அயலா! அயலா! -Praveena Thangaraj - onlinetamilnovels.com Forum

அயலா... அயலா...-20 (முடிவுற்றது)
அத்தியாயம்-20

ஆதினி தலைப்பாராத்தோடு தன் கைகளை தாங்கி நெஞ்சடைக்க இருந்தாள்.

அயனை வயிற்றில் உள்ள குழந்தையை வைத்து மிரட்ட முடியாது.
அக்ஷயாவை அவனிடமிருந்து பிரித்திட இயலாது.

தன்னை காத்திட இங்கே யாருமில்லை. தான் ஒரு நிர்கதியற்ற நிலையில் இருக்கின்றோம். அனிதாவும் தன்னை போல தான்‌. சிக்கலில் இருப்பதை தெரியாமல், தான் ஆபத்தில் இருப்பதாக தனக்கு அலார்ட் செய்கின்றாள். ஆனால் அவளே அந்த ஆபத்தின் விளிம்பில் கால் பதிந்தவளே.

தன் மனதில் ஏதேனும் திட்டம் நினைத்தாலும் அயன் மனதை படித்திடும் வல்லமை படைத்தவன்.  இதெல்லாம் எண்ணியவளுக்கு இதயம் வலிந்தது.

அவளது கஷ்டம் உணர்ந்தவனாக அயன் அவள் முன் மண்டியிட்டான்.
"இங்க பாரு ஆதினி.. நான் உன்னை  காதலிக்கிறவன் மட்டும் என்றால், என்னால என் உலகத்துக்கு ராஜாவாக இருக்க முடியாது. என் இனப்பெருக்கப் பொறுப்பை விட்டுட்டு இந்த பூமியிலேயே தங்கிடுவேன். என்னை என் உலக மக்கள் என்ன சொல்வாங்க தெரியுமா? நான் ஒரு துரோகியா நிற்பேனே தவிர நல்ல அரசனா இருக்க முடியாது.

அதே போல... இனவிருத்தி செய்ய வந்த ராஜாவா மட்டும் இருந்தா,
நம்ம காதலை சாக்ரபிஷ் செய்து, உன்னை கட்டாயப்படுத்தி, விருப்பமில்லாம, என் உலகத்துக்கு இழுத்து செல்லணும்.
யோசித்து பாரு... நான் ராஜா? என்னோட ராணியை இழுத்துட்டு போகணுமா? என்னால ஒருத்தி மனதை வென்று அவளை அழைச்சிட்டு வரமுடியாதா?!
நான் தலைவன் ஆதினி. உன்னை என் உலகமறிய, மோதிரம் போட்டு, மனைவியா, ராணியா, அறிமுகப்படுத்தணும். மெயிடா இல்லை. உன்னை இழுத்துட்டு போனா அது மெயிடா காட்டப்படும். எனக்கு அது பிடிக்காது. என்னை விரும்பறவ ராணியா தான் இருக்கணும். ராணியா தான் உலகத்துக்கும் அறிவிப்பேன். நீ ஜஸ்ட் எலியில்லை.

ஆனா பாரு... நான் காதலுக்கும் தலைமைக்கும் இரண்டுக்கும் நடுவில் சிக்கியிருக்கேன்.
இதுதான் என் உண்மையான நிலை. முடிவு நீ தான் எடுக்கணும் ஆதினி.
என் உலகம் என்னை ராஜா என்று அழைக்கலாம். நீ இல்லாமல் நான் வெறும் தலைவன்.

நான் உன்னை தேர்ந்தெடுத்தது என் இனத்துக்காக. ஆனா இப்ப நான் உன்னை வேண்டுவது என் இதயத்துக்காக. நான் உன்னை நேசிக்கறேன் ஆதினி. உன்னை மட்டுமில்லை... அக்ஷயாவையும் தான்.

உன் முடிவெடு. நான் காத்திருக்கேன். மணி... மூன்றுக்கு ஸ்பேஷிப் கிளம்பும். நம்ம மாடில தான் மற்றவங்க கண்ணுக்கு தெரியாம இப்ப இன்விசிபிலா ஸ்பேஷிப் இருக்கு.

நீ வரலைன்னா... நான் அக்ஷயாவை மட்டுமாவது அழைச்சிட்டு போவது உறுதி. ஏன்னா அவ என்‌மக. உனக்கு நான் எங்க வழக்க முறைப்படி, மோதிரம் அணிவித்திருக்கேன். உங்க வழக்கப்படி தாலியும் கட்டியிருக்கேன்." என்று இக்கட்டும் வைத்தவனாக தன் காதலையும் கெட்டியாக பிடித்தவனாக, தனது வெற்றிக்கு பிள்ளையார் சுழியிட்டான்.

ஆதினியால் முடிவெடுக்காத நிலை.

அவள் மனதை படித்தவனால் இப்பொழுது அவளது எண்ணத்தை படிக்க பிடிக்கவில்லை‌. "ஆதினி... இந்த மோதிரம் போட்டு முடிவெடு. நீ என்ன நினைச்சாலும், என்னால உன் மைண்ட் ரீட் பண்ண முடியாது‌. மேபீ... அது உனக்கு சுதந்திரமான முடிவெடுக்க உதவும்.

எங்க உலகத்துல இதை எல்லோரும் அணிந்திருப்பாங்க. ஒருத்தர் மனதை இன்னொருத்தர் படிக்க முடியாது. இப்ப உனக்கு முடிவெடுக்க உதவட்டும்." என்று அவன் திருமணத்தன்று அணிவித்த மோதிரத்தை அணிவித்தான்.

அயன் கையில் இது போல மோதிரம் இல்லை.
தன் கையில் அயன் அணிவித்ததை கண்டு அவனை சந்தேகமாய் பார்க்க, 'நீ என்னோடவே வந்துடு ஆதினி. ஒரு உலகம் அழிவதை நீ தடுக்க வா. என்னை நம்பி வந்து, என் காதலை, நம்ம காதலை வாழவை.
இங்க வாழ்ந்தா மறுமணம், இரண்டாம் கல்யாணம் என்ற கோட்டுக்குள்ள அடைப்பட்டு அழுது வெடித்து, எப்படி  வாழ்வதற்கும் ஏச்சும் பேச்சும் வாங்காம, என் கூட ராணியா நில்லு. உன் கையசைப்புக்கு அங்க ஒரு உலகம் காத்திருக்கு. அதோட நீ வந்தா என்‌மனசு சந்தோஷப்படும்.' என்று நினைத்துக் கொண்டிருந்தான். அதெல்லாம் ஆதினியால் தெளிவாக கேட்க முடிந்தது.

ஆதினி மெதுவாக நிதானமானாள். அவளது மூளை வேகமாய் கணக்கிட்டு முடித்தது.

"நான் உன்னோட வர்றேன்" என்றாள் ஆதினி. அயனுக்கு அந்த வார்த்தை ஆனந்தத்தை தந்தது‌.

அவன் எழுந்து, அவள் கையை பற்ற ஏதுவாக கையை நீட்டினான் அயன். ஆதினி மறுப்பாய் கையை நீட்டி தானாக வருவது போல நின்றாள்.

மெதுவாக மாடிப்படியில் இருவரும் மௌனமாய் நடந்தாளர்கள்.

மணி இரண்டு ஐம்பத்தொன்பது, வீட்டின் மேல் மாடியில் இரவு காற்று கனமாக வீசியது. தூரத்தில் நாய் குரைத்தது. விண்மீன்கள் வழக்கத்தை விட அருகில் இருப்பது போலத் தெரிந்தது ஆதினிக்கு.

ஆதினி மெதுவாக படிகளை ஏறினாள். ஒவ்வொரு அடியும், ஒரு உலகத்திலிருந்து இன்னொரு உலகத்துக்கு நகரும் பாலம்.

அயன் அவளை தீவிரமாக பார்த்தான். அயன் கண்களில் ஆவல், ஆனால்
அவசரம் இல்லை. தங்கள் உலகத்திற்காக ஆதினிக்கான காத்திருப்பு மட்டும்.

அக்ஷயா அவனைப் பார்த்து மர்மமாய் சிரித்தாள்.

அக்ஷயாவோ அயலப்பா அம்மா வரவும் ''அம்மா... நட்சத்திரம் ரொம்ப கிட்ட தெரியுது பாருங்க." என்று மகிழ்ச்சியில் துள்ள, ஆதினி மகளைத் தழுவிக் கொண்டாள்.

அந்த அணைப்பிலேயே பூமியின் நேசம் இருந்தது. அந்த அணைப்பில் பயம் இருந்தது.ஆனால் அதைவிட அதிகமாக ஆதினியின் தீர்மானம் இருந்தது.
அவள் அயனை நோக்கி நின்றாள்.

"நான் வர்றேன் அயன்.'' என்று தீர்க்கமாக உரைத்தாள்.

அயன் மூச்சு சீராக சுவாசித்தான். "உனக்காக மட்டும் இல்ல அயன், என் குழந்தைகளுக்காக மட்டும் இல்ல. நான் இந்த உலகத்தில் இரண்டாம் பட்சமான வாய்ப்பு வாழ்ந்தேன்.

இப்ப உன் உலகத்துல நான் முதன் முறையாக, நான் தேர்வு பண்ணப் போறேன்." என்றாள். அவள் குரலில் ஆவேசமா ஆணவமா? பிரித்தறியாத வகையில் மைண்ட் ரீட் செய்ய இயலாது ராணி மோதிரத்தை வேறு அணிந்திருந்தாள்.

அயன் மெதுவாக "அது... என் உலகம் இல்லை.‌.. நம்ம உலகமா இருக்கும்" என்று திருத்த, ஆதினி சிரித்தாள்.

அந்த சிரிப்பில் தற்போது பயம் இல்லை. "இது உன் உலகமா இருந்தது,
இல்ல நம்ம உலகமா இருக்கும், அதுவே நாளடைவில், நம்ம கையில் உலகம்  விரிவடையும்.. அப்போ.. எனக்கான நியாயத்தை.. நான் பெற்று இருப்பேன்" என்றதும ஒரு மெல்லிய அதிர்வு ஆதினி பெரிய முடிவெடுத்தவளாக இருந்தாள்.

மாடியின் வான்வெளி அசைந்தது. கண்களுக்கு தெரியாத ஒன்று ஒளிர்ந்தது.
அக்ஷயா ஆச்சரியமாக மேலே பார்த்தாள்.
"அயலப்பா... இது தானா?" அக்ஷயா ஒரு நொடி கூட இமை சிமிட்டாமல் வானை பார்த்தாள்.

அயன் ஆதினியை தான் தேர்ந்தெடுத்ததான். ஆனால் இப்போது அவள் தான் அந்த கையை பிடிக்கிறாள்.

அயனை பின்தொடர்ந்து அல்ல. அயனின் பக்கத்தில் நின்றபடி.
விண்கலத்தின் கதவு திறந்தது.

அந்த ஒளியில் அவர்கள் மூவரின் நிழல்கள் ஒன்றாக கலந்து ஏறினார்கள்.

பூமி கீழே மெதுவாக சுருங்கியது.
வீடு, தெரு, நகரம், அனைத்தும் ஆதினிக்கு ஒரு நினைவாக மாறின.
அக்ஷயா கண்ணை பெரிதாக்கி ஆர்ப்பாட்டத்தோடு சொன்னாள் "அம்மா... நாம பறக்கப் போறோம்" என்று மகிழ்ந்தாள்.

ஆதினி மகளை வாஞ்சையாக முத்தமிட்டாள். ஆதினி விண்மீன்களை நோக்கி பார்த்தாள். இந்த பயம் களைவதற்கு தான் ராட்டினம் எல்லாம் ஏற வைத்தானா? அப்படி என்றால் அதுவும் ஒரு ஆய்வு போல என்று நெஞ்சை அடைத்தது.
"இல்ல அக்ஷயா... இனி தான் நாம வாழப்போறோம்." என்று அயன் கூறிட, விண்கலம் அயன் ஆதினி அக்ஷயா மற்றும் செல்வம் ஜமுனா உருவத்தில் உள்ளவர் ஏறிட விண்கலம் மேலெழுந்தது.

அந்த இரவு மூன்று மணிக்கு, ஆதினி குடும்பம் மட்டும் பயணம் செய்யவில்லை. ஒரு இனத்தின் வரலாறு திசைமாற்றப்பட்டது.

ஆதினி தனது தேர்வால் ஒரு உலகத்தின் சட்டத்தை எழுத ஆரம்பித்தாள்.

ஆம்... தன் கணவன் பிரதாப் இறப்பிற்கும், அவனை போல பலரும் தீவிபத்தில் இறந்ததிலும், அவர்கள் குடும்பம், மனிதர்களோடு மனிதர்களாக பழகி, தங்கள் தேவைக்காக மனித உயிரை துறக்க வைத்து, பெண் இனத்தை அழைத்தும், தூக்கி கொண்டும் பறக்கும் இக்கூட்டத்தின் சட்டத்தை, ஒரு அம்மாவாக, ஒரு மனைவியாக, தற்போது புது உலகத்தின் அயனின் ராணியாக, அயனின் குழந்தைகளை, கர்ப்பத்தில் இரண்டு உயிரை சுமந்தவளாக, அயனின் உலகத்தை காண தனியொருவளாக பழிவாங்கவும் நடையிட்டாள். அவள் எண்ணம் சரியா அல்லது அயனுடன் இணங்கி வேறு வழியின்றி வாழ்வை தொலைக்க போகின்றாளா?

ஆதினியின் அக்கோலத்தை விண்மீன்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தன.

'இது முடிவு இல்லை. இது ஒரு புதிய உலகத்தின் தொடக்கம்.' என்று அயன் மற்றும் ஆதினியே அறிவார்க்ள்.

-சுபம்.
-பிரவீணா தங்கராஜ்

அயனின் பூமி பயணம் சுபமாக........

ஆதினியின் அயன் உலகத்திற்கு வருகை தொடராக.......

பார்ட்-2 நேரம் இருக்கும் போது மற்றொரு கதை வாயிலாக எழுத துவங்குவேன்.

உங்கள் கருத்தை https://onlinetamilnovels.com/community/novel-discussion-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf/ novel discussion பகுதியில் கூறலாம்.

https://onlinetamilnovels.com/%e0%ae%85%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%85%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be-20/

அயலா... அயலா...-19
அத்தியாயம்-19

செல்வமும் ஜமுனாவும் அதேயிடத்தில் இருந்தனரே தவிர, ஆதினிக்காக பேசவில்லை.

ஆதினி என்னாச்சு?" என்று பார்க்க, அயனும் செல்வமும் பார்வையால் அவர்கள் பேசிக்கொள்வதை பார்த்தாள்.

"அங்கிள்?" என்று அழைக்க, "நான் இப்ப செல்வம் இல்லை. நானும் அயனை போல பாரலல் யூனிவர்ஸ்ல ஹூமன். இங்க வந்தப்பவே செல்வமும் ஜமுனாவும் உனக்கு ஒன்னுன்னா உதவிக்கு வந்ததை பார்த்தோம்.
எங்களுக்கு அது தடையா இருந்தது. அதனால அவங்களை சரியான நேரத்திற்கு, அயனோட நீ பேசி பழக சாதகமா பேசுவதற்காக, அவங்க உருவத்தில் நாங்க வந்து பேச வச்சோம்.

இப்பவும் செல்வமும் ஜமுனாவும் எங்களோட வசியத்துல ஆழ்ந்த உறக்க நிலையில் இருக்காங்க. இப்ப பேசறது எங்க கூட்டத்தின் தலைவன் அயனோட வருகைக்காக காத்திருந்து, தாமதமானதால, செல்வம் ஜமுனா உருவத்தில் நேரிடையா வந்தோம்." என்று பேச, ஆதினி பேயறைந்தது போல நின்றாள்.

அப்படியானால்... செல்வமும் ஜமுனாவும், அயனை என் வீட்டில் தங்க வைத்து பேசியது, அவனை மணக்க தனக்கு அறிவுறுத்தியது, அக்ஷயாவோடு பழக விட்டாலும் நல்லதென்று கூறியது எல்லாம் அயனின் திட்டத்தின் ஒரு பகுதியா?" என்று மகளை பார்த்தாள்‌.

அக்ஷயாவோ தன் அணைப்பிலிருந்து அயன் கைவளைவுக்குள் நின்றியிருக்க, "அக்ஷயா... இங்க வந்துடு. அவர் மனுஷன் இல்லை." என்று கத்த, அயன் நகைத்தான். அக்ஷயாவோ ''எனக்கு தெரியும் அம்மா. அயலா..‌. மனுஷன் இல்லை. ஹீ இஸ் அயலா இட்ஸ் மீன் அயலான்." என்று மற்றொரு அதிர்ச்சியை தந்தாள்.

ஆதினி உறைந்து நின்றவளாக காண, அயனோ "ஏன் ஆதினி... அக்ஷயா எத்தனை விதமான ஓவியம் வரைந்தா... அதுல முதல் இரண்டை பார்த்துட்டு அப்படியே விட்டுடுவியே... ஒழுங்கா.. அவ வரைந்த மொத்த ஓவியத்தையும் ஒரு நாளாவது பார்த்தியா?

இங்க பாரு" என்று அக்ஷயா வரைந்த டிராயிங் நோட்டை எடுத்து பக்கத்தை திருப்பினான்.

அதில் அயன் வேற்றுகிரக வாசியாக இருக்கும் உருவத்தில் அக்ஷயா படம் வரைந்து வண்ணம் தீட்டியிருந்தாள்.
அதை பார்த்ததும் ஆதினி மகளை கண்டாள்.
"உன்னிடம் தான் நான் என் வேஷத்தை போட்டேன் ஆதினி. குழந்தையிடம் என்னால தொடர்ந்து போடமுடியாது. அதனால ஒரு கட்டத்தில் தனியா இருந்தப்ப நான் அவளுக்கு ஏற்ற விதமா, கதையா சொல்லி, அவளை கன்வின்ஸ் பண்ணிட்டேன். அவளுக்கு மனிதனாக நடமாடிய பிரதாப் அப்பாவை விட, என்னை ரொம்ப பிடிச்சிருக்கு. ஏன்னா... நான் அவளை முழு மனசா மகளா பார்க்கறதை அவ உணருறா.

அக்ஷயா குழந்தை எப்பவோ என் கூட வர தயார். ஆக்சுவலி அவளோட பிறந்த நாளுக்கு என் உலகத்துக்கு அழைச்சிட்டு போறேன்னு தான் சொல்லியிருக்கேன்.

இந்த உலக்ததுல எல்லா அப்பாவும், குழந்தைக்காக  நிலாவை நட்சத்திரத்தை பிடிச்சி தரவா? உலகத்தை உருவாக்கி தரவானு கேட்பாங்க. ஆனா என் பொண்ணு அக்ஷயாவுக்கு நான் நிலவும் நட்சத்திரத்தையும் நெருக்கமா போய் காட்டுவேன். புது உலக்ததையே அவளுக்கு பரிசா தரப்போறேன். என் உலகத்துல நான் ராஜான்னா... என் மக அக்ஷயா இளவரசி.

அக்ஷயா எப்பவோ, என் கூட, என் உலகத்துக்கு வர தயார் ஆதினி. நீ தான் இப்ப முடிவெடுக்கணும்.

நீ தானே சொன்ன... எனக்கு இந்த உலகம் வேண்டாம் அயன். என்னை மறுமணம் செய்த ஒரே விஷயத்துக்காக அசிங்கமா பேசி காயப்படுத்தறாங்க.

நமக்குனு ஒரு உலகம். அதுல நீ நான் அக்ஷயா.. இது போதும். எனக்கு நீ மட்டும் போதும்னு சொன்னியே ஆதினி.

இப்ப அதை தானே தயாரா கொண்டு வந்து இருக்கேன். நாம நமக்கான உலகம். அந்த உலகத்துல நீ ராணி. உன்னை ஒரு வார்த்தை காயப்படுத்த மாட்டாங்க. நீ சொல்வதை கேட்பாங்க.

உனக்குன்னு மரியாதை தருவாங்க. என்னோட தலைவியா நீ கீரிடம் சூடலாம்." என்று விவரிக்க, மறுப்பாய் தலையசைத்தாள்‌.

"அக்ஷயா... நீ அம்மாவிடம் வா‌. உன்னை அயன் கொன்னுடுவான். உன்னோட அப்பா பிரதாப்பை சாகடிச்சதே அயனும் அவன் ஆட்களும் தான்.
இங்க வா" என்று கையை நீட்டி அழைக்க, குழந்தையோ அயனை கண்டு "அயலாப்பா" என்று என்ன செய்வது? என்பதை கேட்டாள்.

அயனோ செல்வத்தை பார்த்து ஏதேதோ கூறிட, அவர் அக்ஷயாவை நெருங்கினார்.

"அக்ஷயா குட்டி...‌ நீங்க செல்வம் அங்கிளோட, மாடில போய் இருங்க. நான் அம்மாவை நம்ம உலக்ததுக்கு போக சம்மதிக்க வச்சி அழைச்சிட்டு வர்றேன்." என்று அனுப்பினான்.

"ஓகே அயலப்பா..  அம்மா... அயலப்பா சொல்லறதை கேளுங்க" என்று கூறி செல்வத்தின் கையை பிடித்து நடந்தாள்.

ஆதினிக்கு திகிலாக இருந்தது. அக்ஷயாவை தடுக்க செல்ல, அயனோ முன்னால் வந்து மறைத்தான்.

"உட்காரு... நாம போசலாம்‌" என்றான்.‌

அக்ஷயாவையும் அயனையும் பார்த்து மிரண்டவளாக நின்றாள்.
குழந்தை வரைந்த ஓவியத்தை முன்னரே பார்த்திருந்தால் கூட தனக்கு இந்த விஷயம் லேசாக சந்தேகத்தை கிளப்பியிருக்கும். குழந்தை எது காட்டினாலும் சற்று கவனத்துடன் தான் ஆராய வேண்டுமோ என்று முதல் முறை அனுபவ பூர்வமாக உணர்ந்தாள்‌. அத்துடன் குழந்தையை அயனுடன் பழக விட்டது தவறாகவும் தோன்றியது.

