meta-google-adsense-platform-account: ca-host-pub-2644536267352236 meta-google-adsense-platform-domain: sitekit.withgoogle.com

நின் பிரேமம் என் சிநேகம்-16

அத்தியாயம்-16

    ஹ்ருதேஷ் மாலை அலுவலகம் முடித்து கிளம்புகையில், மிதிலாவுக்கு போனில் அழைத்தான்.

  அவளும் என்ன ஹ்ருத் இப்பவே கால் பண்ணிட்ட?” என்று கடிகாரத்தை பார்த்தாள். அவனுமே கைகடிகாரத்தை பார்வையிட்டு, “உன் நினைப்பா இருந்துச்சு… கை தானா போன்ல உன்‌ நம்பருக்கு டயல் பண்ணிடுச்சு.” என்றான்.

“ஓ… கை தானா… ம்கூம்.” என்று சிரித்தாள்.

  “மிதிலா… சாட்டேர்டே சன்டே லீவு வருது.” என்றான்.‌

“ஆஹ்ஆங்” என்று மிதிலா பதில் தர, “நீ.. ஃப்ரின்…னா வீட்டுக்கு…. வர்றியா?” என்றான். அவளை அழைத்து பேசிவிட்டு அடுத்து இப்படி கேட்டதும், சிறிது மௌனமான்.

  மிதிலாவுமே மௌனம் தந்து வேடிக்கையில் விழியை உருட்டினாள்.

  ஹ்ருதேஷ் எச்சியை விழுங்கி, “மிதிலா..” என்று குழைவாக கூப்பிட, “ஹ்ருத்.. எனக்கு இங்க வேலையிருக்கு.” என்றாள்.

“என்னை விட வேலை முக்கியமா? நான் மன்டே டூ ப்ரைடேவா கூப்பிடுறேன். முன்ன கூப்பிடாம வந்த. இஸ்டத்துக்கு ஊர்சுத்திட்டு இருப்போம்.” என்று பேச்சில் லேசான சரவெடி தர, ”ஹ்ருத்.. முன்ன வேலை குறைவு. இப்ப அதிகமாகுது. புதுசா ஒரு பிராஜெக்ட்…” என்று ஏதோ பேசியவளை, “எனக்கு நீ வேணும். வருவியா மாட்டியா?” என்றான்.‌

  “ஹ்ருத்… இப்ப மட்டும் இது துரோகத்துல சேராதா.” என்றாள்.

“நான் உன்னை விட்டுட்டு வேறொருத்தியை கட்டிக்க மாட்டேன். அப்பறம் எப்படி துரோகமாகும்.” என்றான்.
‘லூசு… எந்த நேரம் என்ன பேசறான். முன்னலாம் கௌசிக் தங்கையை காதலிச்சிட்டு, அவனுக்கு நான் பண்ணற துரோகம் அதுயிதுனு பேசியே டயர்ட் ஆக்குவான்.‌ இப்ப என்னை கேட்கும் போது மட்டும் என்னவாம்” என்று மனதிற்குள் முனங்கினாள்.

   “ஹ்ருத்… அடிக்கடி நமக்குள்ள அப்படி நடந்தா… ஏதாவது பே.. பேபி பார்ம் ஆகிடும்டா.” என்று பயத்தை தெரிவித்தாள்.

“அப்ப சேப்டியா இருந்தா ஓகேவா.” என்று கேட்க, இங்கு மிதிலாவோ ‘ஆங்.. நானே.. அவனுக்கு இடம் தர்றேன்‌’ என்றவளோ, ”இல்லை ஹ்ருத்.. எனக்கு பயமாயிருக்கு” என்றாள் உண்மையாக.
   முதலில் அத்துமீறியது எல்லாம் நிஜமாகவே தங்களுக்குள் ஏதாவது நடந்து ஹ்ருதேஷை காதல் பிடிக்குள் வைக்கும் சின்னபுத்தி இருந்தது. ஆனால் அன்றைய நாள் முழுக்க அவனோடு இணங்கி நடந்து சல்லாபித்ததிலும், அதன்பின் போனில் அதைப் பற்றியே பேச்சு தொடரவும், மீண்டும் இதற்கு இடம் அமைந்திடுமோ என்று பயந்தாள் மிதிலா. அவள் பயந்தது போலவே ஹ்ருதேஷ் கேட்டு நெருக்கவும் சங்கடமானாள்.

“பயமா… ஏய்… உன்னை பத்தி தெரியாதவங்களிடம் இந்த பொய்யை எடுத்துவிடு.
  என்னிடமே உருட்டற? இங்க பாரு.. உனக்கு என்னை பிடிக்கலைன்னா பிடிக்கலைனு சொல்லிடு. அதை விட்டு பயந்த மாதிரியோ, பேபி பார்ம் ஆகிடுமோனு கதை விடாத.” என்றான்.‌

  மிதிலாவோ சற்று மௌனம் சாதிக்க, “என்ன வருவியா மாட்டியா?” என்று கறார் குரலில் அழைத்தான்.

