உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன்-சல்மா அம்ஜத்கான் - onlinetamilnovels.com Forum

உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன்-20
உதயம் 💏 20 💏

ஆதித்யாவின் 'தி' என்ற அலறல் மட்டும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. நான் கண்களை திறக்க முயற்சி செய்தேன்.

மங்கலான நிழல் உருவம் மட்டும் என் கண்களுக்குத் தெரிய என்னால் கண்களை முழுவதுமாக திறக்க முடியவில்லை.

முயற்சி செய்து களைத்துவிட மீண்டும் கண்களை மூடிக் கொண்டேன்.

"மிஸஸ். ஆதித்யா.... மிஸஸ் ஆதித்யா..." என யாரோ என் கன்னங்களை தட்டுவதை என்னால் உணர முடிந்தது. ஆனால் அவர்களுக்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை. எனக்கு மயக்கம் வந்தது.

கதவு திறக்கும் சத்தம் கேட்க,

" மிஸ்டர் ஆதித்ய குமார், நீங்க இங்கயே வெயிட் பண்ணுங்க. "என கூறும் குரல் கேட்டது.

அனேகமாக என்னை ஐசியு  அறைக்குள் எடுத்துச் சென்றிருக்க வேண்டும்.

மருத்துவர்கள் செவிலியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துக் கொண்டே என் காயங்களை ஆராய்ந்தார்.

அனேகமாக தையல் இட்டுக்கொண்டு இருக்க வேண்டும் ஏனென்றால் அந்த வலியை என்னால் உணர முடிந்தது.

ஏதேதோ வயர்கள் என்னை சுற்றி இருக்க, மூக்கிலோ வென்டிலேட்டர் பொருத்தப்பட்டிருந்தது.

வென்டிலேட்டர் மூலம் நான் சீரான மூச்சை சுவாசித்தாலும் என் இதயத்தின் துடிப்பு குறைந்து கொண்டே சென்றதை மருத்துவரும் உணர்ந்தாரோ என்னவோ என்னை விட்டு நகர்ந்து வெளியேறினார்.

அனேகமாக கதவு திறந்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில் மருத்துவரின் சத்தம் என் காதுகளில் விழுந்தது.

"சாரி மிஸ்டர் ஆதித்யா காயம் அவ்ளோ ஆழம் இல்ல. இதயத்துக்கு ரொம்ப பக்கமா இருந்தாலும் இதயத்துக்கு எதுவும் ஆகல. ட்ரெஸ்ஸிங் பண்ணியாச்சு.

ஆனா அவங்களோட ஹார்ட் பீட் குறைஞ்சிக்கிட்டே போகுது.

அவங்களும் நம்பிக்கை இல்லாத மாதிரி தெரியுது. அவங்க நம்பிக்கையோட இருந்தால்தான் எங்களால காப்பாற்ற முடியும். அவங்க நம்பிக்கை இல்லாட்டி எங்களால எதுவும் பண்ண முடியாது.

அவங்க பேரண்ட்ஸ் கிட்ட சொல்லிருங்க."

" என் தி என்னை விட்டுட்டு எல்லாம் போக மாட்டா டாக்டர். சி லவ்ஸ் மீ லாட்."

"ஆனா அவங்கலுக்கு வாழனும்னு ஆசை இருக்கிற மாதிரி தெரியல மிஸ்டர் ஆதித்யா."

"ஒரு தடவ அவ கூட பேசலாமா?"

"தாராளமா பேசுங்க.  அவங்க உங்களுக்கு எவ்வளவு முக்கியம்னு புரிய வையுங்க. அவங்க எல்லாத்தையும் கேட்டுட்டு தான் இருப்பாங்க."

" அவளுக்கு தெரியும் அவ இல்லாம நான் இருக்க மாட்டேன்னு. நான் பேசுறேன்."

"சரி முயற்சி பண்ணி பாருங்க."

அதற்குப் பிறகு எந்த சத்தமும் இல்லை.

ஆதி என் கையை தொட்டான். அவன் ஸ்பரிசத்தை என்னால் உணர முடிந்தது. என் கையை அவன் உள்ளங்கையில் வைத்து என் பக்கத்தில் அமர்ந்தான்.

" தி ப்ளீஸ்டி என்கிட்ட வந்ததுரு. நான் அவ கிட்ட சொன்னது எல்லாம் சும்மாதான்.

நான் நிஜமாவே உன்னை தான் லவ் பண்றேன்.உன்னை மட்டும் தான் லவ் பண்றேன்.

உன்னை காப்பாற்ற மட்டும்தான் நான் அப்படி சொன்னேன்.

ப்ளீஸ்டி வந்துரு." என அவன் என்னிடம் கூற எனக்கு குழப்பங்கள் கூடியது.

என்னை காப்பாற்ற ஆதித்யா கூறுகிறான் என்றால் என் கையில் விழுந்த அவனுடைய கண்ணீர் எப்படி பொய்யாகும்.

"உனக்கு ஒன்னு தெரியுமா? உன்னை நான் எப்போ மீட் பண்ணுனேன் தெரியுமா?

உன்னோட காலேஜ்ல தான் பர்ஸ்ட் பார்த்தேன். உனக்கு கண்டிப்பா இது தெரிஞ்சுருக்காது தானே."

"சார் ஹார்ட் பீட் இன்கீரீஸ் ஆகுது. அப்படியே பேசிட்டே இருங்க. நான் போய் டாக்டரை கூட்டிட்டு வர்றேன்."

"தி நான் பேசுறது நீ கேக்குற தானே ப்ளீஸ் தி ஓபன் யுவர் ஐஸ்."

நாங்க செய்தும் என்னால் கண்களையே திறக்க முடியவில்லை.

"ஓகே பைன். இப்படியெல்லாம் நீ கண்ணை திறக்க மாட்டேல. சரி உன்கிட்ட நான் எல்லாத்தையும் சொல்றேன்.

அன்னக்கி நீ என்னை இடிச்சுட்டு சாரி ன்னு சொல்லிட்டு என் மூஞ்சிய கூட பார்க்காம போயிட்ட.

ஆனா  நான் உன்னையே தான் பார்த்தேன். நான் உன்னை பார்த்ததை  ஸ்வேதா கூட பார்த்துட்டு என் கிட்ட சண்டை போட்டா.

ஆமா அப்போ நான் ஸ்வேதாவ பார்க்க தான் காலேஜ் வந்தேன். உன்ன பார்த்தேன்.

அந்த டைம் ஸ்வேதாவை லவ் பண்ணிக்கிட்டு இருந்தேன். ஆனா ஏன்னு தெரியல அந்த டைம் உன்னைய பார்க்கணும்னு தோணுச்சு.

அந்த ஒரு நாள்தான். அதுக்கப்புறம் நான் உன்னை மறந்துட்டேன்.

அதுக்கப்புறம் லைஃப்ல  என்னென்மோ நடந்து போச்சு.

ஸ்வேதா இறந்துட்டான்னு சொன்னாங்க.  நான் ரொம்ப உடைச்சிட்டேன். ரொம்ப இறுகி போயிட்டேன். யாரயுமே பார்க்க பிடிக்கல.

அப்பதான் எனக்கு ஒரு கனவு வந்தது. நீயும் நானும்  கல்யாணம் பண்ணிக்கிட்டோம். நமக்கு குழந்தைங்க இருக்குற மாதிரியும் அவங்ககூட ரொம்ப ஹாப்பியா இருக்க மாதிரியும் கனவு கண்டேன். " என்றவன் அழும் குரல் கேட்டது. அவனுக்கு ஆறுதல் கூற கூட என்னால் முடியவில்லை. என் கைகளை அசைக்க முயற்சித்தேன் ஆனால் பலனில்லை. அவனை சமாளித்து மீண்டும் பேச ஆரம்பித்தான்.

ஸ்வேதா எடத்துல நீ எப்படி வரலாமான்னு நான் ரொம்ப குழம்பிட்டேன். நான் ஸ்வேதாவை காதலித்தது உண்மை. கனவுல கூட அவளுக்கு துரோகம் பண்ண கூடாதுன்னு என்னோட கனவை கூட நிராகரிச்சேன்.

கொஞ்ச நாள் முயற்சி பண்ணி கனவு வராமல் பார்த்துக்குட்டேன்.

நீ என்ன மால்ல மீட் பண்றதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே நான் உன்னை திரும்ப மீட் பண்ணினேன். கிட்டத்தட்ட 5 வருஷம் கழிச்சு உன்னை நேர்ல பார்த்தேன்.

நீ என்னை பாக்கல.  உன்னை பார்த்ததுக்கு அப்புறம்  உன்கிட்ட இருந்து கண்ணை எடுக்கவே முடியல.

நீ போனதுக்கு அப்புறம் தான் என்னையே உணர்ந்தேன். நான் எப்படி உன்னை இப்படி பார்க்கலாம்.என் காதல் ஸ்வேதாவுக்கு மட்டும் தான். அப்படின்னு என்று நினைச்சுகுட்டு வீட்டுக்கு போயிட்டேன்.

ஆனால் ஸ்வேதாவோட ஞாபகத்தை விட உன்னோட ஞாபகம் மட்டும்தான் அந்த மூணு வருஷமா என்னை சுத்திட்டு இருந்தது.

உன்னை பார்த்ததுக்கு அப்புறம் அது ரொம்ப அதிகமா ஆயிடுச்சு.

என் கனவுல வரக்கூடாது நான் உன்னை நினைக்க கூடாதுன்னு எல்லா முயற்சியும் பண்ணுனேன்.ஆனா என்னால முடியல.

அதுக்கப்புறம் ஒரு நாள் உன்னை நான் மால்க்கு வெளிய நிக்குறத பார்த்தேன். உன்ன பாத்ததும் மீட்டிங்க மால்க்கு மாத்திட்டேன்.

அங்கே உட்கார்ந்து யோசிக்கும் போதுதான் தெரிந்தது.  நான் எப்படி உன்னை பாக்கறதுக்காக மீட்டிங்க கூட ஒரு பப்ளிக் ப்ளேஸ்ல மாத்தலாம்ன்னு நினைச்சுட்டு அங்கிருந்து எழுந்து போகும்போதுதான் நீ என்னை மறுபடியும் வந்து இடிச்ச.

அப்போ கூட நான் உன்னை சைட் அடிச்சிட்டு தான் இருந்தேன். நீ சாரி சொன்னதுக்கு அப்புறம் தான் நான் என்னோட உணர்வுக்கு வந்தேன். நீ எப்படி என் மனசுல ஸ்வேதா இடத்த எடுத்துக்கலாம்ன்னு. என்னோட கையாலாகாத தனத்தை தான் உன்கிட்ட கோவமா நான் காட்டுனேன்.

அப்போ நீ புலம்பிகிட்டு போனத கூட அங்க நின்னு நான் ரசிச்சேன்.

அப்பா அம்மா என்ன ரொம்ப கல்யாணம் பண்ணிக்கோன்னு வற்புறுத்தினாங்க.

எனக்கு ஸ்வேதாவை தவிர வேறு யாரையும் கல்யாணம் பண்றது இஷ்டமா இல்லாம இருந்தது.

இதுல நீ வேற கனவுல வந்து வந்து போனியா. சரி உன்ன கல்யாணம் பண்ணா தான் பிராப்ளம் மனசு தடுமாறும். அதுக்கு முன்னாடி மேரேஜ் பண்ணிக்கிட்டா கூட எப்படியாவது வாழ்க்கையே ஓட்டிடலாம்ன்னு தான் நினைச்சேன்.

என்னோட வாழ்க்கைல என்னைக்கும் காதல் அப்படின்னு ஒன்னு இனிமே கிடையாது அப்படின்னு நினைச்சேன்.

ஆனால் திரும்ப உன் முன்னாடி கொண்டு வந்து விதி நிப்பாட்டும்னு நினைக்க கூட இல்லை.

அன்னக்கி பொண்ணு பார்க்கும் போது வெட்கப்பட்டு பேசினியா.  முடியல. அன்னக்கியே நான் காலி.

நீ பேசுற அழக ரசிக்கும் போது என்ன பிடிக்கலன்னு நீ சொன்னியா அது  மைண்ட்ல ஏறிடுச்சு.

உனக்கு என்ன புடிக்கல அப்படின்னு சொன்னத என்னால தாங்கிக்க முடியல.

அதனால தான் உன் மேல கோவப்பட்டேன்.

அதுக்கு அப்புறம் தான் நான் ஏன் இப்படி கோவப்படுறேன்னு புரிஞ்சுகிட்டேன். உனக்கு என்ன பிடிக்கனாம்னு நினைச்சேன்.

நமக்கு கல்யாணம் ஆயிட்டா,நீ எனக்குள்ள உரிமையா வந்துவன்னு பயந்தேன்.

அதனால் தான் உன்ன கல்யாணத்தை நிப்பாட்ட சொன்னேன்.

அடுத்து நான் உன்ன கடைல பார்த்தேன்.

நான் உள்ளே நுழையும் போதே பிளாக் சாரிய உன் தோள் மேல வச்சு நீ அழகு பார்க்க அங்கேயே நின்னுட்டேன்.

உண்மைய சொல்லனும்னா நீ அந்த சாரியை போட்டதுக்கு அப்புறம் தான் அந்த சாரிக்கே அழகு வந்தது.

அந்த பாட்டி கோபமா உன்கிட்ட பேசுனதும்‌ உன் முகம் வாடுச்சு. எனக்கு ஒரு மாதிரி இருந்தது கஷ்டமா போயிருச்சு.

அதுக்கு அப்புறம் நான் அந்த சாரிக்கு பில் பே பண்ணிட்டு தான் உன்கிட்டேயே வந்தேன்.

அன்னைக்கு என்னால கண்ட்ரோல் பண்ண முடியலை. அன்னைக்கு நான் உன்னை கிஸ் பண்ண தான் உன்கிட்ட வந்தேன்.

அதுக்கப்புறம் நீ உன் முட்ட கண்ண வச்சு முழிச்சு யா அதுல   சுதாரிச்சு அதுக்கப்புறம் தான் நான் என்ன பண்ண பார்ததேன்னு உணர்ந்தேன்‌.

மெதுவா பழிய ஃபுல்லா உன் மேல போட்டு  சீன் கிரியேட் பண்ணேன்.

உன்னை வம்புக்கு இழுத்தேன்.

அதுக்கப்புறம் நான் உன்ன பாக்கணும்னு எவ்ளவோ ட்ரை பண்ணேன். ஆனா என்னால முடியல.

அதுக்கு அப்புறம் நம்ம என்கேஜ்மென்ட்ல மீட் பண்ணனுனோம்.

ஏன்னு தெரியல என்கேஜ்மென்ட் பத்திரிக்கையை வாசிக்கும்போது எனக்குள்ள ஒரு பயம்  ஸ்வேதா அப்போ என்னோட மனசுல இருந்தா.

எப்படி அவளை மறந்துட்டு உனக்கான வாழ்க்கையை என்னால் கொடுக்க முடியும்னு எனக்கு தெரியல.

ஸ்வேதாவை மறக்க முடியுமா தெரியல.

எப்படி ஒருத்தரால ரெண்டு பேர காதலிக்க முடியும்ன்னு.அதனாலதான் என்கேஷ்மெண்ட் அப்பவும்  மேரேஜ நிறுத்த  நான் கேட்டேன். ஆனா மனசுக்குள்ள நீ நிறுத்த கூடாது அப்படின்னு தான் எனக்கு தோணுச்சு.

நம்ம மேரேஜ் அப்போ நீ அழுததை என்னால தாங்கிக்க முடியல. உன்ன ஹக் பண்ணி உனக்கு ஆறுதல் சொல்லனும்னு தோணுச்சு. ஆனா எங்க நீ தப்பா எடுத்துப்பயோன்னு பயம்.

உன் அழுகையை நிப்பாட்டதான் காரிலிருந்து இறக்கி நடுரோட்டில் நிற்க வெச்சேன். அதுக்கப்புறம் நீ வண்டில அழல.

வீட்டுக்கு வந்துகுட்டு இருக்கும் பொழுது நான் சுவேதாவோட  அண்ணன பார்த்தேன்.

அவன் என்னை பார்த்துக்கிட்டே போனான். கார் வேற பூவால அலங்காரம் பண்ணி இருந்தாங்க.

அவன் என்னை பத்தி என்ன நினைச்சுருப்பான்னு  எனக்கு தெரியல. அது வேற மனசை போட்டு உறுத்திக்கிட்டே இருந்தது. அதனால தான் தலைவலின்னு நான் போயிட்டேன்.

அன்னைக்கு புல்லா என் மைண்ட்ல  ஸ்வேதாவோட அண்ணா என்னை பத்தி என்ன நினைப்பாங்க வந்திட்டே இருந்தது.

அதை யோசிட்டு இருக்கும் போதுதான் நீ ரூமுக்குள்ளே இருப்பான்னு நினைக்காமலே நான் உள்ள வந்துட்டேன்.

பூக்களோட அலங்காரத்துக்கு நடுல தேவதையா நீ இருந்த.

அந்த மாதிரி நீ முன்னாடி உக்காந்திருக்க என்னை மீறி நான் ஏதாவது பண்ணு உன்கிட்ட தப்பா நடந்துகிட்டேன்னா என்ன பண்றது. பார்க்கும் போதெல்லாம் மேரேஜ நிப்பாட்டுன்னு சொல்லிட்டு ஃபர்ஸ்ட் நைட்ல உன்னை நெருங்குவதால் நீ என்னை எவ்ளோ கேவலமா பார்ப்பன்னு யோசிச்சேன்.

அப்புறம் தான் எனக்கே புரிஞ்சுது நான் உன் கூட சேரணும்னு நினைச்சது. என்னைய நானே காரில் துப்பிட்டு என்னை சலனப்படுத்துன உன்கிட்டயே‌ மொத்த கோபத்தையும் காட்டிடேன்.

ஆனா நீ சரியான பிராடு தி. உனக்கு கை‌ கால்லாம் நடுங்குதுன்னு என்னமோ ஏசியை ஆன்லைன் பண்ண சொல்லிட்டு படுக்குற." என சிரித்தான்.

அவன் சிரிப்பு அந்த நேரத்திலும் எனக்கு இதம் அளித்தது.

"நான் எப்படி கண்டுபிடிச்சேன்னு தெரியுமா...

நீ வீரவசனம் பேசும் போது உன் பில்டிங் என்னமோ ஸ்ட்ராங்கா தான் இருந்தது.

ஆனா பேஸ்மென்ட் தான் ரொம்ப வீக்..

முகமெல்லாம் வியர்த்து கொட்டுது. கை கால்லாம் உதறுது. உதடு என்னமா துடிச்சது தெரியுமா... அப்பயே ஒரு லிப் லாக் நடந்துருக்கும். ஏதோ மிஸ் ஆய்ட்டு...

இதுல மேடம் மைண்ட் வாய்ஸ்னு சத்தமா வேற இதே டெக்னிக்க ஃபாலோ பண்ண போறேன்னு வேற டயலாக் அடிக்குற.

அப்படியே ஃபாலோ பண்ணுனா பின்விளைவுக்கு நான் பொறுப்பு இல்லன்னு சிரிச்சுட்டே தூங்கிட்டேன்.

இதுல அடுத்த நாளே என்னை சோதிக்க வந்துட்ட,  நான் கண்ணை திறக்கும் போது அவ்ளோ கியூட்டா என் முன்னாடி நீ இருந்த. உன்னுடைய ஈரமான கூந்தல் அந்த சோப்பு வாசம் உன்னோட நெருக்கம் எல்லாமே என்னை ஏதோ பண்ணுச்சு. என்னை நானே டைவர்ட் பண்ண தான் உன்னுடைய டீயை  வாஷ்பேஷன்ல கொட்டிட்டேன்.

ஆனா நீ செஞ்ச அந்த அல்வாவை நிஜமாவே தெரியாம தான் தட்டிவிட்டேன். உனக்கு ஒன்னு தெரியுமா அன்னைக்கு யாரும் இல்லாதப்போ மெதுவா அந்த பவுல்ல ஒட்டியிருந்த அல்வாவை டேஸ்ட் பண்ணிட்டு தான் நம்ம ரூமுக்கே வந்தேன். என் நிலைமைய நினைச்சா எனக்கே கொஞ்சம் கேவலமா தான் இருந்துச்சு. பட் அல்வா செம டேஸ்ட் தி.என் அம்மாவையே மிஞ்சிட்ட. "

அப்புறம் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் என்ன தெரியுமா? அன்னைக்கு நான் உன்கிட்ட எவ்ளோ ரூடா உன் கூட  பேசி இருந்தாலும், நீ அம்மா கிட்ட நான் உன்ன நல்லா பாத்துக்குறதா சொன்ன பாத்தியா அப்பவே எனக்குள்ள ஆழமா‌ புதைஞ்சுட்ட தி நீ.

அப்புறம் அந்த கொடைக்கானல் . ஜெயராமன் மீட்டிங்க கொடைக்கானலை தான் வச்சுருந்தாரு. அம்மா எங்க வேணாம்னு சொல்லிவாங்களோன்னு பயந்துகிட்டு இருந்தேன்‌

பார்த்தா அம்மாவே டிக்கெட் போட்டு கொடுத்துட்டாங்க. எங்க நீ வேணான்னு சொல்லிடுவியோன்னு பயந்துதான் நான் உன்கிட்ட வேணாம்னு சொல்ல சொன்னேன்.

என்னை வெறுப்பேத்துவது நீ ஆமா சொல்லுவன்னு நெனச்சேன். நான் நினைச்ச மாதிரி நீ சொல்லிட்ட.

அப்புறம் நான் கொடைக்கானல் உன்னை போனா அடிச்சது என்னால மறக்கவே முடியாது தி.

உண்மையிலேயே அன்னைக்கு செம்ம கிளைமேட், குளுருக்கு இதமான நீ போர்வையை இழுத்து போர்த்தி தூங்கிட்டு இருந்தத பார்க்க குட்டி பேபி மாதிரி இருந்த.

என்னை அறியாமலேயே நான் உன்னை கிஸ் பண்ணுனேன். இந்த நெத்தில இந்த கண்ணத்துல இந்த கண்ணுல.

ஆனா நீ என்ன கண்டுக்கவே இல்ல.

அதுக்கு அப்புறம் மெதுவா உன் உதட்ட பக்கம் வந்தால் அப்பதான் என் புத்தியில் உரைத்தது நான் என்ன பண்றேன்னு.

ஒரு பொண்ணு தூங்கிட்டு இருக்கும்போது நான் பண்ணினத நினைச்சு எனக்கே அசிங்கமா இருந்தது.

ஸ்வேதாவ காதலிச்சுட்டு உன்கிட்ட இந்த மாதிரி எப்படி பண்ணலாம்னு உறுத்திக்கொண்டே இருந்தது.

அப்போ தான் எனக்கு போன் வந்தது. ஸ்வேதா அண்ணன் கால் பண்ணி இருந்தான். மேரேஜ்க்கு விஸ் பண்ணி ஸ்வேதாவ பத்தின எல்லா உண்மையும் என்கிட்ட சொன்னான்.

ஸ்வேதா என்னை பணத்திற்காக தான் காதலிச்சதையும் பணம் என்கிட்ட இல்லன்னதும் விட்டுட்டு போய்ட்டான்னும் சொன்னான். இன்னும் நிறைய சொன்னான்.

இப்படி பட்ட பொண்ணு தேவ இல்லன்னு அவங்க அப்பா அம்மா அவள தல மூழ்கிட்டதா சொன்னான். அதனாலதான் உங்க வீட்ல மாலை எல்லாம் போட்டு உயிரோட இருக்குறவளுக்கு காரியமும் பண்ணிட்டாங்களாம்.

நான் என்னவள்னு நினைச்ச ஸ்வேதா இப்டிபட்டவன்னு தெரியாம அவள உருகி உருகி காதலிச்சது எனக்கே அருவருப்பா இருந்தது.

இதை கூட தெரியாத முட்டாள இருந்திருக்கேன்னு நினைக்கும் போது எனக்கே கஷ்டமா இருந்தது.

இதுல பைல் வேற ஓபன் ஆகல. நான் இருந்த டென்சன்ல பைல் என்ன பார்மேட்ல இருக்குன்னு கூட கவனிக்காம என் மேனேஜர கேட்டா அவன் ஆபிஸ் சிஸ்டம் லயே டெலிட் ஆய்டுச்சுன்னு சொல்றான்.

அந்த டைம் தான் நீ ஜூஸ கொட்டிட்ட. அதுல கோபம் வந்து உன்ன அடிச்சுட்டேன்.

அடிச்சதுக்கு ரொம்ப சாரிடி. உன் கன்னம் பண் மாதிரி வீங்கி போய் உன் கண்ணு கலங்கி இருக்கும் போது எனக்கே கஷ்டமாக இருந்தது.

அப்பதான் நீ நான் ஏன் உன்னை வெறுக்கிறேன்னு  கேட்டு கேட்டு அழுதுட்டே என் நெஞ்சுலயே சாஞ்சுகிட்டா.

எப்படி ஸ்வேதாவை காதலிச்சுட்டு உன்னையும் என்னால காதலிக்க முடியும் எப்படி என் மனசு உன் காதலுக்கு ஏங்குது. இன்னும் என்னை நினைத்து எனக்கே கஷ்டமாக இருந்தது.  ஒருவேளை காமத்துக்காக உன்னை பார்க்குறேன்னோன்னு வெறுப்பா இருந்தது.

இதுல நீ வேற என்னை வெறுப்பேத்துறேன்னு கியூட் கியூட்டா எக்ஸ்பிரசன் குடுத்து என் பின்னாடியே சுத்தி இம்சை பண்ணுனா நானும் எவ்ளோ நாள் தான் என்னை கன்ட்ரோல் பண்ண முடியும்.

அதான் அன்னைக்கு சஞ்சய் கிட்ட சொல்லிகிட்டு இருந்தேன். நீ தான் இப்படி புரிஞ்சுக்கிட்டு அழுதுக்கிட்டே இருந்தா.

நீ அழுகும்போது என்னால பார்த்துட்டு இருக்க முடியல தி. உன்னை அடிச்சுட்டு நான் தான் ரொம்ப கஷ்டப்பட்டேன்.

இனிமே உன்ன கண்களில் இருந்து கண்ணீர் வர விடக்கூடாதுன்னு தான் பிரண்ட்ஸ் ஆ இருக்கலாம்னு கேட்டேன்.

நான் ஸ்வேதாவை காதலிச்சது உண்மை.ஆனா அந்த காதலுக்கு அவர் கொஞ்சம் கூட தகுதியே இல்லாதவன் நான் புரிஞ்சுகிட்டேன்.

அப்பவே என் மனசுல இருந்த குற்றவுணர்ச்சி போயிடுச்சு. அதனாலதான் போனோட சகஜமா என்னால பேச முடியல முடிஞ்சது.

அப்புறமா கேரளா போனோம்.

கேரளால ஜூல என்னால சத்தியமா முடியல.

எங்க நான் உன்ன  இழந்துருவேனோன்னு  பயமாயிருந்தது.

அங்க இருந்தவர் ஏதோ ஒரு பொண்ணு செல்ஃபி எடுக்குறேன்னு சிங்கம் இருக்குற பக்கம் விழுந்துருச்சு. மூணு சிங்கம் அந்த பொண்ண சுத்தி நின்னுருச்சுபா. அதுல அந்த பொண்ணு மயங்கிருச்சு. அதுல சிங்கம் பொண்ணு செத்துருச்சுன்னு போய்டதாவும் ரெஸ்கியூ டீம் அந்த பொண்ண ஹாஸ்பிடல் சேர்த்ததாவும் சொன்னாங்க. இதுல பொண்ணு தமிழ்நாடு ன்னு வேற சொன்னாங்களா. நீ வேற என்கிட்ட சிங்கம் பக்கத்துல நின்னு செல்ஃபி எடுத்தா எப்படி இருக்கும்னு சொன்னது நியாபகம் வர்ற உயிரே போய்டுச்சு.

நீ என் கண்ணுல பட்டுற மாட்டியான்னு உன்னை தேடிட்டு இருந்தேன்.

திரும்ப உன்னை பாக்கும் போதுதான் எனக்கு உயிரே வந்தது. அவன் ஹக் பண்ணி எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கிட்டேன்.

அந்த நிமிஷம் தான் நான் நீ இல்லாம என்னால ஒரு நிமிஷம்கூட இருக்க முடியாதுன்னு புரிஞ்சுகிட்டேன்.

உன்மேல எனக்கு இருக்குறது காமம் இல்ல ஆழமா புதைஞ்சு இருக்குற காதல்ன்னு."

அவன் என் காதலை அந்த நிமிடம் உணர்ந்திருக்கிறான் என்பது என் கண்ணில் அன்றைய நினைவில் நீர் கோர்த்தது.

"பொய்... அப்புறம் ஏன் ஸ்வே குட்டி லவ் யூ ன்னு சொன்ன" என என் மனம் முரண்டுக்கு நின்றது.

எனக்கு அவன் குரல் சிறிது நேரம் கேட்கவில்லை.

"தி..."

"தி...."

"தி... இப்ப நீ பேசுன தானே..."

நான் கேட்டது அவன் செவிகளை எட்டியது. என் குரலை அவனால் கேட்க முடிந்தது.

ஆனால் என்னால் என் கண்களை திறக்க முடியவில்லை.

" தி... நான் பேசுறத நீ கேட்ட தானே... தி‌ கம் ஆன் தி. நீ பேசு‌‌. நான் இப்போ உன் குரல்ல கேட்டேன். பேசு தி." என‌அவன் கூறினான்.

" ஒரு தடவை பேசு தி. எனக்கு உன் குரல கேட்கனும். பேசு தி. கண்ணை திறந்து என்னை பாரு தி... ஐ லவ் யூ தி‌.. லவ் யூ சோ மச் தி.. ப்ளீஸ் கண்ணைத் திறந்து பேசு" என அவன் முகம் என் இடது தோளில் ஓய்வெடுக்க அவனின் அழுகுரலும் அழுகையினால் மூக்கு அடைத்து அவன் மூச்சு விட சிரமப்படுவதும் காதில் ரிங்காரமிட்டது.

அவனின் கண்ணீர் என் தோளை நனைக்க என் கைகள் என்னை கேளாமலே எழுந்து அவன் கண்ணீரை துடைத்தது.

என் ஸ்பரீசத்தை உணர்ந்தவன் என் கையை பற்றிக்கொண்டு,"தி... தி... என்னைப் பாரு தி.... "

"கமான் மிஸஸ்.ஆதித்யா... இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணுங்க. யூ கேன்." என மருத்துவர் என்னை உற்சாகமூட்ட ஓய்ந்து போன என் கணவன் குரலை கேட்க மெதுவாக கண் திறந்தேன்.

நான் கண் திறந்ததும் என் பார்வையில் பட்டது கண்களை அழுந்த துடைத்த வண்ணம் இருந்த ஆதி தான்.

நான் கண்களை முழுதாக திறந்ததும் "ஏன் தி என்னை இப்படி பயமுறுத்திட்ட... இனி இப்படி பண்ணாத... என்னால முடியல." என்றவன் என் நெற்றியில் முத்தமிட்டு உதடுகளை நெற்றியில் இருந்து எடுக்காமலே நெற்றியில் அவன் நெற்றியை வைத்தான்.

அவன் கண்ணீர் நெற்றி வழியாக என் கண்களில் வந்து தஞ்சமடைந்தது.

நொடிகள் நிமிடங்களாக கடந்தன.

"மிஸ்டர் ஆதித்யா... நான் கொஞ்சம் உங்க வைஃப்ப பார்க்கட்டா..." என மருத்துவரின் கேள்வியில் என்னிடம் இருந்து நகர்ந்தவன் மீண்டும் கண்களை துடைத்துக் கொண்டான்.

மருத்துவர் என்னை பரிசோதித்து விட்டு "சீ இஸ் அவுட் டேஞ்சர் மிஸ்டர் ஆதித்யா... பட் சீ நீட்ஸ் ரெஸ்ட்."

நான் மருத்துவரை பார்த்து "டாக்டர் ஐஞ்சு நிமிசம்"  என கெஞ்சலாய் கேட்க, தோளை குலுக்கி " ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்..." என எச்சரித்து விட்டு நகர்ந்தார்.

ஆதி என்னருகே வந்து என் கையை பிடிக்க , நான் என் கையை உள்ளே இழுத்துக் கொண்டேன்.

" நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் இன்னும் சொல்லல ஆதி"

" என்ன கேள்வி ?" என ஆதித்யா என்னை கேள்வியாக பார்த்தான்.

" ஸ்வே குட்டி ஐ லவ் யூ ன்னு ஏன் சொன்ன?"

நமட்டு சிரிப்பு சிரித்தவன் "உனக்கு ஜெலஸா இருக்கா தி..."

அவன் கேள்வியின் முகத்தை திருப்பிக் கொண்டேன்.

அவன் கைகளால் என் நாடியை பற்றி திருப்ப நான் தட்டி விட்டேன்.

"என்னை லவ் பண்ணுவாராம். ஆனா ஐ லவ் யூ ஸ்வே குட்டின்னு சொல்லுவாராம்... குட்டியாம் குட்டி... "என நான் முணுமுணுத்தேன்‌.

" சாரி தி... நீ காணோம்னு சொன்னதும், அன்னைக்கு ஸ்வேதாவை கடைசியா இரத்த வெள்ளத்துல பார்த்தது தான் என் கண் முன்னாடி வந்துட்டு போச்சு.  எங்க நீயும் என்னை அந்த மாதிரி விட்டுட்டு போயிருவயோன்னு தான் நான் பயந்தேன்.

அது மைண்ட்ல ஓடுனதால அது கனவா வந்து ஏதாவது உளறிறுப்பேன் தி... என் மனசுல நீ மட்டும் தான் தி இருக்க. வேற யாருக்கும் என் மனசுல இடம் இல்ல தி...

ஆனா திடீர்னு நீ என்னை விட்டு விலகியதுதான் என்னால புரிஞ்சுக்க முடியல. என் காதல நான் உணர்ந்ததுக்கு அப்புறம் நீ என்னை விட்டு விலகி போனது என்ன ரொம்ப பாதிச்சுச்சு.

நான் உன்கிட்ட எவ்வளவு பேச முயற்சி பண்ணேன். ஆனா நீ என்கிட்ட பிடி கொடுக்கவே இல்லை.

அப்புறம் சரண்யா தான் பிளைட்ல இருக்கும்போது கால் பண்ணி நான் ஸ்வேதா பத்தி தூக்கத்துல உணர்ந்ததையும் நீ என்னை காதலிக்கிறதையும் சொன்னாள். நான் ரொம்ப ஹாப்பியா ஆயிட்டேன்.

என்னுடையது தி என்னை காதலிக்குறா. இதை விட இந்த உலகத்தில் வேற என்ன வேணும். எனக்கு அவ்ளோ ஹாப்பியா இருந்தது..

என் கிட்ட நீ காதலை சொல்ற வர்ற  நான் எதுக்கு வெயிட் பண்ணனும்.  உன் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சு போச்சுல. அதான் உனக்கு புரப்போஸ் பண்ணலாம்னு முடிவு பண்ணினேன்.

அந்த மொமண்ட்ட செலிப்ரேட் பண்ண தான் உனக்கு புடிச்ச பிளாக் லேரிய ப்ரசென்ட் பண்ணுனேன். எப்படியும் பார்ட்டி முடிஞ்சு வரும்போது ப்ரபோஸ் பண்ணலாம்னு நெனச்சேன்.

அதுக்குள்ள என்ன என்னமோ நடந்து போச்சு. ஸ்வேதா ஜெயராமனோட வைஃபா இருப்பான்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. அவளைப் பார்த்ததும் எனக்கு கோபம் வந்ததுருச்சு."

"எனக்கு அப்படி தோணலை.  ரொமான்ஸ் பண்ண மாதிரில தோணிச்சு."

"ஏய் என்ன தி இப்படி சொல்ற. போயும் போய் அவளோடயா ரொமான்ஸ் பண்ணுவேன். நீ இருக்கும் போது அவள்லா ஒரு ஆளா. நீ பர்மிஷன் கொடுத்தா போதாது ரொமான்ஸ் பண்ண" என என் உதடுகளை நோக்கி வந்தான்.

அவனை கைகளால் தடுத்தேன்.

" நீயும் அவளும் கண்ணுலயே ரொமான்ஸ் படம்  ஓட்டுனீங்களே."

"அச்சோ தி... உண்மை தெரியாம பேசாதே.

அன்னைக்கு அவளை பார்த்ததும் இவகிட்ட என் மனச பறிகொடுத்தேன்னு பத்திக் கிட்டு வந்தது. அந்த கடுப்புல தான்  ட்ரிங்க்ஸ் பண்ணவே போனேன்.

குடித்ததும் அவளை நான் திட்ட தான் அவளை தேடினேன்.

அவள தேடிப் போனேன். அவ கண்ணுல கொஞ்சமாவது குற்றவுணர்ச்சி இருக்கான்னு பார்த்தேன்.

ஆனா அதுல அவ தொடுதல்லயும்  காமம் தான்  இருந்தது. அதை பார்த்ததும் எனக்கு உடம்பெல்லாம் எரிச்சலும். அவளை கீழே தள்ளிவிட்டு  உன்னை தேடுனா காணோம்.

வெளிய வந்து தேடிட்டு இருந்தேன்.

அப்போ அவளும் என் பின்னாடியே வந்தா.

ஆதி ஏன் இப்படி தள்ளிவிட்டு வந்தன்னு கேட்டா.

உன்னை கொல்லாம விட்டதே பெரிய விஷயம். இப்பக்கூட உன்னை சொல்லனும்னு தோணுது.

ஆனா என்னோட தி எதுவும் தப்பா யோசிச்சு இருக்க கூடாதுன்னு தான் உன்ன விட்டுட்டு போறேன்.