"அக்ஷயா.. போகாத. நில்லு அக்ஷயா." என்று மாடியை பார்த்து கத்த, செல்வமோ அக்ஷயாவை கீழே பார்க்க விடாமல் அழைத்து சென்றார்.‌

"உட்காரு ஆதினி. நீ இப்ப கன்சீவா இருக்க. அடிக்கடி நினைவுப்படுத்தணுமா? ஒரு உயிருக்கு இரண்டு உயிரை சுமந்தவளா நிற்கற. இந்த அதிர்ச்சியான விஷயம் கேட்டு தள்ளாடி மயங்கினா தரையில சரிந்திடுவ. பிறகு உனக்கு தான் ஆபத்து." என்றான்.‌

ஆதினியோ தன் குழந்தை அக்ஷயாவை வைத்து இவன் காய் நகர்த்தும் போது, தான் இவனது குழந்தையை வைத்து மிரட்டினால் அடிபணிவானா என்று யோசித்தவள், "அயன்... இப்ப என்னையும் அக்ஷயாவையும் நீ விட்டு போகலை. உன்னோட குழந்தைகள்.. இரண்டு என் வயிற்றுல வளருது. அதை அழிச்சிடுவேன்." என்று மிரட்டினாள்.

வாய் வார்த்தை தான் அப்படி கூறியதே தவிர, அயனின் காதல் அம்பால் மலர்ந்து, தன் கருவில் உருவான கருவை அழிக்க மனமின்றி மிரட்டினாள்.

எந்த உலகத்து குழந்தையாக இருந்தால் என்ன? அது தனது வயிற்றில் குழந்தையாக படைக்கப்பெற்றது என்ற இரக்கம் ஆதினிக்குள் உண்டானது. ஆனாலும் அயனை மிரட்ட வேறு எதுவும் அவளுக்கு தெரியவில்லை‌.

அயனோ அவ்விடம் அதிர நகைத்தவன், "ஆதினி... உனக்கு புரிய மாட்டேங்குது.

நான் வேற உலகத்து மனிதன். வேற்றுகிரகவாசி. நமக்குள்ள ஜெனிடிக் மேட்ச் இருக்கு. ஆனாலும் நான் வேற... நான் மனிதன் இல்லை ஆதினி...
உங்க உயிரியல் வகைப்பாட்டில் நான் வேறு ஸ்பீஷிஸ். அப்படியிருக்க... மனித குழந்தை மாதிரி கலைச்சிட முடியுமா?

டாக்டரிடமே போகாம நான் தந்த மாத்நிரையை நீ நாள் தவறாம எடுத்திருக்க.

அதோட பேக்ட் சொல்லணும்னா... அக்ஷயாவுக்கு கிப்ட் வாங்க போனப்ப கீழே விழுந்து ஸ்கிட் ஆகி ஹாஸ்பிடல் போனியே... அன்னிக்கு பச்சை கலர்ல ஜெல் இருந்ததே... அதென்ன... உன்னை ஸ்கேன் செய்தப்ப இருந்த ஜெல்லா? நோ ஆதினி... அது என் குழந்தையோட ரத்தம்.

அன்னிக்கு லேசா.. என்னை பயமுறுத்திட்ட. ஆனா நான் அன்னிக்கு அதை சரிசெய்ய முயன்றப்ப, அந்த ரத்தம் என்ன சொல்லுச்சு தெரியுமா... கவலைப்படாதிங்க.. நான் ஹெல்தியா வளர்ந்துட்டேன். இனி என்னை ஒன்னும் பண்ண முடியாது என்ற கான்பிடன்ஸ் தந்துடுச்சு.

நீ என்னை உன் வயிற்றுல இருக்கற குழந்தைகளை வச்சி மிரட்ட முடியாது ஆதினி.

நான் அக்ஷயாவை வச்சி மிரட்டினேனா? பட் நீ ஏன் ஆதினி மனிதினியா இருக்க? ஒ மை காட்... இதான் மனுஷனோட புத்தியா?

நான் தீவிபத்து நடந்தப்ப என் கூட வந்தவங்க தெரியாம தான் அங்க விபத்து ஏற்பட்டது,தீயில துடிச்சதை பார்த்தேன். அதனால தான் கொன்றாங்களே தவிர... தானா சாகடிக்க திட்டமிடலை. பாதி உயிர் போனப்பிறகு இருக்கற மீதியை வலியில்லாம சாக வச்சி ஆத்மா சாந்தியடைய செய்தாங்க. அதுக்கே நான் ஒரு தலைவனா அப்ஜெக்ஷன் செய்தேன்.

நீ என்னடான்னா... ஒரு யூனிவெர்ஸோட தலைவனின் குழந்தையை சுமந்துட்டு, அதை கலைக்க பிளான் போடற. அழிக்க திட்டமிடற. ரொம்ப தப்பு ஆதினி.

அதோட... என் ஸ்பீஷிஸ் மூளை.. பவர்... என்ன சொல்லுது தெரியுமா... நீ வார்த்தைக்கு தான் அந்த குழந்தையை வச்சி மிரட்டுற. அதர்வைஸ்.. நீ அந்த குழந்தைகளை உன் குழந்தைகள் என்ற கண்ணோட்டத்தில பார்க்கற. குழந்தைகள் என்று இல்லை.. என் மனித முகத்தை பார்த்த கூட உனக்கு என்னை பார்த்தா கோபம் இல்லை. காதல் தான் வருது.

உனக்கு தடையா இருப்பது, என் ஸ்பீஷிஸ் பேஸ், தோற்றம், உலகம். இதான்.

பயப்படாம என் உலகத்துக்கு வா ஆதினி. நான் உன்னை அப்படி பார்த்துப்பேன்.

ஆனா..‌ நீ வரமறுத்தா.. அக்ஷயாவை மட்டும் கூட்டிட்டு போயிடுவேன். ஏன்னா அவ என் குழந்தையா நான் வளர்த்துப்பேன். அவளுக்கு அயலா போதும். அயலப்பா சொல்வது வேதம்" என்று கூறினான் அயன்.

அயனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கோபமாக வந்து விழவில்லை, திமிராக இல்லை, மிரட்டவில்லை ஆனால் மறைமுகமாக அவளை இக்கட்டுக்குள் தான் தள்ளுகின்றது.

மகளை வேறு செல்வத்திடம் அனுப்பியிருக்க, இங்கே அயன் வேறு தன்‌முன் பாந்தமாக அமர்ந்திருக்க, முடிவெடுக்க இயலாத சூழலில், யாரின் உதவியும் இல்லாத கையறு நிலையில் வீற்றிருந்தாள்.

அப்பொழுது தான் அனிதாவின் எண்ணம் தோன்றியது. போனில் ஏதாவது தகவல் தரலாமா? என்று போனை இறுக பற்றினாள்.

அயனோ அவளது சிந்தையில் வண்டு போல புகுந்து பார்த்து, அவள் எண்ணத்தை அறிந்தவனோ, "அய்யோ ஆதினி... அனிதாவிடம் உதவி கேட்பது எல்லாம் வேஸ்டு. ஆல்ரெடி ஊர் முழுக்க நாம பாப்பா பிறந்த நாளுக்கு பிறகு அயன் சொந்த ஊருக்கு போய் பிசினஸ் பார்ப்பதா நீயே தண்டோரா போட்டாச்சு.
கதிர் எல்லாம் அனிதாவோட கதையை நம்புவான்னு நினைக்கற? அப்படியே அனிதா மட்டும் உன் நலனை தேடி இங்க வருவானு நினைக்கறியா? ஆனா அனிதா உன்னை தேடி வருவா. ஆனா இங்கயில்லை‌ அவளுக்கு கல்யாணமாகி, நம்ம உலகத்துக்கு தான் வருவா. ஏன்னா..‌ அவ மேரேஜ் பண்ணற பையன் எங்க ஸ்பீஷிஸ் உருவத்துல இருந்து மாறிய மனிதன். ஆப்டர் மேரேஜ் அங்க தான் வருவா. ஏன்னா..‌ அவளும் பொண்ணாச்சே. பிரதாப் இறப்புக்கு வந்தப்ப அணிதவுக்கு கல்யாணம் ஆகலை என்றதால அங்க ஒரு மிஷன் போட்டாச்சு. எங்க இனத்தை விருத்தி செய்ய வருவா. அவ வர்றது பெரிசில்லை ஆதினி.

என் உலகத்துக்கு நான் ராஜா. நீ ராணி. ஏற்கனவே ராணி இல்லாம நான் அங்க வரமாட்டேன்னு தான் காலம் கடத்தியது. காலம் கடத்தினா கூட நேரா இனத்தை விருத்தி செய்து, என் குழந்தைகளை அங்க பிறக்கற நேரம் சரியா அழைச்சிட்டு வருவேன்னு என் அம்மாவிடம் பிராமிஸ் பண்ணிருக்கேன்.

அதனால தான் நான் டிலே ஆனாலும், என்னோட தேர்வு ஆய்வு சக்சஸ் என்றதில் இங்க சுத்திட்டு இருக்கேன். இல்லைன்னா... எனக்கு என்ன இந்த உலகத்துல வாழ இனிக்குமா?

எனக்கு என்‌ உலகம் தான் முக்கியம். என் தலைமை பண்பு என் உலகத்துல இனவிருத்தி அழியாம பாதுக்காத்து கூட்டத்தை பெரிதுப்படுத்தணும்.

நீ வரலைன்னா அக்ஷயாவுக்கு பருவம் வந்ததும் அவளை எங்க ஸ்பீஷிஸ்ஸுக்கு கட்டி தருவேன். அதனால நீ வந்தாலும் வராட்டினாலும் என் ஆய்வு வெற்றி. ஆனா...‌ நீ வந்தா தான் எனக்கு முழு வெற்றி. ஆதினிக்கு எப்படி வசதி?" என்று அபிப்ராயம் கேட்டான்‌

-தொடரும்.

https://onlinetamilnovels.com/%e0%ae%85%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%85%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be-19/

அயலா... அயலா...-18
அத்தியாயம்-18

ஆதினி அவளாக உட்காருவதற்கு கூட அஞ்சுகின்றாளென அயன் அவனது உலகத்திலிருக்கும் உருவத்திலிருந்து, பூமியில் உள்ள மனித உருவத்தில் இருந்த அயனாக மாறினான்.

ஆதினிக்கு அந்த நேரிடை மாற்றம், அவள் மனதில் 'அயன் என்ற தன் கணவன் மனிதனாக ஓடிவந்து தன்னை இந்த உருவத்தில் இருப்பவனிடமிருந்து காப்பாற்றுவான்' என்ற எஞ்சியிருந்த நம்பிக்கையை தூளாக்கியது.

அயன் இயல்பான மனித உருவத்தில் வரவும் ஆதினி சோபாவில் தோய்ந்தவளாக தொப்பென அமர்ந்தாள். அந்த நேரம் அவள் கருவுற்று இருந்தது கூட புத்திக்கு எட்டவில்லை‌.

அயன் ஆரம்பித்த இடத்தில் ஆதினி முடிவு கேட்டபடி நின்றாள்.

ஹாலில் மின்விளக்கின் ஒளி மட்டுமே எரிந்தது.

சோபாவின் ஓரத்தில் அமர்ந்திருந்த அயனின் உருவம், அவள் நேசித்து மறுமணம் புரிந்த அயனின் உருவம். தன் குழந்தை அக்ஷயா அயலப்பா என்று ஆசையாக கூப்பிட்ட அயனின் உருவம்.
ஆதினி இன்னும் முகம் பொத்தி அழுதாள். கைகள் வயிற்றை பற்றியபடி, அவளது மூச்சின் அதிர்வை காட்டினாள். அயனால் அவளை உணர முடிந்தது.

"ஆதினி"  என்றான் மெதுவாக.
இந்த முறை பழைய கணிவு வந்தது.
அவள் மெதுவாக மாற்றான் என்ற ரீதியில் பயந்தே அமர்ந்தாள்.
அவன் அருகே வரவில்லை.

"நான் உன்னை ஏமாத்தலை ஆதினி" என்று ஆரம்பித்தான். ஆதினி விரக்தியாக சிரித்தாள். அயன் மனித உருவில் பேசினாலும் ஏனோ இம்முறை ஒட்டாத உணர்வு‌ "ஆனா என்னை பத்தி... முழுசா சொல்லலை" என்றதும் அவள் கண்ணீர் வழிந்த கண்களால் அவனை பார்த்தாள்.

"நீ யாரு?" என்று ஆதினிக்கு குரல் நடுங்கியது.

அவன் மெதுவாக மூச்சை இழுத்தான்.
"நீ 'பாரலல் யூனிவர்ஸ்'ன்னு கேள்விப்பட்டிருக்கியா? நம்ம உலகத்துக்கு இணையான இன்னொரு உலகம். அதை தான் அப்படி சொல்வாங்க.
உருவத்தில் வேறுபாடு குறைவு. ஆனா உயிரியல் அமைப்பில் சில மாற்றங்கள் இருக்கும்." என்றான்.

அயன் பச்சை கண்கள் மெதுவாக ஒளிந்தன.
"எங்க இனத்தில பெண்இனம் பல வருடங்களுக்கு முன்பே சுருங்க ஆரம்பிச்சிடுச்சு. பெண்இனத்தோட பிறப்பு வீதம் குறைந்தது.

அப்படியே பிறந்த பெண்குழந்தைகள் உயிரோட நிலைக்க முடியல. எங்களுடைய உலகத்துல ஜெனெடிக் அமைப்பு சிதற ஆரம்பிச்சது." என்றான்.

ஆதினியின் மூச்சு சற்று தடைப்பட்டது. என்ன தான் சொல்ல வருகின்றான் என்ற ஆர்வம் அவளை திடக்காத்திரமாக இருக்க வைத்தது.

"ஒரு இனம் அழிவதா இருந்தா, அந்த இனத்தை காப்பாற்ற போராடுவாங்க. இனப்பெருக்கத்தில் கலப்பினம் செய்ய முயலுவாங்க.
அப்படி தான் எங்க இனவிருத்தி குறையவும், அதுக்கு இணையான கலப்பினத்திற்காக, எங்க உலக்ததில் ஆய்வுகளை ஆரம்பிச்சோம்.

எங்க அமைப்போட ரீசோனனஸ் மேட்ச் ஆகுற உலகங்களை தேடினோம்.
அப்படி தேடினப்ப கிடைச்சது தான் உங்க பூமி.

உங்க பூமியில் இருக்கற பெண்கள் ஸ்டேபிள். உங்க பெண்களின் கருப்பை சூழல் எங்க உலகத்தோட இனத்தை கலந்தாலும் உயிரை பாதுகாக்கும் திறன் அதிகம்னு ஆய்வோட முடிவு" என்றதும், ஆதினி அவள் வயிற்றை பற்றிக் கொண்டாள்.

அயன் தொடர்ந்தவனாக "நான் அந்த ஆய்வுக்காக வந்தவன் ஆதினி." என்ற அந்த ஒரு வரி ஆதினியை கத்தி போல குத்தியது.

அவள் கண்களை மூடி, "அப்ப நான்... நான் ஒரு லேப் எலி மாதிரியா?" என்று கேட்டாள்.

அவன் கண்கள் உடைந்தது போல தெரிந்தது.
"ஆமாம்... ஆரம்பத்தில்... அப்படி தான்." என்றதும் அங்கே அமைதி.

அயனாகவே "ஆனா... அது அப்படியே இல்லாம போச்சு."
அவன் எழுந்து ஜன்னலருகே சென்றான்.

வானம் இருண்டு இருந்தது. "உன்னை முதல் நாள் பார்த்தப்போ... நான் கம்பேன்டிபிளிடி (compatibility) பார்த்தேன். உன் உடல் அமைப்பு, உன் உயிர் துடிப்பு... எல்லாம் எங்க தரவோட மேட்ச் ஆனது." அயன் சிரிக்க முயன்றான் ஆனால் சிரிக்க முயலாமல் உதடு படுத்தோல்வியை தழுவியது.

"என்னோட உணர்வுகளில் சில விஷயம் எந்த டேட்டாவுலயும்  வராது ஆதினி." என்றான். அவன் என்ன கூற வருகின்றானென ஆதினி மெதுவாக தலை தூக்கினாள்.

"நாங்க நாசாவை தான் குறிவச்சோம்‌. ஆனா அங்க ஏதாவது மாறுதல் அடைந்தா மாட்டிக்க வாய்ப்பு இருக்குனு தான், இங்க இஸ்ரோ வந்து சேர்ந்தோம்‌. நாங்க வந்த ஷிப் வந்த சுவடே இல்லாம மறைந்திடுச்சுனு தான் நினைச்சோம்‌‌ ஆனா பிரதாப் பார்த்துட்டான்.
பராமரிப்பு பிரிவில அவன் அவசரமா இங்க வர்ற வேலையில் இருந்தப்ப கூட, எங்களோட வருகையை எப்படியோ தெரிந்துக்கிட்டு என் முன்னவே நின்றான்.

எங்க கூட்டத்துல இருந்த மற்றொருவன் பிரதாப்பை எரிச்சிட்டான். ஐ அம் சாரி... அந்த விபத்துல பிரதாப் டீம்ல அங்க வந்த ஐந்து பேரும் இறந்துட்டாங்க." என்றதும் ஆதினிக்கு நெஞ்சை அடைத்தது. இத்தனை நாளாக ஏதோ தானாக நிகழ்ந்த விபத்தாக இருக்கும்‌. அல்லது நாட்டிற்காக ஏதாவது ஆய்வு செய்து அது தோல்வி தழுவி, பராமரிப்பு பிரிவில் இருந்தவர் இறந்திருக்கலாமென மனதை தேற்றியிருந்தாள். இன்று அயனை போன்ற ஓருவனால் இறந்திருக்க கோபம் வந்தது.

இஸ்ரோவை பொறுத்தவரை அது ஏதோவொரு விபத்து எப்படி நடந்ததுனு தெரியாமலே போச்சு. மேபீ இன்னமும் காரணம் தேடலாம்.
ஆனா அதுக்கு பிறகு எங்களோட தேர்வு தொடர்ந்தது‌.

பொதுவா இங்கயிருக்கற பெண்களை எப்படி நாங்க அழைச்சிட்டு போறதுனு யோசித்தோம்.
அதுல தவறான அணுகுமுறைகள் என்ற விஷயமா, கிட்னாப் தான் முதல்ல இருந்தது. கடத்திட்டு போனா ஒரு குறிப்பிட்டவர்கள் அந்த பெண்ணை தேட ஆரம்பிச்சு, அதுவொரு இஸ்ஸுவா கிளம்பும்.
எங்களுக்கு அதுல விருப்பமில்லை. ஏன்னா... நாங்க வந்த சுவடே இல்லாம இங்கிருந்து கிளம்பி, எங்க உலகத்துக்கு போகணும்.

சோ... வேற ஆப்ஷன் தேடினோம். அப்ப தான், சில விஷயங்களில் பெண்களை எங்களோட அழைச்சிட்டு போனாலும் எந்த இஸ்ஸுவும் பாதிக்காம இருக்கும்னு தெரிந்தது.
அதுல காதல் முதலிடம், அனாதையான பெண்கள், தனக்கு ஒன்னுன்னா கூட தேடி வராத குடும்பங்களில் இருக்கற பெண்களை டார்கெட் செய்தோம்.
எப்படியும் மனித உருவத்தில் ஒரு பெண்ணுக்கு ஆணாக அறிமுகமாகி, காதலிச்சு வீட்ல பேரண்ட்ஸ் காதலை ஏத்துக்காம முறையா திருமணம் செய்து, வீடு வேலைனு சொல்லி மற்றவர்கள் தொடர்பை கொஞ்சம் கொஞ்சமா அழிச்சு, அந்த பெண்ணை எங்க உலகத்துக்கு அழைச்சிட்டு போறது.

என்னோட வந்தவங்க எல்லாருமே அனாதையான பெண்களை தேடி போனாங்க. ஆர்டிபிசியல் இன்டலிஜென்ட் மூலமாக இந்த பூமியில, இந்த உலக்ததுல இருக்கற மனிதர்கள் எப்படி ஒரு பெண்ணிடம் நடக்கணும் பேசணும், எப்படி தன் வசப்படுத்தணும் என்றதை கொஞ்சம் கொஞ்சமா படிச்சி பார்த்து காதலிச்சாங்க.

ஆனா விருப்பம் இல்லை என்றாலும் தூங்கிட்டு இருக்கறப்பவே, அந்த பொண்ணோட பர்மிஷன் இல்லாம எங்க உலகத்துக்கு போயாச்சு. சில பொண்ணுங்களுக்கு என்ன ஆனாலும் தேடி வராத குடும்பம் இருக்கவும் அவங்களை டார்கெட் செய்து அழைச்சுட்டு போயிட்டாங்க.
இப்படி தான் இந்த பூமியிலருந்து எங்க உலகத்துக்கு பெண்கள் அழைச்சிட்டு போறது. பட் என் தலைமையில் வந்தவங்கள்ல வேலை முடியவும் ஸ்பேஷிப் வரவழைச்சி எல்லாரும் எங்க உலகத்துக்கு போயாச்சு.

அதுல பிரதாப்போட இருந்த டீம்ல, தீவிபத்துல இறந்தவங்களோட மனைவி தங்கை, அக்கா, இப்படி இருந்த பெண்களை காதலிச்சு மணந்து கூட்டிட்டு போயாச்சு. ஆனா... எல்லாருக்கும் அங்க போனப்பிறகு தான் விஷயம் தெரிந்தது.

சிலருக்கு.. பிசிகல் ரிலுஷன்ஷிப்ல வேற்று இனம் கண்டதும், பயந்து ஓடமுயல, அடாவடியா தான் எல்லாரும் போனாங்க.

இங்க நான் மட்டும் தான் இன்னமும் உன்னோட அபிப்ராயம் கேட்டு, அழைச்சிட்டு போக காத்திருக்கேன். ஏன்னா... நான்  உன்னை அளவுக்கு அதிகமாகவே அப்சர்வ் பண்ணினேன்.