  மிதிலாவோ, ”சேப்டிக்கு வாங்கிவை” என்று துண்டித்து விட்டாள்.

  ஹ்ருதேஷ் ஆனந்தமாக மெடிக்கல் கடை தேடி சென்று வாங்கி வந்தான்.

‘சாக்லேட் பிளேவர் ஸ்டாபெர்ரி பிளேவர்னு யப்பா சாமி.’ என்று வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

    மிதிலா முகம் வாடி கேப் புக் செய்து நின்றாள்.

  கேபில் ஏறியதும், ‘படிக்க வந்த இடத்துல, இப்படி தறிக்கெட்டு ஹ்ருதேஷை தேடி போறது மட்டும் வீட்ல தெரிந்தது அம்மா துடைப்பத்தால விளாசுவாங்க. அப்பா சூடு வைக்க வாய்ப்பு இருக்கு. இந்த அண்ணா கண்டிப்பா காறி துப்புவான்.
  வீட்டுக்கு தெரிந்தா விஷம் வச்சி கொன்னுடுவாங்களோ? நான் செய்யறது தப்பு. சேப்டியா தப்பு பண்ணியும் பிரகனெண்ட் ஆனா வீட்டு மானம் மரியாதை போகும்.
    நான் எல்லாம் முடிவெடுக்க தெரியாம செத்துடுவேனா?
  ஹ்ருதேஷ் வீட்ல தெரிந்தா அசிங்கமா பேசுவாங்க.’ என்று மனதை அரிந்த எண்ணங்களோடு பயணித்தாள்.

கேப் ஹ்ருதேஷ் தங்கிய அப்பார்ட்மெண்ட் வீட்டின் முன் வந்ததும், இறங்கி பணத்தை தந்தாள்.

  சிகையை பின்னிற்கு தள்ளி மெதுவாக வரவும், ஹ்ருதேஷ் வாசலிலேயே வரவேற்றான்.

  மிதிலாவை கண்டதும் கண்சிமிட்ட, அவளோ ஓழுங்கு காட்டு முகத்தை தூக்கி வைத்தாள்.

  “என்னடி கோபம்” என்று மூக்கை கிள்ளி, அவளது தோளில் கையை போட்டு சோபாவில் அமர வைத்து கதவை அவசரமாய் தாழிட்டான்.

  ஹ்ருதேஷின் அவசரம் கண்டு முகம் கூடுதலாக வாடியது.

ஹ்ருதேஷிற்கு இந்த ஆசையை மூட்டி விட்டதே மிதிலா என்பதால் அவனிடம் மறுக்க முடியாமல் நின்றாள்.

ஹாலில் வேறு சேப்டிக்கு என்று வாங்கிய பொருள் அவளை வரவேற்க கண்களில் மிரட்சியும் சூழுந்தது.

  “ஹ்ருத்… நம்ம வீட்ல எப்ப லவ்வை சொல்லலாம்னு ஐடியால இருக்க?” என்று கேட்டாள்.

   ஹ்ருதேஷோ “ஆல்ரெடி எங்க வீட்ல என் மேல சந்தேகம் வந்துடுச்சு. நான் யாரையோ லவ் பண்ணறேன்னு. அதுவும் நீயா இருக்க வாய்ப்பு இருக்கும்னு எங்கம்மா ஸ்மெல் பண்ணிட்டாங்க.” என்றான்.

“அண்ணாவோட கடை திறப்பு  விழாவிலயா?” என்று கேட்க, “இல்லை.. பேஷன் ஷோல நாம இருந்த பிக் மூலமா டவுட் வந்திருக்கும்.” என்றான்.

மிதிலாவோ “அப்ப வரன் பார்க்கறது அதனால தானா?” என்று கேட்டாள்.

ஹ்ருதேஷ் சிந்தனைவயப்பட்டு “இல்லை… எனக்கு வேலை கிடைக்கறதுக்கு முன்னவே அம்மா வரன் தேடினாங்க. நான் தான் அப்ப வேண்டாம்னு மறுத்தேன். ஆக்சுவலி அதுக்குபிறகு தான் உன்னை மிஸ் பண்ணிடுவேனோனு பயந்து உன்கிட்ட லவ்வை சொன்னேன். அதனால சந்தேகம் ரீசண்டா தான் முளைத்தது.” என்றான்.

  “ஓ… சரி.. அப்படின்னா.. நீயா சொல்வியா… இல்லை.. அவங்க கேட்டா சொல்வியா?” என்றாள்.

