அத்தியாயம்-20
ஆதினி தலைப்பாராத்தோடு தன் கைகளை தாங்கி நெஞ்சடைக்க இருந்தாள்.
அயனை வயிற்றில் உள்ள குழந்தையை வைத்து மிரட்ட முடியாது.
அக்ஷயாவை அவனிடமிருந்து பிரித்திட இயலாது.
தன்னை காத்திட இங்கே யாருமில்லை. தான் ஒரு நிர்கதியற்ற நிலையில் இருக்கின்றோம். அனிதாவும் தன்னை போல தான். சிக்கலில் இருப்பதை தெரியாமல், தான் ஆபத்தில் இருப்பதாக தனக்கு அலார்ட் செய்கின்றாள். ஆனால் அவளே அந்த ஆபத்தின் விளிம்பில் கால் பதிந்தவளே.
தன் மனதில் ஏதேனும் திட்டம் நினைத்தாலும் அயன் மனதை படித்திடும் வல்லமை படைத்தவன். இதெல்லாம் எண்ணியவளுக்கு இதயம் வலிந்தது.
அவளது கஷ்டம் உணர்ந்தவனாக அயன் அவள் முன் மண்டியிட்டான்.
“இங்க பாரு ஆதினி.. நான் உன்னை காதலிக்கிறவன் மட்டும் என்றால், என்னால என் உலகத்துக்கு ராஜாவாக இருக்க முடியாது. என் இனப்பெருக்கப் பொறுப்பை விட்டுட்டு இந்த பூமியிலேயே தங்கிடுவேன். என்னை என் உலக மக்கள் என்ன சொல்வாங்க தெரியுமா? நான் ஒரு துரோகியா நிற்பேனே தவிர நல்ல அரசனா இருக்க முடியாது.
அதே போல… இனவிருத்தி செய்ய வந்த ராஜாவா மட்டும் இருந்தா,
நம்ம காதலை சாக்ரபிஷ் செய்து, உன்னை கட்டாயப்படுத்தி, விருப்பமில்லாம, என் உலகத்துக்கு இழுத்து செல்லணும்.
யோசித்து பாரு… நான் ராஜா? என்னோட ராணியை இழுத்துட்டு போகணுமா? என்னால ஒருத்தி மனதை வென்று அவளை அழைச்சிட்டு வரமுடியாதா?!
நான் தலைவன் ஆதினி. உன்னை என் உலகமறிய, மோதிரம் போட்டு, மனைவியா, ராணியா, அறிமுகப்படுத்தணும். மெயிடா இல்லை. உன்னை இழுத்துட்டு போனா அது மெயிடா காட்டப்படும். எனக்கு அது பிடிக்காது. என்னை விரும்பறவ ராணியா தான் இருக்கணும். ராணியா தான் உலகத்துக்கும் அறிவிப்பேன். நீ ஜஸ்ட் எலியில்லை.
ஆனா பாரு… நான் காதலுக்கும் தலைமைக்கும் இரண்டுக்கும் நடுவில் சிக்கியிருக்கேன்.
இதுதான் என் உண்மையான நிலை. முடிவு நீ தான் எடுக்கணும் ஆதினி.
என் உலகம் என்னை ராஜா என்று அழைக்கலாம். நீ இல்லாமல் நான் வெறும் தலைவன்.
நான் உன்னை தேர்ந்தெடுத்தது என் இனத்துக்காக. ஆனா இப்ப நான் உன்னை வேண்டுவது என் இதயத்துக்காக. நான் உன்னை நேசிக்கறேன் ஆதினி. உன்னை மட்டுமில்லை… அக்ஷயாவையும் தான்.
உன் முடிவெடு. நான் காத்திருக்கேன். மணி… மூன்றுக்கு ஸ்பேஷிப் கிளம்பும். நம்ம மாடில தான் மற்றவங்க கண்ணுக்கு தெரியாம இப்ப இன்விசிபிலா ஸ்பேஷிப் இருக்கு.
நீ வரலைன்னா… நான் அக்ஷயாவை மட்டுமாவது அழைச்சிட்டு போவது உறுதி. ஏன்னா அவ என்மக. உனக்கு நான் எங்க வழக்க முறைப்படி, மோதிரம் அணிவித்திருக்கேன். உங்க வழக்கப்படி தாலியும் கட்டியிருக்கேன்.” என்று இக்கட்டும் வைத்தவனாக தன் காதலையும் கெட்டியாக பிடித்தவனாக, தனது வெற்றிக்கு பிள்ளையார் சுழியிட்டான்.
ஆதினியால் முடிவெடுக்காத நிலை.
அவள் மனதை படித்தவனால் இப்பொழுது அவளது எண்ணத்தை படிக்க பிடிக்கவில்லை. “ஆதினி… இந்த மோதிரம் போட்டு முடிவெடு. நீ என்ன நினைச்சாலும், என்னால உன் மைண்ட் ரீட் பண்ண முடியாது. மேபீ… அது உனக்கு சுதந்திரமான முடிவெடுக்க உதவும்.
