வீட்டுக்கு வந்த மாப்பிள்ளையை பேசிட்டனு எங்கப்பா அம்மா என்னை திட்டுவாங்க. உன் அருமை பொண்டாட்டி என் ஹ்ருதை எப்படி சொல்லலாம்னு சண்டைக்கு வந்து நிற்பா. தேவையேயில்லை.. நமக்குள்ள இருந்த நட்பு என்னைக்கோ செத்து புதைஞ்சு போச்சு." என்று கதவை அடைத்துக் கொண்டான்.

ஹ்ருதேஷ் துவண்டவனாக சோபாவில் அமர்ந்தான்.

அவனருகே மிதிலா அமர்ந்து, "அவன் கிடக்கான் இன்னிக்கு நைட் இட்லியா சப்பாத்தியா. அம்மாவை எது பேக் பண்ண சொல்ல?" என்று இடித்தபடி அமர்ந்தாள்.

ஹ்ருதேஷ் இருந்த கோபத்திற்கு, "கொஞ்சம் சும்மாயிருக்கியா... எல்லாம் உன்னால தான்டி. தோள்ல கை போட்டு விடிய விடிய என்கூட பேசுவான். நின்னு ஒரு நிமிஷம் பேசாம கதவை லாக் பண்ணறான்.

எங்கயாவது நான் வர லேட்டானா, அடுத்த செகண்ட் என் வீட்டை தேடி நாய்குட்டி மாதிரி வருவான்.

மச்சி ஏன்டா நாலு அரியர் ஒழுங்கா படிக்கலையானு கேட்டா. அதை விடுடா.. நீ ஏன்டா ஐந்து மார்க்ல செண்டம் போச்சுனு கேட்பான்.

என்னை காதலிக்கறேன்னு சுத்தி எங்க நட்பை பிரிச்சிட்டியேடி. இந்த கருமத்துக்கு தான் காதலே வேண்டாம்னு சொல்லி விலகினேன்." என்று கத்தவும், மிதிலா தாய் கிச்சனிலிருந்தும் தந்தை மற்றொரு அறையிலிருந்தும் கேட்டார்.

கதவை மூடியிருந்தாலும் கௌசிக்கும் ஹ்ருதேஷின் கோபமான வார்த்தைகளை கேட்டான்.

மிதிலா சத்தமில்லாமல் அறையில் வந்து படுத்துக் கொண்டாள்.

ஹ்ருதேஷோ கோபத்தில் வார்த்தை வீசியப்பின் கொஞ்ச நேரம் கழிந்ததும், அதே சோபாவில் இருந்தவன், தன்னை சுற்றி பார்வையிட்டான்.

இது மிதிலா வீடு என்றதும், மிதிலா சத்தமின்றி அழுவதை பார்த்ததும், எழுந்து மெதுவாக அவளருகே சென்றான்.

அவன் வரவும் குறுகிக் கொண்டு படுத்தாள். அவன் தோளை தீண்டும் நேரம், ஏதோ அன்னை சமைக்கும் வாடை வரவும், குமட்டிக் கொண்டு வாஷ்பேஷனுக்கு ஓடினாள்.

ஹ்ருதேஷ் பின்னால் வந்தவன், தண்ணீர் பாட்டிலை எடுத்து தர, அவனிடம் வாங்காமல் கிச்சனில் சென்று டம்ளரை எடுத்து பானையில் மொண்டு குடித்தாள்.

கிச்சன் பக்கம் ஹ்ருத் வராமல் நிற்க, அங்கேயே மிதிலா அமர்ந்தாள்.

ஹ்ருதேஷ் ஹாலில் அவள் வருகைக்கு காத்திருந்தான்.‌ தீபாவோ "இப்ப அழுது என்ன புரோஜனம்.? காதலிக்கறதுக்கு முன்ன யோசிச்சிருக்கணும். அட்லீஸ்ட்.. குழந்தை வரை போகாமலாவது பார்த்திருக்கலாம். கல்யாணத்தை லேட்டா கூட பண்ணிருப்போம். எல்லாத்திலையும் அவசரம். இப்ப... எல்லாரிடமும் திட்டு வாங்கு" என்று மகளை அவருமே திட்ட ஆரம்பித்தார்.

மிதிலாவோ "திட்டை வாங்கிக் கட்டிக்கறது தான் எனக்கு பழக்கமாச்சே. பரவாயில்லை." என்று இட்லி தட்டில் மாவை ஊற்றினாள்.

அப்படியிப்படி ஹ்ருதேஷின் பக்கமே வராமல், கொஞ்ச நேரம் தனித்து இயங்கிவிட்டு, டீயை குடித்துவிட்டு, லக்கேஜை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.

டீ கொடுக்க போகும் போது, கௌசிக் அறை திறந்திருக்க, "கௌசிக் நாங்க கிளம்பறோம்" என்று அவன் ஏதும் கூறாமல் கடைக்கு சென்றான்.‌

"சரிங்க அத்தை கிளம்பறேன். மாமா போயிட்டு வர்றேன்" என்றான் ஹ்ருதேஷ்.

செல்வராகவனிடம் மிதிலா "அப்பா போயிட்டு வர்றேன்பா. நான் தலைகுனிவு செய்யற விதமா நடந்ததுக்கு மன்னிச்சிடுப்பா" என்று தேம்பியவள், தீபாவை கட்டிக் கொண்டாள்.

அங்கிருந்து சேலம் பேருந்து வந்ததும், "ஆஹ் அப்பா. பஸ் ஏறப்போறேன். அம்மா இருந்தா கொடுங்க" என்று கேட்க, மிதிலாவோ ஹ்ருதேஷ் தோளில் சுரண்டி, எதிரே சுட்டிக் காட்டினாள்.

"என்னப்பா சொல்றிங்க? அம்மா என்கூட வர்றாங்களா?" என்று தலையில் கைவத்தவன் மிதிலாவை 'சும்மாயிரு' என்பது போல அவள் கையை தட்டியும் விட்டான்.

"ஆமாடா... சொல்ல சொல்ல கேட்காம, நானும் என் பையன் கூட கொஞ்ச நாள் இருக்க போறேன்னு கிளம்பிட்டா. எவ்வளவோ எடுத்து சொல்லிட்டேன். இங்க இருக்கறப்பவே என் மகனை அவ கைக்குள்ள போட முயற்சி பண்ணறா. அங்க போனா என்‌ பையன் மொத்தமா என்னை விட்டுட்டு போயிடுவான்னு பயந்துட்டு வாய்க்கு வந்ததை உலறுறா." என்றதும், ஹ்ருதேஷை மிதிலா மீண்டும் சுரண்ட, அவள் கைகாட்டும் இடத்தில் பார்த்தவன், "இங்க என்னம்மா பண்ணற?" என்றான்.‌

"உன் கூட பெங்களூருக்கு வர்றேன். உன் பொண்டாட்டி தான் மசக்கையா இருக்காளே. கூடமாட ஒத்தாசைக்கு இருக்கேன். ஏன் வரக்கூடாதா?" என்று கேட்டார்.

"நீங்க ஏன் வர்றிங்கனு எனக்கு தெரியும். முதல்ல கீழ இறங்கி வீட்டுக்கு போங்க'' என்றான்.