நீ அக்ஷயாவை எப்படி தூக்கி அணைத்தேன்னு பார்த்தேன். அவளோட அழுகைக்கு முன்பே நீ ஓடுறதை கவனிச்சேன். உன் பயம், உன் தைரியம்... உன் கோபம்... உன் சிரிப்பு... ஒவ்வொன்னும் நுணுக்கமா பார்த்தப்ப என்னை அறியாம என் உணர்வுகள் உன்னிடம் சரணடைந்தது.
ஒரு மனிதினியை தேடி வந்த எனக்கு மனிதனோட உணர்வுகள் ஆக்கிரமிக்க, என் எந்திரத்தனமான வாழ்க்கை முறையை தாண்டி உணர்வால் உன்னோட இணைந்தேன்.

அதை சொல்லும் பொழுது அயன் குரல் தளர்ந்தது.

"நான் பிரதாப் உடலை இங்க கொண்டு வந்தப்பவே கணக்கிட்டேன். ஆனா... நான் உணர ஆரம்பிச்சதும், நீயே என்னை தேர்ந்தெடுத்து நேசிக்க ஆரம்பிக்கணும், அதுக்கேற்ற மாதிரி நடந்தேன். ஆனா உன் வாழ்க்கையில பிரதாப்பை தவிர வேறொரு ஆள் இதயத்தில் நுழைய முடியாது என்பதை, உன் முக உணர்வும் மனவுணர்வையும் படிச்சப்பவே தெரிந்துக்கிட்டேன்.

அதனால தான் உன் வாழ்க்கைக்குள் நான் நுழைந்தேன். அதுக்கு ஏற்ற மாதிரி உங்களோட உலகத்துல, உன்னை விதவை என்ற சாயத்தை வச்சி எங்க போனாலும் காயப்படுத்தினாங்க. அது எனக்கு வசதியா இருந்தது.

இங்க வர்றப்ப உன்னை காதலிச்சு கர்ப்பமாக்கி அழைச்சிட்டு போறது என்னோட மிஷன். ஆனா காதல் வந்ததும் உன் மனசை காயப்படுத்தாம அழைச்சிட்டு போக நினைச்சேன்." என்றான்.
"காதலா?"அவள் கசப்பாக சிரித்தாள்.

ஏனோ பிரதாப் மரணம் இயற்கையான தீவிபத்தோ அல்லது நாட்டிற்காக ஏதோ நடக்க ஏற்பாடாகி அதில் அசம்பாவிதம் நடந்து இழந்த உயிராக இல்லாமல் போனதாலும், பிரதாப் இறப்பே அயனின் வருகையால் என்றதில் பயம் கலைந்தது.

"என் கணவரை கொன்றுயிருக்கிங்க. திட்டமிட்டே என் கணவர் சடலத்தோட வந்து, என்னை லேப் எலியா மாற்றா முயற்சிப் பண்ணிருக்க. அதுல உணர்வை மீட்டெடுத்து, காதல் வந்ததா கதை விடற? சபாஷ்."  என்றவள் நிதானமாக ஆரம்பித்து குரலில் சப்தம் கூட்டி ஆக்ரோஷமாக "இதுல எங்கயிருக்கு  காதல். இது... வெறும் திட்டமிடல். இதுல.. உன் ஒவ்வொரு பார்வைக்கும் என்‌மனசை படிச்சி பொருள் உணர்ந்து அதுக்கு ஏற்ற மாதிரி பந்தை உருட்டியிருக்க. என் மக தான் உலகம்னு தெரிந்ததும். என் மகளோட ரொம்ப நெருக்கமா பழகி என்னை பணிய வச்சியிருக்க. உன் மேல வந்த காதல்... இப்ப எப்படி காதலா இருக்கும்.

நீ காட்டிய அன்பு எல்லாம், வெறும் உன் உலகத்தோட இனவிருத்திக்காக நீ செய்த திட்டமிடல். ஆய்வு. லேப் எலி..." என்று கத்த, அக்ஷயா கண்ணை கசக்கி, "அம்மா." என்று எழுந்தாள்.

இத்தனை நேரம் திடமாய் கத்தியவளுக்கு மகளை கண்டதும் பயம் மீண்டும் ஓட்டிக்கொண்டது.

தன் மகளை ஏதாவது செய்தால்? குழந்தையை அணைத்து "இங்க பாரு... எங்களை விட்டுடு. நீ இங்கிருந்து போயிடு. என்னால இனி உன்னோட வாழ முடியாது, வரமுடியாது." என்றவள் மகளை பிடித்து இழுத்தபடி வாசலுக்கு ஓடினாள்.
அங்கே செல்வம் ஜமுனா இருவரும் நீண்ட நாட்களுக்கு பிறகு வாசலில் வந்து நிற்க, கடவுளை கண்ட பக்தனை போல, "ஆன்ட்டி... அங்கிள் என்னை காப்பாத்துங்க. இந்த அயன்... மனுஷனே இல்லை. இவன் ஒரு ஏலியன்... இவன் இவன் என்னையும் அக்ஷயாவையும் வேற உலகத்துக்கு இழுத்துட்டு போக வந்திருக்கான். எங்களை காப்பாத்துங்க" என்று அவர்கள் கரத்தை பற்றியபடி நின்றாள்.

அயனோ பதறாமல் அந்த இருவரையும் பார்த்து அசையாது நின்றான்.

-தொடரும்.

https://onlinetamilnovels.com/%e0%ae%85%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%85%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be-18/

அயலா... அயலா...-17
அத்தியாயம்-17

அயன் மகளுக்கும் மனைவிக்கும் உணவை ஆர்டர் தந்துவிட்டு, பரிமாறி உணவை ஊட்டாதக்குறையாக நின்றான்.‌

"இன்டர்வெல்ல, ஆல்ரெடி பப்ஸ் பாப்கார்ன் ஐஸ்க்ரீம்னு வயிறு புல் அயன். இதுல டின்னர் வேண்டாம்னு நினைச்சேன்." என்றான்.‌

"நல்லா சாப்பிடு. அடுத்து நீயே நினைச்சா கூட இந்த ஏரியாவுக்கு வந்து என்னால புட் வாங்கி தரமுடியாது. நான் இங்க அழைச்சிட்டு வரமாட்டேன்." என்றான்.‌

ஆதினிக்கு லேசான கலக்கம், "ஏன் அயன்.. இந்த ஊரு ஏரியா எதுவும் பிடிக்கலையா?" என்றான்.‌

"ஓரளவு எல்லாம் பிடிச்சது. ஆனாலும் நான் இங்க வரமாட்டேன். உன்னையும் இங்க கூட்டிட்டு வரமாட்டேன்." என்று கூறினான்.

"அப்ப பிரதாப் வாங்கிய வீடு?" என்றாள்.

"அது பிரதாப் வீடு தானே. நம்ம வீடு இல்லையே. சாரி... வீட்டை பத்தி இப்ப பேசாத. நான் அக்ஷு பிறந்த நாளுக்கும் இன்னிக்கு என் சொந்த இடத்துக்கு போற சந்தோஷத்தில இருக்கேன். என்னை ஹர்ட் பண்ணிடாதே. ப்ளீஸ் ஆதினி" என்று கோரிக்கை வைத்தான்.  இதற்கு மேல் அவள் பிரதாப் பேச்சை எடுப்பாளா?'

அக்ஷயாவுக்கு ஊட்டிவிட்டு கை அலம்ப அழைத்து சென்றான்.

ஆதினி ஸ்பூனில் சாப்பிட்டதால் தன் கைப்பையில் துழாவி போனை எடுத்தாள்.

அனிதாவிடமிருந்து வீடியோ கால் வாய்ஸ் கால், நார்மல் அழைப்பு என்று வரிசையாக வந்திருக்க, இரண்டு மூன்று குறுஞ்செய்தி, ஒரு இமேஜ், ஒரு வாய்ஸ் ஆடியோ வந்திருந்தது.

வாட்சப்பை பார்வையிட்டு பார்க்க சிக்னல் சரியாக இல்லாததால் இமேஜ் பதிவாக நேரமானது. அதே போல ஆடியோவும். ஆனால் குறுஞ்செய்தி மட்டும் வாசித்தாள்.

'ஆதினி... அயன் தந்த மோதிரம் நார்மல் மோதிரம் இல்லை.'
' இணைய உலக மனிதன் யூஸ் பண்ணறது.'
'நான் உனக்கு இமேஜ் அனுப்பியிருக்கேன் பாரு. ஆடியோவை தயவு செய்து கேளு" என்று மூன்று குறுஞ்செய்தி மட்டும் வாசித்தாள்.

ஆதினியோ அதை வாசித்து, அசட்டையாக, 'எந்த மனுஷங்க யூஸ் பண்ணினா என்ன? இமேஜ் வேற டவுன்லோட் ஆகலை. ஆடியோ டூ. இவளிடம் இப்ப இந்த நேரத்துல வாட்சப்ல பேசறேன்னா அயன் கோபப்படலாம். இருக்கற இந்த ஸ்வீட் டேஸை ஸ்பாயில் பண்ண வேண்டாம்' என்று பையில்  போனை வைத்தாள்.

மண்டைக்குள் இணை உலக மனிதன்' என்றது அடிக்கடி ஓடியது.

அயனோ ஆதினி கண்களை கூர்ந்து பார்த்து, என்ன?" என்றான்.

"ஒன்னுமில்லை... வீட்டுக்கு போய் டிராவல் செய்யணும், இன்னிக்கு டயர்டை சமாளிப்போமானு நினைச்சேன்." என்றாள்.

அயன் லேசாக புன்னகை உதிர்த்திட, "பஸ்ஸா டிரையினா? இல்லை வாடகை கார்ல போறோமா?" என்று கேட்டாள்.

"ம்ம்ம் ஸ்பேஸ் ஷிப்ல" என்றான்.

"கொழுப்பு தானே. கடைசி வரை சொல்லக்கூடாதுனு சர்பிரைஸ் பண்ணி எங்க தான் கூட்டிட்டு போவிங்களோ. எனக்கு இப்ப தூக்கமும் வராது போல. உங்களை தான் டிஸ்டர்ப் பண்ணுவேன். என்கிட்ட பேசிட்டே வரணும்" என்று கட்டளையிட, "நீ சொன்னாலும் சொல்லாட்டினாலும், நாம பேசிட்டு தான் வரமுடியும்‌." என்று அவளது இடையில் கையால் நண்டு ஊறுது நரி ஊறுது என்பது போல கைகளால் தழுவினான்.

"அயன்... பொண்ணு இருக்கா" என்றாள்.

"அவ ஆல்ரெடி லைட்டா... தூங்கிட்டா." என்று வீடு வந்தடைந்தார்கள்‌

அயன் தோளில் மகளை தூக்கி வந்தவன், ஆதினி கதவை திறக்க சோபாவில் படுக்க வைத்தான்.

அயன் கிச்சன் சென்று தண்ணீரை எடுத்து ஹாலுக்கு வர, ஆதினியோ அறைக்கு வந்து சூட்கேஸை எடுத்தாள்.

எதற்கும் இமேஜ் மற்றும் ஆடியோ டவுன்லோட் ஆகியிருந்தால் அதை பார்த்து ஆடியோ கேட்டுவிடுவோம். அடுத்து அயன் அருகே இருந்தால் கேட்க முடியாதென, ஆடியோவை ஒலிக்க விட்டு, அப்படியே சூட்கேஸை தள்ளிக்கொண்டு ஹாலுக்கு வர முயன்றாள்.

இமேஜோ பச்சை நிற கண்கள், காது சற்று கூர்மையாக, உடல் ஏதோ தகட்டை அணிந்து ப்ளூ நிறத்தில் லைட்டை பளிச்சிட்டது போல சிறு கோட்டிங்கில், உடையாக உடலே மாறியிருக்க, பார்க்க மனிதன் போலவும் இருந்தது அவ்வுருவம்.

'மனுஷனா ஏலியனா?' என்று நெற்றி சுருக்கி பார்த்தவளுக்கு, அனிதா குரலில் ஆடியோ வேறு செவியில் கேட்டது.

"ஆதினி... நான் சொல்ல வந்ததை கவனமா கேளு. நான் உன் கல்யாணத்தப்ப, உன் மோதிரத்தை போட்டோ எடுத்தேன்ல. அதை போல எனக்கு நகை வாங்க ஆசைப்பட்டேன். ஆனா அந்த மாதிரி கூகுள் லென்ஸில நகையே இல்லை. சரி ஏதோ புது டிசைன் என்று நினைச்சேன். ஆனா அதை நம்ம கதிரிடம் காட்டியதுக்கு அது ஒரு புக்ல பார்த்ததா சொன்னான். எந்த நகை கடையில இல்லை, அரசர்கள் காலத்து மோதிரமா வரலாற்று புக்ல பார்த்தியானு கேட்டேன். இல்லை..  Parallel Universe Human பத்தி சொல்லியிருந்த புக்ல அந்த மோதிரத்தை பார்த்தானாம். Parallel Universe Human அப்படின்னா இணை உலக மனிதன். ஐ மீன்... மனிதன் தான். ஆனா நம்மளை போல இல்லை. நான் அனுப்பியிருக்கேன்ல அந்த மாதிரி மனுஷன். கொஞ்சம் பார்க்க வித்தியாசமான கண்கள், உடல் காது அமைப்பு இருக்கு பாரு.
ஆதினி... நான் சொல்ல வர்றது புரிதா? அயனுக்கு இதே போல கண்கள் இருக்கு. எனக்கென்னவோ அயன்... நம்மளை போல மனுஷன் இல்லைனு நினைக்கறேன். எதுக்கும் நீ ஜாக்கிரதையா இரு. Parallel Universe Human அதை பத்தி விரிவா கதிரிடம் கேட்டு உன்னிடம் சொல்லறேன். நீ கேர்புல்லா இரு. உன்னை ஏதாவது பண்ணிடப் போறான். நான் முன்ன பேசியதை வச்சி இப்ப நான் பேசியதை கேர்லஸா நினைக்காத ஆதினி. நான் உன் நல்லதுக்கு தான் வார்னிங் பண்றேன்" என்று எச்சரிக்க, ஆடியோ நின்றது.

ஆதினி பயத்தில் அயனை காண வேர்த்து கொட்டியது என்னவோ அவளுக்கு மட்டுமே. அயன் மிகவும் இயல்பாக இருந்தான்.

அயன் தண்ணீர் பாட்டிலை நீட்டி, "நானா எக்ஸ்பிளைன் பண்ணி மெதுவா சொல்ல நினைச்சேன். உன் பிரெண்டுக்கு அந்த மோதிரம் மேல கண்ணா இருந்தப்பவே, நான் உஷாராயிருக்கணும். ஆனா இந்தளவு டீட்டெயில் கலெக்ட் பண்ணுவானு எதிர்பார்க்கலை. தங்கத்துல நகையா செய்து கையில போட்டு சுத்துவானு நினைச்சேன்.‌

ம்ம்ம்... என்னயிருந்தாலும் எல்லாம் ஒரே காலேஜ். பிரதாப் இஸ்ரோல வேலை கிடைச்சியிருக்க, உங்க பிரெண்ட்ஸ் கேங்க் இந்த மாதிரி புக்ல அறிவியல்ல ஆர்வம் வந்து அதையும் தெரிந்து வச்சியிருக்கிங்க. நாட் பட் ஆதினி. எங்களை பத்தி தெரிந்தது எங்க இனத்துக்கு, எங்க உலகத்துக்கு பெருமை தான்.

ம்ம்ம்... ஓகே... அவளிடம் பேசாதனு நான் சொன்னதுக்கு மதிப்பு தருவனு நினைச்சேன்.‌ உன்னை காயப்படுத்தியதால விலகிடுவனு. இரண்டும் மதிக்கலை நீ.
ஆனா பாரு... அவளையும் சும்மா சொல்லாக்கூடாது. பிரெண்ட் இல்லையா... என்ன பேசி காயப்படுத்தினாலும், உனக்காக உன்னை காப்பாத்த முதல் ஆளா குரல் கொடுத்துட்டா." என்று அயன் பேச பேச அவனது மனித முகம், உடல் நிறம், அவனது காது எல்லாம் மாறியது.

ஆதினி அதை கண்டு நம்ப முடியாமல் திகைத்தாள்.

"உன் பிரெண்டுக்கு என்ன அவசரம் பாரு. கிளம்பறதுக்கு முன்ன நான் ரிலாக்ஸா உன்னிடம் உண்மையை சொல்லி, உன்னை கன்வின்ஸ் செய்து, எங்க பாரலல் யூனிவர்ஸ் ஹூமன் இருக்கற அயனபீட உலகத்துக்கு அழைச்சிட்டு போக சர்பிரைஸா வச்சியிருந்தா... கடைசி நொடில எல்லாத்தையும் கவுத்துட்டா." என்று உச்சுக் கொட்டினான்.

ஆதினி அங்கும் இங்கும் பார்த்து பயத்தில் வீட்டு வாசலுக்கு ஓடமுயன்றாள். அயனோ "நம்ம பொண்ணு அக்ஷயா இங்க இருக்கா ஆதினி. அவளை மறந்துட்டு ஓடுற" என்று கூப்பிட, ஆதினி கால்கள் அவ்விடத்திலேயே வேரூன்றியது.

கால்கள் நடுங்க, ஓடவும் வழியின்றி அழுதாள்.

அயன் உறங்கும் அக்ஷயா அருகே வரவும் "நோ.." என்று ஆதினி ஹாலுக்கு வந்தாள்.

"நீ.. நீ யாரு.. என் அயனை என்ன செய்த? என் பொண்ணை விட்டுடு." என்று கதறினாள்.

"ஆதினி... ப்ளீஸ்... இப்படி அழாத. ரொம்ப அசிங்கமா இருக்கு. உட்காரு." என்றான்.

ஆதினி பயந்து உட்கார மறுக்க, "நான் ஒன்றரை வருடமா உன் கூடயிருக்கேன்‌ ஆதினி. உன்னை எப்பவாது துன்புறுத்தியிருக்கேனா? இல்லை... அக்ஷயாவை துன்புருத்தியிருக்கேனா?" என்று கேட்க, இப்பொழுதும் தன் முன் இருப்பது வேற்று மனிதன் அயன் என்று நம்பாமல் அயன் என்ற பூமி மனிதனை தேடினாள்‌.

ஆனால் காதை தவிர்த்து அந்த பச்சை கண்கள், மூக்கு உயரம் உதடு என்று எல்லாம் அயனாக தெள்ளதெளிவாக தெரிய, "ப்ளீஸ்... என்னையும் அக்ஷயாவையும் விட்டுடு. உனக்கு என்ன வேண்டுமோ அதை எடுத்துட்டு போயிடு." என்று கையெடுத்து கெஞ்சினாள்.

அயனோ "ஆதினி... எனக்கு தேவை நீயும் அக்ஷயாவும் தான்‌. உட்காரு" என்று ஆணையிட்டவன் சோபாவில் அமர, ஆதினி அமராமல் நின்றாள்.

"நான் யாரு என்னனு சின்ன டீட்டெயில் உன் பிரெண்ட் அனிதா தந்துட்டா. நான் ஏன் வந்தேன், எதுக்கு வந்தேன்னு சொல்லட்டுமா? தெரிந்துக்க ஆசைப்படறியா? நான் என்னை பத்தி சொன்னா தானே என்னை பத்தி தெரிந்துக் முடியும். என்னை பத்தி தெரியாததால படத்துல வர்ற வில்லன் ரேஞ்சுல லூக்கு விடற. என்னை பத்தி, நானே என் தரப்பு நியாயத்தை சொன்னா... நீ என்னை ஹீரோ லெவலுக்கு கொஞ்சமாவது கன்சிடர் பண்ணுவல்ல?" என்று பேசவும் அயன் காதுகள் இரண்டும் பூனை காதுகள் போல அடிக்கடி திருப்பி முறுக்கி நார்மலானது.

ஆதினிக்கு அதற்கே தொண்டையில் எச்சி விழுங்க முடியாத நிலை. அங்கும் இங்கும் பார்த்தவள் இரும்பு ஒளி விளக்கு கண்ணிற்கு தெரிய, அதை எடுத்து நொடியில் அயனை தாக்க முயன்றாள்.

"ஆதினி... என்ன செய்ய ட்ரை பண்ணற? நான் உங்கள மாதிரி நார்மல் ஹூமன் இல்லை ஆதினி.
கிட்டதட்ட இதே போல வேறொரு இணையான உலகத்துலயிருந்து வந்தவன். லைக் ஏலியன்கூட வச்சிக்கோ.. வேற்றுகிரக வாசி. எனக்கு இந்த பூமில வாழற மனிதர்களோட உணர்வுகள் அத்துப்படி. உன் மனசு எண்ண நினைக்குது, உன்‌ உடல்மொழி என்ன செய்ய வருதுனு கூட எனக்கு தெரியும்.

நீ அடிக்க வந்தா, அது தெரியாம போகுமா? ஆதினி... நான் உன்னை மனைவியா நினைக்கறேன். நீயும் என்னை கணவனா பாரு. அதை விட்டு கர்ப்பமா இருக்கறப்ப என்ன ஸ்டன்ட் வேண்டிக்கிடக்கு?

முதல்ல உட்காரு... கர்ப்பமா இருக்க. என் குழந்தைகள் வேற வயிற்றுல வளருது. அவங்களுக்கு டயர்டா இருக்கும்ல" என்றான்.

ஆதினி கர்ப்பம் என்றதிலிருந்து அவளது கைகள் ஒவ்வொரு முறையும் ஆசையோடு வயிற்றை தடவியது. இம்முறை பயத்துடன் அவளது வயிற்றை தொட்டாள்.

உயிர் பயம், பதட்டம் என்று அவளை புரட்டியது.

தன் வயிற்றில் வளர்வது தன்னை போல மனிதனின் கருவல்ல, அது ஏதோ பாரலல் யூனிவர்ஸ் ஹூமன் என்று அயன் சொன்னது நினைவில் வந்து தாக்கியது.