எங்க உலகத்துல இதை எல்லோரும் அணிந்திருப்பாங்க. ஒருத்தர் மனதை இன்னொருத்தர் படிக்க முடியாது. இப்ப உனக்கு முடிவெடுக்க உதவட்டும்.” என்று அவன் திருமணத்தன்று அணிவித்த மோதிரத்தை அணிவித்தான்.
அயன் கையில் இது போல மோதிரம் இல்லை.
தன் கையில் அயன் அணிவித்ததை கண்டு அவனை சந்தேகமாய் பார்க்க, ‘நீ என்னோடவே வந்துடு ஆதினி. ஒரு உலகம் அழிவதை நீ தடுக்க வா. என்னை நம்பி வந்து, என் காதலை, நம்ம காதலை வாழவை.
இங்க வாழ்ந்தா மறுமணம், இரண்டாம் கல்யாணம் என்ற கோட்டுக்குள்ள அடைப்பட்டு அழுது வெடித்து, எப்படி வாழ்வதற்கும் ஏச்சும் பேச்சும் வாங்காம, என் கூட ராணியா நில்லு. உன் கையசைப்புக்கு அங்க ஒரு உலகம் காத்திருக்கு. அதோட நீ வந்தா என்மனசு சந்தோஷப்படும்.’ என்று நினைத்துக் கொண்டிருந்தான். அதெல்லாம் ஆதினியால் தெளிவாக கேட்க முடிந்தது.
ஆதினி மெதுவாக நிதானமானாள். அவளது மூளை வேகமாய் கணக்கிட்டு முடித்தது.
“நான் உன்னோட வர்றேன்” என்றாள் ஆதினி. அயனுக்கு அந்த வார்த்தை ஆனந்தத்தை தந்தது.
அவன் எழுந்து, அவள் கையை பற்ற ஏதுவாக கையை நீட்டினான் அயன். ஆதினி மறுப்பாய் கையை நீட்டி தானாக வருவது போல நின்றாள்.
மெதுவாக மாடிப்படியில் இருவரும் மௌனமாய் நடந்தாளர்கள்.
மணி இரண்டு ஐம்பத்தொன்பது, வீட்டின் மேல் மாடியில் இரவு காற்று கனமாக வீசியது. தூரத்தில் நாய் குரைத்தது. விண்மீன்கள் வழக்கத்தை விட அருகில் இருப்பது போலத் தெரிந்தது ஆதினிக்கு.
ஆதினி மெதுவாக படிகளை ஏறினாள். ஒவ்வொரு அடியும், ஒரு உலகத்திலிருந்து இன்னொரு உலகத்துக்கு நகரும் பாலம்.
அயன் அவளை தீவிரமாக பார்த்தான். அயன் கண்களில் ஆவல், ஆனால்
அவசரம் இல்லை. தங்கள் உலகத்திற்காக ஆதினிக்கான காத்திருப்பு மட்டும்.
அக்ஷயா அவனைப் பார்த்து மர்மமாய் சிரித்தாள்.
அக்ஷயாவோ அயலப்பா அம்மா வரவும் ”அம்மா… நட்சத்திரம் ரொம்ப கிட்ட தெரியுது பாருங்க.” என்று மகிழ்ச்சியில் துள்ள, ஆதினி மகளைத் தழுவிக் கொண்டாள்.
அந்த அணைப்பிலேயே பூமியின் நேசம் இருந்தது. அந்த அணைப்பில் பயம் இருந்தது.ஆனால் அதைவிட அதிகமாக ஆதினியின் தீர்மானம் இருந்தது.
அவள் அயனை நோக்கி நின்றாள்.
“நான் வர்றேன் அயன்.” என்று தீர்க்கமாக உரைத்தாள்.
அயன் மூச்சு சீராக சுவாசித்தான். “உனக்காக மட்டும் இல்ல அயன், என் குழந்தைகளுக்காக மட்டும் இல்ல. நான் இந்த உலகத்தில் இரண்டாம் பட்சமான வாய்ப்பு வாழ்ந்தேன்.
இப்ப உன் உலகத்துல நான் முதன் முறையாக, நான் தேர்வு பண்ணப் போறேன்.” என்றாள். அவள் குரலில் ஆவேசமா ஆணவமா? பிரித்தறியாத வகையில் மைண்ட் ரீட் செய்ய இயலாது ராணி மோதிரத்தை வேறு அணிந்திருந்தாள்.
அயன் மெதுவாக “அது… என் உலகம் இல்லை... நம்ம உலகமா இருக்கும்” என்று திருத்த, ஆதினி சிரித்தாள்.
அந்த சிரிப்பில் தற்போது பயம் இல்லை. “இது உன் உலகமா இருந்தது,
இல்ல நம்ம உலகமா இருக்கும், அதுவே நாளடைவில், நம்ம கையில் உலகம் விரிவடையும்.. அப்போ.. எனக்கான நியாயத்தை.. நான் பெற்று இருப்பேன்” என்றதும ஒரு மெல்லிய அதிர்வு ஆதினி பெரிய முடிவெடுத்தவளாக இருந்தாள்.