பஸ்ஸில் இருந்த கூட்டம் இவனை காண, 'அம்மாவுக்கும் பையனுக்கும் நடுவுல நான் வரலை.' என்று ஜன்னலோரம் சென்றாள் மிதிலா.

"அப்பா இறங்க மாட்டேங்கறாங்க. டிரைவர் வேற வந்துட்டார் அம்மா இறங்கும்மா" என்றதற்கு போராட்டம் செய்யாத குறை.

"பச்.. நீங்க அவளை பார்த்துக்க வரலைன்னு எனக்கு தெரியும். உங்க வேலையை பாருங்க" என்று எழ வைக்க, அவரோ மறுத்துவிட்டார்.‌

"அப்பா... இவங்க இறங்கறதா தெரியலை. நான் பார்த்துக்கறேன். வைக்கறேன்பா" என்று மிதிலா பக்கம் அமர, அவர்களோ இருக்கையின் இறுதி பாகத்தில் அமர்ந்தார்.‌

ஏதோ சின்ன குழந்தை அழுது காரியம் சாதிப்பது போல ஏறிவிட, மிதிலாவை சமாதானம் செய்யும் வாய்ப்பு அமையாமல் போனது.

இரவு வந்ததும் வராததும் இட்லி புதினா சட்னி மிதிலாவுக்கும், ஹ்ருதேஷிற்கு மட்டன் குழம்பும் வைத்து தந்துவிட, அவனோ இறங்கியதும் சாப்பிட்டு சோம்பல் முறித்தான்.‌

ஹாலில் செல்வராணி படுத்திட, அறைக்குள் ஹ்ருதேஷ் மனைவியை நெருங்கி வந்தான்.

"சாரி" என்றான். காது கேட்காதவளாக மிதிலா பாவிக்க, "நின் பிரேமமா என் சிநேகமானு பார்த்தா என் சிநேகம் தான் எனக்கு முக்கியமா போச்சு மிதிலா." என்று கூற, "எனக்கு தூக்கம் வருது குட்நைட். காலையில ஹாஸ்டலை வெக்கட் பண்ணணும். படிப்புல வேற நிறைய லீவ் போட்டு வச்சியிருக்கேன்." என்று அந்த பக்கம் திரும்பினாள்.

"கோபமா?" என்று இடையில் கையை வைத்தான்.‌

அவள் தட்டி விட்டு, போர்வையை போர்த்திக்கொள்ள, "அநியாயம்டி இது. கல்யாணத்துக்கு முன்ன பக்கத்துல வந்தாலே என் ஆசை தெரிந்து புரிந்துப்ப. இப்ப ஆசையா தீண்டியும் தட்டி விடற." என்றான்.‌

"ஆஹ்ஹ்.. ஆசையா... நம்பிட்டேன். போடா.. உன்‌பிரெண்ட் கௌசிக்கை கட்டிப்பிடிச்சி தூங்கு. இல்லை. உங்கம்மா வெளியே தான் இருக்காங்க. தாலாட்டு பாட சொல்லு" என்று திரும்பியவள் சிறிது நேரத்தில் அயர்ந்து உறங்கியிருக்க, ஹ்ருதேஷ் போர்வை போர்த்தி விட்டு தலை கோதி விட்டான்.

இத்தனை நாளில் எத்தனை அவமானங்களோ, கௌசிக் என்னவெல்லாம் திட்டினானோ, அதெல்லாம் இவளாக சமாளித்திருப்பாள். அம்மாவும் இஷ்டத்திற்கு பேசினார்களே. அடுத்து சமுகத்தை வேறு சந்திக்க வேண்டும். காலேஜில் தாலியையும், இனி வரும் நாளில் வயிறு உப்பசம் பெற்றாலும் சமாளிக்க வேண்டிய இடத்தில் இருப்பது இவள் தானே. தன்னால் அதிகமாக அவஸ்தைப்படுகின்றாள்.

தினமும் சாப்பிட்டது எல்லாமே வாந்தி எடுத்தே களைத்து விடுகின்றாள்.
தன் குழந்தை எப்படியெல்லாம் இவளை பாடுபடுத்துகின்றதோ?! என்று கனவுகுள் சென்று உதட்டில் அழகான முறுவலில் கூடியது. இதில் அவள் கைகள் அவனை அணைத்துக் கொள்ள, உதட்டில் சத்தமின்றி ஒற்றியெடுத்தான்.

அடுத்த நாள் கல்லூரிக்கு சென்று விட்டு மாலை ஹாஸ்டல் காலி செய்ய நினைத்தாள். அதனால் கல்லூரிக்கு தயாராகி கொண்டிருந்தாள். மறுபுறம் ஹ்ருதேஷ் அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தான்.

"ஏய்... சமைக்காம எங்க கிளம்பிட்ட?" என்று கேட்டு செல்வராணி நிறுத்த, "காலேஜிக்கு.. அப்பறம் ஹாஸ்டலுக்கு" என்றாள்.

"காலேஜிக்கா... இதுக்கு பிறகு என்னத்த படிச்சி கிழிக்க போற" என்று கேட்டதும், அவசரமாய் ஷர்ட் பட்டன் மாட்டி, "அம்மா அம்மா.. அவ படிப்பே துணியை தான் கிழிச்சி பேஷன் டிசைனிங் பண்ணறது. எப்படியோ கிழிச்சிக்கிட்டோம். நீ சும்மாயிரும்மா" என்று மிதிலாவை அனுப்ப முயன்றான்.

"சரி சாப்பாடு செய்யலை?" என்று மிதிலாவை ஏறிட, அதற்கும் "ஆர்டர் தந்துடுவாம்மா" என்று ஹ்ருதேஷ் பதில் தந்தான்.

"அவளை சொன்னா இவன் வந்துடறான்.' என்று செல்வராணி மனதோடு பொறுமினார்.

ஆர்டரில் வந்த உணவை தட்டில் கடைப்பரப்பி அலங்காரம் செய்து "ஹ்ருத் பிரேக்பாஸ்ட் ரெடி. நீங்களும் வாங்க அத்தை" என்றாள்.

''என்னமோ நீயே உன் கையால செய்தது மாதிரி கூப்பிடற. கடையில தானே வாங்கின?" என்றவர், தண்ணீரை எடுத்து வைத்தபடி, "பெயரையாவது என் எதிர்ல கூப்பிடாம இரு." என்று சலித்தபடி சாப்பிட்டார்.

"டேய்... இதுல சப்புனு இருக்கு. ஒரு சட்னி கிட்னி கூட வீட்ல வைக்காம என்னடா ருசி?" என்று புலம்ப, "அம்மா... உனக்கு இதெல்லாம் வேண்டாம்னா ஊருக்கு கிளம்பு. சும்மா வேண்டுமின்னே கூட வந்துட்டு இம்சை பண்ணாத. முன்ன இங்க ஒன்றரை மாசம் இருந்தப்ப இப்படி தானே சாப்பிட்டேன். அப்ப அடிக்கடி நீங்களா எதாவது செய்து தந்திங்க. முடிச்சா இப்பவும் செய்யுங்க. இல்லையா வாயை மூடிட்டு சாப்பிடுங்க" என்றான்.‌

அதன்பின் செல்வராணி வேண்டாவெறுப்பாய் சாப்பிட இருவரும் புறப்பட்டார்கள். செல்வராணி மட்டும் தனியாக இருந்தார்.