போடின்னு சொல்லிட்டு வந்துட்டேன்.

எப்படியும் நீ ரூமுக்குதான் போகனும்னு ரூமுக்கு வந்து பார்த்தேன்.

அங்கே இருந்த எல்லாமே கலைந்து இருந்தது. சரி நீ கோவமா இருக்க நினைச்சேன். நீ சாரிய கூட தூக்கி எறிஞ்சுட்டு போய்ருக்கானா நீ ரொம்ப நொந்து  இருக்கனும்னு புரிஞ்சுகிட்டேன்.

உன்னை தேடிட்டு இருக்கும் போதுதான் ஒரு ரூம் பாய் உன்ன பக்கத்துல பார்த்ததாகவும் யாரோ உன்ன வண்டியில தூக்கிட்டு போனதாகவும் சொன்னான்.

அவன்ட்ட இருந்து வண்டி நம்பர் வாங்கிட்டு போய் போலீஸ்ல கம்ப்ளைன்ட் பைல் பண்ணி உன்னை ட்ராப் பண்ண எப்படியோ நீ இருக்குற இடத்தை கண்டுபிடிச்சு வந்தா உன் கழுத்துல கத்தியை புடிச்சுக்கிட்டே ஸ்வேதா நிக்கிறா. உன்னை காப்பாத்த மட்டும் தான் அப்படி சொன்னேன். இருந்தாலும் பார்டில நீ என்ன விட்டு போய்ருக்க கூடாது. அப்படி போகாம இருந்துருந்தா இவ்வளோ பிரச்சினை நடந்து இருக்காது."

"நான் என்ன பண்ண. நீயும் ஸ்வேதாவும் அவ்ளோ க்ளோசா இருக்கும்போது உனக்கு என்னை புடிக்கல. அவள தான் புடிச்சிருக்குன்னு நான் உன்னை விட்டு போட்டாச்சு தான் அங்கிருந்து வந்திட்டேன். "

"போயும் போயும் அவ பின்னாடி போவேன்னு என்னை எப்படி நினைச்ச.  ஓகே அட்லீஸ்ட் உனக்காக ரூம்ல இருக்கிற டெக்கரேஷன் பார்த்துட்டு கூட தோனலையா எல்லாத்தையும் கலைச்சு போட்டு போயிட்ட."

"எனது ரூமை நீ டெக்கரேட் பண்ணியா?"

"பின்ன யாரு பண்ணுவா? அந்த ரூம் பாயா?"

"ஆமாம் . நான் அப்படித்தான் நினைச்சேன்."

"என்னது ரூம் பாயா? அவன் எதுக்கு நம்ம ரூமை டெகரெக்ட் பண்ணணும்?"

"நான் தான் உனக்கு ப்ரொபோஸ் பண்ணலாம்னு டெரஸ டெகரேட்  பண்ண சொன்னேன்.

அவன் தான் ரூம் டெகரேஷன் நல்லா இருக்கும்னு சொன்னான். நான் தான் டெரஸயே டெகரேட் பண்ண சொன்னேன். ஒரு வேல மாத்தி ரூமை டெகரேட் பண்ணிட்டான்னு நினைச்சு தான் நான் வந்தேன். எனக்கு என்ன தெரியும் நீ என்ன ப்ரொபோஸ் பண்ணுவன்னு"

"ஃப்ராடு. நான் உன்கிட்ட சொல்லிடு தானே போனேன். இன்னைக்கு ப்ரபோஸ் பண்ண போறேன்னு."

"எப்ப சொன்னா?" நான் திருதிருவென முழித்தேன்.

" நீ தூங்குற மாதிரி நடிச்சுட்டு இருந்தீயே அப்போ. இன்னைக்கு என்னோட காதல உன்கிட்ட சொல்ல போறேன்னு சொன்னேன்ல."

"அப்போ நான் தூங்கிட்டு இருந்திருப்பேன்."

"நானும் தூங்குறேன்னு நினைச்சு தான் உன்கிட்ட தான் வந்தேன். ஆனா நீ அந்த ஏசிலயும் வேர்த்து விறுவிறுத்து உனக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு எடுக்கவுமே புரிஞ்சுகிட்டேன். மேடம் தூங்காம நடிச்சுட்டு இருக்கீங்கன்னு. அதான் உனக்கு ப்ரபோஸ் பண்ண போறேன்னு உன்கிட்ட சொல்லிட்டு வந்தேன்."

"நா நீ சுவேதாவை லவ் பண்ணத பற்றி சொல்லப் போறன்னு நெனச்சேன்."

"நான் சொல்லும்போது அதுதான் நினைச்சியா?" என கேட்க தலையை இல்லை என ஆட்டினேன்.

"உங்க சண்டைல முடிஞ்சிட்டுனா. நான் சிஸ்டர் கிட்ட ரெண்டு வார்த்த பேசிகிட்டா?" என்றே உள்ளே வந்தார் சஞ்சய் அண்ணா.

"வாங்க அண்ணா"

"இப்போ எப்படிம்மா இருக்கு."

"செஸ்ட் ரொம்ப பெய்னா இருக்கு."

"தி, உனக்கு பெயினா இருக்கா, நீ ஏன் என்கிட்ட சொல்லவே இல்ல?" செல்லமாக கடிந்து கொண்டான்.

"நீ எங்க கேட்டா?"

"என்னை எங்க நீ கேட்க விட்ட. கேள்வி கேள்வியா கேட்டு என்ன நோண்டி எடுத்திட்டியே?'

"போதும் போதும் உங்க சண்டையை அப்புறம் வச்சிக்கோங்க. நீ ரெஸ்ட் எடுமா."

"அதி நீ வா. தியா ரெஸ்ட் எடுக்கட்டும்."

" நீ போடா. நல்லா ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டு வர்றேன்."

"அதான் நான் சொல்லிட்டேன்ல . நீ வா."

"நீ போடா. நான் வர்றேன்." என வெளியே அவரை அனுப்பிவிட்டு என் அருகே வந்ததான் ஆதி.

என் கன்னத்தை வருடி  நெற்றியில் முத்தமிட்டு  நகர்ந்தான்  மீண்டும் திரும்பி நான் என்னவென்று பார்ப்பதற்குள் என் உதட்டில் அழுந்த இதழ் பதித்து,

" ரெஸ்ட் எடு." என ஓடிவிட்டான். நான் சிரித்துக்கொண்டே தன்  நிம்மதியை அசைபோட்டு வலியையும் மறந்து நித்திரையில் லயித்தேன்.

நானும் அத்தையும் கூடத்தில் அமர்ந்து இருப்பதே எனக்கு பழச்சாறு பிளந்து கொண்டிருந்தான்.

"டேய்  எப்படா நீ ஆபிஸ் வருவ. உன்னால நான் திரும்ப ஆபீஸ் போக வேண்டியதா இருக்கு."

"அப்பா என்னப்பா இப்பதான் எனக்கு புதுசா கல்யாணம் இருக்கு. என் வைப்க்கு வேற உடம்புக்கு முடியல. அதுக்குள்ள என்ன ஆபீஸ் போக சொல்ற."

"ஏங்க இப்பதான் கொஞ்ச கொஞ்சமா தியா சரியாகுறா.கொஞ்ச நாள் ஆகும். ஒரு மாசம் கழிச்சு தான் வருவான்.. அதுவரை நீங்க பாருங்க."

"என்ன ஒரு மாசமா... அதெல்லாம் பத்தாதுமா... அட்லீஸ்ட் ஒரு ஆறு....

"டேய் ஆறு மாசம்லா என்னால போக முடியாது..."

"ப்பா உங்க கிட்ட இப்ப யாரு ஆறு மாசம்னு சொன்னது. உங்க பிஸ்னஸையும் சேர்த்து நான் தானே மூணு வருஷமா பார்த்தேன். இப்போ என்னோட பிஸ்னஸையும் சேர்த்து ஆறு வருஷத்துக்கு நீங்க பாருங்க."

" என்ன ஆறு வருஷமாமாஆஆஆஆ?"

"என்ன ஆறு வருசமாமாஆஆஆ அவ்வளவு ஷாக். ஜஸ்ட் ஆறு வருஷம் தான்."

"ஆறு வருஷம் நீ என்ன பண்ண போற."

"என்னப்பா இப்படி கேட்டுட்ட. எப்படியும்  தி யோட உடம்பு சரியாக ஒரு மாசமாவது ஆகும்.

அதுக்கப்புறம் ஒரு மாசம் நாங்க ஹனிமூன்க்கு சுவிஸ் போயிருவோம்.

எப்படியாவது வரும்போது  என்னோட தி பிரக்னண்டா இருப்பா.

பிரக்னன்ட் வைஃபை வீட்டில விட்டுட்டு எப்படிப்பா என்னால நிம்மதியா ஆபீஸ்ல வொர்க் பண்ண முடியும். அதான் பக்கத்தில இருந்து என் பேபி வெளிவரவிருக்கும் தி ய  பாத்துக்கணும்."

"அதான் பேபி 10 மாசத்துல பெ வந்திருமேடா."

"பேபி வெளிய வந்துரும் பா.

உனக்கு ஞாபகம் இருக்கா நீ ஒரு தடவை சொன்னா நான்  ஆபீஸ் ஆபிஸ்ன்னு போயிட்டு நீ நடக்கிறத பேசுறத தவழ்றத பார்க்கவே முடியலன்னு பீல் பண்ணுன தானே.

நானும் அப்படி பீல் பண்ணனும் நினைக்கிறீங்களா. அதான் ஒரு அஞ்சு வருஷத்துக்கு என் பேபியோட ஒவ்வொரு வளர்ச்சியையும் அதோட அழகையும் இரசிக்கப்போறேன்.

அப்புறம் என் பேபிய ஸ்கூல்ல சேர்த்துவிட்டுருவேன்."

"குழந்தை ஸ்கூலுக்கு போனதுக்கப்புறம் ஆகுது ஆபீஸ் வருவியா?"

"சின்ன குழந்தை ப்பா ஸ்கூல்ல சேர்த்து விட்டா அழுவா. அதனால என்னோட பேபி ஸ்கூல்ல கம்ஃபர்டபிளா ப ஃபீல் பண்ணும்போது நானும் ஆபிஸ் வேலை பத்தி யோசிக்கிறேன்.

என் பேபி ஸ்கூலுக்கு போகும் போது நான் பேபிய ஸ்கூல்ல விட்டுட்டு ஆபீஸ் வந்திருவேன்.

ஸ்கூல் விடும் போது ஆபீஸ்ல இருந்து ஸ்கூல்ல போய் பிக்கப் பண்ணிட்டு நானும் வீட்டுக்கு வந்து விடுவேன். அது வரைக்கும் நீங்க தான் கொஞ்சம் கொஞ்ச நாள் பார்த்துக்கணும்."

"டேய் இந்த பிளான் கொஞ்சம் ஓவரா இருக்குடா. நீ சொல்றத பாத்தா ஆறு வருஷத்துக்கு அப்புறமும் நீ ஆபிஸ்க்கு வருவங்குற நம்பிக்கை எனக்கு இல்லை."

"தெரிஞ்சா சரி..." என ஆதியின் முணுமுணுப்பு என் காதில் தெளிவாக விழுந்தது.

அத்தையும் மாமாவும் ஆதித்யாவை முறைக்க அவன் என்னை பார்த்து கண்ணடித்துவிட்டு அவன் கைகளில் ஏந்திக் கொண்டான்.

"ஆதி என்ன பண்ற.  அத்தை மாமா எல்லாம் இருக்காங்க."

"அவங்க எல்லாம் நீ கண்டுக்காத. அப்பாவுக்கு அம்மா கூட ரொமான்ஸ் பண்ண முடியலன்னு பொறாமை. வா நாம போகலாம்." எனக் கூற நானோ‌ சங்கடமாக அவர்களை பார்த்தேன்.

அத்தையும் மாமாவும் அங்கு எதுவும் நடவாதது போல் எழுந்து  எங்களுக்கு தனிமையே கொடுத்து அவர்கள் அறையை நோக்கி செல்ல, என் முகம் குங்குமமாய் சிவந்தது.

என் கைகள் தானாக ஆதியின் கழுத்தில் மாலை கோர்க்க, அவன் நெஞ்சில் சாய்ந்து அவன் இதயத்துடிப்பை கேட்டேன்.

"என்னை இறக்கி விட்டா நானே வந்துடுவேன்.  அத்தை மாமா ஏதாவது நினைச்சுருப்பாங்க."

"அவங்க எதுவும் நினைக்க மாட்டாங்க. நீ நடந்தாலே நெஞ்சு வலிக்குது ன்னு சொல்ற. அப்ப எப்படி மாடி ஏறுவ.

நான் தானே உன்னைக் கீழே தூக்கிட்டு வந்தேன். நானே உன்ன மேல தூக்கிட்டு போறேன். அப்பத்தான் சீக்கிரம்  ரெக்கவர் ஆவ. நம்ம பேமிலி பிளானிங்கும்  ஸ்டார்ட் ஆகும்."

"ஆதி நீ இவ்வளவு நேரம் சொன்னதெல்லாம் சும்மா தானே?"

"தி, என்ன சொல்ற நீ. நான் சீரியஸா சொல்லிக்கிட்டு இருக்கேன். நீ சும்மாவா ன்னு கேக்குற. உன்னை நம்பி நான் எவ்வளவு பிளான் போட்டு வச்சுருக்கேன்‌."

"நிஜமாவே ஆபீஸ் போக மாட்டியா?"

"இப்போதைக்கு  போற ஐடியா இல்ல. நீ இப்படியே இருந்தா சரியா வராது . சீக்கிரம் லைஃப்ப ஸ்டார்ட் பண்ணனும். இல்லாட்டி  அப்பா என்னை ஆபீஸ்ல தள்ளி கதவைப் பூட்டிடுவார்."

" ஏன் இவ்வளவு ..." என நான் பேச ஆரம்பிக்கும் போதே என் இதழை முற்றுகையிட்டான்.

திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்த  என்னை அவன் மீது காதல் கொள்ள வைத்து, திகட்ட திகட்ட காதலையும் கொடுக்கின்றான்.

எத்தனையோ பிரச்சினைகள் எங்களுக்கு இடையே வந்திருந்தாலும் இனி என்னுடைய வாழ்வில் வரும் எல்லா பிரச்சினைகளும் ஆதியை தாண்டித்தான் என்னை தீண்டும் என்பதையும் உணர்த்திவிட்டான், என் ஆதி.

விருப்பம் இல்லாத ஒரு உறவில் உதயமாகி இப்பொழுது அவன் உயிரில் உருகிக் கொண்டிருக்கிறேன்.

இனி எல்லாம் ஆதி பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். நன்றி. இப்படிக்கு ஆதியின் தியா... ஆதித்யா...

வணக்கம் நட்பூக்களே🌷🌷🌷

இந்தக்கதையை கடைசிவரை படித்ததற்கு நன்றி. இந்த கதையில் முழுக்க முழுக்க ஒரு பெண்ணின் திருமணத்தைப் பற்றிய எண்ணங்களையும் அவளின் மன நிலையையும் அவளுக்கும் உண்டாகும் குழப்பங்களையும் எப்படி புதிய சூழ்நிலைகளை கையாளுகிறாள் என்பதை பற்றி எழுதுவதையே நோக்கமாக கொண்டிருந்தேன். அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றேன் என நினைக்கிறேன்.

முழுக்க முழுக்க தியாவின் மனநிலையிலிருந்து அவளின் திருமணத்தின் மீதான வெறுப்பில் இருந்து அவளுக்கு காதல் மலர்ந்தது  வரை உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் என்ற கதையை முடித்து இருக்கிறேன்.  உங்கள் விமர்சனங்கள் என் எழுத்துக்களை நீங்களும் மெருகூட்ட உதவும். எனவே படித்து பார்த்து உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் என் எழுத்துலக பயணத்திற்கு உதவியாக இருக்கும்.

சரண்யாவிற்கு கதை இருக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு பதில் ஆம்.இருக்கிறது . ஆனால் தியாவின் எண்ண ஓட்டத்தில் இல்லை. தனி கதையாக வரும்.

குணா சுந்தரி சிஸ்டருக்கு மிக்க மிக்க நன்றி... எல்லா பதிவிலும் கமெண்ட் செய்து இருந்தார். எப்படி ரிப்ளை செய்வது என தெரியாத காரணத்தினால் செய்யவில்லை. கதையின் கடைசி வரை பயணித்த அனைவருக்கும் நன்றி.

என்றும் அன்புடன்,

சல்மா அம்ஜத் கான்

உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் -19
உதயம் 💏 19 💏

குளித்து விட்டு வெளியே வந்து கட்டிலில் இருந்த பரிசை பிரிக்க, அதிலிருந்த ட்ரெசை பார்த்ததும் எனக்கு கண்களிலிருந்து நிற்காமல் கண்ணீரை வந்தது.

வாய் மட்டும் இடியட் இடியட் இடியட் என முணுமுணுத்தது‌.

எப்படி எனக்கு இந்த ட்ரஸ் பிடிக்கும்னு தெரிஞ்சது. அன்னைக்கு டிரஸ் கடைல கூட ஆதித்யா இல்லையே என அந்த கருப்பு நிற சேலையை தடவிப் பார்த்தேன்.

ஒருவேளை எதார்த்தமாக இந்த சேலையை எடுத்து இருப்பானோ?

எதுவாக இருந்தால் என்ன.ஆதி எனக்கு பிடித்த கறுப்பு நிறத்தை எடுத்துக் குடுத்திருக்கிறான். அதுவும் முதன்முதலாக.

தங்க நிற பார்டர் வெள்ளை நிறக் கற்களை கொண்ட அந்த கருப்பு நிற சேலை எனக்கு அமைப்பாகவே இருந்தது.

வாழ்க்கையில் முதல்முறையாக கருப்பு நிறத்தில் அணிகிறேன்.

சேலையுடன் சில நகைகளும் இருக்க அதையும் அணிந்துகொண்டேன்.

அப்பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்டது.

" யாரு?"

" நான்தான் தி. ரெடி ஆயிட்டியா? ஸ்டோரை ஓபன் பண்ணவா வா?"

"முடிஞ்சது. உள்ள வா ஆதி."

உள்ளே நுழைந்தவன் என்னைப் பார்த்ததும் சிலையானான். அவனின் பார்வை வீச்சு தாங்காமல் நான் குனிந்து கொண்டேன்.கன்னங்கள் எல்லாம் சூடு ஏறியது.

வெட்கம் பிடுங்கித் தின்ன திரும்பிக்கொண்டேன்.

என் பின்னால் வந்தவன் என் கூந்தலை முன்புறம் ஒதுக்கி அவன் கையில் வைத்திருந்த நெக்லஸை மாட்டு விட்டான்.

"செம அழகா இருக்க."

என் காதில் கிசுகிசுத்தான்.அவன் உதடுகள் என் காதை உரச, அவன் மீசை என் கன்னத்தின் குறுகுறுத்தது.

மெதுவாக அவனிடமிருந்து விலக முயற்சித்தேன். ஆனால் என்னை நகரவிடாமல் பின்னாலிருந்து அணைத்தவன் என் தோளில் அவன் நாடியை வைத்து கண்ணாடியை காட்டினான்.

"அழகுதான். ஆனா என் அளவுக்கு இல்ல.  நெக்ஸ்ட் இன்னும் கொஞ்சம் மேக்கப் போட்டுக்கோ."  என்று சொல்லி சிரித்தான்.

நான் திரும்பி நின்று அவனை முறைத்தேன்.

"உடனே கோபம் வந்ததுமே." என்றவாறு மூக்கை பிடித்து ஆட்டி விட்டான்.

"கொஞ்ச நேரம். நானும் ரெடி ஆயிட்டு வந்திர்றேன்." என குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

குளியலறையிலிருந்து வெளியே வந்தவனை பார்த்து சிலையாக நிற்பது இப்பொழுது என் முறையானது.

வயிட் சர்ட் பிளாக் கோட் சூட் என அம்சமாக இருந்தான். அவனையே பார்த்துக்கொண்டு இருந்தேன்.

" இன்னும் எவ்வளவு நேரம்  என்னையே சைட் அடிப்ப. இப்போவே டைம் ஆச்சு சீக்கிரம் வா."

"நான் எதுக்கு உன்ன சைட் அடிக்க போறேன். எனக்கு என்ன கண்ணு இல்லயா."  சொல்லிவிட்டு அவன் பின்னே சென்றேன்.

அந்த ஐந்து நட்சத்திர விடுதியில்  பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மதுவின் நெடி  ரூம் ஸ்ப்ரேயுடன் கலந்து மூக்கில் நிறைந்தது.

அங்குள்ள பெண்களின் ஆடை அவர்களின் சிக்கனத்தை காட்ட, நான் ஆதியை நெருங்கி நின்றேன்.

ஆதித்யா அவன் கையில் என் கையை கோர்க்க கையை நீட்ட நானோ அவன் கையை தட்டி விட்டு நகர்ந்து நின்றேன்.

தோளை குலுக்கிக்கொண்டு அவன் முன்னே செல்ல நான் அவன் பின்னே சென்றேன்.

உள்ளே நுழைந்தால் எல்லோரையும் ஒரு பார்வை பார்க்க, கடைசியில் அவன் பார்வை ஒரு இடத்தில் நிலைகுத்தி நின்றது.

நானும் அவன் பார்வை செல்லும் திசையை நோக்க அங்கே தங்கப்பதுமையாய் அழகே உருவாய் ஒரு பெண் நின்றிருந்தாள்.

சிவப்பு நிற சில்க் சாரி கையில்லா பிளவுஸுடன்.எனக்கு சற்று பொறாமையாக இருந்தது.

ஆதி அந்த பெண்ணையே பார்த்துக் கொண்டிருக்க,நான் அவனை முறைத்துக் கொண்டிருந்தேன்.

எவ்வளவு தைரியம் இருந்தால் நான் இருக்கும் போதே வேறொரு பெண்ணை பார்ப்பான்.

அவனை உலுக்க அவன் என்ன என்னை கண்டு கொண்டதாக தெரியவில்லை. அவன் வாய் ஸ்வே என முணுமுணுத்தது.

அவனின் ஸ்வே என்ற முணுமுணுப்பு என் காதில் தெளிவாக விழ எனக்கு உலகம் சுழல்வது நின்று விட்டதைப் போல் தோன்றியது.

நான் டக்கென திரும்பி அந்த பெண்ணை பார்த்தேன். உள்ளுக்குள் ஏதோ பயப்பந்து உருளுவதை என்னால் உணர முடிந்தது.

"ஹலோ,மிஸ்டர். ஆதித்யா குமார்.உங்களுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். கம்." எங்கிருந்தோ வந்த ஒருவன் எங்களை அந்த பெண்ணை நோக்கி அழைத்துச் செல்ல ஆதியும் பார்த்துக்கொண்டே சென்றான்.

வேறு வழியின்றி நானும் ஆதித்யாவை பின் தொடர்ந்தாலும் என் பார்வையும் அந்தப் பெண்ணிடத்தில் இருந்தது.

அந்த மனிதன் எங்களை அந்தப் பெண்ணிடமே அழைத்துச் சென்றவன்,

"மிஸ்டர் ஆதித்யா குமார்.  மீட் மை ஒய்ப் மெசேஜ் ஸ்வேதா ஜெயராமன்."

நான் சந்தேகப்பட்டது உறுதியாகிவிட்டது. இவள்தான் ஸ்வேதா. ஆதியின் முன்னாள் காதலியாக இருந்திருக்க வேண்டும்.

ஆனால் அவள் தான் இறந்து விட்டால் என சஞ்சய் அண்ணாவின் அம்மா கூறியது நினைவில் வந்தது. அப்போது எப்படி இவள் இங்கே என குழம்பிக் கொண்டிருந்தேன்.

"எஸ்கியூஸ் மீ" என்ற ஆதி அங்கிருந்து நகர்ந்தான். அங்கு மது பாட்டில்கள்அடுக்கி வைக்கப்பட்டிருந்த  இடத்திற்கு சென்றான்.

அங்கிருந்த ஒரு ஆசாமி கிளாசில் ஏதோ ஊற்றி கொடுக்க ஒரே மடக்கில் முழுவதையும் குடித்து முடித்தான். நான் ஆதியையே பார்த்துக் கொண்டிருக்க அந்தப் பெண் என்னிடம் பேச ஆரம்பித்தாள்.

"யார் நீ?"

நான் அவளைப் பார்த்து விட்டு எங்களை அவளிடம் அழைத்து வந்த அந்த ஆளை தேடினேன். ஆனால் அவனோ அங்கு இருந்ததற்கான அடையாளம் இல்லை.

"நான் ஆதித்யா வைஃப்."

என்னை பார்த்து நக்கலா சிரித்தவள்,

" நான் யாருன்னு தெரியுமா? ஆதி யோட கேர்ள் ஃப்ரெண்ட்."

"அந்த பொண்ணு செத்துட்டா தா சொன்னாங்க."

"ஆமாம் நான் தான் அப்படி சொல்ல சொன்னேன்."

"எதுக்கு?"

"அதை தெரிஞ்சு நீ என்ன பண்ண போற"

"நான் எதுவும் பண்ண போறதில்லை.செத்தவ செந்தவலாவே இரு.எங்க லைஃப்ல வர்ற நினைக்காத. ஆதி என் ஹஸ்பன்ட். என்னோட ஹஸ்பண்ட் கிட்ட இருந்து தள்ளியே இரு."

என அவளிடம் இருந்து விலக முயற்சித்தேன்.

நான் தள்ளி இருந்தாலும் உன்னோட "ஹஸ்பண்ட் என்னை விட்டு தள்ளி இருக்க மாட்டான். ஏன்னா அவன் என்ன அவ்வளவு காதலிக்கிறான்.ஆதித்யாவ என் கிட்ட இருந்து உன்னால பிரிக்க முடியாது."

"மைன்ட் யுவர் வேர்ட்ஸ் மிஸஸ். ஜெயராமன். ஆதித்யா என்னோட புருசன்.எனக்கு மட்டும் சொந்தமானவன்.  உனக்கு மேரேஜ் ஆயிடுச்சு. அத ஞாபகத்துல வச்சிக்கோ.

ஆதித்யா மனசுல இப்போ நான் தான் இருக்கேன். நான் மட்டும்தான் இருக்கேன். புரிஞ்சுதா?" என்ன அவளே புரியவைக்க முயற்சி செய்தேன்.

"அதையும்தான் பார்க்கலாமே. நானா உன் புருஷன் கிட்ட போக மாட்டேன். உன் புருஷன் என்கிட்ட வந்தா விடவும் மாட்டேன்." எனக்கே சவால் விட்டவள் என்னிடமிருந்து விலகி சென்றாள்.

நான் ஆதியிடம் சென்று அவனின்  கையை பிடித்து அவனை அங்கிருந்து அழைத்து வந்தேன்.

"ஆதி என்ன பண்ற. போதும் நீ குடிச்சது."

அவன் என் பேச்சை கவனிக்காமல் கண்களால் அந்த இடத்தை துலாவினான்.

அதேபோல் அவனின் பார்வை ஸ்வேதாவின் மீது பட்டதும் மெதுவாக அவன் மீது போட்டிருந்த என் கையை நீக்கிவிட்டு ஸ்வேதாவிடம் சென்றான்.

என்னை விலக்கிவிட்டு ஸ்வேதாவை நாடி சென்றது என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

எனக்குத்தான் தெரியுமே ஆதித்யா ஸ்வேதாவை எவ்வளவு காதலித்தான் என்று.

இறந்து போனவளாய் இருந்தவள்  எப்படி திடீரென வந்தாள் என தெரியவில்லை. ஆனால் எங்கே என் ஆதித்யாவை என்னிடமிருந்து பிரித்து விடுவாளோ என்ற பயம் எனக்குள் இருந்தது.

ஆதித்யா ஸ்வேதாவின் அருகில் சென்றதும் அவனை கண்டுக்காமல் என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றாள்.

ஆனால் ஆதித்யா அவளை விடுவதாக இல்லை. அவள் பின்னேயே சுற்றிக் கொண்டிருந்தான்.

ஒரு கட்டத்தில் அவளின் கையை பிடித்து அவன் அருகில் இழுக்க அவன் மேலேயே மோதி நின்றாள்.

ஸ்வேதா ஆதியின் நெருக்கம் என்னுள் சொல்ல முடியா உணர்வுகளை ஏற்படுத்தியது.

மனம் வலித்தது. இந்த உலகம் இந்த நிமிடமே நின்று விடக்கூடாதா என்ற அளவிற்கு ஏக்கம் பிறந்தது. வந்த கண்ணீரை அடக்கிக்கொண்டேன்.

ஆதித்யாவும் ஸ்வேதாவும் நெருங்கி நிற்க ஸ்வேதாவின் இடது கை அவனின் இடுப்பை வளைத்து, அவள் வலது கையால் ஆதித்யாவின் கன்னங்களை  வருடினாள்.

கையை மெதுவாக கீழிறக்க அவனின் மார்புகளில் ஆரம்பித்த கோலத்தை அவனுடைய நடு வயிற்றுப் பகுதியில் நிறுத்தி ஓரக்கண்ணால் என்னை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தாள்.

அதிலேயே உடைந்துவிட்டேன். என் இதயம் சுக்கு நூறாகி விட்டது.என் ஆதித்யா எனக்கு இல்லை.

இவ்வளவு நடந்தும் ஆதித்யா அவளை தன் நெருக்கத்திலேயே வைத்திருந்தான். அவளின் கண்களை அவன் கண்களால் விழுங்கிக் கொண்டிருந்தான்.

எனக்கே கேட்காத உடைந்த குரலில் ஆதி என முனங்கினேன். அதற்கு மேல் நிற்க முடியாமல் சற்று கீழே அமர்ந்து. கண்ணீர் என் கன்னங்களை வருடி சென்றது.

அருகில் இருந்த ஒருவன் என் தோளை தொட அவனிடமிருந்து வந்த மதுவின் வாடையில் அவனிடமிருந்து விலகி அந்த இடத்திலிருந்து ஓடினேன்.

வழிந்த கண்ணீரை துடைக்க மனமில்லாமல்  டாக்ஸியில் ஏறி நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்தேன்.

ஹோட்டலில் நாங்கள் தங்கியிருந்த அறைக்கு வந்தபோது  அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தது.

அந்த ரூம் பாய் நான் சொன்னதை கேளாமல் மீண்டும் அறையை அலங்கரித்து வைத்து விட்டான்.

எனக்கு வந்த கோபத்தில் என் இயலாமை தனத்தை அந்த அலங்காரங்கள் மீது காட்டினேன்.

எல்லா அலங்காரத்தையும் கலைத்து விட்டு மடிந்து அமர்ந்து அழுதேன்.

என்னை ஆறுதல் படுத்த கூட யாரும் இல்லாமல் தனியாக இருந்தேன்.

என் ஆதி என்னை விட்டு சென்று விட்டான் என்று நினைக்கும் பொழுது என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அவன் கை என் கையை விலக்கிவிட்டு சுவேதாவின் நெருக்கத்தில் இருந்தது திரும்பத் திரும்ப என் கண்முன் வந்து சென்றது.

கண்கள் கலங்க அமர்ந்திருந்தேன். என்னால் என்ன செய்வது என்று தெரியவில்லை. கண்ணாடியில் என்னை பார்த்தேன்.

அழகுதான் ஆனா என்னை விட கொஞ்சம் கம்மிதான் என்று அவன் சிறிது நேரத்திற்கு முன் என் தோளில் நாடியை புதைத்துக்கொண்டது கண்ணாடியில் நிழலாக தோன்றியது.

மீண்டும் அழுக நான் அணிந்திருந்த கருப்பு நிற சேலையை கண்ணாடியில் பார்த்தேன்.

பாட்டி சொன்னது நினைவு வந்து தாக்கியது.

"என்னடி இது அபசகுனமா? கல்யாணத்துக்குப் புடவை எடுக்க வந்தா, கருப்பு கலர் எடுத்து  மேல் வைச்சுக்கிட்டிருக்க."

"கொஞ்சமாவது அறிவு இருக்கா. முத முதல கல்யாணத்துக்காக புடவை எடுக்க வந்தா. இப்படி அபசகுணமா பண்ணிக்கிட்டு இருக்க. வா வந்து என் கூட நில்லு."

உண்மையிலேயே கருப்பு நிறம் அபசகுணமாக என்னுள் தோன்றியது.

வேகவேகமாக என்னை சுற்றி இருந்த அந்த சேலையை கழட்டி தூக்கி எறிந்தேன். சேலையின்றி சட்டையுடனும் பாவாடையுடனும் நின்று வந்து அழுதேன். என் கண்ணீர் வற்றும் வரை அழுது கொண்டிருந்தேன்.

இதற்கு மேல் ஆதித்யாவை எதிர்கொள்ளும் சக்தி எனக்கு இல்லை. துணியை எடுத்துக் கொண்டு குளியல் அறையில் புகுந்து வேறு உடைக்கு மாறி விட்டு வெளியேறினேன்.

எங்கு செல்ல என்று தெரியவில்லை. என் பெற்றோர்களிடம் சென்றால் அவர்களிடம் என்ன சொல்வது. அத்தை மாமாவிடம் சொன்னால் அவர்களிடம் எப்படி சொல்வது.

ஆதி அவனுடைய முன்னாள் காதலுடன் சேர்ந்து விட்டாள் என்று.

வந்த கண்ணீரை அடக்க வழி இன்றி கால்கள் சென்ற வழியில் சென்றேன்.

கையில் அலைபேசி கூட இல்லை.

"தியா..." என்ற குரல் கேட்க உணர்வுகள் இன்றி திரும்பி நின்றேன்.

ஆறடி உயரத்தில் ஒருவன் நின்றிருந்தான். நான் அவனை யாரென்று புரியாத கேள்வியுடன் பார்க்க அவனை பார்த்தேன்.

என்னை அவன் நெருங்க என் மூக்கை தொட, என் நினைவுகள் என்னைவிட்டு செல்வதையும் நான் அவன் மேலேயே சரிந்ததையும் உணர்ந்தேன்‌.

நான் கண் விழிக்கும் பொழுது என் எதிரே ஸ்வேதா அமர்ந்திருந்தாள்.

அதே சிவப்பு நிற சில்க் சாரியில் ஸ்வேதா நின்றிருந்தாள். கண்களை கசக்கி விட்டு மீண்டும் பார்த்தேன். ஸ்வேதாவே தான். சுற்றி முற்றிப் பார்த்தேன்.

அந்த இடம் ஏதோ ஹோட்டலில் அறை போல் இருந்தது.

என் கைகால்கள் கட்டியிருக்க நான் அதைக் கழற்ற முயற்சி செய்து கொண்டிருந்தேன்.

"உன்னால முடியாது தியா."

"உனக்கு என்ன வேணும். ஏன் இப்படி எல்லாம் பண்ற.எதுக்கு என்னை இங்க கூட்டிட்டு வந்த?"

"வெயிட் பண்ணு. வெயிட் பண்ணு. இப்படியே மொத்தமா எல்லாம்  கேட்டா நான் என்ன பண்றது?

ஒன்னொன்னா சொல்றேன். எனக்கு ஆதி வேணும். எனக்கு மட்டும் முழுசா வேணும்."

"என்னோட புருசனை கேக்குறியே. உனக்கு வெக்கமா இல்ல."

"நான் எதுக்கு வெட்கப்படனும் ஆதி என்னைதான் காதலிச்சான்."

"நீதான் செத்துப் போயிட்டதா சொன்னாங்க.எப்படி திரும்ப உயிரோட வந்த. ஆதி வேணும்னு சொல்றவ இவ்வளவு நாள் எங்கே போயிருந்தாய் எதுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணுன"

"நான் என்ன பண்ணட்டும் .எனக்கு மட்டும் என்ன செத்துப்போயிட்டேன்னு சொல்ல ஆசையா?

லோயர் மிடில் கிளாஸ் ஃபேமிலில பிறந்தது என் தப்பு இல்லயே.

அப்பப்போ பாக்கெட் மணிக்காக நாலஞ்சு பசங்க லவ் பண்ணனுனேன். அதுல ஆதியும் ஒருத்தன்.

ஆனா ஆதி இவ்வளவு பணக்காரனா இருப்பான்னு எனக்கு தெரியாது. அதனால அவளோட சொத்தை அடைய   அவன் கூட  க்ளோசா பழகினேன்.

ஆனா அந்த லூசு என்னன்னா எனக்கு பணம் வேணாம் சொத்து வேணாம் ஸ்வேதா மட்டும் போதும்னு அவங்க அப்பாகிட்ட வீரவசனம் பேசிட்டு வந்துட்டான்.

அதுக்கப்புறம் அவன வச்சுட்டு நான் என்ன பண்ண முடியும்.

எனக்கு ஆதிய பத்தி நல்லா தெரியும். அவனுக்கு ஒரு விஷயம் வேணும்னா கண்டிப்பா வேணும்.

வேணாம்னா அதை அவன் மேல திணிக்க முடியாது.

அவன சமாளிச்சு திரும்ப அவன் அப்பா கிட்ட இருந்து சொத்தை வாங்குவது கஷ்டம். அதுக்கு மேல என்னோட அண்ணே ஆதியோட அப்பா கிட்ட என்னை பத்தின எல்லா உண்மையும் சொல்லிட்டான். இதுக்கு அப்புறம் என்ன கல்யாணம் பண்ணி வப்பாருங்குற.

நான் அவள காதலிச்சதே அவனோட சொத்துகாக தான். அதுவே இல்லாதப்போ அவனுடைய இருந்து என்னை வேலைக்கு போயி கொடுக்க போற நாற்பதாயிரம் ஐம்பதாயிரம்க்கு என்னால குடும்பம் நடத்த முடியாது.

அதான் அவனை கழட்டிவிட அந்த ஆக்சிடெண்ட்ட யூஸ் பண்ணிக்கிட்டேன்."