ஆதினி தலை இடம் வலம் என்று மறுத்து நிற்க, "உட்காரு ஆதினி" என்றான்.

ஆதினி வயிற்றை பிடித்து அழத்துவங்கினாள்.

"என்னை என்ன பண்ணற? ஏன் இங்க வந்த? என்னை ஏன் இப்படி கர்ப்பமாக்கின? என் பொண்ணை விட்டுடு. நீ ஏன் இங்க வந்த.? ப்ளீஸ..‌‌." என்று மண்டியிட்டு அழுதாள்.

அயனோ ''நான் உன்னை உண்மையா விரும்பறேன் ஆதினி. அக்ஷயாவை என் சொந்த மகளா பார்க்கறேன். நான் உன்னை ஏமாத்தலை. புருஷன் கூட தானே பொண்டாட்டி இருக்கணும்னு உங்க சாஸ்திரம் சொல்லுது. அதுக்கு தான் உன்னை அழைச்சிட்டு என் உலகத்துக்கு போக வந்தேன்.

என்னோட வா ஆதினி. உன்னை ஒன்னும் பண்ணமாட்டேன். நான் ஏன் வந்தேன் எதுக்கு வந்தேன், உன்னை ஏன் என் துணைவியா செலக்ட் பண்ணினேன்னு சொல்லறேன். உட்காரு... ஆதினி‌" என்று மொழிந்தான்‌.

-தொடரும்.

https://onlinetamilnovels.com/%e0%ae%85%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%85%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be-17/

அயலா... அயலா...-16
அத்தியாயம்-16

அக்ஷயா ஐந்து முப்பதுக்கு கண் விழித்திட, முதலில் பிறந்த நாள் வாழ்த்து கூறி முத்தமிட்டது அயன்.

ஆதினி அயன் நேற்றிரவு செய்த சேட்டையில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்.

"அயலா... என்னோட பிறந்தநாள் கிப்ட் எங்க?" என்று கேட்க, அவளிடம் "முதல்ல எழுந்து பிரஷ் பண்ணிட்டு குளிச்சிட்டு வா, பால் ஆத்தி, தர்றேன். பெர்த்டே டிரஸ் அங்க வச்சியிருக்கேன். இன்னிக்கு முழுக்க இந்த ஏரியாவை சலிச்சி போற அளவுக்கு கொட்டமடிச்சிட்டு பிறகு தான் உன் கிப்ட்" என்று கன்னத்தை தட்ட, அவளும் வேகமாய் பிஞ்சு கால்களை அழுத்தமாய் வைத்து, துள்ளிக் குதிக்காத குறையுடன், குளியலறைக்கு ஓடினாள்.

அயன் ஆதினி எழுவதற்குள் பாலை சூடுப்படுத்தினான். ஆதினி மகள் கணவன் இல்லாததை படுக்கையில் உணர்ந்து எழுந்து, அவளுமே மகள் குளிக்கவும், அவளுமே அடுத்து குளித்திட மாடிக்கு சென்றாள்‌. ஒரே நேரத்தில் தயாராகி வருவதற்கு திட்டமிட்டாள்.

அயன் ஆதினி அடுத்து காய்கறிகளை கத்தரித்து அரிசி உப்புமா செய்து வைத்தான்.

குழந்தை அதற்குள் குளித்து பிறந்த நாள் உடையை அணிந்து, "அயலா.... அயலா... என் டிரஸோட ஜிப் போட்டு விடுங்க." என்று காட்டினாள்.

குழந்தைக்கு ஜிப்போட்டுவிட்டு, இடுப்பில் பௌவ்வும் கட்டிவிட்டான்.

"அம்மாவும் எழுந்து குளிக்க போயிருக்காங்க" என்ற தகவலையும் வழங்கினாள்‌. அயன் அறியாததா?!

சிறிது நேரத்திலேயோ அழகான பின்னலை அவனே மகளுக்கு போட்டுவிட்டு, ரப்பரை மாட்டினான்.

"யூ லுக் கார்ஜிசியஸ் கிட்" என்று தாடை பிடித்து கொஞ்ச, ஆதினி குளித்து முடித்து டீயை பருகினாள்.

"அம்மா உங்க கிப்ட்?" என்றிட  ஹாலில் நடுவே அக்ஷயாவை நிறுத்தி நிற்க கூறினாள் ஆதினி.

குழந்தை நின்றதும், மேலே பெரிய பலூனை உடைத்தான் அயன். குழந்தை அயனை தேடி வரவும் போகவும் இருந்தாளே தவிர அயன் மேலே மாட்டிய பலுனை கவனிக்க தவறினாள்.
அந்த பெரிய பலூனிலிருந்து குட்டி குட்டி பலூன்கள் மற்றும் வண்ண காகிதம் அடங்கிய துகள்கள் இருக்க, அது அக்ஷயா மீது மழையாக பொழிந்தது.

குழந்தைக்கு இதை தவிர்த்து வேறென்ன வேண்டும். குதூகலமாக குதித்து கைதட்டி மகிழ்ந்தாள்.

அதில் அவள் முன் ஒரு பெரிய பாக்ஸை ஆதினி கொண்டு வந்து வைத்தாள்.

அதை பிரிக்க அனைத்தும் ஸ்பேஸ் சம்பந்தப்பட்டவையாக இருந்தது.

குழந்தை ஆர்வத்தில் "அம்மா‌.. அம்மா.‌ இதை நான் பிரதாப் அப்பாகிட்ட கேட்டேன்‌. அவர் வாங்கித் தர்றேன்னு சொல்லிட்டு போனார். ஆனானானா... நீங்க வாங்கி தந்துட்டிங்க?" என்று கன்னத்தை எச்சிப்படுத்தினாள். ஆதினி அயனை காண தவித்தாள்.

அயனோ கையை கட்டி மனைவியை பார்த்தான். குழந்தை மனதில் எதையும் யோசித்து பூட்டி வைத்திட எதுவுமில்லையே. அதனால் அவள் ஸ்பேஸ் டாய்ஸ் வைத்து விளையாட ஆரம்பித்தாள்.

ஆதினி தான், "ஆதினிக்கு ஸ்பேஸ் டாய்ஸ் ரொம்ப பிடிக்கும். அவ அதிகமா வாயை திறந்து கேட்டது அந்த பொம்மைகள் தான். மத்தபடி பிரதாப் நினைவுக்காக வாங்கி தரலை. அவரிடம் கடைசியா குழந்தை கேட்ட விளையாட்டு பொம்மை என்றதாலும், ரொம்ப நாளா வாங்கி நினைச்சது என்றதாலும் தான் வாங்கினேன். மத்தபடி இதுக்குன்னு தனியா சண்டை வேண்டாம் அயன். நான் ரொம்ப டவுன் ஆகிடுவேன்." என்று விளக்கமளித்தாள்.

அயனோ ''நான் உன்னை எதுவும் சொல்லலை போதுமா? போய் கில்டி பீல் இல்லாம கிளம்பு. நாம இன்னிக்கு இந்த ஏரியாவில் சுத்திட்டு வருவோம். காலையில் மட்டும் அரிசி உப்புமா பண்ணிருக்கேன். அடுத்து தீம் பார்க் போக கேப் புக் பண்ணிருக்கேன். மதியம் புட் தீம் பார்க்லயே பார்த்துக்கலாம். ரிட்டர்ன் ஈவினிங் மஸாஜ் பார்லர் கூட்டிட்டு போறேன். அங்க நாம விளையாடியதுக்கு அசதியா இருக்கலாம்‌ கை  கால் மஸாஜ் முடிச்சி அங்கயே இரண்டு மணி நேரம் ஹெட் மஸாஜ் பிளஸ் ஸ்லீப்பிங் முடிச்சிட்டு நைட் படம் பார்த்துட்டு வந்து, டின்னர் முடிச்சிட்டு நாம கிளம்பலாம்" என்றான்.

ஆதினியோ, "ஒரே நாள்ல இதெல்லாம் டயர்ட் ஆகிடும் அயன். ஒன்னு ஊருக்கு போறது நேரத்துக்கு போகலாம். இல்லைன்னா... தீம் பார்க் மட்டும் போகலாம். அதை தவிர்த்து மஸாஜ் சென்ட்ர், மூவி எல்லாம் வேண்டாம்." என்று கூறினாள்.

"இல்லை... நம்ம எனர்ஜி லெவல் பொறுத்து அதேல்லாம் எக்ஸிகியூட் பண்ணுவோம்." என்று முடித்திட, ஆதினியோ வயிற்றில் கையை வைத்து, "பிரகனென்டா வேற இருக்கேன் அயன். நான் சோர்ந்துடுவேன். இல்லைன்னா..‌ குழந்தைக்கு ஏதாவது ஆகிடப்போகுது" என்று பயந்தாள்‌.

"இல்லை... குழந்தைக்கு ஒன்னும் ஆகாது. நான் நேத்தே இந்த குட்டி வயிற்றில் காதை வச்சி பேசி சொல்லிட்டு என் குழந்தையோட விருப்பத்தையும்‌ கேட்டுட்டேன்." என்றான்.‌

"குழந்தை நான் ரொம்ப நல்லா ஹெல்தியா இருக்கேன்‌னு வாயை திறந்து சொல்லுச்சா" என்றாள்.‌

"ஆமா... ஆதினி அம்மாவோட வயிற்றில் சௌகரியமா இருக்கேன்னு சொன்னாங்க.‌" என்றான்.‌

"ஓ... சென்னாங்களா?" என்று பன்மையில் கூறவும் கேட்டாள்.

"ஆமா... ட்வின்ஸ். ஒரு பையன் ஒரு பொண்ணு" என்றான் சிரிப்புடன்.

"முடிவே கட்டிட்டிங்களா?" என்றாள்‌ ஆதினி.

"ம்ம்ம்ம" என்று தோளைக் குலுக்கினான்.‌

அயன் விளையாட்டுத்தனமாக கூறினாலும், வயிற்றை பார்த்தாள் ஆதினி.‌

ஏனோ அக்ஷயா இருந்ததை காட்டிலும் வயிறு பெரிதாக தெரிந்தது போன்று இருந்தது.

அவளை அதிகம் யோசிக்க வைக்காமல் சாப்பிட வைத்தான்.

திட்டம் போட்டதை போலவே சாப்பிட்டு தட்டை வைத்துவிட்டு கையின் ஈரம் கூட காய விடாமல், அயன் தந்த மாத்திரையை விழுங்க வைத்து, கேப்பில் ஏற வைத்தான்.

"அயன்... அநியாயத்துக்கு பாஸ்டா இருக்கிங்க?" என்றாள் ஆதினி.

"அயலப்பா எப்பவுமே பாஸ்ட் தான் அம்மா. உங்களுக்கு தெரியாதா?" என்று சிரிக்க, அயனோ ஆதினி இடையில் உரசி, அவள் செவி மடலில் கிசுகிசுப்பாய் "மேரேஜ் முடிஞ்சதும் டபுள் பேபிஸை பில்லப் பண்ணிருக்கேன். என் ஸ்பீடு உனக்கு தெரியலை'' என்று புருவம் உயர்த்தினான்.

ஆதினியோ அவன் தோளில் செல்லமாய் அடித்து, "இந்த பச்சை கண்ணை வச்சி உருட்டி கிருட்டி, என்ன பேச்சு? ஏற்கனவே இந்த கண்ணை கண்டா அப்படியே மெஸ்மரிஸமாகுது‌. இதுல அட்ராக் பண்ணற மாதிரி புருவத்தை ஏத்திட்டு." என்றவள் நெஞ்சில் இடித்தாள்.

தீம் பார்க் வந்ததும் இறங்கி பாதையில் நடந்தார்கள்.

இரண்டு நொடி முடிவடைந்ததும், "ஆமா... ஏன் டிவின்ஸ்னு சொல்லிட்டு இருக்கிங்க? நாம சின்ன செக்கப் கூட பண்ணலை. நேத்து டாக்டர் கூட அதை பற்றி சொல்லலை. அப்படியிருக்கு இரண்டு பேபிஸ்னு கனவு கோட்டை கட்டாதிங்க" என்று அறிவுறுத்தினாள்.

அயனோ "சரி சப்போஸ் இரண்டு பேபிஸ் என்றால் எனக்கு அடுத்து மறுபடியும் இரண்டு பேபிஸ் பெத்து தரணும். டீல் ஓகேவா?" என்று கேட்டான்.

ஆதினியோ, "பார்டா... என்ன வச்சி பேபிஸா பெத்து, ஸ்கூல் வைக்கலாம்னு பிளானா?" என்று சிரித்தாள்.

"வெயிட் பண்ணு... நமக்கு நான் டிக்கெட் வாங்கிட்டு வந்துடறேன்" என்று தற்காலிகமாக பேச்சு தடையானது.

அக்ஷயா தந்தை கூடவே சுற்றவும், ஆதினி தன் வயிற்றை கண்டு, பெரிய பெரிய ராட்டினத்தை பார்த்து மிரண்டாள்‌.

எத்தனையோ விதமான செய்தியில் கர்ப்பிணிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பொது இடத்தில் இப்படி அபாயகரமான விதமாக வருவதை தவிர்க்க வேண்டும். ஆனால் இன்று நானே அப்படி வந்துள்ளதை எண்ணி பயந்தாள். ஆனால் அயன் ஏன் தீம் பார்க் செல்ல அழைத்து வந்தார் என்று யோசித்தாள்.

மனமோ லேசாக நேற்று போல தப்பும் தவறுமாக யோசிக்காதே என்று எச்சரித்தது.
நேற்றே திருமணத்திற்கு முன் என்னை கற்பழித்தாயா என்று கேட்காத குறையாக, ஆனாலும் வேறு விதமாக கேட்டு, அயனுக்கு அர்த்தம் புரிந்து அவனாக நான் உன்னை மணந்த பின்னே தீண்டியது என்று கூறினான்.
இதில் இப்படி ஆபத்தான இடத்தில் பயணிக்க வைத்து ஏன் அழைத்து செல்கின்றாய் என்று கேட்டால் தவறாக நினைப்பாரோ?

நேற்றும் இன்றும் தப்பும் தவறுமாய் மூளை வழிநடத்த, அதை அடக்கி, மகளின் பிறந்த நாளுக்கு மகிழ்ச்சியை தொலைக்காதே. அயன் மீது எந்த தவறான அபிப்ராயமும் வைக்கும் அளவிற்கு அவனில்லை' என்று நம்பினாள்.

அயன் கையை பிடித்தப்பின், அவனை பற்றி ஒரு சதம் கூட தவறாக எண்ணவும் முடியாது. அந்தளவு அவனது காதல் இறுக்கம் அன்பு பறைச்சாற்றும்‌.

அதுவும் அக்ஷயாவை அவன் வழிநடத்தும் அழகில் பிரதாப் கூட தோற்றுப் போவான். தந்தையாக பிரதாப் அக்ஷயா விஷயத்தில் பாதி தான் பூர்த்தி செய்தது‌. அயன் அப்படி அல்ல. பெற்றவன் அவனில்லை தவிர இந்த இடைப்பட்ட நாளில் 'அபியும் நானும்' படத்தில் உள்ள அப்பாவும் மகளும்  போல இருப்பார்கள்.

பல எண்ணத்தை மனதில் போட்டு உழப்புவதால் ராட்டினத்தில் ஏறியதையே அவன் உணரவில்லை. அக்ஷயாவே "அம்மா... சூப்பரா இருக்கு. ஜாலியா இருக்கு. ஹேஹே" என்று கத்துவதில் சுயமடைந்தாள்.

"மேகத்தில பறக்கற மாதிரி இருக்கா அக்ஷு" என்றான்.

"அயலப்பா.. செமையா இருக்கு. நான் பயப்படலை பாருங்க" என்று கழுத்தை கட்டிக் கொண்டாள். அயனும் மகளும் முத்தமிட்டு, கட்டிக்கொள்ள, "ஆதினி கண்ணை இறுக்கமாக மூடிக்கொண்டு அயன் நெஞ்சில் சாய்ந்தாள்.

"அயன்... பயமாயிருக்கு.. நான் கன்சீவா இருக்கேன். ஏதாவது ஆகிடப்போகுது." என்று அவன் சட்டையை இறுக்கினாள்.

"பயப்படக்கூடாதுன்னு தானே அழைச்சிட்டு வந்ததே. இப்படி பயப்படற." என்று கன்னத்தை தட்டினான்.‌
"கண்ணை திறந்து பாரு" என்று கூற, "நோ.. அயன்." என்று மறுத்தாள்.

"அச்சோ.. கண்ணை திறந்து பார்த்தா தான் ரசிக்க முடியும் ஆதினி. என் மகளே ரசிக்கற. உனக்கென்ன?" என்றதும் அரை கண்ணால் ஆதினியை காண, அவளோ சிகைகள் காற்றில் பறக்க கையை விரித்து சிறு பறவை போல நின்றாள்‌.

ஆதினியும் முழு கண்ணை திறந்து, பார்க்க வானத்தில் மிதந்திருந்தது போல ராட்டினம் மேலே இருந்தது.

காற்று சில்லென்று வீச, ஆதினி அயன் நெஞ்சை பிடித்து, "வியூ நல்லாயிருக்கா?" என்று கேட்க, "சூப்பரா இருக்கு" என்றாள்.

இதே போல தான் மற்ற ராட்டின ரைட் எல்லாம் கண்ணை திறந்து அழகை ரசித்து, பயத்தை களைந்து மகிழ்ச்சியை மனதில் நிறைத்தாள்.

அடிக்கடி வயிற்றில் கையை வைக்க, அயனோ "ஏன் வயிற்றுல கையை வைக்கிற. வலிக்குதா?" என்றான்.

"வலியெல்லாம் இல்லை. ஒரு பாதுகாப்பு உணர்வு தான்." என்றாள்.

அடுத்து மதியம் அயன் கூறியது போலவே உணவை விழுங்கினார்கள்.
அடுத்து மீண்டும் தண்ணீரில் ஆட்டம்‌ அயன் குறிப்பிட்ட நேரத்தில் வரக்கூறிவிட்டான்.
மாலை வரும் வழியில் யூனிசெக்ஸ் பார்லர் இருந்தது. அதில் குடும்ப சகிதம் சென்று ஆளுக்கொரு படுக்கையில் படுத்துக்கொள்ள, ஹெட் மசாஜ், பாதம் கைகால்கள் என்று மெதுவாக அழுத்தம் தந்து உடல் களைப்பை ஈடுக்கட்டினார்கள்‌

அயன் கூறியது போல ஆதினி உறங்கினாள்.
அக்ஷயா தான் அந்த அக்கப்போரிலும் விழித்து அயனிடம் கேள்விகளை துளைத்தாள்.

அவனோ மகளுக்கு சளைக்காமல் பதில் தந்தான்.‌

ஆதினி கண் விழிக்கும் நேரம், அக்ஷயா அயனிடம் "இந்த பெர்த்டே என்னால மறக்கவே முடியாது அயலப்பா. நீங்க இன்னிக்கு என்னோட டேவையே கலர்புல்லா மாத்தி, எனக்கு ஹாப்பியை மட்டும் தந்துட்டிங்க. பிரதாப் அப்பா கூட என்னிடம் இவ்ளோ நேரம் செலவிட்டதில்லை‌. நீங்க என் அப்பாவாவே இருந்திருக்கலாம்." என்றாள்.

அதற்கு அயனோ "ஏ அக்ஷு குட்டி.. இப்பவும் நான் உன் அப்பா தான். பிரதாப் அப்பா இல்லை. ஓகேவா. இன்னொரு முறை அப்படி பேசாத. என்னால தாங்க முடியாது‌. அதென்னவோ மனசு வலிக்கு அக்ஷு" என்றான்.

ஆதினி கண்கள் நீரை தாரை வார்த்து எழுந்தாள். உடல் ஏதோ புத்துணர்வு பெற்றது போல இருந்தது‌ ஒரு மணி நேரம் கடந்ததோ தெரியவில்லை.
இங்கு வந்து பத்து நிமிடத்தில் உறங்கியிருப்பதாக கடிகாரம் நேரம் காட்டியது.

அடுத்து அங்கேயே டச் அப் செய்து விட்டு பணத்தை தந்துவிட்டு படத்திற்கு கிளம்பினார்கள்.

படம் ஆரம்பித்ததும் அனிதா காலிங் என்று வந்தது. ஆதினிக்கு தலைவலி வராத குறையாக இருக்க, அயனை பார்த்தாள். ஆனந்தம் வழிய வழிய மகளோடு இப்பவே பாப்கார்ன் வாங்கி படம் பார்ப்பவனுக்கு அனிதா அழைப்பது தெரிந்தால் வாடுவானென கத்தரித்தாள். "ஐ அம் இன் தியேட்டர். டோண்ட் டிஸ்டர்ப் மீ." என்று மட்டும் அனுப்பினாள்.

அனுப்பிய கையோடு போனை கைப்பையில் போட்டுவிட்டாள்.

-தொடரும்.

https://onlinetamilnovels.com/%e0%ae%85%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%85%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be-16/

அயலா... அயலா...-15
அத்தியாயம்-15

வீட்டுக்கு வரும் பொழுதே சோர்வுடன் வந்தாள் ஆதினி.

அயனோ, "கிப்ட் எல்லாம் வாங்கிட்ட போல" என்று கவரை பார்த்தான்.