இங்கு மிதிலாவின் கல்லூரி வளாகம் வழக்கம்போல சத்தமாக இருந்தது. மிதிலா தனது ஸ்கெட்ச் பைலை மார்போடு அணைத்தபடி பேஷன் லேபுக்கு நடந்தாள்.

வீட்டிலிருந்து கிளம்பும் போது புத்துணர்வாக இருந்தவள் இங்கு வந்து சேரவும், உடம்பு லேசாக சோர்வை காட்டியது. அப்படி இருந்தாலும் சமாளித்தாள்.

"இன்னிக்கு டிராபிங் பிராக்டிக்கல் நம்ம மிஸ் ஸ்டிரிட்" என்று தோழி லாவண்யா சொல்ல, மிதிலா சிரிக்க முயன்றாள்.
"நான் மேனேஜ் பண்ணிடுவேன்" என்றவள் குரலில் இருந்த சோர்வு அவளுக்கே தெரிந்தது.

லேப் உள்ளே பேப்ரிக் ரோல்ஸ் மேனிக்கியூ, பின்ஸ் எல்லாம் பரவிக் கிடந்தது. ஆசிரியர் சொல்லிக்கொண்டிருக்க, மிதிலா மேனிக்கியூ மேல் பேப்ரிக் ஸ்பிரட் செய்ய ஆரம்பித்தாள்.

இரண்டு நிமிஷம் சரியாக இருந்தது.
மூன்றாவது நிமிஷத்தில்...
திடீரென லேப் சுவர்கள் மெதுவா சுழலுவது போல தோன்றியது.

இது என்ன மீண்டும் தலைசுற்றலா?
கண்ணில் வெளிச்சம் வேறு கூடியது. மூச்சு சீராக வரவில்லை.
"மிதிலா... ப்ளீட்ஸ் சரியா பண்ணு'' அவளுக்கு கற்றுத்தரும் ஆசிரியர் குரல் தொலைவில் இருந்து வருவது மாதிரி கேட்டது.

அவள் கை மேனிக்கியூவில் மேல் இருந்த பேப்ரிக்கை பிடிக்க முயன்றது, விரல்களோ பலவீனமா இருந்தது.

அடுத்த நொடி தள்ளாடினாள்.
காது முழுக்க அவளது பெயரை சொல்லி அழைப்பது போல் இருந்தது.
"மிதிலா!" "மிதிலா"
லாவண்யா குரல் கேட்டதும் அவள் உடல் சற்று பின்னோக்கி சாய்ந்தது. அருகிலிருந்த மாணவிகள் பிடிக்கவில்லை என்றால் தரையில் விழுந்திருப்பாள்.

"அய்யோ... டிஸ்ஸி ஆகிட்டா!"
என்றதும் கற்றுத்தரும் ஆசிரியர் வேகமாக வந்தார்.
" விண்டோ ஓபன் பண்ணுங்க!"
மிதிலா கண்களை திறக்க முயன்றாள். காற்று முகத்தில அடிக்க, லேசாக சீரானது.

"வாந்தி வர்ற மாதிரி இருக்கு. ரெஸ்ட்ரூம் போகணும்" என்றாள்.

அவள் மெதுவா சொன்னாள்.
லாவண்யா அவளை அழைத்து ஓடினாள். சில நிமிடங்களில் வாந்தி எடுத்தபின் சோர்வோடு சுவரை பிடித்து நின்றாள்.

"டாக்டரிடம் போகணுமா?" என ஆசிரியர் பயந்த குரலில் கேட்டார்.

"நோ மேம்.. வேண்டாம்... ஐ அம் பிரகனென்ட்" என்று கூறி மிதிலா மெதுவாக தாலியை எடுத்து காட்டி சொன்னாள்.

அங்கிருந்தவர்களில் கண்கள் பெரிதானது. தாலி கழுத்திலிருக்க, அவள் சிசுவும் அவளும் அருவருப்பான பார்வையிலிருந்து தப்பித்தனர். ஆளாளுக்கு வாழ்த்து கூறியிருந்தாலும், எப்ப மேரேஜ் ஆனது? எப்படி என்ற ரிஷி மூலம் கேட்கவில்லை‌. தாலி அது மற்றவர்களை வாயடைக்க வைத்தது.

"அடடா... நீ கிளாஸ் அட்டன் பண்ணறியா இன்னும்?"

"நான் ஸ்டடிஸை டிராப் பண்ண மாட்டேன் மேம். சோ... கன்டினியூ பண்ணறேன்" என்றாள்.‌

அந்த ஆசிரியரும் "ஆர் யூ ஓகே?" என்று கேட்டுக்கொள்ள "எஸ்" என்று மிதிலா தலை ஆட்டினாள்.

அந்த மேம் அவளை சில விநாடிகள் கவனமா பார்த்தார்.
"லிசன் ஹெல்த் முதல்ல முக்கியம். பட்.. ஐ அப்ரிஷேட் யுவர் டெடிகேஷன். நீ உட்காரு. யாராவது இவளுக்கு உதவுங்க" என்ற அந்த ஒரு வாக்கியம் மிதிலா கண்களில் நீர் வர வைத்தது.
அவள் சேரில் அமர்ந்தபடி லாவன்யா உதவியுடன் வேலை செய்வதை பார்த்தாள்.

அடிக்கடி வயிற்றில் கை வைத்தாள். "நாம இருவரும் சேர்ந்தே அச்சீவ் பண்ணுவோம்... சரியா? என்று அவளது குழந்தையுடன் மானசீகமாக பேசினாள்.

-தொடரும்.

https://onlinetamilnovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-27/

நின் பிரேமம் என் சிநேகம்-26
அத்தியாயம்-26

இரவு சாந்தி முகூர்த்தம் என்று மிதிலா வீட்டில் அலங்காரம் செய்ய நினைத்தார்கள். அதனால் மாப்பிள்ளை மகளை அழைத்தார்கள். ஆனால் ஹ்ருதேஷோ "இல்லை அத்தை.. எந்த அலங்காரத்துக்கும் அவசியமில்லை. நான் அங்க வரலை. நான் வந்தா கௌசிக் இன்னமும் கோபப்படுவான்.

நான் இங்கயே இருக்கேன். நாளைக்கு மதியம் சாப்பிட வருவோம். அப்படியே மிதிலா திங்க்ஸ் எடுத்துட்டு ஈவினிங் பெங்களூர் கிளம்பிடுவோம்.

அங்க போனதும், ஹாஸ்டல் காலி செய்துடுவோம்." என்றான்.‌

தீபாவிற்கு மறுத்து பேசவோ, வீட்டிற்கு அழைக்கவோ தயக்கம் இருந்தது. எத்தனையோ நாட்கள் ஹ்ருதேஷ் வீட்டிற்கு வரும் போது அவன் ஏன்டா வர்றான்' என்று கௌசிக்கிடம் திட்டும் சாக்கில் ஹ்ருதேஷ் காதுபட கூறியிருக்க, எந்த முகத்தை வைத்து தற்போது அழைக்க?

