நயனமே நான் தானடி - Praveena Thangaraj - onlinetamilnovels.com Forum

நயமே நான் தானடி-5
அத்தியாயம்-5

சங்கவி நேத்ராவோடு நடந்துவர, "என்ன நேத்ரா அமைதியா வர்ற. எப்பவும் எப்படி எக்ஸாம் செய்தனு கேட்ப?" என்று பேசவும், "மறந்தே போயிட்டேன்.. எப்படி செய்த?" என்று சுரத்தையின்றி கேட்டாள்.

"என்னப்பா... டல்லா கேட்கற?" என்று தீண்ட, "இல்லைப்பா... உனக்கு எழுத உதவினாரே... அவரோட பாஸ் இங்க இருந்தார். அவருக்கு சமீபத்தில் பார்வை இழந்திருக்கார். கண் போனதில் ரொம்ப மனமுடைந்து பேசினார். அதோட அவரோட காதலி கண்ணு தெரியலைன்னு விட்டுட்டு போயிட்டா. அவர் மனசுல ரொம்ப சோகத்துடனும், சலிப்புடனும் வாழறார்.

கடவுள் நல்ல பணமும் வளமும் தந்து உயிர் பிழைக்க வச்சி, கூடமாட நடமாட உதவிக்கு ஒருத்தரை நியமிக்கற அளவுக்கு கருணையை தந்திருக்கார்னு சொல்லியும் அழுதுட்டார். ரொம்ப நேரம் பேசவும் மனசு ஒரு மாதிரி ஆகிடுச்சு சங்கவி." என்றாள்.

"ஓ.. அதான் விஷயமா? சரி விடு இரண்டு சமோசா சாப்பிட்டா சரியாகிடும்" என்று அங்கே இருந்த கேண்டீனுக்கு வழிக்கேட்டு சென்றார்கள்.

சமோசா டீ இரண்டும் வாங்கிவிட்டு ஓரிடமாக அமர்ந்தப்பின்னும் நேத்ராவுக்கு ராஜ்குமாரின் அழுகையே மனதில் பிசைந்தது. அதுவும் இவளது கையில் அவனது கண்ணீர் துளிகள் பட்டுதெறித்திருக்க, இப்பவும் அதை உணர்ந்தவளாக அவளது இடது கையால் வலது கையை தடவினாள்.

"போன் நம்பர் தெரிந்தாலாவது அவரிடம் இப்ப எப்படியிருக்கிங்கனு விசாரிக்கலாம். ஆனா அதுவும் இல்லை." என்று குறைப்பட்டாள் நேத்ரா.

சங்கவியோ, "ஹே என்னப்பா.. நம்பர் வேணுமா. என்கிட்ட எனக்கு எழுத உதவி செய்த தேவா அண்ணா நம்பர் இருக்கு. அவரிடம் போன் செய்து வேண்டுமின்னா அவர் பாஸை பத்தி விசாரி." என்றதும், நேத்ராவோ உடனடியாக மறுத்தாள்.

"இல்லைப்பா... இப்ப வேண்டாம். ஹாஸ்டலுக்கு போயிட்டு இதே மனசஞ்சலம் அகலாமா இருந்தா பார்ப்போம்" என்று மறுத்தாள்.

"அப்படியா.. சரி எதுக்கும் தேவா அண்ணா நம்பரை உனக்கு அனுப்பறேன்" என்று போனில் உள்ள அசம்பிளிட்டி செட்டிங்கின் உதவியால், ஸ்கீரின் ரீடர் மூலமாக, குரல் வழி வாசிப்புடன் தேவா அண்ணா நம்பரை நேத்ராவின் வாட்சப்பிற்கு அனுப்பப்பட்டது.

நேத்ராவும் அந்த எண்ணை 'தேவா' என சேமித்து வைத்து வைத்து கொண்டாள்.

ஆட்டோ பிடித்து தங்கள் தங்கும் அறைக்கு வந்து, நிதானமாக நீரை அருந்தி ராஜ்குமாரின் பேச்சை மீண்டும் மனதில் ஓட்டிப்பார்த்தாள்.

'இது வேலைக்கு ஆகாது. அவர் தவறாக எண்ணினால் கூட பரவாயில்லை. போனில் ஒருமுறை நலன் விசாரித்து கொள்வோமென, தேவா அண்ணாவிற்கு கால் பண்ண வேண்டுமென போனை எடுத்து ஸ்வைப் செய்து இரண்டு முறை தட்ட, அசம்பிளிட்டி என்ன உதவி வேண்டுமென கேட்கவும், தேவா என்ற எண்ணிலிருந்து போன் பண்ணணும் என்று கூறியிருக்க, அடுத்த நொடி தேவாவிற்கு அழைப்பு பறந்தது‌.

காரை ஓட்டியபடி "என்னாச்சு சார்" என்று கேட்க "ஒன்னுமில்லை" என மறுத்தான் ராஜ்குமார்.

"சார்... போன் வருது. காரை ஓரமா நிறுத்திட்டு பேசவா?" என்று அனுமதி வாங்கினான்.

ராஜ்குமாரோ பேசு என்று கூறிட, போனை ஏற்றான்.

"தேவா இருக்கிங்களா? நான் நேத்ரா பேசறேன்.‌ சங்கவிக்கு கூட பரீட்சை எழுத உதவினிங்களே.. அங்க கூட இருந்த பொண்ணு. கண்ணு தெரியாதவ" என்று அவளது அறிமுக அடையாளமாக முன் மொழிந்தாள்.

"ஆங்.. சொல்லுங்கம்மா." என்று தேவா கூற, "நேத்ரா... நேத்ரா.. அந்த பொண்ணு. என்னிடம் பேசினவ" என்று ராஜ்குமார் ஆவலாக எண்ண, "சார், உங்க பாஸ் கண்ணு தெரியலைனு ரொம்ப பீல் பண்ணினார். அதோட காதலி தன்னை விட்டுட்டு போனதா பேசினார். சடனா அழுதுட்டார். எனக்கு என்ன ஆறுதல் சொல்லனு தெரியலை. லாஸ்டா ரொம்ப பீல் பண்ணி போனதா தெரிந்தது. இப்ப எப்படியிருக்கார், நார்மலாயிட்டாரா?" என்று கேட்டதும், தேவாவுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. காரில் முன்னிருக்கையில் தன்னோடு ராஜ்குமாரும் அல்லவா இருக்கின்றார்.

"அது வந்து" என்று தேவா இழுக்க, "தேவா... நான் இப்ப பெட்டர்னு சொல்லு." என்றான் ராஜ்குமார்.

"அச்சோ.. சார் பக்கத்துல தான் இருக்காரா. சாரி சார். நான் எதுவும் காயப்படுத்தி பேசிட்டேனோனு பயந்துட்டேன்." என்றதும், "அப்படியெல்லாம் இல்லை" என்றான் ராஜ்குமார். தேவாவோ கையில் போனை வைத்து பார்வையாளராக இருந்தான்.

"ஓகே சார் வேறொன்னுமில்லை . என் சார்பில சங்கவிக்கு எழுதி தந்ததில் ரொம்ப தேங்க்ஸ். நீங்க தான் அதுக்கு காரணம். சோ உங்க இருவருக்கும் என் தேங்க்ஸ்" என்றவள் வைக்கட்டுமா சார்" என்று அனுமதிக் கேட்டே போனை துண்டித்தாள்.

ராஜ்குமாருக்கு நேத்ராவையும் அவளது பேச்சும் மனதில் போட்டு தாக்க, அதை பற்றியே எண்ணியபடி வந்தான். தேவாவும் அமைதியாக காரை இயக்கினான்.‌

வீட்டுக்கு வந்ததும் அறைக்கு கைப்பிடித்து அழைத்து வந்தவன், அறையின் மெத்தையில் அமர வைக்க, ராஜ்குமாரோ "ஏன் தேவா.. இந்த போனை எல்லாம் அந்த பொண்ணு எப்படி பேசுது?" என்று விசாரித்தான்.

"அதுக்குன்னு போன் செட்டிங்ல சில அசம்பிளிட்டி இருக்கு சார். வாய்ஸ் மூலமாக போனை இயக்குறது. கிட்டதட்ட 'ஹே கூகுள்'னு நாம போன்ல சில விஷயத்தை கேட்போமே, அப்படி" என்று கூற, அப்பொழுதும் ராஜ்குமாருக்கு புரிந்தும் புரியாமலும் குழம்பினான்.

''எனக்கு அந்த பொண்ணு நம்பர் வேணும் தேவா. அந்த பொண்ணு என்னிடம் உன்னை மாதிரியே பாஸிடிவா பேசுச்சு. என் மனசு அது மாதிரி பேசறவங்களோட பழகினா மச் பெட்டர்னு இருக்கு." என்றதும், தேவா உடனடியாக "உங்க நம்பர்ல அந்த பொண்ணு நம்பரை சேவ் பண்ணிடறேன் சார். நீங்க பேசணும்னா பேசலாம்." என்று நம்பரை சேமித்தான்.

ராஜ்குமார் அதற்கு மறுக்கவில்லை. எண்ணை சேமித்து வைக்க அவனும் விரும்பினான்.

இரவு உணவும் தயாராகி கொண்டு வந்து சாப்பிட வைத்தான். ஒரு குழந்தை போல தன்னை ஒரு ஆள் வழிநடத்துவது ராஜ்குமாருக்கு எரிச்சலை தந்தாலும் வேறுவழியின்றி ஏற்க ஆரம்பித்தான்.

சாப்பிட்டு டிசு பேப்பரால் வாயை துடைத்து விட, "தேவா... சோனாலினு நம்பர் இருக்கும் அந்த நம்பருக்கு கால் பண்ணு" என்று கூறவும் தேவா மறுக்காமல் அழைத்தான்.

ஆனால் இந்த நம்பர் தற்போது உபயோகத்தில் இல்லை என்று வரவும், சோர்ந்துப் போனான் ராஜ்குமார்.

''தேவா... அந்த கண்ணு தெரிராத பொண்ணு நேத்ராவிடம் பேசணும். பார்வையில்லாதவர்களோட நடைமுறை வாழ்வில் சில சந்தேகம் இருக்கு. நான் கேட்டா தப்பா நினைக்காம என்னிடம் பேசுவாளானு போன் பண்ணி பேச கேளு." என்றான்.

தேவாவோ இது போன்று திடீரென உடலில் பகுதி செயலிழந்து போனவர்களின் மனநிலை அறிந்ததால் "கேட்கறேன் சார்" என்று இம்முறை ராஜ்குமார் எண்ணிலிருந்து அழைத்தான்.‌

அப்பொழுது தான் தலைமுடியை கொண்டையிட்டு நிமிர, தன்னருகே போன் அதிர்வதை உணர்ந்தாள் நேத்ரா.

பிறகு போனை எடுத்து ஸ்வைப் செய்தாள்.

"ஹலோ..  நான் தான் தேவா. ஈவினிங் கூட உங்களோட பேசினேனே." என்றதும், "ஆஹ்.. சொல்லுங்க சார். ஏதோ புதுநம்பர்லயிருந்து கூப்பிட்டு இருக்கிங்க?" என்று ஆச்சரியப்படுத்தினாள்.

"ஆமா..  இது ராஜ்குமார் சாரோட பெர்சனல் நம்பர். உங்களிடம் அவர் பேசணுமாம்." என்றதும் நேத்ரா சற்று அமைதியானாள்.

"ஏங்க லைன்ல இருக்கிங்களா? கேட்குதா?" என்றதும், "ஆங் இருக்கேன் சார். கொடுங்க அவரிடம் பேசறேன்." என்றாள்.

"சார்... நேத்ரா லைன்ல இருக்காங்க. நீங்க பேசிட்டு இருங்க. நான் கீழே போய் சாப்பிட்டு வந்துடறேன் சார்" என்று தேவா போனை கையில் தந்தான்.

"ஓகே தேவா. சாப்பிடு" என்று அனுப்பிவிட்டு காதில் வைத்தான் ராஜ்குமார்.