ஆதினி பேசாமல் நடையிட, அயனுக்கு எரிச்சல் வந்திருக்க வேண்டும். அதை மறைத்து, "என்ன டயர்டா இருக்க? பெர்த்டே என்றதும் பிரதாப் நினைவு வருதா?" என்றான்.‌

ஆதினி புருவம் சுருக்கி, அயனை கண்டாள். அயனின் பேச்சில் பொறாமை தீ வழிவதை கண்டவளுக்கு, "பிரதாப் நினைவுகளை அழிக்க அவன் போட்டோவை பூஜை ரூம்ல வச்சாலும், பிறகு ஸ்டோர் ரூம்ல போட்டுட்டாலும், எனக்கும் அவனுக்குமான காமன் பிரெண்ட்ஷிப்பை கட் பண்ணிட்டாலும், நினைவுகள் அழியாது. ஏன்னா... அக்ஷயா பிறப்பு இருக்கற வரை பிரதாப் நினைவுகள் இருக்கும்." என்று பேசிவிட்டு கடந்தாள்.‌

அயன் சில நொடி யோசனைக்கு பின், "நான் பிரதாப் நினைவை அழிச்சேன்னு சொல்லறியா ஆதினி?" என்றான்.‌

"இல்லையாப் பின்ன...?" என்று கேட்டவள், அயனை கண்டு, "அவன் டிரஸை யாருக்காவது கொடுத்தா, யூஸாகும்னு கன்வின்ஸ் பண்ணின, பெரிய போட்டோஸ் எல்லா பூஜை ரூம்ல இருந்து ஸ்டோர் ரூம் போயிடுச்சு. இப்ப ஸ்டோர் ரூம் கூட அப்படியே விட்டுட்டு இந்த வீட்டை விட்டுட்டு, உன் பிசினஸுக்காக எங்கயோ சர்பிரைஸ்னு சொல்லிட்டு இடத்தையே மாத்தற." என்றாள். அவள் பேசியது முழுதும் குற்றம் சுமத்தும் விதமாக அமைந்தது.

''என்ன பேசற. நான் ஏன் செத்துப் போனவனோட போட்டிக்கு நிற்கணும்?" என்று கத்திவிட்டு, நிதானமானான்.

ஆதினியை பார்த்து "என்கிட்ட அவனை மறந்துட்டேன்னு சொல்லிட்டு உன் மனசுல அவன் வாழ்ந்தாலும் எனக்கு தெரியாது ஆதினி. அப்படியிருக்க...." என்றவன் அக்ஷயா ஆதினி வாங்கிய பரிசை பிரித்து காட்டி, "ஸ்பேஸ் ராக்கெட்.. இதெல்லாம் அவன் நினைப்புல வாங்கி தந்தியா?" என்று கேட்க, ஆதினி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

மனதில் 'அக்ஷயா பிரதாப்பிடம் கடைசியா கேட்ட பரிசு. நினைவு வந்துச்சுனு வாங்கினேன். அது தப்பா... இப்ப பிரதாப் நினைவால வாங்கியதா பழி வந்திருக்கு. மறுமணம் செய்தாலும் தப்பு தானா? முதல் கணவனை வச்சி இரண்டாவதா மணந்தவன் குத்தி கிழிச்சி பேசுவாங்களா?' என்று உடைந்து போனவளாக துவண்டாள்.

அவள் மனதை படித்தவனாக அயனோ, "சாரி... பிரதாப்பை பற்றி பேச்சை இழுத்தது நான் தான்" என்று மன்னிப்பு வேண்டினான்.‌

அந்த நேரம் அனிதா வேறு போன் செய்யவும் அதை துண்டித்து சைலண்டில் போட்டாள்‌ ஆதினி.

ஆதினியோ அயனை தாண்டி சென்று தண்ணீரை குடித்தாள்.
பக்கவாட்டு தோற்றத்தில் ஆதினி நீரை பருக, அயனோ அவளது வயிற்றில் தொப்புளில் பச்சை திரவம் ஜெல் போல தெரிய, "ஆதினி." என்று பதறி ஓடிவந்தான்.‌

"ஏய்... உனக்கென்ன ஆச்சு.?" என்று உடலை தொட்டு தடவினான்.‌ சேலையை அகற்றி அந்த ஜெல்லை பார்த்து கேட்டவன், உடனடியாக அவளுக்கு தண்ணீரை கொதிக்க வைத்து சமையல் கட்டை உருட்டினான். ஏதேதோ மசாலை டப்பாவில் இருந்து சில உணவே மருந்து என்றதை, கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கொதிக்க வைத்தான்.

"எனக்கு ஒன்னும் ஆகலை. அக்ஷயாவுக்கு கிப்ட் வாங்க போனப்ப லேசா ஸ்கிட் ஆகிடுச்சு. கன்சீவா இருக்கலாம்னு பேசியது நினைவு வரவும், டாக்டரிடம் போனேன்." என்றாள்.

அயனோ ஸ்தம்பித்தவனாக மாறி, "டாக்டர் என்ன சொன்னாங்க?" என்று பதட்டமாக கேட்டான்.‌

டாக்டர் ஏதேனும் சொல்லி அதன் விரக்தியில் இப்படி பேசுகின்றாளா என்ற காரணத்தால்.‌..

"குழந்தை வளர்ச்சி அதிகமாவே இருக்காம்." என்றாள். அதை கூறும் போதே முகம் அக்னி பிரவசித்தது.

"அதனால என்ன? வேற ஏதாவது சொன்னாங்களா?" என்றான். கைகள் அவன் இஷ்டத்திற்கு கொதிக்க வைத்த நீரை வடிகட்டி, கண்ணாடி டம்ளரில் ஊற்றினான்.

"நமக்கு கல்யாணம் ஆகறதுக்கு முன்னவே நான் கர்ப்பமா இருக்கற அளவுக்கு வளர்ச்சி." என்றாள்.

"அதெல்லாம் இருக்காது. பேபி க்ரோத் எக்ஸ்ட்டாடினரியா இருக்கும்." என்று கூறினான்.

அக்ஷயாவோ "அயலாப்பா அம்மா ஏன் அழறாங்க." என்று புரியாமல் கேட்டாள்.

"அக்ஷயா குட்டி... நானும் அம்மாவும் பேசறோம். நீங்க ஹால்ல கார்டூன் பாருங்க." என்று விரட்டினான்.

ஆதினியோ மகளிடம் இந்தளவு தந்தையாக பாவிப்பவன், தன்னிடம் காதலை சொல்வதற்கு முன், ஏதாவது இரவில் தன்னிடம் அத்துமீறினானா? அல்லது மயங்கி இருந்த பொழுது ஏதாவது தவறாக நடந்தானா? ஆனால் அயன் முகத்தை பார்த்து கேட்க என்னால் இயலாது. அப்படி கேட்டால் அது எங்கள் பந்தத்திற்கு இழுக்காகுமே.' என்று கண்ணீரில் கரைந்தாள்.

அயனோ ஆதினியை பார்த்து வெதுவெதுப்பான நீரை தந்து, அவளது கைப்பையில் டாக்டர் தந்த ரிப்போர்டை பார்த்து, "டாக்டர் குழந்தையோட வளர்ச்சி அதிகமா இருக்குனு தான் சொல்லி ரிப்போர்ட் தந்திருக்காங்க

கல்யாணத்துக்கு முன்ன நான் உன்னை கர்ப்பமாக்கிட்டேன்னு எந்த நாளும் இல்லை. குழந்தை உருவானது நமக்கு கல்யாணமான பிறகு தான். கண்டதையும் யோசித்து ஒரு மெடிக்கல் ரிப்போர்ட் கூட ஒழுங்கா பார்க்க மாட்டியா ஆதினி.

என் மேல வாயை திறந்து கேள்வி கேட்கலை. ஆனா மனசால என்னை கெட்டவனா நினைச்சிட்ட அப்படி தானே.? நான் உன்னை மனபூர்வமா விரும்பறேன் ஆதினி. கல்யாணம் செய்ததும் அப்படி தான்." என்றான்.

ஆதினி அவசரமாய் மெடிக்கல் ரிப்போர்டை வாங்கி படித்தாள்.

அயன் சொன்னது போல வளர்ச்சி அதிகமா இருக்கு. நாள் கூட இருக்குமோ' என்று கணித்து கூறியிருப்பாரோ. நான் தான் தவறாக புரிந்து மனதை வதைத்து அயனையும் வதைத்துவிட்டோமோ?! என்று அவன் தந்த நீரை பருகினான்.

அயனோ பச்சை கலர் திரவத்தை வயிற்றில் துடைத்து, நிம்மதி மூச்சை வெளியிட, "அது ஸ்கேன் செய்தப்ப உபயோகித்த ஜெல்லா இருக்கலாம்" என்று கூற, அயனோ அக்னியை பொழிந்தவனாக சென்றான்.

ஆதினியோ அவசரப்பட்டு விட்டோமோ? என்று நினைத்தாள்.

அயனை சமாதானம் செய்ய முயல அவனோ ''ப்ளீஸ்... ஆதினி.. எனக்கு கொஞ்சம் தனிமை வேண்டும்." என்று கூறிவிட்டான்.

இரண்டு நாள் அயன் ஆதினியிடம் பேசவில்லை. நாளை அக்ஷயாவுக்கு பிறந்த நாள். நாளையும் இதே போல முகத்தை திருப்பி வைத்துக் கொண்டால், பிறந்த நாள் கொண்டாட்டம் நன்றாக இருக்காது என்று ஆதினியாக மகளை தூங்க வைத்துவிட்டு, அயனிடம் வந்து நின்றாள்.

அயனோ வானத்தில் நட்சத்திரத்தையும் நிலவையும்  கண்டு ஏக்கமாய் பார்த்தான்.

ஆதினி பூனை நடையுடன் மெதுவாக வந்தவள், அயனுக்கும் அவளுக்கும் பிடித்தமான விளையாட்டாக, கூடலில் திளைக்கும் நேரம் கண்ணை கட்டி பெண்ணவளோடு சிலிர்ப்பை உண்டாக்கும் விதமாக கழுத்தை கவ்வி நாவால் வருடி, முத்தம் வைத்து கொள்ளும் காதல் விளையாட்டை அரங்கேற்ற அவனிடம் அவளது துப்பட்டாவை நீட்டினாள்.

அயனோ முதலில் முகத்தை திருப்பி தள்ளி சென்றவன், ஆதினியும் அவனை போலவே அவனது கழுத்தில் உதட்டால் ஊர்வலம் நிகழ்த்தி, செல்ல கடியை வழங்க, அயன் உடல் முறுக்கேறியது.

அயன் அவள் வசம் இழக்கும் விதமாக மாற, பெண்ணவளை தன் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்து, "என்னடி.. என்னையே வசியப்படுத்தற. என் மேல அவ்ளோ கோபம் இருந்ததுல. இப்ப எங்க போச்சு? என் பேஸ் பார்த்து பேசாம போன‌. இப்ப என்னை மாதிரியே வந்து காதல் இம்சை தர்ற?" என்று கேட்டான்.

"நீ என்னை மன்னிக்க மாட்டேங்கறியே?" என்றாள்.

அயன் உதடு புன்னகை பூரித்தது. அவள் தந்த துப்பட்டாவை அவள் கண்ணில் கட்டிவிட்டு "கண்ணு பாரு... க்ரீன் ஐ." என்று முனங்க, அவள் தன் கண்ணை வைத்து பேசிய உதட்டை தண்டித்தான்.

மெதுமெதுவாக அவளை ஆக்கிரமித்து, காதல் தண்டனை தந்து, அயன் பெயரை உச்சரிக்க வைத்து, ஆனந்தத்தை கூட்டினான்.‌

பால்கனியில் சேலை அங்கங்கே நழுவியிருக்க, "அயன்... உனக்கு ஸ்டார் மூன் இதெல்லாம் பிடிக்குமா? எப்பபாரு அதை அப்படி ரசிக்கற." என்றாள்.

''நிலாவையும் நட்சத்திரத்தையும் யாருக்கு தான் பிடிக்காது. கவுண்ட் பண்ணுவேன்" என்று முன்பு அவள் கூறியதை பதிலாக தரவும், "பிராடு... அது நான் சொன்னது" என்று அவன் கை புஜத்தில் அடித்து அவன் கையை இறுக பற்றினாள்.

"நாளைக்கு அக்ஷயாவுக்கு பிறந்த நாள். அதோட நாளைக்கே ஊருக்கு போறோமா? இப்ப வரை சர்பிரைஸ்னு சொல்லி எந்த ஊருனு சொல்லவேயில்லை. எங்க தான்டா கூட்டிட்டு போற?" என்று கேட்டாள்.

"நாளைக்கு இதே நேரம் உனக்கு தெரியும். அப்ப டிராவல் பண்ணறப்ப நீயே தெரிந்துப்ப." என்று உதட்டை இருவிரலால் பிடித்து இழுத்தான்.

"போடா.." என்று செல்லம் கொஞ்ச, "ஆதினி... நாம செகண்ட் ரவுண்ட் போகலாமா?" என்று கேட்டான்.

"விளையாடறியா? நான் ஆல்மோஸ்ட் பிரகனென்ட். ஐ அம் டயர்ட் அயன்" என்றாள்.

அயனோ "பச்... ஓகே.. லைட்டா... என்னை உரசிக்கிட்டே, என் மேல படுத்துயிரு" என்று அவளை இழுத்துக் கொண்டான்.

"சாரி அயன்... நான் குழந்தை வளர்ச்சி அதிகம்னு சொல்லவும், என்னைக்காவது நானே மயங்கினப்ப, கல்யாணத்துக்கு முன்ன, நீ என்னை ரே-ப் பண்ணிட்டியோனு நினைச்சேன்." என்று மனதில் நினைத்ததை தற்போது கேலியாக கூறினாள்.

"உன்னை அடையணும்னா நீ மயங்கணும்னு அவசியமில்லை ஆதினி. என்னால உன் சுய உணர்வோட, உன் சம்மதத்தோட கூட தொட்டிருக்க முடியும். என்னால உன்னை அந்தளவு வசியப்படுத்த முடியும்." என்றான்.

"ஆமா... வசியம்." என்று சிரித்தவள் அயன் கண்ணை கண்டு, "ஏ.. அயன்.. அனிதா திரும்ப கால் பண்ணினா. நாம ஊடலில் இருந்தப்ப. ஐ மீன் சண்டைப் போட்டுட்டு இருந்தப்ப. நான் கட் பண்ணிட்டு சைலண்ட்ல போட்டுட்டேன். இப்ப தான் போனை அகைன் பார்த்தேன்.
'அந்த மோதிரத்தை பத்தி பேசணும்'னு மெஸேஜ் பண்ணிருந்தா. அவளுக்கு நம்ம மேரேஜ்ல இருந்தே அந்த மோதிரத்துல ஒரு கண்ணு. அந்த டிசைன் கேட்கறாளோ என்னவோ. பேசாம போட்டோ எடுத்து அனுப்பவா?" என்றாள்.‌

அயனோ "ஒன்னும் வேண்டாம். அவ பிரெண்ட்ஷிப்பை கட் பண்ணு" என்று எரிச்சலடைந்தான்.

"ஏ... ஏற்கனவே கல்யாணம் முடிந்தப்ப அந்த போட்டோவை கேப்சர் பண்ணினா. ஆனாலும் அது கிளாரிட்டியா இல்லையோ என்னவோ. அவளுக்கும் அவ மேரேஜிக்கு நகை வாங்க ஆசைப்படலாம்‌." என்றதற்கு, அயனோ இடைப்புகுந்து, "ஒரு விஷயம் நம்மிடம் ஸ்பெஷலா இருந்தா தான் அதுக்கு பெயர் ஸ்பெஷல். அதுவே எல்லாரிடமும் இருந்துட்டா அது நார்மல்.
நான் உனக்கு தந்த கிப்ட் ஸ்பெஷலா இருக்கணுமா? இல்லை எப்படி?" என்னு புருவம் தூக்கி கேட்க, "ஸ்பெஷலாவே இருக்கணும். அவ கேட்டா... அது உன்னிடம் இருக்குனு சொல்லிடறேன்." என்றாள்.

"தட்ஸ் குட்" என்று அயன் கழுத்தை கவ்வி முத்தமிட்டான்.

-தொடரும்.

https://onlinetamilnovels.com/%e0%ae%85%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%85%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be-15/

அயலா... அயலா...-14
அத்தியாயம்-14

ஆதினி கண்விழித்தப் பொழுது அயன் ஆனந்தத்துடன் அருகே வீற்றியிருப்பதை கண்டாள்.‌

"இப்ப எப்படியிருக்கு?" என்று ஆனந்தமாய் கேட்க, "தெரியலை... வீட்டுக்கு நடந்தே வந்துட்டு இருந்தேன். அதனால ஒரு மாதிரி ப்ளர்ரா ஆகிடுச்சு. மயக்கம் வந்துடுச்சு" என்றாள் ஆதினி.

அயனோ "நடந்தே வந்துட்டு இருந்தியா. உனக்கென்ன பைத்தியமா? ஸ்கூல்லயிருந்து ஆட்டோ பிடிச்சி வர என்னவாம்? இல்லை ஒரு போன் பண்ணினா நான் வந்திருப்பேன்." என்று கடிந்தான்.

"அனிதா போன் பண்ணினா அயன். போன் பேசிட்டே வந்தேன். எனக்கு ஆட்டோ பிடிக்கணும் என்றது தோன்றலை." என்றாள்.

"அனி..தா..? பிரதாப்போட பிரெண்ட்?" என்று கண்ணை சுருக்கி கூர்ந்து கேட்க, "என்னோட பிரெண்ட் அயன்" என்று ஆதினி முகம் தூக்கி கூறினாள்.

அயனுக்கு யாருக்கு பிரெண்டா இருந்து என்ன யூஸ்? என்று "இப்ப என்னவாம்? நிச்சயத்துக்கு வந்து நீ கஷ்டப்பட்டது போதாது. கல்யாணத்துக்கு வந்து அசிங்கப்பட சொல்லறாளா?" என்று நக்கலாய் கேட்டவன், "அவளை விட்டு தள்ளு. தயவு செய்து இனி இப்படி ரொம்ப தூரம் நடந்து வராத." என்றான்.

"ம்ம்ம்ம்..‌. ஆங்.. அயன்... அனிதா நிறைய சாரி கேட்டா. பிரெண்ட்ஸ் எல்லாரும் கூட வருத்தப்பட்டதா சொன்னா." என்று கூற அயனோ காதில் வாங்கவில்லை.
"நீ அணிவிச்ச மோதிரத்தை பத்தி கேட்டா. அவ மேரேஜிக்கு நகை வாங்க ஆசைப்பட்டாலாம். என்னோட மோதிரம் அவளுக்கு வித்தியாசமா இருந்ததாம். அதை மாதிரி செய்ய ஆர்டர் தரலாம்னு நெட்ல கூகுள் லென்ஸ் மூலமா தேடியிருக்கா. அந்த மாதிரி  டிசைனே இல்லைனு சொல்லியிருக்கு. அதோட இது ஒரு யூனிக் பீஸ், யாரிடமும் இருக்காத ரேர் பீஸ்னு ஏதேதோ சொன்னா." என்று கூறவும், "இந்த மோதிரம் யாரிடமும் இருக்காது. அதோட இது போல அவளிடம் செய்ய நகையை போட்டோ எடுத்து அனுப்பாத. இந்த மோதிரம் ஸ்பெஷல்.. ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் ஆதினி." என்று கட்டளையிட்டான்‌.

ஆதினியோ "சரி.. நான் டீ போடறேன்" என்று எழ, ''இல்லை... நீ ரெஸ்ட் எடு. நான் டீ போடறேன்." என்றான்.

"ஏன் தலைசுத்தல் மயக்கம் வந்துச்சோ" என்று தலையை பிடித்தவள், "அயன்... நா.. நான்..." என்றவள் திக்கி திணறி தடுமாறினாள்.

ஆதினி மனதில் 'ஒருவேளை பிரகனென்டா இருந்தா? ஆனா உறுதியா தெரியாம அயன் மனசுல ஆசை விதைச்சா அப்பறம் கஷ்டப்படுவார்.‌

எனக்காக அக்ஷயாவை மகளா பார்க்கறவர். வேற எந்த கஷ்டத்தையும் அவர் அனுபவிக்க கூடாது. டாக்டரிடம் போய் செக் பண்ணிட்டு வந்து கன்பார்ம்னா சொல்லலாம்.' என்று நினைக்க, அயன் அவளது முகமாறுதலை கவனித்து, "ஆதினி... ஏதோ சொல்ல வந்து மறைக்கற. என்னனு சொல்லு?" என்றான்

அவன் பேச்சே என்னிடம் ஏதும் மறைக்காதே என்ற பொருளிருக்க "இல்லை.. பிரகனென்ட்டா இருப்பேனோனு டவுட்டா இருக்கு. நமக்கு மேரேஜ் முடிந்து ரொம்ப நாளாகுது" என்று நாணினாள்.

அயனோ "மேபீ.... கண்ணாம்பூச்சி ஆட்டம் வேலை செய்திருக்குமோ?" என்று மேலும் நாண வைத்தான்.

''போங்க அயன்." என்று கூறியவள், "மெடிக்கல் ஷாப்ல கிட் வாங்கிட்டு வர்றிங்களா? எதுக்கும் செக் பண்ணிடறேன். இல்லைன்னா டாக்டரை பார்க்க போகலாமா? நாலு தெரு தள்ளி அக்ஷயா பிறந்த ஹாஸ்பிடலே இருக்கு" என்று ஆசையாக கேட்டாள்.

அயனோ "ஆசையா தான் இருக்கு. ஆனா இங்க எந்த டாக்டரும் பார்க்க வேண்டாம் ஆதினி. ஒரு கணவனா நீ கன்சீவா இருந்தா சந்தோஷப்படப் போற முதல் ஆள் நான் தான். ஆனா இங்க எந்த டாக்டரும் வேண்டாம்.

இங்க எங்கயாவது போனா... ஆதினி பாப்பா பிறந்தப்ப ரெக்கார்ட்ஸ்ல பிரதாப் அப்பானு இருக்கும். இப்ப என் பெயர் அயன்னு சொல்லறப்ப அவங்க பார்க்கற பார்வை. பேசற பேச்சு. எதுவும் என்னால தாங்க முடியாது.

பாப்பா பிறந்த நாளுக்கு பத்து நாள் இருக்குல்ல. அது முடியவும், நாம இனி இருக்கப்போற இடத்துக்கு கூட்டிட்டு போறேன். அங்க போய் மத்ததை பார்த்துக்கலாம்.
தற்சமயம் நான் கால்சியம் ஐயரன் டெப்பிளட்ஸ் மட்டும் வாங்கிட்டு வர்றேன். அந்த மெடிஸன்‌ மட்டும் போடு. ஸ்கேன் எல்லாம் அங்க போய் பார்க்கலாம். நான் சொல்லறது ஓகே தானே?" என்று அவள் மடியில் கைவைத்து கேட்டான்.