"உன் வீட்ல கூட நீ செத்துட்டதா மாலை போட்டு இருந்தாங்க."

"அவங்களுக்கு வேற வேலை இல்ல. குடும்பம் மானம் மரியாதை கற்புன்னு டயலாக் பேசிட்டு இருப்பாங்க. அதுல என்னோட அண்ணனும் சேர்த்தி.

அதான் அன்னைக்கு பார்க்ல ஆதி அடிக்கும்போது நல்ல அடி வாங்கட்டும்னு வேடிக்கை பார்த்தேன்.

அதுக்கப்புறம் போலீஸ் வரத பாத்துட்டுதான் காப்பாற்ற மாதிரி நடிக்க வேண்டியதா போச்சு."

"கூட பிறந்த அண்ணன் அடி வாங்குறதையே ரசிச்சிருக்கயே."

"வேற என்ன பண்ணனும்.  அவனுக்காவது தங்கச்சிக்காக சம்பாதிக்க துப்பு இருக்கணும். அதுவும் இல்லைங்கும் போது என்னை என் வழியில் விடணும்.

அத விட்டுட்டு எத்தனை பையன் கூட பேசுவ. லவ் பண்ணுவன்னு  கேட்குறான்.அதான் ஆதி அடிச்சுகிட்டு இருக்கும்போது வாங்கட்டும்னு விட்டுட்டேன்."

"நான் கூட ஆதியோட காதலை பார்த்து உங்க ரெண்டு பேரோட காதலை பார்த்து, வாழ்ந்தா உங்கள மாதிரி வாழனும் னு நினைச்சேன். ஆனால் நிச்சயமாக நான் நினைச்சு கூட பாக்கல நீ இருப்பன்னு. ச்சீஈ நீஎல்லாம் ஒரு பொண்ணா?"

"இதெல்லாம் ரொம்ப வாட்டி கேட்டாச்சு. நான் பொண்ணா பையனான்னு நீ தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமில்லை.

எனக்கு ஆதித்யா வேணும் அவ்வளவு தான்."

"அவன் நீ பணத்துக்காகத்தானே  லவ் பண்ண. இப்ப தான் உனக்கு அந்த பணம் இருக்குல. அப்புறம் எதுக்கு ஆதித்யாவ கேக்குற."

"அப்ப எனக்கு பணம் தேவை பட்டது. இப்ப அது என்கிட்ட நிறைய இருக்கு. ஏன்னா ஜெயராமனோட மொத்த சொத்தும் இப்ப என் பேர்ல தான் இருக்கு.

அதனால இப்போ எனக்கு ஆதித்யா வேணும். அவனோட காதல் வேணும்.அவன மாதிரி யாராலும் என்னை காதலிக்க முடியாது.

நானே திரும்ப ஆதித்யாவை சந்திக்க நினைச்சேன்.

ஆனா விதி எங்களை சேத்து வச்சுருச்சு. ஆனா எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நீ இருக்க. அதனாலதான் உன்னை இப்போ கொலை பண்ண போறேன்."

"நீ என்ன பைத்தியமா? நீ என்னை கொன்னா மட்டும்  ஆதித்யா உன்கூட சேர்ந்து வாழ்வான்னு  நினைக்கிறியா? உன்னை பத்தி தெரிஞ்சா உன் பக்கம் கூட திரும்பி பார்க்க மாட்டான்."

"இப்பவும் ஆதித்யா மனசுல நான் தான் இருக்கேன். நீ மட்டும் இல்லாம இருந்திருந்தா இந்நேரம் ஆதித்யா கூட அவன் ரூம்ல நான் இருந்திருப்பேன்."

எவ்வளவு தைரியம் இருந்தால் என்னுடைய ஆதித்யாவை பற்றி இப்படி பேசியிருப்பாள்.

அவள் ஆதித்யாவை உண்மையிலே காதலித்திருந்தால் என்னுடைய ஆதிக்காக விட்டுக் கொடுத்து இருப்பேன்.

ஆனால் இப்படிப்பட்ட ஒருத்தியை என்னுடைய ஆதித்யா எப்படி காதலித்தான் என்றுதான் தெரியவில்லை. கண்டிப்பாக இவளிடம் ஆதித்யாவை விடமாட்டேன்.

"அது என் உயிர் இருக்கிற வரைக்கும் நடக்காது."

"அதனால தான் உன் உயிரை எடுக்க போறேன்."

"ஸ்வேதா.... ஸ்வேதா..." என கதவு தட்டும் சத்தம் கேட்டது. அது என் ஆதித்யாவின் குரல்.

"ஆதி..."என ஆதிக்கு கேட்டுவிட வேண்டும் என என்னால் முடிந்த மட்டும் கத்தினேன்.

ஆதிக்க என் குரல் கேட்டு இருக்கவேண்டும் கதவை உடைக்க ஆரம்பித்தான்.

ஆதி கதவை உடைத்து உள்ளே வருவதற்கும் ஸ்வேதா என் கழுத்தில் கத்தி வைப்பதற்கும் சரியாக இருந்தது.

"அவள விட்டு அவள ஏதும் பண்ணாத."

"நான் இன்னும் உன்ன தான் லவ் பண்றேன். நாம நம்ம லைஃப்ப அமைச்சுக்கலாம். நமக்கு நடுவுல தி ய கொண்டு வராதா."

"நான் உன்ன நம்பமாட்டேன் ஆதித்யா. ஏன்னா நான்

உன் கண்ணுல இவளுகான காதலை பார்த்தேன்.

இவை இருக்கிற வரைக்கும் நீ என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்ட. இவ செத்துட்டா தான் நாம நிம்மதியா வாழ முடியும்."

என்றவள்  நொடியும் தாமதிக்காமல் என் நெஞ்சில் கத்தியை இறக்கினாள்.

கத்தி என்னுள்ளே இறங்க ஆதித்யாவின் 'தி' என்ற அலறல் மட்டுமே எனக்கு கேட்டது. கண்கள் சொருக மயங்கினேன்.

உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் -18
உதயம் 💏 18 💏

"ஆதித்யா ரொம்ப சுறுசுறுப்பான பையன். குறும்புத்தனம் அதிகமாக இருக்கும். யாரையாவது வம்புக்கு இழுத்துட்டே இருப்பான். எப்பவும் அவன் முகத்தில சிரிப்பு இருந்துட்டே இருக்கும்.அவன் இருக்குற இடமும் கலகலன்னு தான் இருக்கும்.

காலேஜ் முடிந்ததும் அவன் அப்பா அவன ஆபீஸர் பார்த்துக்க சொன்னதுக்கு,

'சாரி பா, லைஃபை அந்த அந்த டைம்ஸ் என்ஜாய் பண்ணனும்னு.

பிசினஸ்ஸ எடுத்துக்கிட்டா அது பின்னாடியே ஓட வேண்டியதாக இருக்கும். கம்பெனியோட லாபம் நஷ்டம் எல்லாத்தையும் ஹாண்டில் பண்ணனும். ஸ்ட்ரெஸ் அதிகமா இருக்கும். அதனால நான் பிசினஸ் பண்ண போறது இல்ல.

அப்புறம் இப்பதான் எக்ஸாம் அரியர் இன்டர்ணல் அப்படின்னு எல்லாத்தையும் முடிச்சுட்டு வந்து இருக்கேன். இப்ப திரும்ப ஆபீஸ் பைல் இதுக்கெல்லாம்  முன்னாடி கொஞ்சம் சந்தோஷமா இருக்கணும்ன்னு நினைக்கிறேன்.

கொஞ்ச நாளாவது லைஃப்ல எந்த விதமான டென்ஷனும் இல்லாம சந்தோசமா அம்மா சமைச்சத சாப்பிட்டு ஊர் சுத்தி எல்லார்கிட்டயும் திட்டு வாங்கிட்டு இருக்கணும்னு ஆசை படுறேன்.

நீங்க என் அம்மாவோட ரொமான்ஸ் பண்ண  ஆபீஸ்ஸ என் தலைல கட்ட  பாக்காதீங்க. அது இந்த ஆதித்யா குமார் கிட்ட நடக்காதுன்னு

லைஃப் நல்லா என்ஜாய் பண்ணிட்டு, அதுக்கப்புறம் ஏதாவது ஒரு நல்ல கம்பெனில ஜாயின் பண்ணி ஜஸ்ட்  என்னால முடிஞ்ச வெளியே பார்க்க போறேன்."அப்படின்னு சொல்லிட்டு சுத்திக்கிட்டு இருந்தான்.

ஏதோ பண்ணிக்கோன்னு விட்டுட்டாங்க பவித்ராவும் விஷ்ணுவும்.

அப்படி ஒருநாள் தியேட்டர்ல ஸ்வேதாவை மீட் பண்ணுனான். பார்த்ததும் காதல்ல விழுந்துட்டான். ஸ்வேதாவும் அப்படித்தான். ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் தங்களோட காதல சொல்லி அவங்க காதல பெருக்க ஆரம்பிச்சிட்டாங்க.

இவங்களும் மொத்த காதலர்கள் மாதிரி  போன் எஸ்எம்எஸ் பார்க் மால் தியேட்டர்ன்னு பேசி பார்த்து  பழக ஆரம்பிச்சாங்க.

ஸ்வேதாவும் ரெண்டு மூணு தடவ ஆதியோட கேரளாக்கு வந்து இருக்கா.

ரொம்ப அன்பா பேசுவா.

இப்படியே இவங்க காதலிச்சு இரண்டு வருசம் ஓடி போய்ருச்சு.

ஒரு நாள் ரெண்டு பேரும் பார்க்கு போய் இருந்தாங்க.

அப்ப ஒருத்தன் வந்து ஸ்வேதாவை கன்னத்தில் அறைஞ்சுட்டான்.

அதைப்பார்த்த ஆதி கோபத்துல  எப்படிடா என்னோட ஸ்வேதா அடிக்கலாம்னு அவன அடி பின்னி எடுத்துட்டான்.

ஸ்வேதா அவங்க இரண்டு பேரையும் தடுத்து ஏதோ சொல்ல பார்த்தா.

அதுக்குள்ள அங்க ரவுண்ட்ஸ்ல இருந்த போலீஸ் அவங்க மூணு பேரையும் ஸ்டேசன்க்கு கூட்டிட்டு போய் விசாரிச்சாங்க.

அதுக்கப்புறம் தான் தெரிஞ்சது அந்த பையன் ஸ்வேதாவோட அண்ணன்னு.

அதுக்கப்புறம் ஆதித்யா நிலைமைய புரிஞ்சுக்கிட்டு ஸ்வேதாவோட அண்ணா கிட்ட மன்னிப்பு கேட்டான்.

ஆனால் அவன் ஸ்வேதாவை முறைச்சுக்கிட்டு போயிட்டான்.

இதெல்லாம் ஸ்டேசன்  இருந்த இன்ஸ்பெக்டர் மூலமா விஷ்ணு காதுக்கு போச்சு.

ஒரு ரெண்டு நாள் கழிச்சு விஷ்ணு இதை பத்தி ஆதித்யா கிட்ட பேசுனான்.

அந்த பொண்ணு மிடில் கிளாஸ் பொண்ணுப்பா. அந்த பொண்ணுக்கும் நமக்கும் செட்டாகாது.

நீ ஊர் சுத்துனது போதும் ஒழுங்கா பிஸ்னஸ கைல  எடுத்துக்கோ அப்படின்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். ஆனால் ஆதி கேட்கவே இல்ல.

கோவத்துல என்னால முடியாது எனக்கு ஸ்வேதா தான் எல்லாமே அப்படின்னு சொல்லி அவன் அப்பா கிட்ட சண்டை போட்டான்.

அப்படி என்னடா உன்ன மயக்கிட்டான்னும், சுவேதாவை பத்தி தப்பாவும்  பேச ஆதித்யாக்கு கோவம் வந்துருச்சு.

ஆதித்யா அவங்க அப்பாவையே அடிச்சுட்டு எனக்கு உங்க பணம் சொத்து எதுமே வேணாம். இனிமே நான் உங்க பையன் இல்ல அப்படின்னு சொல்லி வீட்ட விட்டு வெளிய வந்துட்டேன்.

வெளியே வந்தவள் நேராக ஸ்வேதாவை மீட் பண்ணி நடந்தத சொல்லி ஃபீல் பண்ணுனான்.

அதுக்கு ஸ்வேதா இது தப்பு. உங்க அப்பா எது பண்ணாலும் உன் நல்லதுக்குதான் பண்ணுவாங்க.

கோபத்தில‌ தான் நீ அவங்க பேச்சு கேக்க மாட்டேங்குறன்னு என்ன பத்தி சொல்லி இருப்பாங்க.

இதுக்கு நீ உங்க அப்பா அடிச்சதும் பிள்ளையே இல்லன்னு சொன்னதும் ரொம்ப தப்பு‌. இதை பெரிதுபடுத்தாம அவர் கிட்ட போய் மன்னிப்பு கேளு அப்படின்னு சொல்லி  சமாதானம் படுத்துனா.

அதுக்கப்புறம் ரெண்டு பேரும் அந்த இடத்துல கிளம்பினாங்க.

அப்பதான் யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்தது.

நடந்த பிரச்சனைகள் எல்லாம் யோசிச்சுக்கிட்டே வண்டி ஓட்டினா ஆதி எதிர்ல வந்த லாரியை கவனிக்கல.

எதிர்ல வந்த லாரி மோதி ரெண்டு பேரும் தூக்கி வீசப்பட்டாங்க.

தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டு இருந்த ஸ்வேதாவை தான் ஆதி கடைசியா பார்த்தான்.

ஆமா மா அந்த ஆக்சிடெண்டில ஸ்வேதா இறந்து போயிட்டா. ஆதியும் கோமாக்கு போயிட்டான்.

மூணு மாசம் கழிச்சுதான் ஆதி கோபால் இருந்து வெளிய வந்தான்.

கோமால இருந்து வந்த உடனே சுவேதா பத்திதான் கேட்டான்.

அந்த நேரத்துல அவனுக்கு எந்த அதிர்ச்சியான தகவலும் சொல்லக்கூடாது .அப்படிச் சொன்னால் திரும்பவும் கோமாக்கு போற நிலைமை வரலாம் டாக்டர் சொல்லிட்டாங்க .

அதனால நாங்க யாரும் எதுவும் சொல்லல.தெரியலன்னு மட்டும் தான் சொன்னோம்.

ஆனா அன்னைக்கு நைட்டே ஆதித்யா எங்க யாருக்கும் தெரியாம  ஸ்வேதா வீட்டுக்கு போயிருக்கான்.

ஸ்வேதா வீட்டில ஸ்வேதா படத்துக்கு மாலை போட்டு  இருந்ததை பார்த்து உடைஞ்சு போய்ட்டான்.

அவ அண்ணனை பார்த்து எல்லாத்துக்கும் மன்னிப்பு கேட்டான்.

அதுக்கப்புறம் எங்க போனான் என்ன ஆனான் எதுமே தெரியல.

நாங்க தேடாத இடமில்லை.

அப்போ போன் வந்தது. ஆதித்யா ரோட்ல விழுந்து கிடக்குறான்னு.

விஷ்ணுவும் சஞ்சயும் தான் போய் கூட்டிட்டு வந்தாங்க.

பவித்ரா ஆதித்யாக்கு ஆறுதல் சொல்லியும் தூங்க வச்சா.

அடுத்தநாள் ஆதித்யாவை பார்க்க அவன் போகும்போது வாயில நுரை தள்ளி இருந்தது.

அவன ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனாங்க.

நான் தூங்குனதுக்கு அப்புறம் பாய்சன் குடிச்சுட்டான்‌னு சொன்னாங்க.

அதுக்கப்புறம் கவுன்சில் கொடுத்து என்னென்னவோ பண்ணியாச்சு. ஆனால் நினைப்பு எல்லாம் ஸ்வேதா மேலேயே தான் இருந்தது.

அவனோட அஜாக்கிரதை யால தான் ஸ்வேதா அவன விட்டுட்டு போய்ட்டான்னு ரெண்டு மூணு தடவை சூசைட் பண்ணினா.

ஆனால் கடவுள்  புண்ணியத்துல அவனை காப்பாற்றியாச்சு.

ஆனா அது நடைபிணமா சுத்திக்கிட்டு இருந்தான்.

ஆதியோட இந்த நிலைமையை பார்த்து பவித்ரா ரொம்ப கஷ்டப்பட்டா. அதிலேயே அவளுக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு.

அதுக்கப்புறம் பவித்ராவை காரணம் காட்டியே ஆதித்யாவை கொஞ்சம் கொஞ்சமா தேத்தி கொண்டு வந்தோம்.

ஆனால் அந்த பழைய ஆதியோட சந்தோசத்தையும் குறும்புத்தனத்தையும் எங்களால வெளியே கொண்டு வர முடியல.

அவனுக்கு பிடிக்காத பிசினஸ்ஸ செய்ய கையில் எடுக்க ஆரம்பிச்சான்.

எப்பவும் பிசினஸ் செய்ய  ஸ்வேதாவை ஓரளவு அவனால மறக்காம முடிஞ்சது.

ஆனால் இன்னும் அவன் யாரோடயும் ஒட்டாம தான் சுத்திக்கிட்டு இருந்தான்.

நாங்களும் எவ்வளவோ இங்கே கூப்பிட்டு பார்த்தோம். மாட்டேன்னு சொல்லிட்டான்‌.

நாங்க தான் ரெண்டு தடவை போய் அவன பாத்துட்டு வந்தோம். ஆனால் அந்த கண்ணல அந்த சந்தோசம் , அந்த உயிர்ப்பு இல்லவே இல்லை.

கடமைக்காக வாழுற மாதிரி தான் இருந்தான்.

இந்த மூணு வருஷம் கழிச்சு நேத்து தான் அவன் முகத்தில சந்தோசத்தையும் கண்ணுல காதலையும் உயிர்ப்பையும் பார்த்தேன்.

உனக்காக உயிர் வாழனுங்குற ஆசையும் பார்த்தேன்.

ஆனால் உங்களுக்குள்ள என்ன நடந்துச்சுன்னு தெரியல.

நேத்து நைட்டுல இருந்து உங்க ரெண்டு பேர் மூஞ்சியும் சரி இல்ல.

இன்னைக்கு காலைல ஆதித்யா ரொம்ப நொந்து போய் தெரிஞ்சா.

ஆதித்யா ஏதாவது தப்பு பண்ணியிருந்தாலோ உன்ன கஷ்டப்படுத்தி இருந்தாலோ அவன் கிட்ட பேசி பாருமா.

அவனோட தப்பா திருத்திக்க அவனுக்கு ஒரு வாய்ப்பு குடுமா. அவன திரும்பவும் உணர்ச்சி இல்லாத ஜடமா பார்த்திராத மா."

என அழுது கொண்டே அங்கிருந்த நகர்ந்தார்.

"இப்ப நான் சொல்றதுக்கு எதுவுமே இல்ல.

உன் மனசுல அண்ணாதான் இருக்காருன்னு உனக்கு நல்லா தெரிஞ்சு போச்சு.

அதே மாதிரி அண்ணாவோட மனசுக்குள்ள நீ இருக்கலாம்.

எல்லாத்தையும் ஓபனா பேசினா தான் தெரியும்.

மனசுவிட்டு அண்ணாகிட்ட பேசி உன் மனசுல என்ன ஃபீல் பண்றேன்னு அண்ணா கிட்ட சொல்லிரு.

அதுதான் உங்க ரெண்டு பேருக்கும் நல்லது. ஒருவேளை சுவேதாவை பற்றி இன்னும் நினைச்சுகிட்டு இருந்தேன்னா ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன்.

அவரோட ஸ்வேதா மேல வச்சிருக்கற

காதலை மறக்க வைக்குற சக்தி உன்னோட காதலுக்கு மட்டும் தான் இருக்கு.

இல்லாத ஒருத்திக்காக அவரோட வாழ்க்கை அழிக்க விடாம. உன்னோட காதலால அவருக்கு வாழ கத்துக்குடுத்து  அவரை வாழ வைக்க முயற்சி செய்."

நான் எதுவும் பேசவில்லை.அமைதியாக யோசித்துக் கொண்டிருந்தான்.

நாங்கள் இருவரும் கூட்டத்திற்கு சென்ற பொழுது சஞ்சய் அண்ணாவின் அம்மா ஆதித்யாவை முறைத்துக் கொண்டிருந்தார்.

நாங்கள் அவர்கள் முன் சென்று என்ன நடக்கிறது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தோம்.

சஞ்சய் அண்ணாவின் அப்பா,

" இந்த பாரு தியா, நேற்று தான் வந்தான். அதுக்குள்ள நாளைக்கு மீட்டிங் இருக்கு. நான் இப்ப கெளம்பனுங்குறான். நீயே சொல்லு மா." என கூற நானும் ஆதித்யாவை பார்த்தேன். ஆதித்யா தலையை குனிந்து கொண்டான்.

ஆதித்யாவின் மனநிலையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.  நான் வேறு அவனை வெறுக்கிறேன் என்று கோபத்தில் கூறி அவனிற்கு காயத்தை கொடுத்துவிட்டேன்.

என் மனதின் ஓரத்தில் என் ஆதித்யாவின் முதல் காதலாக நான் இல்லை என வருத்தப்பட்டாலும் இனி என் ஆதித்யாவிற்கு எல்லாமாக நான் இருக்கவேண்டும் எனவும் புரிந்து கொண்டேன்.

என் தந்தை கூறியது போல் என் காதலால் அவன் காதலில் மறக்கடிக்க முடியும். என் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

சரண்யாவும் அதையேதான் கூறினாள்.

சஞ்சய் அண்ணாவின் அம்மா கூறியது போல் ஆதித்யா என்னை காதலிக்கிறானா என தெரியவில்லை. ஆனால் ஆதிக்கு என்னை பிடிக்கும். அது மட்டும் எனக்கு நிச்சயம் தெரியும்.

நான் பேசாத பொழுது அவன் கண்களில் தெரிந்த ஏக்கம் பரிதவிப்பு எல்லாம் நான் உணர்ந்தே தான் இருந்தேன். இப்பொழுது கூட நான் பேசி விடமாட்டேனா என்று தான் ஆதித்யா ஏங்கிக் கொண்டிருப்பான்.

அவனை மாற்றும் பொறுப்பு என்னுடையது என புரிந்து கொண்டேன்.

"என்ன மீட்டிங்?" என பொதுவாக கேட்டேன்.

"அது கொடைக்கானல் வச்சு கன்ஃபார்ம் பண்ணுனேன்ல அந்த மீட்டிங்." என ஆதித்யா கூறியதும்

எனக்கு ஞாபகம் வந்தது.

கேரளா வரும்பொழுது கூட இந்த மீட்டிங் நான்கு நாட்களில் இருக்கும் என கூறினான்.

ஆனால் இரண்டே நாட்களில் மீட்டிங் இருக்கும் என எண்ணியிருக்கவில்லை.

"அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். மீட்டிங்க கேன்சல் பண்ணு. மூணு வருஷத்துக்கு அப்புறம் இப்பதான் வந்த. வந்த அடுத்த நாளே எப்படி கிளம்புவதற்கு?"

" என்றே செருமகனே குறப்பெதுதுனத் நிற்டிக." மலையாளத்தில் அவனை திட்டுவதை நிறுத்த சொன்னார்.

"நின்னலுதே செருமகன் அட் செய்யுனதில் தெரில்லே "

சஞ்சய் அண்ணாவின் அம்மாவும் மலையாளத்தில் உங்கள் பேரன் செய்வது மட்டும் சரியா என சலித்துக் கொண்டார்.

சஞ்சய் அண்ணாவின் அம்மா தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். சஞ்சய்  அண்ணாவின் அப்பா கேரளாவை சேர்ந்தவர். கல்லூரி படிப்புக்காக தமிழ்நாடு வந்தவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

பாட்டி ஆதிக்கு சாதகமாக பேச அம்மா ஆதியை முறைத்துக் கொண்டிருந்தார்.

அவர்களை சமாதானப்படுத்தும் நோக்கில் நான் இறங்கினேன்.

"எத்தனை மணிக்கு போகணும் ஆதி."

என் ஆதி என்ற அழைப்பில் நிமிர்ந்து என்னை பார்த்தவன் "ஆறு மணிக்கு பிளைட்" என்றான்.

அவன் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சி என்னை ஏதோ செய்தது.

"அப்போ நான் பேக் பண்றேன்.'

"தியா, நீ என்ன அவன் கூட சேர்ந்து போறேன்னு சொல்லுற."

"இல்லம்மா. இங்க வரும்போதே ஆதி மீட்டிங் இருக்குன்னு சொல்ல தான் செஞ்சான்.

இது அவனுக்கு முக்கியமான மீட்டிங். இது ஆதித்யாவோட பல நாள் உழைப்பு. அதை வீணாக்க முடியாதுமா.

சீக்கிரம் மீட்டிங் முடிஞ்சு திரும்ப வந்துருவோம்.

நான் கேரளா இன்னும் சுத்தி கூட பார்க்கல.இன்னொரு நாள் கண்டிப்பா வரோம்."

ஆதியை  முறைத்துக்கொண்டு,

" நீ சொல்றன்னு  நான் நம்பறேன். ஒழுங்கா திரும்ப கூட்டிட்டு வா." எச்சரிக்கையோடு ஆதியை பார்த்து முகத்தை திருப்பிக் கொண்டு சென்றார்.

"சரி தியா எனக்கும் நேரம் ஆகுது நான் கிளம்புறேன்."

"வெயிட் பண்ணு . என்ன எஸ் ஆகுற. எனக்கு பேக்கிங் க்கு ஹெல்ப் பண்ணு. என்ன பிளைட் ஏத்தி விட்டு தான் நீ போகணும்."

"பிளைட் 6 மணிக்கு. ஆனால் நான் 6 மணிக்கெல்லாம் ஹாஸ்டல்ல இருந்தாகனும்."

"அதெல்லாம் கிடையாது. நீ என்கூட வந்தே ஆகணும்." என ஆர்டர் செய்தேன்.

"தேங்க்ஸ் தி... தியா... என் கூட வர்றதுல்ல உனக்கேதும் கஷ்டம் இல்லையே. அப்படி ஏதாவது இருந்தா சொல்லு நான் மட்டும் போயிட்டு வாறன்."

எவ்வளவு தைரியம் இருக்கும் என்னை விட்டுவிட்டு அவன் மட்டும் போறேன்னு சொல்வான்.

அவன் மூக்கிலே குத்த  வேண்டும் போல் தோன்றுகிறது.

"அதெல்லாம் நான் எல்லாத்தையும் பேக் பண்ணிட்டேன். என்ன கூட்டிட்டு போக முடியுமா ?முடியாதா? "என அழுத்தம் திருத்தமாக  கூறினேன்.

என்னை புரியாத பார்வை பார்த்தவன் எதுவும் சொல்லாமல்

" நான் டிக்கெட் புக் பண்ணிட்டு வரேன்." என அழைபேசியை எடுத்துக்கொண்டு சென்றான்.

அனைவரிடமும் விடைபெற்று சஞ்சய் அண்ணா ஆதித்யா காரின் முன் சீட்டில் அமர்ந்திருக்க நானும் சரண்யாவும் பின்னால் அமர்ந்து கொண்டோம்.

காரின் கண்ணாடி வழியே ஆதித்யா என்னைப் பார்த்துக் கொண்டிருக்க நானும் அவன் பார்க்காதவாறு அவனைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்.

அவன் என்னிடம் பேசலாமா வேண்டாமா என்ற தயக்கத்தில் இருப்பது எனக்கு புரிந்தது.

ஏர்போர்ட் வந்ததும் சரண்யாவிற்கும் சஞ்சய் அண்ணாவிற்கும் விடை அளித்து விட்டு நாங்கள் இருவரும் திருசிசியை நோக்கிய பயணத்தை தொடர்ந்தோம்.

அடுத்தடுத்த பயணச்சீட்டு அமைய நான் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து கொள்ள ஆதி என் அருகில் அமர்ந்து கொண்டான்.

நாங்கள் அமர்ந்ததும் ஆதித்யாவிற்கு அலைபேசியில் அழைப்பு வர என்னை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு, அலைபேசிக்கு அனுமதி அளித்து காதில் வைத்தான்.

சிறிது நேரத்திலேயே அந்தப்பக்கம் என்ன கூறப்பட்டதோ, அவன் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. ஓரக்கண்ணால் என்னை பார்த்து விட்டு மெதுவான குரலில் கிசுகிசுத்தான்.

அப்படி என்ன கிசுகிசுத்தான் என மெதுவாக  அவன் பக்கத்தில் சாய்ந்தவாறு ஏதேனும் கேட்கிறதா என பார்த்தேன்.

அவனோ அலைபேசியை அணைத்து விட்டு என்னைப் பார்த்து,

" என்ன வேணும்?" என கேட்க,  நானோ சமாளித்தவாறு,

"ஒன்னும் இல்ல. எனக்கு ப்ளைட்ல இதுவரை போனதில்ல.கொஞ்சம் பயமா இருக்கு." என இழுத்துக்கொண்டே கூறினேன்‌.

என் கையை அழுத்தி பிடிச்சுக்குட்டு என் தோள்ல சாஞ்சுக்கோ எதுவும் தெரியாது."

' உன் மேல யா' என்ற பார்வை நான் பார்த்தாலும் உள்ளுக்குள் இந்த மாதிரியான  நிகழ்விற்கு ஏங்கிதான் இருந்தேன்.

அவனோ ஒரு மர்ம சிரிப்புடன்,

" உனக்கு மேல சாய் கன்ஃபடபிள் இல்லைன்னா நான் வேணா அந்த தாத்தாவை இங்கே உட்கார சொல்லிட்டா.

நீ வேணா அவர் மேலே சாஞ்சுக்கோ." என அவன் அருகில் அமர்ந்திருந்த அறுவது வயது மதிக்கத்தக்க ஒருவரை காண்பித்தான்.

நான் அவனை முறைத்துவிட்டு கோபமாக அவன் தோளில் ஒரு அடி  வைத்து அவன் தோளிலே சாய்ந்து கொண்டேன்.

என் இடது கை விரலுடன் அவன் விரல்களை கோர்க்க நானோ அவன் வலது முழங்கையை முற்றுகையிட்டு கொண்டேன்.

அவன் தலையை என் தலைமேல் வைத்தவாறு அவனும் கண் மூடினான்.

மனதுக்குள்ளே ஏதேதோ எண்ண அலைகள் ஓடினாலும் ஆதியின் நெருக்கத்தில் என்னை மறந்து உறங்க ஆரம்பித்தேன்.

நேராக திருவனந்தபுரத்திலிருந்து திருச்சி சென்றடையும்  டைரக்ட் பிளைட் இல்லாததால் சென்னை அல்லது பெங்களூரில் வழியாக தான் செல்ல வேண்டும்.

சென்னை வழியாக செல்ல ஏழு அல்லது ஏழரை மணி நேரமோ அல்லது நாலரை மணி நேரமோ ஆகலாம். அது விமானத்தையும் காத்திருப்பையும் பொறுத்தது.

அதனால் பெங்களூர் வழியிலேயே சென்றோம். 3 மணி 25 நிமிடத்தில் எங்களை திருச்சியிலே நிறுத்தியது அந்த இண்டிகோ ஏர்லைன்.

திருச்சியை வந்தடைந்ததும் நான் அவள் மேலிருந்து எழுந்தேன்‌. பெங்களூர் நிறுத்தத்தில் கூட எழவில்லை.

ஆதி முழித்திருந்தாலும் என் உறக்கத்தை கலைக்க பிடிக்காமல் அமர்ந்திருந்தான். ஆனால் நான் தான் அப்போது உறங்கவில்லையே. அவன் நெருக்கத்தை ரசித்த வண்ணம் கண்களை மூடியிருந்தேன்.திருச்சி வரும் வரை அவனின் அணைப்பிலே தான் தூங்கிக் கொண்டிருந்தேன்.

நாங்கள் இருவரும் ஹோட்டலை வந்தடைய இரவு பத்துமணி ஆகியிருந்தது. சிறிது நேரத்திலேயே இருவரும் இரவு உணவை முடித்துவிட்டு தூங்கிவிட்டோம்.

அடுத்த நாள் காலை நான் எழுந்திருக்கும் முன்பே பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தான், ஆதி.

நான் பாதி கண்களை திறந்து பார்த்தேன். நான் பார்த்த காட்சியை என் விழி தாமரை மலர்போல் விரிந்தது.

நான் தூங்கிக் கொண்டு இருக்கிறேன் என நினைத்த ஆதித்யா குளித்து முடித்து டவலுடன் வெற்று மார்பு எனக்கு  தெரியும்படி  நின்றிருந்தான்.

முதன்முறையாக என் கணவன் என்ற உரிமையில் ஆதித்யாவை சைட் அடித்துக்கொண்டிருந்தேன்.

கொடைக்கானலில் நாங்கலாம் ஜிம் பாடி. என்றது நினைவுக்கு வர்ற, முறுக்கேறிய அவன் புஜங்களும் கட்டுப்போக்கான அவனின் சிக்ஸ் பேக்கும் என் கவனத்தை இழுத்தன.

அவனையே கண் இமையாமல் பார்த்து கொண்டிருந்தேன்.

அவன்  உடலில் கோலமிட பரபரத்த என் விரல்களை கட்டுக்குள் கொண்டுவந்தேன்.

இது எதுவும் அறியாத ஆதித்யாவோ அவன் ஈர தலைய துவட்டி கொண்டு இருந்தான்.

"இன்னைக்கு மட்டும் பொறுத்துக்கடா செல்லம். நாளைக்கு நானே உனக்கு துவட்டி விடுறேன்."என மானசீகமாக அவனிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

நாளைக்கு என்ன என்று நீங்கள் நினைக்கலாம்.

இன்றிரவு என் மனதில் உள்ள காதலை நான் ஆதிதிராவிடம் சொல்லப் போகிறேன்.

ஆதித்யா என் காதலை ஏற்பானா என தெரியவில்லை. ஆனால் என்னை வெறுக்க மாட்டான் என்பது மட்டும் நிச்சயம்.

நான் அவனை பார்த்துக் கொண்டிருந்ததை அவன் உணர்ந்தானோ என்னவோ அவன் திரும்பி என்னை பார்த்தான்.

நான் கண்களை இறுக்க மூடிக் கொண்டேன்.

அவன் என் அருகில் வருவதை உணர்ந்தேன். என் இதயம் படபடக்க ஆரம்பித்தது. என் உடல் நடுங்கி சில்லிட்டுப் போனது. நான் அவனை பச்சையாக சைட் அடித்ததை பார்த்து விட்டானோ என பயத்தில் வியர்க்க தொடங்கியது.

"ஓய் பொண்டாட்டி, புருஷன் அவசர அவசரமா கிளம்பிட்டு இருக்கானே.  எந்திரிச்சு அவனுக்கு ஹெல்ப் பண்ணி அழகாக ஸ்மைல்லோட  பாய் சொல்றியா பாரு. தூங்கு மூஞ்சி பொண்டாட்டி.

பாரு ஏசி ல கூட எப்படி வேர்க்குதுன்னு." என்றவன் அவன் தலையை துவட்டிக் கொண்டிருந்த துண்டால் என் வியர்வையை துடைத்து விட என்னால் மூச்சு விட முடியவில்லை.

அவனின் வாசத்தை ஏந்திய துண்டும் அவன் கையில் ஏறியிருந்த சோப்பின் வாசமும் உள் வரை சென்று இதுவரை என்னுள் ஏற்படாத மாற்றத்தை ஏற்படுத்தியது.

துடைத்து விட்டவன் என் கன்னத்தை வருடினான்.

"நான் உன்ன ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன். ஒரு ப்ரெண்டா அதுக்கு நான் சாரி கேட்டுக்குறேன்.

இன்னைக்கு என் மனசுக்குள்ள ரொம்ப நாளா அழுத்திக்கிட்டு இருக்கிற காதல பத்தி உன்கிட்ட சொல்ல போறேன். ரெடியா இரு டி பொண்டாட்டி." என என் மூக்கை பிடித்து ஆட்டி விட்டான்.

என் கன்னம் ரூஜ் போடாமலே சிவந்ததை சூடான கன்னத்தை வைத்தே புரிந்து கொண்டேன்.

"இப்படியே இருந்தேன்னா இன்னைக்கு மீட்டிங் அம்போ தான். நான் போய் சீக்கிரம் டெமோ பிரசன்ட் பண்ணிட்டு அக்ரிமென்ட்ல சைன்  பண்ணிட்டு எவ்வளவு சீக்கிரம் வர்ற முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வரேன்."

என்றவன்  நகர்ந்து வேக வேகமாக உடை மாற்றி விட்டு வெளியே சென்று விட்டான். அதுவரை நான் விழிக்கவில்லை. ஆனால் நடந்த அத்தனை சம்பாசனைகளையும் கேட்டுக் கொண்டிருந்தேன்.

அவன் சென்றதை உணர்ந்து மெதுவாக கண் திறக்கும் போது என் பக்கத்தில் ஒரு ஸ்டிக்கி நோட்ஸ் இருந்தது.

அதை எடுத்து பார்த்தேன்.

"தி... பேந்த பேந்த முழிக்காம சீக்கிரம் போய் பிரஸ் ஆய்டு ப்ரேக் பாஸ்ட் சாப்பிடு.

என்னோட பெர்சனல் போன் டேபிள்ஸ்பூன் வச்சுருக்கேன். அவன் என்னோட அபிசியல் நம்பர் இருக்கும்.

உனக்கு ஏதாவது என்கிட்ட பேசணும்னு தோணுனா அந்த நம்பர்க்கு கால் பண்ணு.

இப்படிக்கு நீ வெறுக்கும்,

மிஸ்டர் ஆதித்யா குமார்.