"ஹலோ.. நேத்ரா" என்று கூப்பிட, "ஆஹ் சொல்லுங்க சார் நேத்ரா தான்‌" என்று பேசவும், ராஜ்குமாருக்கோ எதற்கு அழைத்தோம்? என்ன பேச அழைத்தோம் என்றதே மறந்தது. சொல்லப்போனால் அவளிடம் பேச வேண்டுமென்று மட்டும் தான் மனம் கூறியது‌. என்ன பேசுவது என்று அவன் நினைக்கவில்லை.

நேத்ராவே, "சார்.. சாரி.. விபத்து நிகழ்ந்து கண் போனவரிடம் பிலாசிபி பேசிட்டேன். என்னயிருந்தாலும் விபத்துல கண்ணு போயிருக்க கூடாது‌. ஆயிரம் செல்வம் இருந்தாலும், நம்ம வேலை நாமளே யாரோட உதவியும் இல்லாம செய்யறது தான் நல்லது. உங்களை என்‌ பேச்சு காயப்படுத்தியிருந்தா மன்னிச்சிடுங்க" என்றாள்.

"நோநோ நேத்ரா நீ பேசியதை தான் நான் ரீப்பீட்ட் மோட்ல மனசுல யோசிச்சிட்டே இருக்கேன்.‌ எஸ்... விபத்துல உயிர் பிழைச்சதே பெரிய விஷயம். தேவா மாதிரி ஒரு கேர்டேக்கர், வசதி, இதெல்லாம் எனக்கு கிடைத்ததில் நான் அதிர்ஷ்டசாலி." என்றதும் நேத்ரா மனம் இலகுவானது.

"அப்பறம்... எனக்கு இப்ப உன்னோட பேசணும்னு ஆசை. ஐ.. மீன்..‌ உங்களோட.. லைப் ஸ்டைல் பத்தி... சாரி சாரி.. நம்மளோட லைப் ஸ்டையில் எப்படி அமைச்சிக்கணும்னு கொஞ்சம் க்ளியரா தெரிந்துக்கிட்டா ஐ சேஞ்ச்டு மை கேரக்டர். எனக்கு சில உதவி தேவைப்படுது.

டாக்டர் சொன்னார் முதல்ல கஷ்டமாயிருக்கும். பிறகு போக போக உங்களுக்கு சில விஷயம் பிடிப்பட்டுடும், அப்ப எப்படி வாழறதுனு புரிந்துப்பிங்கனு சொன்னார்.

தேவா மூலமா கண் தெரியாதவங்க எப்படி படிப்பாங்க என்ன செய்வாங்கனு புக்ல வச்சியும் அவன் பார்த்ததை வச்சியும் சொன்னான். அதெல்லாம் கேட்டேன். எனக்கு ரியல் பிளைண்ட்.. அதாவது என்னை போல இருக்கறவங்க எப்படி லைப்பை பேஸ் பண்ணறாங்கனு தெரிந்துக்க ஆசை. தப்பா நினைக்கலைன்னா நீ சொல்லு." என்று தயங்கி ஒருமையில் கேட்க, "எதுனாலும் கேளுங்க சார்." என்றாள்.

"தனியா படுத்துட்டு இருக்கும் பொழுது என்னென்னவோ கேள்விகள் வந்து பயமுறுத்தும். சட்டுனு நீ கேளுங்கனு சொன்னதும் ஒன்னும் நினைவு வரலை. பட்... இந்த போனை பத்தி கேட்கறேன். உன்னால எப்படி போன் யூஸ் பண்ண முடியுது?" என்று கேட்டான் ராஜ்குமார்.

ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் சாதாரண நபர்களுக்கே பெரும்பாலும் சில விஷயம் புரிபடவில்லை. அப்படியிருக்க இவர்களை போல... தவறு தன்னை போல இருக்கும் ஆட்கள் எப்படி கையாள்கின்றனர் என்ற வியப்பில் கேட்டான்.

"அட என்னவோ கேட்க போறிங்கனு நினைச்சேன். இது தானா? சார் போன்ல சில செட்டிங் இருக்கு." என்றதும் இடையில் "ஆஹ்... ஏதோ அசம்பிளிட்டி இருக்கு. அது மூலமாக வாய்ஸ்ல பேச போன் அதுக்கு ஏற்ப கால் பண்ணும், டைப் பண்ணும்னு, வைபிரேட் ஆனா கால் வருதுன்னும், சில பிரத்யோக டோன்வச்சி உங்களுக்கு நோட்டிபிகேஷன் வரும்னு சொன்னான்." என்று முடிக்க, "ஆமா சார்... ஐபோன்னா டாக்பேக், ஸ்மாட்போன்னா வாய்ஸ்ஓவர் இப்படி இருக்கும். அதுல போன்ல இருக்கற சிம்பல்ஸ் பட்டன்ஸ், எழுத்து இதெல்லாம் வாய்ஸ்லயே சொல்லும். கால் அட்டன், வாட்சப் மெஸேஜ, செண்ட் நார்மல் மெஸேஜ் இப்படி யாருக்கு அனுப்பணுமோ,  அவங்களுக்கு தகவல் செய்யும்.

நீங்க இந்த த்ரில்லர் படத்துல ஹே சிரி.. ஹே கூகுள்னு இப்படி ஹீரோ போன்ல பேசறதை பார்த்திருக்கிங்களா?" என்றதும், "யாயா.. ஏதோ ஒரு ஹாக்கிங் மூவில ஹே சிரினு ஹீரோ ஜீவா சொல்வார்." என்று ராஜ்குமார் புரிந்ததில் சொல்ல, "ஆங்.. அது மாதிரி கண்ணுல பார்க்காட்டியும் வாய்ஸ்ல பேசுவோம். எதிர்தரப்புல அதுக்கு வாய்ஸ் டைபிங்ல எழுத்து போய் அனுப்புனு சொன்னா அனுப்பும். கால் பண்ணுனு சொன்னா பண்ணும்‌. அதோட ஸ்வைப் பேட்டர்ன், ஜிஸ்டேர்ன் காம்பினேஷன் எல்லாம் பிராக்டிஸ் செய்து மனப்பாடம் பண்ணிப்போம்‌.

இப்ப ஒரு இடத்துக்கு போறோம். வழியெல்லாம் கூகுள் மேம்மூலமா கேட்டுக்கலாம்.

படிப்பு பார்த்திங்கன்னா பி.டி.எப் புக் இதெல்லாம் ஸ்கிரீன் ரீடர் வாசிக்கும்.

யூடியூப் ஆடியோ, ஆன்லைன் கிளாஸ் எல்லாம் படிப்புக்கும் வாய்ஸ் சப்போர்ட் தான். இதை வச்சே பேங்க்ல கூட டீல் பண்ணலாம்.

இன்பெக்ட் பிராக்டிஸ் மேக்ஸ் பெர்பெக்ட் சார். கண் தெரியாதவங்களுக்கு போனும் ஒரு வரப்பிரசாதம் தான்." என்றாள்.

"அப்ப பிராக்டிக்ஸ் மேக்ஸ் பெர்ஃபெக்ட்னு சொல்லறிங்களா? என்னால பிராக்டிக்ஸ் பண்ணினா தனியா மேனேஜ் பண்ணுவேனா?" என்று கேட்டான்.

"கண்டிப்பா சார்... ஆனா அதுக்கு கத்துக்கறதுல ஆர்வம் இருக்கணும். மனசுல சோர்வை தேக்கி வைக்க கூடாது. விடாமுயற்சியா ட்ரை பண்ணணும்." என்றாள் நேத்ரா.

"நீங்க பேசறப்ப பாஸிடிவ் வைப்ஸா பேசறிங்க. அதுவும் மடமடனு" என்று கேட்டதும், "நான் வானவில் எஃப்.எஃம்-ல ஆர்ஜே-வா இருக்கேன் சார். இதுகூட பேசலைன்னா எப்படி?" என்றாள்.

"நைஸ்." என்று ராஜ்குமார் கூற, "ஏய்... அங்க பேச வராம என்ன பண்ணற? நீ தூங்கலையா நேத்ரா" என்று சங்கவி வரவும், "சாரி நேத்ரா... நேரமாச்சு நீ தூங்கு. ஆனா அடிக்கடி நான் கால் பண்ணுவேன். தப்பா எடுத்துக்காத" என்று ராஜ்குமார் கோரிக்கையாய் கூற, "சரிங்க சார்..‌ எப்பன்னாலும் கால் பண்ணுங்க. குட் நைட் சார்" என்று துண்டித்தாள்.

ராஜ்குமாருக்கு ஏதோ புத்துணர்வு தொற்றிக்கொண்டது. நேத்ராவின்

வாய்மொழி வார்த்தைகள் அவனுக்கு மனதில் லேசாக துளிரிட்ட தைரியத்தை கொண்டு வந்தது.

-  தொடரும்.

நயனமே நான் தானடி-4
அத்தியாயம்-4

சென்னை நகரத்தின் சத்தங்கள், ராஜ்குமாரின் மனதுக்குள் ஓர் காலப்பெட்டியைப் போலவே மீள மீள எழுந்தன. தேவா சந்திப்புகள், சசிகுமார் மாமாவின் வருகை, வருமான பரிமாற்றங்கள். சோனாலியின் காதல் துண்டிப்பு, வேலைக்காரர்களின் கரிசனை, தன் வாழ்வில் தலைகீழ் மாற்றம், இதற்கிடையே அவன் எண்ணங்களை உச்சரித்த பெயர் நேத்ரா

அவளுடைய குரல், அவளின் அமைதியான சிரிப்பு, அவளும் பார்வையற்றவளாக இருந்தாலும் வார்த்தையில் புத்துணர்வு.

கண்கள் இல்லாமலே பார்க்கும் பயணத்தில் நேத்ராவை விசித்திரமாக எண்ணினான்.

அதெப்படி பார்வையற்றவர்கள் இயல்பாக வாழ்கின்றார்கள். சில நாட்களிலேயே தனக்கு வாழ்க்கையே வெறுக்கும் அளவிற்கும், ஏன் தற்கொலை செய்து மரணித்திடும் அளவிற்கும் எண்ணங்கள் பயணம் செய்ய, பிறவியில் பார்வையற்றவர்களாக இருப்பவருக்கு வாழ்க்கையில் எப்படி இத்தனை சந்தோஷம்‌? அவர்களது வாழ்வியலை பற்றி அறிய வேண்டுமே என்ற பேராவல் உதித்தது.

தன் எண்ணத்தை பற்றி தேவாவிடம் உரைத்தான் ராஜ்குமார்.

"பார்வையற்றவர்களா இருப்பது சிரமம் தான் சார். ஆனா அதையும் தன் வாழ்க்கையில் ஒரு சவாலா நினைச்சி வாழ்றவங்க இருக்காங்க.

அவங்களை பத்தி தெரிந்துக்கறப்ப அபூர்வமா தான் இருக்கும்." என்றான்.‌

"ஏன் தேவா.. எனக்கு அவங்களை பத்தி முழுசா தெரியணும். எப்படி இந்த கஷ்டத்தை எல்லாம் சமாளிக்கறாங்கன்னு தெரிந்துக்க ஆசைப்படறேன். அதோட நானும் எனக்கான வாழ்க்கையை எப்படி இனி பேஸ் பண்ணுவேன்னு ஒரு க்ளியர் ஸ்டேட்மெண்ட் கிடைக்கும்னு தோணுது." என்று ராஜ்குமார் முதல் தடவை பார்வை பறிப்போன பிறகு பாஸிடிவாக பேசவும், தேவாவோ ''அதற்கான விஷயத்தை நான் தேடி சொல்லறேன் சார்." என்று வாக்கு தந்தான்.

அதற்கு முன் தெரிந்த சில விஷயத்தை கூறினான்.