ஆதினியோ எத்தனை இடத்தில் அயன் மனவருத்தம் அடைந்தாரோ, இனியும் அவரது விருப்பம் போல நடந்துக்கொள்வோமென சம்மதமாய் தலையாட்டினாள்.

ஆதினிக்கு பட்டும் படாமலும் உதட்டில் முத்தம் வைத்து, அவளுக்கு டீ போட அயன் கிச்சன் அறைக்கு சென்றான்.

'நீ மயங்கினப்பவே கன்சீவா இருக்கேனு சொல்ல ஆசை தான் ஆதினி. ஆனா எதுவும் முழுமையா தெரியாம இப்ப ஆசையை விதைக்க கூடாதுன்னு இருந்தேன். ஆனா உனக்கே கர்ப்பம்னு சந்தேகம் வந்து கேட்டப்பிறகு சொல்லாம இருக்க முடியாது.
நீ என்னை அப்பா ஆக்கிட்ட, நீ என் குழந்தைக்கு அம்மாவாக போற.' என்று மகிழ்ச்சியாக அயன் டீயை போட்டு கொண்டு வந்து ஆதினிக்கு கொடுத்தான்.

"அயன்... டீ சூப்பர்." என்றாள் ஆதினி.

அக்ஷயாவோ "அயலா... எனக்கு பால்? வரவர ம்மமியை தான் கவனிக்கற. நீயும் நானும் ஐஸ்பாய் விளையாடினோம். நான் ஹன்ட்ரட் வரை கவுண்ட் பண்ணிட்டு வர்றேன்னு வந்து கதவுக்கிட்ட கண்ணை மூடினிங்க. இப்பவரை வரலை.
என்னாச்சு அயலப்பா வரலைனு நான் கப்போர்ட்ல இருந்து வந்து பார்த்தா. நீங்க அம்மா கூட கதை பேசிட்டு இருக்கிங்க. சரி பேசிட்டு என்னை தேடுவிங்கனு, அங்கயிருந்தே எட்டி பார்த்தா... டீ போட வந்துட்டிங்க." என்று குட்டி மனுஷி கோபம் கொண்டாள்.

"குட்டி மனுஷி.. சாரி.. அப்பா ஹாப்பி மூட்ல நாம ஐஸ் பாய் விளையாடியதே மறந்துட்டேன்.‌ இதோ உங்களுக்கு பால் ஆத்திட்டு நாம விளையாட்டை கண்டினியூ பண்ணலாம்." என்றான்.‌

"நோ அயலப்பா... நான் டிராயிங் வரைய போறேன். நீங்க பால் ஆத்தி கொண்டு வாங்க" என்று ஓடினாள்.

அயனும் அக்ஷயாவும்‌ பேசும் அழகை நாளெல்லாம் பார்த்து ரசித்தவள், வயிற்றை தடவி புன்னகைத்தாள்.

அயனோ மிகத்தீவிரமாக குட்டி மனுஷிக்கு பாலை ஆத்தி பவ்யமாக நீட்டினான்.

அன்றிலிருந்து, வாழ்க்கை என்றால் இது தான் எண்ணும் அளவிற்கு ஆதினி வாழ்க்கை அமைந்தது.

அக்ஷயா பிறந்தநாளுக்கு பிறகு இந்த வீட்டை விட்டு ஏரியா விட்டே செல்வதால், அதை கொண்டாட, பள்ளிக்கூடத்தில் வேலை செய்பவர்களை அழைத்திட நினைத்தாள். ஆனால் அனிதா பங்ஷனில் ஏற்பட்ட அனுபவம், இனி தன் வீட்டில் யாரையும் அழைக்க ஆதினி தயாராகவில்லை. அதே போல மற்றவர்கள் பங்ஷனுக்கும் அவள் செல்வதுமில்லை என்று முடிவெடுத்திருந்தாள்.

ஆனால் குழந்தைக்கு பிறந்த நாள் கொண்டாட்டாம் பிடிக்குமே. அதனால் வீட்டை அலங்கரித்து, கேக் வெட்டி, பிறந்த நாள் பரிசாக நிறைய தந்து தானே அசத்திட வேண்டுமென நினைத்தாள்.

அயனுடன் சேர்ந்து அக்ஷயா பிறந்த நாள் உடை வாங்குவதால், அவளுக்கு பரிசாவது வாங்க விரும்பினாள்.

பரிசு வாங்கும் கடையில் நின்று,  அக்ஷயாவுக்கு எந்த பொம்மை வாங்குவதென்று ஆசையாக ஒவ்வொன்றாக பார்வையிட்டாள். அப்பொழுது தான் பிரதாப்பிற்கும் தனக்கும் திருமணமான நாளை முன்னிட்டு, வீட்டை அலங்கரித்து பிரதாப்பிடம் பேசிய நேரம், அக்ஷயாவுக்கு சரியாக பேச தெரியாத சமயம், தந்தை எங்கே வேலை செய்கின்றார் என்றால் இஸ்ரோவில் பராமரிப்பு பிரிவில் என்று சொல்லத் தெரியாது. ஆனால் 'ராக்கெட்டை தான் அப்பா விடுவார்' என்று எண்ணி, பிரதாப்பிடம் ராக்கெட்டை கேட்டு நின்றாள். ராக்கெட் என்றால் அவ்வளவு ப்ரியம். இப்பொழுது கூட பெரியவளாக மாறியப்பின் என்னவாக போகின்றாய் என்று கேட்டால் 'ஸ்பேஸ் சயின்டிஸ்ட்' என்பாள்.

பிரதாப்பிடம் அக்ஷயா பேச தெரியாத பொழுதா கேட்ட கடைசி பரிசு. ஆனால் கடைசியாக அதை கூட வாங்கி தராமல் பிரதாப் இறந்தது நியூஸ் தான் வந்தது.

அதனால் மகளுக்கு அவள் விருப்பமான பொம்மை ராக்கெட்டை வாங்க விரும்பினாள்.

அத்துடன் ஸ்பேஸ்டாய்ஸ், சோலார் சிஸ்டம் ராக்கெட் என்று வாங்கி மூன்றையும் கிப்ட் பேக்கிங் செய்ய கூறினாள்.

அப்படியே நடந்து வந்தவளுக்கு, பிரஷ்பென் கண்ணில்பட்டது. தற்போது அயன் வந்ததிலிருந்து பெரும்பாலும் டிராயிங் வரைதலில் தீவிரமாக இருக்கின்றாள். அயனும் கிரையான்ஸ், கலர் பென்சில், வாட்டர் பெயிண்ட், ஸ்கெட்ச், வொயிட் போர்ட், என்று வாங்கி தந்திருக்க பிரஷ்பென் வாங்கியவள் அதையும் பேக்கிங் செய்து முடிக்க கூறினாள்.

வரிசையாக பொம்மைகளை பார்த்து வந்தவள், அங்கிருந்த டாய்ஸில் தெரியாமல் கால் வைக்க, கால் இடறி கீழே விழுந்தாள்.

அங்கிருந்த கூட்டம் அவளை கீழேயிருந்து எழுப்பி நிற்க வைத்து, அடிப்பட்டதா என்று கேட்டார்கள்.

கடையில் உள்ள பணிப்பெண்ணோ "சாரிக்கா.. டாய்ஸ் பேக்கிங் கலைந்து அப்படியே இருக்கு." என்று மன்னிப்பு வேண்ட, "இட்ஸ் ஓகே என்று சமாளித்து பணத்தை செலுத்தி நடந்தாள்.

மனதில் லேசான பயம் முளைத்தது. கர்ப்பமாக இருக்கின்ற பொழுது கால் இடறியதால் தப்பும் தவறுமாய் எண்ணம் தோன்றி கரு கலைந்ததாகவே முடிவுக்கட்டி காட்சியாக கண்டு துவண்டாள்.

ஆதினி கையில் பரிசுப் பொருளுடன் பயத்தையும் ஏந்தியிருக்க, அயனுக்கு தெரியாமல் ஸ்கேன் செய்ய மனம் உந்தியது.

ஏற்கனவே பிரகனென்சி கிட் கூட எடுத்து உறுதியாகாத கரு, டாக்டரிடமும் காட்டவில்லை. இன்று கால் இடறி விழுந்ததில் பயந்து மனதில் அழுத்தம் கூட்டிக்கொள்ள வேண்டாமென பக்கத்தில் உள்ள ஹாஸ்பிடலில் தனியாக ஸ்கேன் செய்ய சென்றாள்‌.

பெயரை பதிவு செய்துவிட்டு, டாக்டரை பார்க்க காத்திருந்தாள்.

அயனிடம் சொல்லாமல் கொள்ளாமல் வந்தது தவறோ? அவனுக்கு கோபம் வருமா? ஆனால் இதுவரை அயன் எதற்கும் கோபம் கொண்டதில்லை. அயனிடம் தனக்கு கால் இடறியதை கூறி காரணத்நை கூறினால் ஏற்றுக்கொள்வான். அத்துடன் டாக்டரை பார்ப்பது தவறில்லை.' என்று தனக்கு தானே சமாதானம் செய்து அமர்ந்திருந்தாள்.

அயன் ஆதினி வரதாமதமாகவும் காரணம் கேட்க, அக்ஷயாவுக்கு பரிசுபொருள் வாங்குவதாக குறுஞ்செய்தியில் கூறினாள்.

அதனால் அயன் ஆதினியை தேடவில்லை‌.

டாக்டரும் சற்று நேரத்தில் ஆதினியை பரிசோதித்தார்.

ஆதினி தனக்கு ஏற்கனவே ஐந்து வயதில் குழந்தை உள்ளதாகவும், தற்போது மீண்டும் கருவுற்றதாக இருக்கலாம் என்ற சந்தேகம் வந்ததாகவும், டாக்டரை கணவரின் சொந்தவூருக்கு சென்று கன்சல்டிங் பார்க்கலாமென்பதால் இங்கே எந்த டாக்டரிடமும் காட்டவில்லை.. ஏன் பரிசோதிக்கவும் இல்லை என்பதை மட்டுமே தெரிவித்தாள். அதோடு இன்று கால் இடறி கீழே விழுந்ததில் லேசான பயம் தோன்றியதால் வந்ததாக கூறினாள்.

டாக்டரும் அதனால் பெரிதாக தோண்டி துருவாமல் ஸ்கேன் எடுத்துட்டா தெரியும். நீங்க சேலையை தளர்த்தி படுங்க" என்று கூறினார் டாக்டர்.

ஆதினியும் அதற்கேற்றவாறு படுத்திருக்க, டாக்டர் குழந்தையை ஆராய துவங்கினார்.

ஸ்கேன் உபகரணங்கள் கொண்டு வயிற்றில் ஜெல் தடவி, அழுத்தி அழுத்தி பார்த்திட, "லே..லேசா வலிக்கு டாக்டர்." என்றாள்.

"ம்ம்ம்." என்றவர் ஸ்கேனை ஆராய்ந்துவிட்டு, "கன்சீவா தான் இருக்கிங்கம்மா. ஆனா குழந்தை வளர்ச்சி அதிகமா தெரியுது. நீங்க டேஸை தப்பா கூட்டியிருக்கலாம். அப்பறம்... இந்த ஸ்கேன் ரிப்போர்டை விட, முழு ஸ்கேன் எடுங்க. அது புதன் கிழமை தான் எங்க ஹாஸ்பிடலில் வெளியேயிருந்து வருவாங்க.

சோ... நீங்க விருப்பப்ட்ட வர்ற புதன் வாங்க இல்லைன்னா... உங்க கணவரோட ஊர்ல போனதும் நல்ல டாக்டரிடம் செக்கப் போங்க. எந்த ஊர்?" என்றார்.

"அவர் சர்பிரைஸ்னு சொல்லலை டாக்டர்" என்றாள்‌ வெகுளியாக.

"நல்ல பொண்ணுமா நீங்க. ஓகே.. டேப்ளட்ஸ் ஆல்ரெடி ஐயர்ன் கால்சியம் சாப்பிடறிங்க தானே. அதையே கன்டினியூ பண்ணுங்க‌. மத்தபடி ஒன்னுமில்லை." என்று டிசு பேப்பரை எடுத்து நீட்டினார்.

வயிற்றில் தடவிய ஜெல்லை துடைத்தவள், டாக்டர் பீஸ் செலுத்திவிட்டு ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வந்தாள்.

வரும் வழியெல்லாம் குழந்தை நன்றாக வளர்ந்துள்ளதாக கூறியதே செவியில் தாக்கியது. முதலில் ஆனந்தமாக உணர்ந்தாள் ஆதினி.

குழந்தை உள்ளதா இல்லையா என்ற குருட்டு கணிப்பில் அல்லவா மருந்தை விழுங்கினாள். இன்று குழந்தை உள்ளதென்று கூறியதால் ஆனந்தம் வந்தது. ஆனால்..‌ குழந்தையின்  வளர்ச்சி அதிகமாக, கூறவும், நாட்கள் அதிகப்படியாக இருக்கலாம்‌ என்றதும், ஆதினிக்கு திருமணமான நாளை யோசித்தாள்.

சரியாக நான்கு மாதம் முடிவடைந்திருக்கும். ஆனால் ஐந்து மாதங்கள் அளவுள்ள குழந்தை வளர்ச்சி உள்ளதாக அல்லவா கூறினார்.

அப்படியென்றால் எப்படி? கணக்கு இடிக்கின்றதே என்று குழப்பினாள்.

-தொடரும்.

https://onlinetamilnovels.com/%e0%ae%85%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%85%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be-14/

அயலா... அயலா...-13
அத்தியாயம்-13

அயன் கோபப்படுகின்றானா, சாந்தமாக பேசுகின்றானா பிரித்தறிய இயலாத விதமாக பேசினான். ஆனால் அவன் பச்சை கண்கள் விழித் தெறித்திடும் அளவிற்கு விரியவும், லைட்டின் எதிரே இருக்க கண்கள் பிரகாசமாக இருக்கவும் தான் அவன் கோபமாக இருப்பதே ஆதினி அறிந்தாள்.

"அங்க போவதற்கு முன்னயே ஆயிரம் முறை படிச்சி படிச்சி சொன்னேன். நாம அங்க போக வேண்டாம்னு. நீ தான் என் பேச்சை கேட்கலை ஆதினி.

அங்க வந்தவங்க உனக்கு மட்டும் பிரெண்ட்ஸ் இல்லை. பிரதாப்கும் நண்பர்கள். அப்படியிருக்க அவனை பத்தி பேச தான் செய்வாங்க. அதிலும் ஆண் நண்பர்கள் அவனையும் உன்னையும் பேசாம கடந்து போவாங்களா? சான்ஸேயில்லை.. இதெல்லாம் தெரிந்து தான் முதல்லயே வேண்டாம்னு மறுத்தேன்.‌ உனக்கு நான் எந்த அர்த்தத்தில் சொல்ல வர்றேன்னு புரியலை ஆதினி.

இனியாவது நண்பர்கள்னு சொல்லிட்டு யாரையும் பார்க்காத. அது தான் உனக்கு நல்லது. உனக்கு நான் அக்ஷயா போதும்." என்று அழுத்தமாய் உரைத்தான்.

ஆதினி மெதுவாக அயனை ஏறிட்டாள். "அயன்‌... இந்த இடம், வீடு, ஸ்கூல், பிரெண்ட்ஸ் எதுவும் எனக்கு வேண்டாம். நாம எங்கயாவது போய் யாருக்கும் தெரியாத ஊரில் வாழலாம். முன்ன செல்வம் ஜமுனா ஆன்ட்டி இருந்தாங்க. அவங்களிடம் என் மனவருத்ததை சொல்வேன். அவங்க எனக்கு ஆறுதலா நாலு வார்த்தை பேசுவாங்க. அவங்களும் அவங்க பசங்களை பார்க்க போயிட்டாங்க. இங்க நமக்குனு நட்பா அன்பா பேச யாருமில்லை.

அதோட என்னால பிரதாப் முதல் கணவர். நீ இரண்டாவது கணவன் என்ற பேச்சை சகிக்க முடியலை.
பிரதாப் மேல அதே அன்பு இருக்கு, மரியாதை இருக்கு. அவர் இறந்ததால அவருக்கு அஞ்சலி செலுத்த கடமைப்பட்டிருக்கேன். ஆனா அவரை வச்சி என்னை சாகடிக்கற வார்த்தைகளை நான் அறவே ஒதுக்கறேன். என்னை எங்கயாச்சு கூட்டிட்டு போ.

உனக்கு... பிசினஸ் பார்க்கணும்னு சொன்னியே. அந்த ஊருக்கு போயிடலாம். நமக்கு கல்யாணமாகி ஐந்து வயசுல குழந்தையிருக்கு என்ற அறிமுகத்தோட நாம நம்ம வாழ்க்கையை புதுசா ஆரம்பிக்கலாம். ப்ளீஸ்... நாம வேற இடத்துல போயிடலாம். எனக்கு இங்க வாழ மூச்சு முட்டுது.

நீ நான் குழந்தைனு, நாம மட்டும் வாழ்ந்துடலாம். இனி எந்த பங்ஷனும் வேண்டாம், நட்புறவுகள் வேண்டாம், நாம தனியா நின்று வாழ்வோம்." என்று கூற, அயன்ஆதினி நிதானமடைய தண்ணீரை புகட்டினான்.

அவன் கண்களும் ஆக்ரோஷத்திலிருந்து மீண்டது போல இருந்தது.

அவன் செய்த பிரெட் ஆம்லேட் எடுத்து, அவளுக்கு புகட்டியபடி, "போகலாம்... போயிடலாம். ஆமா.. நமக்கு கல்யாணமாகி மூன்று மாசம் இருக்குமா?" என்று கேட்க, நாலாவது மாசம் ஆகப் போகுது." என்றாள்.

"அம்மா... எனக்கு கூட ஐந்து வயசு இல்லை. ஆறு வயசாகப்போகுது. அடுத்து என் பெர்த்டே வருது. மறந்துடாதிங்க. எந்த பங்ஷனும் வேண்டாம்னு சொன்னிங்க. என் பெர்த்டேவை செலிபிரேட் பண்ணணும்." என்று அவளது கவலையை விவரித்தாள்.

ஆதினியோ புன்னகைத்து, "உன் பிறந்த நாளை மறப்பேனா?" என்று கொஞ்சினாள்.

அயனோ கணக்கிட்டவனாக, "சரி.. அப்ப அக்ஷயா பிறந்த நாள் முடிஞ்சதும் நாம இங்கிருந்து கிளம்பிடலாம்.
என் பிசினஸ் பிளேஸ், இடம்னு மாறினா, எல்லாம் மாறும். நம்ம மனுசு ரிலாக்ஸ் ஆகும். அங்க தனிமை, குளுமை, இனிமை இதான் உங்களுக்கு சாந்தியை தரும்" என்று கூறினான்.

"குட் ஐடியா" என்றாள் ஆதினி.

அக்ஷயாவோ "ஐ.. அப்ப புது வீடு புது இடத்துக்கு போவோம்." என்று குதூகலம் கொண்டாள்.

"ஆமா... நீங்க பிசினஸோட மெயின் பிராண்ச் எங்க ஒபன் பண்ணறிங்க. சொன்னா அதுக்கு ஏற்றது போல உடை வாங்கலாம். குளுமைன்னா.. ஸ்வெட்டர் வாங்கணுமா? கொடைக்கானல் ஊட்டி இப்படி ஏதாவது மலை பிரதேசமா". என்றாள்.

"என்ன" என்றான் அயன்.

"அதான்பா... என்ன பிசினஸ்? ஏதாவது ஊட்டி கொடைக்கானல்ல எஸ்டேட் வாங்கறிங்களா?" என்று குழப்பாய் கேட்டாள். இதுவரை அயன் தொழிலாக எதையும் உரைக்கவில்லையே.

"இவ்ளோ நாள் அமைதியா இருந்தல்ல. அப்படியே இரு. சர்பிரைஸா கூட்டிட்டா போறேன்." என்று பிரட்ஆம்லேட் ஊட்டி தண்ணீரை புகட்டி உறங்க கூறினான்.‌
அக்ஷயாவோ "அப்பா.. எங்க போனாலும் நான் உங்க கூடவே இருப்பேன்." என்று கழுத்தை கட்டிக்கொள்ள, அயனும் வாஞ்சையாக முத்தமிட்டான்.‌

ஆதினியோ எனக்கு முத்தம்' என்ற ரீதியில் அயனை நோக்க, ''குழந்தையை தூங்க வை ஆதினி.  நம்ம கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடலாம்" என்று கண்சிமிட்டி கிசுகிசுப்பாய் கூறினான்.‌

"போங்க" என்று வெட்கம் கொண்டவள் கர்ம சிரத்தையாக மகளை உறங்க வைத்து அயனுடன் அவன் கூறிய கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடவும் மறக்கவில்லை.

இந்த கலவையான உணர்வில் அனிதா இரவு மூன்று முறை போன் போட்டதை ஆதினி எடுக்கவில்லை.

அடுத்த நாள் ஆதினி ஸ்கூலுக்கு கிளம்பும் நேரமும் அனிதா அழைக்க, துண்டித்து முடித்தாள்.

'எனக்கு எந்த நண்பர்களும் வேண்டாம். ஏன் பிரதாப் இறந்தா நானும் செத்துடணும்னு நினைக்கறாங்க. நானே அப்பா அம்மா இல்லாம அனாதையா வளர்ந்தேன். எனக்குனு ஒரு குடும்பம் என்றதில் காதல் கல்யாணம் செய்தேன். ஆனா பிரதாப் இப்படி இறப்பார்னு தெரியாதே. காதலிச்சது உண்மை தான்‌. அதுக்காக மறுமணம் செய்து அயனை காதலிக்க கூடாதா? என்னவோ கள்ளத்தனமா அவரோட உறவில் ஈடுப்டுவது போல வாயுக்கு வந்த மாதிரி பேசறாங்க. எனக்கு எந்த நட்பும் வேண்டாம் வேண்டாம் வேண்டாம்' என்று மனதில் நினைத்து பள்ளிக்கு புறப்பட்டாள்.