நான் அவனை வெறுக்கலைன்னு கண்டுபிடுச்சுட்டான்.அதான் பக்கி  என்னையே சுத்தி சுத்தி வர்றான்.

எப்படி நான் அவனை வெறுக்கலன்னு கண்டுபிடிச்சான்னு தான் தெரியல இடியட் புருசா... பொண்டாட்டி யாம்ல பொண்டாட்டி.... ஆமா என்னமோ காதலை சொல்ல போறேன்னு சொன்னார் ஒருவேளை அவனும் என்னை காதலிக்கிறான் ஐயோ செம போ...

அவனுக்கு முதல்ல நான் தான் ப்ரொபோஸ் பண்ணனும்.

எப்படி ப்ரபோஸ் பண்ணலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன்.

கதவு தட்டும் சத்தம் கேட்டது.

எழுந்து சென்று பார்த்தபோது ரூம் பாய் நின்று இருந்தான்.

"என்ன வேணும்?"

"சார் ப்ரேக் ஃபாஸ்ட் ஆர்டர் பண்ணி இருந்தாங்க. இதையும் உங்க கிட்ட கொடுக்க சொன்னாங்க."என ஒரு சிறு துண்டு சீட்டை கொடுத்தான்.

என்னவாக இருக்கும் என நான் பிரித்து பார்த்தேன்.

அந்த குட்டி மண்டையில இல்லாத மூளைய இருக்குன்னு நினைச்சு எதையும் போட்டு யோசிச்சுக்கிட்டே இருக்காமல் சீக்கிரம் போய் சாப்பிடு. டைமாச்சு." என இருந்தது.

என்னைப்பற்றி எப்படி இவன் எல்லாவற்றையும் சரியாக கணிக்கிறான் என்று தெரியவில்லை.

சிரித்துக்கொண்டே ரூம் பாயிடம் என் மனதில் தோன்றிய ஐடியாக்களை கூறினேன்.

"கண்டிப்பா  மேடம். ஆனா நீங்க சொன்ன டெரஸ்ஸ விட  ரூம் டெகரேஷன் இன்னும் அழகா இருக்கும். எங்க கிட்ட நிறைய டிசைன்ஸ் இருக்கு." அவன் ஆலோசனை கூறினான்.

நான் சிறிது யோசித்தேன்.

ஏதாவது நேரம் சரியில்லை என்றால் கூட மாற்றிவிடலாம் என , "இல்லை டெரஸ்லயே பண்ணிருங்க." என்றேன்.

அவனும் சரியான அட்வான்ஸ் பணத்தை வாங்கிக்கொண்டு சென்றான்.

நேரம் செல்ல செல்ல போரடித்தது. இங்கும் என்னை தனியாக விட்டுவிட்டு சென்று விட்டான்.

அவனை அலைபேசியில் அழைத்து திட்டலாம் என நினைத்து நினைத்தேன்.

அவன் அலைபேசியை எடுத்து ஆராய்ந்தேன்.

அலைபேசியை பார்த்ததுமே கோபமாக அலைபேசியை தூக்கி எறிந்தேன். அது சோபாவில் போய் பத்திரமாக விழுந்தது.

"மகனே இன்னைக்கு வாடி. உனக்கு இருக்கு." என அவனை கரித்துக் கொட்டிக் கொண்டு இருந்தேன்.

நேரம் செல்லாமல் அங்கிருந்து டிவியை ஆன் செய்தேன்.

விஜய் சமந்தாவின் 'நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம்' என்ற பாடல் ஒலிக்கவும் அதில் விஜய்யின் சமந்தாவின் நீக்கிவிட்டு என்னையும் ஆதித்யாவை கற்பனை செய்து கொண்டு இருந்தேன்.

"ஹலோ மேடம், நெஞ்ச தட்டுற சத்தம் இருக்கட்டும். கதவை தட்டுற சத்தம் உங்களுக்கு கேட்கலையோ?"

திடீரென வந்த ஆதித்யாவின் குரலில் திடுக்கிட்டு எழுந்தேன்.

கைகள் இரண்டையும் மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு சுவற்றில் சாய்ந்தவாறு இருக்கும் ஆதித்யாவை கண்டு திருதிருவென முழித்தேன்.

"எவ்வளவு நேரம் கதவை தட்டுறது. நீ கதவை திறக்கலன்னு லாபியில் ஸ்பேர் கீ வாங்கிட்டு வந்து கதவை திறந்தேன்."

ஆதித்யா கூட அவனை முறைத்து விட்டு திரும்பிக் கொண்டேன்.

ஏன் சிரிகிறேன்னு முழிக்கிற ஏன் திரு திருன்னு முழிக்கிற திருட்டுத் தனம் பண்ணி நக்கலாக கேட்டான்

நான் அதற்கும் பதிலளிக்காமல் இருந்தேன்

"போன் எதுக்கு கோபம்.மார்னிங் ல இருந்து நீ கால் பண்ணவன்னு நெனைச்சு போனையே பார்த்துகிட்டு இருக்கேன் நீ கால் பண்ணல."

"நான் எப்படி போன் பண்ணுவேன். என் கிட்ட போனா இருக்கு."

"நான் உன்கிட்ட என்னோட போனை கொடுத்துட்டு தானே போனேன்."

"போடா முண்டம்..."

"எனது முண்டமா..."

"ஆமாடா  போன் கொடுத்தியே, போனோட பாஸ்வேர்ட் கொடுத்தியா?"

நான் அவனை  கோபமாக கேட்க அவனோ அப்போதுதான் பாஸ்வேர்ட் கொடுத்து விட்டு போகாததை உணர்ந்து நாக்கைக் கடித்து மன்னிப்பு கேட்கும் தோரணையில்  கண்களால் கெஞ்சினான்.

"சரி இந்த தடவை மன்னிச்சு விடுறேன். என்னாச்சு?அக்ரிமண்ட்ல சைன் பண்ணியாச்சா?"

"அதை பத்தி தான் சொல்ல வந்தேன்.உன் கோபத்துல எல்லாத்தையும் மறந்துட்டேன். அக்ரிமண்ட் ல சைன் பண்ணிட்டேன்.இன்னைக்கு ஈவினிங் அதற்கான கிராண்ட் பார்ட்டி இருக்கு."

"அப்போ நீ திரும்ப என்னை விட்டுட்டு போயிடுவியா?"

" இல்ல நாம ரெண்டு பேரும் தான் பார்ட்டிக்குப் போறோம்.நீ போய் சீக்கிரமா ரெடி ஆகு."

"பட் என்கிட்ட பாட்டுக்கு வியர் பண்ற மாதிரி எதுவும் இப்போ இல்லையே."என்றேன் உதட்டை பிதுக்கி.

"அதைப்பற்றி நீ கவலைப்படாத." என்றவன் என்னை குளியல் அறைக்குள் தள்ளினான்.

"தியா நான் ரூம்ம கீயால லாக் பண்ணிட்டு வெளியே போறேன். உனக்கான ட்ரெஸ்ஸ கட்டில்ல வச்சுருக்கேன். அன்ட் அதுக்கான ஆரனமன்ட்ஸ்ஸயும் வச்சுருக்கேன்.போட்டுக்கோ."

என்றவன் வெளியேறினான்.

குளித்து விட்டு வெளியே வந்து கட்டிலில் இருந்த பரிசை பிரிக்க, அதிலிருந்த ட்ரெசை பார்த்ததும் எனக்கு கண்களிலிருந்து நிற்காமல் கண்ணீரை வந்தது.

வாய் மட்டும் இடியட் இடியட் இடியட் என முணுமுணுத்தது‌.

உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் -17
உதயம் 💏 17 💏

இரவு முழுவதும் தூங்காமல் கண்கள் சிவந்து இருந்தன.

மனதில் உள்ள காயங்களை மறைக்க முடியாமல் என் முகம் காட்டிக்கொடுத்தது.

" தியா சாப்பிட வாமா.." என சஞ்சய் அண்ணாவின் அம்மா அழைக்க அவர்களை வருத்தப்பட வைக்க விரும்பாமல் எழுந்து  குளியலறைக்கு சென்று முகத்தை கழுவிக்கொண்டு அழுத தடயங்களை மறைக்க சிறிது பவுடர் போட்டு விட்டு டைனிங் ஹாலுக்கு சென்றேன்.

நான் செல்லும்போது அந்த வீட்டிலிருந்த அனைவரும் அமர்ந்திருந்தனர்.

ஆதித்யா விற்கும் தாத்தாவிற்கும் இடையே மட்டும் இடம் காலியாக இருக்க வேறு வழியின்றி அதில் அமர்ந்தேன்.

கேரள பாரம்பரிய உணவுகள் டைனிங் டேபிளை அலங்கரித்து வைத்திருக்க, நானும் ஆப்பத்தை மட்டும் எடுத்து தட்டில் வைத்தேன்.

தொண்டைக்குழிக்குள் உணவு இறங்க மறுத்தது. அதை விட ஆதித்யாவின் பார்வை வீச்சு என் மேல் படர வெறுப்பாக இருந்தது. எல்லோர் முன்னிலையிலும்  ஆதியை விட்டு கொடுக்க மனமின்றி அமைதியாக உண்ண முயற்சித்தேன்.

ஆனால் ஆதித்யா அதை கெடுக்கும் வகையில்

" தியா இதை ட்ரை பண்ணி பாரு. கேரளா ஸ்பெஷல் என் புட்டை எடுத்து என் தட்டில் வைத்தான்.

ஒருவேளை அனைவரின் முன்னிலையிலும் நான் ஏதாவது பேசுவேன் என நினைத்தானோ என்னவோ ஆனால் என் பொறுமைக்கும் ஒரு எல்லை தான்.

அவன் என்னிடம் அக்கறையாக பேசும்பொழுது மனம் மகிழ்வதற்கு பதில் நேற்று அவன் கூறிய ஐ லவ் யு ஸ்வே குட்டி ஞாபகத்திற்கு வர கண்கள் கலங்க ஆரம்பித்தன. இதற்கு மேல் முடியாது என எழுந்து விட்டேன்.

"தியா ஏமா சாப்பிடாம எழுந்துட்ட?" அண்ணாவின் அப்பா அக்கறையாக கேட்டார்.

"இல்லப்பா இந்த மாதிரி சாப்பாடெல்லாம் இதுக்கு முன்னாடி சாப்பிட்டதில்லை. டிஃபரண்ட் இருக்கு. அதான் ஒருமாதிரி இருக்கு. எனக்கு இது போதும் வயிறு நிறைஞ்சுருஞ்சு. என ஆதியின் கலங்கிய கண்களை பார்த்தும் என் கலங்கிய மனதையும் கலங்கடித்தவனை பற்றியும் சிறிதும் நினையாமல் அறைக்கு வந்துவிட்டேன்."

ஏன் இந்த அக்கறை. இந்தக் அக்கறைக்காக ஏங்கிய நாட்களும் இருந்தன. ஆனால் இப்பொழுது இந்த அக்கறையே  என்னை கொல்லாமல் கொள்கிறது. ஆதித்யாவின் ஸ்வேதாவை பற்றி தெரியாமல் குழம்பியது.

சோபாவின் உட்கார்ந்து யோசித்துக்கொண்டிருந்தேன்.

"தி, எனக்கு புரியுது நீ என் மேல கோவமா இருக்கேன்னு. ஆனா நீ ஏன் கோவமா இருக்கேன் எனக்கு சத்தியமா தெரியல.

நான் ஏதாவது தப்பா நடந்துக் கிட்டேனா... ஒருவேளை நேத்து அந்த மாதிரி உன்ன ஹக் பண்ணுணது உனக்கு பிடிக்கலையா?" தயங்கிக்கொண்டே கேட்க நேற்றைய நினைவுகள் கண் முன் நிழலாட  உடலெல்லாம் எரிந்தது.

நான் எப்படி ஆதியின் மேல் கோபப்பட முடியும். நானும் வெட்கமில்லாமல் அவனுடைய அணைப்பில் கட்டுண்டு தானே கிடந்தேன்.

"என் மேல இருக்குற கோவத்தை சாப்பாடு மேலே காட்டாத.இதை சாப்பாடு‌"  என கையில் தட்டுடன் நின்றிருந்த அவனை சிறிதும் கண்டுகொள்ளவில்லை.

"தி, அட்லீஸ்ட் இந்த ஜூஸ்..."

"ஸ்டாப் இட் மிஸ்டர் ஆதித்யா குமார். என் பேரு தி இல்ல.

தியா.

தியா விஸ்வநாதன்..." என அழுத்தம் திருத்தமாக கூறினேன்

அவனும் என்னை நெருங்கி வந்து,

" சாரி நீ இப்போ மிஸ்‌. தியா விஸ்வநாதன் இல்ல. மிஸ்ஸஸ். தியா ஆதித்யா குமார். மை ஒய்ஃப்."என அதிகாரமாக எச்சரித்தான்.

"உரிமை இருக்கிற இடத்துல தான் உரிமையா மிஸஸ் தியா ஆதித்யா குமாரனு  சொல்ல முடியும் மிஸ்டர் ஆதித்யக்குமார்."

"அப்போ நமக்குள்ள உரிமையை இல்லைன்னு சொல்றியா."

"நமக்குள்ள என்ன உரிமை இருந்திருக்கு."

"நான் உன் கழுத்துல தாலி கட்டி இருக்கேன். அந்த நிமிஷம் லிருந்து நிமிஷத்துக்கு உனக்கு என் மேலயும் என் பொருட்கள் மேலயும். எனக்கு உன் மேலயும் உன் பொருட்கள் மேலயும் எல்லா உரிமையும் இருக்கு.இத நான் சொல்லல. நீதான் சொன்ன. மிஸஸ் தியா ஆதித்யா குமார்."

அன்று இவனை வெறுப்பேற்ற சொன்னது இன்று மீண்டும் என்னை வந்து தாக்குகிறது." என என்னையை நொந்துகொண்டேன்.

"அந்த கல்யாணத்தை ஏன் நிறுத்தலன்னு  இன்னைக்கு நான் ஃபீல் பண்றேன்."

ஆதித்யாவின் முகம் முகத்தில் தோன்றிய வலியை என்னால் உணர முடிந்தது.

ஆனால் என்னுடைய வலி அவனுடைய வலிகளை விட பெரியது.

ஆனால் காதல் கொண்ட மனம் அவனுக்காக அவனை அணைத்து கொள்ள ஏங்க, என் வெட்கமில்லாத மனதை நானே கடிந்து கொண்டேன்.

முயன்று என் மனதை கட்டுப்படுத்திக்கொண்டு அவனிடமிருந்து விலகி நடந்தேன்.

என் முழங்கையை வளைத்துப் பிடித்து அவன் புறம் இழுத்தான்.

என் முகம் அவன் முகத்தின் வெகு அருகே இருக்க இதயம் படபடத்தது.

"என்னடா டார்ச்சர் பண்ற தி. உண்மையிலேயே நம்ம கல்யாணத்த ஏன் நிறுத்தலன்னு நீ பீல் பண்றியா?" கேட்டவனின் குரலில் இருந்த வலி என்னை சுக்குநூறாய் உடைத்தது.

அவனை அணைத்து ஆறுதல் கூற மனம் முரண்டியது.

"ஏன் நீங்க மேரேஜ் நிறுத்த முடியும்னு பீல் பண்ணலையா" எனக்கேட்க அவனோ இல்லையென தலையசைத்தான்.

என்ன மாதிரியான மனிதன் இவன் மனதில் ஒருத்தி வைத்துக் கொண்டு, இன்னொருத்தியுடன் குடும்பம் நடத்த முயற்சி செய்கிறான்.

அவனைப் பற்றி கீழ்தரமாக எண்ணி அவனை விட்டு விலக முயற்சி செய்தேன்.

"தி, நான்.. " என அவன் பேச ஆரம்பிக்க , அவனின் தி என்ற அழைப்பு என்னை ஏதோ செய்ய அவனை தள்ளிவிட்டேன்.

"மிஸ்டர் ஆதித்ய குமார், நல்லா கேட்டுக்கோங்க. இந்த உலகத்திலேயே நான் வெறுக்குற ஒரே ஆள் நீங்க மட்டும் தான். என் கிட்டே இருந்து தள்ளியே இருங்க. அதுதான் ரெண்டு பேருக்கும் நல்லது." என்று எச்சரித்துவிட்டு அங்கு நிற்க முடியாது வெளியேறினேன்.

எனக்கு தெரியும். ஒரு மனைவி தன் கணவனை வெறுக்கிறேன் என அவனின் முன்  அந்த கணவன் எவ்வாறு உணர்வான் என்று.

ஏனென்றால் சில நாட்களுக்கு முன் நானும் அதையே தான் உணர்ந்தேன். ஆனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. என்னை நினைத்து எனக்கே வெறுப்பாக உள்ளது.

கூடத்தில் சஞ்சய்  யாருக்கோ அலைபேசியை அழைக்க முயன்று கொண்டிருந்தார்.

"அண்ணா உங்க போன் கிடைக்குமா ஒரே ஒரு கால் பண்ணிட்டு தரேன்."

"இந்தாடா.." என சிறிது தயங்கியவர், ஒரு நிமிஷம் என போனில் ஏதோ செய்துவிட்டு என்னிடம் தந்தார்.

நான் அவரின் அலைபேசியில் இருந்து சரண்யாவை தொடர்பு கொண்டேன்.

ஆனால் தொடர்பு எடுக்கப்படவில்லை.

'நீங்கள் தொடர்பு கொள்ள நினைக்கும் வாடிக்கையாளர் தற்போது பிசியாக உள்ளார்.' என்ற பதிவு செய்யப்பட்ட பெண்ணின் குரல் மட்டும் மலையாளத்தில் ஒலித்தது.

" என்னாச்சு மா..." சஞ்சய் அண்ணா  என்னிடம் கேட்க,

" அண்ணா சரண்யா கூட பேசணும். ஆனா போன் எடுக்கவே மாட்டேங்கிறா."

"மெசேஜ் பண்ணி பாருமா." என அவர் யோசனை தர நானும் மெசேஜ் செய்தேன்.

"Hai Saran... This is Diya.... I wanna talk to you.. I need you badly... Can you come over Sanjay Anna's place..."

குறுஞ்செய்தி சென்ற அடுத்த நிமிடமே சரண்யாவின் அழைப்பு வந்தது.

"என்னதான் பிரச்சனை இப்ப.  ஏன் இப்படி டார்ச்சர் பண்..." சரண்யா பேசிக்கொண்டிருக்கும்போதே நான் குறிக்கிட்டேன்.

"ஆமாண்டி நான் எல்லாருக்கும் டார்ச்சரா தான் இருப்பேன். இனிமே உன்னைக் கூப்பிட்டால் என்னை என்னன்னு கேளு‌."

அவளின் பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பை துண்டித்து விட்டேன்.

சஞ்சய் அண்ணன் கையில் அலைபேசி வைத்துவிட்டு திணித்துவிட்டு  நகர்ந்தேன்.

என் நேரம் சரியில்லை என்று நினைக்கின்றேன். எல்லோரும் என்னை டார்ச்சர் என எண்ணுகின்றனர்.

வந்த கடுப்பை எல்லாம் சரண்யாவின் மீது திணித்து விட்டு வந்துவிட்டேன்.

பாவம் குடும்பப் பெண்களின் தடுப்புகள் எல்லாம் பிரச்சனைகள் எல்லாம் அப்பாவி ஜீவன்கள் யார் மீதாவது திணிக்கப்படுகின்றன.

நான் மீண்டும் அறைக்கு சென்றபோது அங்கு ஆதித்யா இல்லை.

நான் பால்கனியில் சென்று வானத்தை வெறித்துக் கொண்டிருந்தேன்.

யாரோ வரும் அரவம் கேட்க திரும்பினேன்.

சரண்யா அங்கு நின்று கொண்டிருந்தாள். அவளைப் பார்த்துவிட்டு மீண்டும் திரும்பிக் கொண்டேன்.

"என் மேல கோவமா?"

"நான் ஏன் உன் மேலதான் கோபப்பட போறேன். நான் தான் எல்லாருக்கும் த  டார்ச்சர் ஆ தெரிறேன் ல."

"இல்லடி வேற ஒருத்தர் மேல இருந்த கடுப்ப  உன்மேல காட்டிடேன் சாரிடி."

"எல்லாருக்கும் என்ன பாத்தா எப்படி தெரியுது ன்னு தெரியல." அவளிடம் நொந்துபோன குரலில் கூறினேன்.

"என்னாச்சு தியா ஏதாவது ப்ராப்ளமா?"

"எல்லாமே ப்ராப்ளம் தான்." கலங்கிய கண்களை திரும்பி நின்று துடைத்துக் கொண்டேன்.

சரண்யா என் தோள் மீது கை வைக்க நானும் அவளை அணைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தேன்.

" ஏன் அழுகிற. சொன்னாதானே தெரியும். ப்ளீஸ் அழுகுறத நிப்பாட்டுடி. மொதல்ல என்ன ஆச்சுன்னு சொல்லு."

அழுகையை நிறுத்திவிட்டு என் திருமணம் ஆனதிலிருந்து நேற்று நடந்தது அனைத்தையும் சரண்யாவிடம் கூறினேன்.

" இந்த ஸ்வேதா யாருன்னு நீ அண்ணா கிட்ட கேட்டியா?"

நான் இல்லை என்று தலையசைத்தேன்.

அப்பொழுது யாரோ கதவை தட்டும் ஓசை கேட்டது.

திரும்பிப் பார்த்தபோது அங்கே சஞ்சய் அண்ணாவின் அம்மா நின்றிருந்தார்.

"நான் உள்ளே வரலாமா?"

"ஐயோ என்னம்மா பெர்மிஷன் கேட்டுக்கிட்டு உள்ள வாங்க."

"இல்லை நீங்க ஏதோ பேசிக்கிட்டு இருந்தீங்க."

"அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா."  அவர்களை உள்ளே அழைத்தேன்.

"தியாமா எப்பவுமே கணவன் மனைவிக்குள்ள   சண்டைல மூணாவது மனுஷன் உள்ள வர கூடாதுன்னு சொல்லுவாங்க.

ஆனா என்னால ஆதிய இப்படி பார்த்துட்டு சும்மா இருக்க முடியல டா. அதனாலதான் நான் இப்படி எல்லாம் பேசுறேன். என்ன தப்பா நினைக்காத."

" அம்மா அப்படி எல்லாம் இல்ல. உங்களுக்கு எங்க மேலே எல்லா உரிமையும் இருக்கு."

"மூணு வருஷம் கழிச்சு ஆதித்யா விட கண்ணுல நேத்து  சந்தோஷத்தையே பார்த்தோம். இதுக்கெல்லாம் காரணம் நீதானம்மா."

என் தலையை வாஞ்சையாக தடவ எனக்கு அவர் சொல்ல வருவது எதுவும் புரியவில்லை.

"அம்மா நீங்க என்ன சொல்ல வரீங்க எனக்கு ஏதும் புரியலை."

"ஸ்வேதா போனதுக்கப்புறம் ஆதித்யா ரொம்ப உடைஞ்சு போய்ட்டான். அதுக்கப்புறம் ஆதித்யா சிரிச்சு நாங்க பார்த்ததே இல்ல.

ஏன் இந்த மூணு வருஷத்துல ஒரு தடவை கூட கேரளாவுக்கே வரல. அதுக்கு முன்னாடி வரைக்கும் மாசத்துக்கு ஒரு தடவையாவது வந்து எங்கள எல்லாம் பார்த்துட்டு தான் போவான்."

அவர் ஸ்வேதாவை பற்றி பேசியதும் நானும் சரண்யாவும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டோம்.

"ஆண்டி, உங்களுக்கு ஸ்வேதாவை பற்றி தெரியுமா?" சரண்யா அவர்களிடம் கேட்டாள்.

"ஆமாம்மா எப்படி ஸ்வேதாவை மறக்க முடியும். ஆதிக்கு மொத்த உலகமும் ஸ்வேதா தான். " என்இதயம் ஊமை கண்ணீர் வடித்தது.

"ஆன்ட்டி எங்களுக்கு ஸ்வேதாவை பத்தி உங்களுக்கு தெரிஞ்சத சொல்லுவீங்களா?" சரண்யா மெதுவாக சஞ்சய் அண்ணாவின் அம்மாவிடம் கேட்டாள்.

"ஸ்வேதா பற்

றி எதுவும் தெரியாதா?" அம்மா அப்பாவியாக கேட்க, நாங்கள் இருவரும் தெரியாது என தலையை இட வலமாக ஆட்டினோம்.

எங்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தபடி ஆதித்யா பற்றியும் ஸ்வேதாவை பற்றியும் கூற ஆரம்பித்தார்.

உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் -16
உதயம் 💏16💏

ஆதி காரை பார்க் செய்து கொண்டிருக்க நான் காலிங் பெல்லை அழுத்தினேன்.

"ஹாய் தியா..." என்ற குரலுடன் கதவைத் திறந்தவனை பார்த்து அதிர்ந்தேன்.

யார் இவன்?  நான் இதற்கு முன் இவனை பார்த்ததே இல்லை. ஆனால் உரிமையோடு என்னை பெயரை சொல்லி அழைக்கிறான்.

கண்ணில் கேள்வியோடு அவனை பார்த்துக்கொண்டிருக்க அவனோ புன்னகையுடன் "நான் யாருன்னு யோசிக்கிறீயா?"

நான் நினைத்ததை சொன்னதும் பேந்த பேந்த முழித்தேன்.

"உன்னை யாருடா உள்ள விட்டது." என்ற ஆதியும் குரலில் திரும்பிப் பார்த்தேன்.

" ஏன் நான் உள்ள வர்றதுக்கு என்ன?"

"இல்ல நீங்கதான் ரொம்ப பிஸியான ஆளாச்சே. பிரண்டோட கல்யாணத்துக்கு கூட வர உங்களுக்கு டைம் இருந்திருக்காது." என வந்தவரின் காலைவாரினான்.

"நான் தான் சொன்னேன்ல ஆன்சைட்ல மாட்டிக்கிட்டேன்னு.  நான் என்ன கனவா கண்டேன் நீ திடுதிப்புன்னு கல்யாணம் பண்ணுவேன்னு."

"ஏன் நான் கல்யாணம் பண்ண கூடாதா?" ஒற்றை புருவம் உயர்த்தி ஆதித்யா கேட்க நான் அவனை ரசித்துக்கொண்டிருந்தேன்.

"பரவாயில்ல நல்ல முன்னேற்றம்தான். நான் கூட நீ சிங்கிளாவே செத்துருவியோன்னு நெனச்சேன்."

இதைக் கேட்டதும் நான் வந்தவனை முறைக்க,அவன் என்னை பார்த்து விட்டு,

" சிஸ்டர் நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்.டோன்ட் நீ ஆங்கிரி. அவன் என்னை இன்ரிடியூஸ் பண்ணமாட்டான். நானே பண்ணிக்கிறேன். என் பெயர் சஞ்சய்.  ஆதித்யாவோட பிரிண்ட்."

இவன்தான் சஞ்சயா. இவனிடம் தான் என்னைப் பற்றிக் கூறிக் கொண்டிருந்தான் என்று எண்ணம் என்னை தாக்க ஒரு நிமிடம் தடுமாறினேன்.

ஆனால் அந்த தடுமாற்றத்தை அவர்களிடம் காட்டாமல் சமாளித்தேன்.

"ஹாய்..." என சொல்லிவிட்டு அமைதியாக அங்கிருந்து நகர்ந்தேன்.

"என்னாச்சுடா ஏதும் ப்ராப்ளமா?" என  சஞ்சய்  குரல் என் காதில் விழுந்தது. ஆனால் நான் அதை கண்டுகொள்ளாமல் எங்கள் அறைக்கு சென்றேன்.

சஞ்சயை பார்த்ததும் நேற்றிரவு நான் ஆதியிடம் கேட்ட கேள்வி நினைவுக்கு வந்தது.

நேற்று இரவு ஊர் சுற்றிய களைப்பில் சோர்வாக இருக்க கட்டிலில் படுத்து விட்டேன். சிறிது நேரத்தில் ஆதியும் அருகில் படுத்துவிட்டான்.

இரவு தாகம் எடுக்க எழுந்து உட்கார்ந்தேன். அப்பொழுது என் புறம் திரும்பி படுத்த ஆதித்யாவை பார்த்தேன்.

அமைதியாக குழந்தை போல் உறங்கிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் என் முகத்தில் வெட்கம் கலந்த புன்னகை வந்தது.

அவனுடன் ஊர் சுற்றிய அனுபவம் எனக்கு புதியதாக இருந்தது. அவனுடைய நெருக்கம் என்னுள் ஏற்படுத்திய மாற்றங்களை நினைத்து பார்த்தேன்.

எப்பொழுது என்னுள் காதல் வந்தது என தெரியவில்லை. ஆனால் காதல் வந்த தருணத்தை அறியாமலேயே அவனில் மூழ்கி இருந்ததை உணர்ந்து கொண்டேன்.

திருமணத்திற்கு முன் நான் சந்தித்த ஆதித்யா விற்கும் இப்பொழுது நான் பார்க்கும் அதைத் தவிர்க்கும் ஏகப்பட்ட வித்தியாசம்.

ஆதித்யாவின் உண்மையான குணம் என்ன? நான் அவனை இப்படி பார்த்ததே இல்லை.

தூக்கம் மறந்து கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொண்டேன். புரண்டு படுத்ததில் உறக்கம் கலைந்தான் ஆதித்யா.

"இன்னும் தூங்கலையா தி.." எனக் கேட்டான்.

அவனின் தி அழைப்பு என்னுள் ஏற்படுத்திய மாற்றத்தை அனுபவித்துவிட்டு தூக்கம் வரவில்லை என்றேன்.

என்னை ஒருமுறை ஆழ்ந்து பார்த்தவன் எழுந்து அமர்ந்து கொண்டான்.

"என்ன தி ஆச்சு?   என்கிட்ட ஏதாவது சொல்லனுமா?" என கேட்டான்.

இல்லை என்று தலையசைத்தேன்.

" அப்புறம் ஏன் ஒரு மாதிரி இருக்க?"

"அது... நீங்க தப்பா நினைக்கலனா நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கட்டா...?"

"தப்பா நினைக்க என்ன இருக்கு. தாராளமா கேளு."

" நம்ம ஃபர்ஸ்ட் டைம் மீட் பண்ணும் போது சண்டை தான் போட்டோம். நம்ம ரெண்டு பேருக்குள்ள எதுவும் செட் ஆகல.

அதுக்கப்புறம் என்னை பொண்ணு பாக்க வந்தபயும் சரி அதுக்கு அப்புறம் நாம மீட் பண்ணும் போதும் சரி நாம அதிகமா சண்டைதான் போட்டோம்.

ஆனால் நீ என்கிட்ட மட்டும் ரூடா பிஹேவ் பண்றீங்களோன்னு தோணுச்சு.  எனக்கு தெரிஞ்சு  மாயாசரண்யா கூடலாம் நீங்க நல்லா தான் பேசுறீங்க. என்கிட்ட மட்டும் தான் கோவமா இருப்பேங்க.

இப்போ நீ நல்லா பேசுறீங்க தான். என்னால நம்ப முடியல. எந்த ஆதி நிஜம்  இந்த ஆதியா இல்ல இதுக்கு முன்னாடி நான் பார்த்த ரூடான ஆதியா

நான் பேச பேச அவன் முகம் யோசனையில் சென்றது.

மெதுவாக கட்டிலிலிருந்து எழுந்தான்‌

"தியா எனக்கே தெரியல. நான் என்ன பண்றேன்னு .மூணு வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஆதித்யா இருந்தான்.ஒரு ஆக்ஸிடெண்ட்ல அந்த ஆதித்யா  செத்துட்டான். ஆனா நீ பார்த்த ஆதித்யா  வேற தான்."

(புரியலன்னு யாரும் கோபப்பட வேணாம். புரிய கூடாதுன்னு தான் அவன் இப்படி குழப்புறான்.)

"எனக்கு புரியல ஆதி."

"சிலநேரம் என்னாலேயே என்ன புரிஞ்சுக்க முடியல தியா. எனக்குள்ள இருக்கிற கேள்விகளுக்கு நான் விடை தெரியாமல் இருக்கேன்.

ரொம்ப நேரம் ஆச்சு நீ தூங்கு. நாளைக்கு நாம்ம ஊருக்கு போகணும்.

இத பத்தி நாம இன்னொரு நாள் பேசலாம் என்றவன் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டான்.

அவன் யோசனையில் இருந்ததை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அவனை நான் தொந்தரவு செய்யவில்லை.

அவன் என்னை தூங்குமாறும் சைகை செய்ய நானும் படுத்துக் கொண்டேன். ஆனால் அவன் தூங்கவில்லை என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

நன்றாக தூங்கிக் கொண்டிருந்தவனை குழப்பி விட்டதை எண்ணி என்னை நானே கடிந்து கொண்டேன்.

ஆதியின் குரல் என்னை நிகழ்விற்கு கொண்டு வந்தது.

"தி charn உன் கூட பேசணுமாம்." என அலைபேசியை என்னிடம் கொடுக்க யார் அந்த charnn என்ற கேள்வி என் மனதில் எழுந்தது. இருந்தாலும் அவர்கள் லையனில் காத்திருக்கிறார்கள் என காதில் வைத்து ஹலோ என்றேன்.

"என்னை எல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா? பாவமே பிள்ளை கல்யாணம் இஷ்டமில்லாமல் பண்ணுச்சே.

என்னமோ ஏதோன்னு உனக்கு கால் பண்ணா அட்டென்ட் பண்ண மாட்டேங்குற. நீயும் கால் பண்ண மாட்டேங்குற.

என்னப்பா புருஷனோட கொடைக்கானல் புல்லா சுத்தி முடிச்சாச்சா. ஒரு அஞ்சு நிமிஷம் டைம் இருத்தா  எங்க கூடயும் கொஞ்சம் பேசுங்களேன்." என்ற சரண்யாவின் குரலில் அலைபேசியின் திரையைப் பார்த்தேன். அதில் charn என பதிவாகி இருந்தது.

ஆதித்யாவின் அலைபேசியில் எப்படி சரண்யா என யோசித்துக்கொண்டிருந்தேன்.

" தியா லைன்ல இருக்கியா. ஏதாவது பேசு."

" சாரி சரண். கொஞ்சம் கண்பியூஷன்ல இருந்தேன். அதான்."

" என்ன கண்பியூஷன்?  நீ காப்பியா தானே இருக்க?" என கவலையாக கேட்டாள்.

" ஆமாம் நான் ஹாப்பியா தான் டா இருக்கேன்." என அவளுக்கு ஆறுதல் அளித்தேன்.

" சரி வீட்டுக்கு கெஸ்ட் வந்துருக்காங்கலாமே நீ அவங்கள பாரு. நான் ஈவினிங் கால் பண்றேன்." என சரண்யா வைத்துவிட ஆதித்யா என் அருகே வந்தான்.

என் கையை பிடித்து அங்கிருந்த சோபாவில் அமர வைத்தான்.

" தி எனக்கு தெரியும். நீ ஏன் இப்படி தனியா வந்து மேல உட்காந்துருக்கன்னு.

நான் உன்ன வெறுக்கல. அது சஞ்சய்க்கு ரொம்ப நல்லாவே தெரியும். சோ அவ முன்னாடி  நீ  அன் கம்பார்டேபில பீல் பண்ண தேவையில்லை."

இவனுக்கு எப்படி என்னுடைய எண்ணங்கள் தெரிந்தது என தெரியவில்லை.

என்னால் இவனை புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஆனால் இவன் என்னுடைய எண்ணங்கள் அனைத்தையும் புரிந்து கொள்கிறான்.

எனக்கு சிறிது தயக்கம் சஞ்சய் பார்த்ததும் வந்தது உண்மைதான்.

அன்று ஆதித்யா என்னை வெறுக்கிறான் என்று சஞ்சயிடம் கூறியதால் அவன் பார்வை என்மேல் எப்படி இருக்கும் என்ற எண்ணம் தான் என் தயக்கத்திற்கு காரணமாக இருந்தது.

அந்த தயக்கத்தை ஆதி உடைத்தெரிந்து விட்டான்.

அதில்  சற்று நிம்மதி அடைந்து கீழே செல்ல தயாரானேன். சஞ்சை அத்தை மாமாவுடன் டைனிங் டேபிளில் அமர்ந்து இருந்தான்.

அத்தை என்னை பார்த்ததும் வந்து அணைத்துக் கொண்டார்.

"சந்தோஷமா இருக்குடா.என்னோட ஆதிய நீ திருப்பி கொடுத்துட்ட."

புரியாமல் முழிக்க அவரும் என் நெற்றியில் முத்தமிட்டு என்னை டைனிங் டேபிளில் அமரவைத்தார்.

அனைவர் முன்னும் ஏதும் கேட்க வேண்டாம் என நானும்  அமைதியாக விட்டுவிட்டேன்.

"உண்மையிலேயே மா ஆதி முன்ன மாதிரி மாறிட்டான்."

" நீதான் ரொம்ப மாறிட்ட" என ஆதி அவனை குற்றம்சாட்ட,

அவனோ

"அப்டில்லாம் ஒன்னும் இல்லடா. நான் பாரின்ல இருந்து நேரா இங்க தான் வரேன்.  இன்னும் வீட்டுக்கு கூட போகல."

"நம்ப முடியலையே."

"நெஜமாவாடா. அம்மாக்கு கால் பண்ணி பாரு. உங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு வராம ஊருக்கு வராத அப்படின்னு சொல்லிட்டாங்க."

"ரெண்டு பேருமா." ஆதி கேள்வியாக அவனை பார்த்தான்.

"புதுசா கல்யாணம் ஆன உங்களுக்கு விருந்துக்கு சொல்லி உங்களை கையோட கூட்டிட்டு வாடான்னு சொல்லிட்டாங்க."