"இல்லை தேவா... எனக்கு நீ சொல்வதை விட, என்னை போல பார்வையற்றவங்க சொன்னா தான் சரியா வரும்." என்று தெரிவிக்க, "இருக்காங்க சார்... நிறைய இது போல ஆட்களுக்குன்னு ஸ்கூல் இருக்கு. நான் கூட்டிட்டு போறேன் சார்" என்றான்.‌

ராஜ்குமார் அடுத்த நாள் விடியலுக்காக காத்திருந்தான்.

பார்வையற்றவருக்கான ஆசிரமத்திற்கு தேவா அழைத்து சென்றான்.‌

தரமணி பக்கத்தில் பிளைண்ட் அசோசியேஷன் என்ற இடத்திற்கு அழைத்து வந்தான். அவ்விடத்திற்குள் வந்தப்போதே ஏதோவொரு ரம்மியமான சூழலை ராஜ்குமாரால் உணர முடிந்தது.

பார்வையற்றோருக்கான பிரெய்லி எழுத்து முறையை உருவாக்கியவர் லூயிஸ் பிரெய்லி ஆவார். பிரான்சைச் சேர்ந்த இவர், பார்வையற்றோர் தங்களின் விரல்களால் தொட்டுணர்ந்து வாசிக்கும் மற்றும் எழுதும் ஒரு முறையை உருவாக்கினார், இது உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. இந்த எழுத்து முறையில், ஆறு புள்ளிகளைப் பயன்படுத்தி எழுத்துக்கள் குறிக்கப்படுகின்றன, இவற்றை விரல்களால் தொட்டுணர முடியும். இதெல்லாம் பிறவியில் பார்வையை இழந்தவருக்கு சரிவரும்.

இங்கு நம் நாயகன் ஏற்கனவே எழுத தெரிந்தவன் படிக்க தெரிந்தவன், உலகத்தை பேச தெரிந்தவன்.

அதனால் மற்றவரிடம் பேசவும் மற்றவர்கள் இவனிடம் பேசவும் அந்த எழுத்துமுறை தேவைப்படாது. ஆனால் அவனாக ஏதேனும் புது விஷயத்தை படிக்க விரும்பினால் கற்றுக் கொள்ளலாம். அதற்கு கூட தேவா போல ஒரு துணையிருக்க புத்தகத்தை வாசித்து கேட்டுக்கொள்வான்.

ராஜ்குமாரை பொறுத்தவரை கஷ்டமாக இருப்பது, தன்னை சுற்றிய இடத்தை அவனால் கண்டறிய முடியவில்லை. தனியாக ரெஸ்ட்ரூம் செல்லும் பாதைக்கு கூட வழியறியாது தேவாவை உதவிக்கு அழைப்பது தான்.

தன்னை சுற்றிய இடமும், தானாக செல்லும் பக்குவமும் எப்படி கையாள்வது. இனி காரை எடுக்க தேவாவின் உதவி தேவை அதை மறுக்க முடியாது.

இதையெல்லாம் நினைத்தபடி, சிந்தனையில் இருந்தவனை, கலைக்கும் விதமாக, "எக்ஸாமுக்கு யாராவது உதவுவாங்க கலை. நீ வேண்டுமின்னா நமக்கு இதுக்கு முன்ன பரீட்சைக்கு உதவியவங்களை தொடர்புகொண்டு பேசி பாரு." என்ற தேன் குரல்.

பார்வை பறிப்போனதாலோ என்னவோ செவிதிறன் கூர்மையாக மாற, இந்த குரலை எங்கயோ கேட்டிருக்கேன்...  எங்க எங்க..' என்றவனுக்கு 'மறக்கக்கூடிய குரலா.. இது நேற்று பேசிய பெண்ணின் குரல் போல உள்ளதே?! என்று பரவசப்பட்டான்.‌

அக்குரல் வந்த திசையில் செவியை கூர்த்தீட்ட, யாரோ ஒரு கண் தெரியாதவருக்கு பரீட்சை உள்ளது. அதற்காக எழுத ஆட்களை தேடுகின்றதை தெரிந்துக்கொண்டான்‌.

"லாஸ்ட் டைம் நமக்கு உதவினவங்களுக்கு, இன்னிக்கு பார்த்து  வேலை இருக்கு. முன்னாடியே சொல்லியிருக்கலாம்ல" என்று நேத்ரா கடிந்தாள்.

ராஜ்குமாரோ தானாக முன்வந்து, "உங்களுக்கு ஓகேன்னா... என் கேர்டேக்கரிடம் உதவி செய்ய சொல்லறேன். அவர் உங்களுக்கு எக்ஸாம் எழுதி தருவார்" என்றதும் "யாரு?" "யார் அது?" என்ற குரல்கள் கேட்டது.

எதிர்தரப்பில் உள்ளவர்கள் பார்வையற்றவராக இருப்பதால், "என் பெயர் ராஜ்குமார்." என்று கூறினான்

"எங்க.. எங்க இருக்கிங்க?" என்று நேத்ரா கைகளை தட்டுப்பட்டு கேட்க, "நான் இங்க தான் இருக்கேன். நானும் ஆக்சிடெண்ட்ல பார்வை இழந்தவன்... தே..தேவா" என்றதும் சற்று தொலைவில் "சார்.. ஒரு நிமிஷம் வந்துடறேன்" என்று கூறி சில நொடியில் நடந்துவரும் ஓசை கேட்டது.

"என்ன சார்?" என்று நின்றான் தேவா.

"தேவா... இவங்களுக்கு எக்ஸாமாம். அதுக்கு யாராவது எழுதி தர உதவி செய்யேன்" என்றதும், "யாரு சார்" என்று திரும்ப, நேத்ராவும், "எங்க பிரெண்ட் சங்கவிவுக்கு சார். நான் கூட மட்டும் வருவேன்." என்றாள்.

தேவா விவரம் கேட்க, "சார் அவங்க எக்ஸாம் ஹாலுக்கு போகணும். நீங்க அவங்களுக்கு உதவி செய்ய சொன்னிங்க. அப்ப நீங்க சார்" என்றதும், ராஜ்குமாரோ "நான் அவங்களோட பேசி அவங்க வாழ்க்கை முறையோட அனுபவத்தை கேட்டுக்கறேன் தேவா." என்றதும் ராஜ்குமார் காரிலேயே நேத்ரா சங்கவி ஏறினார்கள்.

''பரீட்சைக்கு எல்லாம் படிச்சிட்டியா சங்கவி." என்று கேட்க "படிச்சிட்டேன் நேத்ரா." என்றாள்.

"சார் உங்களுக்கு சிரமம் இல்லையே. நீங்க இங்க என்ன காரணத்துக்காக வந்திங்களோ சாரி... நாங்க ஒரு வேலை வச்சிட்டோம்" என்று கூறவும் பார்வையற்றப்பின் லேசான முறுவல் ராஜ்குமார் இதழில் பூத்தது.

"சொன்னேனே... எனக்கு பார்வை பறிப்போனதும் இப்ப என்னால என் வேலையை கூட செய்ய முடியலை. தேவா தான் துணைக்கு வச்சியிருக்கேன்.‌ தட்டுதடுமாறுற வாழ்க்கை. என்னோட வாழ்க்கை இனி இப்படி தான் என்றதும் வாழ பழகணும்ல. அதை விட, மனசு இயல்பான மனிதரை தவிர்த்து பார்வையற்றவர்களோட பழகணும்னு தான் விரும்புது. ஒருவேளை நான் பரிதாபத்துக்குரிய ஆள் என்பதால் எதிர்தரப்பிலும் பரிதாபத்தை எதிர்பார்க்கின்றேனோ என்னவோ'' என்று பேசினான்.

இப்படி பேசினால் நேத்ராவுக்கு பிடிக்காது. ஆனால் உதவுவதற்கு கூட வரும் பொழுது வாதம் செய்ய முடியுமா என்ன?

தேவா காரை நிறுத்தி, "சார் அவங்க சொன்ன எக்ஸாம் ஹால் வந்துட்டுச்சு. நான் எழுதி தந்துட்டு வந்துடறேன். நீங்க அதுவரை இங்கயே இருங்க" என்றான்.‌

ராஜ்குமாரும் நேத்ராவும் தனித்து அமர்ந்திருந்தார்கள்.

"இருக்கிங்களா?" என்று ராஜ்குமார் கேட்க, "இங்க தான் சார் இருக்கேன்.'' என்றாள் நேத்ரா.

"எதுவும் பேசாம இருப்பதால் எங்கயாவது கிளம்பிட்டிங்களானு பயந்தேன்." என்றார்.

இம்முறை நேத்ராவே "ஏன் சார் பயம்?" என்றாள்.

"தெரியலைங்க... எனக்கெல்லாமா முன்ன பயம் என்றதே பார்த்ததில்லை. இப்பலாம் என் வாழ்க்கையில பெரிசான என் உணர்வில் இருப்பது இந்த பயம் தான்" என்றான்.

"ரொம்ப விரக்தியா பேசறிங்களே சார். ஏன் என்னாச்சு.? உங்களுக்கு ஆக்சிடெண்ட்ல பார்வை பறிப்போயிருக்குன்னு உங்க பேச்சு மூலமா தெரியுது.

நீங்க ஏன் அதனால விரக்தி ஆகறிங்க. ஆக்சிடெண்ட்ல உயிர் போகலையேனு கடவுளுக்கு நன்றி சொல்லுங்க" என்றாள்.‌

ராஜ்குமாரோ, "உயிர் போகலை கண்ணு தான் போச்சுனு சந்தோஷப்படணுமா? என் லவ்வர் என்னை விட்டு போயிட்டா. பாத்ரூமுக்கு கூட தட்டி தட்டி தடவி தடவி நடந்து போறேன். என்னால என் இடத்துலயிருந்து பக்கத்துல கூட தனியா நடந்து போக முடியலை.

பிறவியிலேயே கண்ணு தெரியாம போறதுக்கும், நடுவுல போறதுக்கும் வித்தியாசம் இருக்கு." என்று எரிந்து விழாத குறையாக பேசவும், நேத்ரா நிதானமாக "இப்பவும் சொல்லறேன் சார். நீங்க கொடுத்து வச்சவர். பாருங்க உங்களை ஒரு கேர்டேக்கர் வந்து கூடவே இருந்து பார்த்துக்கறார். தேவா.. அப்படின்னு நீங்க கூப்பிட்டதும் ஓடிவர்றார். நிச்சயம் கேர்டேக்கர்லாம் வச்சியுருக்கிங்கன்னா பணக்காரரா இருப்பிங்க. சோ... அடுத்த வேளை சாப்பாட்டுக்கு யாரிடமும் கையேந்தற நிலை இல்லை.

இதே எங்களில் சிலரை பாருங்க. இப்பவும் தாம்பரம் ஸ்டேஷனில் கண்ணு தெரியாம பிச்சை எடுப்பாங்க. இல்லைன்னா கமரக்கட்டு, பர்ஃப்பி, கர்ச்சீப்பை விற்கறவங்களா இருப்பாங்க. ஏன்னா... அவங்களோட தேவைக்கு கூட அவங்க உழைக்கணும்.

அதுக்காக அந்த விஷயம் மட்டும் தான் பண்ணுவாங்கனு சொல்ல மாட்டேன். அது கௌரவ குறைச்சலான வாழ்க்கையும் இல்லை. அத்தியாவசிய வாழ்க்கை முறைக்கு உழைக்கறாங்கன்னு சொல்ல வந்தேன். அதோட தொலைபேசி ஆபரேட்டர்கள், மசாஜ் செய்யறவங்க, இசையமைப்பாளரா, பாடகரா, கைவினைப் பொருட்கள் செய்யறவங்களா, கணினி புரோகிராமரா, ஆசிரியரா, எழுத்தாளரா, சட்ட வல்லுநரா, ஏன் தகவல் தொழில்நுட்ப வல்லுநரா வேலைகளைச செய்யறாங்க. என்ன கொஞ்சம் பணவுதவி பெற்றவங்களாகவோ இல்லை... குடும்ப சப்போர்ட் மற்றும் ஓரளவு பணக்காரர்களாக இருக்கலாம்.