அக்ஷயாவையும் அயன் பள்ளியில் விட்டுவிட்டு புறப்பட்டான். அதே போல மாலை ஆதினி வர தாமதமாகவும் அக்ஷயாவை அழைத்து வீட்டுக்கு நடையை கட்டியிருந்தான்.

இங்கே ஆதினிக்கு மீண்டும் அனிதா போனில் அழைத்தாள்.

"பச்.. நேத்து நைட்லயிருந்து காலையில, மதியம்னு இப்பவரை கால் பண்ணறா." என்று எரிச்சலில் அட்டன் செய்தாள்.

"என்ன?" என்றாள் ஆதினி.

"சாரி... ஆதினி. பிரெண்ட்ஸ் எல்லாம் குரூப்பா போட்டோ எடுக்க வந்தப்ப கேட்டேன். நீ அப்பவே போயிட்டதாக சொன்னாங்க.

நான் பேசியதால போயிட்டியோனு நினைச்சேன். அப்ப தான் அவங்களும் உன்னை காயப்படுத்தி பேசியதை பகிர்ந்தாங்க.

அப்பறம் ஆளாளுக்கு உன் பக்கம் யோசித்தப்ப தான் நாங்க செய்த தப்பே தெரிந்தது. மத்தவங்க எப்படியோ நான் பேசியது தப்பு தான் ஆதினி.

பிரதாப் இறந்துட்டான். இனியும் அவனை வச்சி பேசி உனக்கு இப்ப கிடைச்ச நல்ல லைப்பை நாங்க பேசும் பொருளா பேசியிருக்க கூடாது.

உனக்குனு மறுவாழ்வு வேண்டும். இந்த உலகமிருக்கே... பஸ்ட் மேரேஜ் செய்து புருஷன் செத்துட்டு தனிமரமா இருக்கறவங்களை, கல்யாணம் பண்ணுங்க. இன்னொரு லைப் இருக்கு. மூவ் ஆகுங்கனு சொல்லும். ஏன் இங்க ஒரு பையன் இருக்கான் அங்க ஒரு பையன் இருக்கான் கல்யாணம் பண்ணிக்கிறியானு கேட்டு உசுரை வாங்குவாங்க.

ஆனா அதே....
புருஷனை இழந்தவங்க, மூவ் ஆன் ஆகி, வேறொரு லைப் சாட்டிஸ்பெக்ஷனா வாழ்ந்தா, அதுக்கும் என்ன சொல்லும் தெரியுமா? புருஷன் செத்த கவலையேயில்லை அதுக்குள்ள மினிக்கிட்டு இருக்கானு பேசும்.

இரண்டும் மனுஷ குணம் தான்.

இங்க பலருக்கும் இயல்பா கடந்து போறது சிலருக்கு பெரிய விஷயம்.

நீ மூவ் ஆன் ஆனது நாங்க ஏத்துக்க டைம் எடுத்துடுச்சு. பிரதாப் நண்பன் என்ற காரணமா இருக்கலாம் ஆதினி. நீ போனப்பிறகு பிரெண்ட்ஸ் கூட வருத்தப்பட்டாங்க. ஆளாளுக்கு அவங்க பேசியது தப்புனு மாத்தி மாத்தி சொன்னாங்க. ஆனா யாருக்கும் உனக்கு மறுபடியும் கால் பண்ணி பேச பயம்.
எனக்கு மனசு கேட்கலை. என்னோட பங்ஷனுக்கா வந்துட்டு நீ அழுதுட்டு போனது ஒரு மாதிரி பீலாகுது.
நீ மன்னிச்சு பேசினா தான் எனக்கு சந்தோஷம்" என்று அடுக்கினாள்.

ஆதினியோ அனைத்தும் கேட்டவளாக, "உண்மை தான்.. ஒரு கணவனை இழந்த பெண், சட்டுனு மூவ் ஆனாலும் தப்பு தான். அதை இந்த இடைப்பட்ட காலத்துல புரிஞ்சுக்கிட்டேன். அதுக்காக அயனை திட்டிட்டேன். அவர் இனியும் இங்க வேண்டாம். நாம வேற இடத்துக்கு ஷிப்ட் ஆகலாம்னு சொல்லிட்டார்.
எனக்கும் மனசு சரியில்லை அனிதா. அதனால எந்தயிடம் கூட கேட்கலை. அக்ஷயா பிறந்த நாள் முடியவும், அவர் பிசினஸ் பண்ணற ஊருக்கு போயிடுவேன்.

அங்கயாவது அயன் மனைவினு பேசிட்டு போவாங்க பாரு." என்று நடந்தபடி பேசினாள்.

பள்ளி முடித்து வீட்டுக்கு நடந்து சென்றாள்.

"ஓ... ஷிப்ட் ஆகப்போறிங்களா? குட் குட்" என்றாள் அனிதா.

"ம்ம்ம்" என்றாள் ஆதினி.

"ஆதினி.. அப்பறம் நான் இன்னோரு விஷயம் பேசணும். எப்படி ஆரம்பிக்கறதுனு தெரியலை. நான் ஏதாவது கேட்டு இதுக்கு தான் இத்தனை சாரி சமாதானம்னு நினைச்சிடாத." என்று பம்மினாள். அனிதா.

ஆதினியும் "என்னனு சொல்லு" என்றாள்.

"அயன் உனக்கு ஒரு மோதிரம் பிரசண்ட் பண்ணினார்ல. அதை என் வுட்பிக்கு காட்டினேன். ஆக்சுவலி.. எங்கேஜ்மெண்ட் ரிங் அந்த மாதிரி மாடல் செய்ய தரலாம்னு நினைச்சு காட்டினேன்.

ஆனா நான் சர்ச் பண்ணினப்ப, இந்த மாதிரி மாடல் இந்த உலக்ததுலயே இல்லைனு சொல்லுச்சு. ஏதோ ஸ்பெஷலா ஆர்டர் செய்து இருக்கலாம்னு நகைக்கடைக்காரர் சொன்னார்.

உன்னிடம் அந்த மோதிரம் இருக்குல்ல அந்த மோதிரம் எந்த கடையில் வாங்கியது? இல்லை.... எப்ப அந்த மோதிரம் ஆசாரி செய்தாங்கனு சொன்னா.‌ அதை போல ட்ரை பண்ணுவேன்.

ரியலி அந்த ரிங் ஏதோ வித்தியாசமா ரொம்ப யூனிக் பீஸா இருந்தது. அயனிடம் அதுப்பத்தி கேட்கறியா?" என்று கேட்கவும், ஆதினி மௌனமானாள்.

"ஆதினி" என்றதும், "அது அவரோட பரம்பரை ரிங் மாதிரி சொன்னார். ஸ்பெஷல் ரிங் தான்‌. பட் எதுக்கும் அவரிடம் சொல்லறேன். தேங்க்ஸ்" என்று கூறி அணைத்து விட்டாள்.

ஆதினிக்கு ஏனோ நட்பும் கசந்தது. இந்த உலகம் தனக்கு தேவையானதை தான் கேட்டு பெருகின்றது. ஆனால் அதையே தான் நினைத்தால் மட்டும் பழியையும், தவறு தன்னுடையது என்ற குற்றச்சாட்டையும் அடுக்கிவிடுகின்றது.

அந்த இடமே ஆதினிக்கு இருட்டிக்கொண்டு வந்தது. வீட்டுக்கு வந்து கேட்டில் கை வைக்கும் நேரம் அவளுக்கு தலைசுற்ற ஆரம்பித்தது.

இதுவரை நடந்து வந்ததையே, அதிகமாக மூச்சு வாங்கியதை வைத்து, அப்பொழுது தான் அறிந்தாள்.‌

வீட்டின் அழைப்பு மணியோசையை அடிக்க கைகள் செல்ல, மயங்கி சரிந்தாள்.

அயன் ஆதினி வரும் நேரம் என்பதால் கதவை திறந்து எதிர்பார்க்க ஆதினி மயங்கி சரியவும் மின்னலாய் வந்து தாங்கி பிடித்தான் அயன்.‌

-தொடரும்.

https://onlinetamilnovels.com/%e0%ae%85%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%85%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be-13/

அயலா... அயலா...-12
அத்தியாயம்-12

இன்று சனி கிழமை என்பதால் மதிய உணவை தாமதமாக தான் சமைத்து கொண்டிருந்தாள் ஆதினி. வீட்டில் சாம்பார் வாசனை கமழ்ந்தது.

அக்ஷயா தரையில் ஓவியம் வரைந்திருந்தாள்.
ஆதினி சமையலறையில்  இருந்தபடி, "அயன், கத்தரிக்காய் வாங்கிட்டு வந்திங்களே எங்க வச்சிருக்கிங்க?" என்று கேட்டாள்.

சில விநாடிகள் பதில் இல்லை.

அக்ஷயாவை பார்த்துக்கொண்டே அயன் ஹாலில் நின்றிருந்தான்.
அவள் திரும்பி பார்த்தபோது, அயன் அசையவே இல்ல. அக்ஷயாவை தான் கூர்ந்து நோக்கினான்.

"அயன்?" என்றதும் அவன் மெதுவாகத் திரும்பினான்.

அந்த திரும்பும் அசைவு எந்திரத்தனமாக இருந்தது.

"என்னை அவ பார்த்து பார்த்து வரையாற. நான் துளியும் அசையக்கூடாதாம். இதுல நீ வேற கூப்பிட்டுட்டு இருக்க? இடது மேல் அலமாரில கத்திரிக்கா இருக்கு" என்றான்.
ஆதினிக்கு மகளது சேட்டை சிரிப்பை தர கத்திரிக்காயை எடுத்து அரிந்தாள்‌.

ஆதினி மகளை எண்ணி கவனம் சிதற கையை தவறுதலாக வெட்டினாள்.

"அச்சோ.." என்று டேப் தண்ணீரில் கையை கழுவ, அயனோ "பார்த்து செய்ய மாட்ட. இப்படியா கையை வெட்டிக்கறது" என்று உடனடியாக கட்டுப்போட்டுவிட்டான்.

அயன் குழந்தை அருகில் இருந்தான்.இந்த இடத்துக்கு உடனடியாக  வேகமாய் வந்து நின்றிருந்தான்.

"அயன்... நீங்க அங்க குழந்தையிடம் இருந்திங்களே" என்றாள்.

அவன் ஆதினி கையை மெதுவாக பிடித்து, "நான் எங்க இருந்தாலும் என் பார்வை உன்னை விட்டு அகலாது ஆதினி. உனக்குன்னா அடுத்த நிமிஷம் உன்‌ முன்ன நிற்பேன்." என்றான். அவளுக்கு அவன் பேச்சு க்ரிஞ்சாக இருந்தாலும் ஆனந்தத்தை தந்தது.

ஆதினி அவன் அருகில் சாய்ந்து இருந்தாள். "உங்க ஹார்ட்பீட் ஒரு மாதிரி இருக்கு." அவள் கையை அவன் மார்பில் வைத்தாள்.
"அங்கிருந்து இங்க ஓடி வந்திருக்கேன் ஆதினி இதயம் தாறுமாறா இருக்காதா?" என்று சிகையை ஓதுக்கி கேட்டான்.‌

"அயலா... நான் உன்னை இங்க தானே நிற்க சொன்னேன்." என்று அக்ஷயா கோபம் கொள்ள, "இப்ப குழந்தையை கொஞ்சணும்." என்று கூறிவிட்டு அக்ஷயாவை தேடி சென்றான்.‌

ஆதினியோ "டைம்டேபிள் போட்டு கொஞ்சுங்க" என்றவள் கையை ஆட்டி பார்த்தாள். அயன் போட்ட கட்டில் இரத்தம் உறைந்திருந்தது.
சாம்பாரை மீண்டு செய்ய ஆரம்பித்தாள்.

அன்று முழுக்க வீட்டில் படம் பார்க்க நேரம் கரைந்தது.

"ஏன் அயன்... படம் பார்த்தா கூட ஒரே மாதிரி முகவனை. இந்த எமோஸனல் காட்சி வந்தா ஹர்ட் ஆகாதா?" என்று வினவினாள்.

"ஏய்... அது படம்னு என் மைண்ட்ல பிக்ஸ் ஆகியிருக்கு. அப்படியிருக்க அந்த காட்சிக்கு எப்படி எமோசனல் ஆவேன். அதுவுமில்லாம நான் ஒன்னும் உன்னை மாதிரி இல்லை. இங்க பாரு... என் சட்டையெல்லாம் ஈரப்படுத்திட்ட. அழுதழுது என் ஷோல்டர்ல முகம் புதைச்சிட்ட. நீ விடற கண்ணீர் சட்டையில" என்று சுட்டிக் காட்டினான்.‌

"போங்க... நான் எல்லாம் ரொம்ப சென்சிடிவ். என்னால எமோஷனலை கண்ட்ரேல் பண்ண முடியாது. நீங்க எந்திரம் மாதிரி இருங்க. நான் அப்படி இருக்க முடியாது. நான் மனுஷி" என்றாள்.

"நான் ஒன்னும் எந்திரம் இல்லை." என்றான்.

அக்ஷயாவோ அயனை பார்த்து, "அயலப்பா ரோபாவும் இல்லை, மனுஷனும் இல்லை. எனக்கு அப்பா மட்டும் தான்." என்று கிலுக்கி சிரித்தாள்.

"வாலு படத்தை பாருடி" என்று ஆதினி சிரிக்க, "நீ படத்தை பாரும்மா. நீ அப்பாவிடம் தேம்பி தேம்பி அப்பா பாக்கெட் பக்கம் பாரு... கண்மை இழுவி வச்சியிருக்க" என்றதும் தான், சட்டையில் கண் மை இழுவியதை கண்டாள்.

"சாரி சாரி சாரி" என்று முகம் சுருக்கி மன்னிப்பு வேண்ட, "ஏய்... ஜஸ்ட் சட்டை தானே‌. இந்த பாண்டிங் எமோஷனல் இதெல்லாம் எனக்கு  ஸ்பெஷல்டி" என்று கூற, இரு கண்களும் ஒன்றை ஒன்று தழுவியது.

அழகான குடும்பம் அமைதியாக பயணித்தது.

மீண்டும் ஒரு சங்கடம் உருவாகவே அனிதாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.

அதற்கு ஆதினி செல்ல தயாரானாள்.

அயனிற்கு செல்வதற்கு துளியும் பிடிக்கவில்லை.

"இப்ப இந்த பங்ஷனுக்கு போகணுமா?" என்று சட்டை மாட்டியபடி கேட்டான்.‌

"பிரெண்ட் பா" என்று கூற, 'நல்ல பிரெண்ட் ஒவ்வொருத்தி ஒரு வன்ம கொடோன்.' என்று முனங்கினான்.‌

அக்ஷயாவுக்கு தலைவாறி பூவை சூடினாள்.

பிரதாப்பின் இருசக்கர வாகனம் இருக்க அதில் தான் நாற்பது நிமிட பயணத்தில் அந்த பார்ட்டி ஹாலிற்கு வந்து சேர்ந்தார்கள்.

அனிதா வெட்ஸ் சுதாகர் என்ற பேனர் அவர்களை வரவேற்றது.

பெரும்பாலும் உறவுகள் சூழ்ந்ததால், தெரியாத விழாவில் சென்ற உணர்வு தான் ஆதினிக்கு.

மணமகள் அறைக்கு வந்து அனிதாவை பார்த்து வந்துவிட்டதாக காட்டிக் கொண்டாள்.

"ஏ... ஆதினி.. தேங்க்ஸ் பார் கம்மிங்" என்று கட்டியணைத்தாள்.

"பிரெண்ட்ஸ் எல்லாம் யாரும் வரலையா?" என்று கேட்க, "பச் எல்லாம் செட்டில் ஆனதுங்க. குழந்தை குட்டினு ரெடி பண்ணி வர லேட்டாகும். நீ கூல் ட்ரிங்க்ஸ் குடிச்சியா? பிரதாப்கு கொடுத்தியா?" என்றதும், ஆதினி மௌனமானாள்.

"ஓ.. சாரி சாரி.. பிரதாப் இறந்ததே மறந்துட்டேன். ஐ ரியலி சாரி. அயன் வந்திருக்காரா? குழந்தை எங்க?" என்றாள் அனிதா.

"அயன் குழந்தையை வச்சிட்டு இருக்கார். நான் உன்னை பார்க்கலாம்னு வந்தேன்" என்றாள் மெதுவாக.

"இன்னும் நம்ம கேங்க்ல எவளும் வரலை." என்றதும் "சரி நான் அயன் கூட வெயிட் பண்ணறேன்" என்று நகர்ந்தாள்‌.

"ஏய்... அனிதாக்கா.. இது பிரதாப் அண்ணாவோட ஓய்ப் தானே? குழந்தையை என்ன செய்தாங்க." என்றாள் அனிதாவின் தங்கை.

"அக்ஷயாவை அந்த அயன் தான் வச்சிட்டு இருக்கான். குழந்தையை நல்லா பார்த்து பழகி, நைஸா அம்மாவை தூக்கிட்டான்." என்றாள் அனிதா.

"குழந்தையிடம் போறேன்னு சொல்லலை. அயனிடம் போறேன்னு சொன்னதும் குழந்தையை போர்டிங் ஸ்கூல் ஹாஸ்டல் இப்படி போட்டுட்டாங்களோனு நினைச்சேன்." என்று லிப்ஸ்டிக் எடுக்க முனைய, ஆதினி கண்ணில் நீர்க்கோர்த்து, "குழந்தையை நான் அப்படி என்னை விட்டு எங்கயும் தனியா அனுப்ப மாட்டேன். குழந்தை என்னோட உயிர். பிரதாப் இறந்ததால, அயனை மறுமணமா மணந்ததால அக்ஷயா என் குழந்தை இல்லைன்யென்றது ஆகாது.
குழந்தை இருக்கற இடத்துல அயன் இருப்பார்னு தான் அப்படி அயனிடம் போறேன்னு சொன்னேன். மத்தபடி..." என்றவள் பேச்சு அடைத்தது. சட்டென வெளியே வந்து அயனிடம் வந்து அமர்ந்துவிட்டாள்.

"அனிதாக்கா உன் பிரெண்ட் பீலிங்கா போறாங்க" என்றாள்.

"நான் ஒரு எட்டு சாரி கேட்டுட்டு வந்துடறேன்" என்று எழவும், "மேக்கப் போடணும் பாதில போனா உன் மாமியார் திட்டுவாங்க." என்று தங்கை கூறவும் தனியாக பேசிப்போமென விட்டுவிட்டாள்.
அவளுக்கு ஆதினியிடம் மோதிரம் பற்றியும் பேச வேண்டுமே!

தன் கண்ணீரை அயன் பாராமல் மறைத்து, நண்பர்கள் தோழிகள் யாராவது வருகின்றார்களா என்று வாசலை எட்டியெட்டி பார்த்தாள்.

ஆண் நண்பர்கள் கதிர் அவனது குடும்பம் வந்தது.

முகமகிழ்வோடு கையை அசைத்து தன்னிருப்பதை உரைத்தாள். அவனும் குழந்தை குடும்பம் மனைவி என்று வந்து, அயனிடம் நலம் விசாரித்தான்.

"எப்ப வந்த.‌.‌ அனிதாவை பார்த்தியா? எப்படி போகுது லைப்" என்று ஆதினியிடம் கேட்டான் கதிர்.

"அமைதியா போகுது." என்று கூற, கதிர் மனைவியோ அவனை சுரண்டி, "இவங்க ஹஸ்பெண்டை இதுக்கு முன்ன பார்த்த மாதிரி நினைவில்லை. அவர் தாடி மீசை இருக்கும் தானே?" என்று கிசுகிசுத்தாள்.

கதிர் மனைவியின் காதில், "அது பிரதாப்மா‌ பிரதாப் இஸ்ரோ தீவிபத்துல இறந்துட்டான். இறந்து ஒரு வருஷமாகுது.
இது அயன். பிரதாப் கூட வேலை பார்த்தவர். பிரதாப் டெட் பாடியை கொண்டு வந்து கொடுத்தவர், ஆதினி கூடவே இருந்து இப்ப பிரதாப்போட முதலாண்டு நினைவு நாள் முடிஞ்சு பத்து நாள்ல கோவில்ல கல்யாணம் பண்ணினாங்க. இப்ப அது நடந்து மூனு மாசமாகிடுச்சு. நீ பிரதாப் இறந்தப்ப பஸ்ட் பேபி பிரகனென்ட் ஆனதுல உங்க அம்மா வீட்ல இருந்த. பிரதாப் நினைவு நாளுக்கும் நான் உன்னை கூட்டிடுட போகலை. இது ஆதினி செகண்ட் மேரேஜ் பண்ணிட்டவர்." என்று விளக்கினான்.

ஆதினி இரண்டு சீட்டிற்கு முன்னால தான் இருந்தால் அவள் காதில் துல்லியமாக இந்த விளக்ங்கள் வேறு விழுந்தது.

"பிரதாப்-ஆதினி லவ் மேரேஜ் பண்ணினவங்க. இவங்க லவ் ஸ்டோரி தான் காலேஜில ஹைலைட்னு புகழ்ந்திங்க. எப்படிங்க..‌ செகண்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க. ப்ப்ப்ஆஆ." என்று தன்னால் நினைத்து கூட பார்க்காத விஷயம் என்பது போல உடலை குலுக்கினாள்.‌

அதன்பின் வந்த நட்புகளும் மனதை உடைத்து பேசவில்லை‌. ஆனால் பிரதாப் புராணம் பேசினார்கள்.
பிரதாப் பற்றி பேசினால் தவறில்லை. அது அவர்களது நண்பனை பற்றி பேசுவது தான். ஆனால் கூடவே ஆதினி ஏதோ பிரதாப்பிற்கு துரோகம் இழைத்ததாக இலை மறையாக பேசி வைத்தார்கள். அது தான் அவளை துவள வைத்தது.