"தியா நீயும் கண்டிப்பா திருவனந்தபுரத்துக்கு என்கூட வரணும். ப்ளீஸ்..."  என அவன் கெஞ்ச நானும் மகிழ்ச்சியாக ஆதியை பார்த்தேன்.

ஆதியோ " இல்லடா எனக்கு கொஞ்சம் மீட்டிங் இருக்கு. நான் இன்னும் நாலு நாள்ல திருச்சி போனும்."

"நாலு நாள் கழிச்சு தானே திருச்சி போனும். இப்ப எங்கூட வா. எப்போ மீட்டிங் கோ அப்போ அங்க இருந்து  பிளைட் பிடிச்சுக்கோ."

ஆதித்யா என்னை பார்க்க நானும் கெஞ்சும் தோரணையில் கண்களால் பிளீஸ் என கேட்டேன்.

என்னையே ஊடுருவி பார்த்தவன் சரியென சம்மதித்தான்.

ஆதி சஞ்சய் அண்ணாவுடன் நானும் திருவனந்தபுரத்தை நோக்கிய எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.

சிறிது நேரத்திலேயே சஞ்சய் அண்ணாவின் தங்கச்சி தங்கச்சி என்ற கூற்றில்  சஞ்சயை நான் அண்ணாவாக ஏற்றுக்கொண்டேன்.

கலகலவென பேசிக்கொண்டிருந்த சஞ்சய் அண்ணாவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆதியை கண்டுக்காமல் நாங்கள் இருவரும் பேசியவாறே பயணித்துக் கொண்டிருந்தோம். ஆதி எங்களை கவனித்துக் கொண்டே இருந்ததையும் ஓரக்கண்ணால் பார்த்தேன்.

திருவனந்தபுரத்தில் சஞ்சய் அண்ணாவின் வீட்டில் வண்டி நிற்க சஞ்சய் அண்ணாவின் தாய் தந்தை பாட்டி தாத்தா என அனைவரும் வாசலில் வந்து எங்களை வரவேற்றனர்.

அவர்கள் என்னிடம் சகஜமாக பேச புது இடத்தில் இருப்பது போல் தோன்றவே இல்லை. சரண்யாவிற்கு நான் திருவனந்தபுரத்தில் இருப்பதாக மெஸேஜ் செய்தேன்.

இரவு நேரம் ஆகிவிட்டதால் சரண்யா நாளை வருவதாக கூறி இருந்தாள். இரவு கேரளாவின் பாரம்பரிய உணவை சாப்பிட்டுவிட்டு அவர்கள் எங்களுக்காக கொடுத்த அறையில் ஓய்வு எடுத்தோம்.

"தி, உன்னோட சஞ்சய் அண்ணாவோட ரொம்ப பிசியா இருக்க போல." ஆதியின் குரலில் ஏகத்துக்கும் என்னுடன் மட்டும் பேசவில்லை என்று ஏக்கம் நிறைந்திருந்தது.

" அப்படின்னு இல்ல. ஆனா அவங்க கூட இருக்க எனக்கு  ரொம்ப பிடிச்சிருக்கு. ஜாலியா இருக்கு."

"அப்போ என் கூட இருக்கும்போது அப்படி உனக்கு தோணலையா...?" என்ற கூற்றில் இருந்தது என்னவென்று பிரித்தறிந்து பார்க்க முடியவில்லை.

கவலையா ஏக்கமா பரிதவிப்பா என புரியாமல் அது எதுவாக வேணாலும் இருக்கட்டும் அதை துடைத்தெறிய வேண்டியது என்னுடைய பொறுப்பு என,

" அப்படி இல்ல. அண்ணா கூட இரண்டு நாள் தானே இருப்போம். அதுக்கப்புறம் லைப் லாங் நாம ரெண்டு பேர் மட்டும் தான் இருப்போம். அப்போ நல்லா என்ஜாய் பண்ணலாம்."

என சமாதானம் கூற அவனோ சிறிது சமாதானம் ஆகினான். பின் நாங்கள் இருவரும் சிறிதுநேரம் பேசிக்கொண்டு படுத்து உறங்கி விட்டோம்.

நான் அதிகமாக வெளியூர்களுக்கும் சென்றதில்லை.  மதுரைக்குள் இருக்கும் இடத்தை மட்டும் தான் சரண்யா மாயாவிடம் சுத்தி பார்த்திருக்கிறேன்.

அதுபோக பள்ளிக்கல்வி சுற்றுலாக்களை ஒரு சில ஊருக்கு மட்டும் சென்றிருக்கிறேன்.

என் பெற்றோரிடம் எங்கும் சென்றதாக எனக்கு நினைவில் இல்லை.

சஞ்சய் அண்ணா ஓவியக் கண்காட்சி அருங்காட்சியகம் அழைத்துச் சென்றார். அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அங்குதான் முதன்முதலில் உயிரியல் பூங்கா வை பார்க்கப் போகிறேன். அதுவும் என் ஆதியுடன்.

அங்கு சில பேர்  இந்த நேரத்திலும் சில பேர் நடை பயணம் செய்து கொண்டிருந்தனர்.

வருவதாக சொன்ன சரண்யா இன்னும் வரவில்லை. இவளுக்கு இதே வேலையாக போய்விட்டது. போன் செய்த  பார்த்தேன்.

"தியா. அந்த சொட்ட சேட்டா என்னை விட மாட்டேங்குறான்டி. நான் வர கொஞ்சம் லேட்டாகும்."

சரண்யா அன்றும் இப்படித்தான்.மாலில் என்னை காக்க வைத்தாள் என எண்ணும் போதே ஆதித்யாவை முதன்முதலில் பார்த்த நியாபகம் வர்ற அவனை ஏறிட்டேன்.

அவன் என்னை பார்த்து என்னவென்று கேட்க புன்னகையுடன் ஒன்றும் இல்லை என தலையசைத்தேன்.

நானும் ஆதியும் உயிரியல் பூங்காவிற்கு அருகில் காத்துக் கொண்டிருக்க, சஞ்சய் அண்ணா சரண்யாவுடன் சேர்த்து எங்கள் நால்வருக்கும் டிக்கெட்டை வாங்கிக்கொண்டு வந்தார்.

"தியா மா"

சஞ்சய் அண்ணா என்னை இப்பொழுதெல்லாம் தியாமா என்றுதான் அழைக்கின்றார்.

"தியாமா உன் ப்ரெண்ட் வந்துட்டாளா?"

"இல்லண்ணா அவ  வர இன்னும் நேரமாகும்ன்னு சொன்னா."

"இன்னும் ரெண்டு மணி நேரத்துல ஜூவ  கிளோஸ் பண்ணிருவாங்க. நீங்க இப்போ போனா தான் ஒழுங்கா எல்லாத்தையும் பாத்துட்டு வர முடியும்."

"ஆனா சரண்யா..."

"நான் உன் பிரெண்ட கூட்டிட்டு வரேன். நீ ஆதி கூட உள்ள போய் சுத்தி பாரு."

நான் ஆதியை  பார்க்க அவன்,

" சரி. இதுதான் சரண்யா நம்பர். நீ கால் பண்ணி எப்போ வருவான்னு கேட்டு கூட்டிட்டு வா. நான் உள்ள போய் எல்லாத்தையும் சுத்திக்காட்டுகிறேன்."

ஆதி என்னை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.

காடு போன்ற அமைப்பை ஒத்திருந்தது அந்த உயிரியல் பூங்கா.

திருவனந்தபுரம் உயிரியல் பூங்கா  எப்போதுமே காட்டு விலங்குகளுக்கு ஒரு அற்புதமான வாழ்விடமாக இருக்கிறது. மேலும் அனைத்து பார்வையாளர்களுக்கும் அனைத்து சுற்றுலா பயணங்களிலும் எப்போதும் ஏற்ற ஒரு இடமாக இருக்கும்.

மிருகக்காட்சிசாலை எப்போதும் குடும்பங்கள், தம்பதிகள் மற்றும் எல்லா வயதினரையும் போற்றும் ஒரு நினைவகமாக இருந்து வருகிறது.

இந்த மிருகக்காட்சிசாலை சமீபத்தில் வெள்ளை வங்காள புலி மற்றும் குறிப்பாக அனகோண்டாஸின் புதிய சேர்த்தல் பற்றிய செய்திகளும் வந்துள்ளது.

அதிகாரிகள் அனகோண்டாக்களுக்காக பிரத்தியேகமாக ஒரு உறைவிடம் கட்டியுள்ளனர், இது மிகவும் உற்சாகமானது.

ஆனால் மறுபுறம், பல விலங்குகளின் அடைப்புகள். விலங்குகளை கூட கண்டுபிடிக்கும் பரிதாப நிலையில் உள்ளன.  அடைப்புகளின் கிரில்ஸ் பல துருப்பிடித்தன. ஒரு சில விலங்குகள் புறக்கணிக்கப்பட்ட பக்கத்தில் இருப்பதாகத் தெரிகிறது.

ஆனால் இது தவிர, மிருகக்காட்சிசாலை என்பது உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அனுபவிக்க வேண்டிய ஒரு வாழ்நாள் அனுபவமாகும்.

இந்த அனுபவத்தை நான் ஆதித்யாவுடன் சேர்ந்து அனுபவித்துக்கொண்டிருந்தேன்.

எல்லா விலங்குகளுடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். கூண்டில் அல்லாது சுதந்திரமாக சுற்றித்திரியும் சில விலங்குகளை பார்க்கும் பொழுது சிறிது பயமாக இருந்தாலும் வித்தியாசமாக இருந்தது.

எல்லா விலங்குகளிலும் புகைப்படம் எடுத்துக் கொண்டு ஆதித்யா எனக்கு வாங்கி தந்த சில உணவுப் பண்டங்களை கொரித்துக்கொண்டே சுற்றி பார்த்து கொண்டிருந்தேன்.

சிறிது நேரத்தில் ஆதித்யாவின் அலைபேசியில் அவனுக்கு அழைப்பு வர சிறிது நகர்ந்து நின்று பேசிக் கொண்டிருந்தான்.

நானும் அங்கே இருந்த நீர்யானையின் இருப்பிடத்திற்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன்.

அப்போது என் அலைபேசி நழுவி கீழே விழ அதுவோ வேலியை தாண்டி நீர்யானை இருக்கும் இடத்திற்கு சற்று அருகே விழுந்து இருந்தது.

என் கையை உள்ளே விட்டு எடுக்க முயற்சி செய்யலாம் எனப் பார்த்தால் அதுவோ தூரமாக விழுந்து இருந்தது.

ஏதாவது குச்சி கிடைக்கிறதா என பார்க்கலாம் என அங்கும் இங்கும் தேடிக்கொண்டிருந்தேன்.

ஒரு குச்சி கிடைக்க அதை எடுத்துக்கொண்டு அலைபேசியை எடுக்க முயற்சித்தேன். ஆனால் அந்த குச்சியால் அலைபேசியை இருந்த இடத்தில் பாதி அளவு தூரத்தை கூட தொட முடியவில்லை. அவ்வளவு தூரத்தில் சென்று விழுந்திருந்தது அமெரிக்கா.

ஆதியிடம் கூறலாம் அவன் ஏதாவது செய்வான் என ஆதியை தேடினேன்.

ஆனால் ஆதித்யா அங்கு இல்லை.

எங்கு சென்றுவிட்டான் என பதறி ஆதித்யாவை தேட ஆரம்பித்தேன்.

அது காடு போன்ற அமைப்பை கொண்டிருந்த உயிரியல் பூங்கா.

மொத்தம் 55 ஏக்கரை கொண்டிருந்தது.

இந்த 55 ஏக்கர் காடு போன்ற அமைப்பில் ஆதித்யாவை கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது.

அலைபேசியும் கையில் இல்லை. நாம் தேடிக் கொண்டு எந்த இடத்திற்கு செல்கிறேன் என்று தெரியாமலே தேடிக் கொண்டிருந்தேன்.

சிறிது நேரத்தில் தான் கவனித்தேன் நான் இருந்த இடத்தில் மக்கள் நடமாட்டம் சிறிதும் இல்லாமல் இருந்தது.

பயந்து போய் மீண்டும் அந்த இடத்திற்கு செல்லலாம் என பார்த்தால் எப்படி செல்வது என பாதை தெரியவில்லை.

எப்படியோ அலைந்து திரிந்து நீர்யானை இருந்த இடத்திற்கே வந்து சேர்ந்தேன்.

சிறிது நேரத்திற்கு முன் கூட்டமாக இருந்த அந்த இடத்தில் இப்பொழுது ஒரு ஆளும் இருக்கவில்லை.

யாராவது மனிதர்கள் கண்ணிற்கு தென்படுவார்கள் அவர்களிடமாவது உதவி கேட்கலாம் என கண்களை அலைபாய விட என் கண்கள் அலைபாய இடமெல்லாம் விலங்குகள் மட்டுமே இருந்தன.

சில அடி தூரத்தில் இருந்த கூண்டில் இருந்த சிங்கத்தின் கர்ஜனையை கேட்டு இன்னும் பயந்துபோய் நடுங்கினேன்.

எங்கு செல்வது என தெரியாமல் அங்கிருந்து வேகமாக நடந்தேன். என் காலடி சத்தமே எனக்கு கிலியை உண்டாக்கியது.

தூரத்தில் எங்கோ "தி" என்ற ஆதியின் அழைப்பு காதில் விழ என் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. குரல் வந்த திசையை நோக்கி ஓடினேன்.

இப்போது அழைப்பு கொஞ்சம் சத்தமாக கேட்க சுற்றிலும் கண்களை அலைபாய விட்டேன். ஆனால் ஆதி கண்களுக்குத் தென்படவில்லை.

"ஆதிதிஇஇஇ" என என்னால் முடிந்த மட்டும் கத்தினேன்.

"தி" உருகிய அழைப்பு என் பின்னே ஒலிக்க திரும்பினேன். கண்களில் கண்ணீருடன் நின்று கொண்டிருந்த ஆதி என் கண்ணில் பட்டான்.

ஓடி சென்று அவனை அணைத்துக்கொள்ள அவனோ இன்னும் என்னை இறுக்கி அணைத்துக் கொண்டான்.

நான் பயந்ததை விட ஆதிதான் அதிகம் பயந்து இருப்பான் என நினைக்கிறேன்.

அவனுடைய இதயத்துடிப்பு என்னுடைய இதயத்துடிப்பை விட அதிகமாக இருந்தது.

கண்ணீரை சிறிது சிறிதாக சேமித்துக் கொண்டேன்.

அவனிடமிருந்து விலக முயற்சிக்க அவன் பிடி இன்னும் இறுகியது.

"ஆதி" என நான் மெல்லிய குரலில் இறைஞ்ச ..

"ப்ளீஸ்டி... கொஞ்ச நேரம்..." என அணைப்பின் இறுக்கத்தை கூட்டினான். அவனின் இதயத்துடிப்பு அவனின் பதட்டத்தை அப்பட்டமாக காட்டியது.

அவன்  இதயத்துடிப்பு இன்னும் சீராகவில்லை. அவனுக்கு ஆறுதலாக அவன் முதுகை வருடி விட்டேன்.

"ஆதி, எனக்கு ஒன்னும் இல்ல."

"எங்க போன. நான் ரொம்ப பயந்துட்டேன்.  உன்னோட போன் எங்க?" என ஏக்கத்தில் ஆரம்பித்தவன் கோபமாக கேட்டான்.

நானோ என் அலைபேசியில் கீழே விழுந்த  கதையையும் அதன் பிறகு நான் அவனை தேடியதையும்  அவனிடம் சொல்ல  அவன் மீண்டும் என்னை அனைத்துக்கொண்டான்.

" பயப்படாத. நாம இப்போ போயிடலாம்." என என்னை அழைத்துக் கொண்டு வாசலுக்கு சென்றான். ஆனால் கேட் பூட்டியிருந்தது.

ஆதியின் கடிகாரத்தில் மணியைப் பார்க்க அது ஆறு என காட்டியது.

அப்பொழுதுதான் அந்த இடம் இருட்டிவிட்டது என்பதை நாங்கள் உணர்ந்தோம்.

எப்போதும் இந்த உயிரியல் பூங்கா 5 மணிக்கே அடைத்து விடுவார்கள். அதனால்தான் எங்கும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது.

ஆனால் உயிரியல் பூங்கா அலுவலகத்தின் அலுவலக எண் அங்கே இருந்தது. ஆதியின் அலைபேசியை எடுத்து பார்க்க அதுவும் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது‌

வேறு வழியின்றி அங்கேயே அமர்ந்தோம்.

எப்படியும் விலங்குகளுக்கு தீவனம் போட ஆட்கள் யாரேனும் உள்ளே வருவார்கள் என வாசலருகே அமர்ந்தோம்.

சிறிது நேரத்தில் அங்கே கொசுக்கள் அதிகமாக ஆதித்யா என்னை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றான்.

ஒட்டகச்சிவிங்கி நின்று இருக்க அதனருகே ஆதித்யா என்னை  அமர வைத்து அவனும் என்னருகே அமர்ந்து கொண்டான்.

இதற்கு முன் எங்களுக்குள் எழுந்த இந்த உணர்வு போராட்டத்தின் தாக்கத்தால் நாங்கள் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

நேரம் செல்ல செல்ல அங்கே குளிர் ஆக்கிரமித்தது. நானும் கைளை தேய்த்துக் கொண்டிருக்க, ஆதித்யா அவன் சட்டையை கழட்டி என் மேல் போர்த்தி விட்டான்.

நான் திரும்பி ஆதியை பார்த்தேன். வெற்று மார்போடு என்னை நெருங்கி அமர்ந்திருந்தான். எனக்குள் ஏதோ இனம்புரியாத உணர்வு தாக்க இதயம் படபடக்க நான் அவனை விட்டு விலகினேன்.

அவன் என்னை மேலும் நெருங்கி என்னை அவன் மேல் சாய்த்துக் கொண்டான். நானும் அந்த குளிருக்கு இதமாக என் கணவனின் மார்பில் உரிமையுடன் முகம் புதைத்தேன்.

தூரத்தில் கேட்ட ஏதோ விலங்கின் சத்தத்தில் கண்விழித்து பார்க்க ஆதி என் இடுப்பைச் சுற்றி அணைத்த வண்ணம் உறங்கிக் கொண்டிருந்தான்.

அவன் கண்ணில் இருந்து வந்த கண்ணீர் அவன்  எவ்வளவு தூரம் பயந்தான் என்பதே அலகாக காட்டிக் கொடுத்தது.

என் கணவன் என்னை காதலிக்கும் தூரம் வெகு தொலைவில் இல்லை என எண்ணிக்கொண்டு,

"எப்படிடா என் மனசுக்குள்ள வந்த?" என அவரிடம் கேட்டு விட்டு மீண்டும் அவன் மார்பில் சாய்ந்து கொண்டேன்.

ஆதியோ தூக்கத்திலே ,

"எப்படி நீ என் மனசுக்குள்ள வந்தியோ அப்படி." என்று தூக்கத்திலே என் நெற்றியில் முத்தமிட்டான்.

முதல் முத்தம் சிலிர்த்தது என் உடல். நானோ அதிர்ச்சியில் அவனைப் பார்த்தேன்.

" நீ இல்லாம என்னால முடியல ஸ்வேதா. ஐ லவ் யூ ஸ்வே குட்டி." என்றான்.

அவனின் ஐலவ்யு ஸ்வே குட்டியில் அனல் மேல் விழுந்த புழு போல் அவனிடமிருந்து துடித்து விலகினேன்.

அவன் அணைப்பில் இருந்து விலகிய அடுத்த நொடியே எழுந்தவன்,

" என்னாச்சு தி?" என என்னை நெருங்கினான்.

" என்ன தொடாதே." என்று கை நீட்டி அவனை எச்சரித்தேன்.

சற்று முன் இதமாக இருந்த அவன் அணைப்பு தொடுகை  அவனுடைய முதல் முத்தம் எல்லாம் இப்பொழுது எனக்கு அருவருப்பாக தோன்றியது.

என்னை நினைத்து எனக்கே கேவலமாக இருந்தது.

யாரோ ஒருவரை காதலிக்கும் ஆதித்யாவை நான் காதலித்தேன்.

இப்பொழுது தான் அவனின் விலகலுக்கான காரணமும் அவன் என்னை வெறுக்கும் காரணமும் புரிந்தது.

"தி என்ன ஆச்சு பயந்துட்டியா?" என மீண்டும் அவன் என்னை நெருங்க,

" யாரது?" என்ற சத்தத்தில் இருவரும் அதிர்ந்து திரும்பினோம்.

விலங்குகளுக்கு உணவு விநியோகிக்க வந்தவர் எங்கள் இருவரை பார்த்து விசாரித்தார்.

நாங்கள் வழி தவறியதைக் கூறியவுடன் அவர் எங்களை வெளியே அழைத்துச் சென்றார்.

ஆதி என்னை சஞ்சய் அண்ணாவின் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு சென்றான்.

ஆனால் நான் ஆதியிடம் பேசவும் இல்லை. அவன் பேசிய எதையும் காதில் வாங்குவதாகவும் இல்லை.

ஆனால் வழி முழுவதும் அவன் பார்வை என் மீது படர்ந்து இருந்ததை நான் உணர்ந்து தான் இருந்தேன்.

ஆனால் ஏனோ அந்தப் பார்வை எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை. ஒருவிதமான அருவருப்பாய் மட்டுமே உணர்ந்தேன்.

வீடு வந்து சேர்ந்தேன்.

எதுவும் சாப்பிடாமல் அறையில் வந்து படுத்துக் கொண்டேன்.

ஆதியும் எதுவும் சாப்பிட்டதாக தெரியவில்லை.

என்னிடம் எவ்வளவோ பேச முயற்சி செய்தும் நான் அவன் புறம் திரும்பவும் இல்லை. கண்களை மூடி படுத்துக்கொண்டேன்.

ஆனால் தூக்கம் வர மறுத்தது.

ஆதி எழுந்து வெளியே செல்ல நான் எழுந்து பால்கனி

யில் சென்று நின்றேன்.

என்னுடைய கனவு கலைந்தது. நான் ஏன் ஆதித்யாவை காதலித்தேன் என தெரியவில்லை.

எந்த மனைவியால் தான் பொறுத்துக்கொள்ள முடியும் தன் கணவனின் இதயத்தில் வேறொரு பெண் சிம்மாசனமிட்டு அமர்ந்து இருப்பதை.

இத்தனை நாள் ஆதித்யாவின் விலகலுக்கு வேறு ஏதாவது காரணம் இருக்கும் என எண்ணியிருந்தேன்.

ஆனால் அவன் மனதில் வேறு ஒருவள் இருப்பதால் தான் என்னை விட்டு விலகியே இருக்கிறான் என புரிந்து கொண்ட போது என் இதயம் கனத்தது.

உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் -15
உதயம் 💏 15 💏

ஏதேதோ கற்பனைகளுடன் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வோம் என்ற எண்ணத்தில் இந்த கொடைக்கானல் பயணத்திற்கு சம்மதித்தேன். ஆனால் இப்பொழுது இந்த பயணமே அனல் மேல் நிற்பது போல் தகிக்கும்.

மதுரையிலிருந்து ஆரம்பித்த எங்கள் மௌனம் கொடைக்கானல் வரும்வரை ஒருவரை ஒருவர் பார்க்காமலே  தொடர்ந்தது.

இப்பொழுது அறையில் நான் மட்டும் தனியாக இருக்கிறேன். ஆதித்யா எங்கோ அலுவலக வேலை என வெளியே சென்று விட்டான். அதுவும் என்னிடம் கூறவில்லை. அவனுடைய உடையை வைத்து கணித்துக் கொண்டேன்.

கொடைக்கானல் வந்து இரண்டு நாட்கள் ஆகின்றன. ஆனால் நாங்கள் இருவரும் முகம் கொடுத்து பேசக்கூட இல்லை.

தனியாக இருப்பது வெறுமையாக தோன்றுகிறது. எங்கள் வீட்டிலும் இதற்குமுன் தனிமையில் தான் இருந்தேன்.

தந்தை அலுவலகம் சென்று விட, தாய் பூஜை அறையில் இருக்க பாட்டி கிராமத்தில் தான் இருப்பார். நான் வீட்டில் தனியாகத் தான் இருப்பேன்.

ஆனால் அந்தத் தனிமையை இனிமையாக்க மாயாவும் சரண்யாவும் இருப்பார்கள்.

இப்பொழுது மாயாவும் சரண்யாவும் அலைபேசியில் தொடர்பு கொள்கிறார்கள். ஆனால் ஏனோ அவர்களிடம் பேச எனக்கு தோன்றவில்லை.

காரணங்கள் ஏதாவது சொல்லி அலைபேசியை அணைத்து விட்டு தனிமையில் அழுகிறேன்.

இந்த தனிமையும் கொடுமையாக இருந்தாலும் வேறு வழியின்றி இதையே அனுபவிக்கிறேன்.

மணி இரவு பதினொன்றாகிவிட்டது. ஆதித்யா இன்னும்  வரவில்லை. தனியாக சாப்பிடவும் பிடிக்காமல் இரவு உணவையும் நிராகரித்துவிட்டு நிலவையும் இந்த குளிரையும் ரசிக்கவும் அனுபவிக்கவும் முடியாமல் தனித்து பால்கனியில் நின்று கொண்டிருக்கிறேன்.

கதவு தட்டும் சத்தம் கேட்டது. நான் சென்று திறக்கும்போது ஆதித்யா தான் நின்று கொண்டிருந்தான்.

என்னை ஏறெடுத்தும் பார்க்காமல் அழைபேசியில் பேசிக்கொண்டே உள்ளே நுழைந்தால் உள்ளே வந்தவன் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

அவனிடம் பேசுவதற்கு படுத்து விடுவதே மேல் என எண்ணி படுக்கையில் படர்ந்தேன்.

குளித்து வந்தவன் கட்டிலின் மறு ஓரத்தில் படுக்கும் அரவத்தை உணர்ந்து கண்களை மூடி நித்திரைக்கு சென்றேன்.

காலை 8 மணி ஆகியும் இன்னும் இருள் சிறிது படர்ந்திருக்க கண்களில் திறக்கமுடியாமல் அந்த குளிருக்கு இதமாக பெட்ஷீட்டை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூக்கத்தை கலைக்க பிடிக்காமல் உறங்கிக் கொண்டிருந்தேன்.

ஆதித்யா யாரிடமும் கத்திக்கொண்டிருக்கும் சத்தம் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.

இன்று யார் அவனிடம் மாட்டினார்களோ நாம் நம் வேலையை பார்ப்போம் என என் தூக்கத்தை கெடுக்க முயன்ற அவன் குரலை அலட்சியம் செய்து கண் மூடினேன்.

இதில் கதவு வேறு யாரோ தட்டும் சத்தம் கேட்டது.

ஆதித்யாவும் கதவை திறக்கும் நோக்கத்துடன் இல்லை என்பதை புரிந்து கொண்டு மெதுவாக படுக்கையில் இருந்து எழுந்தேன்.

"இல்லன்னு சொன்னா என்ன அர்த்தம். சிஸ்டம் ல இருந்தது எப்படி காணாமல் போகும். என் லேப்ல ஃபைல் ஓபன் ஆகவே இல்ல.

எனக்கு தெரியாது எப்படியாவது ரெக்கவர் பண்ணி எனக்கு சென்ட் பண்ணுங்க. ஏன் இவ்வளவு யூஸ்லெஸ்ஸா இருக்கீங்க. இது எவ்வளவு பெரிய காண்ட்ராக்ட்ன்னு தெரியும் தானே."

என யாரையோ வறுத்து எடுத்து கொண்டிருந்தான். ஆதித்யா குமார்.

நான் கதவை திறக்க அங்க பேரர் சிற்றுண்டியுடனும் பழச்சாறுடனும் நின்று கொண்டிருந்தான்.

ஆதித்யா ஆர்டர் செய்திருப்பான் என அதை எடுத்துக் கொண்டு ஆதி அமர்ந்திருந்த சோபாவின் அருகில் இருந்த டீபாயில் வைக்க குனியும்போதும் ஆதித்யா வேகமாக கத்திக்கொண்டே எழுந்தவன் என் கையில் இருந்த ட்ரேயையை தட்டிவிட அதிலிருந்த பழச்சாறு மொத்தமும் லேப்பில் கொட்டியது.

"Damn..." என அவன் லேப்டாப்பை தட்ட அதுவும் செயல் இழந்து இருந்தது.

என் புறம் திரும்பியன்,

" இடியட். அறிவில்ல உனக்கு." அவன் என் மேல் பாய்ந்தான்.

"நான் இல்ல ஆதி... நீ தான்..." என பேசிக்கொண்டிருக்கும்போதே என் கன்னத்தில் இடியென விழுந்து அவன் அறை.

'ஜஸ்ட் ஸ்டாப் இட் யூ இரிடேட்டிங்க் இடியட்."  அவன் கோபத்தை அடக்க கையால் தலைமுடியை கோதி என்னை தள்ளிவிட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

என் கன்னத்தில் கை வைக்க அது தகதகவென எரிந்தது. கண்ணீர் விட்டு அந்த இடத்தை இதமாக வருட நினைக்க எரிச்சலும் அதிகமாக இருந்தது.

என் தந்தை கூட என்னை இதுவரை கைநீட்டி அடித்ததில்லை. ஆனால் இவன்?

என்னால் முடியவில்லை. என் மீது எந்த தவறும் இல்லை. அவன்தான் திடீரென எழுந்தான்.

அவனால்தான் பழச்சாறு அவன் மடிக்கணினியில் கொட்டியது. தவறை அவன் மீது வைத்துக் கொண்டு அவனுடைய அலுவலக கோபத்தை என்மீது காட்டினால் என்ன அர்த்தம்.

ஒருவேளை என்னை வெறுப்பதால் கோபத்தை காட்டுகிறானா என்ற எண்ணமும் வர்ற மனம் கசந்து போனது. கண்களை துடைத்துக்கொண்டு அவனுடைய மடிக்கணினியை எடுத்து என் மடியில் வைத்தேன்.

பழச்சாறு முழுவதும் கீபோர்டை நனைத்திருந்தது. எப்படியும் முழு பழச்சாறும் உள்ளே சென்றிருக்க வேண்டும்.

ரூம் சர்வீஸ் க்கு போன் செய்து எனக்கு தேவையான டூல்ஸை கேட்டேன்.சிறிது நேரத்தில் நான் கேட்டதும் கிடைத்தது.

மடிக்கணினியின் பேட்ரியை தனியாக கழட்டிவிட்டு  மடிக்கணினியை ஸ்கூருவை கழட்டி விட்டு அதை திறந்து ஆராய்ந்தேன். உள்ளே அங்கங்கு தண்ணீராக இருக்க ஒவ்வொன்றாய் சுத்தம் செய்து ப்ளோ செய்தேன்.

ஸ்லாட்டில் கனெக்ட் செய்து இருந்த வயர்களை கழட்டி துடைத்துவிட்டு மீண்டும் பொருத்தினேன்.

துணியை கொண்டும் ப்ளோவரை கொண்டும் கீபோர்ட்டை நீர் தடையின்றி செய்து லேப்டாப்பை மறுபடியும் ஸ்கூரூவ் வை டைட் செய்து மடிகணினியை ஆன் செய்தேன்.

மடிக்கணினி உயிர் பெற என் உயிர் மீண்டும் வந்தது. கண்டினியூ ஸ்டார்டிங் என கேட்க கன்டினியூ கொடுக்க விட்ட இடத்தில் மீண்டும் திரை நின்றது. அந்த பைலின் பார்மட்டை சரி செய்து முடிப்பதற்கும் ஆதி குளியலறையிலிருந்து வருவதற்கும் சரியாக இருந்தது.

"என்னோட லேப்ல என்ன பண்ற. அதான் மொத்தமா முடிச்சிட்டியே" என காரசாரமாக கேட்டான்‌.

உள்ளுக்குள் வெதும்பினாலும் உணர்ச்சிகளை துடைத்தவளாய்,

"உங்க லேப்பை சரி பண்ணிட்டேன். அந்த  பைல் பார்மேட் உங்க லேப்ல சப்போட்டா ஆகல. அதனால் பார்மேட் சேஞ்ச் பண்ணி வெச்சி இருக்கேன். இப்போ ஓபனாகும் பாத்துக்கோங்க."

இதற்கு மேலும் அங்கு நின்றால் அவன் எதிரில் அழுது என் பலவீனத்தை காட்டு விடுவேனோ என எண்ணி பால்கனிக்கு சென்று அமர்ந்து கொண்டேன்.

அவன் தயாராகி வெளியே செல்லும் அரவம் கேட்டது. நான் திரும்பிப் பார்க்கக்கூட இல்லை. அவன் சென்று விட்டான் என உணர்ந்தும் அதே இடத்தில் அமர்ந்து என் நிலையை எண்ணி நானே நொந்துக்கொண்டேன்.

இவனை எந்த விதத்தில் சேர்ப்பது. கமலை கேட்டது போல் இவன் நல்லவனா கெட்டவனா என்ற எண்ணம் சந்தேகம் என்னுள் எழுந்தது.

ஒரு நேரம் நன்றாக பேசுகிறான். அக்கறையாக நடந்து கொள்கின்றான். சொல்லாமலே என் வலிகளை புரிந்து மாத்திரைகளை தருகிறான். சில நேரம் என்னை அடியோடு வெறுக்கிறான். காரணமின்றி என்மேல் கோபப்படுகிறான்.

இவனை என்னவென்று நினைக்க என எனக்கு நானே புலம்பிக்கொண்டு பால்கனியில் அமர்ந்து இருந்தேன்.

காலையில் அமர்ந்தவள் அந்த இதமான குளிரையும் பொருட்படுத்தாமல் என் வாழ்க்கையே எண்ணி கொண்டே அமர்ந்திருக்க மதிய நேரம் வந்தது.

என் அழுகையை எல்லாம் உள்ளுக்குள் அடக்கிக்கொண்டு என் பலவீனத்தை வெளியே காட்டாமல் அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தேன்.

கதவு திறக்கும் சத்தம் கேட்க அப்போது தான் உணர்ந்தேன் கதவை சாத்தாமல் தனியாக இருந்திருக்கிறேன் என்று.

மெதுவாக எட்டிப் பார்க்க உள்ளே நுழைந்தவனை அவனின் குரலை வைத்தே யாரென அறிந்து கொண்டேன்.

"தியா.... தியா...

வேர் ஆர் யூ?" உற்சாகமாக வந்து கொண்டிருந்தான்.

என்ன இவ்வளவு உற்சாகமாக வருகின்றான் என யோசித்தாலும் நான் இருந்த இடத்தில் இருந்து நகரவே இல்லை.

இப்போது உற்சாகமாக வருவான்‌ என்னை காயப்படுத்திவான். நான் மீண்டும் இதே இடத்தில் வந்து அமர வேண்டும். அதற்கு நான் இங்கே இருந்து கொள்வதே மேல் என அவன் குரலைக் கேட்டும் கேட்காதது போல் இருந்தேன்.

"தியா எங்க இருக்க?" பால்கனிக்கு வந்தவன்,

" நீ இங்க இருக்கியா... எவ்ளோ நேரமா கூப்பிட்டு இருக்கேன். யூ நோ வாட் உன்னால எனக்கு எவ்ளோ பெரிய காண்டராக்ட் கிடைச்சிருக்கு தெரியுமா. ஐ அம் சோ ஹாப்பி." என் அருகில் வர அப்போதும் நான் அவனை கண்டு கொள்ளவில்லை.

அவன் என் கையை பிடித்து இழுத்து எழ வைத்து அவன் புறம் திருப்பினான்.

"நான் எவ்வளவு சந்தோஷமான விஷயம் சொல்லிக்கிட்டு இருக்கேன். நீ என்ன பண்ற?"

அப்போதுதான் அவன் முகத்தைப் பார்த்தேன். அவன் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம் இருந்தது.

அந்த புன்னகை ஏனோ எனக்கு மனநிம்மதியை தந்தது.

நான் மெல்லிய புன்னகையுடன், "கங்கிராட்ஸ் ஆதித்யாகுமார்" எனும்போது அவனுடைய கண்கள் என் கண்ணத்தில் பதிந்தது.

அவனின் சந்தோஷமான முகம் நொடியில் வருத்தத்தை தத்து எடுப்பதை என்னால் பார்க்க முடிந்தது.

இவனின் எண்ணங்களே என்னால் என்றுமே கணிக்க முடியாது என அறிந்தவளாய் வேறு புறம் திரும்பி கொண்டேன்.

அவன் என்னை அவன் புறம் திருப்பினான்.

"தியா... " என்ற குரல் கம்மலாக வெளிவந்தது.

"உன் கன்னம் இவ்ளோ வீங்கி இருக்கு. ஐ அம் சாரி..." என்றவன் மெதுவாக என் கன்னத்தை வருட அந்த இதமான வருடல் ஒருபுறம் நிம்மதியையும் மறுபுறம் வலியில் எரிச்சலையும் தர என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

அதைப் பார்த்தவன் தலை முடியை அழுந்த கோதி அவன் கைகளை பால்கனியின் சுவற்றில் குத்தினான். ஒரு நிமிடம் பயத்தில் வெலவெலத்துப் போனேன்.

அவன் கண்களில் வலியுடன்  என்னை நெருங்கியவன் என் கண்களில் கண்ணீரை பட்டும் படாமல் கிடைத்துவிட்டான்.

"ஐ அம் தியா. நான் ஒரு கோவக்காரன்.  இங்க பாரு உன்னை எப்படி அடிச்சுருக்கேன்னு. உன் அப்பா கூட உன்னை அடிச்சு இருக்கமாட்டார். ஆனா நான் உன்னை.... ஐ அம் சாரி தியா." அவனின் கண்களில் இருந்து கண்ணீர் சுரந்தது.