அதோட சில நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நார்மல் பீப்பிள் போல அனைத்து வேலையும் எங்களால் செய்ய முடியும்.

ஆனாலும் உங்க லெவல் இருக்குமானு தெரியலை. நீங்க கேர்டேக்கர் வச்சியிருக்கிங்க... தப்பா நினைக்காதிங்க. என்ன தொழில் பண்ணறிங்க?" என்று நேத்ரா கேட்டதும் "கொடைக்கானல்ல லாட்ஜ் இருக்கு. வாடகை பணம் வரும். அதுக்கூட என்னோட தாய்மாமா நடத்தறார்." என்றதும் நேத்ரா லேசாக சிரித்திருக்க வேண்டும் முத்துக்கள் சிதறியது போல சிறு சத்தம்.

"யா... நீ சொன்ன மாதிரி நான் அதிர்ஷ்டசாலி தான். விபத்துல சாகலை. பார்வை மட்டும் போயிடுச்சு. பணத்துக்காக யாரிடமும் கையேந்துற நிலை எனக்கில்லை.

ஒரு கேர்டேக்கரை வச்சிக்கற அளவுக்கு எனக்கு வசதியிருக்கு.

ஆனா என் காதலி சோனாலி... என்னை விட்டுட்டு போயிட்டா. ஒரு வேளை அவ என் பக்கத்துல இருந்து ஆறுதலா பேசியிருந்தா... நான் இந்தளவு துவள மாட்டேன்." என்றவன் பார்வையற்ற கண்ணிலிருந்து வந்த கண்ணீரை துடைக்காமல் லேசாக அழது குலுங்கினான்.

நேத்ராவுக்கு ராஜ்குமாரின் விசும்பல் சப்தம் கேட்டதும், "சார்.. சார்... அழறிங்களா?" என்று கையை தட்டு தடுமாறி பக்கத்தில் இருந்தவன் சட்டையில் கைப்பட கண்ணீர் துளிகள் நேத்ரா கையில் படவும் அவசரமாய் கன்னத்தில் வழிந்த நீரை தொட்டு பார்த்து, "சார் அழாதிங்க. ஏன் இப்படி. அச்சோ.. சார்... இது பொது இடம்." என்று கூறி அவனை சாந்தப்படுத்துவதற்குள் போதும் போதுமென ஆனது.

தேவாவும் அதற்குள் வர, "சார் என்னாச்சு?" என்று கேட்டு முடிக்க, "தேவா.. வந்துட்டியா... என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போயிடு." என்று கூற, "ஓகே சார் ஓகே சார். மேம்... நீங்க.." என்று யாருக்காக பரீட்சை எழுத வந்தானோ அந்த பெண்ணிடம் தெரிவிக்க, அந்த பொண்ணும், "இனி நாங்க பார்த்துக்கறோம் சார். ஆட்டோ பிடிச்சி நாங்க இருக்கற ஹாஸ்டலுக்கு போயிடுவோம்." என்று கூறியதும் நன்றி தெரிவித்து தேவா ராஜ்குமாரை கைப்பிடித்து அழைத்து சென்றான். நேத்ராவோ

தோழி வந்ததும் சப்தமில்லாமல் அவள் கையை பிடித்தாள்.

-தொடரும்.

பிரவீணா தங்கராஜ்

நயனமே நான் தானடி-3
அத்தியாயம்-3

சோனாலி எங்கே எங்கே என்று கேட்டு, பிறகு டாக்டரே "அந்த பொண்ணு அப்பவே போயிடுச்சு. உங்களுக்கு கண்பார்வை போனதை சொல்லவும் குடும்பமா ஹாஸ்பிடல் பில்லை உங்க தலையில் கட்டிட்டு ஓடிட்டாங்க.' என்று கூறியிருக்க ராஜ்குமார் துவண்டவனாய், பார்வை பறிப்போனதற்கு கவலைப்படாமல் சிலையென மாறினான்.

அதன்பின் என்ன நினைத்தானோ, மாமா சசிகுமாராவது வந்தாரே என்று அவரது பொறுப்பில் இரண்டு மூன்று நாட்கள் மேற்பார்வையில் இருந்தான்.

கொஞ்சம் நிதர்சனம் ஏற்றவனாக டாக்டரின் கவுன்சீலிங் கேட்டவனாக, பார்வையற்றவர்கள் உபயோகப்படுத்தும் ஸ்டிக் ம்றும் சசிகுமார் மாமா உதவியோடு மனபாரத்தோடு வீட்டுக்கு வந்து சேர்ந்தான். அதற்குள் அவன் பாதி களைந்திருப்தான்.

பணியாட்கள் ஒரு புறம் அன்று விபத்து நடந்ததை பற்றியும், இனி ராஜ்குமார் வாழ்க்கை எப்படி மாறுமோ என்று பேசி திரிய நேரம் போதவில்லை. ராஜ்குமார் மாடியில் இருக்க கூடி கூடி இந்த கதை தான் ஓடியது.

சசிகுமார் தான், "மாப்பிள்ளை... அங்க போட்டது போட்டப்படி வந்துட்டேன். உங்களை இங்க விட்டுட்டு போகவும் மனசில்லை. என்ன செய்யலாம்" என்று கேட்டார். இங்கு வந்து ஒரு வாரத்திற்கு மேலானது. அங்கே சந்திரா தன்னால் சமாளிக்க முடியவில்லை என்று கூறினார்.

ராஜ்குமார் இருந்த மனநிலையில், "நீங்களும் போங்க மாமா. நா..ன்.. நான் பார்த்துக்கறேன். இதுக்கு முன்ன தனியா தானே இந்த வீட்ல உலாத்தினேன்" என்று போக கூறினான்.‌

அவன் கூறும் பொழுதே மனமொடிந்து கூறியிருக்க, சசிகுமாருக்கு விட்டு செல்லவும் மனமில்லை.

அமைதியாக 'ஒய்வெடுங்க மாப்பிள்ளை' என்று தட்டி கொடுத்து நகர்ந்தார்.‌

டாக்டர் அறிவுரைப்படி கொஞ்ச காலத்திற்கு ஒரு கேர்டேக்கராக தேவா என்ற ஆணை நியமிக்க பேசியிருந்தார்கள். அந்த பையன் எப்படியும் வந்தப்பின் பொறுப்பில் விட்டுவிட்டு செல்ல நினைத்தார்.

சசிகுமாருக்கு ஓரளவு மனிதாபிமானம் எஞ்சியிருந்தது.

அதனால் மனைவியிடம் தெரிவித்து அடுத்த நாள் வருவதாக போனில் பேசினார்.

தனதறையில் மெத்தையிலேயே நாளெல்லாம் இருட்டை மட்டும் கண்டு பழக்கப்பட, ராஜ்குமாருக்கு வாழ்க்கையே வெறுப்பது போல தோன்றியது.

சசிகுமார் வந்து பேசும் போது கூட, பிடிப்பற்ற வார்த்தையை வீசினான்.‌ சசிகுமாருக்கு கூட எரிச்சலாக இருந்தது.

இவனுக்கு கண் போனா அதுக்கும் எரிந்து விழறான, காதலிச்சவ போனதுக்கும் முகம் தூக்கி வச்சிட்டு இருக்கான். உதவினா கூட சலிப்படையறான் என்று ஆதங்கம் கொண்டார்.‌

ராஜ்குமார் நிலையோ இத்தனை நாள் யாரின் உதவியின்றி வாழ்ந்த அழகான வாழ்க்கை, இரண்டடி எடுத்து வைக்கவும் அடுத்தவர் தயவு தேவைப்படுவதை தாங்க இயலாமல் மனவுளைச்சலில் திளைத்தான். என்ன தான் டாக்டர் கவுன்சீலிங் கொடுத்திருந்தாலும் அது அவனுக்கு போதவில்லை.

அப்படியிப்படி என்று கேர்டேக்கராக தேவா என்ற ஆண் வந்தான்.

சசிகுமார் அவனிடம் பொறுப்பை தந்துவிட்டு ராஜ்குமாரிடம் சொல்லிவிட்டு, விரைவில் அத்தையை அழைத்து வருவதாக கூறி சென்று விட்டார்.

தேவா இதற்கு முன் இப்படிப்பட்டவர்களுக்கு உதவியதால், கண் தெரியாத ராஜ்குமாருக்கு உதவுவதிலும் எளிதாக பழகினான்.

ராஜகுமார் மட்டும் எல்லாவற்றிற்கும் தேவாவின் உதவி நாடுவதில் எரிச்சலடைந்தான்.

சசிகுமார் சென்று இரண்டு நாள் இப்படி தான் மெத்தையில் உயிர் வாழ பிடிக்காதவனாக படுத்தேயிருந்தான்.

"சார்... குளிக்க உதவவா?" என்று கேட்டு நின்றதும், "அய்யோ... குளிச்சிட்டு நான் என்ன ஊர் சுத்தவா போறேன். இந்த ரூம்ல கண்ணு தெரியாம உட்கார்ந்த இடத்திலேயே இருக்க போறேன்." என்று சலித்திட, தேவாவோ, "அப்படி பேசாதிங்க சார். விபத்து நிகழ்ந்து பார்வை போனது வருத்தம் தான். அதுக்காக மனதை விட்றாதிங்க. உங்களுக்காவது ஆப்ரேஷன் செய்தா பார்வை திரும்ப வர வாய்ப்புண்டுனு பேசிக்கிட்டாங்க. பிறவியில இருந்து பார்வை இல்லாதவங்களை நினைச்சி பாருங்க.

இப்படியே முடங்கிட முடியாது. நீங்க எப்படி வேலைக்கு ஆட்கள் வச்சி இத்தனை நாள் சமைத்ததை சாப்பிட்டு ஓடியிருப்பிங்க. இப்ப கொஞ்சம் கஷ்டமான விஷயம் உங்களையும் பார்த்துக்கற பொறுப்பு மற்றவரிடம் வந்திருக்கு.

இப்படியே இருந்தா மனசு பாதிக்கும் சார். டாக்டர் உங்களை சோர்ந்துடாம பார்த்துக்க சொல்லி மருந்து மாத்திரையை சரியா கொடுக்க தான் என்னை உங்களுக்கு கேர்டேக்கரா அனுப்பியிருக்காங்க. ஒத்துழைச்சு பாருங்க. எப்படியும் குளிக்காம இருக்க முடியாது." என்று ஓரளவு சாமர்த்தியமாக பேசி பாத்ரூமிற்கு அழைத்து சென்றான் தேவா.

அவனது அனுபவம் ராஜ்குமாரை தற்காலிகமாக சரிசெய்தது.

பழக்கப்பட்ட தனதறை ஆனால் இன்றோ முற்றிலும் புதிதாக தட்டுத்தடுமாற, கண்ணீர் வழிந்தது. பாத்ரூம் வரவும், "சார் நான் குளிப்பாட்டவா" என்று தேவா கேட்க, "இல்லை... வேண்டாம்... டவல் இங்கவொரு கம்பில வச்சிடு, சோப் இங்க ஏதோ முதல் செல்ப்ல இருக்கும்." என்று தடவவும், கொஞ்சம் கஷ்டப்பட்டான்.

"இங்க சார். இங்க இருக்கு" என்று ராஜ்குமார் கரத்தை சோப்பில் வைத்து அப்படியே ஷவரில் கையை வைத்து காட்டினான் தேவா.

" பத்து நிமிடத்தில் நானே கூப்பிடறேன். நீ போ தேவா" என்று அனுப்ப, தேவா வெளியேறினான்.

ஷவருக்கு கீழே அழுதபடி தன்னிலை நொந்தான்.

செவியால் நீர் விழும் சத்தத்தை கேட்டபடி, தவிக்க, "சார்" என்ற தேவாவின் குரலில், "ஒன்னுமில்லை.. வந்துடறேன்" என்று கூறினான் ராஜ்.