செல்வராகவனும், "கௌசிக் மனம் மாறுவான் மாப்பிள்ளை. நீங்களும் சங்கடமில்லாம வருவிங்க. அந்த காலம் ரொம்ப தூரமில்லை" என்று மட்டும் கூறினார்.

"கண்டிப்பா மாமா" என்று புன்னகைத்தான்.‌

அதன்பின் தீபா மகளிடம் சொல்லிவிட்டு புறப்பட்டார். செல்வராணியை கண்டு லேசான பயமிருந்தது. தண்ணீரில் போட்ட தீக்குச்சியை எடுத்து விளக்கு ஏற்ற தடங்கலிட்டு, ஏதோ மகளுக்கு விளக்கு கூட ஏற்ற தெரியாது என்று ஏசினாரே. ஆனால் மிதிலா அதெல்லாம் பார்த்துக் கொள்வாளென நம்பி சென்றார். கூடுதலாக ஹ்ருதேஷ் விட்டு தர மாட்டானென்றும் நம்பினார்.

மிதிலாவோ அன்னை தந்தை சென்றதும், ஹாலில் அமர்ந்து, ஹ்ருதேஷை பார்வையிட்டாள்.

அவனோ ஆபிஸுக்கு நாளை மறுநாள் வருவதாக கூறி, தனது திருமணத்தை உரைத்தான்.

அவன் பேசவும் அவனையே பார்த்திருந்த மிதிலாவை கண்டு, "ஏய்... என்ன புள்ளையை வச்ச கண்ணு வாங்காம பார்க்கற. போய் டிரஸை மாத்து. சாதாரண டிரஸா போடு. இங்க ஒன்னும் சாந்தி முகூர்த்தம் நடக்கப்போறது இல்லை. அதான் ஏற்கனவே வயித்தை நிரப்பிட்டு நிற்கறியே" என்று குத்தி கிழித்து பேச, மிதிலாவோ வார்த்தை போருக்கு தயாரானவள் ராஜலிங்கம் வரவும் அமைதியானாள்.

மாமனார் ஓரளவு ஆதரவு தர, இந்த நேரம் பேசினால் நன்றாக இருக்காது என்று, ஹ்ருதேஷ் அறைக்குள் அடைந்தாள்.

ராஜலிங்கமோ "நீ பேசறது சரியில்லை செல்வராணி. ஏதோ தப்பு பண்ணியது அந்த பொண்ணு  மட்டும்ங்கற மாதிரி பேசற. நீ பேசி காயப்படுத்தறது உன் பையனுக்கும் சேர்த்து தான்." என்றார் அவர்.

"ஆமா... ஊசி இடம் கொடுத்தா நூலு நுழைய தான் செய்யும்." என்று பழமொழியை சப்புக்கட்ட, "எந்த பொண்ணு இடம் கொடுத்தாலும் உன் பையன் தடுமாறுவானா? சொல்லுடி." என்று அதட்டவும் செல்வராணி கணவரை முறைத்தார்.

"நீங்க அவளுக்கு வக்காலத்து வாங்கறிங்க" என்றதும், "இல்லை... மறைமுகமா உன் பையனுக்கு வக்காலத்து வாங்கறேன்.‌ பகிரங்கமா உன் பையன் மேலயும் தப்பிருக்கறதை சுட்டி காட்டறேன். அவ்ளோ தான்.

இன்னமும் ஏதாவது பேசிட்டு திரி, உன் மகன் நாளைக்கே பொங்களுர் போக இருக்கான். இங்க திரும்பி வராம போயிடுவான். காலத்துக்கும் நீ தனியா இந்த வீட்ல இருப்ப. நானாவது டீக்கடை குளத்தங்கரைனு சுத்துவேன். உன் வாயுக்கு எவ வீட்டுக்கும் போக முடியாது." என்றவர் மருமகள் மிதிலா வரவும் அமைதியாக ஹாலில் அமர்ந்தார்.

ஹ்ருதேஷ் இன்னமும் போன் பேசுவதை கண்டாள்.

மாத்திரை போடுவதற்காக தண்ணீரை தேடி கிச்சனுக்கு சென்றாள்.

"என்ன மாத்திரை?' என்று கேட்டு செல்வராணி வரவும், "சத்து மாத்திரை ஐயர்ன், கால்சியம் டேப்ளேட்" என்று கையை விரித்து காட்டினாள்.‌

"அந்த பாலை சூடுப்படுத்தி வச்சியிருக்கேன். அவன் ரூமுக்கு போறப்ப கொண்டு போ." என்று மட்டும் கூறிவிட்டு நகர்ந்தார்.

மிதிலாவும் பாலை பார்த்து சரியென்று தலையாட்டிக் கொண்டாள்.

ராஜலிங்கம் செல்வராணி அவர்கள் அறைக்கு சென்றடைந்தனர்.

ஹ்ருதேஷும் வாசல் கதவை அடைத்து அறைக்கு வந்து சார்ஜரில் போனை போட்டிருக்க, மாத்திரை விழுங்கி, மிதிலா பால் டம்ளருடன் அறைக்கு வந்தாள்.

''ஏய்... இதென்ன.." என்று ஹ்ருதேஷ் சிரிக்க, "என்னது?" என்றாள்.

ஹ்ருதேஷ் அவள் புறம் வந்து, காலையில கட்டின பட்டுபுடவை மாதிரி கட்டிட்டு, வெட்கப்பட்டு, தலைநிறைய பூவும், கைநிறைய வளையலும் அலங்காரம் பண்ணிட்டு வந்து கதவை தாழிட்டு, என்னை பார்க்க தயங்கி வருவன்னு நினைச்சேன்" என்றான்.

அவளோ கோபப்பார்வை வீசி, "உனக்கே ஓவரா தெரியலை. என் வயிற்றுல குழந்தை உருவானதால மட்டுமே இந்த கல்யாணம் அவசரமா நடந்துடுச்சு. இல்லைன்னா உங்க வீட்ல ஏத்துட்டு இருப்பாங்களா? இல்லை எங்க வீட்ல தான் ஏத்துட்டு இருப்பாங்களா? இதுல சாருக்கு முதலிரவு வைப் இல்லைனு கேட்கற" என்றாள்.

"மிது. சும்மா விளையாட தானே செய்யறேன்" என்று அணைக்க, "உங்கம்மா எனக்கு வேசி பட்டம் கட்டாத குறை. உன்னை ரசிச்சா கூட கண்ணு வைக்காதனு வந்துடறாங்க. ஏன்டா... இப்படியொரு சூழலில் கல்யாணம் பண்ணினோம்னு கஷ்டமாயிருக்கு. உங்கம்மாவுக்கு நான் அபார்ஷன் பண்ணிட்டு வெறுமெனே கல்யாணம் பண்ண போராடினா நல்ல பொண்ணுனு நினைச்சிருப்பாங்கல?" என்று கண்ணீரை உகுத்தினாள்.