ஹ்ருதேஷோ அவளுக்கு கூல்ட்ரிங்க்ஸ் ஊற்றியபடி, “இது என்ன கேள்வி. ஏதாவது நெருக்கடி வந்தா தான் சொல்வேன். இப்பவே சொல்லிட்டு உன் படிப்பை ஸ்பாயில் பண்ண சொல்லறியா?” என்றான்.‌

  “இப்ப மட்டும் என் ஸ்டடிஸ்  ஸ்பாயில் ஆகாதா? ஏதாவது பேபி வந்துட்டா?” என்று விழித்தாள்.

“ஏய்.. அதான் சேப்டிக்கு வாங்க சொன்ன. வாங்கிட்டேனே. அதுல கூட பிளேவர் இருக்கு. உனக்கு ஸ்டா….. பெர்
வெயிட்.. நீ பயப்படறியா?
  ஏன்.. நான் ஏமாத்திடுவேன்னா? இல்லை என்ன காரணம்?” என்றான்.

  “சேப்டி யூஸ் பண்ணியும் பேபி பார்ம் ஆனா?” என்று கேட்டதும், அவள் பயம் புரிய, “நோ பிராப்ளம்
காதலை சொல்ல அதான் நெருக்கடினு நினைச்சு வீட்ல சொல்விடலாம்.” என்றான்.‌

  “எங்க அண்ணாவிடம் எப்படி சொல்வ?” என்று கேட்க, ஹ்ருதேஷ் அவளை முறைத்து விட்டு பால்கனி சென்றான்.‌

”ஒழுங்கா.. நான் உண்டு என் வேலை உண்டுனு இருந்தேன். லவ் பண்ணறேன்னு பின்னாடி வந்து வந்து தொந்தரவு பண்ணியது நீ.
  நட்பா காதலா என்று குழம்பி வாதிட்டப்ப, காதலை தான் சூஸ் பண்ணணும்னு நீயா உன்னை தந்த. இப்ப… என்னை உன் பின்னால நாய்க்குட்டி மாதிரி வர்றேன்றதும் எத்தனை கேள்விடி? ஆசையா.. ஆசை ஆசையா… லீவு வருதுனு உன்னை கூப்பிட்டேன். ஏன் இதுக்கு முன்ன நீ இங்க வரலை. நீயா தந்தா நான் எல்லை மீறலாம். நானா கேட்டா தயங்கற. உனக்குனு மெடிக்கல் ஷாப்லாம் போய்… அதை வாங்கியிருக்கேன். இப்ப வந்து… நொட்டு” என்று கோபமானான்.

  மிதிலா மெதுவாக அவன் பக்கம் வந்து முதுகில் சாய்ந்து, கட்டிக்கொண்டு, “கோவிச்சுக்காத ஹ்ருத். எப்பவும் நான் எந்த விஷயத்திலும் யோசிக்காம அடம் பிடிப்பதா தெரியலாம். ஆனா நான் எனக்கு என்ன தேவைனு தெளிவா தெரிந்தப்பிறகு தான் அதுக்கு அடம் பிடிப்பேன்.

உன்னை காதலிச்சதும் அப்படி தான். லெட்டர் தந்தப்ப கௌசிக் அண்ணா பிரெண்டாச்சே… நல்லவரா இருக்கார்.. எனக்கு இவரை பிடிச்சிருக்கு. அவரும் அக்சப்ட் பண்ணுவாரா மாட்டாரா? இதெல்லாம் யோசித்து தான் எனக்கு நீ வேண்டும்னு லவ் லெட்டரே தந்தேன்.
   அதுக்கு பிறகு பிளஸ் டூ முடிச்சி எனக்கு எந்த துறையில இன்ட்ரஸ்ட் இருக்குனு யோசித்து தான் பேஷன் டிசைனிங் வந்து சேர்ந்தேன். அப்ப கூட உன்னை பார்க்க முடியாது பேச முடியாது. காதலை எப்படி வளர்ப்பதுனு யோசித்தேன்.
   உண்மையான காதல் தினமும் சந்திக்கலைன்னாலும் மனசுல ஆழமா நிற்கும்னு நம்பினேன்.

   லீவுக்கு வர்றப்ப எல்லாம் உன் மனசுல இடம் பிடிக்கற மாதிரி பேசணும்னு சுத்துவேன்.
  இப்ப நீ லவ் பண்ணிட்ட… அண்ணனா நானானு நீ குழம்பினப்ப, நீ மறுபடியும் குழம்பி பிரேக்கப் பண்ணலாம் என்ற ரீதியில் வார்த்தை விட்டு பேசவும் தான் உனக்கு என்னையே தந்தது.