எப்படியும் தான் வேதனைப்படுவதை அறிந்து' சார் சார்' என்று கதவுக்கு பின்னால் தேவா கூப்பிடுவதை அறிந்து குளித்தான்.

டவலை இடுப்பில் அணிந்து கதவை தொட்டு தடவி, தாழ்பாளை திறந்தவனை தேவா கைப்பிடித்து அழைத்து, மற்ற உடைகளை தர அணிந்தான்.

"சார் வெளியே எங்கயாவது போகலாமா?" என்று கேட்க ராஜ்குமார் மறுத்துவிட்டான்.

"இந்த நிலையில் வெளியே போய் எங்கயாவது முட்டி மோதி கீழே விழ நான் தயாராயில்லை தேவா‌" என்றான்.

ராஜ்குமாருக்கு உணவு வந்ததும் தட்டில் கையை வைத்து சாப்பிட கூற, முன்பு அலட்சியமாக தட்டில் என்ன உள்ளதென்று கூட பாராமல் விழுங்கியவன், தொட்டு தடவி காய்கறியை எடுத்ததும், "இது முறுங்கைகாய், இது கேரட்... ம்ம்.. சாம்பார்ல கேரட்... கண்ணுப் போனப்பிறகு கேரட்" என்று இகழ, "சார்..‌ சாப்பிடுங்க" என்று தேவா உந்தவும்‌ கண்ணீரை துடைத்து சாப்பிட்டான். அவரைக்காயின் சுவை பொரியலில் உணர்ந்தான்.

"முன்ன தட்டில என்ன இருக்குன்னு கூட கவனிக்க மாட்டேன் தேவா. இப்ப பார்றேன். சாப்பாட்டில் தடவிட்டு இருக்கேன்." என்று கூறி விழுங்கினான்.‌

அதன்பின் மெத்தையில் ஆக்கிரமிப்பு செய்தப்படி, 'அலைக்ஸா'வில் பாடல் கேட்டிருந்தான்.

மனதை வருடும் காதல் பாடல் ஒலித்திட, ''அலைக்ஸா ஸ்டாப்" என்று கர்ஜித்தான்.

டாக்டர் மூலமாக ராஜ்குமார் ஒரு பெண்ணை காதலித்ததை அறிந்ததால், தேவாவுக்கு காரணம் புரிய, "சார்... இப்படியே ஏதாவது நினைச்சிட்டு கஷ்டப்படாதிங்க. வெளியே வாங்க நான் உங்களை பத்திரமா பார்த்துப்பேன். கொஞ்சம் வெளியே காற்று வாங்கிட்டு வருவோம்." என்று அழைக்க, அரை மனதாக ராஜ்குமார் தேவாவுடன் சென்றான்.

சின்ன குழந்தையை போல ராஜ்குமாரை கைப்பிடித்து தேவா அழைத்து செல்வதை கண்ட வேலைக்காரர்கள் ராஜ்குமார் நிலையை எண்ணி வருந்தினார்கள்.

தேவா ராஜ்குமாரை காரில் ஏற்றி சீட் பெல்ட் அணிவித்து மெதுவாக பயணத்தை துவங்கினான்.‌

"தேவா... இப்படி ஒரு பயணத்தில் தான் என் கண்ணு போச்சு" என்று ஆரம்பிக்க, தேவாவோ "உங்க கேஸ் ஹிஸ்ட்ரியை டாக்டர் சொன்னார் சார்." என்றான் அவன்.

"என் காதலி என்னை விட்டுட்டு போயிட்டா தேவா. என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிருக்கலாம்" என்றான்.‌

தேவாவிடம் அமைதி, மெதுவாக காரில் பயணம் செய்ய, மெரீனா பக்கம் வண்டியை செலுத்தினான்.

காற்று சில்லென்று வீசவும், அதனை ஸ்பரிசித்தான். எத்தனையோ முறை காற்று வீசியதை உணர்ந்தாலும் இன்று அந்த காற்றை உணர்வால் அனுபவித்தான்.

கார் மெரீனா பக்கம் வந்தபின் காரை நிறுத்துமிடத்தில் தேடி சரியாக நிறுத்தினான்.

"தேவா ரொம்ப தூரம் போக வேண்டாம். எங்கயாவது உட்கார்ந்த போதும்" என்று கூற அதற்கு ஏற்றார் போல இருக்கும் இடத்தில் தேவா ராஜ்குமாரை அமர வைத்தான்.

குழந்தைகள் விளையாடுவதும், மாங்கா சுண்டல் என்று விற்கும் குரல்களை கேட்டான்.

தேவா ராஜ்குமார் அருகே அமர்ந்து, அங்கே நடக்கும் காட்சிகளை விளக்கினான். ''சார் சுண்டல்?" என்று கேட்க, "வேண்டாம் தேவா" என்றான்.

"சார் பஜ்ஜி? பிரட் ஆம்லெட்?'' என்று கேட்க, "வேண்டாம்" என்று மறுத்தான் ராஜ்குமார்.

"சார் மக்காசோளம்?'' என்று கேட்க, இவன் ஏதாவது வாங்கிவிட்டால் சும்மாயிருப்பான் என்று "பச் சரி வாங்கு போ" என்று கூறிவிட்டான்.

தேவாவோ "இங்கயே உட்கார்ந்து இருங்க சார்" என்று நகர்ந்தான்.

ராஜ்குமார் ஏதேதோ எண்ணத்தில் தடுமாறிக் கொண்டிருந்தான். சில மணி நேரமாய் வண்டி ஓட்டிய சம்பவங்கள் நினைத்தபடி இருக்க, தலைவலிக்கத் தொடங்கியது. மனதினுள் சோனாலியின் காதலை இழந்து தேடிக் கொண்டிருந்தான்.

"அவள் என்னை மறந்து விட்டாளா?" என்று அவன் மனசாட்சியிடம் இதையே பலமுறை கேட்டுக் கொண்டிருக்க, அருகில் அவன் இருக்கையில் சோனாலி அமர்ந்து அவன் இடது கரத்தின் மீது கைகள் வைத்ததாக உணர்ந்தான்.

அந்த கைகள் தன்னை தொட்டு தடவி, ஒரு மெல்லிய குரலில் "ஸாரி யாராவது இருக்கீங்களா?" என்றாள் நேத்ரா. இம்முறை கைகளை விடுவித்து கொண்டன அக்கைகள்.

ஒரு மென்மையான கரம் தனது கரத்தில் தொட்டு தடவி, எடுத்ததும், அக்கைகள் ஒரு இளம் பெண்ணுக்குரியது என்று குரலும் கேட்டு விட்டதும், யாரோ ஒருத்தி தீண்டியதில் அவனுக்கு கோபமே. ஒரு பெண் தானாக வந்து பேசுகின்றாளே என்ற எண்ணம் வேறு.

என்னயிருந்தாலும் தானாக பேச்சை கொடுத்த பெண்ணிடம் பதிலுக்கு "யாரு?" என்றான் ராஜ்குமார்.

"நான் நேத்ரா, என் பிரெண்ட்ஸ் கூட வந்தேன். நீங்கள் இங்க உட்கார்ந்து இருப்பதை இப்ப தான் கவனிச்சேன். நீங்க ஓகே வா? நான் இங்க உட்கார்ந்துக்கலாம் தானே?" என்று ஒரு சிறிய புன்னகையுடன் கேட்டாள். லேசான புன்னகை வீசிய கேள்விகள் என்று அறிந்து கொண்ட ராஜ்குமார் தோளைக்குலுக்கினான்.

"என்ன சார்? பதில் இல்லை? நான் உட்காரலாமா? உங்களுக்கு வருத்தமா இருந்தா வேறயிடத்தில் போவேன்" என்றுரைத்தாள்.

"இதென்ன கேள்வி? உட்காரணும்னா உட்காருங்க. கண்ணு தெரியலை என்றால் ஏன் ஓவரா கரிசனம்? ப்ளீஸ் என்னை எரிச்சல் படுத்தாதிங்க" என்றான். நேத்ரா "ஸாரி சார். என்னை போல கண் தெரியாதவங்க பக்கத்தில் உட்கார சிலர் தயங்குவாங்க. அந்த எண்ணத்தில் கேட்டேன். கோபப்படாதீங்க'' என்றாள்.

"என்ன?'' என்றவனுக்கு அவள் கூறியது புரிய, "உங்களுக்கு கண் தெரியாதா?'' என்று ஆச்சரியமாக வினவினான்.

"ஏன் சார் என்னை பார்த்தா தெரியலையா? என்றாள் நேத்ரா.

"இல்லை என்னால பார்க்க முடியாது. எனக்கும் கண் தெரியாது." என்றான் ராஜ்குமார்.

"ஓஹ் அதான் எரிந்து விழுந்திங்களா? எனக்கும் கண் தெரியாது சார். என் பிரெண்ட்ஸ் இங்க தான் வருவதா சொன்னாங்க. அதனால தான் இந்த இடத்தில் உட்கார வந்தேன்" என்று பரிவாய் பேசினாள்.

அந்த நொடியில் தான், ராஜ்குமார் கோபமும் இறுமாப்பும், மெலிதாய் மாறத் தொடங்கின. முதலில் அவன் பேச தயங்கினான், ஆனால் அவள் ஒளிரும் மனதோடு உரையாடியது மெதுவாக அவனை ஈர்த்தது.

தன்னை போல விபத்தில் பார்வை இழந்தவளா? அல்லது எப்படி என்று அறிந்திட நினைத்து, "உங்களுக்கு எப்பத்திருந்து கண் தெரியாம போச்சு?" என்றான்.

அடுத்த நொடியே தவறாக எடுத்துக் கொள்வாளோ என்று பயந்தான்.

"பிறவியிலயே கண் தெரியாது சார்." என்று கூறிவிட, "வாட்? பிறந்ததிலருந்தா?'' என்று கேட்டான். இங்கே கொஞ்சம் நாட்களாக கண் இல்லாமலே ராஜ்குமார் கஷ்டப்படுவதால் அவளது பதிலில் ஆச்சரியம் கொண்டான்.

அந்த நேரம் ஒரு பெண் நேத்ராவிடம் பஸ் டிப்போவிற்கு வழியை கேட்க, நேத்ராவும் வழி கூறினாள். இந்த பெண்ணுக்கு பார்வை இல்லை. அப்படியிருக்க பார்வையற்றவள் வழிக்கூறுவதை கேட்டு ஆச்சரியப்பட்டாலும் கேட்டுக்கொண்டான்.

அதற்குள் தேவா வர, "சார் மக்காசோளம்" என்று நீட்டவும், மறுபுறம், "ஹே நேத்ரா இங்க இருக்கா?'' என்ற குரலும், "நீ வந்து ரொம்ப நேரம் ஆகிடுச்சா நேத்ரா?" என்ற குரலும், "சே சே கொஞ்சம் நேரம் தான். எல்லாரும் வந்தாச்சா? என்று தன்னிடம் பேசிய பெண்ணின் குரலும் கேட்டு ராஜ்குமார் அவர்கள் பேச்சில் கலந்திட முடிவெடுத்தான். ஆனால் நேத்ரா கூட்டமோ,"தண்ணீரில் கால் நனைத்து விளையாட செல்வதாக பேசி செல்ல அமைதியுற்றான்.

"தேவா... இங்க ஒரு பொண்ணு இருந்தாலே, அவ கண் தெரியாதவளா?" என்று கேட்டான். தன்னிடம் பொய் சொல்லி பேசிவிட்டாளா என்ற சந்தேகத்துடன் கேட்டான்.

"ஆமா சார். கண் தெரியாத பொண்ணுங்க இருந்தாங்க. அந்த குரூப் எல்லா பொண்ணுங்களுக்கும் பார்வை குறைபாடு இருந்துச்சு சார். ஏன் சார்?'' என்று கேட்டான். அதன்பின்னே தன் அருகே அமர்ந்து இருந்தவள் மட்டுமில்லாமல் அங்கே வந்தவர்கள் எல்லாருமே அப்படி பட்டவர்கள் என்று தெரிந்து கொண்டான்.