அன்னை தான் வேசி பட்டம் கூட கட்ட தயாரானவன்று ஹ்ருதேஷ் அறிவானே. இவன் தானே அதட்டி உருட்டி தற்போது வாயை மூட வைத்தது. தன்னிடம் அப்படி பேசுவதை விட்டு, மிதிலாவிடம் இப்படி ஆரம்பிக்கின்றாரா?' என்ற எண்ணினான்.‌

"அம்மாவுக்காக நான் சாரி கேட்டுக்கறேன். அவங்க அப்படி பேசக்கூடிய ஆளு தான். ஆனா இங்க இருக்கறவரை தான். நாம பெங்களூருக்கு போனதும் நாம மட்டும் தான். அதுவரை அட்ஜஸ்ட் பண்ணு ப்ளீஸ்.

அதோட கல்யாண நாள் அதுவுமா கண்ணீர் வேண்டாம். எனக்கு கஷ்டமாயிருக்கு." என்று அவளது கன்னத்தில் படிந்திருந்த கண்ணீரை துடைத்து விட்டான்.

அவன் நெஞ்சில் கட்டிக்கொண்டு, "பால்" என்று நீட்ட, அதை பாதி பாதி குடித்து ஓரம் வைத்து, "ஆமா... நீ ஏன் இப்ப எமோஷனல் ஆகற. முன்ன எல்லாம் அப்படி ஆகமாட்ட." என்று அவன் படுத்துக்கொண்டு அவளை கட்டிக்கொண்டு கேட்டான்.‌

"தெரியலை... என் காதல்ல உடும்பா இருந்தேன். நீயா லவ் பண்ணறதை அக்சப்ட் பண்ணியதும் அப்பாடா இனி இரண்டு பேர் சேர்ந்து இந்த காதலை வாழ வைச்சிடுவோம்னு நினைச்சேன். ஆனா நீ பிரேக்கப் என்றதும், பயந்து உன் வாயை அடைக்க கிஸ் பண்ணி அதை நாம கண்ட்ரோல் மீறி, நாம ஒன்னுக்குள்ள ஒன்னா ஆனதில, என்னை கைவிட மாட்டேனு தெளிவு வந்துச்சு.

ஆனா அதையே நீ அடிக்ட் ஆக்கியதும், குற்றவுணர்வு இருந்தது.
படிக்க அனுப்பின இடத்தில் உன்னை தேடி வர்றேனேனு. ஆனா நீயா கூப்பிட்டு மறுக்கவும் மனசுவரலை. நான்‌ கன்சீவ் ஆனதும் எல்லாருக்கும் தெரியவும், கௌசிக் பார்த்த பார்வை கேவலமா இருந்தது.
அதோட உங்கம்மா பார்வை. இவங்க இரண்டு பேரை பார்க்கறப்ப நான் குற்றவாளி மாதிரி பீல் பண்ணறேன் ஹ்ருத்." என்றாள்‌.

"காதலிச்சு கழட்டி விட்டு, கர்ப்பமாகிட்டு அந்த குழந்தையை அழிச்சுட்டு வேறொருத்தனை கட்டிக்கிட்டா தான் தப்பு. நாம அந்த தப்பை செய்யலை. அதனால ரொம்ப யோசிக்காத,  கொஞ்ச நாளில் சரியாகிடும்" என்று கண்ணில் முத்தம் வைத்தான் கள்வன்.

ஹ்ருதேஷ் வீட்டில், அவனது அறையில், அவன் கட்டிய மாங்கல்யம் அவள் வெற்று மார்பில் உரசியபடி, நெற்றியில் குங்குமம், உடலெங்கும் மணநாளுக்கென அணிந்த பொன் நகைகள் என்று மிதிலாவை மேலும் அழகாக காட்டியதில் ஹ்ருதேஷின் நெஞ்சில் கூடல் முடிந்து சுகமாக உறங்கினாள்.

ஹ்ருதேஷிற்கு காதலில் திருமணம் பந்தத்தில் இணைந்து மிதிலாவுக்கு நல்ல காதலனாக மாறியது சந்தோஷமென்றாலும், நண்பனை இன்னும் பிரிந்திருக்க அது உறுத்தியது.
கௌசிக் தன்னை எப்பொழுது ஏற்பானோ என்று உள்ளுக்குள் வாடினான்.

அடுத்த நாள் ஹ்ருதேஷ் எழுந்து சோம்பல் முறித்து, மிதிலாவை பார்த்தான்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவளது தட்டையான வயிற்றை தீண்டினான்.

மிதிலா அவன் கைச்சூட்டில் விழிப்பு ஏற்பட்டு எழுந்தாள்.

"என்ன பார்த்துட்டு இருக்க" என்றாள்.

"ஒன்னுமில்லை." என்றுரைக்க, பல் விலக்க ஆரம்பித்தாள்‌.

"ஏ... நூரையெல்லாம் ரத்தமா வருது" என்று பயப்பட, "இப்ப எல்லாம் சம்டைம் இப்படி ஆகுது ஹ்ருத். ஈறு வீக்கா இருக்காம்." என்று துப்பினாள்.

லேசான ரத்த சிவப்பு வெள்ளை நூரையுடன் கொப்பளித்தாள்.

இருவரும் குளித்து முடித்து டீ குடிக்க வெளியே வர, அங்கே செல்வராணி மருமகளை கண்டு டீயை ஆற்றி மகனிடம் தந்தார்.

"உனக்கு நீயே ஊத்தி குடிச்சிக்கோ" என்று கூற, ஹ்ருதேஷ் தனது டீயை அவளிடம் தந்துவிட்டு மற்றொரு டீ டம்ளரை எடுத்து டீயை ஊற்றினான்.

செல்வராணிக்கு மகன் அவளுக்காக வேலை செய்வதை கண்டு, "ஏன்டா... அவ ஊத்தி குடிச்சா என்ன? நீயேன் வேலைக்காரனா அவளுக்கு சேவகம் செய்யற?" என்றார்.‌

"கணவன் மனைவி இரண்டு பேர்ல யார் யாருக்கு உதவி செய்தா என்ன? உங்களுக்கு தலைவலின்னா அப்பா தைலம் தேய்ச்சி விட்டா அது வேலையா? இல்லைல்ல? அது மாதிரி தான்" என்று கூற பாதி டீ குடித்தவள் வாந்தி எடுத்து நின்றாள்.

அன்னையிடம் பேசிவிட்டு, அவளை தாங்க போனான்.

மிதிலா தலையை பிடித்து வாந்தி எடுக்க உதவினான். அடுத்து தண்ணீரை குழந்தைக்கு புகட்டுவது போல ஊட்டினான்.

டீ வேண்டாமென்றதும் பாலை சூடுப்படுத்தி கொடுத்தான்.
செல்வராணியோ இதை காண பிடிக்காமல் அறைக்குள் அடைந்தார்‌.

காலை உணவு சாம்பார் இருக்க இட்லி சாம்பார் தொட்டு சாப்பிட்டதும் இதே சம்பவம் நடந்தது.

"அம்மா.. மதியம் புளிக்குழம்பு செய்யறிங்களா" என்று கேட்க, "சாம்பார் செய்தாச்சுடா இன்னொரு குழம்பு எல்லாம் வைக்க முடியாது." என்றார்‌.