மாடியின் வான்வெளி அசைந்தது. கண்களுக்கு தெரியாத ஒன்று ஒளிர்ந்தது.
அக்ஷயா ஆச்சரியமாக மேலே பார்த்தாள்.
“அயலப்பா… இது தானா?” அக்ஷயா ஒரு நொடி கூட இமை சிமிட்டாமல் வானை பார்த்தாள்.
அயன் ஆதினியை தான் தேர்ந்தெடுத்ததான். ஆனால் இப்போது அவள் தான் அந்த கையை பிடிக்கிறாள்.
அயனை பின்தொடர்ந்து அல்ல. அயனின் பக்கத்தில் நின்றபடி.
விண்கலத்தின் கதவு திறந்தது.
அந்த ஒளியில் அவர்கள் மூவரின் நிழல்கள் ஒன்றாக கலந்து ஏறினார்கள்.
பூமி கீழே மெதுவாக சுருங்கியது.
வீடு, தெரு, நகரம், அனைத்தும் ஆதினிக்கு ஒரு நினைவாக மாறின.
அக்ஷயா கண்ணை பெரிதாக்கி ஆர்ப்பாட்டத்தோடு சொன்னாள் “அம்மா… நாம பறக்கப் போறோம்” என்று மகிழ்ந்தாள்.
ஆதினி மகளை வாஞ்சையாக முத்தமிட்டாள். ஆதினி விண்மீன்களை நோக்கி பார்த்தாள். இந்த பயம் களைவதற்கு தான் ராட்டினம் எல்லாம் ஏற வைத்தானா? அப்படி என்றால் அதுவும் ஒரு ஆய்வு போல என்று நெஞ்சை அடைத்தது.
“இல்ல அக்ஷயா… இனி தான் நாம வாழப்போறோம்.” என்று அயன் கூறிட, விண்கலம் அயன் ஆதினி அக்ஷயா மற்றும் செல்வம் ஜமுனா உருவத்தில் உள்ளவர் ஏறிட விண்கலம் மேலெழுந்தது.
அந்த இரவு மூன்று மணிக்கு, ஆதினி குடும்பம் மட்டும் பயணம் செய்யவில்லை. ஒரு இனத்தின் வரலாறு திசைமாற்றப்பட்டது.
ஆதினி தனது தேர்வால் ஒரு உலகத்தின் சட்டத்தை எழுத ஆரம்பித்தாள்.
ஆம்… தன் கணவன் பிரதாப் இறப்பிற்கும், அவனை போல பலரும் தீவிபத்தில் இறந்ததிலும், அவர்கள் குடும்பம், மனிதர்களோடு மனிதர்களாக பழகி, தங்கள் தேவைக்காக மனித உயிரை துறக்க வைத்து, பெண் இனத்தை அழைத்தும், தூக்கி கொண்டும் பறக்கும் இக்கூட்டத்தின் சட்டத்தை, ஒரு அம்மாவாக, ஒரு மனைவியாக, தற்போது புது உலகத்தின் அயனின் ராணியாக, அயனின் குழந்தைகளை, கர்ப்பத்தில் இரண்டு உயிரை சுமந்தவளாக, அயனின் உலகத்தை காண தனியொருவளாக பழிவாங்கவும் நடையிட்டாள். அவள் எண்ணம் சரியா அல்லது அயனுடன் இணங்கி வேறு வழியின்றி வாழ்வை தொலைக்க போகின்றாளா?
ஆதினியின் அக்கோலத்தை விண்மீன்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தன.
‘இது முடிவு இல்லை. இது ஒரு புதிய உலகத்தின் தொடக்கம்.’ என்று அயன் மற்றும் ஆதினியே அறிவார்க்ள்.
-சுபம்.
-பிரவீணா தங்கராஜ்
அயனின் பூமி பயணம் சுபமாக……..
ஆதினியின் அயன் உலகத்திற்கு வருகை தொடராக…….
பார்ட்-2 நேரம் இருக்கும் போது மற்றொரு கதை வாயிலாக எழுத துவங்குவேன்.

Nice. Creative thought.
ஆனாலும் இது ரொம்பவே டூ மச்.
பாசத்தை விலைப் பேசி.. அவங்களோட இனத்தை பெருக்கிறதுக்காக நம்ம இனத்ததை பலி வாங்குவானோ இந்த அயன்..?
😔😔😔
CRVS (or) CRVS 2797
wow very interesting story . puthu vitama irunthuchi intha story eppadiyo ayan ava vanthutanu santhosa paduran aana aathini etho mudivu eduthu tha poi iuka so next part itha vida interesting ah irukumnu namburen avaloda porattam entha lavu irukunu pakuren.
congratulation sissy
Int
Wow unexpected twist sis. Really goosebumps came sis while.read it. Because aadhini took a very bold.decision. every episode is very intresting sis. Aakshu papa was so.good. keep rocking sis. Eagerly waiting for the next part sis.
Interesting story
Wow super… Nice concept & different too… Apdiye continue pannirukalam sis … Ithe tan mind la Odum. Seekirama NXT part podunga..