"ஒன்னுமில்லை தேவா. சும்மா கேட்டேன்" என்று மக்காசோளம் சுவைத்தான். மனதிலோ பிறவியிலிருந்து பார்வை இல்லாமல் எப்படி வாழ்கின்றார்கள்? என்று குழம்பினான். அவர்கள் வாழும் முறையை அறிந்திட ஆவல் ஏற்பட்டது ராஜ்குமாருக்கு.

தொடரும்.

பிரவீணா தங்கராஜ்

நயனமே நான் தானடி-2
அத்தியாயம்-2

எங்கு திரும்பினாலும் வெள்ளை நிறம். சுத்தமாக துடைத்தெடுத்து பளிங்கு மாளிகை போல காட்சியளித்தது ராஜ்குமார் இருந்த இடம். பல ஒயர்களை உடம்பில் சொருகி, இமை மூடி படுத்திருந்தான்.

ராஜ்குமார் உடம்பில் சில இடத்தில் கட்டுப்போட்டு படுத்திருந்தவன் லேசாக வலி தெரிய, இமையை அங்கும் இங்கும் உருட்டினான். மெதுவாக இமை திறக்க முயன்றவன் எதிரில் கருமையே படர்ந்திருந்தது.

கஷ்டப்பட்டு தலையை அசைத்து இமை திறக்க முயன்றவனால் கருமையை தவிர எதையும் பார்க்க முடியவில்லை.

தன் உடலை தடவி பார்த்தான். தன் உடலில் ஊசி மூலமாக மருந்து செல்வதை உணர்ந்தான். மத்துவமனையில் இருப்பதை யூகித்து கொண்டான்.

சோனாலியிடம் தன் காதலை தெரிவிக்க ஆசையாக பூங்கெத்தும் வைர மோதிரத்தையும் வாங்கி காரில் பேசியபடி வந்தது நினைவில் வந்தது.

கடைசியாக பலவித வேதியல் குழாய் தாங்கிய வண்டி, மொத்தமாய் சாய்ந்திட, பக்கத்திலிருந்த ராஜ்குமார் கண்கள் எரிச்சலாகி விபத்து நிகழ்ந்தது படக்காட்சியாக மீண்டும் ஓட்டி பார்த்தான்.

"சோ... சோனாலி சோனாலி.." என்று கத்தினான். காதலை பகிர்ந்த அடுத்த நொடி, இப்படி ஆனதை அவனால் தாங்க முடியவில்லை.

"டாக்டர்... டாக்டர்" என்று அலறாத குறையாக கத்தவும் நர்ஸ் ஓடிவந்து, "மிஸ்டர் ராஜ்குமார் கத்தாதிங்க. நாங்க இங்க தான் இருக்கோம். டாக்டர் உங்க ரிப்போர்ட்டை பற்றி தான் டீனிடம் பேசிட்டு இருக்கார்." என்று கூறி அமைதிப்படுத்த முயன்றாள்.‌ காரில் டிரைவிங் லைசன்ஸ் இத்யாதியை போலீஸ் சமர்ப்பித்திருந்தனர். அதில் பெயர் இருக்க, ராஜ்குமாரென்று பெயரோடு செவிலி கூறினாள்.

"சிஸ்டர்... சிஸ்டர்.. எனக்கு கண்ணு திறக்க முடியலை. வெறும் பிளாங்கா... பிளாக்கா.. இருக்கு." என்று பதறினான். என்ன தான் விபத்து நிகழ்ந்தாலும் இமை திறக்க முடியாமல் கருமை சூழ்ந்திருந்தால்? வித்தியாசம் அறியாமலா போவான்.

"ஆமாங்க... அதுக்கு தான் ஐ டாக்டரிடம் பேசிட்டு இருக்காங்க. பதட்டப்படாம இருங்க" என்று ஆறுதலுரைக்க, கண்ணிற்கு ஏதேனும் ஆபத்தா என்று பயப்படுபவன், பதட்டமின்றி இருப்பானா?

அதைமீறி ஓரளவு வசதி வாய்ப்பால் பணத்தை தண்ணியாக செலவழித்திடலாம். இப்பொழுது எல்லாம் மருத்துவ வசதி தான் அபரிதமான மருத்துவ கண்டுப்பிடிப்புகள் உள்ளதே. எப்படியும் தன்னிலை மாறும் என்று உறுதியாக நம்பினான்.

அந்த நம்பிக்கையால் லேசாக நிதானமடைந்தான். மற்றொரு காரணம் ஏதாவது சின்ன பிரச்சனை இருக்குமென்று நினைத்தான்.

"என் கூட என் லவ்வர் சோனாலி இருந்தாங்க. அவளுக்கு என்னாச்சு'' என்று பயந்தான்.

"அவங்களுக்கும் ட்ரீட்மெண்ட் நடந்துட்டு இருக்கு சார். உயிருக்கு ஆபத்து இல்லை. தற்சமயம் கண் விழிக்க நேரமாகுது" என்று உரைத்ததும் அப்பாடி உயிருக்கு ஆபத்தில்லை" என்று சந்தோஷம் கொண்டான்.

இவனது கவனக்குறைவால் அவளை இழக்க நேரிட்டால் ராஜ்குமாரின் மனம் அவனையே மன்னிக்காது.

"கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க சார். டாக்டர் வருவார். அதுக்குள்ள உங்க அப்பா அம்மா ரிலேட்டிவ் யாருக்காவது இன்பார்ம் பண்ணணும். நம்பர் கொடுங்க" என்று ராஜ்குமாரை சாய்விருக்கையில் படுக்க வைக்க, தடுமாறி மெத்தையில் வேறு வழியின்றி படுத்துக் கொண்டான்.

"எனக்கு அப்பா அம்மா இல்லைங்க. தாய்மாமா அத்தை மட்டும் தான். மாமாவும் இங்க சென்னையில் இல்லை. கொடைக்கானலில் இருக்கார்." தாய் மாமா நம்பர் என்று பத்து இலக்க எண்ணை கூறினான்.

அதை செவிலி குறித்துக் கொண்டார். "சோனாலியோட வீட்டு நம்பர்" என்று அதையும் குறிப்பிட்டான்.

"ஓகே சார் அவங்க பேரண்ட்ஸுக்கு இன்பார்ம் பண்ணிட்டு, உங்க வீட்டு தரப்பிலும் சொல்லிடறோம். இப்ப நாங்களே டேஷிப்ட் நைட்ஷிப்ட் நர்ஸ் வந்து பார்த்துப்போம். ஏதாவது அவசியம்னா இந்த பட்டனை ப்ரஸ் பண்ணுங்க" என்று கூறி அவன் கையில் கொடுத்துவிட்டு அகன்றாள் நர்ஸ்.

டாக்டர்கள் குழுவோ, "இல்லை சார்... ஆப்ரேஷன் செய்தா பார்வை கிடைக்க வாய்ப்புண்டு. ஆனா இந்த ஆப்ரேஷன் எந்தளவு சக்சஸ் ஆகும்னு தெரியலை. விபத்து நிகழ்ந்த இடத்துல ஏதோ கெமிக்கல் ஆய்வு குழாயை ஏற்றிட்டு போன வண்டி வெடிச்சதில் கருவிழி படலத்தை அதிகமா பாதிச்சிருக்கு." என்று கலந்து பேச, "வேற வழியில்லைன்னா பேஷண்டிடம் அவங்க சிட்சுவேஷனை சொல்லி தான் ஆகணும்." என்று டாக்டரும் கூறிட, ராஜ்குமாரிடம் இதை எப்படி கூறுவதென்று விழித்தனர்.

எப்படியும் பேஷண்டின் உறவுக்காரர் வந்ததும் அவர் மூலமாக உரைத்திடுவதில் சிக்கல் இருக்காதென்று நினைத்தனர்.

இதற்கிடையே சோனாலி வீட்டில் தகவல் தெரிவிக்க, அவளது அப்பா அம்மா ஓடோடி வந்து சேர்ந்தனர்.

ராஜ்குமாரின் தாய்மாமாவான சசிகுமாருக்கு அழைத்து மருத்துவமனை சார்பில் தகவல் உரைத்தனர்.

சாதாரணமாக கூறியிருந்தால் பரவாயில்லை. "சார் ராஜ்குமார் அவரோட காதலி சோனாலியுடன் கார்ல போறப்ப விபத்து நிகழ்ந்திருக்கு. அவர் தான் உறவினர் நம்பர் கேட்டப்ப உங்க நம்பரை தந்தாங்க. நீங்க கொஞ்சம் உடனே கிளம்பி வாங்க. உயிருக்கு ஆபத்தில்லை... ஆனாலும்... கொஞ்சம் பிரச்சனை தான் வாங்க" என்று கூறி அணைத்து விட்டனர்.

சசிகுமாருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. முதல் அதிர்ச்சி, ராஜ்குமார் காதலியுடன் பயணமா? அப்படின்னா காதலிக்கறானா? அப்ப என்‌ மக சஞ்சனா நிலைமை? என்று ஒரு தகப்பனாக வருந்தினார்.‌

அடுத்து, அக்கா மகனுக்கு விபத்து நிகழ்ந்து உயிர் பிழைத்தாலும் பிரச்சனை என்று கூறுகின்றாரே, என்ன ஆனதோ ஏதானதோ என்று பயந்து மனைவி சந்திராவிடம் உரைத்தார்.

சந்திராவோ, ராஜ்குமார் நிலையை பற்றி சிந்திக்காமல், "உங்க அக்கா பையனுக்கு என்னவொரு இளக்காரம். நம்மிடம் பொறுப்பை ஒப்படைச்சிட்டு அவன் ஹாயா அங்க காதலிக்கறானா? இங்க லாட்ஜ் எல்லாம் வரவு செலவு பண்ணி பணத்தை மட்டும் அங்க நொட்டணும். இத்தனை நாள் மாப்பிள்ளையா வரப்போறவன்னு நினைச்சா, இன்னிக்கு அந்த எண்ணத்தில் மண்ணை அள்ளி கொட்டிட்டானே." என்று பொறுமினார்.

"முதல்ல நான் போய் என்னனு பார்த்துட்டு வர்றேன்" என்றார் சசிகுமார்.

"எதுக்கு... இல்லை எதுக்குன்னு கேட்கறேன். இப்ப தான் சொந்தக்காரங்கன்னு கண்ணுக்கு தெரியுதா? அவன் லவ்வரோட அப்பா அம்மாவே பார்த்து தொலையட்டும்" என்று புலம்ப, என்னயிருந்தாலும் அக்கா மகன், தாய்மாமன் இடத்திலிருந்து ராஜ்குமாரை அம்போவென விடுக்க மனமின்றி சென்னை செல்ல கிளம்பினார்.

சந்திரா புலம்பி தள்ளியபடி, கரித்து கொட்ட, சஞ்சனாவோ லேசான சோகத்துடன் அறைக்குள்ளே கேட்டுக்கொண்டு உடைந்தாள்.

அவளுக்கு ராஜ்குமார் என்றால் ப்ரியமுண்டு. தாய் தந்தையரை போல அவளுமே பல கனவு கண்டதால் வருந்தினாள்.

சசிகுமார் சென்னை வந்து சேர்ந்து மருத்துவமனைக்கு வர, அங்கே ராஜ்குமாரின் நிலையை கேட்டு டாக்டரை சந்திக்க வந்தார்.

ராஜ்குமார் மெத்தையில் அந்த நேரம் உறங்கியிருக்க, "அவர் எழுந்துக் கொள்வதற்குள் டாக்டரை பார்த்துட்டு வாங்க சார்" என்று அனுப்பினாள்.