"ஹ்ருத்.. மதியம் எங்க வீட்ல சாப்பிடுவோம். எனக்காக எதுவும் வைக்க வேண்டாம். எங்கம்மா ஏதாவது செய்திருப்பாங்க" என்று முடித்துவிட்டாள்.

ஹ்ருதேஷ் சரியென்று திரும்ப, "இங்க பாருடி... என் பையனை என்‌ எதிர்ல பெயர் சொல்லாத. மரியாதையா பேசு‌" என்று கண்டித்தார்.

இம்முறை ஹ்ருதேஷ் மிதிலாவை பார்வையிட்டு, 'சரியென சொல்லிட்டு போ' என்ற ரீதியில் பார்க்க, அவளோ "வாயில வர்றதை தான் கூப்பிட முடியும்‌" என்று துணியெடுத்து வைக்க ஓடினாள்.

"இவங்க எனக்குன்னு டீ எடுத்து நீட்ட மாட்டாங்க. குழம்பு வச்சி தர மாட்டாங்க. ஆனா என்னை அதிகாரம் பண்ண மட்டும் வாய் வரும்." என்று அறைக்குள் சென்று முனங்கினாள்.
அது வெளியே இருந்தவர்களுக்கு கேட்டது.

செல்வராணியோ "ஏன்.. பெத்தவங்க முன்ன பெயர் சொல்லாம தவிர்க்க தெரியாது. அப்படி தான் வாயில வர்றதை கூப்பிடுவேன்னு போறா. இப்படியே போனா மரியாதை கிடைக்காது ஹ்ருதேஷ். நீ பொண்டாட்டி பேச்சை கேட்டு ஒரு நாள் இல்லை ஒரு நாள் இந்த அம்மாவை பார்க்க விடாம பண்ணுவா பாரு" என்று ஒப்பாரி வைக்க தாயுக்கும் தாரத்திற்கும் இடையே நின்றவனாக தலையை உலுக்கி கொண்டான்.

-தொடரும்.

https://onlinetamilnovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%ae%e0%af%87%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%87%e0%ae%95%e0%ae%ae/

நின் பிரேமம் என் சிநேகம்-25
அத்தியாயம்-25

காலை சூரியன் இன்னும் முழுதாக பூமித்தாய் முது படரவில்லை. கோவிலின் கல்தரையில் மெல்லப் பரவிய அந்த பொன்னிற ஒளி, ஒரு அமைதியான ஹ்ருதேஷின் திருமண ஆரம்பத்தை அறிவிப்பது போல இருந்தது.
கோவில் மணியின் சத்தம் தூரத்தில் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

ஆடம்பரம் இல்லாத ஒரு எளிமையான திருமணம் அங்கே நிகழப்போகின்றது.

ஹ்ருதேஷ் கோவில் மண்டபத்தின் ஓரத்தில் நின்றிருந்தான். வெள்ளை வேஷ்டி பட்டு சட்டை, ஆனாலும் அவன் முகத்தில் ஒரு  அமைதியாகத் தோன்றினாலும், உள்ளே ஒரு பெரும் அலைபாய்ச்சல்.

மிதிலாவுக்கும் தனக்குமான காதல்  உறவு இன்று ஒரு முடிவுக்கு வந்து, தனக்கு ஒரு பொறுப்பு கூடுவது உறுதி.

மிதிலா கோவிலுள்ளே பெற்றவர்களுடன் வந்தாள். எளிய சேலை, மிகக் குறைந்த அலங்காரம். அவள் கண்கள் தரையைத் தாண்டி எங்கும் செல்லவில்லை.

அவளுக்கு பயமில்லை ஆனால் ஒரு கனமான உணர்ச்சி அவளை சுற்றியிருந்தது. இந்த திருமணம் தன் காதலுக்கு ஒரு நிறைவான முடிவை தந்து மீண்டும் பிள்ளையார் சுழி போட்டு திருமண பந்தத்திற்கு வித்திட்டது.

மிதிலாவின் பெற்றோர் முகத்தில் மட்டும் தெளிவான மகிழ்ச்சி. அவர்கள் அடிக்கடி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
'இது சரியான முடிவு. இவர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படுவது சரி' என்று சொல்லாமல் சொல்வது போல. அவர்களுக்கு இன்றைய நாள் ஒரு கடமை முடிந்த திருப்தி.
தங்களுடைய மகள் வாழ்க்கை தவறான பாதைக்கு போகவில்லை என்று பெண்ணை பெற்றவருக்கான நிம்மதி.

மண்டபத்தின் இன்னொரு ஓரத்தில் கௌசிக் நின்றிருந்தான். கௌசிக் தங்கை கல்யாணம் என்று எந்தவொரு விஷயத்திலும் தலையிடவில்லை.
அவன் வர வேண்டிய அவசியமில்லாதது போல காட்டிக்கொண்டான்.

யாருக்கோ கல்யாணம் என்ற ரீதியில் இருந்தது கௌசிக் தோற்றம்.
கௌசிக் கண்கள் ஒருமுறை கூட மணமக்களை நேராகப் பார்க்கவில்லை. கோவில் சுவரில் இருந்த ஓவியத்தை பார்த்துக் கொண்டது போல தனித்து நின்றான்.‌
கௌசிக் மனதிற்குள் ஒரு எரிச்சல், ஏமாற்றம்,  இழப்பு.

நண்பன் துரோகியானது எரிச்சல், ஹ்ருதேஷ் தன் தங்கையை காதலித்தான் என்ற ஏமாற்றம். தன் நண்பன் இனி தனக்கு நண்பனாக இல்லை என்ற இழப்பு‌.

'இது நடக்க வேண்டியதா?' என்ற கேள்வி இன்னும் அவன் மனதில் தீராத சத்தமாக இருந்தது. மிதிலா மீதும் கோபங்கள் இருந்தது.

அதை தாண்டி மந்திரங்கள் தொடங்கின.
பூசாரியின் குரல் கோவிலின் காற்றில் கலந்தது. அந்த ரம்மியமான ஒலி, எல்லோரையும் ஒரு மையத்திற்கு இழுத்தது.

தாலி கட்டும் சமயம் ஹ்ருதேஷ் மிதிலாவை பார்த்தான்.  ஒரு நொடி நின் சிநேகத்தை தான் வழிநடத்தி திருமணத்தில் சேர்த்துவிட்டேன் என்ற பெருமிதம்.  அந்த பார்வையில் காதல் காட்டிக்கொள்வதில்லை. ஒரு உறுதி மட்டுமே தந்தான் ஹ்ருத்.

ஹ்ருதேஷின் விரல்கள் மெதுவாக உறைந்தது. அவன் பார்வை கௌசிக்கை சென்றது. கௌசிக்கோ வேண்டாவெறுப்புடன் கையிலிருந்த பூவை கசக்கிக் கொண்டிருந்தான்.

மிதிலாவின் தாய் கண்களைத் துடைத்தார். அவள் தந்தை தலை குனிந்து நிம்மதியாக மூச்சை விட்டார்.
கௌசிக் மட்டும் தனியாக படியில் சென்று அமர்ந்தான்.  கௌசிக் கண்களில் வலி இருந்தது, தங்கை திருமணத்தை ஏற்றுக் கொள்ளும் முயற்சியில் இருந்தான்‌.