   இப்பவும் நீ கேட்டதும் என்னை தர தான் வந்துட்டேன். நம்ம சேப்டி பேபி பார்ம் ஆனா நீ என்ன முடிவெடுக்கறனு கேட்க நினைச்சேன். இது தப்பா. நீ இப்ப சொல்லிட்டியே… உடனடியா வீட்ல சொல்லிடுவேன்னு… இது போதும்.” என்று நிதானமாக எடுத்துரைத்தாள்.

   “வர்றப்பவே பிரியாணி வாங்கிட்டேன். சாப்பிடலாம்” என்று அழைத்து சென்றான்.‌

  டிவி போட்டுவிட்டு சாப்பிடவும், “கடை நல்லா ரன்னாகுதுனு கௌசிக் சொன்னான்.” என்று பேச, “ம்ம்ம்.” என்று நீரை பருகியவள், “எங்க அண்ணாவுக்கு சந்தேகம் வந்திருக்கணும். ஆனா ஏதோ ஒரு ரீஸன்ல இருக்காதுனு இருக்கான்.” என்றாள்.

  “நாம கடை திறப்பு விழாவுக்கு சேர்ந்து வந்து சேர்ந்து போகாம தப்பிச்சதுல சந்தேகம் களைந்திருக்கும்.” என்றான்.

  “போடா… அதுக்கு தானே சண்டையே போட்ட” என்றாள்.

  “அதுக்கு தானே சமாதானம் செய்ய வந்த” என்று கண்களை கல்மிஷமாய் பார்வையிட, “போடா.. அப்படி பார்க்காத” என்று கூற, “அப்படி தான் பார்ப்பேன்‌.” என்று பேச்சு மீண்டும் கட்டிலறை சமாச்சாரத்திற்கு தாவியது.

  இருவரும் சாப்பிட்டப்பின் ஒரே மெத்தையில் காலாட்டி, நிறைய பேசினார்கள். முன்பு கைகள் உரச, ஒட்டி அமர, எச்சி பண்டத்தை ருசிக்க, என்றதில் ஆர்வம் காட்டி பயந்து பயந்து தீண்டி உரோமத்தை கிளர்ச்சியடைய வைத்தவன், இன்று மிதிலாவோடு ஒட்டி உரசி மூக்கு கடித்து மூக்கால் கழுத்தில் ஊர்வலம் நிகழ்த்தி, இதழை கொய்து, மிதிலா உடைகளற்ற மேனியை விழியால் பருகி முடித்து, பல சேட்டையை தயங்காமல் நிகழ்த்தினான்.

   ஒரு போர்வைக்குள் உடையின்றி இரவெல்லாம் கதை பேசி சண்டையிட்டு கணவன் மனைவியாக வாழ்ந்தனர். என்ன பொன்தாலியோ மஞ்சள் கயிறோ மிதிலா கழுத்தில் இன்னமும் அணிவிக்காமல், உரிமையுடன் நடந்தான்.
 
  அதிகாலை கண் விழித்த நேரம், “ஹ்ருத்.. ஹ்ருத். கையை எடு ரெஸ்ட்ரூம் போகணும்” என்றதும் அவளது கழுத்தில் மாலை போல அணிந்த கையை தளர்த்தினாள்.

  பத்து நிமிடத்தில் அவசரமாய் வெளிவந்து, “ஹ்ருத்… மென்சஸ் ஆகுது. பேட் டிரஸ் எதுவும் இல்லை. நான் உடனடியா போறேன். என்று சோர்வாக, அவள் தோளை தட்டிக் கொடுத்து “நான் போய் வாங்கிட்டு வர்றேன். டோண்ட்வொர்ரி” என்றான்.

  “நீ வாங்கப்போறியா?” என்று ஆச்சரியமாக கேட்க, “ஏன் கேட்கற வாங்க தெரியாதா எனக்கு? என்று கேட்டான்.

  “அப்படியில்லை.. மெடிக்கல் ஷாப்ல நேப்கின் வாங்க சங்கடமா இருக்காதா?” என்று கேட்டுவிட்டள்.

   “சேப்டினு சொல்லி இதை வாங்கவே மெடிக்கல் ஷாப்புக்குபோனேன். உனக்கு தேவையானதை தேவையான நேரத்துக்கு வாங்க போக மாட்டேனா?” என்று கேள்வி தந்து சட்டை மாற்றி ஓடினான்.

நேற்று நீ தான் வேண்டும் என்று அடம் செய்ததை காட்டி மெத்தையில் ஆனந்தத்தை அள்ளி தந்ததை காட்டிலும், இன்று தன்னிடம் நடந்துக் கொண்ட விதமோ மிதிலாவுக்கு ஆனந்தம் அளித்தது‌.

-தொடரும்

‌பிரவீணா தங்கராஜ்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top