அங்கே டாக்டரை சந்திக்க அறை வரை அழைத்து சென்று நர்ஸ் செல்ல, "ராஜ்குமாருக்கு கண் தெரிவதோ தெரியாததோ எங்களுக்கு பிரச்சனையில்லை டாக்டர். எங்க பொண்ணை நாங்க கூட்டிட்டு போகறோம். அவனால் தான் ஆக்சிடெண்ட் ஆச்சு. மருத்துவ செலவை அவனிடம் வாங்கிக்கோங்க. என் பொண்ணை டிஸ்சார்ஜ் பண்ணுங்க." என்று சோனாலியின் தந்தை பேசுவதை கேட்க நேர்ந்தது.

"டாக்டர்... நான் ராஜ்குமாரோட மாமா" என்று சசிகுமார் வரவும், "ஆஹ்... பிளட் ரிலேட்டிவ் கூட வந்துட்டாங்க. எங்களை விடுங்க" என்றார் சோனாலி தாய்.

"கொஞ்சம் வெளியே இருங்க" என்று டாக்டர் கோபமாய் அனுப்பிவிட்டு சசிகுமாரை அமர கூறினார்.

"என் மாப்பிள்ளைக்கு என்னாச்சு டாக்டர்" என்று தான் கேட்டார்.

"சார் அவருக்கு ஆக்சிடெண்ட்ல பார்வை பறிபோயிடுச்சு. மெடிஸன் ட்ரீட்மெண்ட் பார்த்தா கொஞ்ச காலத்துக்கு பிறகு சில ஆப்ரேஷன் செய்தா பார்வை வரலாம்.

சிம்பிளா இதான் சார். இதை தான் ராஜ்குமார் லவ் பண்ணற பொண்ணோட அப்பா அம்மாவிடம் சொன்னேன். வாயுக்கு வந்தபடி பேசிட்டு அவங்க பொண்ணை கூட்டிட்டு ஓட பார்க்கறாங்க. மனிதாபிமானம் இல்லாதவங்க." என்று எரிந்து விழுந்தான்.

சசிகுமாருக்கு அதிர்ச்சி தான். ஆனால் சூழ்நிலையை கையாள வேண்டிய இக்கட்டு உள்ளதே.

"ராஜ்குமாருக்கு இது தெரியுமா?" என்று கேட்டார்.

ஆக்சிடெண்ட்ல எழுந்ததிலருந்து கண்ணு பிளாக்கா தெரியுதுன்னு சதா சொல்லிட்டே இருந்தார். இன்னமும் அவரிடம் நேரிடையா சொல்லலை. கண்ணை கட்டி வச்சியிருக்கு. அப்படி தான் இருக்கும் பொறுமையா இருங்கனு சொல்லி வச்சியிருக்கு. ஆக்சுவலி அவரோட ரிப்போர்டை ஒரு டாக்டரிடம் காட்டிட்டு பிறகு சொல்லலாம்னு வெயிட் பண்ணினோம். ரிப்போர்ட் இன்னிக்கு தான் அனுப்பி விஷயத்தை சொன்னார்.

ஏன்னா இந்த சோனாலி பேரண்ட்ஸ் டார்ச்சர்ல ராஜ்குமாரை கண்ட்ரோல் செய்ய எங்களுக்கு அவங்க உறவு சார்ந்த ஒருத்தர் தேவைப்படவும் நீங்க வரும்வரை அவருக்கு கண்ணு தெரியாது என்பதை சொல்லலை. நாங்க பக்குவமா சொல்லறோம். நீங்க ராஜ்குமாருக்கு மாரல் சப்போர்டா இருங்க." என்று கூற சசிகுமார் வேறென்ன கூறுவதென்று வேதனையுடன் சம்மதமாய் தலையாட்டினார்.

"நர்ஸ் அந்த சோனாலி பேஷண்டை டிஸ்சார்ஜ் பண்ணி தொலைச்சிடுங்க. போய் தொலையட்டும்." என்று எரிச்சலாக பேசினார்.

சசிகுமார் தயக்கமாய் டாக்டரிடம், "அந்த பொண்ணுக்கு என்னாச்சு டாக்டர்" என்று கேட்டார்.‌

"அந்த பொண்ணுக்கு ஒன்னும் ஆகலை ஆக்சிடெண்ட் ஆனப்ப ஏர்பேக் வந்து சேஃப்பா தான் இருந்தா. ராஜ்குமாருக்கு கூட அடியெல்லாம் இல்லை. ஏர்பேக் இருந்ததால் சேஃப்பா இருக்கார். ஆனா மோதின வண்டி ஏதோ வேதியல் குழாய்களை ஏற்றி வந்திருக்கு. ஆபத்தான கெமிக்கல் விபத்து நடந்து மோதவும் வெடிச்சிருக்கு. சோனாலி கண்ணை இறுக மூடியிருக்காங்க. ராஜ்குமார் கண்ணை திறந்தது தான் பிரச்சனை. கண்ணுல பார்வை இழக்கற அளவுக்கு கொண்டு போயிடுச்சு" என்று விவரித்தபடி ராஜ்குமார் இருந்த அறைக்கு அழைத்து வந்தார்.

டாக்டர் வரவும், "நர்ஸ் எனக்கு என்னாச்சுனு இப்ப சொல்ல போறிங்களா இல்லை. சோனாலி ஏன் என்னை பார்க்க வரலை. அவளுக்கு ஏதாவது ஆகிடுச்சா. ப்ளீஸ் எதுனாலும் சொல்லுங்க. நீங்க ஏதோ மறைக்கறதை பார்த்தா எனக்கு பயமாயிருக்கு. என் சோனாலிக்கு ஏதாவதுன்னா செத்து போயிடுவேன்." என்று பிதற்றினான்.

"டாக்டர்" என்று நர்ஸ் அழைக்க, "டாக்டர் வந்துட்டாரா? டாக்டர் டாக்டர் எனக்கு என்னாச்சு. நர்ஸ் எதுவும் சொல்ல மாட்டேங்கறாங்க. நீங்களாவது சொல்லுங்க." என்று கெஞ்ச, "ராஜ்குமார்... இந்த விபத்துல உங்க சோனாலிக்கும் அவங்க உடலுக்கு எந்தவிதமான பாதிப்பு நிகழலை. அவங்க பேரண்ட்ஸ் வந்து சோனாலியிடம் ஏதேதோ சொல்லி பேசி கூட்டிட்டு போயிட்டாங்க." என்று கூற, "கூ..கூட்டிட்டு பேயிட்டாங்களா?" என்றவன் மெதுமெதுவாய் "பொய் சொல்லறிங்களா? என் சோனாலி என்னை விட்டு போயிருக்க மாட்டா." என்று கேட்க, "பச்.. இல்லை. அவங்களுக்கு எதுவும் ஆகலை. உங்களுக்கு தான் பார்வை தற்காலிகமா இழந்திருக்கிங்க" என்றார்.

"பார்வை.. தற்தாலிகமானா?" என்றவன் குரல் உள்ளுக்குள் செல்ல, "ஆமா.. நீங்க கண்பார்வை இழுந்திருக்கிங்க." என்று கூற ராஜ்குமார் முகத்தை தொட்டு தொட்டு பார்த்து கைக்கு அருகே இருந்தவையை தட்டி விட்டு "நோ" என்று அலறினான்.

-தொடரும்.

பிரவீணா தங்கராஜ்

நயனமே நான் தானடி-1
அத்தியாயம்-1

'இளந்தளிர் நர்சரி' என்று பனியனில் எழுதிய ஒருவர் அந்த நர்சரி மூலமாக அழகழகான வண்ணப்பூக்களை பூங்கொத்தாக வடிவமைத்த பார்சலை டோர் டெலிவெரியாக ராஜ்குமார் வீடு தேடி கொண்டு வந்தார். அதை பணியாள் ஒருவர் வாங்கி, வீட்டில் நடுநாயகமாக இருக்கும், கண்ணாடி மேஜையில் வைத்துவிட்டு மாடிபடி வளைவை எட்டியெட்டி பார்த்தார்.

"எதுக்குய்யா பூங்கொத்து? யாருக்கு" என்று பணியாட்கள் கிசுகிசுக்க, பூங்கொத்தை கொண்டு வந்த ஆளும் வெளியேறிட, அந்த கண்ணாடி மேஜையை துடைப்பது போல வேலைக்கார பெண்மணி வசந்தி மெதுவாக பூங்கொத்தை அருகே வந்து அதனை கண்டாள்.

அதில் 'ஐ லவ் சோனாலி' என்ற பெயரை தாங்கிய வாழ்த்து அட்டை நடுநாயகமாகவும், 'வித் லவ் ராஜ்' என்ற சிறு அன்பளிப்பு அட்டையும் தொங்கியது.

வசந்தி மெதுவாக கிச்சனுக்கு வந்து, 'சோனாலின்னு ஒரு பொண்ணை தம்பி பிரெண்டுனு வீட்டுக்கு அழைச்சிட்டு வருவாரே.. அந்த பொண்ணு பெயர் போட்டு காதலிப்பதா எழுதியிருக்கு. நான் சொன்னேன்ல அந்த பொண்ணு தான் இந்த வீட்ல முதலாளியா வரப்போவுதுன்னு" என்று அனுமானம் சரியாக போவதை எண்ணி பெருமைப்பட்டார்.

''உம்கும் அந்த பொண்ணை தவிர முதலாளி தம்பி யாரையும் வீட்ல அழைச்சிட்டு வரலை. அதனால் இப்படி ஈஸியா சொல்லற" என்று ஈஸ்வரி என்ற வேலைக்காரியும் பதிலுக்கு கிசுகிசுத்தனர்.‌

"அப்படின்னாலும் நான் சொன்னது சரியா இருக்கா இல்லையா?'' என்று ஆனந்தப்பட்டாள் வசந்தி.

மாடிபடிவளைவில் வொயிட் ஷர்ட், அதில் மெல்லிய பூவேலைபாடு கொண்ட டிசைன், கருப்பு பேண்ட் என்று அணிந்து வாட்சை மடக்கி கட்டி, மாடி கைப்பிடி வளைவில் கை வைத்து, மற்றொரு கையை பேண்டில் ஒயிலாக திணித்து, நடந்து வந்தான் ராஜ்குமார்.

பெயருக்கு ஏற்றது போல ராஜாகுமாரன் தான். நல்ல உயரம், அதிக சதை போடாத தேகம், நிறமும் பெண்கள் விரும்பும் கோதுமை நிறம்.

உறவென்று கூற, அப்பா அம்மா இல்லை. கொடைக்கானல் பகுதியில் வெளியாட்கள் தங்குவதற்கான விடுதி நடத்தப்பட்டு அதில் தனியாக வருமானம் வந்து சேர்ந்தது, ராஜ்குமார் அந்த கணக்கு வழக்கை எல்லாம் மேற்பார்வைக்கு, தாய்மாமன் சசிகுமாரையே நியமித்திருந்தான். சசிகுமார் மாமா-அத்தை சந்திரா, அவர்களுக்கு திருமண வயதில் அழகான மகளும் உண்டு. அவள் பெயர் சஞ்சனா.

சசிகுமாருக்கு அக்கா மகனை மாப்பிள்ளையாகவே கண்டதால் சஞ்சனாவை ராஜ்குமார் மணப்பதில் பகல்கனவு கண்டார்.

அதனால் தான் லாட்ஜின் கணக்கு வழக்கு கூட தன்னிடம் ஒப்படைத்ததாக நினைத்து கொண்டார். உண்மையில் கொடைக்கானலில் சசிகுமார் இருக்கவும் அவர் பார்வையில் தந்தையின் இந்த லாட்ஜை மேற்பார்வையில் விட்டுவிட்டு ராஜ்குமார் இங்கே சின்னதாக பிஸினஸ் ஆரம்பிக்க நினைத்தான். இதுவரை நண்பர்களோடு செய்த பிசினஸ் ஓரளவு நல்லபடியாக செல்கின்றது. ஆனாலும் கொடைக்கானலில் வருவாய் மட்டுமே உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு வரும்.