யாரும் அவனை அழைத்து ஹ்ருதேஷ் பக்கத்தில் நிறுத்தவில்லை.

செல்வராணி மண்டபத்தின் பின்புறம் நின்றிருந்தாள். அவர் முகத்தில் வெளிப்படையான எதிர்ப்பு இல்லை, மகிழ்ச்சியும் இல்லை.

தன் மகனை ஹ்னுதேஷை பார்த்தார், அவன் மிதிலாவுடன் அருகருகே அமர்ந்திருப்பதை கண்டு பொறுமினார்.

மெதுவாக வந்து தட்டில் இருந்த குங்குமத்தை எடுத்து, மிதிலாவின் நெற்றியில் வைத்திட தீபா கூற ஹ்ருதேஷ் அதை செயல்படுத்தினான்.‌

ராஜலிங்கமும் செல்வராகவனும், சம்பந்தி முறையில் நிறைவாக பேசினார்கள்.‌ இந்த கூட்டத்தில் அவர்கள் இருவரும் நல்ல தகப்பனாக நடந்துக்கொண்டார்கள்.

கொஞ்ச நேரம் கோவில் வெளியே காற்று சுதந்திரமாக வீசவும் அங்கே அமர்ந்தனர். ஹ்ருதேஷ் ஒரு நொடிக்கு குறைவாக கண்களை மூடினான். அவன் தோள்களில்  முழுவதும் புதிதான பாரம் ஏறியது. ஆனால் இது சுகமாக இருப்பது போல மாயை.
மிதிலா ஹ்ருதேஷ் அருகில் நின்றாள்.

இரு வீட்டார் முன்னிலையில் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் 'காதல் கல்யாணம்' என்று கூறியே மணந்தான்.‌
அதனால் கௌசிக் நட்பை இழந்ததாக பேச்சு வந்தப்பின்னும் ஏற்றுக்கெண்டான்.

செல்வராணி எல்லாம், மைந்தன் தான் பார்த்து வைத்த பெண்களை தவிர்த்து, இப்படி காதலித்து மணப்பது ஒரு குறை என்றால் விமர்சையாக வைக்காதது மற்றொரு குறை. அதை திருமணத்திற்கு வந்த உறவுகளிடமெல்லாம், சொல்லி வருத்தப்பட்டார்.

ஹ்ருதேஷ் மெதுவாக கௌசிக் பக்கம் நடந்தான். மிதிலா தடுக்க, அவளையும் அழைத்தபடி கௌசிக் பக்கம் வந்து தள்ளி அமர்ந்தான்.

"இந்த கல்யாணம்... ரொம்ப விமர்சனையா நடக்க வேண்டியது கௌசிக். நீ என்னை மிதிலாவுக்கு லவ்வரா அக்சப்ட் பண்ணி, என்னையும் மிதிலாவையும் ஏற்றுயிருந்தா...
இப்ப பாரு... உங்க வீட்ல முதல் கல்யாணம். எங்க வீட்ல.. நான் ஒரே பையன். ஆனாலும் சாதாரணமா கோவில்ல ரொம்ப அமைதியா எளிமையா நடந்துயிருக்கு.

ஏன்டா.... என்னை வார்த்தைக்கு வார்த்தை மச்சி மச்சினு கூப்பிடுவ. ஆனா உன் தங்கையை நான் காதலிச்சது பெரிய குற்றமா நினைச்சி என்னை அடியோட வெறுக்கற?

என் நிலையில இருந்து கொஞ்சம் யோசித்து என்னை மன்னிச்சிருக்கலாம்ல? எனக்கு மச்சான் முறையில செயின் போட சொன்னதுக்கும் போடமாட்டேன்னு சொல்லிட்ட.

ஒரு காலத்தில என்னை மட்டும் தானே உலகமா நம்பி சுத்தின. என் நட்பை நீ உதாசினப்படுத்திட்ட கௌசிக்." என்றான்.

கௌசிக்கோ நக்கலாய் ஹ்ருதேஷை பார்த்து, "விமர்சனமா கல்யாணம் செய்யணும்னா பணக்கார பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணியிருக்கலாம்ல. என் தங்கச்சி தான் கிடைச்சாளா?

நீயும் அவளும் எல்லை மீறி பழகிட்டு வயித்துல ஒன்னு வளருது என்றதும் அவசரமா கல்யாணம் பண்ணற. ஏன் ஆறு மாசம் கழிச்சு பொறுமையா ஊர் முழுக்க பத்திரிக்கை தந்து, ரிசப்ஷன் வச்சி, பேண்ட் வாத்தியம் டிஜே வச்சி நடத்த வேண்டியது தானே. முடியாதுல... வயிறு காட்டிக்கொடுத்துடும் இல்ல.

இந்த எளிமையான திருமணத்திற்கு பின்னாடி, உங்க அவசரம் இருக்கு.
இங்கயிருக்கற யாருக்காவது தெரியுமா? ஆனா இந்த கௌசிக் கெட்டவன். நண்பன் தானே லவ் பண்ணினான். ஆனாலும் கோபமா மூஞ்சி தூக்கி உட்கார்ந்திருக்கான் பாரறேனு பேசும்.

ஏன்... உன் பொண்டாட்டி மிதிலா கூட, 'எனக்கு கடை திறக்க காசு தந்தும் நன்றியில்லாம நிற்கறானேனு தான் மனசுல திட்டுவா' என்று பேசினான்.

மிதிலாவோ இத்தனை நேரம் அமைதியும் அழுகையும் சோர்ந்தவளாக நின்றியிருந்தவள் அண்ணனை ஏறிட்டு, "என்ன பேசற அண்ணா... என்னைக்கு எங்க காதல் உனக்கு தெரிந்ததோ அன்னிலயிருந்து இவர் எப்படி கஷ்டப்படறார்னு பார்த்தவ நான்.

என் பிடிவாதம் நெருக்கத்தால என்னை காதலிச்சிட்டு, உன்னிடம் நல்ல நண்பனா அவர் காதலை மறைச்சிட்டு தவிச்சப்ப துடிச்சிட்டார்.

இதுல நீ அவரிடம் பேசாம விலகவும், என் காதல் தான் உங்க நட்பை பிரிச்சிடுச்சுனு தினம் தினம் உள்ளுக்குள்ள வெதும்பறார்.

முன்ன மாதிரி என்னிடம் சரியா பேசறதில்லை தெரியுமா? நீ கூட என்னிடம் முகம் திருப்பிட்டு போற.

இருக்கட்டும்... என் காதல் ஜெயிக்கணும்னு உடுப்பு பிடியா இருக்கணும்னா, நிறைய அம்பு துளைக்கற வார்த்தையை கேட்டு தான் ஆகணும். இட்ஸ் ஓகே.'' என்று கண்ணீரை துடைத்து, கையை கட்டி நின்றவள், "ஓகே... கௌசிக்... எங்க கல்யாணத்துக்கா வந்ததுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்‌. இப்ப இவர் பொண்டாட்டியா பேசறேன். அதுக்கு பதில் சொல்லு‌.