இவன் உண்மையிலேயே அவன் செய்த தவறை புரிந்து கொண்டான். ஆனால் என்னால் இவனை புரிந்து கொள்ளவே முடியவில்லை. இவன் புரியாத புதிராக இருக்கிறான்.

அவன் மேலும் என்  கண்ணத்தில் வருட நான் வலியில்  'ஸ்ஆஆஆஆ...' என்ற முனகலுடன் பின் நகர என்னை இழுத்து அணைத்துக் கொண்டான்.

அவனின் இந்த அணைப்புக்கு என் உடலும் ஏங்கியதோ என்னமோ அவனுள் புதைந்து கொள்ள தொடங்கினேன்.

ஆதி ஆறுதலாக என் தலையை கோதி விட்டான்.

"என்னை ஏன் ஆதித்யா இவ்வளவு வெறுக்கிற ?"என்ற கேள்வியை என்னை அறியாமல் விசும்பலுடன் வெளியே வந்தது.

அதைக் கேட்டதும் என்னை விலக்கி என் முகத்தை நிமிர்த்தினான்.

" இல்ல தியா. இல்ல. நான் உன்னை வெறுக்கல. யார் சொன்னா நான் உன்னை வெறுக்கிறேன்னு"

"எனக்கு தெரியும். நீ உன் பிரண்டு கிட்ட பேசிகிட்டு இருந்தத நான் கேட்டேன்."

அவன் தலையில் அடித்துக் கொண்டு, "தியா, நீ தப்பா புரிஞ்சுகிட்ட. அந்த மாதிரியெல்லாம் எதுவும் இல்ல. நான் ஒன்னும் உன்ன வெறுக்கல.என்னை நம்பு. "

என்னை சமாதனப்படுத்தி சிறிது நேரத்தில் என்னை கட்டிலில் அமர வைத்தான் .

பண் போல்  வீங்கி இருந்த என் கண்ணத்தில் மருந்தை தடவி விட்டான்.

வலியில் என் கண்களில் மீண்டும் கண்ணீர் கசிய அதை இடது கையால் துடைத்துக் கொண்டே வலது கையால்  மருந்திட்டான்.

ரூம் சர்வீஸுக்கு போன் செய்தவன் எனக்கான உணவை எடுத்துவர கூறினான்.

உணவு கொண்டுவரப்பட அவனே எனக்கு ஊட்டி விட்டான் .

அவன் கண்களிலிருந்தது குற்ற உணர்ச்சியா? இல்லை வேறு ஏதுமா?

இது எந்த மாதிரியான உணர்வு எனக்கு தெரியவில்லை. ஆனால் இந்த உணர்வு என்னை ஏதோ செய்தது.

அவனுடைய பாராமுகம் என்னை நிலைகுலையச் செய்தது என்றால் அவனின் இந்த அக்கறை என்னை அவனுள் புதைய செய்கிறது.

மதிய உணவு கொண்டுவரப்பட அவனே எனக்கு ஊட்டி விட என்னால் மெல்ல முடியாமல் போக, வேண்டாம் எனக் கூறினேன்.

முதலில் வற்புறுத்தியவன் பின் என் வலியை உணர்ந்து பழச்சாறு மட்டும் குடிக்கக் கொடுத்தான்‌

"தியா ப்ளீஸ் இனிமே இப்படி அழுகாத. எனக்கு தெரியும் நான் உன்கிட்ட இதுவரைக்கும் ரூடா தான் பிகேவ் பண்ணியிருக்கேன்.

அதுக்காக நான் கெட்டவன் இல்ல. அம் சோ சாரி. நான் உன்னை ஏதாவது ஹர்ட் பண்ணி இருந்தா. இனிமே இந்த மாதிரி பண்ண மாட்டேன்.

இன்னொரு முறை இந்த மாதிரி அழுகாத.எனக்கு ஒரு மாதிரி இருக்கு."

நான் அவனை நம்பாத பார்வை  பார்த்தேன்.

அதை உணர்ந்தவன்.

" என்னை நம்பு. நாம இனிமே பிரெண்ட்ஸ்?" என அவன் கையை முன்னால் நீட்ட, இவனை நம்பலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தேன்.

" ஒரே ஒரு சான்ஸ் குடுடா..." என அவன் கெஞ்சும் தோரணையில் கேட்டான்.

அவனின் டா என்ற அழைப்பு என்னை ஏதோ செய்ய கையை நீட்டினேன்.

என் நாங்கள் இருவரும் கை குலுக்கிக் கொண்டோம். அதன் பிறகு  எங்களுக்குள் அமைதி நிலவ அதை கலைக்கும் விதமாக ஆதித்யாவை பேச்சைத் தொடங்கினான்.

"தி.. உனக்கு கொடைக்கானல் பிடிச்சிருக்கா?"

அவனின் தி என்ற அழைப்பு உயிர் வரை சென்று வர நான் அவனை முறைத்துக் கொண்டே,

" கொடைக்கானலை பத்தி தெரியல. ஆனா இந்த ரூம் பிடிச்சிருக்கு."

"ஏன் கொடைக்கானல் பிடிக்கலையா?"

"எனக்கு எப்படி தெரியும் கொடைக்கானல் எப்படி இருக்குன்னு. இங்க வந்ததுல இருந்து ரூம்ல  தானே இருக்கேன். " அவனிடம் கோபித்துக் கொண்டு முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.

அவன் கண்களை சுருக்கி நாக்கை கடித்து மானசீகமாக அவனை அவனே நொந்து கொண்டதை என்னால் அவனின்  முக மாறுதலிலிருந்து உணர்ந்து கொள்ள முடிந்தது.

என்னை அறியாமலேயே நான் அதை ரசித்தேன். அழகாவும் இருக்கான். அன்பாகவும் இருக்கிறான் என என் மனது அவனுக்கு  பாராட்டுச் சான்றிதழ் கொடுத்தது.

"சாரிடா  ரொம்ப முக்கியமான மீட்டிங்க். இதுக்காக சிக்ஸ் மந்த்  வொர்க் பண்ணியிருக்கேன்.

நெக்ஸ்ட் வீக் இதுக்காக நான் திருச்சிக்கு போகவேண்டியதிருக்கும். அங்க போய்  அக்ரிமெண்ட் பேப்பர்ல சைன் பண்ணனும். இவ்வளவு பெரிய காண்ட்ராக்ட் எனக்கு கிடைச்சதுக்கு ரீஸனே நீ தான்.

நீ மட்டும் இன்னைக்கு பார்மேட் சேன்ஞ் பண்ணி கொடுக்காமல் இருந்திருந்தால் என்னால இந்த டீல் ஓகே பண்ணி இருக்கவே முடியாது.

அன்ட் சாரி உன்னை தனியா விட்டுட்டு போனதுக்கு.

அதுக்கு பதிலா நாளேல இருந்து இந்த மொத்த கொடைக்கானலயும் உனக்கு சுத்தி காட்டுறேன்." என சத்தியம் செய்தான்.

முதல் முறையாக ஆதியுடன் ஒரு தோழமை உணர்வுடன் பழகுகிறேன்.

இந்த உணர்வும் வித்தியாசமாகத்தான் இருந்தது.

ஆதித்யா என்னிடமும் சாதாரணமாக பழகுகிறான் என்ற எண்ணமே அவன் மனது சீக்கிரம் மாறிவிடும் என்ற எண்ணம் தோன்றியது.

"ஆனால் இந்த முகத்தை வைத்து என்னால வெளிய எங்கேயும் போக முடியாது." என்று முகத்தை சுருக்கிக்கொண்டு கூற அதில் அவன் குற்ற உணர்ச்சி மீண்டும் என் தலைதூக்க  நானே மானசீகமாக என்னை கொட்டிக்கொண்டேன்.

"உனக்கு நான் வேற ஏதாவது ஏற்பாடு பண்றேன். சாரி " என மீண்டும் கவலையாக கூற மனம் நெகிழ்ந்து போனேன்.

"தியா எழுந்திரு.

"தியா கெட் ரெடி....

"தியா  ஃபாஸ்ட்...

ஆதித்யாவின் குரல் கேட்டுக்கொண்டே இருந்ததில் என்னைவிட ஆதித்யா தான் வெளியில் செய்வதில் ஆர்வமாக இருக்கிறான் என புரிந்து கொண்டேன்.

அவன் வேகம் இல்லாவிட்டாலும் ஓரளவு வேகமாகவே கிளம்பி வந்தேன்.

கண்ணாடி முன் இறுதியாக ஒருமுறை பார்த்துக் கொண்டிருக்க ஆதித்யா என் பின்னால் வந்து நின்றான்.

" தி, நீ ரொம்ப அழகா இருக்க." என்றவன் கூற, நானும் எங்க ஜோடி பொருத்தத்தை கண்ணாடியில் பார்த்துக் கொண்டேன்.

எங்கள் ஜோடி அழகாகத்தான் இருந்தது .

பாட்டி சொன்னது போல் எங்கள் கல்யாணம் கடவுள் போட்ட முடிச்சு போல.

ஆதித்யா என் தோளைஇ பற்றி அவன் புறம் திருப்பினான். அவன் கையில்  இருந்த ஸ்கார்ஃபை  கண்ண வீக்கம் தெரியாமல்  கட்டிவிட்டான்.

"இப்போ போலாம்." அவன் என் கையை பிடித்து அழைத்துச்செல்ல ஒரு புது மாதிரியான உணர்வு என்னை சூழ்ந்ததை  உணர முடிந்தது.

நானும் ஆதித்யாவை முதன்முதலில் விரும்பி ஏற்கின்ற பயணம்.

முதலில் நாங்கள் ஹோட்டலுக்கு சென்று சிற்றுண்டியை முடித்துவிட்டு லேக் ஏரியாவிற்கு சென்றோம்.

அங்கே எல்லோரும் ஜோடியாக ஜோடியாக போர்ட்டில் செல்ல, நான் அதை ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஆதித்யா என் அருகில் வந்தான்.

" என்ன பாத்துகிட்டே இருக்கலாம். வா" என அங்கிருந்த ஒரு போர்டில் என்னை  ஏற்றி விட்டான்.

நாங்கள் இருவரும் நீல நிற அன்னம் போன்ற அந்த படகில் மிதந்தோம்.

அவனுடனான இந்தத் தனிமையை அந்த அழகான பயணத்தை ஒவ்வொன்றையும் என் நினைவு பெட்டகங்களில் சேமித்து வைத்துக் கொண்டிருந்தேன்.

இதேபோல் ஆதித்யா எப்போதும் என்னுடன் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற வேண்டுதலையும் கடவுளிடம் மறக்காமல் வைத்துவிட்டேன்.

போட்டிங் முடித்து வெளியே வந்ததும் சுற்றி கடைகளாக இருக்க, இதை பார்த்த கொண்டே வந்தேன்.

என் கண்கள் அங்கே நின்று கொண்டிருந்த ஒரு கறுப்பு நிற குதிரையின் மேல் பதிந்தது.

"ஒரு  ரைட் போலாமா?" என்ற குரல் காதின் ஓரத்தில் மென்மையாக கேட்கவும் மூச்சு முட்டியது.

அவனிடமிருந்து சிறிது விலகி, "ரைட் எதுக்கு?" என்றேன்.

" ரொம்ப நேரமா அந்த குதிரையை சைட் அடிச்சிட்டு இருந்தியா. அதான் கேட்டேன் குதிரையில ஒரு ரைட் போலாமான்னு."

"அய்யோ  எனக்கு குதிரை னா ரொம்ப பயம்.  அந்த குதிரை எவ்ளோ ஹைட்டா இருக்குன்னு பாரு. அதோட ஸ்கின் ஸாஃப்டா இருக்கு. வால் லேடிஸ் ஹேர் மாதிரி இருக்கு பாரேன்."

"வா கிட்ட போய் பார்க்கலாம்."

"நான் வரல. எனக்கு  பயமா இருக்கு."

"அதான் நான் இருக்கேன்ல." என் கையை பிடித்து குரையின் அருகே கூட்டிச் சென்றான்.

"இதை தொட்டுப் பார்க்கட்டா"

"தாராளமா பார்த்துக்கோ." என்றான்.

குதிரை சிறிது சத்தத்துடன் நகரவும் பயந்து பின் வாங்கினேன்.

ஆதியோ என் அருகில் வந்து என் கையைப் பிடித்து குதிரையின் மேல் வைத்தான்.

குதிரையின் கையைவிட ஆதியின் கைகளில் இருந்த மென்மை என்னுள் ஊடுருவிச் சென்றது.

அந்தக் குதிரை காரனிடம் குதிரையில் ரைட் போக வேண்டுமென்று கேட்க நானோ பயத்தில் வேண்டாம் என்றேன்.

" என் மேல நம்பிக்கை இருக்குல."எனக்கேட்க என் தலை என் அனுமதியில்லாமல் ஆமாம் என்றது.

குதிரைக்காரன் ஏறுவதற்கு உதவி புரிய கையை நீட்டினான்.

நான் குதிரைக்காரனின்  கையை பிடிக்க போக, என் கையை தடுத்து நிறுத்தி என் இடையில் அவன் இரு கைகளையும் அழுத்தி என்னை தூக்க நானும் குதிரைகளை ஏறாமல் ஆதியின் திடீர் ஸ்பரிசத்தில் விதிவிதிர்த்தேன்.

"தியா சீக்கிரம் காலை தூக்கி போடு."

ஆதியின் குரல் நிதர்சனத்திற்கு கொண்டுவர குதிரையில் அமர்ந்தேன்.

"தியா கொஞ்சம் முன்னாடி தள்ளி உட்காரு"

நான் குதிரையில் முன்னால் கொஞ்சம் தள்ளி உட்கார ஆதித்யா என் பின்னே அமர்ந்தான்.

இதை நான் எதிர்பார்க்கவில்லை. ஆதித்யாவுடன் ஒரே குதிரையிலா.

முதல் முறை இவ்வளவு நெருக்கத்தில் நாங்கள் இருவரும் அமர்ந்து இருப்பது எனக்கு மூச்சு முட்டியது.

நேற்று நானும் ஆதித்யாவும் அணைத்து இருந்தோம். ஆனால் அது எதிர்பாராத விதமாக நாங்கள் இருவரும் உணர்ச்சியின் பிடியில் இருக்கும் பொழுது நடந்தது.

ஆனால் இன்று இவ்வளவு தெளிவாக ஆதித்யா என்னுடன் இந்தப் பயணத்திற்கு தயாரானது என் காதலின் முதல் படியாக நினைத்தேன்.

காதல். ஆம் காதல் தான்.

நேற்று அவன் அணைப்பில் இதம் தேடியபோது உணர்ந்துகொண்டேன்.

மஞ்சள் கயிறு அதன் மேஜிக்கை காட்டிவிட்டது.

நான்  என்னை அறியாமலேயே ஆதியை காதலித்து விட்டேன்.

என் கணவர் என்ற உரிமையில் அவனிடம் என் ஆசைகளை எதிர்பார்க்க ஆரம்பித்தேன்.

என் கவலை சந்தோஷம்  எல்லாம் ஆதித்யா மட்டும்தான்.

ஆதித்யாவின் நெருக்கத்தில் மதி மயங்கி இருந்த என்னை,  "தியா கம்ஃபர்டபிளா இருக்கியா?" என்ற ஆதியின் குரல் என்னை வெளிக்கொணர்ந்தது.

தலையை மட்டும் ஆட்டினேன்.

குதிரைக்காரனை இருக்கச் சொல்லிவிட்டு ஆதியே குதிரையை சவாரி செய்ய ஆரம்பித்தான்.

அவன் குதிரையை லாவகமாக செலுத்தியதில் வியந்து அவனை பார்த்தேன். அவனுடைய முழங்கைகள் இரண்டும் என் இடையை உரசியவாறே குதிரையைச் செலுத்திக் கொண்டிருந்தது. இவனுக்கு ஹார்ஸ் ரைடிங் தெரியும் என்பது எனக்கு தெரியாமல் போனது.

ஆதித்யா உடனான இந்த பயணத்தை அணு அணுவாக ரசித்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் எந்த ஒரு பயணத்திற்கும்  ஒரு முடிவு உண்டு என்பதை மீண்டும் சவாரி தொடங்கிய இடத்தில் குதிரை நின்றபோது உணர்ந்தேன்.

இறங்க மனமில்லாமல் ஆதி  கொடுத்த கைகளை பற்றிக்கொண்டு கீழே குதிக்கும்.

குதித்ததில் தடுமாறி ஆதித்யாவின் மேலே விழ அவனோ என் இடையைப் பற்றி லாவகமாக என்னை நிறுத்தியவன் தள்ளாடியபடியே அவனும் நின்றான்.

"தியா வேற எங்க போலாம்?" என கேட்க மாயா டால்பின் நோஸ் பற்றி கூறியது ஞாபகம் வந்தது.

"ஆதி என்னை டால்பின் நோஸ் கூட்டிட்டு போறியா?"

"ஆர் யூ சுவர்? டால்பின் நோஸா?"

"எனக்கு அங்க போகணும் ரொம்ப ஆசையா இருக்கு." எனக் கூற ஆதி தோளைக் குலுக்கிக் கொண்டு சரி என்று பயணித்தான்.

இருவரும் டால்பின் நோஸ் ஒரு கிலோ மீட்டர் தள்ளியே வண்டியை நிப்பாட்டி விட்டு நடந்தோம்‌.

சிறிது தூரம் சென்றதும் பாதை மலை சரிவை போல் கரடுமுரடாக இருக்க, அந்த சரிவில் இறங்கினோம்.

குதித்தும் தாண்டியும் சிறுகுழந்தைகள் போல் செல்ல இந்த அனுபவம் வித்தியாசமாக இருந்தது.

இதற்கு முன் கொடைக்கானல் வந்ததில்லை. ஆதியுடன் தான் முதன்முதலில் வருகிறேன்.

20 நிமிட நீண்ட சரிவில் இறங்கிய பின் அங்கே இரண்டு மூன்று கடைகள் இருந்தன.

ஆதித்யா எனக்கும் அவனுக்கும் டீ சொல்லிவிட்டு வர நான் அந்த இடத்தை பார்க்க அருமையாக இருந்தது.

அந்த மலையின் ஓரத்தில் நின்று பார்த்துக் கொண்டு அந்த இயற்கை எழிலை ரசிக்க உள்ளம் பூரித்து போனது.

எங்கும் மேகங்கள் சூழ்ந்து இருக்க அந்த இதமான குளிர்ந்த காற்று உடலைத் துளைக்க ஆதியின் நெருக்கமான ஸ்பரிசமும்  அந்த ரம்மியமான சூழ்நிலையை மேலும் அழகாக்க அதை ரசித்தேன்.

"தியா அஙக தெரியுது பாத்தியா. அதுதான் தோல்ஃபின் நோஸ்."என தூரத்தில் இருந்த ஒரு மலையின் நுனியை காட்டினான்.

இங்கிருந்து பார்க்கும் போதே அது தூரமாக இருந்தது.

அதன் முனையை பார்க்கும் பொழுது டால்ஃபின் மூக்கு போல காட்சியளிக்க அதற்காகவே டால்பின் நோஸ் என பெயர் வந்தது.

அங்கு செல்ல இன்னும் நடக்க வேண்டும் என்று சொல்ல எனக்கு இப்பொழுதே மூச்சு வாங்கியது.

ஆதி என் கையை பற்றி கொள்ள நானும் அவனுடனான பயணத்திற்காக அவனை தொடர்ந்து சென்றேன்.

இன்னும் பதினைந்து நிமிட பயணத்தில் டால்பின் நோஸை நாங்கள் வந்தடைந்தோம்.

இரண்டு மூன்று புகைப்படங்களை எடுத்துக்கொண்டு ஒரு பத்து நிமிடம் அமர்ந்து பேசி விட்டு மீண்டும் கிளம்பினோம்.

இப்பொழுது மலை இறங்குவது எளிமையாக இருந்தது.

இப்பொழுது மலை ஏற வேண்டும். இதற்கு முன் நான் மலை ஏறியது இல்லை. அதனால் அது எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியாது.

மெதுவாக மலையை ஏற பத்து நிமிடத்தில் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து விட்டேன்.

"வாட் ஹேப்பெண்ட் தியா?"

"ஆதி எனக்கு கால் வலிக்குது."

அவன் சிரித்துக்கொண்டே

"நீ தானே டால்ஃபின் நோஸ் போனும்னு சொன்ன. அப்புறம் என்ன?"

"ஆனா இப்படி இருக்கும்னு எனக்குத் தெரியாது. மாயா தான் செம்மயா இருக்கும்னு சொன்னா. அவள் நம்பி தான் நான் வந்தேன்.நீயாவது முன்னாடியே சொல்லிருக்கலாம்ல."

"சரி. கொஞ்சம் உட்காரு நான் உனக்கு ப்ரட் ஆம்லேட் வாங்கிட்டு வர்றேன். அது இங்க ஃபேமஸ்‌. அதை சாப்பிட்டு எனர்ஜி ஏத்திக்கோ."

என்ற ஆதி ப்ரெட் ஆம்லேட்டுடன் வந்தான்.அதை சாப்பிட்டேன்.

பத்து நிமிடம் ஓய்விற்குப் பின் மீண்டும் நடந்தேன்.

ஐந்து நிமிடத்திற்குப் பின் மீண்டும் பத்து நிமிடம் அமர்ந்தேன்.

மாயா  கூறியது நினைவுக்கு வந்தது. அவளை கொலை செய்ய வேண்டும் அளவுக்கு ஆத்திரம் வந்தது.

சத்தியமாக என்னால் நடக்க முடியவில்லை.

என் கால்கள் இறந்து போய்விட்டன. எப்படித்தான்  ஏறுகிறார்களோ.

என்னைப்போல் பல பெண்கள் அங்குமிங்கும் அமர்ந்திருக்க, அவர்கள் அருகில் அவர்களின் துணைகள் நின்று கொண்டிருந்தனர்.

"ஆதி இதுக்கு மேல என்னால ஒரு ஸ்டெப் கூட எடுத்து வைக்க முடியாது."

ஆதித்யா சிறிது நேரத்தில் "தியா , ஆர் யூ கம்ஃபர்டபிள்? "என கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே என்னை அவன் கைகளில் தாங்கி இருந்தான்.

"ஆதி என்ன பண்ற? இதுல ஏறவே முடியல இதுல எப்படி என்ன தூக்கிட்டு போவ?" என்றேன் அக்கறையாக.

"மேடம் , இது ஜிம் பாடி. இதெல்லாம் எனக்கு சாதாரணம்."  என்றவன் என்னை தூக்கிக் கொண்டு மேலே ஏறினான்.

நிச்சயமாக மாயாவிற்கு இதற்காகவே நன்றி சொல்லியாக வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

அவன் நெஞ்சில் முகம் புதைத்து அவன் தோள்களில் என் கைகளை மாலையாக்கி கட்டிக்கொண்டேன்.

எப்படியோ ஒருவழியாக  அங்கிருந்து கிளம்பி மேலும் சில இடங்களை பார்த்து விட்டு ரூமுக்கு வந்தோம்.

உடலில் வலி ஏற்பட சோர்ந்து போய் இரவு உணவை சாப்பிடாமல் தூங்கிவிட்டோம்.

காலை எழுந்ததும் ஆதித்யா எல்லாவற்றையும் எடுத்து வைக்க சொல்ல மீண்டும் மதுரையை நோக்கி சென்றோம்.

ஆனால் இந்த முறை பேச்சுக்கள் அரட்டைகள் என பயணம் செய்தது தெரியாத அளவிற்கு வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.

ஆதித்யா வண்டியை பார்க் செய்து கொண்டிருக்க ,நான் காலிங் பெல்லை அடித்தேன்.

கதவை திறந்தவனின் " ஹாய் தியா" என்ற  குரலில் அதிர்ச்சியில் நின்றேன்.

-தொடரும்.

உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் -14
உதயம் 💏 14💏

காலை எழுந்ததும் பவித்ரா அத்தை கொடுத்த டீயை குடித்துவிட்டு ஆதித்யாவிற்காக கொடுத்த டீ யை எடுத்து கொண்டு எங்கள் அறைக்கு சென்றேன்.

என்னிடம் எப்பொழுதும் கோபமாக சுத்தும் ஆதித்யா அமைதியாக குழந்தை போல் படுக்கையில் சுருண்டு கிடந்தான். நீயா இப்படி என எண்ணிக்கொண்டேன்.

ஆதித்யாவிற்கான டீயை  டேபிளில் வைத்துவிட்டு,

" ஆதி... ஆதி...." என அழைத்தேன்.

அவனிடம் எந்த ஒரு அசைவும் இல்லை. அவன் தோள்களை தட்டி எழுப்ப முயற்சித்தேன்.

எழுந்தவன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். இப்பொழுது என்ன கூறப் போகிறோனோ என பயந்துகொண்டே, "அத்த உங்களுக்கு டீ குடுக்க சொன்னாங்க." என டேபிள் மீது இருந்த காட்டினேன்.

"என்ன இதை எல்லாம் கொடுத்து என்னை இம்ப்ரஸ் பண்ண பார்க்கிறியா?" என்ற ஆதித்யாவின் கேள்வி என்னை ஆத்திரமூட்டியது.

நான் எதற்கு அவனை இம்ப்ரஸ் செய்ய வேண்டும். இவன் பெரிய மாயக் கண்ணனோ?என மனதில் பொறுமிக் கொண்டு அவனை முறைத்தேன்.

அவனும் சளைக்காமல் என்னை முறைத்துக் கொண்டே அவன் மீது இருந்த பெட்ஷீட்டை பெட்டில் வீசிவிட்டு இறங்கி டேபிளில் இருந்த டீயை எடுத்தவன்   பாத்ரூமிற்கு சென்று என்னை பார்த்துக் கொண்டே அதை சிங்கிள் கொட்டினான்.

கொட்டிவிட்டு என்னருகே வந்தவன் என் வலது கையை எடுத்து அதில் கப்பை திணித்தான்.

" இதெல்லாம் வேற யார்கிட்டயாவது வச்சுக்கோ. இனிமே அம்மா கொடுத்தாங்க அப்பா கொடுத்தாங்கன்னு என்னை நெருங்க முயற்சி பண்ணினா அப்புறம் நான் பொல்லாதவன் மாறிருவேன்.

மத்தவங்க முன்னாடி தான் நாம்ம கணவன் மனைவி இந்த ரூம்ல நீ யாரோ நான் யாரோ புரிஞ்சிருக்கும் நினைக்கிறேன்." என்றவன் என்னை பொருட்படுத்தாது குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டான்.

சரியான முசுடு என்று நானும் அவனை கோவித்துக்கொண்டு பால்கனியில் நின்று.

இவனுக்கு என் மேல் அப்படி என்ன கோபம் என்று எனக்கு தெரியவில்லை. சரண்யாவுடனும் மாயாவுடனும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். ஆனால் என்னிடம் மட்டும் சிடுசிடுவென எரிந்து விழுந்து கொண்டிருக்கிறான்.

இவனுக்கு பெண்களை பிடிக்கவில்லை என்றால் எல்லா பெண்களிடமும் கோபமாகத் தான் இருக்க வேண்டும். என்னிடம் மட்டும் ஏன் கோபப்படுகிறான் எனத் தெரியவில்லை.

ஒருவேளை அவனுக்கு திருமணத்தில் நாட்டமில்லாமல் நான் அவன் மனைவியாக இருப்பதால் மட்டும் என்னை சிடுசிடுவென விழுகிறனா என்று யோசித்தாலும் திருமணத்திற்கு முன்னும் நான் அவனுக்கு பார்த்த பெண் என்று அறிவதற்கு முன்னும் அவன் அப்படித்தானே இருந்தான். என எண்ணும்போதே ஒரு மாதிரி இருந்தது.

என்னை மனைவியாக ஏற்றுக் கொள்ளா விட்டாலும் பரவாயில்லை தோழியாக இல்லையென்றால் ஒரு சக மனுஷியாக  கூட ஏற்றுக் கொள்ளலாமே அதுவும் செய்யாமல் என்னை ஏதோ கொலை குற்றம் செய்தவர்களை போலும் எதிரியை போலும் நடத்துகிறான் என எண்ணும் போது கஷ்டமாக இருந்தது.

இனி  திரும்பி வந்து மீண்டும் ஏதாவது கூறி மனதை கஷ்டப்படுத்துவான் அதற்குள் நான் கீழே சென்று விடலாம் என கீழே சென்றேன்.

சமையலறையில் பவித்ரா அத்தை சிற்றுண்டி தயார் செய்து கொண்டிருந்தார்.

"அத்தை நான் எதாவது பண்ணட்டுமா?"

"வேணாம்மா. நேத்து தானே மேரேஜ் முடிஞ்சது டயர்டா இருக்கும். நீங்க இன்னும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க."

"இல்லாத டயர்டா இல்ல. நான் நல்லாத்தான் இருக்கேன். நான் எதாவது பண்றேனே" என கெஞ்சுதலாக கேட்டேன். எனக்கு நேரம் போகவில்லையே அதனால். அதனால் மட்டும் அல்ல ஆதியை பற்றி நினைக்காமல் இருக்கவும் தான்.

"சரி பண்ணுமா.  first-time நம்ம வீட்ல சமைக்க போற ஏதாவது ஸ்வீட் மட்டும் செய்." என்றார்.

"சரிங்க அத்தை. என்ன ஸ்வீட் பண்ண?" என கேட்டேன்.

ப்ரெட் அல்வா பண்ணுடா அதுக்கு ரொம்ப பிடிக்கும்

"பிரெட் அல்வா ஆதித்யாக்கு ரொம்ப பிடிக்கும். அதை பண்றியா?" என கூறியவுடன் என் முகத்தில் புன்னகை பரவியது.

என் கணவனுக்காக முதல்முதலாக செய்யப்போகும் சமையல் என உள்ளுக்குள் மகிழ்ந்தேன்.

என்ன தான் எனக்கும் ஆதிக்கும் ஒத்து வராமல் போனாலும் நானும் தமிழ் பெண்தானே. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்கிற பழமொழி என் இரத்தத்திலும் ஊறிவிட்டதே.

என் சிந்தனையை எண்ணி நானே அதிசயித்துக் கொண்டேன்.

என்னுடைய ஆதிக்காக நான் சமைக்க போகிறேன் என எண்ணும்போதே உற்சாகம் மேலோங்கியது.

ஒருபுறம் அத்தை சிற்றுண்டியை தயார் பண்ணிக் கொண்டிருக்க மற்றொருபுறம் நான் பிரெட் அல்வா தயார் செய்து கொண்டிருந்தேன்.

"அடடே நம்ம சமையல் கட்டுல கூட  வாசம் வருது பா." என உள்ளே நுழைந்தார், விஷ்ணு மாமா.

"என்ன சொன்னிங்க?" என சப்பாத்தி  கட்டையை தோளில் வைத்து ஆட்டிக்கொண்டே கேட்டார்,அத்தை.

"அது சும்மா பவிமா. மருமகள் முதமுதலா சமைக்கிறாள அதான் என்க்ரேஜ் பண்ண." என சமாளிக்க மாமா சிரிக்க, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. மெலிதாக சிரித்தேன்.

அவரை முறைத்துக்கொண்டே,

" பாத்தியா தியா. இத்தன வருஷமா உன் மாமாக்கு வேலைக்காரங்கள கூட சமைக்க விடாம நானே என் கையால சமைச்சுக் கொடுத்தா மருமக வந்ததும் என்னைய கழட்டிவிட பார்க்கிறாரு. இவரை இப்படின்னா ஆதித்யா என்ன பண்ண போறானோ" என விளையாட்டாக சலித்துக்கொண்டார்.

"அச்சோ பவிமா நான் ஏன் உன்னை கழட்டிவிட போறேன். உன் சமையல் சாப்பிட தான்  உன்னையே சுத்துறேன்." என ஐஸ் வைத்தார்.

"ஆமா ஆமா சொன்னாங்களாம்." என சலித்துக் கொள்ள.

"நிஜமா பவி செல்லம்." என அத்தையின் கன்னத்தைக் கிள்ள, அவரோ என்னை பார்த்து மெல்லிய குரலில்,

" தியா இருக்கா  என்ன பண்றிங்க மருமகள் முன்னாடி." என அவர் கையை தட்டிவிட்டார்.

அவர்களின் ரொமான்ஸை கெடுக்க விரும்பாமல்,

"அத்தை அல்வா ரெடி ஆயிராச்சு.நான் அவர் என்ன பண்றாருன்னு பாத்துட்டு வந்துர்றேன்."  என மெதுவாக அவர்களுக்கு தனிமை கொடுத்துவிட்டு வந்தேன் .

நான் சமயலறைய விட்டு வெளியே வரும்போதுதான் கோட் சூட்டுடன் ஆதித்யா அலுவலகத்திற்கு தயாராகி வந்தான்.

இவர்களின் காதலில் பாதியாவது ஆதித்யாவிடம் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் வராமல் இல்லை.

"மோம் பிரேக் பாஸ்ட்.." என கத்திக்கொண்டே டைனிங் டேபிளில் அமர்ந்தான்.

அத்தையும் மாமாவும் சமையல் அறையில் இருந்து வெளிவந்து, ஆதித்யாவை உடையைப் பார்த்து அவனை முறைத்துக் கொண்டு டைனிங் டேபிளில் அமர்ந்தனர்.

" என்னடா இது. எங்க கிளம்பிட்ட?"

" என்ன கேள்வி இது. ஆபீஸ் தான்."

" நேத்து தான்டா கல்யாணம் ஆச்சு. இன்னிக்கு ஆபீஸ் போகனும்னு சொல்ற. "

"மாம்.இது உங்களுகே ஓவரா இல்ல. கல்யாணம் ஆனா ஆபீஸ் போக கூடாதுன்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா என்ன?"

"நீ ஒன்னும் ஆபிஸ் போகும் வேணா. உன் மேனஜர் கிட்ட சொல்லி பார்த்துக்க சொல்லு.வன் வீக் தியா கூடவே இரு."

"மா, திஸ் இஸ் டூ மச். நீங்க சொன்னீங்கன்னு மேரேஜ் பண்ணிக்கிட்டேன்.இனி எதுவும் இல்லை.  எனக்கு மீட்டிங் லேட் ஆச்சு.

நான் நம்புகிறேன்." அத்தை அவன் கைப்பிடித்து தடுத்தார்.

"ஆதி அம்மா சொன்னா கேளு.  நீ ஆபிஸ் போகக்கூடாது.இங்க பாரு உன் பொண்டாட்டி உனக்காக ஹல்வா பண்ணியிருக்கா. சாப்பிட்டு எப்படி இருக்கு ன்னு சொல்லு."

நான் செய்த அல்வாவை அவன் முன் நீட்டினார்.

ஆதி என்னை முறைத்துக் கொண்டே "அவ பண்ணுனத சாப்பிட தான் நான் இருக்கேனா?" என தட்டி விட ஹல்வா மொத்தமும் கீழே விழுந்தது.

நான் ஆதித்யா விற்காக முதன்முதலில் செய்ததை அவன் கீழே தள்ளி விடவும் எனக்கு வருத்தம் ஆகிப்போனது. ஏனடா செய்தோம் என ஆகிவிட்டது.

"டேய் என்னடா பண்ற." என அத்தை ஆதித்யாவிடம் கோவப்பட அவர் என்னை பார்த்து,

" சாரிமா அவன் தெரியாம...." என என்னிடம் மன்னிப்பு வேண்டி நின்றார்.

"பரவாயில்லை அத்தை. அவருக்கு வேலை இருந்திருக்கும். அந்த டென்ஷன்ல தான் தெரியாம பண்ணியிருப்பாங்க."  நான் சமாளித்தேன். ஆனால் என் கண்கள் கலங்குவதையும் குரல் கரகரப்பதையும் நிச்சயம் அவர்கள் கண்டிருக்க வேண்டும்.

"ஆதி நீ ஆபீஸ் போக கூடாது இதுதான் என்னோட பைனல் டிசிஷன். இல்ல உனக்கு ஆபீஸ் முக்கியம் அப்படின்னா இனிமே என்கூட பேசாத.ஆபீஸ்ஸயே கட்டி அழுதுக்கோ."

"மா , இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு."

"மீட்டிங் இருக்குன்னா வீடியோ கால்ல முடி."

வேகமாக அவன் டைனிங் டேபிளை விட்டு எழுந்து சென்றான்.

"எங்க போற?"

"மீட்டிங் இருக்கு. நான் ரூம்க்கு போய் வீடியோ கால் பண்ணிட்டு வர்றேன்."

"ப்ரேக் பாஸ்ட்?"

"ரூமுக்கு அனுப்பி வைங்க."

அவன் ரூமிற்கு செல்ல அத்தையோ என் அருகில் வந்தார்.

" சாரி மா கொஞ்சம் கோபக்காரன்." என்னை சமாதானப்படுத்தினார்.

கொஞ்சம் இல்ல ரொம்பவே என மனதில் நினைத்து நினைத்துக் கொண்டேன்.

"பரவாயில்ல அத்த. அவங்க ஆபிஸ் டென்சன்ல அப்படி பண்ணி இருக்கலாம்."என அவர்களுக்கு நான் சமாதானம் சொல்லி விட்டேன்.

"இந்த பிரேக் பாஸ்ட்  மட்டும் அவன் கிட்ட குடுத்துடு." என என் கையில் அவனுக்கான பிரேக்ஃபாஸ்ட்டை வைத்தார்.

அதை எடுத்துக் கொண்டு என் அறைக்கு செல்லும்போது அவன் வீடியோ கால் செய்ய தயாராகி இருந்தான்.

என்னை பார்த்ததும் என் கையிலிருந்த சிற்றுண்டியை கவனித்துவிட்டு மேஜையில் வைக்குமாறு சைகை செய்தான்.

அவனருகே சென்று மேசை மீது வைக்க அவன் அதிலிருந்த ஜீஸை எடுக்கப்போகும் போது,

" ஒரு நிமிஷம் ஆதி." என்று குரல் கொடுத்தேன்.