சசிகுமார் மகள் சஞ்சனாவை மணந்தப்பின் இந்த பணியை முழுதாக தானே பார்க்க நேரிடும் என்று பொறுப்பாய் கவனித்தார். ஆனால் ராஜ்குமார் கல்லூரியில் சோனாலி என்றவளை நட்பு ரீதியாக பழகி, அப்பெண்ணிடம் இன்னமும் பழக்கம் தொடர, அது மனதில் காதலென்ற அடுத்த கட்டத்திற்கு சென்றது.

அதன் காரணமாக அப்பெண்ணிடம் காதலை உரைப்பதற்காக இதோ இந்த பூங்கொத்தை ஆர்டர் தந்து வரவழைத்து விட்டான் நாயகன். இன்று சோனாலியை சந்திக்கும் போது அவளிடம் இந்த பூங்கொத்தை தந்து, வாங்கி வைத்த வைர மோதிரத்தை சினிமா பாணியில் ஒற்றை கால் மடக்கி, 'வில் யூ மேரி மீ' என்று கேட்டிட முடிவெடுத்தான்‌.

சோனாலி இப்பொழுதே ராஜ்குமாரிடம் பழகுவதில் அவளும் காதலிப்பதை உணர, வைரமோதிரம் வாங்கியது பெரிதாக தெரியவில்லை‌. எப்படியும் காதலை ஏற்பாளென்ற நம்பிக்கை. இல்லாவிட்டால் ராஜ்குமாருடன், படத்திற்கும், இது போன்று தனிமையில் பேச, இதற்கு முன்னும் வந்திருப்பாளா? என்ற எண்ணம்.

இதையெல்லாம் நினைத்து, கண்ணாடி மேஜையில் பலவண்ண மலர்களை தன் விழியால் பார்த்து ரசித்து வருடி கொடுத்தான். காதலை சொல்ல ஆர்வமாய் இருந்தவன் பணியாள் தந்த பழச்சாற்றை மட்டும் பருகிவிட்டு, பூங்கொத்தை கையில் எடுத்தவன், அதை காரில் பின்னிருக்கையில் வைத்து, காதலை வெளிப்படுத்தும் ஆர்வத்தோடு சென்றான்.

சோனாலி சொன்ன இடத்தில், காரை விரைவுப்படுத்தினான்.

'ரெயின்போ மால்' முன்னே சோனாலி காத்திருந்தாள். ராஜ்குமார் வரவும், மானை போல துள்ளி வந்தவள், "ஹாய் ராஜ்." என்றாள்.

"யூ லுக் கார்ஜியஸ் டியர்" என்று கார் கதவை திறந்து அழைத்து பேசினான்.

"யூ டூ ஸ்மார்ட் மேன்" என்றவள், அவன் காரில் அமர்ந்து, "எங்க போறோம் ராஜ். ஏதோ பேசணும்னு சொன்ன?" என்று ஆசையாக கேட்டாள்.

ராஜ் அலைப்பேசியில் பேசிய விதமே ஏதோ அவளுக்கான செய்தியை கூறியது. ராஜ் தனக்கு பிரப்போஸ் செய்ய போகின்றான் என்று. அப்படியிருந்தும் அதை வெளிக்காட்டாமல் வந்தாள்.

''என்ன ராஜ் ஏதோ பேசணும்னு சொன்னிங்க. என்ன பேசணும்" என்று ஆரம்பித்தாள்.

சொல்லப் போனால் இப்பொழுதே 'சொல்லிவிடேன்' என்ற ஆவல்.

ராஜ்குமாரோ, "ஏய்... சோனாலி.. என்ன அவசரம்? சொல்லறேன்" என்று சிரித்தான்.

இங்கிருந்து கடற்கரை சென்று கடலை ஒட்டி பூங்கொத்து தந்து அல்லவா காதலை சொல்ல பேராவல்.

அதை காரிலேயே சொல்ல முடியுமா என்ன?

பின்னால் இருந்த மலரை பார்த்தும் பாராதது போல சோனாலி காட்டிக் கொண்டாள்.

கார் கடற்கரை சாலையில் புயலாய் விரைந்தது.

சோனாலி காரில் பாடலை இசைக்க விட்டு 'வைப்' செய்தபடி வரவும், ராஜ்குமாரோ, சோனாலியின் அழகை பருகினான்.‌

சோனாலி கல்லூரியில் அழகி போட்டியில் முதல் பரிசை வென்றவள். கல்லூரியில் அவளை சுற்றி வண்டுகளாக ஆண்கள் கூட்டம் அலைமோதும். அப்பொழுது எல்லாம் சோனாலி மீது ஆர்வம் எழுந்ததில்லை. கல்லூரி முடிந்து, இதோ இப்பொழுது மீண்டும் சந்திப்பு அமைந்தப்பின் ஆறு மாதமாக பழகவும், அழகை தாண்டி அன்பும் நேசத்தோடும் இருப்பவளை, நட்பில் பழக கவனித்தவன், தனக்குள் காதலாகி தன் துணையாக சோனாலி வந்தாலென்ன என்றளவு வந்துவிட்டாயிற்று.

கார் சில சிக்னலை கடக்க காத்திருக்கும் சமயம், கண் தெரியாத பெண்ணும், ஒரு கை இல்லாத ஆணும் யாசகம் கேட்டபடி கார் அருகே வந்து சேர்ந்தார்கள்.

ராஜ்குமார் இருந்த மகிழ்ச்சிக்கு ஐம்பது ரூபாய் தாளை எடுத்து பார்வையற்று பிச்சை எடுத்த பெண்ணின் தட்டில் போட்டுவிட்டான்.

அருகே ஒரு கையை இழந்தவரோ நன்றி நவில்ந்து பார்வையற்ற பெண்ணை வழிநடத்தி சென்றார்.

"பாவம் ராஜ். கண்ணு தெரியாம இது மாதிரி சிக்னல் பக்கம் வந்து பிச்சை எடுக்கறது ரிஸ்க் தான். பேசாம கோவில் வாசலில் அமர்ந்து சேஃப்பா இருக்கலாம்." என்று பின்னால் திரும்பி பார்வையிட்டு கூறினாள்.

"அவரவர் வசதி எப்படியோ. இப்பலாம் கோவிலுக்கு போற மக்கள் குறைவு சோனாலி" என்று கூறியவன் சாலையில் கவனமாய் வண்டியை செலுத்தினான்.‌

"அதுவும் சரிதான்" என்று சோனாலி ஆமோதிப்பாக கூற, பின்னால் திரும்பியதால் பூங்கொத்து கண்ணில்பட்டது போல ராஜ்குமாரை பார்வையிட, அவனுமே இனியும் மறைக்க முடியுமா என்ன? என்று விழித்தான்.

"யாருக்கு ராஜ் பூங்கொத்து?" என்று திரும்ப, இதற்கு மேல் கடற்கரை வரும் வரை பொறுமை இருக்குமா? என்ற சந்தேகம் பிறக்க, ஒரு கையால் பூங்கொத்தை எடுத்து, "கடற்கரைக்கு போயிட்டு, இதமான நிழலில், சாவகாசமாக உட்கார்ந்து இதை உன்னிடம் தந்து, என்‌ மனதில் உள்ளதை பகிரணும்னு நினைச்சேன். ஆனா அந்த பார்வையற்ற பெண்ணால் திரும்பி பார்க்க இப்ப இங்க சொல்ல வேண்டியதா போச்சு." என்றான்.‌

"என்னிடம் என்ன சொல்லணும்?" என்று அறிந்தே வெட்கத்தோடு கேட்டாள் சோனாலி.

"நான் உன்னை காதலிக்கறேன் சோனாலி. பிரெண்ட்ஷிப்பா பழகினேன்‌. ஒரு கட்டத்துல உன்னை என்‌ வாழ்க்கை துணையா இருந்தா என்னனு தோன்றுது. நீ அந்தளவு என் மனதில், நான் இமேஜின் பண்ணியிருக்கற தேவதையோட மேட்ச் ஆகற. இயற்கையோட கடல் அலை முன்ன கால்மடக்கி சொல்ல ஆசைப்பட்டேன். பட்... இப்ப கார்ல சொல்லிட்டேன். வில் யூ மேரி மீ?" என்றான்.

சோனாலியோ முகமெல்லாம் மலர்ச்சியாக, "ராஜ்.. நீ மட்டும் இன்னிக்கு பிரப்போஸ் பண்ணலைன்னா... நானே இன்னிக்கு காதலை வெளிப்படுத்தியிருப்பேன். நானும் உன்னை விரும்பறேன் ராஜ்." என்று ராஜ்குமாரின் இதயத்தை குளிர்வித்தாள்.

தன் பேண்ட் பேக்கெட்டிலிருந்து வைர நகைப்பெட்டியை எடுத்தவன், அவளிடம் நீட்ட, அவள் வாங்கும் பொழுது வேகத்தடை வரவும் கார் லேசாக தூக்கி போட்டது.

அதனால் வைர மோதிரம் கீழே விழவும், இருவரும் முன்முறுவலோடு குனிந்து எடுத்தனர்.

ராஜ்குமார் ஓரளவு சாலையில் பார்வை பதித்தபடி தான் இருந்தான். ஆனால் வைர மோதிரம் விழவும் அனிச்சையாக குனிந்து எடுக்க, கார் தறிக்கெட்டு போனது.

அதேநேரம் ஒரு மருத்துவ வண்டி சில பல வேதியல் குழாய்களை ஏற்றியபடி முன்னே வரவும் ராஜ்குமார் வண்டியால் அதுவும் கட்டுப்பாட்டை இழக்க, அந்த வண்டி சரியாக ராஜ்குமாரின் வண்டியோடு உரசியபடி சென்றது.

அதீத வேகமோ அல்லது உரசலோ, வேதியல் ஆய்வு குழாய் வெடிக்க, அவ்விடம் பயங்கர சத்தம் எழுப்பியது.

மின்னலாய் தன்னருகே வந்த வண்டி ஒலி எழுப்பி, ஒளியை உருவாக்கி, வெடிக்க, ராஜ்குமார் அதை பார்த்தவாறு வண்டியை திருப்ப தவித்தான். ஆனால் வண்டி கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு வண்டியுடன் மோதி உருண்டது.

"ராஜ்'' என்ற சோனாலி குரலும், "சோனாலி" என்ற ராஜ் குரலும் அவ்விடத்தை கலவரமாக்கி கார் கவிழ்ந்தது. ஏர்பேக் கார் விபத்து நிகழவும் இருவரின் முன் மோதிடாமல் தாங்கியது. நல்லவேளை சீட்பெல்ட் அணிந்திருக்க அவர்களை காரோடு பிணைத்துக் கொண்டே உருண்டது. பூங்கொத்து துவண்ட நாறாக உதிர்ந்திருக்க, வைரமேதிரமோ காருக்குள் எங்கோ விழுந்திருந்தது.

வேதியல் குழாய்களை ஏற்றி வந்த வண்டியும் கவிழ்ந்ததால் அவ்விடமே பரபரப்பாய் மாறியது.‌ அங்கே உடனடியாக மக்களில் சிலர் மருத்துவமனைக்கு போன் செய்து விட்டனர். ஆம்புலன்ஸ் அதிவேகமாய் அவ்விடத்தை வந்து சேர்ந்தது.

சோனாலி ராஜ்குமார் இருவரையும் ஸ்டக்சரில் ஆம்புலன்ஸில் ஏற்றி சென்றார்கள். வேதியல் குழாய் வெடித்திருக்க, தீ கொழுந்துவிட்டு எரிய ஆளாளுக்கு நெருங்க அஞ்சினார்கள்.

கூடவே மற்றொரு வண்டியில் உள்ள ஆட்களையும் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார்கள்.

"சோனாலி.. சோனாலி" என்றவன் வார்த்தை அந்த நிலையிலும் உச்சரித்தபடி இருக்க, இருவருக்கும் அவசர சிகிச்சை பார்க்கப்பட்டது.

-தொடரும்.

பிரவீணா தங்கராஜ்

இனிய ஆயூதபூஜை மற்றும் சரஸ்வதி திருநாள் நல்வாழ்த்துக்கள் பிரெண்ட்ஸ்.