இம்புட்டு பேச்சு பேசற நீ ஒரு காலத்துல நான் பத்தாவது படிக்கறப்ப என் பிரெண்ட் ஒருத்தி, வனிதா... அவளை ரூட் விடலை. அவ கூட உங்க அண்ணா என்னை அடிக்கடி முறைச்சு முறைச்சு பார்க்குதுனு சொல்ல, நான் வந்து உன்னை கேட்டதும், மழுப்பின நினைவிருக்கா? இப்ப அந்த பொண்ணுக்கு கல்யாணமாகி இரண்டு வயசுல குழந்தை இருக்கு. ஆனா அவ போன வாரம் உன் கடையில ஜூஸ் குடிக்க வந்தா, அப்பவும் உத்து உத்து பார்த்தியாம். ஏன்டா... இதென்ன புத்தி?" என்று கேட்டு ஹ்ருதேஷ் பர்ஸை எடுத்து, அதில் சில்லரை ஐந்து ரூபாயை அண்ணன் கையில் வைத்து, "சில்லரை புத்தி" என்றாள்‌.

"ஏய்.. அவளை எங்கயோ பார்த்தேன். யாராயிருக்கும்னு உத்து பார்த்தேன். தப்பா இல்லை‌" என்று உடனடியாக மறுத்தான்.

"நீ என்னவோ பண்ணி தொலை.. ஆனா எனக்கு எண்ணி ஒரு மாசத்துல என் புருஷன் தந்த பணம் வேண்டும். அவர் வேண்டுமின்னா பணத்தை தந்துட்டு வாயை மூடியிருக்கலாம். என்னால அப்படி இருக்க முடியாது‌. அவரை மதிக்காதவனை நான் ஏன் பாவம் பார்க்கணும். பணத்தை எடுத்து வை." என்றாள் கறாராக.

"மிதிலா... அறிவில்லை. வாயை மூடு. அது என் பிரெண்டுக்கு நான் தந்தது. கடனுக்கு இல்லை." என்றான் ஹ்ருதேஷ்.

"ஓ..‌ தானமா.? அதெல்லாம் தேவையில்லை. உன்னை அவன் பணத்தை தந்து என்னை கரெக்ட் பண்ண வாயடைச்சதா அசிங்கமா நினைக்கறான். நீ நண்பனுக்காக தந்தேன்னு பேசற. உன்னை நண்பனா மதிக்க அவன் பழைய கௌசிக் இல்லை." என்றாள்.

"நான் அதே ஹ்ருதேஷ் தான் மிதிலா. உன்னோட காதலும் என்னோட நட்பு, இரண்டும் எனக்கு முக்கியம்" என்றான்.

அதற்குள் செல்வராணி "நல்லநேரம் பார்த்து வீட்டுக்கு போய் விளக்கு ஏத்த வேண்டாம். எதுவும் முறையா செய்யக் கூடாதுனு நினைக்கறாளா அவ" என்று கத்த துவங்கினார்.

"பிறந்த வீட்ல நீ. புகுந்த வீட்ல அவங்க. நல்லா வருவிங்க" என்று கௌசிக்கை பார்த்து கூறிவிட்டு மிதிலா ஹ்ருதேஷ் கையை பிடித்து இழுத்து சென்றாள்‌.

கௌசிக் பார்வை தங்கை இழுத்து சென்ற ஹ்ருதேஷ் கவனித்தாள்.

"கையை விடுடி. என்ன திமிரு உனக்கு. வாய் நீளுது‌." என்று அதட்ட, "உங்கம்மாவுக்கு வாய் நீளமா தான் இருக்கு. ஈடுக்கொடுக்க வேண்டாம்" என்று பேசுவது இங்குவரை கேட்க, கௌசிக்கிற்கு தங்கை ஹ்ருதேஷை அவள் இழுப்புக்கு ஆட்டி படைப்பது தெரிந்துக்கொண்டான்.

ஒருவேளை ஹ்ருதேஷ் விலகி தங்கை நெருங்கி வந்து இம்சை தந்து காதலித்து இருக்க, ஹ்ருதேஷ் இருதலை கொள்ளியாக சங்கடம் அனுபவித்து இருப்பானோ என்று லேசாக எண்ணம் மொட்டு விட்டது.

ஹ்ருதேஷ்-மிதிலா அதற்குள் காரில் ஹ்ருதேஷ் வீட்டிற்கு சென்றார்கள். பாதி பேர் ஹோட்டலில் சாப்பிட்டு கிளம்பியிருந்தனர். கௌசிக்கும் கடைக்கு வந்து கல்லாப்பெட்டி அருகே அமர்ந்து விட்டான்.
அவனுக்கு மனதில் உறுத்தியது. இந்த கடை ஹ்ருதேஷ் தந்த பணத்தால் வளர்ந்ததே. அப்படியிருக்க தினமும் அந்த நினைப்பு வேறு கொல்கின்றது.

எப்படியாவது பணத்தை தந்து கடனை அடைக்க வேண்டும் என்றெண்ணினான்.

மிதிலாவோ ஹ்ருதேஷ் வீட்டில் விளக்கு ஏற்ற, இரண்டு குச்சி எரியாமல், தீக்குச்சியின் முனையில் இருந்தவை கீழே சிதைந்தது.
அதற்கு செல்வராணியோ "ஒரு விளக்கு பத்தவைக்க சொன்னா தீக்குச்சியை உடைச்சி போட்டுட்டு இருக்க. முன்ன பின்ன சாமி விளக்கு ஏத்தியிருக்கியா?" என்று ஆரம்பித்தார்.

தீபாவோ மகள் கையை பிடித்து அமைதிப்படுத்த, "ஹ்ருத் நீ ஏத்து" என்று தர, "கல்யாணம் ஆனப்பிறகு என் பையன் பேரை சொல்லற. விளக்கு நீ தான் ஏத்தணும். அவனை ஏத்த சொல்லற" என்றார்.‌

"ஹ்ருத்.. தீக்குச்சி உரசிப்பாரு" என்று அதிகாரம் செய்ய, ஹ்ருதேஷோ சாமி ரூம்ல பிரச்சனை பண்ணிட்டு" என்று பிடுங்கி தீக்குச்சியை உரச முயல, அன்னையை கண்டு முறைத்தான்.

தீக்குச்சி தண்ணியில் நனைத்து உதறி தந்திருப்பதை அவன் யூகித்திட, வேறொரு தீப்பெட்டியை தந்து மிதிலாவை ஏற்ற வைத்தான்.

மிதிலாவோ விளக்கு ஏற்றிவிட்டு, செல்வராணியை ஒழுங்குக் காட்டி விட்டு சாமி கும்பிட்டாள்.

செல்வராகவன்-தீபா இருவரும் மகள் இந்த வீட்டில் நல்லபடியாக வாழ வேண்டினார்கள். ராஜலிங்கமோ செல்வராணியிடம் "நல்லபடியா நடந்துக்கிட்டா நல்லது" என்று பேசி சென்றார்.

செல்வராணியோ மகனை கண்டு நழுவினார்.

மிதிலாவோ "ஹ்ருத்... குங்குமம் வச்சிவிடு" என்றாள் உளமாற.

அவனும் புன்னகையுடன் வைத்துவிட்டான்.

-தொடரும்.

https://onlinetamilnovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-25/