அவனும் என் குரல் கேட்டு பழச்சாறு எடுக்காமல் நான் என்ன சொல்லப்போகிறேன் என்று கவனித்தான்.

ஆனால் நான் எதுவும் பேசாமல் அவனருகே சென்று நான் கொண்டுவந்த சிற்றுண்டியை என் கையில் எடுத்து அறையின் மூலையில் இருந்த குப்பை தொட்டியை திறந்து  அதில் சப்பாத்தியையும் அதற்கு வைத்திருந்த மட்டன் கிரைவியையும் சிக்கன் குருமாவையும் கொட்டி விட்டு ஜூசை குளியலறை சிங்கில் கொட்டினேன். அவன் புரியாமல் என்னை பார்க்க நான் சிரித்துக்கொண்டே மீண்டும் அவனிடம் சென்றேன்.

"என்ன ஆதி பார்க்குறீங்க. உங்களுக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாதுன்னு தான் நானே உங்க வேலையை பண்ணிட்டேன். "

அவன் கோபமாக,

" எதுக்கு என்னோட பிரேக்பாஸ்ட்ட குப்பையில போட்ட." என அதிகாரமாக குரல் கொடுத்தான்.

"ஆதி. நீ தானே என் கையால எதுவுமே சாப்பிட மாட்டேன்னு சொன்ன.  எப்படியும் நீ கொட்ட தானே போற. அதை நானே கொட்டிடலாம்னு..."  என காலையில் நான் ஆசையாக செய்த பிரெட் அல்வா வேஸ்ட் செய்ததற்காக அவனை பழிவாங்கினேன்.

ஒருநாள் பட்டினியாக இரு. அதுதான் உனக்கு தண்டனைஎன நினைத்துக்கொண்டேன்.

"அப்போ நீ சாப்பிடுவியா ஆதி."என கேட்க அவனும் என்னை முறைத்துக் கொண்டு லேப்டாப்பின் முன் அமர்ந்தான்.

"ஆதி நான் வேணா அம்மாகிட்ட மார்னிங் நடந்ததையும் இப்ப நடந்ததையும் சொல்லி, சாரி அத்தை மார்னிங் டீய கொட்டிடாங்க.அதான் இதையும் குப்பையில போடுவாங்கன்னு நானே எல்லாத்தையும் கொட்டிட்டேன்னு  மன்னிப்பு கேட்டு வேற பிரேக் ஃபாஸ்ட் எடுத்துட்டு வர்றேன்."

என்னை முறைத்தவன்.

"ஆணியே புடுங்க வேண்டாம். என்ன கொஞ்ச நேரம் தனியா விடு. எனக்கு மீட்டிங் இருக்கு." என ஒரு பார்வை பார்த்துவிட்டு மீட்டிங்க்கு தயாராக… அவனுடைய அலுவலக வேலைக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்க நான் அங்கிருந்து நகர்ந்து விட்டேன்.

கூடத்தில் அமர்ந்து  அத்தையிடமும் மாமாவிடமும் சிறிது நேரம் அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன்.

"தியா ஆதி உன்கிட்ட நல்ல முறையில் நடந்துகிறானாமா?"

"அத்த என்ன கேள்வி இது. அவர் என்னை நல்லா பாத்துக்குறார்."

"இல்லமா அவனுக்கு இப்போ கல்யாணம் பண்றதுல இஷ்டம் இல்லனு சொன்னா. நான் தான் அவனை வற்புறுத்தி இப்போவே கல்யாணம் பண்ணனும்னு சொல்லி உனக்கு கல்யாணம் பண்ணி வைச்சேன். அதான் மனசுல உறுத்திக்கிட்டு இருந்துச்சும்மா."

"அப்படில்லாம் இல்லத்த. ஆதி  நல்லாவே பார்த்துக்கிட்டாங்க"

"அப்புறம் காலையில  நடந்ததற்கு ..."

"நீங்க எதுவும் சொல்ல வேணாம். எனக்கு தெரியும் காலையில அவர் குளிச்சிட்டு வந்ததும் ரெண்டுபேரும் சேர்ந்து கீழே போலாம்னு சொன்னாங்க. நான் தான் அவர் பேச்சை கேட்காம தனியா வந்தேன். அதனால சும்மா விளையாட்டுக்கு அந்த மாதிரி பண்ண அது சீரியஸ் ஆயிடுச்சு. வேற ஒன்னும் இல்ல."

ஆயிரம் தான் இருந்தாலும் என்னுடைய கணவனை எப்படி என்னால் விட்டுக்கொடுக்க முடியும்.

அது ஆதியை பெற்றவராக இருந்தாலும் சரி என்னால் ஆதியை யாரிடமும் விட்டுக்கொடுக்க முடியாது.

"ரொம்ப சந்தோசம்."  வாஞ்சையாக என் தலையைக் கோதினார்.

"மாம். எனக்கு ரொம்ப பசிக்குது." என வயிற்றை தடவிக்கொண்டே அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்,ஆதி.

"இப்ப தான்டா சாப்பிட்டே. சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கூட இல்ல அதுக்குள்ள பசிக்குதுன்னு சொன்னா என்ன அர்த்தம். சமையல் இனிமே தான் செய்யணும்.கொஞ்சம் பொறு." என கோபமாக கேட்க…ஆதி என்னை முறைத்தான்.

நானும் வேறு புறம் திரும்பி ஓரக்கண்ணால் ஆதி முறைப்பதை ரசித்தேன்.

"அங்க என்ன பாக்குற இந்தா."

"என்ன இது..." என்றவாறு அதை பிரித்து பார்த்தவன் அதிர்ந்து என்னை நோக்கினான்.

"என்னடா இப்படி பாக்குற..."

"விளையாடுரிங்களா? என்னால முடியவே முடியாது." சோபாவில் இருந்து எழுந்து நின்று கத்தினான்.

"என்னடா  ஆபீஸ் ஆபீஸ்ன்னு சீன் போட பாக்குறியா. ஒழுங்கா எல்லாத்தையும் மேனேஜர் கிட்ட   ஒப்படைச்சுட்டு தியாவை கூட்டிக்கொண்டு  கொடைக்கானல் போயிட்டு வா. இல்லை என்ன வேற மாதிரி பார்ப்ப."

ஆதி என்னை பார்த்து அம்மாவிடம் பேசுமாறு சைகை செய்தான்.

நானும் யோசித்தேன்.  நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள கொஞ்சம் தனிமை உதவும் என நினைத்து என் அத்தையிடம் திரும்பி,

" அதை எல்லாம் ஓகே தான். ஆனா ஆதி ஒத்துக்க மாட்டானே."

"எதுக்கு ஒத்துக்க மாட்டான்‌ உனக்கு ஓகே தானே?"

"எனக்கு ஓகே தான் அத்தை." என சம்மதம் கூற கூறினேன்.

"ஒழுங்கு மரியாதையா தியா விளையாட்டு கூட்டிட்டு  கொடைக்கானல் போய்ட்டு வர வழியை பாரு." என்றவள் எழுந்து சமையல் அறை சென்றுவிட,மாமாவும் எங்கள் இருவருக்கும் தனிமையை  அளிக்க எழுந்து அவர் அறைக்கு சென்றார்.

"ஏய் எதுக்கு ஓகே சொன்னா. நான் உன்ன வேண்டாம் தானே சொல்ல சொன்னேன்."

"ஐயோஆதி  நீ சரின்னு சொல்ல நெனச்சேன் என்னடி சொல்றனு தான் சொன்னேன். நீ வேணாம்னா சொல்ல சொன்ன" என அப்பாவி போல் கேட்க அவன் என்னை முறைத்தான்.

"சாரி ஆதி, எனக்கு இந்த கண்ணால பேசுறதெல்லாம் தெரியாது. நீ  அம்மா கிட்ட ஓகே சொல்ல சொன்ன மாதிரி இருந்தது.அதான் நான் ஓகே சொல்லிட்டேன். நான் வேணா இப்ப போயி அத்தை கிட்ட க சாரி தெரியாம சொல்லிட்டேன்  வேணா  அப்படின்னு சொல்லட்டா."

"நீ என்ன வச்சு ஏதோ  பண்றன்னு மட்டும் தெரியுது. ஆனா அது என்னன்னு தான் தெரியல.. உன்னோட பிளான் எதுவும் என்கிட்டே நடக்காது‌." என்றவன் எழுந்து அவன் அருகில் சென்றான்.

அவன் பேச்சை காதில் வாங்காமல் அத்தைக்கு சமையலில் உதவி புரிய சமையலறையை நோக்கி சென்றேன்.

அத்தை என்னை சமையல் செய்ய விடாமல் ரெஸ்ட் எடுக்க சொல்ல, நானும் அவர்கள்  சமையல் மேடையின் மீது அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன்.

அவர்கள் சமையல் வாசம் மூக்கைத் துளைக்க அதை நுகர்ந்துகொண்டேன். ஆதியின் குழந்தை பருவ வாழ்க்கை பற்றி என்னிடம் பகிர்ந்து கொண்டிருந்தார்.

ஆதியின் சிறு வயதின் சேட்டைகளும் பற்றி கூறும் பொழுது அந்த ஆதியா இது என்று தோன்றியது.

காலம் எல்லாரையும் மாற்றி விடும் போலிருக்கிறது. குறும்புகளும் சேட்டைகளும் அதிகம் நிறைந்த ஆதி இப்பொழுது உணர்ச்சிகளற்ற கோப கண்களுடன் நிற்பதை நம்பமுடியவில்லை.

சமையலை முடித்த அத்தை ஆதியை சாப்பிட வருமாறு அழைக்க சொல்ல நான் எங்கள் அறையை நோக்கி சென்றேன். அறையில் ஆதி இல்லை.

பால்கனியில் ஆதியின்  சத்தம் கேட்க  பால்கனிக்கு சென்றேன்.

"முடியல சஞ்சய். நானும் எவ்வளவோ முயற்சி பண்ணி பார்கிறேன். அவள கல்யாணம் பண்ணினது நெனச்சாலே என்னையை நெனச்சு எனக்கே வெறுப்பா இருக்கு. என் மனசு எதோ மாதிரி இருக்குடா.

இதுல இவள கொடைக்கானல் கூட்டிட்டு போக அம்மா சொல்றாங்க. எப்படி டா என்னால அவள கூட்டிட்டு போக முடியும். பார்க்கவே வெறுப்பா இருக்கு. இம்சையா இருக்காடா இந்த தியா."

என்னைப் பற்றி யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான்.

என் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. என்னை பார்க்க வெறுப்பாக இருக்கிறதாம்.

இந்த வார்த்தை ஒரு கணவனின் வாய்களில் இருந்து உதிரும் போது ஒரு மனைவியின் நிலையை அவளால் மட்டுமே உணர முடியும்.

எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போனது போல தோன்றியது.

என் கணவன் என்னை வெறுத்து விட்டால் நான் என் செய்வது. கண்ணீரை துடைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தேன். குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டேன்.

ஆதி என்னை இவ்வளவு தூரம் வெறுப்பதற்கு காரணம் என்ன? என தெரியவில்லை. ஆனால் இதே வெறுப்பு தொடர்ந்தால் எங்களின் வாழ்க்கை என்னவாகும்?

என் தந்தைக்காக என் வாழ்க்கையில் பணயம் வைத்தது பெரிதல்ல‌ ஆனால் ஆதியின் வாழ்க்கையையும் சேர்த்து பணயம் வைத்து விட்டேனோ என எண்ணும்போதே குற்ற உணர்ச்சி என்னை தாக்கியது.

ஆதி சொன்னதுபோல் திருமணத்தை நிறுத்தி இருக்க வேண்டுமோ என ஒன்றும் செய்ய முடியாதவளாய் திணறி நின்றேன்.

சிறிது நேரத்தில் என்னை சமன்படுத்தி கீழே செல்ல அத்தை மாமாவுடன் ஆதித்யா டைனிங் டேபிளில் அமர்ந்து இருந்தான். நான் எதுவும் பேசாமல் சென்று அமர்ந்து பெயருக்கு சாப்பிட்டுவிட்டு எங்கள் அறையில் வந்து படுத்துக் கொண்டேன்.

அதற்குப் பின் ஆதியிடம் நான் எதுவும் பேச வில்லை. ஏன் அவன் முன் செல்லவே இல்லை.

அவன் என்னை ஒதுக்குவதற்கு முன் நானே ஒதுங்கிக் கொள்வது நல்லது என  நான் ஒதுங்கியே இருந்தேன்.

இரவு மணி ஒன்றை கடந்த நிலையில் அடி வயிற்றில் ஏற்பட்ட சுள்ளென்று ஏற்பட்ட வலியில் தூக்கம் பறந்தோடியது. தேதியை பார்க்க தலையில் அடித்துக் கொண்டேன். ரெஸ்ட் ரூமுக்குள் நுழைந்தேன்.

அது சரியாக இருக்க என்னை நானே நொந்து கொண்டேன். ‌ கல்யாணத்தை நிறுத்துவதில் முனைப்போடு இருந்ததால் இந்த மாதாந்திர தேதியை மறந்து விட்டிருந்தேன். நாப்கினைஎடுத்து வைக்கவில்லை. ஒருவேளை அம்மா எடுத்து வைத்து இருக்கலாம் என பையில் ஆராய்ந்தேன்.

நான் தேடும் ஆர்வத்தில் உச் கொட்டிக்கொண்டே ஆதித்யா  புரண்டு படுத்தான்.  எழுந்துவிட்டால் இதற்கும் கத்துவான் என நினைத்து மீண்டும் கட்டிலில் படுத்துக் கொண்டேன்.

என் நிலையை எண்ணி எனக்கே கவலையாக இருந்தது. நான் நாப்கின் வேண்டுமென்று இங்கே யாரிடம் போய்க் கேட்பேன்.

என் வீட்டில் இருந்தால் அம்மாவிடம் கேட்டு இருக்கலாம். இங்கு அத்தையிடம் கேட்போம் என்று நினைத்தால் அவர்கள் மாத்திரையின் உபயத்தால் உறங்கிக் கொண்டிருப்பார்கள். அதுவும் மணி ஒன்றரைக்கு அவர்கள் அறைக்கதவை எப்படி தட்ட முடியும்.  வீட்டை விட்டு வெளியேறும் செல்ல இயலாத நிலை. ஆதித்யாவிடம் கூறலாம் என்றால் என்ன உறவு உள்ளது என்று இவனிடம் இதைப்பற்றி கூறுவேன்.

என்னை வெறுப்பவனிடம் எப்படி நாப்க்கினை பற்றிக் கூறுவேன். நினைக்கும் பொழுதே கண்ணீர் சுரக்க, எல்லாம் விதி என நினைத்து உறங்க முயற்சி செய்தேன்.

உறக்கம் பிடிபடாமல் போகும் புரண்டு புரண்டு படுத்தாலும் என் மீது ஏதோ ஊர்வது போன்ற உணர்வு தோன்ற விளக்கு எரிந்தது

ஆதி தான் என் பக்க விளக்கை ஒளிற செய்து இருந்தான்.

"என்ன வேணும். எதுக்கு தூங்காமல் இப்படி  தூங்காம கட்டிலை ஆட்டிக் கிட்டே  இருக்க?"ஆதியின் குரல்  கோவமாக வர, ஒன்றுமில்லை என தலையசைத்தேன்.

காலையில் இருந்த மனநிலையில் இருந்திருந்தால் கூட ஆதிடம் ஏதாவது சொல்லியிருக்கலாம்.

ஆனால் இப்போது அவனிடம் பேச எதுவும் இல்லை என அமைதியாக இருந்தேன்.

"நிம்மதியா தூங்க கூட முடியல." என புலம்பிக்கொண்டே மீண்டும் படுத்தான்.

என்னால் அழுகையை அடக்க முடியாமல் அழுது கொண்டே எழுந்து குளியலறைக்குள் புகுந்து கொண்டேன். ஷவரை திறந்துவிட்டு அதன் கீழ் நின்றேன். என் மன வலியும் வயிற்று வலியும் அந்த தண்ணீரிலும் என் கண்ணீரிலும் கரைத்துவிட எண்ணினேன்.

சிறிது நேரத்தில் குளியலறை கதவு தட்டப்பட சவரை மூடிவிட்டு அதன் ஒலியை உள்வாங்கினேன்.

"தியா..." என்ற ஆதியின் இதமான அழைப்பு வந்தது.

முதன்முதலில் ஆதித்யாவின் இதமான குரலை கேட்கின்றேன். இது ஆதி தானா என்ற சந்தேகமும் எழுந்தது.

"தியா, எனக்கு தூக்கம் வரல. நான் கொஞ்சம் வெளியே போறேன். உனக்காக இங்க ஒன்னு வச்சு இருக்கேன்.

உனக்கு அது இப்போ தேவைப்படலாம்னு நினைக்கிறேன். ஒரு தடவ வந்து பாத்துக்கோ. நான் வர லேட்டாகும். நீ குளிக்கிறன்னு நினைக்கிறேன். குளிச்சுட்டு படுத்துக்கோ." என்று என் பதிலையும் எதிர்பார்க்காமல் சென்றுவிட்டான்.

அறைக் கதவு திறக்கும் சத்தமும் அதை தொடர்ந்து மூடும் சத்தமும் கேட்டது.மெதுவாக குளியலறையிலிருந்து தலையை மட்டும் வெளியே நீட்டி எட்டி பாத்தேன்.

ஆதித்யா அறையில் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு டவலுடன் வெளியே வந்து பார்க்கும் பொழுது குளியலறையின் வாசலிலேயே ஒரு பார்சல் இருந்தது.

அதை பிரித்து பார்த்த என் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. ஆதித்யா என் வலியை புரிந்து கொண்டான் என எண்ணும் போது முகத்தில் புன்னகையும் சேர்ந்தே வந்தது.

மீண்டும் குளியலறைக்குள் புகுந்து குளித்து விட்டு உடை மாற்றி வெளியே வர்ற ஆதித்யா இன்னும் வரவில்லை.

ஆதி

த்யா என் உணர்ச்சிகளை புரிந்து கொண்டான் என்பதே இப்போதைக்கு மனநிறைவாக இருந்தது. என்னுடைய கணவன் என்ற கர்வமும் வந்தது.

ஆனால் அடுத்த நொடியே ஆதித்யா அவன் நண்பன் சஞ்சய் இடம் பேசிய வார்த்தைகள் மீண்டும் நினைவு வர மனதை கல்லாக்கிக் கொண்டு டேபிளின் அருகே ஆதித்யா எனக்காக வாங்கி வைத்திருந்த மாத்திரையை  போட்டுக்கொண்டு படுத்தேன்.

உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் -13
உதயம் 💏13💏

"மாப்பிள்ளை மாங்கல்ய தானம் பண்ணுங்கோ" என ஐயர் என தாலியை ஆதித்யாவிடம் நீட்ட அதை அவன்  பெற்றுக்கொண்டான்.

"கெட்டி மேளம் கெட்டி மேளம்" என உரக்க குரல் கொடுக்க, கெட்டி மேளம் கொட்டப்பட்டது.

நான் என்  கண்களை மூடி இரு கைகளையும் கூப்பினேன்.

" கடவுளே இந்த நிமிஷம்ல இருந்து ஆதித்யாவ என் முழு மனசோட என்னோட கணவனா நான் ஏத்துக்கிறேன். எங்களோட  இந்த வாழ்க்கையை நல்லா அமைச்சு கொடுக்க வேண்டியது உன் பொறுப்பு.

எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் ஆதித்யாவோட மனைவியா நான் கடைசி வரைக்கும் போராடுவேன்.

என் உயிர் பிரியிற கடைசி நொடி வரைக்கும் இந்த தாலி ஆதித்யா பேரை சொல்லி என் நெஞ்சிலேயே கிடைக்கணும்." என்ற வேண்டுதலை முடிக்கும் போது என் நெஞ்சில் தாலியின்  பரிசமும் என் முதுகில்  குறுகுறுத்த அவன் கை தீண்டலிலும் கண்ணை திறந்து ஆதித்யாவை பார்க்க, ஆதித்யாவும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் கண்களில் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லை. ஒரு பொம்மைபோல தாலியைக் கட்டிக் கொண்டிருந்தான்.

நிச்சயம் முடிந்த பிறகு நடந்த மன போராட்டத்திற்கு இன்று விடை கிடைத்தது போல இருந்தது. இந்த திருமணம் நடக்குமா என்ற சந்தேகம் நேற்று முதலே என்னை ஆக்கிரமித்திருந்தது. அதற்கு காரணம் நேற்று ஆதித்யா உதிர்த்த வார்த்தைகள் தான்.

"நல்ல நேரம்ம் முடியறதுக்குள்ள 2 வீட்டு பெரியவாளும் தட்ட மாத்திக்கோங்கோ." என ஐயர் கூறியவுடன் என் தந்தையும் ஆதித்யாவின் தந்தை விஷ்ணு மாமாவும்  நிச்சயத் தட்டை மாற்றிக்கொண்டனர்.

"அப்படியே பொண்ணும் மாப்பிள்ளையும் மோதிரத்தை மாத்திக்கோங்கோ." என கூற என் அம்மா என் கையில் ஆதித்யாவிற்கான மோதிரத்தை திணித்தார்.

அதைப் பெற்றுக் கண்டு ஆதித்யாவின் கைவிரல்காக காத்துக் கொண்டிருக்க அவனோ கையை நீடாமல் மடக்கி வைத்திருந்தான்.

அதை கலைக்கும் விதமாக விஷ்ணு மாமா "தியா எவ்வளவு நேரம்தான் கையை நீட்டிக்கிட்டே இருப்பா." என அவர் ஆதித்யாவின் கையை எடுத்து என் முன்னே நீட்டினார்.

என் கைகள் நடுங்க என் இடது கையால் ஆதியின் கையை தாங்கி வலது கையால் அவனின் மோதிர விரலில் எங்கள் நிச்சய மோதிரத்தை அணிவித்தேன்.

அதன்பிறகு பவித்ரா அத்தை என் கையில் போடுவதற்கான மோதிரத்தை ஆதித்யாவின் கையில் கொடுத்தார்.

என் முறைத்துக் கொண்டே என் கையை பற்றியவன் அதில் அழுத்தத்தை கூட்டினான்.

என் அருகில் வந்தவன், "நான் உன்ன கல்யாணத்தை நிறுத்த சொன்னா. நீ நிச்சயம் வர கொண்டு வந்துவிட்ட. விட்டா நாளைக்கு தாலியையும் கட்ட வச்சுருவ போல. மனசுல என்னதான் நெனச்சுக்கிட்டு இருக்க." என கேட்க, நானும் அவன் கூறியதை காதில் விழாதவாறு அவன் கையில் இருந்த மோதிரத்தை பார்த்துக்கொண்டிருந்தேன்.

அதில் கோபமானவன்  சூழ்நிலையை மறந்து என் முழங்கையை வழக்கம்போல் அழுத்திப் பிடிக்க,

"டேய் என்னடா பண்ற. நாங்க எல்லாரும் இங்கதான் இருக்கோம். உங்க ரொமான்ஸா தனியா இருக்கும்போது வெச்சுக்கோங்க." என கலாய்க்க சூழ்நிலையை உணர்ந்தவன் பிடியை தளர்த்தி விட்டு ஒரு பொய்யான புன்னகையுடன் பின் நகர்ந்து என் விரலில் மோதிரத்தை மாட்டி விட்டான்.

நேரங்காலம் தெரியாமல் போட்டோ கிராப்பரும் "பொண்ணு மாப்பிள்ளை சேர்ந்து நில்லுங்க ஒரு ஸ்டில்  எடுத்துக்கிறேன்." என்றார்.

இது இப்பொழுது முக்கியமா என நான்  எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது என் இடையில் கை கொடுத்தவன் அவன் அருகே என்னை இழுக்க, நானோ தளர்ந்து போய் அவன் தோளில் இடித்து நின்றேன்.

கூச்சத்தில் நெளிந்த என்னை இடையில் அழுத்தத்தை கூட்டி,

"என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது. கல்யாணத்த இன்னிக்கு நிப்பாட்டுற.  இல்லாட்டி நான் நிப்பாடுவேன்."என்றான்.

அவன் திருமணத்தை விடுவானோ என்ற பயம் என்னை சூழ்ந்தது. ஆனால் இப்பொழுது அந்த பயம் இல்லை.

" நெனச்சத  சாதிச்சுட்டல." என்ற குரல் என் காதோரம் கேட்க, என் நினைவுகளில் இருந்து வெளி வந்து என் நெற்றி வகிட்டில் குங்குமம் இட்ட ஆதித்யாவை பார்த்தேன்.

ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு என்னுள் எழுந்தது.

இவன் என் மணாளன் என்ற எண்ணமே எனக்கு தலை சுற்றலை ஏற்படுத்தியது.

எப்படி சமாளிக்கப் போகிறேனோ என்ற எண்ணத்தில் பெருமூச்சுவிட்டு அவனைக் கண்டு கொள்ளாது திரும்பிக் கொண்டேன். அது தெரிந்து  அவனும் முகத்தை திருப்பிக்கொண்டான்.

ஆனால் எங்களை இப்படியே விடாமல் அடுத்தடுத்த சடங்குகளை அடுக்கிக் கொண்டே இருக்க  வேண்டா வெறுப்பாக  ஆதித்யாவும் நானும் ஒத்துழைத்தோம்.

சடங்குகள் அனைத்தும் முடிவடைய நாங்களும் சாப்பிட்டு வந்தவர்களிடம் வாழ்த்துகளையும் பரிசுகளையும் பெற்றுக்கொண்டு போட்டோக்களுக்கும் போஸ் கொடுத்தோம். எல்லாம் முடிந்து அந்த கடினமான நேரமும் வந்தது.

பிரியா விடை கொடுக்க என் தந்தையும் தாயும் பாட்டியும் இன்னும் சில சொந்தங்களும் அழுதுகொண்டே நிற்க, நானும் அழுது கரைந்தேன்.

இனி என்னுடைய வாழ்க்கை ஆதித்யாவுடன் வேறு பாதையில் பயணித்த போகிறதை எண்ணி கலங்கினேன்.

இத்தனை வருடங்களுக்கு பிறகு கிடைத்த தந்தையின் அன்பும் இப்பொழுதும்  தூரமாக போகிறது என நினைக்கும் பொழுதே மனம் ரணமாகியது.

இனி என் பெற்றோர்களுக்கு நான் அந்நியமாக போகிறேன். அவர்களுடைய மகள் என்பதற்கு முன்பு ஆதித்யாவுடைய மனைவி என்ற அடையாளம் என்னை சூழ்ந்து கொள்ளப் போகிறது.

தந்தையை என்னை அணைத்து கண்ணீர் விட்டு ஆறுதல் வார்த்தை கூறி ஆதித்யா வின் கையில் என் கையை திணித்தார்.

என் தாயும் பாட்டியும் அறிவுரை பெயரில் மீண்டும் கொஞ்சம்  பயம் ஏற்றி ஆதித்யாவின் காரில் என்னை அமர வைத்தனர்.

ஆதித்யா என் அருகில் அமர்ந்து கார்  முன்னோக்கி செல்ல என் பிறந்த வீடு நோக்கி செல்வதாக உருவகம் கொண்டேன்.

அழுகை மீண்டும் அதிகமானது அது எதையும் கண்டுகொள்ளாத ஆதித்யா ஜன்னலில் வெறித்துக்கொண்டிருந்தான்.

நேரம் கடக்க என் அழுகை நின்றபாடில்லை.

"வண்டியை நிறுத்துங்க."

என்ற  ஆதித்யாவின் குரல் கேட்டதும் ஓரக்கண்ணால் அவனைப் பார்த்துக் கொண்டே அழுவதை தொடர,

"இப்ப எதுக்குடி அழுதுகிட்டே இருக்க. உன்ன கட்டுனதுக்கு நான் தான் அழனும். உனக்கு  உங்க அப்பா அம்மாவ விட்டுட்டு வர்ற  அவ்வளவு கஷ்டமா இருந்தா இங்க இறக்கி விடுறேன். இறங்கி போய்டு சும்மா அழுது சீன் போட்டு இருக்க கூடாது."

அவன் சொற்களில் அழுகை அதிகமாக வண்டியிலிருந்து இறங்கியவன், என்பக்க கதவை திறந்து என் கையைப் பிடித்து வெளியே இழுத்தான்.

நானும் அவன்  இழுப்பிற்கு வெளிய வந்து நின்றேன்.

"இங்கே நின்னு அழு. நான் கிளம்புறேன்." என என்னை வெளியே நிறுத்திவிட்டு அவன் வண்டி ஏற எங்கே என்னை விட்டு சென்று விடுவானோ என்ற பயத்தில் நானும் ஏறி உட்கார்ந்து கொண்டேன்.

என்னை பார்த்து ஒரு முறை முறைத்தான்.

" ஒழுங்கா அமைதியா படுத்தின வா.இல்ல அவ்வளவுதான்." என எச்சரித்தான்.

வண்டியை எடுக்க சொல்ல  ஆதித்யா வீட்டை நோக்கி படையெடுத்தது.

ஆதித்யாவின் வீட்டை அடைந்த போது என் கண்ணீர் எல்லாம் வற்றியிருந்தது.

இப்பொழுதே இப்படி என்றால் போகப்போக எப்படியோ என்ற எண்ணம் வராமல் இல்லை.

முயன்று கடினப்பட்டு என்னை அடக்கிக்கொண்டு  காரை விட்டு இறங்கினேன்.

ஆதித்யாவின் உறவுக்கார பெண் ஒருத்தி ஆரத்தி எடுத்து உள்ளுக்குள் அழைத்துச் செல்ல பூஜை அறையில் சாமி கும்பிட்டு விளக்கை ஏற்றி விட்டேன்.

தலைவலி என ஆதித்யா சென்றுவிட நான் மட்டும் தனியாக மாட்டிக் கொண்டேன்.

ஆதித்யா இல்லாததால் அதிக சடங்குகள் ஏதும் இன்றி ஒரு சில சடங்குகளை மட்டும் நிறைவேற்றிவிட்டு அவர்கள் காட்டிய அறையில் குளித்துவிட்டு ஓய்வு எடுத்தேன்.

அந்த ஓய்வையும் கெடுக்கும் வகையில் இரண்டு பெண்கள் வந்து என்னை அலங்காரம் செய்ய தொடங்கினர்.

இந்த அலங்காரம் எதற்கென்று புரிந்தாலும் அதை தடுக்கும் நிலையில் நான் இல்லை‌

அலங்காரம் எல்லாம் முடிந்தபின் ஆதித்யாவின் அம்மா வந்து அவர்களின் குடும்ப நகையை அவர் கையாலேயே போட்டுவிட ஆதித்யாவின் அக்கா முறையிலிருந்த பெண் என்னை ஆதித்யாவின் அறையில் விட்டாள்.

ஆதித்யா அறையில் இல்லாதது ஒரு நிம்மதி என்றாலும் அது நீண்ட நேரம் நீடிக்க போவதில்லை என்பதும் தெரிந்த ஒன்றுதான்.

அந்த அறையில் இருந்த மெத்தையில் நான் அமர்ந்தேன்.

ஆதித்யாவை பார்த்த தினத்திலிருந்து தடம் மாறிப் போன என் வாழ்க்கையை மீண்டும் ஒரு முறை எண்ணிப் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.

கதவு திறக்கும் அரவம் கேட்க அது ஆதித்யா தான் என உணர்ந்து அவனைப் பார்க்காது குனிந்து கொண்டேன்.

அவன் வந்து நீண்ட நேரம் ஆகியும் அவன் இருப்பதற்கான எந்த ஒரு ஓசையும் எனக்கு கேட்கவில்லை.

நிமிர்ந்து பார்க்கலாமா வேண்டாமா என்று மனதில் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்க அவனின் அழுத்தமான காலடிகள் வேகமாக கேட்டன.

ஆஆஆ என்ற சத்தத்துடன் வழியில் முனங்கினேன்.

நான் தரையில் கிடந்தேன். கைகளில் சிராய்ப்பு ஏற்பட்ட எதிர்பாராத இந்தத் தாக்குதலில் என் தலை தரையில் முட்டிக் கொண்டது.

என்ன நடந்தது என எண்ணிப்பார்த்தேன். வேகமாக வந்த ஆதித்யா என் கையை பிடித்து இழுத்து நான் உணர்வதற்குள் என்னை கீழே தள்ளி எறிந்தான்.

"எவ்வளவு தைரியம் இருந்தா என் பெட்லயே உட்கார்ந்திருப்ப. இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லி அவ்வளவு சொல்லியும் உன் ஆசையை நிறைவேத்த என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டல." என கோபமாக கேட்டான்

வெளிவரத் துடிக்கும் கண்ணீரை உள்ளுக்குள் அடக்கிக் கொண்டேன். வாழ்க்கை முழுவதும் இவனிடம் அடிமையாக என்னால் வாழ முடியாது.

இப்பொழுது தைரியமாக அவனை எதிர்த்தால் தான் இல்லையென்றால் இப்படியே என் வாழ்க்கை முடிந்துவிடும் என என்னை திடப்படுத்திக் கொண்டு நிமிர்ந்து அவனை பார்த்தேன்.

"என்னடி மொறைக்கிற ஏன் கல்யாணத்தை நிறுத்தல சொல்லு."

அவன் டி என்றதில் கடுப்பாகி "நான் ஏன் கல்யாணத்தை  நிறுத்தனும். உனக்கு பிடிக்கலைன்னா நீ தான் நிறுத்தணும்.

உனக்கு தேவனா நீ நிறுத்தி இருக்க வேண்டிய தானே. உனக்கு என்ன கல்யாணம் பண்ணனும்னு ஆசை‌. அதனாலதான் நீ அமைதியா என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட. இப்ப பலியை என் மேல போடுறியா." என அவன் பலியை அவனிடமே திருப்பிப்போட்டு அமைதியாக அவனை முறைத்தேன்.

"உன்ன கல்யாணம் பண்ணனும்னு நான் ஆசைப்பட்டேனா அந்த தப்ப மட்டும் நான் என்னைக்கும் பண்ண மாட்டேன்."

அட முண்ட  கல்யாணம் பண்ணிக்கிட்டேனல இன்னும் தப்பு பண்ண மாட்டான்னு என்று த முகத்தைத் திருப்பிக் கொள்ள,

"ஏய் என்னடி ரொம்ப பேசுற" என என்னை நெருங்கி வந்தான்.

"நான் அப்படிதான் பேசுவேன் என்ன பண்ணுவ" என நானும் அவனை நெருங்கி சென்றேன்.

"என்னையைக் எதுத்து பேசுற அளவுக்கு உனக்கு அவ்வளவு தைரியம் வந்துருச்சா."

"ஆமா நீ பெரிய மினிஸ்ட்டர் உன் கிட்ட பேசுறதுக்கு எனக்கு தைரியம்  வரணுமாக்கும்."

"ஏய் மரியாதையா பேசு. இல்ல  பல்லை உடைச்சிடுவேன்."

"அதுவரை உனக்கு பல்ல காட்டிகிட்டு இருப்பேனாக்கும். எனக்கு தூக்கம் வருது.தள்ளு." என அவன் தோளை நகர்த்தி விட்டு மீண்டும் பெட்டில் போய் அமர்ந்தேன்.

என் அருகில் வந்து என் கையை பிடித்து இழுத்தான்.

"என் பெட்ல படுக்குற  உரிமையை உனக்கு கொடுத்தா."

என அவன் கேட்க நான் யோசிக்கும் பாவனை செய்து பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு,

" அச்சச்சோ இன்னைக்கு காலைல உனக்கும் எனக்கும் கல்யாணம் நடந்த மாதிரி கனவு கண்டேன் மிஸ்டர் ஆதித்ய குமார். அந்த தைரியத்தில தான் இந்த கட்டில்ல உக்காந்தேன்.

எதுக்கும் நாம்ம கீழே போய் உங்க அம்மா கிட்ட கன்பார்ம் பண்ணிட்டு வரலாம் வாங்க." என அவன் கையை பிடித்து  அறை வாசலுக்கு இழுத்துச்  சென்றேன், 'அத்தை' என்ற குரலுடன்.

"என்ன பண்ணிக்கிட்டு இருக்க. அம்மா எந்திரிச்சு வாங்க" என அவன்  கை கொண்டு என் வாயை மூடினான்.

அவன் முகம் என் முகத்திற்கு மிக அருகில் இருக்க அவனின் பதட்டத்தை உள்ளுக்குள் ரசித்துக்கொண்டே கோபமாக இருப்பது போல் அவன் கையை தட்டி விட்டேன்.

" அப்போ நடந்தது எல்லாம் உண்மை தானே. உங்க பொண்டாட்டிங்குற உரிமை இருக்கு." என மீண்டும் கட்டிலுக்கு அருகே சென்றேன்.

"அத நான் சொல்லணும்."

"நீங்க எதுக்கு சொல்லணும். அது தான்  தாலி கட்டினீங்களே இதுவே போதும்.என்னோட உரிமைய சொல்ல." என கட்டிலில் உட்கார்ந்தேன்.

"நான் என் கட்டில உன் கிட்ட எப்பவும் ஷேர் பண்ணிக்க மாட்டேன் ஒழுங்கா எழுந்திரு."

"யார் சேர் பண்ண சொன்னா. உனக்கு இஷ்டம்னா என் பக்கத்துல தூங்கு. நான் எதுவும் மைண்ட் பண்ணிக்க மாட்டேன். இஷ்டம் இல்லைனா தாராளமாக அங்க இருக்குற சோபாவில் படுத்துக்கோ.

இல்ல இந்த ரூமையே என்கூட ஷேர் பண்ணிக்க முடியாதுன்னு பீல் பண்ணினா தாராளமாக விட்டு நீ வெளியே போகலாம்.