ஒரு கட்டத்தில் 'பொண்டாட்டி செத்தா மட்டும் புதுமாப்பிள்ளை இல்லை. புருஷன் சொத்தாலும் இனி பொண்ணு புதுப்பொண்ணு தான்." என்று கேலிக்கை வரை செல்ல, எல்லை தாண்டிய விரக்தியில், "அயன்... நாம போகலாம்" என்று எழுந்தாள்.

"மேடையில இப்ப தானே உன் பிரெண்டை கூட்டிட்டு வந்தாங்க. அதுக்குள்ள போகணும்னு சொல்லற. மேடையில போய் போட்டோ எடுக்கலையா? விஷ் பண்ணலையா? அப்பறம் பந்திக்கு முந்து படைக்கு பிந்து'னு சொல்லற மாதிரி சாப்பாடு தான் முக்கியம்னு சாப்பிட போகலையா? இன்னிக்கு டின்னர் பங்ஷன்லனு சொன்ன?" என்று கேட்டான். அயனும் நக்கலாய் தான் கேட்டான்.

அவனுக்கு இச்கே வரவே பிடிக்கவில்லை. இதில் வலுக்கட்டாயமாக வந்து நின்றால் சுற்றி பிரதாப் புராணம் என்றதில் கடுகடுப்பை காட்டினான்.‌

ஆதினியோ 'நீயுமா?' என்பது போல பார்க்க அக்ஷயாவையை தோளில் தூக்கி போட்டு, ஆதினியை கைப்பிடித்து அழைத்து வெளியேறினான்.

நண்பர்கள் முதலில் அயனுடன் எங்கோ செல்வதாக நினைக்க ஆதினி வெளியேறவும், "ஏ.. ஆதினி கிளம்பிட்டா. கோச்சிக்கிட்டா போல" என்று கூடி பேசினார்கள்.

ஆனால் யாருமே அவளை நிறுத்நி அழைத்துவர முன்வரவில்லை. மற்றவர்கள் போவார்கள் என்று ஆளாளுங்கு அதே இருக்கையில் பசை தடவியது போல அமர்ந்துக் கொண்டார்கள்.

பைக்கில் வீடு வந்தடைந்ததும், ஆதினி வேகமாய் உடையை களைந்து நகையை கழட்டி வீசினாள்.

அக்ஷயாவுக்கு அயன் தான் இரவு உடையை மாற்றி விட்டான்.

ஆதினி மெத்தையில் குலுங்கி குலுங்கி அழவும், அயன் அக்ஷயா கிச்சனில் இரவு உணவை சமைத்தார்கள். பிரெட் ஆம்லேட் போட்டு அதை எடுத்துக் கொண்டு வந்தான்.

"சாப்பிட்டு தெம்பா அழு ஆதினி" என்றான் அயன்.

"உங்களுக்கும் கிண்டாலா போச்சுல. எதுக்கு நீங்க பிரதாப் உடலை எடுத்துட்டு வந்திங்க. ஏன் இங்கயே தங்கனிங்க. அக்ஷயா கூட ஏன் அட்டாச் ஆனிங்க. அப்பாவா அவ மனசுல பதிஞ்சு, பிரதாப் மாதிரி நல்லா குழந்தையை பார்த்துக்கறாரேனு ஏன் மனசுலயும் விதைச்சிங்க.
என்னிடம் ஏன் லவ் பண்ணறதா சொன்னிங்க. என் மனசை கலைச்சி, கல்யாணம் செய்து, இப்ப என்ன பேசறாங்க பாருங்க. என்னை அப்படியே தற்கொலை செய்துக்க விட்டிருக்கலாம். இல்லை... அப்படியே நீங்க போயிருக்கலாம்.
ஏன் என்னோட வாழ்க்கையில வந்திங்க அயன். என்னை விட்டு போங்க.. எனக்கு நீங்க தேவையில்லை." என்று கதறி அழுது கத்தினாள்.

"உனக்கு நான் தேவையில்லை. ஆனா எனக்கு நீயும் குழந்தையும் தேவை ஆதினி. உன்னை விட்டு போக முடியாது." என்றான் அயன். அக்ஷயா அயனையும் ஆதினியையும் பார்த்து மிரண்டு நின்றாள்.

-தொடரும்.

https://onlinetamilnovels.com/%e0%ae%85%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%85%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be-12/

அயலா... அயலா...-11
அத்தியாயம்-11

காலை வெளிச்சம் மெதுவாக ஜன்னல் வழியே ஊர்ந்தது.

மஞ்சள் ஒளி சுவற்றை வருடி, அங்கிருந்த சிறிய குடும்பத்தின் மீது ஒரு புது நாளாக  ஆதினிக்கு ஆசீர்வாதம் போல விழுந்தது.

ஆதினி கண்விழித்தபோது, சமையலறையிலிருந்து தேயிலை வாசனை வந்து சேர்ந்தது.

அவள் புருவம் சுருங்கியது. அயனா டீ தயாரிப்பது என்று அவசரமாக பல்லை விலக்கிவிட்டு முகம் கழுவி, தலையில் ஒரு க்ளிப்பை மாட்டி வந்தாள்.

அயன் ஏற்கனவே எழுந்ததால், மெதுவாக அக்ஷயாவை படுக்கையிலிருந்து பக்குவமாய் தலையணையில் நகர்த்திவிட்டு, ஒரு முத்தம் தந்து, சத்தமின்றி மாடிப்படிகளில் இறங்கி சமையலறை வாசலில் நின்றாள்.

அயன் ஸ்டவ் முன்னால் நின்று டீதூளை கொதித்து வைத்து டீயை தயாரிக்கின்றான்.
அதிகப்படியான வெப்பமான நீராவி அவனைச் சுற்றி மெல்ல எழுந்திட அவனையே ரசித்தாள்.

அயன் நெற்றியில் துளி வேர்வை இல்லை. குளித்து முடித்து வந்த புத்துணர்வு மட்டுமே. அந்த ஸ்டவ்வின் சூடு, டீயின் கொதிநிலையில் அவன் சருமம் அப்பொழுதும் குளிர்ந்த நிலையில் தேகமருந்தது.

ஆதினி அவன் கையை பிடித்தாள். கவனித்தாள்.

அவன் பார்வை நேராக டீகப்பில் இருந்தது.

"நீங்க ஏன் இவ்வளவு நல்லவரா இருக்கிங்க?" என்று புன்னகை கலந்து கேட்டாள்.

அவன் தலையை சற்றே சாய்த்து அவளை ஊடுருவி பார்த்தான்.
அந்த நேரம் அயன் கண்கள்  நொடியில் பச்சை வண்ணத்தில் பிளாஷிட்டு பிரதிபலித்தது.

"உனக்கு இந்த நல்லவனை பிடிச்சிருக்கா?" என்று எதிர் கேள்வி கேட்க ஆதினி முறுவலிட்டாள்.

"பிடிக்காமலையா.... என் மீதி வாழ்க்கை உங்களோடு முடிவெடுத்தேன். உங்களை நல்லவரா தெரிந்து கவனிச்சி தான் திருமணம் செய்தது" என்றாள்.

அயனும் அமைதியாகச் சொன்னான்.
"நானும் உன்னை அப்சர்வ்  பண்ணுவேன்" என்று மூக்கை நிமிட்டி விட்டான்.

டீயை பருகியபடி "ஆமா... நீங்க போன் அதிகமா யூஸ் பண்ண மாட்டிங்களா?" என்று நீண்ட நாள் சந்தேகத்தை கேட்டாள்.

அயனோ "போன் யூஸ் பண்ணறது குறைவு ஆதினி. எனக்கு இந்த மக்கள் மூன்றாவது கை மாதிரி அதை வச்சிட்டு சுத்தறது கொஞ்சமும் பிடிக்கலை.

எதிர்ல இருக்கற மனிதர்களை பார்த்து பேசணும். பழகணும், இருக்கற இடத்தை பாதுகாக்கணும். அதை விட்டு அவனவன் போன்லயே குடித்தனம் செய்யறான். எப்பவும் இருக்கும் போது அதோட அருமை தெரியாம போவங்களே அப்படி இருக்காங்க" என்று இகழ்ந்தான்.

அக்ஷயா ஓடிவந்து அவன் காலில் மோதினாள்.

"அப்பா... எனக்கு பால்" என்றாள்.
அவன் உடனே பாலை கொதிக்க வைத்து மெதுவான சூட்டில் தயார் செய்தான்.

குழந்தையை தூக்கி மடியில் வைத்தான். அவன் கை குழந்தையின் முதுகை தடவியது.

அன்பான தந்தை அரவணைத்து மகளை நேசிக்கும் காட்சியாக ஆதினி பார்த்தாள். அந்த நேரம் குற்றவுணர்வு தலை தூக்கியது. பிரதாப் கூட அக்ஷயாவிடம் இப்படி பழக வேண்டியது. பிரதாப் இப்படி என்னை தவிக்க விட்டு சென்றுவிட்டாரே! என்று எண்ணவும், அயன் கட்டிய தாலி அவளை நிகழ்வுக்கு கொண்டு வந்தது.

குழந்தை அயனின் கட்டுப்பாட்டில் விட்டுவிட்டு அறைக்கு வந்து லாக்கரை திறந்து, அயன் அணிவித்த மோதிரத்தை கழுட்ட முயன்றாள்.

மரகத கல் மையத்தில் பளபளக்க அம்மோதிரமோ கழட்டமுடியவில்லை‌.
அவள் புருவம் சுருக்கினாள். மீண்டும் கழற்ற முயன்றாள். சற்றே பிடிவாதமாக இருந்தது.

"நீ எதுக்கு அதை ரிமூவ்  பண்ணற. அதை ரிமூவ் பண்ண என்னால தான் முடியும்" என அயன் குரல் கதவுக்குப் பின்னால் கேட்டது.

"குழந்தை எங்க?" என்று கேட்க, "டிவி" என்று கூறி அயன் ஆதினிஅருகே வந்தான்.

"நேத்து நமக்கு பஸ்ட் நைட்" என்றான்.

"சாரி... அக்ஷயா தூங்கிட்டானு நினைச்சேன். அவ நமக்கு நடுவுல தூங்க வந்துட்டா. உங்களுக்கு ஏமாற்றமா இருந்திருக்கலாம்" என்று நெளிந்தபடி கூறினாள்.

"ஐ நோ பேபி... நான் ஒன்னும் உன்னை சூறாவளியா முழுங்க வரலை‌. தேன் எப்ப பருகினாலும் தேன் தான். நம்ம குழந்தை இருக்கறப்ப அதற்கு ஏற்றது போல தான் நாம இருக்கணும்" என்று வார்த்தையில் கணிவை தந்தான்.

அவன் பேசியபடி அணைத்திருக்க, அதில் உரிமை கூடுதலானது. மென்மையான அணைப்பு கழுத்தில் அழுத்தமான முத்தமொன்றை தந்து விலகினான்.‌

அயனின் இந்த கழுத்து முத்தம் அவளுக்குள் இதத்தை தர, மகளை காண ஓடினாள்.

அன்றைய நாள் முழுதும் காமத்தை தவிர்த்து காதலும் அன்பும் பரவியது.

ஜமுனாவும் செல்வமும், அடிக்கடி இவர்களை பார்த்து புன்னகைத்து கொண்டார்கள்.

அன்றைய இரவு மாடியில் குளிர்ந்த காற்று வீசியது.
அக்ஷயா விளையாடிய அசதியில் அசந்து தூங்கிவிட்டாள்.
அயன் கைப்பிடியில் சாய்ந்து வானத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் பார்வை நிலவைக் கடந்து, நட்சத்திரங்களுக்கு அப்பால் சென்றது.
ஆதினி அருகில் வந்து நின்றாள்.

"என்ன ரொம்ப நேரம் மேலேதான் பார்க்கறிங்க" என்றாள்.

"நட்சத்திரம் பார்க்கறேன். உனக்கு நட்சத்திரத்தை பார்க்க பிடிக்குமா?'' என்று மெதுவாக பேச்சை ஆரம்பித்தான்.

"ஆமா. சின்ன வயசுல எல்லாம் நட்சத்திரத்தை எண்ணி பார்த்திருப்பேன். இப்ப நட்சத்திரத்தை பார்க்க ஏது நேரம்" என்றாள்.

"ஒரு நாள்... ரொம்ப நெருக்கமாக காட்டுறேன்." என்று கிறக்கமாக அயன் பேச ஆதினி சிரித்தாள்.

"ஏன் ராக்கெட் வாங்க போறிங்களா?" என்று கிண்டலாக கேட்க, அவன் மெதுவாக அவளை நோக்கி திரும்பினான்.

"ராக்கெட்  இல்லாமலேயே போகலாம். அப்ப நீ என் மேல மயக்கத்துல இருப்ப" என்று கிசுகிசுத்தான்.

அயன் வெட்டவெளியில், அவனது அறைக்கு பக்கத்தில் பால்கனியில், அவளை இழுக்க காற்று சற்று குளிர்ந்தது.

அவன் ஆதினியை மஞ்சத்தில் சாய்த்து அருகில் நிதானமாக நின்றான். அவள் கண்களில் ஒரு துணியை கட்டி, "இமேஜின் பண்ணு ஆதினி. நீ பார்த்த நட்சத்திரம் வானம், அந்த குளிர்ந்த காற்று, வானத்து நிலவையே கண்ணடிச்சு வசீகரிக்கர நட்சத்திரம் உன்னை நெருங்கி வந்து பிரகாசிக்கிது." என்று பேசி பேசியே அவளிடையை மெதுவாக பற்றிக் கொண்டான்.

அந்த மென்மையான அழுத்தத்தில் அயனின் தாபம் புரிந்தது.

"ஆதினி" என்று அயன் குரல் மெதுவானது.

"ம்ம்ம்" என்றவளுக்கு மூச்சு முட்டியது.

"நீ என்னை விரும்பற தானே?" என்று கேட்க அவளும் ஆமென்றாள்.

"அப்படின்னா... நான் உன்னை எனக்கானவளா எடுத்துக்கலாமா?" என்று கேட்க அவள் சிரித்து தலையசைத்தாள்.

அதன்பின் அவர்களுக்கான தனிமைக்குள் முழ்கியிருந்தனர்.

கழுத்தில் அவன் நாவால் வருடி தரும் முத்தம் அவள் உடலெங்கும் சிலிர்த்திட கண்ணை கழட்ட முயல, "நோ.. ஆதினி இந்த வேட்கை தீரும் வரை, நீ என் மிருகத்தனமான ஆளுமையை பார்க்க வேண்டாம்." என்று செல்ல கடிகளை பரிசாக தந்து அவளை ஆக்கிரமிப்பு செய்தான். அந்த கருப்பு துணி அவள் கண்ணிலிருந்து விடுப்படாமல் பார்த்து கொண்டார்கள். ஆதினிக்கும் இந்த அணுகுதல் புதுமையாக இருக்க ஏற்றுக் கொண்டாள்.

ஆதினிக்கு வேறு உலகத்தை காட்டியவன் அவள் அசந்து உறங்கும் வரை தன் நெஞ்சில் சாய்த்து கொண்டான்.

அதிகாலை ஆதினி எழுந்த நேரம் மிக நேர்த்தியாக போர்த்தி அவர்களது அறையில் படுத்திருந்தார்கள். அங்கே அக்ஷயாவும் இருந்தாள்.

ஆதினிக்கு இரவெல்லாம் ஏதோவொரு மாய உலகில் சஞ்சரிக்க, அயனின் வெற்று மார்பில் அக்ஷயா உறங்க, தந்தையிடம் சாய்ந்து படுத்துறங்கும் அழகை கண்டாள்.

தன்னிலையை கண்டு, வெட்கம் கொண்டு குளிக்க சென்றாள்.

ஆங்காங்கே எறும்பு கடிகள் போல தடிப்புயிருக்க, சுடத்தண்ணீரில் குளித்தாள்.

கொஞ்சம் கொஞ்சமாய் தடிப்பு குறைய, யோசனைவயப்பட்டவளாக ஈரக்கூந்தலுடன் வெளிவந்நாள்.

"குட் மார்னிங்" என்றான் அயன்.

"குட் மார்னிங்" என்றவள் எதையோ தேடினாள்.

"என்னாச்சு?" என்றான். முதல் கூடல் முடிந்து வெட்கத்துன் எழுந்து சென்றவள் யோசனையுடன் வெளிவரவும் காரணம் கேட்டான்.‌

''உடம்பெல்லாம் லேசான தடிப்பு இருக்கு அயன். ஏன்னு தெரியலை?" என்றாள்.

"மேடம் நேத்து பால்கனில நம்ம நைட் செலிபிரேட் பண்ணியது. கேம் முடிஞ்சு அங்கயே படுத்துட்டோம். ஆப்டர் கண் விழிச்சப்ப நள்ளிரவு. கொசு எல்லாம் ஜாம்பி மாதிரி கடிச்சிட்டு இருந்துச்சு. நான் தான் அங்க இனியும் தூங்க வேண்டாம்னு கீழ் ரூம்ல தூக்கிட்டு வந்தேன்.
மேடத்துக்கு கிறக்கம் குறையலையா? அங்க தூங்கினோம். இங்க எப்படி வந்தோம்னு யோசிக்கலை. குழந்தையை இங்க தூங்க வச்சிட்டு அங்க போயிட்டு மறுபடியும் குழந்தையோட கட்டிப்பிடிச்சிட்ட தூங்கறோம் யோசிக்கலையா?" என்று கேட்டான்.‌

தலையில் கைவைத்து, "கொசு கடியா... நான் கூட நீங்க தான் கடிச்சி தடிப்பு உண்டாக்கிட்டிங்கனு நினைச்சேன்." என்றாள்.

"எவ்ளோ மென்மையா கையாண்டேன். நான் இப்படி தடிப்பு வர்ற அளவு கடிப்பேன்னா? ஒரு வேளை ஆதினிக்கு கடிச்சி விளையாடினா பிடிக்குமோ? அப்ப ஓகே.. நாளையிலருந்து கடிச்சிடுவோம்" என்று கண் சிமிட்ட, தலையணையை அவன் மீது தூக்கி எறிந்தாள்.

குழந்தை அக்ஷயா தூங்கி எழுந்த நேரம் பில்லோ பைட் என்றதும், அவளுமே தலையணையை தூக்கி போட, இனி சென்சார் போட்டு பேசவேண்டுமென தம்பதியர்கள் பூடகமாக சமிக்ஜையில் பேசிக் கொண்டாரகள்.

அயன் ஆதினி இருவரும் அக்ஷயாவை அன்புடன் வளர்த்திட, ஊர் வாய் தானாக மறமணம் செய்ததால் கணவன் மனைவியாக பார்த்தனர்.

முன்பு பின்னால் பேசிய கூட்டம் எல்லாம் முன்னால் நட்பு கரம் நீட்டியது.

அயலப்பா" என்று அக்ஷயா தினமும் கதை பேச, அவளை கூட்டிக்கொண்டு அந்த ஏரியா முழுவதுமே என்‌ மகள் என்ற கர்வத்துடன் சுற்றினான் அயன்.

என்ன தான் தனக்கான குடும்பம் மனைவி குழந்தை என்று பார்த்தாலும், மறுபுறம் அவனுக்கான பணியில தீவிரமாக இருந்தான்.
விரைவில் அவனது வேலை, அவனுக்கான இடம் வீடு என்று செல்ல வேண்டுமென ஆதினியிடம் கூறிக்கொண்டிருந்தான்‌.

அவளுமே அதுவரை தன் வீட்டில் அவனுடன் மணமொத்திய தம்பதியாக மாறினாள்.

பிரதாப் புகைப்படம் அறையிலிருந்து பூஜையறைக்கு சென்றது. பூஜையறையிலிருந்து ஸ்டோர் ரூம் சென்றது. ஒன்றன் பின் ஒன்றாக ஆதினியின் கணவன் பிரதாப் இல்லை. அயன் என்ற அறிவிப்பே வீடு முழுக்க வியப்பித்து போனது.
அந்தளவு ஆதினி மனதில் வீட்டில் அயன் சுவடாகி போனான்.
ஆதினிக்கே அவ்வாறு இருக்க, அக்ஷயாவோ 'அயலப்பா' என்றவள் தந்தை பெயர் யாராவது கேட்டால் நொடியும் தாமதிக்காமல் 'அயன்" என்றாள்.
பிரதாப் என்ற பெயர் கூட அக்ஷயா மறக்கும் அளவிற்கு அவள் அப்பா பெயர் அயன் என்று பதிவாகினான்.

அனைத்தும் நிறைவாக போனது.

அந்த நேரம் அனிதா அவளது வீட்டில், தனது போனில் ஸ்டோரேஜ் அதிகமாக உள்ளதால் எடுத்த செல்ஃபி சேவ் ஆகாமல் இருக்க, மெதுவாக மெத்தையில் படுத்து தேவையற்ற புகைப்படத்தை நீக்கினாள்.
அப்பொழுது அயன் ஆதினிக்கு அளித்த பரிசு மோதிரத்தை பார்த்தாள்.
இதே போல மோதிரம் வாங்குவதற்கு அவள் ஆன்லேன் ஷாப்பிங்கில் தேடினாள்.

கூகுளில் அந்த மோதிரம் தேடவும், அவளுக்கு திடுக்கிடும் தகவல்களை காண்பித்தது.
*இது போன்ற மோதிரம் அரிதானது.
*இது தலைவன் அணியும் மோதிரம்.
*சாதாரணமாக செய்ய கூடியதோ கிடைப்பதோ இல்லை.... ராயல்  பேமிலி... என்று ஒவ்வொன்றாக காட்ட வாசித்தவள் குழம்பிவளாக மாறினாள்.

சாதாரணமா கிடைக்காது, தலைவன் அணியும் மோதிரம்னா என்ன தலைவன்? அயன் யாருக்கு தலைவன்?

-தொடரும்.

https://onlinetamilnovels.com/%e0%ae%85%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%85%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be-11/