கெஸ்ட் ரூம்ல தங்கிக்க. இல்ல மேல ரெண்டு ரூம் இருக்குன்னு அத்தை சொன்னாங்க. அங்கே போய் தங்கிக்க. இல்ல இந்த வீட்டை என் கூட சேர் பண்ண உனக்கு இஷ்டம் இல்லைனா அத்தைகிட்ட கெஸ்ட் ஹவுஸ் சாவி வாங்கித்தரேன்‌ அங்கே போய் தூங்கு. நான் ரொம்ப டயர்டா இருக்கேன். நான் போய் தூங்க போறேன்."

என மீண்டும் படுக்கைக்கு சென்றேன்.

"எவ்ளோ தைரியமிருந்தால என்னையே என் வீட்டை விட்டு போக சொல்லுவ."

" ஹலோ மிஸ்டர் நான் உங்கள வீட்டை விட்டு போக சொல்லல. உங்களுக்கு இஷ்டம் இல்லேனா தான் சொன்னேன். உங்க இஷ்டம் போல எங்க வேணா தூங்குங்க.எனக்கு என்ன?

ஒருவேளை நான்தான் வெளியே போகணும் அப்படினா சரி உங்களுக்காக என்னோட புருஷனுக்காக  பாவம் பார்த்து நான் வேணா போறேன். ஆனா உங்க அம்மாவோட ரூமுக்கு தான் போவேன். உங்களுக்கு ஓகேவா?" என கேட்க அவன் என்னை முறைத்தான்.

வேணாமா. அப்போ ஓகே. எனக்கு தூக்கம் வருது. காலைல இருந்து போட்டோக்கு போஸ் கொடுத்து கொடுத்தே செம டயர்ட் ஆயிட்டேன்.

இதுல காலைல சீக்கிரமே எழுப்பி விட்டாங்க. நான் போய் தூங்குறேன். முடிஞ்சா அந்த ஏசிய மட்டும் கொஞ்சம் கூட வச்சுருங்க."என கட்டிலில் படுத்து  போர்வையால் முகத்தை மூடிக்கொண்டு படுத்தேன்.

"உனக்கு நான் ஏசி போடணுமா" என ஏசி யை அணைத்துவிட்டு அவன் என் அருகில் வந்து படுத்து விட்டான்.

"நல்லவேளை பயத்துல குளிர் காய்ச்சல் வந்துவிடும்ன்னு நினைச்சேன். எங்க என் பேச்ச கேட்டுருவானோன்னு பயந்துட்டேன்.

பயபுள்ள என்னை வெறுப்பேத்த ஆஃப்  பண்ணிருச்சு.' என சந்தோஷப்பட்டு மெதுவாக போர்வையை விலக்கி அவனை பார்

க்க அவன் புலம்பிக் கொண்டே படுத்திருந்தான்.

பரவாயில்ல மிஸ்டர் ஆதித்ய குமார் எனக்கும் பயப்படுவான் போல. இதே டெக்னிக்கை ஃபாலோ பண்ணி வாழ்க்கையை ஓட்ட வேண்டியது தான். என எண்ணிக்கொண்டே நானும் படுத்துக் கொண்டேன்.

உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் _12
உதயம் 💏12💏

"இதெல்லாம் பார்த்ததுக்கு அப்புறம் உனக்கு தோணலாம். இவ்வளவு பாசமா இருந்த அப்பா இப்பலாம் ஏன் நம்ம கிட்ட பேசவே மாட்டேங்குறாங்கன்னு. "

எனக்கேட்க என் தலை என்னை அறியாமல் என் ஆமாம் என அசைத்தது.

"இதெல்லாம் ஞாபகம் இருந்தால் உனக்கு 14 வயசு இருக்கும் பொழுது  நடந்த ஆக்சிடென்ட் ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன்."

ரத்த வெள்ளத்தில் இருந்த என்னை என் தந்தை பதறியடித்துக்கொண்டு கையில் ஏந்திக்கொண்டு ஓடியதையும் கதறி அழுததையும் என்னால் எப்படி மறக்க முடியும்.

அந்த நினைவுகள் இப்பொழுதும் நடப்பது போல் தோன்ற என் கைகள் நடுங்கின.

அதை உணர்ந்தவர் என் அருகே நெருங்கி என் தோளில் கைபோட்டு அவருடன் சேர்த்து அணைத்தார்.

"அப்பாக்கு உயிர் போய் உயிர் வந்தது தெரியுமா எங்கே உன்னை இழந்துருவேனோங்குற பயம் எனக்குள்ள இருந்துக்கிட்டே இருந்தது.

உன்னை திரும்ப பார்ப்பேனா. நீ அப்பான்னு என்னை திரும்ப கூப்பிடுவியா அப்படிங்குற பயம் எனக்குள்ள முழுசா இருந்தது. வேண்டாத கடவுள் இல்லை.

அப்பான்னு ஓடி வந்து என்னை கட்டி புடிக்கிற தருணத்துக்காக தருணத்துக்காக ஐசியு வாசலிலேயே நின்னு பார்த்துக்கிட்டு இருந்தேன்.

பாட்டி தான் சொன்னாங்க. ஜாதகத்துல எதுவோ சரி இல்லைன்னு.  அதனால நம்ம  பண்டிதரை போய் பார்த்தேன் அவர்தான் உன் உயிருக்கு கண்டம்  இருக்குன்னு பரிகாரம் செய்ய சொன்னாங்க.

பரிகாரம் மட்டும் இல்ல உங்க பொண்ணோட உயிருக்கு எப்பவும் ஆபத்து இல்லாமல் இருக்கணும்னா நீங்க உங்க பொண்ணோட நெருங்கி பழகக்கூடாது. அவள தனியா விட்டுருங்க. பெத்தவங்கள அரவணைப்பும் அந்தக் குழந்தைக்கு இருக்கக் கூடாது. அப்படின்னு சொல்லிட்டாங்க. அதனால தான் நானும் உன்னை நெருங்கலடா."

"இது என்னன்னு சொல்லு." என என் தந்தையின் கையில் வைத்திருந்த சாவியை என்னிடம் நீட்ட நான் அதை பார்த்தேன். அது என் அறையின் சாவியை போல் தெரிந்தது.

"அப்பா இது என்னோட ரூம் சாவி மாதிரி இருக்கே?"

"ஆமாம்டா உன்னோட ரூம் சாவி தான்.  அப்பா உன்ன பாக்காம இருக்க மாட்டேன். நீ தூங்குனதுக்கப்பறம் மெதுவா உன்ன வந்து பார்த்து உன் தலையை கோதிவிட்டு உனக்கு முத்தம் கொடுக்காமல் எனக்கு தூக்கமே வராது.

ஸ்கூல் படிக்கும் போதெல்லாம் நீ பாதி நேரம்  ஸ்டடி டேபிள்லயே தூங்கிடுவ. அப்பா தான் உன்ன தூக்கிட்டு வந்து பெட்ல படுக்க வச்சுட்டு போவேன்."

இப்போது தான் ஞாபகம் வந்தது. நான் பள்ளி காலங்களில் படித்துக்கொண்டிருக்கும்போது தூங்கிவிடுவேன். காலையில் படுக்கையில் இருப்பேன். நான் கூட பூட்டியிருந்த அறைக்கதவை திறந்து யார் வருவார்கள் ஒருவேளை  தூக்கத்தில் நாமே நடந்து சென்று படுத்து இருப்பேன் என நினைத்துக் கொள்வேன்.

ஆனால் அது என் தந்தை என இன்று தான் எனக்கு தெரிகிறது. என் தந்தை என் மீது இவ்வளவு பாசம் வைத்திருந்தார் என நிச்சயமாக எனக்கு தெரியாது.

அவர் பணத்திற்காக மகளை மறந்துவிடும் சராசரி ஆண் மகன் என நினைத்தேன்.

ஆனால் தன் குழந்தையை பொத்திப் பாதுகாக்கும் தமிழ் மகனாக இருந்திருப்பார் என இன்றுதான் தெரிந்தது.

என் தந்தை மீது நான் வைத்திருந்த யூகம் தவறானது என்ற குற்ற உணர்ச்சியில்  கண்ணீர் என்னையறியாமல் என் கன்னங்களை தடவி சென்றது.

"அது மட்டும் இல்லடா நீ எப்பவும் தனியா பீல் பண்ண கூடாதுன்னு உன்னோட ப்ரண்டு சரண்யா எப்பவும் உன் கூடவே இருக்குற மாதிரி பார்த்துப்பேன்.  அப்பா டெய்லியும் சரண்யா கூட பேசுவேன்.

நீ என்ன பண்ற. உனக்கு என்னென்ன புடிச்சிருக்கு. உனக்கு என்ன வேணும். அப்படின்னு எல்லாமே உன் பிரண்டு சரண்யா மூலமா தெரிஞ்சுக்கிட்டு உனக்கு அதை செஞ்சு கொடுப்பேன் டா.

அது மட்டும் இல்ல.  நீ ஆதித்யாவை மால்வா பார்த்தது உங்களுக்குள் நடந்த மிஸ் அண்டர்ஸ்டாண்டிங். இது எல்லாம் சரண்யா என்கிட்ட சொல்லி இருக்கா.

ஆதித்யா உன்ன பொண்ணு பாக்க வந்துட்டு போனதுக்கப்புரம் ஏதோ சரியில்லைனும் உன் மனசுல ஏதோ ஒன்னு உறுத்திக்கொண்டே இருக்கும்னும் சொன்னா.

ஒருவேளை இன்னைக்கு நடந்தது தான் உன் மனசுல ஓடுது அப்படினா அதை எல்லாத்தையும் துடைச்சு எறிஞ்சுட்டு டா.

ஆதித்யா ரொம்ப நல்ல பையன். நான் அவன சின்ன வயசுல இருந்தே பார்த்துகிட்டு இருக்கேன்.

ஆதித்யாக்கு முன்னாடியே ஒரு காதல் இருந்திருந்தா அதுல எந்த தப்பும் இல்லயேம்மா.

காதல்ங்குறது எல்லாருக்கும் வர்ற ஒரு அழகான உணர்வு. அதற்காக காதலிச்சவங்களை மட்டும் தான்  கல்யாணம் பண்ணனும்னு  நினைக்கிறது நடைமுறைக்கு சரியாக வராது.

இங்க கனவுகள்ல வாழ்ற காதல் தான் அதிகம்.

ஏன் அப்பா கூட அம்மாவை கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி ஒரு பொண்ண காதலிச்சேன்.

உன் பாட்டிதான் உருட்டி மிரட்டி உன் அம்மாவ எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சாங்க.

நான் உன் அம்மா கூட சந்தோசமா இல்லாமலா இருக்கேன்.

நிச்சயமா இல்ல.

ஒருவேளை ஆதித்யாக்கு காதல் இருந்திருந்தா உன்னோட காதலால அவரோட காதல ஜெயிக்க முடியுங்குற நம்பிக்கை எனக்கு இருக்கு.

என் பொண்ண யாராலும் வெறுக்க முடியாது.

அப்பாகாக நீ ஆதித்யாவ முழு மனசோட கல்யாணம் பண்ணிக்கிறியா டா"என கேட்க,

அப்பாவிடம் "கண்டிப்பா ஆதித்யா தான் கல்யாணம் பண்ணிக்கிறேன் பா"என அவரை கட்டியணைக்க அவர் என் நெற்றியில் முத்தமிட்டார்.

அவரது அனைப்பிலேயே அழுது களைத்து விட அவர் என்னை என் அறையில் உறங்க அழைத்துச் சென்றார்.

தனிமையில் அமர்ந்து சிந்தித்தேன். வாழ்க்கை ஒரு புரியாத புதிர். ஆதித்யா பற்றி எனக்கு கொஞ்சம் தெரிந்திருந்தாலும் அவனை என்னால் சமாளிக்க முடியுமா என தெரியவில்லை.

ஒருவேளை ஆதித்யா இடத்தில் வேறு ஒருவன் இருந்து திருமணத்திற்கு பின் ஆதித்யா வை போல் இருந்தால் என்னால் என்ன பண்ணியிருக்க முடியும்.

இதையும் அவ்வாறு எடுத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்துவிட்டேன்.

ஆதித்யாவை திருமணம் செய்து கொள்ளத்தான் போகிறேன். என் விதி என்னை எங்கு கொண்டு செல்கிறதோ அதனுடன் பயணிக்க தயாராகி விட்டேன்.

இரவு மணி பதினொன்று நெருங்கியிருந்தது. என் யோசனைகள் எல்லாம் மூட்டை கட்டி விட்டு என் தாய் தந்தையின் அறைக் கதவைத் தட்டினேன்.

என் தாய் கதவை திறக்க நான் என் அப்பாவையும் அம்மாவையும் பார்த்தேன்.

"அம்மா, அப்பா, இன்னும் மூணு நாள்ல நான்  மிஸஸ் தியா ஆதித்யா குமார் ஆயிடுவேன். ஆனால் தியா விஸ்வநாத நா உங்க கூட இந்த மூணு நாளா ஸ்பெண்ட் பண்ணனும் னு நினைக்கிறேன் டாடி.

நான் உங்ககூட இன்னைக்கு படுத்துக்கவா?" எனக்கேட்க அவர் கண்ணீருடன் கைநீட்ட, நான் ஓடி சென்று அவர் அருகே படுத்துக் கொண்டேன். அவர் என் தலையை கோதி விட என் அம்மா என் அருகில் படுத்துக் கொண்டார்.

அழகான இதமான மாலை வேளையில் பறவைகள் யாவும் அவைகளின் கூட்டுக்குள் அடைய, சூரியன் தனது ஆதிக்கத்தை குறைத்துக்கொண்டு செல்ல, என் வாழ்வை மாற்றக்கூடிய அந்த நாள் மாலையும் வந்தது.

பியூட்டி பார்லர் பெண்கள் என்னை அலங்கரிக்க, மாயா என் அருகில் உட்கார்ந்து கொண்டு இருக்க, ஆதித்யா உடன் என்னுடைய எதிர்காலத்தை பற்றி சிறிதும் எண்ணாமல் நாளை ஆதித்யாவை என்னவனாக முழு மனதுடன் ஏற்றுக் கொள்ள தயாராகிவிட்டேன்.

இரண்டு நாட்களுக்கு முன்பாக வந்து விடுவேன் என கூறிய சரண்யா இன்னும் வரவில்லை.

இன்று எனக்கும் ஆதித்யாவுக்கும் நிச்சயதார்த்தம். அவனின் வருகைக்காக என் வீட்டார் அனைவரும் காத்துக்கொண்டிருக்கும் மீண்டும் அவனை எப்படி சமாளிக்கப் போகிறேனோ என்ற படபடப்பு என்னை சூழ்ந்து கொண்டது.

திருமணத்தை ஏன் இன்னும் நிறுத்தவில்லை என்று  அவன் மீண்டும் கேட்பான். அவனிடம் என்ன பதில் கூறுவது என தெரியவில்லை.

நான் இந்த திருமணத்தை நிறுத்தி விடுவேன் என்று அவன் நினைத்திருந்தால் பாவம் அவனுக்கு ஏமாற்றம்தான் மிஞ்ச போகிறது.

நான் மெசேஜ் திருமதி அதித்யாவாக அதற்கு மாறாக தயாராகிவிட்டேன் என்பதை அவன் அறியாதது அவன் விதியே என எண்ணிக்கொண்டு என்னை அலங்கரிக்கும் பெண்களுக்கு இசைந்து கொடுத்தேன்.

"ஹாய் டியர்."

சரண்யாவின் குரல் கேட்க கோபமாக முகத்தை திருப்பிக் கொண்டேன்.

என் அருகில் வந்து என்னை தோளோடு அணைத்துக் கொண்டவள்,

" சாரிடா  புது வேலை. அங்கே இருக்குறவங்க லீவ் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. நான் என்ன பண்ணட்டும். நானும் எவ்வளவோ முயற்சி பண்ணுனேன். எப்படியோ அந்த சொட்டச் சேட்டா கிட்ட இருந்து தப்பிச்சு வந்துட்டேன்.

சாரிடா.."

என கண்ணத்தில் முத்தமிட என் கோபம் இருந்த இடம் தெரியாமல் போனது.

என் முகத்தில் புன்னகை  பரவ அதை என் எதிரே இருந்த கண்ணாடியில் பார்த்து விட்டு என் முன்னால் வந்தாள்.

"வாவ் தியா கல்யாண கலை வந்துடுச்சு போல முகமெல்லாம் ப்ரைட்டா இருக்கு."

இருக்கும் இருக்கும் ஆதித்யா வ நினைச்சு பயத்தில் வெளுத்துப்போய்  இருக்கும். என மனதில் நினைத்ததை வெளியில் சொல்ல முடியவில்லை.

மெல்லிய புன்னகை செய்ய அவளோ அதை வெட்கம் என நினைத்து மீண்டும் என்னை கேலி செய்தாள்.

"நான் வரும் போது தான் ஆதித்யா அண்ணாவ  பார்த்தேன். அவங்க எல்லாரும் வந்துட்டாங்க. சீக்கிரம் பொண்ணு ரெடி பண்ணுங்க." என அங்கு இருந்த அலங்காரம் செய்யும் பெண்களிடம் கூற அவர்கள் விட்ட குறைவாக இருந்த அனைத்தையும் சீக்கிரமாக செய்து முடித்தார்கள்.

"ஆமாம் அது என்ன ஆதித்யா அண்ணா??? புதுசா இருக்கு.'

என நான் புருவம் உயர்த்தி கேட்க,

"ஆமாம் நீ எப்போ  ஆதித்யா  அண்ணாவ கல்யாணம் பண்ணிக்க ஓகே சொன்னியோ அப்பவே அவரு எனக்கு அண்ணன் ஆயிட்டாரு.

இப்பதான் அவர் கூட பேசிட்டு வரேன்."

அவர் பேசினாளா நான் அதிர்ச்சியாக அவளிடம் கேட்டேன். பின்னர் ஆதித்யாவிற்கு பெண்களிடம் பேசக்கூட தெரியுமா?

"ஏன் உனக்கு பொறாமையா இருக்கா?" என

"ஆமா ஆமா" என சலித்துக் கொண்டே போக

"ஏன் ஃபீல் பண்ற. நாளைக்கு தான் திருமதி ஆதித்யா குமார் ஆகபோறியே. அதுக்கு அப்புறம் உன்னோட பர்மிஷன் கிடச்சா தான் நாங்க எல்லாம் பேசவே முடியும்."எனக் கூற சிறிது நேரம் விட்டு இருந்த பயம் மீண்டும் தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது.

இந்த திருமணம் எந்த தடையும் இல்லாமல் நல்லபடியாக நடக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டிக் கொண்டேன்.

என்னுடைய பயத்தை கல்யாண படபடப்பு என நினைத்த சரண்யா என்ணை சாதாரணமாக மாற்றுவதற்காக என் அருகில் உட்கார்ந்து அவள் புதிதாக வேலைக்கு சேர்ந்த இடத்தில் நடந்த சுவாரசியமான நிகழ்ச்சிகளை சொல்லிக் கொண்டிருக்க அதைப் புரிந்து கொண்டு நானும் அதைக் கேட்டுக்கொண்டு அதில் மூழ்கினேன்.

பேச்சுக்கள் பலவாறாக செல்ல நேரம் சென்றதே தெரியவில்லை.

சிறிது நேரத்தில் என்னை அழைக்க வந்த என் அம்மா, "என்ன வளவளன்னு பேசிக்கிட்டு இருக்கீங்க. உன்ன கூட்டிட்டு வர சொல்லிட்டாங்க. சீக்கிரம் கூட்டிட்டு வாங்க. நிச்சய பத்திரிக்கையை வாசிக்கணும்" என சொல்ல இதயம் வழக்கம்போல் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது.

ஒருபுறம் சரண்யா மற்றொரு புறம் மாயா  இருக்க இருவரும் சேர்ந்து என்னை மணமேடைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆதித்யாவை எப்படி எதிர்கொள்ள என தெரியாமல் நான் குனிந்த தலையை  நிமிரவே இல்லை. என்னை அழைத்து மணமேடையில்  ஆதித்யாவிற்கு அருகில் இருந்த கதிரையில் அமரவைத்து  அவர்கள் பின்னால் நின்று கொண்டனர்.

ஆதித்யாவின் பார்வை என்னை துளைப்பதும் என்னால் உணரமுடிந்தது. ஆனாலும் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. பின் அவன் முறைப்பை எவ்வாறு சமாளிப்பது என விழி பிதுங்கி அமர்ந்திருந்தேன்.

ஐயர் நிச்சயம் பத்திரிக்கைகளும் வாசிக்க ஆரம்பித்தார்.

நிகழும் சித்திரை மாதம்  திங்கட்கிழமை பஞ்சமுகி சுவாதி நட்சத்திரம் அமிர்த யோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் நண்பகல் 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் சிம்ம லக்னத்தில்,

மதுரை  விஷ்ணு குமார்- பவித்ரா தம்பதியரின் குமாரன், திருமண செல்வன் ,ஆதித்திய குமாரனுக்கும்,

மதுரை விஸ்வநாதன் -

பார்வதி தம்பதியரின் குமாரத்தி, திருமண செல்வி, தியா விஸ்வநாதன்க் கும் நாளை திருமணம் என பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு உள்ளது அறிவித்துக் கொள்கிறேன்."

என முடித்தார்.

உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் -11
உதயம் 💏11💏

"ஹலோ சொல்லு சரண்."

"என்ன சொல்ற நீ."

"என்னால நம்பவே முடியல."

"சரண் இது என்னோட வாழ்க்கை. விளையாடாத."

"உனக்கு நல்லா தெரியுமா? உனக்கு யார் சொன்னா?"

"எனக்கு ஆதித்யாவை ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனால் உண்மையிலேயே அவருக்கு காதல் இருந்திருக்கும் என்று எனக்கு தெரியாது. அதுவும் அவர் லவ் ஃபெயிலியர்ன்னு எனக்கு தெரியவே தெரியாது."

"இப்போ என்ன பண்றது ஆதித்யா இருக்கு கல்யாணத்துல இஷ்டம் வேற இல்லையா..."

"என்னால என்ன பண்ண முடியும் அப்பா அம்மா ஆசை படுறாங்க எனக்கும் வேற அவர பிடிச்சு இருக்கு." இப்போ அவருக்கு பிடிக்கலனா என்ன பண்றது."

"ப்ளீஸ்... எனக்கு கொஞ்சம் மனசு சரியில்ல. நான் அப்புறம் பேசுறேன்." என கண்களில் பொய்யாய் ஒட்டியிருந்த கண்ணீரை துடைத்துக்கொண்டே ஒரக்கண்ணால் அறையின் வாயிலில் நின்றிருந்த மணிமேகலை அத்தையை பார்த்தேன்‌.

அவ்வளவுதான் முடிந்தது வேலை. வீட்டிற்கு நான்கு பேர் இந்த வேலையை சிறப்பாக செய்வார்கள். அதில் ஒன்றுதான் இந்த மணிமேகலை அத்தை.

யார் மகிழ்ச்சியாக இருந்தாலும் பிடிக்காது. ஏதாவது ஒரு சந்தோஷ நிகழ்ச்சியில் அபசகுனமாக செய்துவிடுவது அல்லது பேசுவது.

மற்றவர்களை காயப்படுத்தி விட்டால் தான் அவர்களுக்கு ஒரு மனநிறைவு கிடைக்கும்.

கிடைத்த இந்த அவல் போன்ற செய்தியை ஊரெங்கும் பரப்பி என் திருமணத்தில் ஏதாவது ஒரு குழப்பத்தை கண்டிப்பாக செய்வார்கள். அதில் ஒன்று பற்றிக் கொண்டு திருமணத்தை நிறுத்தி விட்டால் முடிந்தது.

‌ திருமணத்திற்காக சொந்தங்கள் எல்லாம் வீட்டுக்கு வந்திருக்க, எல்லோரும் என்னை பார்த்துவிட்டு வாழ்த்துக்கள் கூறிக்கொண்டும் கலாய்த்துக் கொண்டும் கேலி செய்து கொண்டும் சுற்றிக் கொண்டிருக்க எனக்கு சலிப்பாக இருந்தது.

ஆதித்யா இடத்தில் வேறு ஒருவர் இருந்திருந்தால் நிச்சயம் திருமணத்திற்கான எதிர்பார்ப்போடு நான் இருந்திருப்பேன்.

அவனைப் பற்றிய கனவுகளில் மூழ்கி இருப்பேன். ஆனால் இந்தத் திருமணம் நடக்காது என நானும் ஆதித்யாவும் விரும்புவதால் இதைப்பற்றி எண்ண கூட என்னால் முடியவில்லை. தலை கனமாக இருப்பது போல் தோன்ற கட்டிலில் சாய்ந்து படுத்தேன்.

ஒரு அரை மணி நேரத்தில் எழுப்பினாள்‌, மாயா.

"தியா... தியா.... எழுந்திரு. இங்க என்ன நடக்குது னு தெரியாம நீ பாட்டுக்கு படுத்துக்கிட்டு கிடைக்க."

"உனக்கு என்ன வேணும். ஏன் இப்படி கத்துற."

"இங்க உன் கல்யாணம் நடக்குமா நடக்காதான்னே தெரியலை. நீ என்னன்னா மகாராணி மாதிரி படுத்துகிட்டு கனவு கண்டுக்கிட்டு இருக்கியா?"

'நான் கனவு கண்டுக்கிட்டு போடி லூசு.'

"என்ன வேணும் உனக்கு. ஏன் இந்த கல்யாணத்துக்கு என்ன இப்போ?"

"ஆதித்யாக்கு ஆல்ரெடி ஆள் இருக்காம். அவர் ஏற்கனவே ஒரு பொண்ண லவ் பண்ணி இருக்காராம். அந்த பொண்ணு ஆதித்யா விட்டு போயிட்டா போல. அதனால அவரு சூசைட் பண்ண ட்ரை பண்ணுனாராம். அந்த பொண்ண மறக்க முடியாம இருக்காராம்.

இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையாம். ஓடி போனாலும் போய்விடுவாராம்."என கூற நான் கண்களை அகல விரித்தேன்.

'என்ன சூசைட்டா!!? ஓடி போய்டு வானா!!! இதெல்லாம் நம்ம லிஸ்டிலயே இல்லையே. அது சரி போட்டு குடுக்குறவங்க எப்படி வேணா போட்டு கொடுப்பாங்க' என நினைத்து இதுவும் நல்லாத்தான் இருக்கு. இது ஏன் நமக்குத் தோன்றாமல் போனது என்ற எண்ணம் வராமலும் இல்லை.

சோகமாக இருப்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு கீழே செல்ல அம்மா சோபாவில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள்.

என்னைப்பார்த்ததும் மேலும் கண்ணீர் வடிக்க ஆறுதலாக அவர் தோளை பற்றினேன்.

"அம்மா இப்ப ஏன்மா அழுகுற?"

"ஆதித்யாக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லையாம். அவர் காதலிச்ச பொண்ணு கூட்டிட்டு ஓடிப்போக போறாராம். உன் வாழ்க்கை என்ன ஆகும் னு நினைச்சா என்னால முடியலயே" என மீண்டும் கண்ணீர்விட முகத்தை பாவமாக வைத்துக்கொண்டேன். வராத கண்ணீரை ஒற்றி எடுத்தேன்.

என் தந்தையோ செய்வதறியாமல் கைகளை பிசைந்து கொண்டு அலைபேசியில் யாரைரோ தொடர்பு கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தார்.

அனேகமாக விஷ்ணு அங்கிளாக இருக்கலாம் என நினைத்துக் கொண்டேன்.

பாட்டி வந்தவர்,

"நிறுத்து பார்வதி. இப்ப எதுக்கு ஒப்பாரி வச்சுட்டு இருக்க. இவர் கருப்பு சேலையை எடுத்து வைச்சுக்குட்டு இருக்கும்போதே நான் நெனச்சேன். ஏதாவது அபசகுணமா வரும்னு. இப்போ அழுறதை நிறுத்திவியா மாட்டியா" என கத்தினார்.

அவர் சத்தத்தில் அம்மா அமைதியானார்.

" எல்லாருக்கும் சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க. ஆதித்யாவை பத்தி எங்களுக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும். அவன் எப்படிப்பட்டவன்னும் எங்களுக்கு தெரியும். அதனால இந்த விஷயத்தில யாரும் ரொம்ப அக்கறை பட வேணாம்.

இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும். இதுக்கு மேல இதை பத்தி யாரும் பேசக்கூடாது. எங்க வீட்டு மாப்பிள்ளை பத்தி தப்பா பேசினா பல்லு இருக்காது." என எச்சரித்தார்.

பின் என் அருகில் வந்து என் கையை பிடித்து இழுத்துக்கொண்டு அவர் அறைக்கு சென்றார்.

என்னை ஏற இறங்க பார்த்தவர் இப்படி "உட்காரு" என்றார் அதிகாரமாக.

"எனக்கு தெரியும் உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு. அதுக்காக ஆதித்யாவை பற்றி இப்படி சொல்லுவனு நான் எதிர்பார்க்கவே இல்லை.

"பாட்டி நான் எதுவும்..." பாட்டிக்கு தெரிந்து இருந்திருக்குமோ என நினைக்கும் பொழுதே வியர்வையில் பூக்கத் தொடங்கி விட்டது.

"போதும் நிறுத்துடி. யாரை ஏமாற்ற பார்க்கிற."என என்னை முறைத்துக் கொண்டு நிற்க என் உடல் அதிர்ந்து நடுங்கியது.

"நானும் ஆரம்பத்திலிருந்து பாத்துட்டு தான் இருக்கேன். கல்யாணத்துக்கு நீயா தானே சரின்னு சொன்ன. பின்ன எதுக்கு இதெல்லாம் பன்ற."

"அன்னக்கியும் அப்படித்தான் உன்னை பொண்ணு பாக்க வரும் பொழுது ஆதித்யா குடிக்கிற டீ ல உப்பைக் கலந்து கொடுக்குற. எவ்வளவு நெஞ்சழுத்தம் உனக்கு."

"பா..பா.. பாட்டி..." என நான் தடுமாற, இது எப்படி இவருக்கு தெரியும் என யோசித்துக் கொண்டிருக்க,

"எனக்கு எப்படி தெரியும் தானே யோசிக்குற. நான் தான் பார்த்தேனே நீ டீ ல உப்பை கலந்தத. அதனாலதான் நான் டீ கப்ல இருந்த டீயை கொட்டிட்டு வேற டீ போட்டு வைத்தேன்.

அது மட்டும் இல்லாம எவனோ ஒருத்தன கூட்டிட்டு வந்து சாமியாருன்னு பொய் சொல்லி ஏமாத்த வேற பார்க்குற.

நீ வேணா இங்க எல்லாரையும் ஏமாற்றலாம். ஆனா என்னை ஏமாற்ற முடியாது.

அவன் கிட்ட பணத்தை காட்டுனதும் ஓடி போய்ட்டான்.

அன்னைக்கும் அப்படித்தான் புடவை எடுக்கும்போது அந்த பையன அப்படி முறைக்குற. உன்னால தான் அந்த பையன் பாதிலேயே போயிட்டான்னு நினைக்கிறேன்."

'நாம் முறைச்சத பாத்தியே. அவன் என்னை முறைச்சதையும் கையப் பிடிச்சு இழுத்ததயும் பார்க்கலயா கிழவி' என மனதிற்குள் அர்ச்சனை செய்தேன்.

"அப்படி பார்க்கிற. இன்னைக்கு என்னமோ போன்ல அந்த தம்பி  காதல் தோல்வின்னு  சொல்ற. நான் நீ பேசுன எல்லாத்தையும் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன்.

இந்த கல்யாணத்துல பிரச்சனை பண்ணி நிறுத்த பார்க்குற. அது நான் இருக்குற வரை நடக்காது.

ஆதித்யாக்கு என்னடி குறைச்சல்."

'எல்லாமே குறைச்சல் தான்.' என மனம் ஒருபுறம் கூப்பாடு போட்டது.

" எவ்ளோ நல்ல பையன் தெரியுமா. அன்பான பையன். கோவமா பேச தெரியாது."

இதை கேட்டதும் என் கண்கள் வெளியே வராத குறைதான்.கோபமே வராதா. என் கையை பார்த்தேன். இரண்டு நாட்களுக்கு முன் கடையில் என் கைகளை அழுத்திய போது ஏற்பட்ட ரணம் இன்னும் குறையவில்லை. கிழவியை முழு மூச்சாக முறைத்தேன்.

நூறு பொய் சொல்லி கல்யாணம் செய்யலாம் என்று கூறுவார்கள். கிழவி அதையும் தாண்டி விடும் போலிருக்கு.

இந்த மாதிரி நல்ல பையனா கல்யாணம் பண்ண கொடுத்து வச்சிருக்கணும்.

அத விட்டுட்டு

அந்த பையன கெட்ட பையனா காட்ட முயற்சி பண்ற. இதோட நிப்பாட்டிகோ. இன்னொரு முறை இந்த கல்யாணத்துல நிப்பாட்ட ஏதாவது முயற்சி செஞ்ச அப்புறம் என்ன பொல்லாதவலா தான் பார்ப்ப."

இதுக்கும் மேலயா.

நான் எதுவும் பேசாமல் குற்றவுணர்வுடன் அமர்ந்திருக்க, என் அருகில் அமர்ந்து என் தோளை தொட்டார்.

"பாட்டி சொல்றேன்னு தப்பா எடுத்துக்கிட்டாலும் சரி. உண்மையாவே ஆதித்யா ரொம்ப நல்ல பையன் டா. கொஞ்சம் யோசிச்சு பாரு.

உன் அப்பா உன் மேல எவ்வளவு பாசமா இருக்காரு. உனக்கு எதுலயாவது குறை வச்சிருக்காரா. இல்லேல.

ஆதித்யாவை நீ கல்யாணம் பண்ணிக்கனுங்குறது உங்க அப்பாவோட ஆசை.

உன் அப்பா நிச்சயம் ஆதிய பத்தி விசாரிக்காமல் இந்த கல்யாண முடிவை எடுத்திருக்க மாட்டார். அதனால யாருக்காக இல்லாட்டியும் உன் அப்பாவுக்காக யோசிச்சு பாரு.

பண்டிதர் சொன்ன மாதிரி நீ எவ்ளோ முயற்சி எடுத்தாலும் இந்த கல்யாணத்துக்கு நிப்பாட்ட முடியாது. இது கடவுள் போட்ட முடிச்சு.

இன்னொரு முறை ஆதிய தப்பா பேசாத. எப்பவும் இந்த மாதிரி பொறுமையாக எடுத்துச் சொல்லிக்கிட்டு இருக்க மாட்டேன்."

நான் என் பால்கனியின் சோபாவில் அமர்ந்து பாட்டி கூறியவற்றை மீண்டுமொருமுறை எண்ணிப் பார்த்தேன்.

பாட்டி சொன்னது போல் நடப்பது நடக்கட்டும் என விட்டுவிடலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது என் அறைக்கதவு தட்டப்பட்டது.

எழுந்து பார்த்தபோது என் தந்தை அறை வாயிலில் நின்று கொண்டிருந்தார்.

"தியா தூங்கிட்டியா?"

"இல்லப்பா சும்மாதான் உட்கார்ந்து இருந்தேன்."

"உனக்கு தூக்கம் வரலைன்னா. அப்பாகூட கொஞ்சம் வரியா டா?" என கேட்க நானும் சரியென அவர் முன்னே நடக்க நான் அவரை பின்தொடர்ந்தேன்.

அவரின் ஆஃபீஸ் ரூமுக்கு அழைத்துச் சென்றவர் என்னை அவர் அருகில் அமர வைத்து ஒரு ஆல்பத்தை எடுத்து என்முன்னே வைத்தார்.

"இது என்னன்னு தெரியுமா?"

எனக்கு தெரியாது என்பது போல் தலையசைத்தேன்.

"திறந்து பாரும்மா."

நான் அதை திறந்தேன் என் முகத்தில் அழகான புன்னகை குடிபெயர்ந்தது.

நான் பிறந்த போது எடுத்த புகைப்படம்.

அதை அடுத்து என் அப்பா அவரின் கையின் பாதி அளவு கூட இல்லாத என்னை அணைத்து நெற்றியில் முத்தமிடும் அழகிய தருணம் புகைப்படமாக உருமாறி இருந்தது.

என் கண்களின் ஓரத்தில் கண்ணீர் துளி எட்டி பார்த்தது.

அதன் அடுத்த பக்கத்தில் என் தந்தையின் அருகில் தவழ முயற்சி செய்யும் புகைப்படமும் அதன் அருகில் தவழும் போது தோல்வியடைந்த புகைப்படமும் இருந்தது. நான் அதில் கீழே விழுந்து கிடக்க என் தந்தையின் கண்களில் இருந்து கண்ணீர் கசிந்ததை அந்த நன்றாக புகைப்படம் காட்சி படுத்தியிருந்தது.

என் தந்தை எனக்கு நடக்க கற்றுக் கொடுத்தது. சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்தது. என் சொப்பு சாமான்களுடன் விளையாடியது.

எழுத கற்றுக் கொடுத்தது.

நான் என் பிஞ்சு விரல்களால் அவருக்கு ஊட்டி விட்டது. அவர் எனக்கு நிலா சோறு ஊட்டியது.

என் தந்தைக்கு சடை போட்டு பொட்டு இட்டது.  என அனைத்தும் புகைப்படமாக மாறி இருந்தது.

புகைப்படங்களும் பார்த்ததும் மனதுக்குள் ஏதோ

இனம் புரியாத உணர்வு எழுந்ததை

என்னால் உணர முடிந்தது. கலங்கிய கண்களோடு என் தந்தையை கண்டேன். அந்த அழகான தருணங்களை என் தந்தையுடன் செலவிட்ட அந்த இனிமையான நினைவுகளை என்னால் என்றுமே மறக்க இயலாதது.